ESTHER : 01 - 04
Providence means that the hand of God is in the glove of human events. The Book of Esther provides us with the greatest illustrations of the providence of God.*
💪🏼Esther: *Providence means that the hand of God is in the glove of human events. When God is not at the steering wheel, He is the backseat driver.* He is the coach who calls the signals from the bench. Providence is the unseen rudder on the ship of state. God is the pilot at the wheel during the night watch. God brought together a little baby’s cry and a woman’s heart down by the River Nile when Pharaoh’s daughter went to bathe. The Lord pinched little Moses and he let out a yell. The cry reached the heart of the princess, and God used it to change the destiny of a people. That was providence. That was the hand of God. *The Book of Esther provides us with the greatest illustrations of the providence of God.* Although His name is never mentioned, we see His providence in each page of this wonderful little book.
⚠️Est. 1:10- This verse tells us that the king got drunk. He overstepped himself. The king was “high” on the seventh day. *Here the question arises concerning not only this king but any king or ruler: Is he a fit ruler if he is engaged in drunkenness?*
💡Esth. 3:14-15- *There is a supernatural reason why the Jews are hated. In the providence and design of God, those who have been the custodians of His written Word have been the people of the Jewish race. Our Bible has come to us through them.* God chose them for that. They transmitted the Scriptures. *Satan hates them because they have been the repository of the Scriptures and because the Lord Jesus Christ, after the flesh, came from them.* There is no way of escaping it. And because of this, there is a supernatural hatred of Jews. This is certainly clear in the Bible. We know that God has chosen them as His people and as His nation. They are hated by Satan and, as a result, the nations of the world at times are fanned into fury against these people.
Jaya Pradeep-Kodaikanal.
Esther 1-4
*WHAT A GOD WE SERVE* ❗️
*Who works in the background of every step of life* ‼️ (though the word Lord /God not mentioned in the book of Esther)
💥 Let beautiful young virgins be sought for the king (2:2) - *The Lord behind this advice*
💥 Esther also was taken to the king’s Palace (2:8) - *The Lord's plan working out*
💥 Esther obtained favor in the sight of all who saw her(2:15) - *The Lord’s grace revealed*
💥 The king loved Esther, so he set the royal crown upon her head and made her queen (2:17) - *The Lord’s purpose came to pass*
🙏🙏 *Nothing is accidental in our life. Lord is working out all things for our good, though we may not perceive it always* .
Usha
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: *09.09.2023*
💠 *எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்க வேண்டும்* 💠
☄️ *“எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்க வேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.”* (எஸ்தர் 1:22).
🔸 *அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா* வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். அவன் தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், *தனது பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும்* 180 நாட்களுக்கு விருந்து கொடுத்தான். பின்பு, *தலைநகரான சூசானின் குடிமக்களுக்கு* ஏழு நாட்களுக்கு அரண்மனை தோட்டத்திற்குள்ளே விருந்து கொடுத்தான். நிச்சயமாக, *பெருமையே* இந்த விருந்துகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது. *ராணியாகிய வஸ்தியும்* ராஜாவின் அரமனையிலே *பெண்களுக்கு* ஒரு விருந்து கொடுத்தாள்.
🔸 விருந்தின் ஏழாவது நாளில், ராஜாவாகிய அகாஸ்வேரு *ராணி வஸ்தியை* அவள் அழகை ஜனங்களுக்குக் காட்டும்படி *இராஜகிரீடம் அணிவித்து* அழைத்துவருமாறு தன் பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். வஸ்தி *வர மறுத்தாள்.* அவள் கீழ்ப்படிந்து வந்திருந்தால், அது அவளுடைய அடக்கத்தை பாதித்திருக்காது. ராஜா தனது பிரதானிகளுடன் ஆலோசித்து, *வஸ்தி மீணடும் ராஜா அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்றும், அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு ராணியின் இடத்தைக் கொடுக்கவேண்டும்* என்றும் முடிவெடுத்தான்.
🔸 *அனைத்து பெண்களும் தங்கள் கணவர்களை மதிக்கும் வகையில்* ராஜாவின் ஆணை அவனுடைய ராஜ்ஜியத்தின் எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட்டது. *எந்த மனிதனும் தன் வீட்டிற்கு அதிகாரியாயிருக்க வேண்டும்* என்று *ராஜாவின் அனைத்து நாடுகளுக்கும்* அந்தந்த மொழிகளில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
💠 *சந்தோஷமான திருமணவாழ்க்கையை* அனுபவிப்பதற்கு கணவனும் மனைவியும் பின்பற்ற வேண்டிய *சரியான நடத்தை* பற்றி வேதம் கோடிட்டுக் காட்டுகிறது.
🔸 அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறுகிறான்: *"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்."* (கொலோசெயர் 3:18). பேதுருவும் வலியுறுத்துகிறான்: *“மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”* (1 பேதுரு 3:1). பவுல் எழுதுகிறான்: *"மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.”* (எபேசியர் 5:22-23). தலையாக இருப்பது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்ல. பயனுள்ள தலைமை ஆதிக்கம் செலுத்துவதில்லை. *வீட்டை நடத்துவது* கணவனின் பொறுப்பு. *ஆண்கள் தங்கள் மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்காக* இந்த வசனத்தின் *அர்த்தத்தைத் திரிப்பது* முறையற்றது.* கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல கணவன் மனைவிக்குத் தலையாக இருக்கிறான் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, *திருச்சபையின் மீது கிறிஸ்து, அதனுடைய நன்மைக்காக அதிகாரம் செலுத்துவதைப் போல, கணவன் தன் மனைவியின் மீது அவளுடைய நன்மைக்காகவே அதிகாரம் பெற்றிருக்கிறான்.*
🔸 பவுல் கூறுகிறான்: *"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்."* (எபேசியர் 5:25). கிறிஸ்து திருச்சபைக்காக தம்மைக் கொடுத்தபோது காட்டிய அதே *தன்னலமற்ற, பரிசுத்த அன்புடன்* கணவன் தனது மனைவியை நடத்த வேண்டும். வேதம் கற்பிக்கிற பிரகாரம், மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு அடிபணிந்து, அவனுக்கு ஏற்ற அர்ப்பணிப்புள்ள உதவியாளராக மாறும்போது, *கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு தேவனுடைய உண்மையான நோக்கத்தை* பூர்த்தி செய்கிறது.
🔸 பேதுரு, தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்திருந்த ஒரு நல்ல பெண்ணுக்கான உதாரணமாக, சாராளைக் குறிப்பிடுகிறான். அவன் கூறுவது: *"இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்."* (1 பேதுரு 3:5-6).
🔸 பவுல் விளக்குகிறான்: *"ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.”* (1 கொரிந்தியர் 11:11-12). பெண் தன் கணவனின் அதிகாரத்திற்கு அடிபணியும்போது அவள் தன் அதிகாரத்தைப் பெறுகிறாள். கணவனின் நியாயமான அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் நேரத்தில் ஒரு பெண் தன் தனித்துவத்தை இழக்கிறாள். *ஆணுக்குரிய இடத்தில்* இருக்க விரும்பும் ஒரு பெண், பெண்ணுக்குரிய குணநலன்களை இழந்து, தனக்கு இருக்க வேண்டியதற்கு *முரணான குணநலன்களைப் பெறுவாள். கணவனுக்கு எதிராக அதிக கசப்புணர்வையும் வளர்த்துக்கொள்வாள்.*
🔸 கிறிஸ்துக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறான். *“யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”* (கலாத்தியர் 3:28).
🔹 *மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் திருமணத்தைக் குறித்து தேவனுடைய திட்டத்தை புரிந்துகொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *வீட்டை நடத்துவது கணவனின் பொறுப்பு.*
2️⃣ *ஆண்கள் தங்கள் மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்காக வசனத்தின் அர்த்தத்தைத் திரிப்பது முறையற்றது.*
3️⃣ *கிறிஸ்து திருச்சபையின் மீது அதனுடைய நன்மைக்காக அதிகாரம் செலுத்துவதைப் போல, கணவன் தன் மனைவியின் மீது அவளுடைய நன்மைக்காகவே அதிகாரம் பெற்றிருக்கிறான்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: *நாள் 148/365*
*எஸ்தர் 1-4*
*எஸ்தரின் சரித்திரம்*
*உங்களுக்குத் தெரியுமா*....?
நம் தேவன் , வரலாற்றின் பின்னணியில் மட்டுமல்ல ....
நம் ஒவ்வொருவருடைய
வாழ்க்கைப் பின்னணியிலும் இருந்து..மறைமுகமாக
செயல்படுபவர் என்பது…
உலகம் முழுவதையும், ஆளுகை செய்த அகாஸ்வேரு ராஜாவை ,
தேவனே ஆளுகை செய்தார்.
உலக முழுவதையும், தனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்திய அகாஸ்வேருவால்..தன் மனைவி
வஸ்தியைத் தனக்குக்
கீழ்ப்படியப்பண்ண முடியவில்லை.
வஸ்தியைச் சிங்காசனத்தை விட்டு அகற்ற சட்டங்கள் இயற்றப்பட்ட போதே ,
எஸ்தரை, அந்த சிங்காசனத்தில் அமர்த்த.. தேவன் செயல்பட ஆரம்பித்தார்.
ஆமான், தன் அதிகாரத்தினால், பணத்தினால் , மொர்தெகாயை அவனை வணங்கவும்.. நமஸ்கரிக்கவும் செய்யமுடியவில்லை.
காரணம் மொர்தெகாய் ஒரு யூதன்.
