========================
திருச்சபையின் செல்ல மகள்கள்:
Katherine Von Bora Luther (1499-1550)
========================
இளமை காலம்:
கேத்தரின் வான் போரா (Katharine von Bora) 1499 இல் ஜெர்மனியில் Hans von Bora Hirschfeld மற்றும் Anna von Haugwitz ஆகியோருக்கு மகளாக பிறந்தார். கேத்தரின் ஐந்து வயதாக இருந்தபோது 1504 ல் அவளுடைய தாய் இறந்துவிடவே, அவளுடைய தந்தை அங்கு இருந்த ரோமன் கத்தோலிக்க பள்ளியின் விடுதியில் கல்வி கற்கும்படி சேர்த்தார். கேத்தரின் அங்கு ஜெர்மனி, லத்தின் போன்ற மொழிகளின் வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொண்டு, இசை கருவிகளை வாசிக்கவும், நன்றாக பாடவும், கற்றுக் கொண்டாள்.
கேத்தரின் பத்து வயதாக இருந்தபோது, நிம்ப்ஷன் (Nimbschen) என்னும் இடத்தில் இருந்த கன்னியாஸ்திரி மடத்திற்க்கு அனுப்பப்பட்டார், அங்கு தோட்டக்கலையையும் செவிலியர் பணியையும் (Nursing) சிறப்பாக கற்றுக்கொண்டார். இந்நிலையில் அக்டோபர் 8, 1515 அன்று கடவுளுக்கும் திருச்சபைக்கும் சேவை செய்ய தன்னுடைய 16 வயதில் கன்னியாஸ்திரியாக வாக்கு கொடுத்து அற்பணித்தார்.
மார்ட்டின் லூத்தர்:
ரோமன் கத்தோலிக்க துறவியும்,மதகுருவும், இறையியல் பேராசிரியராக இருந்த மார்ட்டின் லூத்தர், சகல பரிசுத்தவான்களின் திருநாளான அக்டோபர் 31, 1517 அன்று, போப்பாண்டவர் பத்தாம் லியோ க்கு எதிராக ஜெர்மனியின் விடன்பர்க் (Wittenberg) தேவாலய கதவில் வேதத்திற்கு விரோதமாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் காணப்பட்ட 95 ஆய்வறிக்கையை ஓட்டினார்.
மேலும் ரோமன் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் துறவற வாழ்க்கையை பற்றியும் கேள்வி எழுப்பினார். எப்படியெனில் கடவுளுக்கு சேவை செய்பவர்களை கண்டிப்பாக துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்று வேதாகமம் கற்பிக்க வில்லை என்றும், கடவுள் மனுமக்களிடம் பலுகி பெருகுங்கள் என்றுதான் கட்டளை கொடுத்து இருக்கின்றார் என்றும் போதித்தார். ஆகவே கிறிஸ்தவ மதகுருமார்கள், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோரின் பிரம்மச்சரிய வாழ்க்கை தேவையில்லை என்றும் அவர்கள் செய்த சபதங்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
திருச்சபையில் சீர்திருத்தம் நடைபெற போராடியவர்கள் லூத்தரின் இந்த ஆய்வு அறிக்கையை அப்போது கண்டுபிடிக்கப்பட்ட அச்சகத்தின் உதவியுடன் சுமார் இரண்டு வாரங்களுக்குள் ஜெர்மனி முழுவதும் பரவி, ஐரோப்பா முழுவதும் இரண்டு மாதங்களுக்குள் பரவியது.
இந்நிலையில் அக்டோபர் 1518 இல், லூதர் தனது 95 ஆய்வறிக்கைகளை திரும்பப் பெற போப்பாண்டவர் உத்தரவிட்டார், ஆனால் வேதாகமத்தின்படி யாராவது தன்னுடைய ஆய்வுகளை தவறு என்று நிரூபிக்கும் வரை பின்வாங்க மாட்டேன் என்று லூத்தர் உறுதியாக கூறினார். இதற்காக மே 8, 1521 அன்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மார்டின் லூத்தரின் ஆய்வு அறிக்கையை தடைசெய்து அவரை திருச்சபைக்கு எதிரான குற்றவாளி என்று அறிவித்து, திருச்சபையில் இருந்து நீக்கினார்கள்.
ஆகவே மார்டின் லூத்தர் துர்உபதேசம் செய்வதாக கூறி அவரை கொலை செய்வதற்க்கு தேடப்படும் மனிதனாக திருச்சபை அறிவித்தது. இந்நிலையில் ஜெர்மன் இளவரசர் பிரடெரிக் தி வைஸ் (Frederick the Wise) என்பவர் மார்ட்டின் லூத்தரை காப்பாற்ற முன்வந்து அவரை ஒளித்துவைத்து பாதுகாத்தார்.
