=================
பாடல் பிறந்த கதை
===================
பாமாலை: பாதை காட்டும் மா யெகோவா
ஆசிரியர்: வில்லியம் வில்லியம்ஸ்(17717-1791)
இசை: ஜான் ஹியுஸ்
வேதபகுதி: சங்கீதம் 78: 52,53
பாமாலை பாடல்
1. பாதை காட்டும் மா யெகோவா
பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலோகம் காடுதான்
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.
2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும் இயேசுவே.
3. சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்.
பாடல் பிறந்த கதை
என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேள்வி எழுப்பிய நண்பரிடம், மருத்துவக் கல்லூரியில் சேர ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன் என்று பதிலுரைத்தார் வில்லியம் வில்லியம்ஸ்.
20 வயதே நிரம்பிய இவரிடம்அவருடைய நண்பன் தொடர்ந்து பேசும்போது, உனக்கு செய்தி தெரியுமா ஹோவல் ஹாரிஸ் என்ற நம்மைப்போன்ற வாலிபன், மதவெறி பிடித்த பைத்தியக்காரன் போல் இயேசுவை குறித்து கல்லரைத்தோட்டத்தில் பிரசங்கித்து கொண்டிருக்கிறான். அவருடைய போதனைகளை கேட்டு, நமது ஊர் முழுவதும் கலக்கம் அடைந்து இருக்கிறது என்றான்.
அவன் இப்பொழுது எங்கே இருக்கிறான்? என்ற ஆவலில் நண்பனிடம் வினவினான் வில்லியம்ஸ்.
இங்கிலாந்து தேசத்தில் டெல்கார்த் ஆலய வளாகத்திற்கு விரைந்த வில்லியம்ஸ், அங்கே ஒரு கல்லறையின் மீது ஏறி நின்று ஞாயிறு காலை ஆராதனை முடிந்து வந்து கொண்டிருந்த ஜனங்களிடம், வரும் கோபாக்கினை, நரகத்தின் எரி நெருப்பு, ஆகியவற்றை கண்டிப்புடன் கூறி எச்சரித்து கொண்டிருந்த ஹோவல் ஹேரிசைக் கண்டார். 24 வயதே நிரம்பிய இவ்வாலிபன் செய்த பிரசங்கத்தில் கவரப்பட்ட வில்லியம்ஸ் தன் மருத்துவப் படிப்பு திட்டத்தை கைவிட்டுவிட்டு ஆண்டவரின் ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார்.
பாதை காட்டும் மா யெகோவா என்ற பாடலை எழுதிய மெத்தடிஸ்ட் குருவானவர் வில்லியம் வில்லியம்ஸ் இங்கிலாந்து தேசத்தில் பண்டிசெலின் என்ற இடத்தில் 1717 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வேதாகம கல்லூரியை நிறைவு செய்து வேல்ஸ் நாட்டிலிருந்த Anglican திருச்சபையில் உதவி குருவானவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஆனால் வில்லியம்ஸ் சுவிசேஷபணியை செய்ய அதிக வாஞ்சை கொண்படியினால் திருச்சபையில் போதகர் ஆகும் ஆசையை விட்டுவிட்டு, ஹோவல் ஹேரிஸைபோல சுவிசேஷபணி செய்ய ஆரம்பித்தார்.
வில்லியம்ஸ் ஒரு அருமையான சுவிசேஷகராக விளங்கினாலும் இவரது ஊழியத்தில் உயிரோட்டமாக விளங்கியவை இவருடைய பாடல்களாகும். வேல்ஸ் நாட்டு மக்கள் உலகத்திலேயே உற்சாகமாக பாடுவார்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஏனெனில் வேல்ஸ் நாட்டை பாடும் தேசம் என்று அழைக்கப்பட்டது. ஆகவே பாடல்களின் மூலமாக தன் ஊழியத்தை செய்த வில்லியம்ஸ், அந்நாட்டில் இனிமையான பாடகர் என்று புகழ்பெற்றார்.
வேல்ஸ் நாடு முழுவதையும் தன்னுடைய பணித்தளமாக கருதி, அடுத்த 43 ஆண்டுகளில் சுமார் 1,60,000 கிலோ மீட்டர் தூரத்தை குதிரையில் பயணம் செய்து, நற்செய்தியை பிரசங்கித்தார். மழையிலும் பனியிலும், வெயிலிலும் காற்றிலும் நின்று அயராது கடின உழைப்பை மேற்கொண்டார். சில இடங்களில் கூடிய கூட்டம், இவரை எதிர்த்து தாக்கியது. இவைகளின் மத்தியிலும் சிறப்பாக ஊழியம் செய்தார்.