யூதர்கள் தேவனை மட்டுமே நமஸ்கரிப்பார்கள்...
பஞ்சத்திற்குத் தப்பும்படி தேவன் யோசேப்பை , முன்னமே எகிப்திற்கு அனுப்பினதுபோல , யூதர்களை அழிவிலிருந்து தப்பும்படி ....எஸ்தரை ,
தேவன் முன்னமே அகாஸ்வேருவின் அரண்மனைக்குள் வழிநடத்தினார்.
ஆமான் யூதர்களை அழிக்க நிசான் மாதம் (1ம் மாதம்) போட்ட சீட்டு ,
ஆதார் (12ம் மாதம்) மாதத்தில் விழச் செய்தது (யூதர்களைக் காக்கும்படி) தேவன்தான்...
பணத்தைக் கொடுத்து ராஜாவின் முத்திரையை வாங்க ஆயத்தமான ஆமானால் .....
அந்தப் பணத்தைக் கொடுத்துத் தன் உயிரைக் காக்க முடியவில்லை.
அவன் உண்டுபண்ணின தூக்குமரத்தில்..அவனையே
தூக்கிப்போட்டார்கள்..
அன்றைய உலக அழகியான எஸ்தர் , தன் அழகினால்..தான் நினைத்த நேரத்தில் ராஜாவின் சமுகத்திற்குச் செல்லமுடியாது.
விருந்திலே ஆரம்பித்து, விருந்திலே முடிவடைந்த புஸ்தகம், எஸ்தர்...
முதல் நாள் விருந்திலே மகிமையடைந்த ஆமான் ,மறுநாள் விருந்திலே மரணமடைந்தான்.
விருந்துகளில் விருப்பம் கொண்ட ராஜாவிற்கு ,
எஸ்தர் ராஜாத்தி, விருந்து கொடுத்தே வெற்றி பெற்றாள்.
உபவாச ஜெபம், தேவனுடைய ஞானத்தையும், வல்லமையையும், வழிநடத்துதலையும் கொடுக்கும்.
யூதர்களின் மரண நாள் என்று குறிக்கப்பட்ட நாள்.. அவர்களின் பண்டிகை நாளாக , பரிசுகள் அனுப்பும் நாளாக மாறிற்று.
இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டோம் என்று சாத்தான் நினைத்தான்...
ஆனால், அது உயிர்த்தெழுந்த பண்டிகை நாளாக மாறியது...அதை இந்த உலகம்
கொண்டாடி வருகிறது..
தேவன் தம்முடைய சித்தங்களை....தீர்மானங்களை சாதாரண மனிதர்கள் மூலமும் நிறைவேற்றுகிறார்.
விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு.. (வெளி.22:16)
நட்சத்திரம் என்ற பெயர் கொண்ட எஸ்தர் மூலம்.. யூதர்களுக்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார்.
இன்று உங்களைக்குறித்தும் தேவன் மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறார்...
அடிமையானாலும், அனாதையானாலும்.. எவரையும் அரியணையில் அமர்த்த தேவனால் கூடும்.
தேவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி சிறக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் அத்தகைய வெற்றி உண்டு.
இந்தியா தேசம், அகாஸ்வேரு ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்தது என்று வேதத்திலே பதிவு செய்த தேவன்..
இந்தியாவை நேசித்து, தமது சீஷனாகிய தோமாவையும் அனுப்பி வைத்தார்...
அன்று மொர்தெகாய் ராஜாவுக்காக செய்த காரியம்,
நாளாகமப் புத்தகத்தில்
எழுதப்பட்டது போல.. இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும்..
தேவன் தம்முடைய புத்தகத்திலே எழுதி வைக்கிறார்...
நிச்சயமாக அதற்குரிய பலனை நீங்கள் பெறுவீர்கள்...
தேவன்,இன்று உங்கள் வாழ்வில் தேவதூதர்களைக் கொண்டு செயல்படாமல் இருக்கலாம்...அன்று ஆபிரகாமுடன் வானத்திலிருந்து பேசினாரே அப்படி உங்களோடு பேசாமல் இருக்கலாம்...
ஆனால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்...
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும்...நீங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும், அவர் உங்களோடு வருகிறார் ...
உங்களுக்காகச் செயல்படுகிறார்...
*இதனால்தான் கர்த்தரைத்* *தங்கள் தெய்வமாகக் கொண்ட* *ஜனம் பாக்கியமுள்ளது*
*என்று வேதம்*
*குறிப்பிட்டுள்ளது*..
*இந்த உலகிலே நீங்களும்*
*நானும் பாக்கியமுள்ள* *சந்நதியினர் என்பது எத்தனை* *பெரிய கிருபை அல்லவா*..!
ஆமென்.🙏
மாலா டேவிட்
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: எஸ்தர் 4.
🌺🌺🌺🌺
"எஸ்தரின் செயல்பாடு."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அந்த ஆணையின் நகலை ஒரு கூரியர் மூலம் எஸ்தரிடம் கொடுத்த பிறகு, மொர்தெகாய் ராஜாவிடம் தன் மக்களின் சார்பாகப் பரிந்து பேசும்படி அவளை சவால் செய்தார்.
எஸ்தர் அழைக்கப்படும்போது மட்டுமே ராஜாவிடம் வர அனுமதிக்கப்பட்டாள், அவள் சொந்தமாக வந்தால், அழைப்பின்றி ராஜாவை அணுகும் தைரியத்திற்காக அவள் தூக்கிலிடப்படலாம்.
மொர்தெகாயின் நம்பிக்கை கடவுளின் விசுவாசத்தில் இருந்தது, எஸ்தரின் விசுவாசத்தில் அல்ல.
தனிநபர்கள் கடவுளை வீழ்த்தினாலும் கடவுள் தம் மக்களை வீழ்த்த மாட்டார் என்பதை அவர் அறிவார்.
கடவுள் நம்மை ஒரு காரணத்திற்காக ஒரு இடத்தில் வைக்கிறார், அந்த காரணத்தைக் காணவும், அதில் நடக்கவும் நமக்கு தைரியமும் ஞானமும் தேவை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: *ராஜ கிரீடம் எஸ்தரின் சிரசில் வைக்கப்பட்டு, அவள் பட்டத்து ஸ்தீரியானாள்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்தர் 2: 17.
1. ஆம், *இந்த எஸ்தர் எப்படி ஆகாஸ்வேரு ராஜாவுக்கு பட்டத்து ராணி ஆனாள், எப்படி ராஜ கிரீடம் அவள் சிரசில் வைக்கப்பட்டது* என்பதை தியானிப்போம்.
*நம்மையும் கூட எஸ்தரை போல ஜீவ கிரீடத்தை நம் சிரசில் வைத்து மணவாளனாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் மாற்ற தெரிந்து கொண்டாரே!* இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
2. இந்த எஸ்தர் யார்? *எஸ்தர் என்பதற்கு நட்சத்திரம் என அர்த்தம். இவள் ஒரு அநாதை பெண். இவளுக்கு தாய் தகப்பன் இல்லை. ஆனால் அவளை அன்போடு வளர்க்க மொர்தகாய் என்ற சிறிய தகப்பனாரை கர்த்தர் தெரிந்து கொண்டார்.*
ஆம், *நம் தேவன் திக்கற்றவர்களையும், அநாதைகளையும் கைவிடுகிற தேவன் அல்ல. நாமும் கூட திக்கற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், அநாதைகளை போல காணப்படலாம். நம்மையும் கூட ராஜ மேன்மையை பெற்றுக் கொள்ளவும், அநேகரை நட்சத்திரங்களை போல மாற்றவும்* ( தானியேல் 12: 3) இந்த எஸ்தரை போல, மொர்தகாயை போல நம்மை சமர்ப்பிப்போம்.
3. *எஸ்தர் ஒரு கன்னி பெண். இவள் ரூபவதியும், சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்*. ஆம், நாமும் கூட *கிறிஸ்துவின் மணவாட்டிகளாய் மாற கறைபடாத கன்னியராய் , பரிசுத்தவான்களாய் வாழ வேண்டும்.* ஸ்தீரிகளில் ரூபவதியே! என அழைக்கும் *ஆத்தும நேசருக்கு மணவாட்டியாய், ஜீவ கிரீடம் தரிக்க வேண்டுமானால் நாம் பாவமில்லாத, பரிசுத்தர்களாய் வாழ வேண்டும்.* இன்று நம் ஆத்தும நேசர் நம்மை, என் மணவாளியே, நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதொன்றுமில்லை என கூறக்கூடுமோ என நம்மை ஆராய்ந்து பார்ப்போம். உன்னதபாட்டு 4:7.
4. *எஸ்தர் ஆறு மாதம் வெள்ளைப்போள தைலத்தாலும், ஆறுமாதம் சுகந்த வர்க்கங்களாலும் சுத்திகரிக்கப்பட்டாள். வெள்ளைப் போளம் கசப்பானது. பலவித சோதனைகளால் நாமும் பாடுகளை சகித்து, கிறிஸ்துவின் சாயலை பெற்றுக் கொள்கிறோம். எஸ்தர் வாசனை கொடுக்கிறாள். ஆம், நம்முடைய சாட்சியின் வாழ்க்கை வாசனை வீசுகிறதா? நம்முடைய வார்த்தைகள், செயல்கள் பிறருக்கு கிறிஸ்துவின் வாசனையை, சாயலை வெளிப்படுத்த வேண்டும்.*
5. *எஸ்தருக்கு தன்னை காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது. ராஜா அவள் மேல் தயை வைத்தான். அன்பு வைத்தான். காரணம் அவளுடைய சுத்திகரிப்பு, அழகு, அவள் மேலிருந்த வாசனை*.
