உன் வாழ்க்கையிலே கூட இருந்து பெரிய காரியங்களைச் செய்கிற தேவன்
யோசுவா 1:5
"நான் மோசேயோடே இருந்ததுபோ ல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை".*
*தேவபிள்ளையே! இந்த ஆண்டின் 8 மாதங்களை முடிக்கப் போகிறோம். வருட ஆரம்பத்திலே தேவன் கொடு த்தஅநேகவாக்குத்தத்தங்கள்நிறை வேறியிருக்கலாம்;இதுவரை நிறை வேறுவதற்குரிய எந்தஒரு அறிகுறி யும் இல்லாமல் காணப்படலாம். ஆ னால்தேவன்வாக்குக்கொடுத்தால், கொடுத்தது தான். அதில் எந்தவொ ரு மாற்றமும் இல்லை. ஒருவேளை அற்புதங்கள்தாமதமாய்நடக்கலாம். ஆனால்,அவைகள் பொய்யாய் போ காது. இந்த வருடத்தின் நடுவிலேயு ம், கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை உனக்கு நியாபகப்படுத்தி, தொடர்ந் து முழுநம்பிக்கையோடு தைரியமா ய்வாழ்க்கையில் முன்னேறிப்போக அவர் விரும்புகிறார். “நான் எப்படி மோசேயோடு கூட இருந்து, என் ஜ னங்களின் அடிமைத்தனநுகத்தடிக ளை முறித்து, என் வல்லமையினா ல் அற்புத அடையாளங்களை செய் து,பார்வோனை பயந்துநடுங்கவை த்து,என்னுடைய வல்லமையை சத் துருக்களுக்கு முன்பாக நிரூபித்து க்காட்டி, நான் முன்குறித்த பாலும் தேனும்ஓடுகிற கானான்தேசத்தை என் ஜனங்களுக்குக் கொடுத்தே னோ, அதேபோல,உன் வாழ்க்கையி லும் அற்புத அடையாளங்களை செ ய்து, உன்னை நடத்த வேண்டிய பா தையிலே நடத்தி,உன்சத்துருக்களு க்கு முன்பாக உன்தலையை உயர்த் தி, சுதந்தரிக்க வேண்டிய சகல ஆசீ ர்வாதங்களையும் கொடுத்து, உயர் ந்தஸ்தானங்களிலே உன்னைகொ ண்டுபோய் நிறுத்துவேன். அதுவ ரைக்கும் நான் உன்னைவிட்டு வில கமாட்டேன்; உன்னை கைவிடமாட் டேன்” என்று இந்தநாளிலே வாக்கு க்கொடுக்கிறார்.*
*அன்பானவர்களே! “இந்த கோலை யும் உன்கையிலே பிடித்துக்கொண் டு போ, இதனால் நீ அடையாளங்க ளைச் செய்வாய்” (யாத்.4:17) என்று ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட் டிருந்தார்.தேவன் சொன்னாலொழி ய அவன் ஒருநாளும்அந்த கோலை தன் சுய ஆதாயத்திற்காகவோ, பெ ருமைக்காகவோ, பேர் பிரஸ்தாபத் திற்காகவோ பயன்படுத்தவே இல் லை.தேவன்சொல்லும் பொழுது மா த்திரமே அதை பயன்படுத்தினான். உன் வாழ்க்கையிலேயும் கர்த்தர் த மது வல்லமைகளையும், ஆவிக்குரி ய வரங்களையும், அபிஷேகத்தை யும் தந்திருக்கலாம். அவைகளைக் கொண்டு உன் சுய பெருமைக்காக வோ, தற்புகழ்ச்சிக்காகவோ, சுய ஆதாயத்திற்காகவோ பயன்படுத்தி வாழும்போது, தேவனுடைய இருத யம் துக்கப்படுகிறது. தேவனுக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, வெறு மையாக்கி, உன் சுயத்தை அழித்து, கிருபையாய் ஆண்டவர் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை, வர ங்களை கர்த்தருக்கு அர்ப்பணித்து வாழும்பொழுது, ஆவியானவர் உ ன்னை எடுத்து பயன்படுத்துவார். அதுமட்டுமல்ல, தேவன் மோசேயை ப்பார்த்து அந்த கோலை கீழே போட ச்சொன்னார். நீட்டச் சொன்னார். அ டிக்கச் சொன்னார்.