ஓடிப்போன கன்னியாஸ்திரிகள்:
ஜெர்மனியில் நிம்ஸ்பெம்(Nimbschem) கன்னியாஸ்திரிகள் இருக்கும் மடத்தில் இருந்த 40 பெண்களில் கேத்தரின் ஒருவராக இருந்தார். இந்நிலையில் ஜெர்மனி முழுவதும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக விட்டன்பெர்க் பல்கலைக்கழக பேராசிரியரும் அகஸ்டீனிய துறவியான மார்ட்டின் லூத்தரின் தலைமையில் சீர்திருத்தவாதிகள் போராடிக்கொண்டு இருந்ததை கேத்தரின் உட்பட பல கன்னியாஸ்திரிகள் அறிந்துகொண்டு லூத்தரின் 95 ஆய்வு அறிக்கைகளையும், அவருடைய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார்கள்.
ஏற்கனவே வேதாகமத்திற்க்கு எதிரான செயல்பாடுகளை செய்துகொண்டு இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை மீது வெறுப்படைந்து இருந்த கேத்தரினும் மற்ற கன்னியாஸ்திரிகளும் லூத்தரின் எழுத்துக்கள் மூலம் கடவுளுக்கு சேவை செய்ய தாங்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு செய்திருந்த பிரமச்சாரிய சபதம் தேவையில்லை என்பதை உணர்ந்தபோது, அவர்கள் கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள்.
ஆகவே கேத்தரின் அவர்கள் மார்டின் லூத்தரைத் தொடர்புகொண்டு, தங்களை இந்த மடத்திலிருந்து தப்பிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை துறவற சபதங்களை கைவிட்ட ஒருவர், கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து தப்பிசெல்ல முயன்று, மாடிக்கொண்டால், அல்லது அவர்கள் தப்பிசெல்வதற்கு உதவியாக யாராவது இருந்தால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது மரணதண்டனை கூட கொடுக்கப்படலாம் என்று சட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தது.
24 வயதான கேத்ரீனும் மற்ற 11 பெண்களும், இந்த மடத்தில் இருந்து வெளியேறிச்செல்ல தங்கள் உயிரையும் பணயம் வைத்தார்கள். இந்நிலையில் கேத்தரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட லூத்தர் 4 ஏப்ரல் 1523 இயேசுவானவர் உயிர்த்தெழுந்த (Easter) பண்டிகை அன்று, இந்த கன்னியாஸ்திரி மடத்திற்க்கு எப்போதும் மீன் உணவுகளை கொடுத்துகொண்டு இருக்கும் டோர்கா (Torgau) நகர கவுன்சிலர் லென்ஹார்ட் கோப்பே (Leonhard Köppe) என்பவர் உதவியுடன் இந்த 12 கன்னியாஸ்திரிகளையும் அவருடைய மீன் வண்டியில் தார்ப்பாய் களுக்கிடையே மறைத்து வைத்துகொண்டு இரவு நேரத்தில் அங்கு இருந்து வெளியேறினர்கள்.
வாழ்க்கை போராட்டம்:
நிம்ப்ஷன் (Nimbschen) கன்னியாஸ்திரிகள் மடத்தில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விட்டன்பெர்க் (Wittenberg) நகருக்கு கேத்தரினும் மற்ற 11 கன்னியாஸ்திரிகளும் வந்து சேர்ந்தார்கள். இதில் 3 மூன்று பெண்கள் அவர்கள் சொந்த வீட்டிற்க்கு சென்றுவிட்டார்கள்.
தப்பி ஓடிய வந்த கன்னியாஸ்திரிகளால் மடத்தில் இருந்து மாற்று உடைகள் கூட கொண்டு வர முடியவில்லை, மேலும் இவர்கள் மடத்தில் இருந்து தப்பிவந்துள்ளதால், அவர்களது குடும்பத்தினர் கூட ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே மீதமுள்ள ஒன்பது கன்னியாஸ்திரிகளையும் விட்டன்பெர்க் நகரில் தங்கி இருந்த லூத்தரின் பராமரிப்பில் லென்ஹார்ட் கோப்பே (Leonhard Köppe) விட்டுச்சென்றார்.
இந்நிலையில் 9 பெண்கள் கன்னியாஸ்திரி மடங்களில் இருந்து தப்பி வந்ததை அறிந்துகொண்ட உள்ளூர் மக்களில் சிலர் இதுகுறித்து தவறாக பேச ஆரம்பித்தார்கள். உள்ளூர் நபர் ஒருவர் தனது நண்பருக்கு கடிதம் எழுதியபோது கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கடவுளுக்கு’ சேவை செய்வதை விட்டுவிட்டு திருமணம் செய்து வாழ மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று எழுதினார். கேத்தரின் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள் துறவற சபதத்திலிருந்து விலகியதால் கத்தோலிக்க நிர்வாகம் அவர்களை மீண்டும் அழைக்க தந்திரமாக பொது மன்னிப்பு கொடுப்பதாக அறிவித்து மடத்திற்கு திரும்பவில்லையானால் கடவுளின் சாபத்திற்கு ஆளாவீர்கள் என்று எச்சரித்தது.