ஆம், *ராஜாதி ராஜாவும், மணவாளனுமாகிய இயேசுகிறிஸ்துவின் அன்பை, தயையை பெற்றுக் கொள்ள இயேசுவின் இரத்தத்தால், வசனத்தால், பரிசுத்த ஆவியால் நம்மை பாவமற கழுவி சுத்திகரிக்க வேண்டும்.* வசனத்திற்கு கீழ்ப்படியும் போது, அழகு நம்மில் வரும் போது நாமும் ரூபவதியாக மாறுகிறோம். மட்டுமல்ல கிறிஸ்துவின் சாயலை, வாசனையை நம் சாட்சியின் வாழ்க்கை வெளிப்படுத்தும்.
6. *எஸ்தர் தன் வளர்ப்பு தகப்பன் சொற்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தாள்.* மொர்தகாய் கற்பித்தபடி தன் குலத்தை , பூர்வோத்தரத்தை ஒருவருக்கும் வெளிப்படுத்தவில்லை. ஆம், இன்று நாம் நம் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோமா? சிந்திப்போம்.
மட்டுமல்ல, *எஸ்தர் மறைத்து வைக்க வேண்டியவைகளை மறைத்து வைத்தாள்.* ஆனால் நாமோ இரகசியமாய் வைக்க வேண்டிய அனைத்தையும், அனைவரிடமும் அறிவித்து விடுகிறோம். நாம் ஜீவ கிரீடத்தை பெறுவதற்கு இது ஒரு தடை அல்லவா?
ஆம், *எஸ்தரை போல ராஜாவின் மணவாட்டியாய், கிரீடம் அணிந்தவர்களாய் , பிரியமானவர்களாய், வாசனை வீசுகிறவர்கள்ய் மாற கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு*📗
🍂 *மறுக்க தைரியம்* 🍂
187 நாட்கள் நடந்த ஒரு விருந்து ராணிக்கு துயரத்தில் முடிந்தது. உண்மையில் அவள் *குடிபோதையில் இருந்த ஆண்கள் கூட்டத்திற்கு முன் வர மறுத்ததற்காக அந்த இடத்திலேயே அரியணையில் இருந்து தள்ளப்பட்டாள்.* அரச மாளிகையில் பெண்களுக்கு வஸ்தி அரசி விருந்து வைத்தாள். ஏழாவது நாளில் *அரசர் மது அருந்தி மனம் மகிழ்ந்தார்.* அவர் தன் மனைவியான *வஸ்தியை எல்லா மனிதர்கள் முன்பாகவும், அரச கிரீடத்தை அணிந்து வர வேண்டும்* என்று கட்டளையிட்டார்.
அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் அவள் அழகைக் காட்ட அரசன் விரும்பினான். *ராணி குடிகாரர்கள் முன் வர உறுதியாக மறுத்துவிட்டார்* (எஸ்தர் 1:10-12). வஸ்தி தன் கணவனின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்துவிட்டாள். *ஒரு மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்தவளாக இருக்க வேண்டும் ஆனால் இதற்கு ஒரு எல்லை உண்டு.* வஸ்தி அடக்கமாக இருக்க விரும்பினாள். *அழகின் ஷோ கேஸ் ஆக மறுத்துவிட்டாள்.*
ஒரு மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆனால் * அவனுடைய மூர்க்கத்தனமான கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது*. தன் கண்ணியம் ஆபத்தில் இருக்கும் இடத்தில் மனைவி மறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மனைவி என்பதற்கு வஸ்தி ஒரு சிறந்த உதாரணம். பெண்கள் *கண்ணியமாகவும், அமைதியாகவும், மரியாதையாகவும், பணிவாகவும்* இருக்க வேண்டும். அதே சமயம் மானத்தைப் பணயம் வைக்கும் அபத்தமான கோரிக்கைகளுக்கு *இல்லை* என்று உறுதியாக மறுக்க வேண்டும்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 09, 2023_
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: Day 150. Est 3:1-6 *Bowing before no man* Mordecai
Mordecai had a choice- either bow before the powerful official Haman or lose his life Mordecai refused to disobey God' s commandment against bowing to anyone but living God.
Jos 23:16 says when we serve other gods and bow down to them ,the anger of the lord will burn against you and you shall perish quickly from the good land which He has given you
Mordecai owed his allegiance to God alone He didnot take a safe and popular course of action but had the courage to stand alone
*Doing what is right is not always popular .Obeying God is most important than obeying people.Acta 5;29*
Cynthia Sathiara
Chennai
[09/09, 07:49] (W) Arun Selva Kumar: Day 148/365
🌿🌿🌿🌿🌿🌿🌿
Esther 01-04
🌿 PRINCIPAL LESSION - GOD IS THERE 🌿
Esther 03
Esther is a glimpse into the lives of the exiles of Israel in the Medo-Persian Empire between the times of the first return after the decree of Cyrus (538 BC ) and the returns under Ezra (458 BC) and Nehemiah (445 BC).
It is hard to make these people pious rather than what seems a more realistic characteristic of compromise and worldliness.
This does not mean that God is not there. That, indeed, is a principal lesson of the book of Esther that God is there, even in what we might call low times for His people; even in times when its existence is threatened through worldliness and compromise.
This is where we pick up the story of Esther (or Mordecai at least). Now, whatever time-lapse between the end of chapter 2 and chapter 3, You will notice a lapse of some 9 years between 1:3 and 3:7. In this period a man called Haman comes in to the picture. He is the catalyst who triggers the reaction (at last?) from Mordecai.
Haman is appointed to a senior position in the cabinet – perhaps Prime Minister. Significantly we have Haman’s pedigree: an Agagite. What does that tell us? Well, remember Agag, Amalekite adversary of King Saul, whom Samuel put to death in 1 Samuel 15? These Amelekites were deadly foes of the Israelites. Mordecai was obviously aware of this and felt natural antipathy.
There is some sense of history with Mordecai, though it may be little more than ethnic prejudice. A prayer on Mordecai’s lips in which he says it’s not stubbornness or pride that was behind his reaction. He is made to say that he would even kiss King Haman’s feet if it would do Israel good because he wished to worship God alone.
Mordecai fell in line with that apostolic principle. And when we go against the law of God the whole people of God can suffer.
We are to resist the devil and not give him opportunity to do damage among the people of God through our sins. The worldliness of Christians will always be exploited by the devil. Satan is content with Mordecai’s worldliness.
Even Esther and a Mordecai may be used in the struggle against the Church’s enemies. We often ask for trouble and He gives us His love and mercy and protection, despite our errors and reactions and over-reactions which the devil exploits.
Compiled by Dr H. A. Pradeep Kumar,
Bidar / Hyderabad,
India 🇮🇳
🌿🌿🌿🌿🌿🌿🌿
[09/09, 04:57] +91 99431 72360: *09.09.2023*
💠 *எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்க வேண்டும்* 💠
☄️ *“எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்க வேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.”* (எஸ்தர் 1:22).
🔸 *அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா* வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். அவன் தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், *தனது பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும்* 180 நாட்களுக்கு விருந்து கொடுத்தான். பின்பு, *தலைநகரான சூசானின் குடிமக்களுக்கு* ஏழு நாட்களுக்கு அரண்மனை தோட்டத்திற்குள்ளே விருந்து கொடுத்தான். நிச்சயமாக, *பெருமையே* இந்த விருந்துகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது. *ராணியாகிய வஸ்தியும்* ராஜாவின் அரமனையிலே *பெண்களுக்கு* ஒரு விருந்து கொடுத்தாள்.
🔸 விருந்தின் ஏழாவது நாளில், ராஜாவாகிய அகாஸ்வேரு *ராணி வஸ்தியை* அவள் அழகை ஜனங்களுக்குக் காட்டும்படி *இராஜகிரீடம் அணிவித்து* அழைத்துவருமாறு தன் பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். வஸ்தி *வர மறுத்தாள்.* அவள் கீழ்ப்படிந்து வந்திருந்தால், அது அவளுடைய அடக்கத்தை பாதித்திருக்காது. ராஜா தனது பிரதானிகளுடன் ஆலோசித்து, *வஸ்தி மீணடும் ராஜா அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்றும், அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு ராணியின் இடத்தைக் கொடுக்கவேண்டும்* என்றும் முடிவெடுத்தான்.
🔸 *அனைத்து பெண்களும் தங்கள் கணவர்களை மதிக்கும் வகையில்* ராஜாவின் ஆணை அவனுடைய ராஜ்ஜியத்தின் எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட்டது. *எந்த மனிதனும் தன் வீட்டிற்கு அதிகாரியாயிருக்க வேண்டும்* என்று *ராஜாவின் அனைத்து நாடுகளுக்கும்* அந்தந்த மொழிகளில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
💠 *சந்தோஷமான திருமணவாழ்க்கையை* அனுபவிப்பதற்கு கணவனும் மனைவியும் பின்பற்ற வேண்டிய *சரியான நடத்தை* பற்றி வேதம் கோடிட்டுக் காட்டுகிறது.