அதை அப்படியே கீழ்ப்படிந்து மோசே செய்தார். அப் பொழுது அதிசயங்கள் நிகழந்தன. நீயும் தேவசித்தத்தை அறிந்து, அத ற்கு கீழ்ப்படிந்து வாழும்போது, உன் வாழ்க்கையிலேயும் அதிசயங்கள் நடக்கும்; உன்னைக் கொண்டு மற் றவர்களுக்கும் அற்புதங்களைச் செய்ய பயன்படுத்துவார்.*
*பிரியமானவர்களே!உன் வாழ்க்கை யிலேஉனக்கு உதவிசெய்யவோ, வ ழிகாட்டவோ,காரியங்களை முன்னி ன்று நடத்தவோ, உன் மன துக்கங்க ளையும் வியாகுலங்களையும் பகிர் ந்துகொள்ளவோ யாருமே இல்லை என்று தனிமை உணர்வோடு காண ப்படுகிறாயா? உன் இருதயம் கலங் கவேண்டாம். ஒருவேளை எத்தனை யோ முறை நான் இந்த வாக்குத்தத் தத்தை கேட்டிருக்கிறேன் என்று சா தாரணமாக எண்ணவும் வேண்டா ம்.அவர் உன் வாழ்க்கையின் சூழ்நி லைகளைக் குறித்து மிகவும் கரிச னையுள்ளவர்.அற்புதங்களை செய் ய மோசேயினிடத்தில் இருந்ததோ ஒரேயொரு கோல்;தாவீதின் கையி லிருந்தது ஒரு கவனும் கற்களும்; கிதியோனின்கையிலிருந்தது ஒரு பானையும் தீவட்டியும்;சிம்சோனின் கையிலிருந்தது கழுதையின் தா டையெலும்பு;அதே அற்புதத்தை செ ய்வதற்கு உன் கையிலே கொடுத்தி ருப்பதோ தேவனுடைய அதிகாரமு ள்ள வாக்குத்தத்தங்கள். பழைய ஏ ற்பாட்டு பரிசுத்தவான்கள் தங்கள் கைகளிலிருந்ததை கர்த்தருக்காக வைராக்கியமாய் எடுத்து பயன்படு த்தினார்கள்.அற்புதங்கள் நடந்தன. உன்கையிலே கர்த்தர் கொடுத்திரு க்கிற மிக வல்லமையான ஆயுதம் வாக்குத்தத்தங்கள்.என்கையில் இ ருக்கிறகாரியங்கள் மிகவும் சாதார ணமானதுதான்;அற்பமானது தான்; பிரயோஜனமற்றது தான் என்று ஒ ருவேளை நினைக்கலாம். அவைக ள் உன்கையில் இருக்கிற வரைக்கு ம் சாதாரணமானவைகள். ஆனால், அவைகளை கர்த்தருடையகரத்தில் கொடுத்து, விசுவாசத்தோடு அவரு டைய நாமத்தில் பயன்படுத்த ஆரம் பி. இன்றைக்கு உன்வாழ்க்கையில் கர்த்தர் அசாதாரணமான பெரியகா ரியங்களை செய்வதை உன் கண்க ள் காணும். பயப்படாதே! உனக்குள் இருக்கிறவர் மகா பெரியவர். அவர் உன்னை விட்டு விலகாமலும் கை விடாமலும் இருந்து உன் பேரை அ வரே பெருமைப்படுத்துவார். உங்க ள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
நம்மை பிழைக்க வைக்கும் கர்த்த ருடைய வார்த்தைகள்.