மார்டின் லூத்தர் முதலில் இந்த 9 கன்னியாஸ்திரிகளின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும், அவர்களை வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார், ஆனால் அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். ஆகவே அடைக்கலம் புகுந்த கன்னியாஸ்திரிகளின் மறுவாழ்வுக்கு என்று தன்னுடைய நண்பர்களின் வீடுகளில் தங்கவைத்து சில மாதங்களுக்குள், அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் திருமணங்கள் நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதில் 24 வயதில் இருந்த கேத்தரினா வயது முதிர்ந்தவராக இருந்தாதால் எவரும் திருமணம் செய்துகொள்ள முன் வரவில்லை.
ஆகவே கேத்தரினா முதலில் விட்டன்பெர்க்கின் நகர எழுத்தர் பிலிப் ரீச்சன்பாக் (Philipp Reichenbach ) வீட்டில் தங்கி இருந்தார். அவருக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை நெருக்கடி கொடுக்கவே அங்கு இருந்து வெளியேறி பெயிண்டராக வேலை செய்து வந்த லூகாஸ் கிரானாக் (Lucas Cranach) என்பவரில் வீட்டில் தங்கி இருக்க வேண்டியதாயிற்று.
திருமணத்திற்கான போராட்டம்:
1523 இல் கேத்தரினா விற்கு திருமணம் செய்துவைக்க நியூரம்பெர்க் (Nuremberg ) ல் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜெரோம் பாம்கார்ட்னர் (Jerome Baumgärtner), மற்றும் ஆர்லாமண்டே (Orlamünde) பகுதியை சேர்ந்த போதகர் காஸ்பர் கிளாட்ஸ் (Kaspar Glatz) உட்பட பலரை லூத்தர் ஒழுங்கு செய்தார், ஆனால் திருமண காரியம் எதுவும் கைகூடி வரவில்லை. இந்நிலையில் 1524 செப்டம்பரில்,கேத்தரினா, லூத்தரின் நண்பரும் சக சீர்திருத்தவாதியுமான நிகோலஸ் வான் ஆம்ஸ்டார் (Nikolaus von Amsdorf) என்பவரை அணுகி, அவரிடம் லூத்தர் அல்லது வான் ஆம்ஸ்டார்பை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினாள். ஆனால் ஆம்ஸ்டோர்ஃப், தான் துறவியாகவே இருக்க விரும்புவதாக கூறி மறுத்துவிட்டார். ஆகவே அவர் லூத்தரிடம் உங்களிடம் அடைக்கலம் புகுந்த கேத்தரினா வை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது? என்று வினவினார்.
அப்போது லூத்தர் தான் ஒரு துறவி என்றும் 40 வயது கடந்துவிட்டவர் என்றும் கேத்தரினாவை விட 16 வயது மூத்தவர் என்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மூலம் தான் எந்தநேரத்திலும் கொல்லப்படலாம். ஆகவே கேத்தரினாவின் வாழ்க்கையோடு விளையாட விரும்பவில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், மதகுருக்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெர்மனியின் இளவரசர் ஃபிரடெரிக் தி வைஸ் (Prince Frederick the Wise) திடீரென மே 1525 இல் மரித்துப்போகவே மதகுரு வாக இருந்த லூத்தர், கேத்தரினை திருமணம் செய்வதற்கான தடை நீங்கிவிட்டதாக கருதினார். ஆகவே நன்கு யோசித்து, தனது தந்தையைப் பிரியப்படுத்தவும், ரோமன் கத்தோலிக்க போப்பாண்டவரை கோபப்படுத்தவும், தேவதூதர்களை மகிழ பண்ணவும் மற்றும் பிசாசுகளை அழவைக்கவும் 42 வயதான முன்னாள் துறவியும் 26 வயதான முன்னாள் கன்னியாஸ்திரியும் ஜூன் 13, 1525 அன்று புனித திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக இணைந்தார்கள்.
லூத்தரின் திருமண விமர்சனம்:
ஒரு துறவியான லூத்தர், ஒரு துறவியான கன்னியாஸ்திரியை திருமணம் செய்து கொண்டது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்து சென்று Church of England என்ற Anglican திருச்சபையை தோற்றுவித்த இங்கிலாந்து மன்னர் ஹென்றி VIII இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். மேலும் லூத்தரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிலிப் மெலங்ச்தோன் (Philipp Melanchthon), இந்த திருமணமானது திருசபையின் சீர்திருத்தத்திற்க்கு அவப்பெயரையும் பெரிய பின்னடவை கொண்டுவரும் என்றும், இந்த முடிவானத்து ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களின் குற்றசாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக துறவிகளான மதகுருக்கள் பிரம்மச்சரிய சபதத்தை தவிர்ப்பதற்கான வழிமுறையாக மாறிவிடும் என்று கடிந்து கொண்டார்.