🔸 அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறுகிறான்: *"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்."* (கொலோசெயர் 3:18). பேதுருவும் வலியுறுத்துகிறான்: *“மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”* (1 பேதுரு 3:1). பவுல் எழுதுகிறான்: *"மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.”* (எபேசியர் 5:22-23). தலையாக இருப்பது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்ல. பயனுள்ள தலைமை ஆதிக்கம் செலுத்துவதில்லை. *வீட்டை நடத்துவது* கணவனின் பொறுப்பு. *ஆண்கள் தங்கள் மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்காக* இந்த வசனத்தின் *அர்த்தத்தைத் திரிப்பது* முறையற்றது.* கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல கணவன் மனைவிக்குத் தலையாக இருக்கிறான் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, *திருச்சபையின் மீது கிறிஸ்து, அதனுடைய நன்மைக்காக அதிகாரம் செலுத்துவதைப் போல, கணவன் தன் மனைவியின் மீது அவளுடைய நன்மைக்காகவே அதிகாரம் பெற்றிருக்கிறான்.*
🔸 பவுல் கூறுகிறான்: *"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்."* (எபேசியர் 5:25). கிறிஸ்து திருச்சபைக்காக தம்மைக் கொடுத்தபோது காட்டிய அதே *தன்னலமற்ற, பரிசுத்த அன்புடன்* கணவன் தனது மனைவியை நடத்த வேண்டும். வேதம் கற்பிக்கிற பிரகாரம், மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு அடிபணிந்து, அவனுக்கு ஏற்ற அர்ப்பணிப்புள்ள உதவியாளராக மாறும்போது, *கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு தேவனுடைய உண்மையான நோக்கத்தை* பூர்த்தி செய்கிறது.
🔸 பேதுரு, தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்திருந்த ஒரு நல்ல பெண்ணுக்கான உதாரணமாக, சாராளைக் குறிப்பிடுகிறான். அவன் கூறுவது: *"இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்."* (1 பேதுரு 3:5-6).
🔸 பவுல் விளக்குகிறான்: *"ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.”* (1 கொரிந்தியர் 11:11-12). பெண் தன் கணவனின் அதிகாரத்திற்கு அடிபணியும்போது அவள் தன் அதிகாரத்தைப் பெறுகிறாள். கணவனின் நியாயமான அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் நேரத்தில் ஒரு பெண் தன் தனித்துவத்தை இழக்கிறாள். *ஆணுக்குரிய இடத்தில்* இருக்க விரும்பும் ஒரு பெண், பெண்ணுக்குரிய குணநலன்களை இழந்து, தனக்கு இருக்க வேண்டியதற்கு *முரணான குணநலன்களைப் பெறுவாள். கணவனுக்கு எதிராக அதிக கசப்புணர்வையும் வளர்த்துக்கொள்வாள்.*
🔸 கிறிஸ்துக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறான். *“யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”* (கலாத்தியர் 3:28).
🔹 *மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் திருமணத்தைக் குறித்து தேவனுடைய திட்டத்தை புரிந்துகொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *வீட்டை நடத்துவது கணவனின் பொறுப்பு.*
2️⃣ *ஆண்கள் தங்கள் மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்காக வசனத்தின் அர்த்தத்தைத் திரிப்பது முறையற்றது.*
3️⃣ *கிறிஸ்து திருச்சபையின் மீது அதனுடைய நன்மைக்காக அதிகாரம் செலுத்துவதைப் போல, கணவன் தன் மனைவியின் மீது அவளுடைய நன்மைக்காகவே அதிகாரம் பெற்றிருக்கிறான்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[09/09, 04:57] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 148* *09/09/2023*
*சனிக்கிழமை*
*எஸ்தர்1 - 4*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[09/09, 04:57] +91 99431 72360: எஸ்தர் 4.
🌺🌺🌺🌺
"எஸ்தரின் செயல்பாடு."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அந்த ஆணையின் நகலை ஒரு கூரியர் மூலம் எஸ்தரிடம் கொடுத்த பிறகு, மொர்தெகாய் ராஜாவிடம் தன் மக்களின் சார்பாகப் பரிந்து பேசும்படி அவளை சவால் செய்தார்.
எஸ்தர் அழைக்கப்படும்போது மட்டுமே ராஜாவிடம் வர அனுமதிக்கப்பட்டாள், அவள் சொந்தமாக வந்தால், அழைப்பின்றி ராஜாவை அணுகும் தைரியத்திற்காக அவள் தூக்கிலிடப்படலாம்.
மொர்தெகாயின் நம்பிக்கை கடவுளின் விசுவாசத்தில் இருந்தது, எஸ்தரின் விசுவாசத்தில் அல்ல.
தனிநபர்கள் கடவுளை வீழ்த்தினாலும் கடவுள் தம் மக்களை வீழ்த்த மாட்டார் என்பதை அவர் அறிவார்.
கடவுள் நம்மை ஒரு காரணத்திற்காக ஒரு இடத்தில் வைக்கிறார், அந்த காரணத்தைக் காணவும், அதில் நடக்கவும் நமக்கு தைரியமும் ஞானமும் தேவை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
[09/09, 04:57] +91 99431 72360: *நாள் 148/365 *
*எஸ்தர் 1-4*
*எஸ்தரின் சரித்திரம்*
*உங்களுக்குத் தெரியுமா*....?
நம் தேவன் , வரலாற்றின் பின்னணியில் மட்டுமல்ல ....
நம் ஒவ்வொருவருடைய
வாழ்க்கைப் பின்னணியிலும் இருந்து..மறைமுகமாக
செயல்படுபவர் என்பது…
உலகம் முழுவதையும், ஆளுகை செய்த அகாஸ்வேரு ராஜாவை ,
தேவனே ஆளுகை செய்தார்.
உலக முழுவதையும், தனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்திய அகாஸ்வேருவால்..தன் மனைவி
வஸ்தியைத் தனக்குக்
கீழ்ப்படியப்பண்ண முடியவில்லை.
வஸ்தியைச் சிங்காசனத்தை விட்டு அகற்ற சட்டங்கள் இயற்றப்பட்ட போதே ,
எஸ்தரை, அந்த சிங்காசனத்தில் அமர்த்த.. தேவன் செயல்பட ஆரம்பித்தார்.
ஆமான், தன் அதிகாரத்தினால், பணத்தினால் , மொர்தெகாயை அவனை வணங்கவும்.. நமஸ்கரிக்கவும் செய்யமுடியவில்லை.
காரணம் மொர்தெகாய் ஒரு யூதன்.
யூதர்கள் தேவனை மட்டுமே நமஸ்கரிப்பார்கள்...
பஞ்சத்திற்குத் தப்பும்படி தேவன் யோசேப்பை , முன்னமே எகிப்திற்கு அனுப்பினதுபோல , யூதர்களை அழிவிலிருந்து தப்பும்படி ....எஸ்தரை ,
தேவன் முன்னமே அகாஸ்வேருவின் அரண்மனைக்குள் வழிநடத்தினார்.
ஆமான் யூதர்களை அழிக்க நிசான் மாதம் (1ம் மாதம்) போட்ட சீட்டு ,
ஆதார் (12ம் மாதம்) மாதத்தில் விழச் செய்தது (யூதர்களைக் காக்கும்படி) தேவன்தான்...
பணத்தைக் கொடுத்து ராஜாவின் முத்திரையை வாங்க ஆயத்தமான ஆமானால் .....
அந்தப் பணத்தைக் கொடுத்துத் தன் உயிரைக் காக்க முடியவில்லை.
அவன் உண்டுபண்ணின தூக்குமரத்தில்..அவனையே
தூக்கிப்போட்டார்கள்..
அன்றைய உலக அழகியான எஸ்தர் , தன் அழகினால்..தான் நினைத்த நேரத்தில் ராஜாவின் சமுகத்திற்குச் செல்லமுடியாது.
விருந்திலே ஆரம்பித்து, விருந்திலே முடிவடைந்த புஸ்தகம், எஸ்தர்...
முதல் நாள் விருந்திலே மகிமையடைந்த ஆமான் ,மறுநாள் விருந்திலே மரணமடைந்தான்.
விருந்துகளில் விருப்பம் கொண்ட ராஜாவிற்கு ,
எஸ்தர் ராஜாத்தி, விருந்து கொடுத்தே வெற்றி பெற்றாள்.
உபவாச ஜெபம், தேவனுடைய ஞானத்தையும், வல்லமையையும், வழிநடத்துதலையும் கொடுக்கும்.
யூதர்களின் மரண நாள் என்று குறிக்கப்பட்ட நாள்.. அவர்களின் பண்டிகை நாளாக , பரிசுகள் அனுப்பும் நாளாக மாறிற்று.
இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டோம் என்று சாத்தான் நினைத்தான்...
ஆனால், அது உயிர்த்தெழுந்த பண்டிகை நாளாக மாறியது...அதை இந்த உலகம்
கொண்டாடி வருகிறது..
தேவன் தம்முடைய சித்தங்களை....தீர்மானங்களை சாதாரண மனிதர்கள் மூலமும் நிறைவேற்றுகிறார்.
விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு.. (வெளி.22:16)
நட்சத்திரம் என்ற பெயர் கொண்ட எஸ்தர் மூலம்.. யூதர்களுக்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார்.
இன்று உங்களைக்குறித்தும் தேவன் மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறார்...
அடிமையானாலும், அனாதையானாலும்.. எவரையும் அரியணையில் அமர்த்த தேவனால் கூடும்.
தேவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி சிறக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் அத்தகைய வெற்றி உண்டு.
இந்தியா தேசம், அகாஸ்வேரு ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்தது என்று வேதத்திலே பதிவு செய்த தேவன்..
இந்தியாவை நேசித்து, தமது சீஷனாகிய தோமாவையும் அனுப்பி வைத்தார்...