*மத்தேயு 4:4*
*"மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை யினாலும் பிழைப்பான்".*
*தேவபிள்ளையே! இந்த உலகத்தில் உண்ண உணவு,உடுக்க உடை, வசி க்க இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் ஒருமனிதன் பிழைப்பதற்கான அடி ப்படைத் தேவைகளாகும். ஒரு சரீர த்தைப் பேணிபாதுகாக்க எப்படியெ ல்லாம் நாம் கவனமாயிருக்கிறோ மோ,அதற்கதிகமாய் உள்ளானமனி தனாகிய ஆத்துமா செழித்து வாழ அதிக கவனம் தேவை. சரீரத்திற்கு உணவு எப்படி பெலனாயிருக்கிற தோ, அதுபோல, வேதவசனங்கள் ந ம் ஆத்துமாவிற்கு பெலனாயிருக்கி றது. வாழ்க்கையில் கொந்தளிக்கி ற பாடு உபத்திரவங்களினால் ஆத் துமா சோர்ந்துபோய் தளர்ந்துவிடா தபடி, ஆவியும் ஜீவனுமாயிருக்கிற வேதவார்த்தைகள் ஆத்துமாவை ஒ வ்வொரு நாளும் உயிர்ப்பித்து நடத் துகிறதாயிருக்கிறது. கர்த்தர் தமது வசனங்களைஅனுப்பிநம்மைகுண மாக்குகிறார்; பெலப்படுத்துகிறார்; கிருபையிலேநிலைநிறுத்திகாத்து க்கொள்கிறார். ஆத்துமா வாழ்ந்து செழித்திருக்கும் போது, சரீரம் கிறி ஸ்துவுக்குள்பெலனுள்ளதாய் மாறு ம்.ஆகவே, நம்முடைய வாழ்க்கையி லே வேதவசனங்களை வாசிக்கவு ம், தியானிக்கவும், அதன்படி ஜீவிக் கவும் அதிகபிரயாசமெடுக்க வேண் டும். எரேமியா தீர்க்கதரிசி சொல்கி றார்: “உம்முடைய வார்த்தைகள் கி டைத்தவுடனே அவைகளை உட்கொ ண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதய த்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; அ வருடையவார்த்தைகள் எரிகிற அக் கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது”(எரே.15:16;20:9)ஆம்,உண் மையாகவே வேதவசனத்தை தியா னிக்க தியானிக்க அதுஉங்களுக்கு ள்ளேஅக்கினியை கொண்டுவருவ துமன்றி,உங்களையே தேவனுக்கா க அக்கினியாய் மாற்றிவிடுகிறது. பரலோக பெலனையும்,மலைகளை பெயர்க்கத்தக்க விசுவாசத்தையும் உங்களுக்குள் கொண்டுவரும்.*
*அன்பானவர்களே! கர்த்தர் சொல்கி றார்: “என் கட்டளைகளையும், நியா யங்களையும் கைக்கொள்ளக் கடவீ ர்கள்;அவைகளின்படிசெய்கிறவன் எவனும் அவைகளால்பிழைப்பான்”*
*(லேவி.18:5).அண்டசராசரங்களையு ம் தம்முடைய வார்த்தையினால் சி ருஷ்டித்த தேவனுக்கு, அதே வார்த் தையைக்கொண்டு நம்மை பிழைக் கவைப்பது அவருக்கு லேசானகாரி யம். மாம்சம் (சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தைசுதந்தரிக்கமுடியாது. நம்முடையசரீரம் இந்த மண்ணுக்கு ரியதாயிருந்தாலும், நமக்குள் இரு க்கிற விலையேறப்பெற்றஆத்துமா வும்,ஆவியும்,அவைகளை நமக்குள் தந்த தேவனிடத்திலே போய்ச் சேர வேண்டும். எனவே தான், தேவன் ந ம்மை ஜீவாத்துமாவாகசிருஷ்டித்து வைத்திருக்கிறார். இந்த உலகத்தி ன் சக்திகள்(பிசாசு) எப்போதும் நம் மை விழுங்கும்படியாக,ஆத்துமாவி லிருக்கிற ஜீவனைஅழிக்கும்படியா க வகைதேடி