இவரைப்போவே பல சீர்திருத்தவாதிகள் லூத்தரின் திருமணத்தை கடுமையாக விமர்சித்தார்கள். குறிப்பாக சீர்திருத்தவாதியாக கருதப்பட்ட எராஸ்மஸ் (Erasmus), ஒரு துறவியும் ஒரு கன்னியாஸ்திரியும் கூடிவந்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் இந்த உலகம் அந்திகிறிஸ்துகளால் நிரம்பிவிடும் என்று கிண்டல் செய்தார். ஆகவே லூத்தரை "விசுவாச துரோகம் செய்தவர் என்றும் பைத்தியக்காரத்தனம் செய்தவர் என்றும் அவதூறு செய்ததோடு கேத்தரினை, தவறாக வழிநடத்தப்பட்ட பாவியாகிய பெண் என்றும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் மார்டின் லூத்தரும், கேத்தரினாவும் இந்த எல்லா விமர்சனங்களுக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து தேற்றிக்கொண்டார்கள்.
திருமணம் குறித்த லூத்தரின் போதனை:
மார்டின் லூத்தர் திருமணத்தை குறித்து கூறும்போது வேதாகமம், மதகுருமார்களின் பிரமச்சரியத்தை வலியுறுத்தவில்லை. ஆகவே பிரமச்சாரியத்தை கடைபிடிக்கும் மிககுறுகிய எண்ணிக்கையிலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்துகொள்வது கடவுள் அங்கிகரிக்கும் நல்ல காரியம் என்றார். ஆகவே மதகுருமார்களாக உள்ள ஆண்கள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டு, பிரம்மச்சரியத்தின் சபதத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். சீர்திருத்தவாதிகளையும் மற்றும் திருச்சபை தலைவர்களையும் திருமணம் செய்து கொள்ள மார்டின் லூத்தர் ஊக்குவித்தார். எப்படியெனில் திருமணம் ஒரு சமூகம் சார்ந்த காரியம் என்பதால், பிரம்மச்சரியம் தேவையில்லை. எல்லா பாலியல் பாவங்களையும் தவிற்த்துக்கொள்ள, மதகுருக்கள் திருமணம் செய்து கொள்வது அவர்களுடைய ஆத்துமாவுக்கு பாதுகாப்பானது என்று கூறினார்.
சீர்திருத்த திருச்சபையின் பங்கேற்பாளர்களில் கேத்தரினா மிக முக்கியமான ஒருவராகக் கருதப்படுகிறார், ஏனெனில் இவருடைய திருமணத்தின் மூலமாக சீர்திருத்த திருச்சபை மதகுருமார்களின் குடும்ப வாழ்க்கையை வரையறை செய்துகொள்ளவும், சீர்திருத்த திருச்சபையின் வளர்ச்சிக்கு மதகுருமார்களின் திருமணங்கள் மிக முக்கியமாக இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குடும்ப வாழ்க்கை:
கேத்ரினா நீதிமொழிகள் 31 ல் கூறப்பட்டுள்ள குணசாலியான, புத்தியுள்ள, கர்த்தருக்கு பயந்த ஸ்திரியாக இருந்து திறமையான தொழிலதிபராக செயல்பட்டார். மார்டின் லூத்தர் தங்கி இருந்த இடத்தில் கேத்தரினா, ஒரு ஹோட்டல், தங்கும் விடுதி மற்றும் மாநாட்டு அரங்கு என்று மூன்று அடுக்கு கொண்டதாக கட்டிடத்தை மாற்றினார்.
இந்த கட்டிடத்தில் 40 அறைகள் இருந்தன. சீர்திருத்த திருச்சபைகள் ஐரோப்பா முழுவதும் பரவ ஆரம்பித்ததினால் ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மார்டின் லூத்தரிடம் இறையியல் கற்றுக்கொள்ளவும் பலர் வர ஆரம்பித்தார்கள். கேத்தரின் அவர்களுக்குக் ஒரு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டார்.
மேலும் இந்த விடுதிக்கு பயணிகள், விதவைகள், தப்பி ஓடிய வந்த கன்னியாஸ்திரிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் அடைக்கலமாக இருந்து வந்தது.
இந்த விடுதியில் தங்கி இருந்த சில இறையியலாளர்கள் அதிகாலை நான்கு மணியளவில் ஜெபத்திற்காக எழுந்தபோது, கேத்தரினாவும் அவர்கள் எழும்பும் நேரத்திற்கு முன்பாகவே எழுந்து தன்னுடைய கடமைகளை செய்தார். ஆகவே லூத்தரின், தன் மனைவியான கேத்தாரினாவுக்கு ‘விட்டன்பெர்க்கின் விடிவெள்ளி நட்சத்திரம் (morning star of Wittenberg) என்ற பட்டத்தைப் கொடுத்தார்.
இசையில் ஆர்வம் கொண்ட கேத்தரீனா, மார்டின் லூத்தர் எழுதிய பல பாமாலை பாடல்களுக்கு இசையை அமைத்து, பாடலாக திருச்சபையில் பாடப்பட்டது. கேத்தரினா தனது பொறுப்புகளான மனைவி, தாய், வீட்டு வேலை என்று எல்லா கடமைகளையும் சிறப்பாக செய்தார்.
கேத்தரின் மார்ட்டின் லூத்தரைக் காட்டிலும் 16 வயது இளையவர் ஆனபோதிலும் ஆறு குழந்தைகள் பெற்றெடுத்தார். இதில் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
கேத்தரினாவுக்கு குடும்ப வாழ்கை மிகுந்த மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் பெரும் துயரத்தையும் கொடுத்தது. எப்படியெனில் இரண்டு பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே மரித்துப்போனார்கள்.