அன்று மொர்தெகாய் ராஜாவுக்காக செய்த காரியம்,
நாளாகமப் புத்தகத்தில்
எழுதப்பட்டது போல.. இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும்..
தேவன் தம்முடைய புத்தகத்திலே எழுதி வைக்கிறார்...
நிச்சயமாக அதற்குரிய பலனை நீங்கள் பெறுவீர்கள்...
தேவன்,இன்று உங்கள் வாழ்வில் தேவதூதர்களைக் கொண்டு செயல்படாமல் இருக்கலாம்...அன்று ஆபிரகாமுடன் வானத்திலிருந்து பேசினாரே அப்படி உங்களோடு பேசாமல் இருக்கலாம்...
ஆனால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்...
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும்...நீங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும், அவர் உங்களோடு வருகிறார் ...
உங்களுக்காகச் செயல்படுகிறார்...
*இதனால்தான் கர்த்தரைத்* *தங்கள் தெய்வமாகக் கொண்ட* *ஜனம் பாக்கியமுள்ளது*
*என்று வேதம்*
*குறிப்பிட்டுள்ளது*..
*இந்த உலகிலே நீங்களும்*
*நானும் பாக்கியமுள்ள* *சந்நதியினர் என்பது எத்தனை* *பெரிய கிருபை அல்லவா*..!
ஆமென
மாலா டேவிட்
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
*📚THE BOOK OF ESTHER*
📚 *எஸ்தர் புத்தகம்*
எஸ்தர் புத்தகம் அதன் பாணியில் தனித்துவமானது, மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள்:
🎯 *கர்த்தர்* என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை.
🎯 *ஆறு விருந்துகள்* குறிப்பிடப்பட்டுள்ளன:
👉🏽 *அகாஸ்வேரு ராஜா* மூன்று விருந்துகளை செய்வித்தானா ( *1:3,5; 2:18*)
👉🏽 *வஸ்தி ராணி* ஒரு விருந்து செய்தாள் ( *1:9*)
👉🏽 *எஸ்தர் ராணி* இரண்டு விருந்துகளை கொடுத்தாள் ( *5:5b; 6:14*)
🎯 *மூன்று பெண் கதாபாத்திரங்கள்*:
👉🏽 *வஸ்தி* - பிடிவாதமானவள் (அவள் பதவி நீக்கம் செய்யப்பட்டாள்)
👉🏽 *எஸ்தர்* - உண்மையுள்ளவள் (அவள் முடிசூட்டப்பட்டாள்)
👉🏽 *சிரேஷ்* - முட்டாள்தனம் (அவள் கணவனையும் மகன்களையும் இழந்தாள்)
🎯 *இரண்டு ஆண் கதாபாத்திரங்கள்* :
👉🏽 *மொர்தெகாய்* - நேர்மையான மனிதர் (அவர் கௌரவிக்கப்பட்டார்)
👉🏽 *ஆமான்* - சுயநலம் கொண்டவர் ( தூக்கிலிடப்பட்டார் )
🎯 *13 பேர் தூக்கிலிடப்பட்டனர்* :
👉🏽 பிக்தான் மற்றும் தேரேஷ் (2:21-23)
👉🏽 *ஆமான்*(7:9-10)
👉🏽 *ஆமானின் பத்து குமாரர்கள்*( 9:14 )
🎯 எஸ்தர் புத்தகம் *தேவனுடைய இறையாண்மை மற்றும் தேவனின் விடுதலை* பற்றி கூறுகிறது
🎯 *அழகுப் போட்டியின் தொடக்கம்* 👑
📝 *பின்புறம்* : அகாஸ்வேரு ராஜா தனது இரண்டாவது விருந்தை கொடுத்தார், அங்கு அவர் ஏற்கனவே தனது ராஜ்யத்தின் மகிமையையும் செல்வத்தையும் வெளிப்படுத்தினார், இப்போது அவர் *அவளைக்* (ராணி வஸ்தி) *ஜனங்களுக்கு அவளுடைய சௌந்தரியத்தைக் காண்பிக்கும்படி விரும்பினார்* (1:11) . ஆனால் வஸ்தியோ வர மறுத்துவிட்டார், அதன் விளைவாக அவள் பதவி நீக்கம் செய்யப்பட்டாள்.
🙋♀️ வஸ்தியின் பதவி நீக்கம் அரண்மனையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது, எனவே *புதிய ராணிக்கான தேடல் தொடங்கியது*. ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலுள்ள கன்னிப்பெண்களை கூட்டி, ராஜாவை சந்திப்பதற்கு அவர்களை தயார்படுத்துவது, பின்னர் அவர்களில் ராஜாவின் கண்களுக்கு பிரியமான கன்னி வஸ்திக்கு பதிலாக பட்டத்து ஸ்திரீயாக வேண்டும் என்பது அவர்களின் அணுகுமுறை *(2: 2-4*)
📝 *போட்டியின் ஆரம்பம்* : பல பெண்கள் சூசானின் ஆரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு *யேகாயின்* பராமரிப்பில் வைக்கப்பட்டனர்.
✅ பங்கேற்பாளர்கள் அனைவரும் *12 மாத அழகு சிகிச்சைகளை* ( *ஆறு மாதங்கள்* வெள்ளைப்போளத் தைலத்தினாலும் *ஆறு மாதங்கள்* சுகந்தவர்க்கங்களினாலும், மற்றும் சுத்திகரிப்புகளுடன் முடிக்க வேண்டும். 2:12 )
✅பங்கேற்பாளர்கள் சாயங்காலத்தில் ராஜாவின் அரண்மனைக்குப் போக வேண்டும், காலையில் அவர்கள் அரண்மனையிலிருந்து திரும்ப வேண்டும். 2:13-14அ
✅ ராஜா தன்னை விரும்பி பேர் சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது. 2:14b
✅ *எஸ்தர்* என்று அழைக்கப்பட்ட *அத்சாள்* ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
*எஸ்தரின் சிறப்பான பண்புகள் என்ன?*
🙋♀️ ஒரு அனாதை, அன்பான மற்றும் அக்கறையுள்ள சூழலில் வளர்க்கப்பட்டவள், அங்கு அவள் மாமா மொர்தெகாயால் யூத நம்பிக்கையில் போதிக்கப்பட்டு இருக்கலாம்.
🙋♀️ அவள் அழகான உருவம் கொண்ட அழகான இளம் பெண்ணாக வளர்ந்தாள்.
🙋♀️ அவள் ராஜாவின் அதிகாரிகளின் கண்ணில் பட்டாள், மற்ற இளம் பெண்களுடன் ராஜாவின் அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். (எஸ்தரின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வைப் பற்றி மொர்தெகாயிக்கோ அல்லது எஸ்தருக்கோ எதுவும் தெரியாது. ஆனால் தேவனுக்கு வேறு திட்டம் இருந்தது)
🙋♀️ எஸ்தர் மிகவும் நன்றாகவும் அழகாகவும் *உள்ளேயும் வெளியேயும்* இருந்தாள். எஸ்தருக்கு யேகாவின் கண்களிலே தயை கிடைத்தது என்று உரை கூறுகிறது *(2:9*):
🙋♂️அவர் உடனடியாக அவளுக்கு அழகு சிகிச்சை அளித்தார்.
🙋♂️ அவர் அவளுக்கு விசேஷ உணவை வழங்கினார்.
🙋♂️ ராஜாவின் அரண்மனையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பணிப்பெண்களை அவளுக்கு நியமித்தார்.
🙋♂️ அவர் அவளுக்கு கன்னிமாடத்தில் சிறந்த இடத்தை வழங்கினார்.
✅ *அரை - இறுதி* :
எல்லாப் பெண்களும் நன்றாக நடித்திருக்க வேண்டும் *ஆனால்* எஸ்தரின் முறை வந்தபோது, *எஸ்தருக்கு தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது** (2:15)
✅ *இறுதி முடிவு* : எஸ்தர் அகாஸ்வேரு ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உரை கூறுகிறது, *"ராஜா சகல ஸ்திரீகளைப் பார்க்கிலும் எஸ்தர் மேல் அன்பு வைத்தான் .."*
📍 *"சகல கன்னிகைகளைப் பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது."* (2:17 )
*🙋♂️கடைசியாக அகாஸ்வேரு ராஜா எஸ்தரின் தலையில் அரச கிரீடத்தை வைத்து அவளை ராணியாக்கினார்* 👑
🙋♀️அவள் தலையில் இருந்த கிரீடம் ஒரு அரச முத்திரையை விட அதிகமானதாக இருந்தது, அது ஒரு *தெய்வீக நியமனம்* .
🙋♀️ எஸ்தர் தனக்காக அல்ல, தன் மக்களுக்காகவும் தன் தேசத்துக்காகவும் தன் யூத ஜனங்களை பராமரிக்கவும் பாதுகாக்கவும் முடிசூட்டப்பட்டாள்.
✅ ராஜாவாகிய லேமுவேல் எழுதுகிறார், *"சௌந்தரியம் வஞ்சனையுள்ளது. அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.*
நீதிமொழிகள் 31:30
✅ பேதுரு எழுதுகிறார், *"மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. "* (1பேதுரு 3:3-4)
.. 🎶..🎶 ..
*இயேசுவின் அழகு என்னில் காணப்படட்டும்*
அவரது அற்புதமான இரக்கம் மற்றும் தூய்மை;
ஓ, தெய்வீக ஆவியே, என் இயல்புகள் அனைத்தும் செம்மைப்படுத்துகின்றன
*இயேசுவின் அழகு என்னில் தெரியும் வரை* .
....🎶..🎶...
தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🌱சிப்பிக்குள் முத்து🌱*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*எஸ்தர் : 1 - 4*
*🌳முத்துச்சிதறல் : 148*
🌹🍩🍀🪢🌹🍩🍀
இராஜாவுக்கு சம்மதியாயிருந்தால்......*வஸ்தியுடைய இராஜ மேன்மையை" "இராஜாவுடய கண்களுக்கு பிரியமான கன்னி", வஸ்திக்கு பதிலாக பட்டத்து ஸ்திரீயாக வேண்டும்....* (1:19:,2:4)
🌹🍩🍀🪢🌹🍩🍀
*👍அரசி பட்டத்திற்கு தகுயடைந்திருந்த எஸ்தர்👍*
🍉🌿🍉🌿🍉
*👑சர்வ லோகையும் ஆளுகை செய்யும் மன்னாதி மன்னராம் இறைவன் தனது உடன்படிக்கையின் மக்கள் வாழ்வில் அசாதாரண விதத்தில் செயல்பட்டு அவர்களில் சிலரையாகிலும் அவர்கள் கொலை செய்யப்படாமல் இருக்கும் படி எவ்வாறு பாதுகாத்தார் என்னும் ஒரு எபிரேய சரித்திரம் தான் எமது பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் எஸ்தர் நூலின் மைய்ய செய்தியாகும்.*
இயல்பாக நடந்தது போன்று தோன்றும் ஒவ்வொரு நிகழ்வுகளுமே இறை ஆளுகையின் பின்னணியத்தால் பிணைந்துள்ளவை என்பதை அக்கண்ணோட்டத்தில் கண்ணுருபவருக்கே அது புலப்படும்.
*இறை மக்களின் வாழ்வு முழுமையுமே இறை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறதெனினும்,*....
*"பரத்தில் இருந்து உண்டாகும் ஞானத்தினால் நிறைய பெற்ற பெண்களால் மட்டுமே",*
தங்களது குடும்பங்களை சீர்க்குலைவுகள் ஏதுமின்றி கட்டி காப்பாற்றி கொண்டு வர இயலும் என்பதையும், *அதிகாரத்தில்* (ஆளுமை பதவியில்) *அமர்த்த பட்டிருக்கும் இருக்கும் கணவரோடு எங்கணம் ஒரு பெண் வாழ்வு நடத்த வேண்டும்❓ என்னும் நல்ல வாழ்வுமுறை பாடங்களையும் எஸ்தர் நூல், சகோதரிகளாகிய எம் ஒவ்வொருவருக்கும் அறிவு பூர்வமாக அறிவுறுத்தி வழிநடத்துகிறது.*
🍇🪶🍇🪶🍇
*👑127 நாடுகளுக்கு அரசனாக ஆகாஸ்வேறு மன்னன் அரியணையில் இருந்த நேரம், தனது பிரபுகளுக்கு ஒரு பெரிய விருந்தை கிட்டதிட்ட 6 மாதங்களாக வழங்கி யாவரையும் களிப்புக்குள்ளாக்கி விடை கொடுக்கும் நேரமும் நாளும் வந்தப்போது,* பட்டத்து இராணியாக முடி சூட பட்டிருந்த *"வஸ்தி என்னும் பேரழகியை"* தனக்கு முன்....
*இராஜ முடி சூடப்பட்டவளாக வரும்படி உத்தரவிடுகிறார்.* மகா இராணியோ, *"முடியாது"* என முழங்கி, தயங்கி நின்று விடுகிறாள்.
*இராஜ கட்டளை மீறப்பட்டதாக குற்றச்சாட்டு அவள் மீது சுமத்தப்பட்டது.*
அதற்க்குரிய தண்டனை,
*1)*
தேசிய சட்டத்தின் படியும், *2)*
நியாயபிரமாண நியதி படியும்,
*3)*
கால வர்த்தமானங்களை அறிந்த
*"தலை சிறந்த பண்டிதர்களின் கூற்றுகளும்"*
அலசி ஆராயப்பட்டது.
முடிவில் உண்டான தீர்மானம் : 👇👇
1) *வஸ்தி இனி இராஜ சமூகத்திற்கு வரக்கூடாது.*
2) அவளது இராஜ முடி, *அவளை பார்க்கிலும் உத்தமியாகிய வேறு ஒருத்திக்கு* வழங்கப்பட வேண்டும்,
என்பதாம்.
*✒️தவறு எங்கே❓ யாரிடம் உள்ளது❓*
வஸ்தி மீது வைக்கப்பட்ட ஒரே குற்றச்சாட்டு, *"அவள் தன் சொந்த கணவனுக்கு கீழ்படியாதவள்"*, என்பதாம்.
வஸ்தி செய்தது தவறா, இல்லை சரியா❓ என்னும் விவாதத்தை காட்டிலும்....
*❓அவள் ஏன் மகுடம் இழந்தாள்❓*
என்பதை மாத்திரம் சகோதரிகளாகிய நாம் எமது மூளையில் அலசி ஆராய வேண்டியுள்ளது.
🌻🌻🫛🌻🌻
தனது கணவன் 127 நாடுகளை அரசாளுபவர். அவருக்கே உரிய சில மதிப்பும், மரியாதையும் ஒரு மனைவியின் ஸ்தானத்தில் இருக்கும் பெண் கொடுக்க வேண்டும் என்பது உலக மரபு, / உலகோர் எதிர்பார்ப்பு.
ஆனால் ஒரு பெண் எப்பொழுது திருமணமாகிய பின் தனது தனிப்பட்ட சுய கௌரவத்தையும், பிடிவாத குண இயல்பினையும் விட்டிறங்காமல்..... *"கம்பாக நிற்கறாளோ"*
அது அவளது,
*"குடும்ப வாழ்வில்"* பாதிப்புகளை மாத்திரமே கொண்டு வரக்கூடும்.
கணவனுக்கு கீழ்படிதலோ, இல்லை கீழ்படியாமையோ, *கர்த்தரின் பட்சத்தில் நிற்போருக்கு மாத்திரமே* அந்தந்த சூழலுக்கு தகுந்தவாறு இறைவனால் அங்கீகாரம் பெறும் என்பதை நாம் மறந்திடலாகாது.
🪂🎈🪂🎈🪂
*💠இராஜாவுக்கு கீழ்படியாதது இராஜ குற்றம்,*
*💠தேசிய துரோக செயலாக அக்காலத்தில் பார்க்கப்பட்டது.*
ஆனால்......
தேச துரோகிக்கு அதற்குரிய தண்டனை இன்னதென்பதை அரசனே தீர்மானிக்க அங்கு வேறு எந்த விதமான சட்டங்களும் இராதது வருந்த தக்க விஷயமே.
🧐தீர்ப்பிடுதலை தள்ளி போடாமல், தடாலடி தீர்மானத்திற்குள் இராஜா வரத்தக்கதாக அவரை சுற்றியுள்ளோர், அவரது பெலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கி, காய் நகர்த்தி நின்ற போதும்,....
*உணர்ச்சி பூர்வமான, சூழலை சார்ந்த முடிவுகள், "குடும்ப வாழ்வில் சிக்கலை அதிகரிக்குமே அல்லாமல், விடிவுக்கு நேரே எவரையும் நடத்த இயலாது."*
வஸ்தி மகுடம் இழக்க காரணம்,
1) அவளா❓
2) போதை பேர்விழியான அவள் கணவனா❓
3) அவள் கணவனின் ஆலோசகர் மெமுகானா❓
*யோசிப்போம்.*
*🦀வஸ்தி ஞானத்தில் குறைவு பட்டவளோ❓*.
தனது கணவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்த பின்,....
📌அதில் இருக்கும் சீழை பிதுக்கி எடுக்க கரிசனை அற்றிருந்தவள்.
📌தனது பரிசுத்த எதிர்ப்பினை அவ்வப்போது அவருக்கு காண்பித்து அவரை நல்வழி படுத்த தயங்கி நின்றவள்.
📌கோபக்கார கணவனோடு வாழ்வது எட்டிக்காயாக கசந்த பொழுதும்,
*🙄நானும் இப்படித்தான் நடந்துகொள்ளுவேன் என்பது போன்ற மனப்பாங்கினால் அவள் நிறைந்து நின்றவள்*.
🍒தனது இராஜ பட்டத்தின் மேன்மைக்கு ஏற்ப தன்னை தாழ்மையாக வைத்துக்கொள்ள சிரத்தை எடுக்காதிருந்தவள்.
🫧தனிமையில் தனது கணவன் முன் காண்பித்து வந்த *"கீழ்படியாமை, அடிபணியாமை" போன்ற பாவம்* ஒருநாள் முழு உலகுக்கும் *(வெளியே)* அப்பட்டமாக தெரிய போவதை குறித்து அறியாதிருந்தவள். முக்கியமாக..... *"தெய்வ சார்பு தன்மையும், பற்றுறுதியும் அற்றவளாய்"* இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
🔥ஆகிலும்,.... *வஸ்தியும் ஒரு உத்தமி* என்றே மெமுக்கான் கூறி நின்றார்.
*அதினால் தான்,.... அவளுடைய இராஜ மேன்மை "அவளை பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு" கொடுக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்தார்.* மெமுக்கானின் கூற்று என்னவென்றால், வஸ்தி இராஜாவுக்கும், அவரது பிரபுக்களுக்கும், சகல ஜனங்களுக்கும் கூட....
*"அநியாயம் செய்தாள்".*
*🍎அவள் தன் அரச கணவனின் ஆளுகைக்கு கீழ் வாழ்ந்த சகல ஸ்திரீகளுக்கும் தவறான முன்னுதாரணத்தை பிரதிபலித்துள்ளாள்*.