சுற்றித் திரிகின்றன. அவனுடைய வேலையெல்லாம் ஆ த்துமாவைத் திருடுவதும்,அழிப்பது ம், கொல்வதுமே. ஆனால், நம் அரு மைஇரட்சகரோ,நமக்கு ஜீவன்உண் டாயிருக்க, அந்த ஜீவன் நம் ஆத்து மாவிலே பரிபூரணப்படவுமே இந்த உலகத்திற்கு வந்தார். அந்த ஜீவ னைக் கொண்டு இந்தஉலகத்திலே நாம் பிழைத்து, சுகித்து, நீடித்திருக் க வேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் அவருக்கு முன்பாக நம்மை ஆவியிலே பிழைத்திருக்கு ம்படியாக வைக்கிறது.*
*பிரியமானவர்களே! உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை கிறிஸ்து வுக்குள் நீதிக்கென்றுபிழைத்திருக் கும்படிக்கு, இயேசு தாமே தமது சரீர த்திலே உங்களுடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்.அவரு டைய தழும்புகளே உங்களை பிழை த்திருக்க வைத்திருக்கிறது.தேவன் ஈவாக உங்களுக்கு தந்திருக்கிற ச கல ஆவிக்குரிய காரியங்களும் (இ ரட்சிப்பு,ஞானஸ்நானம், வேதவசன ங்கள், ஆவியின் நிறைவு, அபிஷே கம், வல்லமை, வரங்கள், கனிகள்) தமது நித்திய ராஜ்யத்திற்கென்று உங்களை பிழைக்க வைப்பதற்கும், உங்களை மாசற்றவர்களாய் தமக் கு முன் நிலைநிறுத்துவதற்குமே எ ன்பதை மறந்துபோகக்கூடாது. இவ் வுலகத்தின் மனிதர்கள் உங்களை புறக்கணிக்கலாம்;வாழ்வாதாரங்க ள் உங்களை ஏமாற்றலாம்; மனிதர் கள் உங்களை புறக்கணிக்கலாம்; தொழில்கள்/வேலைகள் உங்களை கைவிடலாம்; வருமானங்கள் நின் றுபோகலாம். மனம் கலங்காதிருங் கள்!தேவனுடைய வார்த்தையை மு ற்றிலும் விசுவாசித்து,முடிவுபரியந் தம் உங்களை வழிநடத்தும் தேவன் மேல் மாத்திரம் நீங்கள் முழு நம்பிக் கையையும் வைத்து,வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்தி லிருந்து வரும் ஒத்தாசைக்காக கா த்திருங்கள்.கர்த்தர் நித்தமும் உங்க ளை நடத்துவார்; மகா வறட்சியான காலங்களில் உங்கள் ஆத்துமாவை திருப்தியாக்குவார்; உங்கள் எலும் புகளை நிணமுள்ளதாய் மாற்றி, உ றுதியாய் அவருக்குள் பெலனடை ய வைப்பார்; உங்களுடைய வாழ்க் கையை நீர்ப்பாய்ச்சலான தோட்டத் தைப் போலவும், வற்றாத நீரூற்றை ப்போலவும் கர்த்தர் மாற்றி, இந்த பூ மியிலே உங்களையும் உங்கள் சந் ததிகளையும் பிழைக்க வைப்பார். உங்களுடைய எதிர்காலம் இந்த உ லகத்தின் வாழ்வாதாரங்கள்/ வரு மானங்கள்/ பிரயாசங்களின் மேல் இல்லை; தேவனுடைய கரத்திலிரு க்கிறபடியால், காட்டுப் புஷ்பத்தை உடுத்துவிக்கிறவர், காக்கைக் குஞ் சுகளை போஷிக்கிறவர், நிச்சயம் உங்களையும் ஆச்சரியமாய்போஷி த்து, உடுத்துவித்து, மனரம்மியமா ய் உங்களை நடத்துவார். சோர்ந்து போகாதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
சங்கீதம் 86:13*
*"நீர் எனக்கு பாராட்டின உம்முடைய கிருபை பெரியது,என்ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித் தீர்"*