1785 ஆம் ஆண்டு செலினா என்ற அம்மையார் தெற்கு வேல்ஸ் நாட்டில் ட்வேராக்கா நகரில் ஒரு வேதாகம கல்லூரியை ஆரம்பித்தார். இந்த கல்லூரியின் ஆரம்ப விழாவில் பாடுவதற்கு ஒரு புதிய பாடலை எழுதி தருமாறு வேல்ஸ் நாட்டில் இனிய பாடகர் என்று அழைக்கப்பட்ட வில்லியம்ஸ் போதகரை கேட்டுக்கொண்டார்.
ஆகவே போதகர் பாதை காட்டும் மா யெகோவா எனும் பாடல் எழுதி அதற்கேற்ற ஒரு விழாவில் தனது இசைக் குழுவினருடன் முதல்முறையாக பாடினார்.
வில்லியம் வில்லியம்ஸ் 800 பாடல்களை வேல்ஸ் மொழியில் இயற்றினார். இவற்றில் சில பாடல்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அவற்றுள் மிகவும் பிரசித்திபெற்றது இந்த பாடல்தான்.
இதில் இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு செல்ல, அவர்கள் மேற்கொண்ட பயணத்தை பின்னணியாக வைத்து, இவ்வுலக வாழ்க்கையை அத்துடன் ஒப்பிட்டு இப்பாடலை இயற்றினார்.
இப்பாடலுக்கு ஜான் ஹியூஸ் அமைத்த ராகம் மிகவும் பொருத்தமாக இருந்ததால், இப்பாடல் உலகமெங்கும் பிரபலமாகி 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
வில்லியம் வில்லியம்ஸின் இந்த ஒரு பாடல்தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கருத்தாழத்தோடு பாடும்போது பாடுகளின் மத்தியில், பிரச்சினையின் மத்தியில் போராட்டத்தின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் தெய்வீக ஆறுதலையும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து நம்மை விசுவாசத்தில் பலப்படுத்துகிறது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தமிழ் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் அதிக முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, பாமாலைகள் என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞான பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள் என்ற (எபேசியர் 5:9) வார்த்தையின்படி, நம்முடைய ஆலய ஆராதனைகளில் இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
==================
The Story behind the Hymns
=================
Hymn: Guide me, O thou Great Jehovah
Hymn Writer: William Williams (1717-1791)
Music: John Hughes.
Scripture: Psalm 78: 52,53
The Hymn:
1) Guide me, O Thou great Jehovah,
Pilgrim through this barren land;
I am weak, but Thou art mighty,
Hold me with Thy powerful hand.
Bread of heaven, Bread of heaven,
Feed me now and evermore;
Feed me now and evermore.
2) Open now the crystal fountain,
Whence the healing stream doth flow;
Let the fire and cloudy pillar
Lead me all my journey through.
Strong Deliv'rer, strong Deliv'rer,
Be Thou still my Strength and Shield;
Be Thou still my Strength and Shield.
3) When I tread the verge of Jordan,
Bid my anxious fears subside;
Death of death and hell's Destruction,
Land me safe on Canaan's side.
Songs of praises, songs of praises,
I will ever give to Thee;
I will ever give to Thee.
4) When I tread the verge of Jordan,
Bid my anxious fears subside;
Death of death and hell's Destruction,
Land me safe on Canaan's side.
Songs of praises, songs of praises,
I will ever give to Thee;
I will ever give to Thee.
Songs of praises, songs of praises,
I will ever give to Thee;
I will ever give to Thee.
The Story Behind the Hymn:
William Williams is considered by many to be the father of Wales hymnody.
The author of Guide me, O thou Great Jehovah, William Williams had been preparing for a career in medicine, but on Sunday morning he heard Howel Harris preaching in a Welsh Churchyard.
Williams responded in faith, and his life was drastically changed. Through his sermon, William felt his calling to go into the ministry.
William, first pursuit of becoming an Anglican priest in the church of Wales and entered as an deacon in 1740.
For 43 years, he preached and sang throughout Wales and became known as the poet laureate of the Welsh revival.
William Williams wrote over 800 hymns both in English and Wales language.
William Williams turned out to be both a great hymn writer .He travel nearly 100000 miles that is 160000 kilometre drawing crowd of 10,000 people who came to hear his preaching and singing
It had a great impact on the people of Wales and all over the world. Soon all Wales was singing their way to the coal mines and the soccer matches, and this became their favourite marching song.
This hymn is a prayer for a person going through tough time, a person travelling through a barren land as thirsty person in need of water.
In this hymn, Williams compares the Christian life to the Israelites trek through the wilderness. He refers to God feeding the Children of Israel with manna, leading them with fire and a cloudy pillar, and finally guiding them across the Jordan River into Canaan.
In this hymn we can count on God to provide assistance for the hungry, guide his followers day and night and quench the thirst of those longing for water and also the Israelites finally reaching the destination after 40 years of wandering in the desert.
This song was also incorporated in the funeral of Princess Diana of Wales in 1997 and the royal wedding of Prince William and Catherine Middleton in 2011.
Thanks for using my website. Post your comments on this