ஊழிய வாழ்க்கை:
வாழ்நாள் முழுவதும், பேராசிரியரான மார்டின் லூத்தர் தனது நேரத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதிலும், திருச்சபையில் போதிப்பதிலும் மற்றும் இறையியல் எழுதுவதிலும் செலவழித்தபோது, கேத்தரினா வேதாகமதை வாசிப்பதிலும், அதை ஜெர்மனியில் மொழிமாற்றம் செய்வதிலும் லூத்தருடன் தனது நேரத்தை செலவிட்டார். லூத்தர் இறையியல் பாடங்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தார்; கேத்தரின் இவற்றை சரியான பதிப்பாளர்களிடம் கொடுத்து லூத்தரின் எழுத்துக்களை அச்சிட்டதை பிழைநீக்கும் பணியை செய்தார்கள் (Pproof Reading).
சீர்திருத்த திருச்சபைகள் ஐரோப்பா முழுவதும் பரவியதால், கேத்தரினா நடத்திய விடுதியும் மாநாட்டு அரங்கமும் சீர்திருத்தவாத இயக்கத்தின் மையமாக மாறியது. இரவு உணவிற்கு பிறகு லூத்தர் வீட்டில் நடைபெறும் அறிவார்ந்த விவாதங்களில் கேத்தரினா பங்கு பெற்று இறையியல் மற்றும் அரசியல் பற்றிய தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டாள். இப்படி கடவுளுக்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்யும் ஒவ்வொரு வாய்ப்பையும் கேத்தரினா நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
சமூக வாழ்கை:
கேத்தரினா அம்மையார் மார்டின் லூத்தர் தங்கி இருந்த திருச்சபை மடத்தின் பரந்த சொத்துக்களை நிர்வகித்து, அதில் கால்நடைகளை வளர்த்தும், விற்பனை செய்தும், தோட்டங்களை நாட்டி, விவசாய பயிர் வகைகள், காய்கறிகள், பழங்கள், மீன் பண்ணைகள் ஆகியவறை உற்பத்தி செய்தார்கள்.
இங்கு வரும் உள்ளூர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மார்டின் லூத்தரை சந்திக்க வந்தபோது இந்த தோட்டத்தில் விளைந்த விவசாய மற்றும் காய்கறி பொருட்களை வாங்கி சென்றார்கள். இதில் இருந்து வருகின்ற வருமானத்தைக் கொண்டு பல பெண்களுக்கு கைத்தொழில்களை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கினார்கள்.
கேத்தரினா செவிலியர் பயிற்சி முடித்து இருந்ததினால் ஒரு மருத்துவ மனையையும் நடத்தி வந்தார். அதில் மற்ற செவிலிய பெண்களின் துணையோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஜெர்மனியில் விட்டன்பெர்க் நகரில் கொடிய பிளேக் நோய் பரவியபோது அநேக மக்களை காப்பாற்றினார். இதனால் கேத்தரின் புகழ் எங்கும் பரவியது.
லூத்தரின் மரணம்:
கிபி 1533 முதல் 1546 வரை ஜெர்மனியில் விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் இறையியலின் பேராசிரியராக லூத்தர் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவருடைய சரீரம் பெலவீனமடைந்து முடக்கு வாதம், இருதய பிரச்சினைகள் மற்றும் செரிமான கோளாறுகள் உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்டார். கேத்தரினா அம்மையார் அருகில் இருந்தே லூத்தரை நக்கு கவனித்துக் கொண்டார். இந்நிலையில் லூத்தரின் சரீர மற்றும் மன அழுத்தங்கள், அவருடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்க தொடங்கியது. ஆகவே யுதர்களுக்கு எதிராக பல கருத்துகளை வெளியிட்டார். இவை The Jews and Their Lies என்ற புத்தகமாக வெளிவந்தது. இந்நிலையில் பிப்ரவரி 18, 1546 அன்று மார்டின் லூத்தர் தனது 62 வயதில் மாரடைப்பால் மரித்துப்போகவே, இவருடைய சரீரம் ஜெர்மனியின் விட்டன்பெர்க் நகரில் இருக்கும் சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் கேத்தரினா வோடு 21 வருடங்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினார்.
கேத்தரின் மரணம்:
1546 இல் லூத்தர் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் சீர்திருத்த திருச்சபைகளை ஆதரித்த இளவரசர்களுக்கும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை ஆதரித்த இளவரசர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து யுத்தமாக உறுவெடுத்தது. இதில் வெற்றி பெற்ற ரோமன் கத்தோலிக்க இளவரசர்கள் மூலமாக கேத்தரினா நாடுகடத்தப்பட்டார். பின்பு 1548 ல் விட்டன்பர்க்கிற்கு திரும்பிய கேத்தரினா வால் தொடர்ந்து தொழிலை நடத்த முடியவில்லை. ஏனெனில் இப்போது மாணவர்களும் பேராசிரியர்களும் லூத்தர் இல்லாததினால் விடுதி அறைகள் எல்லாம் வெறுமையாகவே இருந்தன.