*தேவபிள்ளையே!ஆவிக்குரிய வாழ் க்கையிலே தேவன் நமக்குக் காண் பித்திருக்கிற மகா உன்னதமான ஆசீர்வாதங்களிலேஒன்று கிருபை. இந்த “கிருபை”என்ற வார்த்தை எல் லா வார்த்தைகளிலும்மிகஇனிமை யானதும் மேன்மையானதுமாகும். “கிருபை” என்ற வார்த்தைக்கு, ஒன் றுக்குமே தகுதியில்லாதவர்கள் மே ல் தேவன் காண்பிக்கிற அளவற்ற தயவு இரக்கம் என்பது அர்த்தமாகு ம்.ஆண்டவர் கிருபையாய் நம்மைத் தேடிவந்தார். கிருபையாய் அடிமை யின் ரூபமெடுத்தார். கிருபையாய் இரட்சிப்பையும்,சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தந்தார்.ஆனால் எல்லா கிருபைகளிலும் மேலான கி ருபை நம்முடைய ஆத்துமாவை தா ழ்ந்த பாதாளத்திற்கும், நித்திய வே தனையான அக்கினிக் கடலுக்கும் தப்புவித்ததாகும்.அந்தகிருபையை எண்ணிய தாவீதுராஜா, அவர் கிரு பை பெரியது என்றுசொல்லி துதிக் கிறார். நாம் பாவிகளாகவும் அக்கிர மக்காரராகவும் இருந்தபோது, நமக் காக தமதுஜீவனையே கொடுத்து த ன்னுடைய பிள்ளையாக மார்போடு அணைத்தாரே, அது எத்தனைப் பெ ரிய மகத்துவமான கிருபை.பூமிக்கு வானம் எவ்வளவு பெரியது என்று சொல்லி நாம் எண்ணி அதிசயிக்கி றோம். கர்த்தருக்குப் பயப்படுகிறவ ர்கள் மேலும் கூட அவருடைய கிரு பையும் அவ்வளவு பெரியதாய் இரு க்கிறது(சங்.103:13).கர்த்தருடையவி லையேறப்பெற்ற கிருபையை எண் ணியெண்ணி ஆவியிலே களிகூர் ந்து,கிருபையின் சம்பூரணத்தை அ னுபவித்த தாவீது பக்தன்,136-ம் சங் கீதத்தின் அத்தனை வசனங்களிலு ம் கர்த்தரின்கிருபை என்றுமுள்ளது என்று வர்ணித்து எழுதுகிறார்.*
*அன்பானவர்களே! நம்முடைய வாழ் க்கையிலே ஆவிக்குரிய விலைமதி ப்புமிக்கபொக்கிஷங்கள்அத்தனை யும் நமக்குள் கொண்டுவருவது அ ந்தக் கிருபை மாத்திரமே. கர்த்தர் ந ம்மை எப்படி இரட்சித்தார்? எப்படி நீ திமான்களாக்குகிறார்?அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டோ ம் (எபே.2:5); அந்தக் கிருபையினால் தான் நீதிமான்களாக்கப்பட்டிருக்கி றோம் (ரோமர் 3:24). அதுமட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசுவின் கிரு பையினாலும், அவரை அறிகிற அ றிவினாலும்மாத்திரமே இந்தப்பொ ல்லாத உலகத்தின் கேடுகளுக்கும், மாம்சத்தின் கிரியைகளுக்கும், சிற் றின்ப கேடுபாடுகளுக்கும் நாம் தப் புகிறோம். பாவம் பெருகின இடத்தி ல் தான் கிருபை அதிகமாய் பெருகி னது(ரோம.5:20).அந்த அளவில்லாத கிருபை நம் வாழ்க்கையில் பெருகி னபடியினால்தான்,இந்த உலக ஆக் கினையிலிருந்தும், பிசாசின் கண் ணியிலிருந்தும் நாம் தப்பியிருக்கி றோம்;சாபத்தின் அழிவுக்கு நம்மை நீங்கலாக்கி,ஆசீர்வாதத்தின்நிறை விற்குள் நம்மை நடத்திக் கொண்டி ருக்கிறது. “எப்படி இருக்கிறீர்கள்?” என்று யாராவது நம்மை விசாரிக்கு ம்போது, உடனே “கர்த்தருடைய கிரு பையினால் சுகமாயிருக்கிறேன்” என்று நம்மையறியாமலேயே அந்த வார்த்தை நம்வாயிலேவந்துவிடுகி றது. அப்படியானால், இந்த கிருபை யானது நம்முடைய இரத்தத்திலே யே கலந்துவிட்ட ஒன்றாய் மாறிவி டுகிறது.