ஆகையால்..... அவளது இராஜ முடி பறிக்கபட வேண்டுகோள் வைக்கப்பட்டது.
*இனி அவள் இராஜ ஸ்திரியாக அல்லாமல், பத்தோடு பதின் ஒன்றாக கருதபட்டு, எல்லா பெண்களை போல தேசத்தின் இனி அவள் ஒரு சாதாரண ஸ்திரியாக்க பட வேண்டியது.*
*"இனி அவள் சாதாரண தேச குடிமகள்"* அவ்வளவே.
*உத்தமம் மட்டும் போதாது. ஞானமும், தேவ பக்தியும், ஜெபவாழ்வும், நல் ஆலோசனைக்கு செவிக் கொடுத்தலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்றியமையாதவைகளாகும்.*
🥏🥏🍧🥏🥏
*✍️வாழ்க்கை பாடங்கள் :*
🍂திருமணமாகியுள்ள ஒவ்வொரு ஸ்திரிகளும், திருமணம் ஆகாமல் இருக்கும் மற்ற பெண் பிள்ளைகளுக்கு (ஸ்திரிகளுக்கு) நல்ல முன்மாதிரிகளாக ஜீவித்து காண்பிக்க எம்மால் ஆன முயற்சியை, பயிற்சியை நாமே எடுக்க வேண்டும்.
🍂கணவனின் பொறுப்பு, பதவிக்கு தக்க வண்ணம் நாம் பொது வெளியில்.... மற்றொர் முன் அவருக்கு (கணவருக்கு) அவகீர்த்தி ஏற்படும் வண்ணம் நடக்கலாகாது.
🍀கோபக்கார கணவரை,
🍀ஞானமற்ற கணவரை,
🍀"அம்மா பிள்ளை கணவரை",
🍀மசமசத்த கணவரை,
கையாளும் ஞானத்தினை பரத்தில் இருந்து பெற்று, எமது குடும்ப வாழ்வினை கட்டி எழுப்புவதில்,
*"சமர்த்து பிள்ளைகளாகி"* நிற்கவேண்டும்.
*🍃எந்த புருஷனும் தன் வீட்டிற்கு தானே அதிகாரியாய் இருக்க வேண்டும் என்னும் தீர்மானம் இராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதப்பட்டு அனுப்ப பட்டது என்பதை இறை செயலாகத்தான் கண்ணோக்க வேண்டும்.*
*🍃மனைவியின் சுய முடிவானாலும்... அவள் எந்த இறை சட்டத்தினை பின்பற்றி, அந்த முடிவுக்கு வருகிறாள் / வந்தாள் என்பதே எந்நாளுக்குமுறிய / எக்காலத்திற்குமுறிய....*
*"இறை கண்ணோட்டமாக இருக்கும்"* என்பதையும் மனைவியாக இருக்கும் ஒவ்வொரு ஸ்திரிகளும் / சகோதரிகளும் கருத்தில் கொண்டு செயல்பட்டோமானால்....
*வஸ்தியை காட்டிலும் உத்தமியாகிய எஸ்தர்* போலல்லவா முடி சூடி நிற்போம்❓ *யோசிப்போம்.*
*வஸ்திக்கு பதிலாக.....*
எஸ்தர் இராஜ முடியை தட்டி சென்ற காரணங்கள்... 👇
*1🎊*
தன் பெயருக்கு ஏற்றார் போல...
மிருது செடியாக, கொழுந்து செடியாக, விடிவெள்ளி நட்சத்திரமாக அவள் திகழ்ந்தாள்.
மிருது செடி எப்பொழுதும் பச்சை பசேல் என, கிட்டத்திட்ட 24 அடி உயரம் கூடவளரும் தன்மை கொண்டது.
*2🎊*
அடிமைத்தன வாழ்வின் நிலையை புரிந்தவளோக.... அரசனுக்காக தன்னை தூய் மையாய் ஆயத்தம் செய்து கொண்ட தூய கன்னிப்பெண் அவள்.
*3🎊*
தங்கள் சுய நாட்டிற்கு செல்லலாம் என்னும் அறிவிப்பு வந்த பொழுதும், தேவ ஜனங்களோடு சேர்ந்து நாமும் துன்பத்தை சகித்து கொள்வோம் என்று எண்ணி துன்பம் சகித்து கொண்டவள்.
(ஏசா-48:20 :, எரே-50:8)
*4🎊*
தனது பெற்றோர், தனது தனிப்பட்ட சுதந்திரம், போன்றவற்றை இழந்திருந்தாலும், *பணிவு என்னும் நற்பண்பை* கெட்டியாக பிடித்து இருந்தவள்.
*5🎊*
தனது வளர்ப்பு தந்தையும், சகோதரனுமாய் இருந்த மொர்தெகாயின் *எந்த சொல்லையும் தட்டாமல் செயல்படும் மனப்பாங்கினை* பெற்று இருந்தவள்.
*6🎊*
தனது கணவனேயாயினும், *அரசனுக்கு விருப்பமானால்...*
என்னும் சொற்றோடர்களை முன் வைத்து.... அவர் தீர்மானம் எடுக்க விட்டு விட்டு கர்த்தரை சார்ந்து நிற்க பழகி இருந்தவள்.
இதற்கு முன்.... ஏகாய் வசமாய் அவள் விடப்பட்டு இருந்த போதும் அதே பணிவு, ஆகையால் பார்ப்போர் எவர் கண்களிலும் இவளுக்கு தயை கிடைக்கும் அளவுக்கு கடவுள் இவள் கூட இருந்தார் எனலாம்.
*7🎊*
தன் ஜனத்தின் நன்மையை நாடி செயல்பட துணிந்து நின்ற வீராங்கனை.
*நாமும் எஸ்தரை போல மாறுவோம்.*
*எமக்குரிய மகுடத்தை எவரும் தட்டி செல்லாதவாரு ஜாக்கிரதை காத்து, விழிப்புடன் இருந்து கொள்வோம்.*
(வெளி - 3 : 11)
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன், என இயேசு ஆண்டவர் சொல்லி சென்றுள்ளதை மனதில் வைத்து.... பணிவோடு நடந்து *இராஜ மேன்மைக்கு தகுதியடைவோம்.*
*Sis. Martha Lazar✍️*
*NJC, KodaiRoad*
[09/09, 16:35] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight.*
*AND IF I PERISH, I PERISH.*
(Esther4:16)
*நான் செத்தாலும், சாகிறேன்.."*
(எஸ்தர் 4:16)
பெர்சியாவின் ராஜாவாகிய அகாஸ்வேரு, இந்தியாவிலிருந்து எத்தியோப்பியா வரையிலான 127 மாகாணங்களை (எஸ்த்.1:1) ஆட்சி செய்தார் (கிமு 486-465). ராணி வஸ்தி, தன் அழகை மக்களுக்கும் பிரபுக்களுக்கும் காட்டத் தோன்றாததால், அரசனால் அகற்றப்பட்டார். பின்னர், அனைத்து அழகான கன்னிப்பெண்களையும் சூசாவின் கோட்டையில் உள்ள அரண்மனைக்குள் கொண்டு வரவும், அரசன் தனக்குப் பிடித்த பெண்ணை ராணியாகத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது (எஸ்த்.1:11,12; 2:1-4).
மொர்தெகாய் சூசாவில் வாழ்ந்த ஒரு யூதர், அவருடைய மூதாதையர்கள் கிமு 597 இல் பாபிலோனிய மன்னர் நேபுகாத்நேச்சரால் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். (2 நாளாகமம் 36:9-10; எஸ்தர். 2:5) அவர் தனது உறவினர் எஸ்தரை (அக்சாள்) அவளது பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு தனது சொந்த மகளாகப் பார்த்துக் கொண்டார். அனைத்து அழகான கன்னிப் பெண்கள் மத்தியிலும் எஸ்தரை அகாஸ்வேரு ராஜா விரும்பினார், மேலும் அவள் அடுத்த ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.(எஸ்த. 2:17)
அகாஸ்வேரு ராஜா ஆமானை மற்ற எல்லா பிரபுக்களுக்கும் மேலாக உயர்த்தினான், மேலும் எல்லோரும் ஆமானுக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்த வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டார். ( எஸ்தர். 3:1,2 ) *ஆனால் மொர்தெகாய் மண்டியிடவோ அவருக்கு மரியாதை செலுத்தவோ மாட்டார்.* ( எஸ்தர். 3:2ஆ ) ஒரு யூதராக இருந்த மொர்தெகாய் ஆமானுக்கு மண்டியிடவோ மரியாதை செய்யவோ மறுத்துவிட்டார். ஆமான் அதைக் கண்டு கோபமடைந்தான். ஆமான் நாட்டிலுள்ள எல்லா யூதர்களையும் அழித்தொழிக்க விரும்பினான். ( எஸ்தர். 3:5,6 ) *"அனைத்து யூதர்களையும் கொன்று அழித்து...அவர்களின் பொருட்களைக் கொள்ளையடிக்க வேண்டும்" என்று அரசனிடமிருந்து ஆணையைப் பெற்றான். 3:13) ராஜாவின் ஆணை 127 மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டது. யூதர்களுக்குள் உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாயிருந்தது. (எஸ்தர். 4:1-3)
மொர்தெகாய் ராணி எஸ்தரிடம் ராஜாவின் முன்னிலையில் சென்று இரக்கத்திற்காக மன்றாடவும், தன் மக்களுக்காக அவரிடம் பரிந்து பேசவும் வேண்டுமென்று செய்தி அனுப்பினார். (எஸ்தர். 4:8)
யாரேனும் அழைக்கப்படாமல் உள் நீதிமன்றத்தில் ராஜாவை அணுகினால், அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற விதி இருந்தது. இதற்கு விதிவிலக்கு என்னவென்றால், மன்னன் தன் உயிரைக் காக்க அந்த நபருக்கு பொற்செங்கோலை நீட்டுவது மட்டுமே. (எஸ்தர். 4:9-11)
எஸ்தர் இதைத் தெரிவித்தபோது, மொர்தெகாய் எஸ்தருக்கு அனுப்பிய பதில் 4:13-14 இல் உள்ளது. *...நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?"* இதற்கு, எஸ்தர் மொர்தெகாய்க்கு கீழ்கண்ட பதிலை அனுப்பினார். *"...நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்."* (எஸ்தர் 4:16) யூதர்களின் சார்பாக அவள் தலையிடாவிட்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து யூதர்களும் 12-வது மாதம் 13-ம் தேதி கொல்லப்படலாம் என்பதை அவள் அறிந்தாள். அவர்களைக் காப்பாற்ற, ராணி எஸ்தர் இறக்கவும் தயாராக இருந்தாள்.