இந்நிலையில் 1549 ல் மீண்டும் கடும் பிளேக் நோய் பரவியதில் ஆயிரக்கணக்கான மக்கள் மரித்துப்போனதினால் விடன்பெர்க் நகரத்தைவிட்டு கேத்தரினா அம்மையார் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் 1550 ல் மீண்டும் வீடு திரும்பிய கேத்தரினா பெரிய பொருளாதார இழப்பில் இருந்து மீள முயன்றபோது, ஒரு கொடிய விபத்தில் காயமடைந்தார்கள். மூன்று மாத கடுமையான பாடுகளுக்குப் பிறகு, மரிக்கும் தருவாயில், "நான் துணியின் மீது இருக்கும் பஞ்சை போல கிறிஸ்துவின் மீது எப்போதும் ஒட்டிக்கொள்வேன் (I will stick to Christ like a burr on cloth) என்று கூறி டிசம்பர் 20, 1552 அன்று, தனது 53 வயதில் மரித்துப்போனார்கள். இவர்களின் சரிரம் அங்கு இருந்த புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முடிவுரை:
கேத்தரினாவின் வாழ்க்கையானது பல பாடுகள், போராட்டங்கள், நிந்தைகள் மற்றும் அவமானங்களால் நிறைந்து இருந்தது. ஆயினும் இந்த அம்மையார் தைரியமாக எல்லாவற்றையும் மேற்கொண்டு கடவுளுக்குள் தன்னை பலப்படுத்திக்கொண்டார்கள். கேத்தரினா அம்மையார் தன்னுடைய கடமைகளை ஒரு மனைவியாய், தாயாய் மற்றும் தொழில்முனைவோர் நிலையில் இருந்து எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடித்து, திருச்சபையில் இந்தகால பெண்களுக்கும் ஒரு சிறந்த நம்பிக்கையாளராகவும் முன்மாதிரியாள இன்றும் விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
சீர்திருத்த திருச்சபையின் முதல் பெண்மணியான கேத்தரினா அம்மையார் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருந்து, பல நிறுவனங்களை திறமையாக நிர்வாகம் செய்து, வணிகத்தில் புதுமைகளை புகுத்தி கடவுள் கொடுத்திருந்த திறமைகளை வெளிப்படுத்தி நிருபித்துவிட்டார்கள். இவர்களின் செயல்பாடுகள் மற்றும் அனுகுமுறைகள் இன்றைய பெண்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. இதை வாசிக்கும் பெண்களே கடவுளிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்; கடவுளுக்காய் பெரிய காரியங்களை செய்து, இன்றைய திருச்சபையை வியந்து பார்க்க செய்யுங்கள். இறையாசி உங்களோடு இருப்பதாக. ஆமென்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
==================
The Daughters of the Church:
Katherine Von Bora Luther (1499-1550)
=================
Early Life:
Katharine von Bora was born in 1499, between Hans von Bora Hirschfeld and his wife Anna von Haugwitz in Hirschfeld of Germany. When Kathiarine was about five years old, her mother died, and her father sent her to a Benedictine convent school near Halle in 1504 where she learned to read, write, speak Latin, and was able to read the Bible as a result.
She also learned to balance books, singing, manage a farm, nursing and tend to the sick behind the cloister’s walls. When she was ten, Katharine was sent to a Cistercian nunnery in Nimbschen, where she was consecrated as a nun at the age of 16, and took a vow of celibacy, obedience and poverty on Oct. 8, 1515.
Martin Luther:
On October 31, 1517, Martin Luther, the Roman Catholic monk angry with Pope Leo X’s new round of indulgences to help build St. Peter’s Basilica, nailed a sheet of paper with his 95 Theses on the University of Wittenberg’s chapel door in Germany. With his theses, he also questions the sense of monastic life which, he maintains, is not sanctioned in the Bible. On the contrary, there it states, “be fruitful and multiply!” And none shall be excluded without need. It is therefore wrong for priests, monks and nuns to bind themselves to a life of continence and celibacy. The corresponding vows are invalid, as it were, and can even be broken.
Aided by the printing press, copies of the 95 Theses spread throughout Germany within two weeks and throughout Europe within two months. In October 1518, Luther was ordered to recant his 95 Theses by the authority of the pope. Luther said he would not recant unless scripture proved him wrong.
In March 1521, Luther was again summoned before the Diet of Worms, a general assembly of secular authorities. On May 8, 1521, the council released the Edict of Worms, banning Luther’s writings and declaring him a “convicted heretic.” This made him a condemned and wanted man by the Church. The German prince Frederick the Wise is remembered as the man who saved Martin Luther from the fury of the Catholic Church.