அநேகர் தங்களுடைய ஜெ பங்களில் “கிருபையின் தேவனே!” என்று சொல்லி ஜெபிக்கிறார்கள். தேவகிருபையின் அபிஷேத்தைப் பெற்ற பரிசுத்தவான்கள், இந்தக் கி ருபையை உச்சரித்து தான் மற்றவர் களை ஆசீர்வதிக்கிறார்கள். அப். ப வுல்,“நம்முடைய கர்த்தராகிய இயே சுகிறிஸ்துவின் கிருபை உங்களோ டு இருப்பதாக”என்றும், மோசே, “கர் த்தர் தம்முடைய திருமுகத்தை உங் கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி,உங் கள்மேல் கிருபையாயிருக்கக் கடவ ர்”என்றும்ஜனங்களைஆசீர்வதிக்கி றதை நாம் வேதத்திலே காணலாம்.*
*பிரியமானவர்களே!இந்தக் கிருபை யை நாம் சம்பூரணமாய் வாழ்க்கை யிலே அனுபவிக்கிறோம் என்றால், அது தேவன் நம்மேல் வைத்திருக்கி ற இரக்கமும், மனதுருக்கமும், தயவு மேயல்லாமல் வேறொன்றுமேயில் லை.கர்த்தர்சொல்கிறார்: மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் என் கிருபை உன் னைவிட்டுவிலகாது(ஏசா.54:10).இந் தக் கிருபையை குறித்து சிந்தித்தா ல், நம் ஆயுசுநாட்கள் போதவே போ தாது.தமதுவார்த்தையில் உண்மை யுள்ளதேவன்,நிச்சயம் தமதுவிலை யேறப்பெற்ற சம்பூரணக் கிருபைக ளை உங்கள் வாழ்க்கை எல்லையெ ங்கிலும் பெருகச்செய்து உங்களை அற்புதமாய் வழிநடத்துவார் என்ப தில் எந்த சந்தேகமுமில்லை. இந்த மகா உன்னதமானகிருபையை உங் கள் வாழ்க்கையில் பெற்றுகொள்வ தும்,அனுபவிப்பதும்,ஜீவியத்தில் த க்கவைத்துக் கொள்வதும் உங்களு டைய கரத்தில் தான் இருக்கிறது. இந்தக் கிருபையை உங்கள் வாழ்க் கையிலிருந்து எடுத்துப்போட சத்து ரு பலவிதமான தந்திரங்களை ஒவ் வொரு நாளும் கையாண்டு வருகி றான். வேதம் சொல்கிறது: “பொய் யான மாயையை பற்றிக்கொள்ளு கிறவர்கள் தங்களுக்கு வரும் கிரு பையைப் போக்கடிக்கிறார்கள்”*
*(யோனா 2:8). உங்கள் முழு குடும்ப த்தினருடைய பிராணனும் தேவனு டைய பார்வையிலே மிகவும் அரு மையாய் இருந்தபடியினாலும், உங் கள் மேல் தேவன் கிருபையாயிருக் க சித்தமாயிருந்தபடியினாலும், உ ங்கள் பிராணனைஅழிவுக்கு விலக் கி மீட்டு, தமது கிருபையினாலும் இ ரக்கத்தினாலும் உங்களை முடிசூட் டி வைத்திருக்கிறார். அநேகர் இந்த கிருபையைக்குறித்து அறிந்துகொ ள்ள முடியாதபடிக்கு, பிசாசானவன் அவர்கள் மனக் கண்களை குருடாக் கி வைத்திருக்கிறான். இந்த உலக நன்மைக்கான வாசல்கள் உங்களு க்கு அடைபட்டிருந்தாலும், பரலோக கிருபையின் வாசல்கள் உங்களுக் கு எப்போதும் திறந்தேயிருக்கிறது. இந்தக்கிருபையானது உங்கள் ஜீவ னைப் பார்க்கிலும் மேலானது. ஆக வே, தேவனுடைய கிருபையின் மே ல் பூரணநம்பிக்கையுள்ளவர்களாக கடந்து செல்லுங்கள். இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலேயும் இ ந்தக் கிருபை உங்களை வெட்கப்ப டுத்தாது. உங்கள் இருதயம் கலங் காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