கடைசியாக யூதர்களின் நிலைமையைப் பற்றி அவளால் ராஜாவை நம்ப வைக்க முடிந்தது. நாடு முழுவதும் உள்ள யூதர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் கொல்ல அனுமதிக்கும் மற்றொரு ஆணையை மன்னர் வழங்கினார். ஆமானும் அவனுடைய மகன்களும் கொல்லப்பட்டனர்.
*நண்பர்களே,*
முழு உலகத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நாம் அறிவோம் மற்றும் இரட்சிப்பு இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதையும் அறிவோம். நற்செய்தியைப் புரிந்து கொள்ளவும், இயேசுவை நம்பவும் வாய்ப்பு கிடைக்காத அனைவரும் கிறிஸ்துவற்ற நித்தியத்திற்குச் செல்கிறார்கள்.
*ஆன்மீக ரீதியில் மரித்த மக்கள் அனைவருக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வது யார்?*
யூதர்களை அழிவிலிருந்து காப்பாற்ற எஸ்தர் மரிக்கவும் தயாராக இருந்தாள். மொர்தெகாய் தன்னால் முடிந்த அனைத்தையும் ஜெபத்துடன் செய்தார். எஸ்தரும் தன் பங்கை ஜெபத்துடன் செய்தாள். இதன் விளைவாக, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட்டனர்.
*நமது வாழ்க்கை, கல்வி, வளம் எதற்காக? கர்த்தருடைய அன்பை உலகுக்குப் பகிர்ந்துகொள்ள எல்லாவற்றையும் பயன்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?*
*நற்செய்தியுடன் சென்றடையாத இடங்களுக்கும் மக்கள் குழுக்களுக்கும் செல்ல நாம் தயாராக உள்ளோமா?*
*தேவ அன்பைப் பற்றி மற்றவர்கள் கேட்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக நாம் துன்பப்படுவதற்கு அல்லது மரிக்கத் தயாராக இருக்கிறோமா?*
Rev.C.V.Abraham
தமிழாக்கம்
Princess Hudson
👸ESTHER’S SECRET OF SUCCESS👸*
*👸எஸ்தரின் வெற்றியின் ரகசியம்👸*
[நாள் - 147] எஸ்தர் 1-4
☄️வேதாகமத்தில் அவரது பெயரைக் கொண்ட எஸ்தரின் சரித்திரம், பாரசீக ராணியாகி, தனது மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய ஒரு இளம் யூதப் பெண்ணின் வசீகரிக்கும் பதிவாகும்.
1️⃣ *எஸ்தரின் எதிர்பாராத அதிகார உயர்வு*
🔹பாரசீக மன்னர் அகாஸ்வேரு புதிய ராணியைத் தேடும் போது எஸ்தரின் பயணம் தொடங்குகிறது.
🔹தேவனால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளின் மூலம், தனது உறவினர் மொர்தெகாயால் வளர்க்கப்பட்ட யூத அனாதை எஸ்தர், ராஜாவால் தனது புதிய ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காண்கிறார்.
🔹 ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக - ஆமானின் தீய சூழ்ச்சியிலிருந்து தன் மக்களைக் காப்பாற்றுவதற்காக - தேவன் அவளை இந்த செல்வாக்குமிக்க நிலையில் வைத்துள்ளார் என்பது அவளுக்குத் தெரியாது.
2️⃣ *சதி வெளியறங்கமாகிறது*
🔸பாரசீக அரசவையில் உயர் பதவியில் இருந்த ஆமான், யூதர்கள் மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டிருந்தார்.
🔸திறிக்கப்பட்ட திட்டத்தில், யூத மக்களை அழித்தொழிப்பதற்கான ஆணையை வெளியிடுமாறு அகாஸ்வேரு ராஜாவை அவர் நம்ப வைத்தார்.
🔸ராஜாவின் வாசலில் பதவி வகித்த மொர்தெகாய் இந்த சதியை அறிந்ததும், எஸ்தரை தன் மக்கள் சார்பாக தலையிடும்படி வற்புறுத்தினார்.
🔸ஆனால், அழைப்பின்றி ராஜாவை அணுகுவது தன் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த எஸ்தர் தயங்கினாள்.
3️⃣ *எஸ்தரின் ஜெபம்நிறைந்த முடிவு*
◾️சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட எஸ்தர், தான் தைரியமாக செயல்பட வேண்டும், ஆனால் முதலில் தேவனுடைய தலையீட்டை நாடாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தாள்.
◾️மூன்று நாள் இரவும் பகலும் உபவாசித்து ஜெபிக்க யூதர்கள் அனைவரையும் கூட்டும்படி மொர்தெகாய்க்குக் கட்டளையிட்டு, அவளுடைய நோக்கங்களைத் தெளிவுபடுத்தினாள்: "நானும் என் தாதிமாரும் உபவாசிப்போம். இது முடிந்ததும், நான் சட்டத்தை மீறி அரசனிடம் செல்வேன். நான் செத்தாலும் சாகிறேன்" (எஸ்தர் 4:16).
4️⃣ *எஸ்தரின் ஜெபம்நிறைந்த அணுகுமுறை*
🔺எஸ்தரின் ஜெபம் நிறைந்த அணுகுமுறை, தேவனுடைய இறையாண்மையின் மீது அவளுக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவருடைய நோக்கங்களுக்காக அவளைப் பயன்படுத்தும் திறனையும் வெளிப்படுத்துகிறது.
🔺கூட்டு பிரார்த்தனை மற்றும் உபவாசத்தின் சக்தியை அவள் அங்கீகரிக்கிறாள், தன் பணியைத் தொடங்குவதற்கு முன் தெய்வீக தலையீட்டைத் தேடுகிறாள்.
5️⃣ *தெய்வீக ஏற்பாட்டின் செயல்பாடு*
▫️அழைக்கப்படாமல் ராஜாவை அணுகுவது, அவளது உயிரை இழக்கும் அபாயகரமான நடவடிக்கையாக இருந்தாலும், அகாஸ்வேரு தன் பொற் செங்கோலை அவளிடம் நீட்டியப்போது, அங்கே தேவனுடைய பாதுகாப்பு தெளிவாகிறது. ▫️
▫️இந்த முக்கிய தருணம், நிகழ்வுகளை வழிநடத்தும் தேவனுடைய கரத்தை வெளிப்படுத்துகிறது, எஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய்கிறது மற்றும் ஆமானின் சதியை அவிழ்ப்பதற்கான மேடையை அமைக்கிறது.
▫️தொடர் விருந்துகளின் மூலம், ஆமானின் தீங்கிழைக்கும் நோக்கங்களை எஸ்தர் மூலோபாயமாக அரசனிடம் வெளிப்படுத்துகிறாள். இறுதியில் ஆமானின் வீழ்ச்சிக்கும் யூத மக்களின் இரட்சிப்புக்கும் இட்டுச் செல்கிறாள்.
▫️எஸ்தரின் தைரியமான நம்பிக்கை, அவளது ஜெபம் நிறைந்த அணுகுமுறையுடன் இணைந்து, அவளுடைய மக்களின் விடுதலைக்கு ஊக்கியாகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥எஸ்தரின் பிரார்த்தனை பணி நமக்கு தைரியம், நம்பிக்கை மற்றும் தெய்வீக ஏற்பாடு பற்றிய மதிப்புமிக்க பாடங்களை கற்பிக்கிறது.
💥அசாதாரண நோக்கங்களை நிறைவேற்ற தேவன் சாதாரண நபர்கள் மூலம் செயல்படுகிறார் என்பதை அவரது கதை நமக்கு நினைவூட்டுகிறது.
💥எஸ்தரைப் போலவே, நாமும் சவாலான சூழ்நிலையில் செல்லும்போது, தேவனுடைய வழிகாட்டுதலில் நம்பிக்கை வைத்து, ஜெபத்தின் மூலம் அவருடைய ஞானத்தைத் தேட அழைக்கப்பட்டுள்ளோம்.
💥எஸ்தரின் அசைக்க முடியாத விசுவாசமும், தேவனுடைய ஏற்பாட்டில் நம்பிக்கையும் இன்று விசுவாசிகளுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது.
*‼️நாம் அனைவரும் எஸ்தரின் உதாரணத்தைப் பின்பற்றுவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
Thanks for using my website. Post your comments on this