Runaway Nuns:
Katherine was one of the 40 Nuns at the Cistercian Convent of Nimbschem, where seclusion from the world was strictly enforced. While in the Nimbschen cloister, Katharine and others somehow learned of the reforming work of Martin Luther, through an Augustinian monk and professor at the University of Wittenberg. Katharine was encouraged by Luther’s writings and some copies of Luther’s fiery pamphlets attacking celibacy and monastic orders may have inspired Katharina and others. When the nuns at Nimbschen realized that God did not need their vows and works, they decided to leave the convent. Conspiring with several other nuns to flee in secrecy, Katharina contacted Luther and begged for his assistance help in escaping their monastery. A person caught abandoning their monastic vows could be tortured and imprisoned for the rest of their lives. At that time, leaving religious life or assisting someone with leaving were offences punishable by death. At the age of 24, Kathrine and the other 11 women boldly risked their lives for freedom.
On Easter Eve, 4 April 1523, Luther sent Leonhard Köppe, a city councilman of Torgau and a merchant who regularly delivered herring to the convent. The nuns escaped by hiding in Köppe's covered wagon among the fish barrels, and fled to Wittenberg nuns in the middle of the night under cover of darkness.
Survival for Life:
Three of the women returned to their families, and after observing the Easter services, on Easter Monday Koppe transported the remaining nine nuns to Wittenberg and left them in Luther’s care. The run-away nuns had been unable to bring with them in their flight from the convent even extra clothes or shoes, and having escaped, they had no means of support if their families would not take them back.
Their arrival in town raised a few eyebrows, as one local student wrote to his friend: “A wagon load of vestal virgins has just come to town, all more eager for marriage than for life. God grant them husbands lest worse befall.” The Catholic establishment was scandalized by Kathrine’s departure from her monastic vows. They urged her to repent and return to her monastic seclusion. Luther at first asked the parents and relations of the refugee nuns to admit them again into their houses, but they declined to receive them, possibly because this would make them accomplices to a crime under canon law.
Within few months, Luther was able to arrange homes, marriages, or employment for all of the escaped nuns except Katharina. Since Katharina, at age 24, was one of the oldest, and considered the least marriageable. She was first housed with the family of Philipp Reichenbach, the city clerk of Wittenberg. Later she went to the home of Lucas Cranach the Elder and his wife, Barbara for 2 years.
Struggle for Marriage:
in 1523 Katharina had a number of suitors, including Jerome Baumgärtner from a well-to-do family in Nuremberg, the Wittenberg University alumnus Hieronymus Baumgartner of Nuremberg, and a pastor, Kaspar Glatz of Orlamünde. None of the proposed matches resulted in marriage.
As pressure mounted, in September of 1524 Katharina approached Luther's friend and fellow reformer, Nikolaus von Amsdorf, that she would be willing to marry only Luther or von Amsdorf himself. But Amsdorf wanted to continue his celibacy. So he remonstrated Luther, saying, “What the devil are you intending to do, persuading the good Katy and forcing her?” Luther had good reasons to resist. Beyond the usual reluctance of a 40-year-old bachelor, 16 years older than the proffered bride, the theologian was an outlaw; he had a death sentence on him for the rest of his life.
In the meantime the death of Germany Prince Frederick the Wise who was Elector of Saxony in May of 1525, who did not approve of clerical marriage, removed an impediment to Luther’s decision to marry Katharine. After pondering the matter for some time, Luther decided to marry Kathrine and his marriage would please his father, rile the pope, cause the angels to laugh, and the devils to weep. The result was the joining of a 42-year-old former monk and a 26-year-old former nun in holy matrimony on June 13, 1525.
Luther’s Marriage Criticism:
The marriage of the former monk to a former nun was yet another reason for the Roman Catholic Church distaste for Luther. It brought even more scorn from his Catholic opponents, such as the King of England Henry VIII, who considered the union “a crime.”
Philipp Melanchthon, one of Luther's closest friends, was shocked at the idea of Luther marrying; he believed a wedding would cause a scandal that this decision would simply confirm the claims of some Roman Catholic critics that he had started the Reformation as a way to avoid fulfilling his vow of celibacy. Some Protestants criticized the event, fearing it had scandalized the whole Reformed chaos. Out of the joining of a monk and a nun, went the common saying the humanist Erasmus of Rotterdam had already joked that in that case the world must be full of Antichrists. Luther was called a “most insane and libidinous of apostates,” for example, and Kathrine a “poor, misled woman.” Commentaries and plays were written attacking the two. “Protestant pigs” were depicted entering the church in one woodcut, “followed by the biggest pigs of all, Catharina von Bora and Martin Luther.” Katy and Martin likely supported each other in the face of all this criticism.
Theology of Marriage:
Luther’s marriage was certainly a confessional act. He had published and preached that marriage was a good and godly thing, needful for all men and women save the very smallest number who had the gift of celibacy; that clergy should marry, that those in holy orders should be released from their vows of celibacy, and he encouraged other prominent reformers and church leaders to marry. Luther determined that celibacy was not necessary, because marriage was a civil affair. However, Luther reasoned, marrying was safer for one’s soul in that it avoided other sexual sins. Katharina is often considered one of the most important participants in the Reformation because of her role in helping to define Protestant family life and setting the tone for clergy marriages to the development of the Protestant Church.