ஆவியின் அனல் உங்கள் வாழ்க் கையில் வருகிற சோதனைகளை சாதனைகளாக மாற்றும்
*ரோமர் 12:11*
*"அசதியாயிராமல் ஜாக்கிரதையா யிருங்கள்; ஆவியிலே அனலாயிரு ங்கள், கர்த்தருக்கு ஊழியம் செய் யுங்கள்".*
*தேவபிள்ளையே!ஆவிக்குரிய வாழ் க்கையிலே எப்பொழுதும் அனலா யிருக்க வேண்டுமென்று அப்.பவுல் விரும்புகிறார்.ஏன் அனலாய் இருக் கவேண்டும்?அணைந்துபோன ஒரு மெழுகுவர்த்தியைக் கொண்டு வே று எந்த மெழுகுவர்த்தியையும் பற் றவைக்கமுடியாது. உங்கள் உள்ளத் திலே பரிசுத்த ஆவியின் அக்கினி பற்றி எரிந்தால் தான் நீங்கள் மற்ற வர்களுடைய வாழ்க்கையிலே அக் கினியைப் பற்ற வைக்க முடியும். உ ங்கள்ஆவிக்குரியஜீவியத்தை குளி ரப்பண்ண உலகம், மாம்சம், பிசாசு எப்போதும் போராடிக் கொண்டிருக் கிறது. இந்த உலகத்தின் சிற்றின்ப ங்கள், மாம்சத்தின் கிரியைகள், சத் துருவின் போராட்டங்கள் நம்முடை ய ஆவி ஆத்துமாவிலிருக்கிற அன லை அவித்துப்போடஆயத்தமாயிரு க்கின்றன. ஆகவே, ஆவியிலே எப் பொழுதும் அனலாயிருங்கள். நீங்க ள் தெய்வீக அனலுக்குள் இருக்கும் போது, சாத்தான் உங்களை நெருங் கவேமுடியாது.அனலற்ற வாழ்க்கை யை தேவன் வெறுக்கிறார். லவோ திக்கேயா சபையைப் பார்த்து, “நீ குளிருமின்றி அனலுமின்றி வெது வெதுப்பாயிருக்கிறபடியினால் உ ன்னை என் வாயினின்று வாந்திப் பண்ணிப் போடுவேன்” என்று கர்த் தர் சொன்னார். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினி; எரிச்சலுள்ள தேவன் (உபா.4:24). அவர் அக்கினி யாயிருக்கிறபடியால், நாமும் அக்கி னி அனலாய் வாழும்படி அவர் விரு ம்பி, இந்த பூமியிலே அக்கினியை ப்போட வந்தார். மாத்திரமல்ல, அது பற்றியெரிய வேண்டுமென்று விரு ம்புகிறார்(லூக்.12:49). உங்கள் வாழ் க்கையிலே பதராக,பாவமாக, தீய சு பாவங்களாக இருக்கிற யாவற்றை யும் சுட்டெரித்து,விலையுயர்ந்த பல ன்தரும் கோதுமைமணிகளாக உங் களை மாற்ற விரும்புகிறார்.*
*எனக்கன்பானவர்களே!நீங்கள்கிறி ஸ்துவுக்குள் அக்கினி அனலாய் மா றாத பட்சத்தில், பிசாசு உங்களை மி க எளிதாக வஞ்சித்துப்போடுவான். வாழ்க்கையின் அநேகக் காரியங்க ளில் நீங்கள் விழிப்புள்ளவர்களாய், ஜாக்கிரதையுள்ளவர்களாய், ஞான முள்ளவர்களாய் வாழ்ந்தாலும், ஆ விக்குரியவாழ்க்கையில் உங்களை அனலாய் வைத்துக்கொள்ள தவறு வீர்களேயானால் நீங்கள் பரிதபிக்க ப்பட்டவர்களாய் மாறிப் போவீர்கள். உலகத்தின் பாவங்களை, லௌகீக த்தின் சிற்றின்பங்களை, பிசாசின் சோதனைகளைநீங்கள்மேற்கொள் ளவே முடியாது. நீங்கள் இந்த பூமி யிலே ஆளுகைசெய்யவும், அவைக ளை கீழ்ப்படுத்தி ஆண்டுக்கொள்ள