Family Life:
After marrying Luther, Katharina turned a three-story former monastery building into the 16th-century equivalent of a hotel, dormitory, and conference center and religious refugees requiring food and rest and sometimes medical care. The building had 40 rooms on the ground floor, with smaller cells above them. Katharina supervised the remodeling, then acted as host to the travelers, who came from all over Germany, and from as far away as Hungary and England. Kathrine was a true Proverbs 31 woman—a shrewd, apt, and competent businesswoman.
She immediately took on the task of administering and managing the monastery’s vast holdings, breeding and selling cattle and running a brewery to provide for their family, the steady stream of students who boarded with them, and visitors seeking audiences with her husband. While some theologians rose at four-o-clock in the morning for prayers, Katie rose at such an hour to begin her work, meriting Katie the title ‘morning star of Wittenberg’ by Luther.
Kathrinea ran quite a large boarding house for all kinds of people—travelers, widows, other runaway nuns, students, and so on. Throughout her life, Katharina Luther was a student of the Bible. While local students and visiting professors boarded in the rooms upstairs, paying top rates for access to Luther’s ideas and prestige, Katharina invested the income in a growing portfolio that eventually included a large farm, multiple gardens, fish ponds, and fruit orchards.
The runaway nun Kathrine brought in as much money from her various enterprises as her husband did teaching at the local university. She was also a farmer who bought and improved several plots of land where she raised a significant portion of the food for her family, renters, and guests. Katie created a stable home for Luther—complete with food, music, children, and pets.
Katharine was 16 years younger than Martin and together they had six children three boys and three girls. Motherhood brought both great joy and great sorrow to Katharina. Two of the girls died young. Elisabeth was only eight months old, and Magdalena was twelve years old. Magdalena passed away in the arms of her father, evidently since her mother was not able to master her desperation.
Luther later said of his marriage, "I have made the angels laugh and the devils weep” Kathrine was so influential that Luther took to calling her "my lord Katie” about his “best little creation of God”, surely Luther was also thinking of Katie, “his rib”, whom he loved.
Ministerial Life:
While Luther spent his time teaching, preaching, and writing, Katharina worked tirelessly to keep the family business running. She embraced every opportunity to serve God in each role. She learned that it was not necessary to hide away in a convent to live a God-pleasing life and that her daily duties of wife, mother, housekeeper, landlady, farmer, and many others were godly vocations. Luther was busy writing theological documents; Kathrine made sure that the right publisher printed his writings.
As a clever and educated woman, she even takes part in the scholarly discussions in the Luther home - unusual behaviour and a privilege for a woman of those times. Katherine made good use of the extra rooms in the former monastery, opening a medieval guest house and offering room and board to as many as 30 paying students and visitors at a time. As the Reformation movement spread across Europe, the house that Katharina ran became its epicenter. After dinner, Luther, Katharina, and select guests discussed theology and politics in Latin, hammering out the intellectual framework of the Reformation. Katharina ran a hospice in which she tended to patients together with a group of other women. She used her nursing knowledge when the plague came through Wittenberg in Germany. She had operated a hospital on site, ministering to the sick alongside other nurses.
Death of Luther:
From 1533 to his death in 1546, Luther served as the dean of theology at University of Wittenberg. The physical pain and emotional strain of being a fugitive might have been reflected in his writings. Luther's anti-Semitism is on full display in his treatise, The Jews and Their Lies. During this time he suffered from many illnesses, including arthritis, heart problems and digestive disorders. Luther died following a stroke on February 18, 1546, at the age of 62. He was buried in All Saints' Church in Wittenberg, Germany. Katharina was married for 21 yrs.
Death of Katharine:
Only a few months after Luther’s death in 1546, the Schmalkaldic wars, and the military conflict waged earlier between Protestant princes and the Roman Catholic Emperor Charles V, broke out again, the Lutheran forces were defeated this time by the emperor, and the widow Katherine was forced into exile.
After a short time, she was able to return home to Wittenburg, again became dire. The yearly crops failed and there was an outbreak of the plague forced to leave again. After a second return home, while she was still trying to rebuild from her losses, she was injured in an accident. After three months of intense suffering, Katharina von Bora died on December 20, 1552, at the age of 53. It is said that at the end she confessed, “I will stick to Christ like a burr on cloth.” She was buried at St. Mary’s church in Torgau, just a few blocks from the house where she lived her last few months.
Conclusion:
Katharina’s life was full of many pains and struggles; she displayed a great deal of courage and fortitude in the face of them. These virtues would not have been possible without her faith in the Gospel, which freed her to follow her vocation as a wife, mother, and entrepreneur. As such, she serves as a great model of faith for both men and women in the contemporary Church. Katharina Luther,
First Lady of the Reformation can be a great resource for small group study, and for readers, in particular women, who want a quick introduction to life in sixteenth-century Germany, and to Martin Luther the man. The kind of self-confidence, organizational skills, and business acumen Katie would have needed to be so successful. May this be her legacy among us today.
Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.
When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.
We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.
As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.
Thanks for using my website. Post your comments on this