வுமே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். பூமி க்குரிய காரியங்களின் மேல் ஆளு கையில்லாமல், பரலோகத்தின் சுத ந்தரங்களை ஒருபோதும் அனுபவி க்கமுடியாது. எபிரெயவாலிபர்களா னசாத்ராக்,மேஷாக்,ஆபேத்நெகோ, தானியேல் எப்போதும் தங்களை க ர்த்தருக்குள்அக்கினிஅனலாய்வை த்திருந்தபடியினால்,உலகஅக்கினி க்கும், சிங்கக் கெபிக்கும் அவர்கள் பயப்படாமல், தைரியமாய் எதிர்த்து நிற்க முடிந்தது.அப்.பவுலுக்குள், பே துருவுக்குள் இருந்த அக்கினியின் அனலுக்கு முன்பாக மரித்தவர்கள் உயிரோடெழும்பினார்கள், சங்கிலி கள் தெறிக்கப்பட்டுப் போயின, சி றைச்சாலைக் கதவுகள் தானாய் தி றந்து வழிவிட்டது,அஸ்திபாரங்கள் அசைந்து,பூமிஅதிர்ந்தன,கிறிஸ்து வினிமித்தம் வந்த பாடுகளையெல் லாம் தைரியமாய் அவர்களால் சந் திக்க முடிந்தது. தேவனுடைய சித்த த்தை இந்த பூமியிலே பரிபூரணமா ய் நிறைவேற்றி, விசுவாச ஓட்டத் தை ஜெயமாய் ஓடிமுடித்தார்கள்.*
*பிரியமானவர்களே! உங்களைக் கு றித்த தேவனுடைய சித்தமும் நோக் கமும் மகா பெரியவைகளும் உயர்ந் தவைகளுமாயிருக்கிறது. நீங்கள் கர்த்தருக்காக அக்கினித் தனலாய் மாறவேண்டுமென்று தேவன் விரு ம்புகிறார். உங்களுக்குள் தம்முடை ய ஆவியைக் கொடுத்து, உங்களை அக்கினிஜுவாலையாக, வல்லமை யான ஊழியக்காரனாக நிலைநிறு த்த விரும்புகிறார். இனி நீங்கள் பா வ சோதனைகளுக்கும், பிசாசின் த ந்திரங்களுக்கும் அடிமையானவர்க ளல்ல; கர்த்தர் தம்முடைய அக்கினி த்தனலை உங்களுக்குள் அனல் மூ ட்டி எழுப்பிவிடுகிறார். “எழும்பிப் பி ரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தரு டைய மகிமை உன் மேல் உதித்தது. இதோ,இருள் பூமியையும்,காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவரு டைய மகிமை உன்மேல் காணப்படு ம்” (ஏசா.60:1,2). உங்கள் மேல் இருக் கிற அக்கினியும், அபிஷேகமும் ஆ யிர மடங்காய் பெருகிக் கொண்டே இருக்கட்டும்.ஆவியின் வரத்தை அ னல்மூட்டி எழுப்பிக் கொண்டேயிரு ங்கள். ஆவியிலே அனலாய் வாழ வேண்டும் என்கிற ஒருதாகம்,வாஞ் சை உங்களுக்குள் வருமேயானால், நிச்சயமாய் தேவன் தமது பரிசுத்த ஆவியின் வல்லமையை அக்கினி யாய் உங்களுக்குள் தருவார். அதே அக்கினி துன்மார்க்கருக்கு நியாய த்தீர்ப்பின் அக்கினியாய் மாறிவிடு ம். பரிசுத்தஆவிக்குள் அனலாய் ஜீ விக்கிற அனுபவம் பாடு உபத்திரவ ங்களை மிக எளிதாக மேற்கொள் ள வைக்கும்; இந்த பூமியிலே சுடர்க ளைப் போல உங்களை பிரகாசிக்க வைக்கும். மனம் கலங்காதிருங்க ள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
தேவனால் பிரகாசிப்பிக்கப்பட்ட வா ழ்க்கையிலேகனநித்திரைக்கும் செ த்தஜீவியத்திற்கும் இடமேயில்லை.
*எபேசியர் 5:14*
*"ஆதலால்,தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு, அப் பொழுதுகிறிஸ்து உன்னைப் பிர காசிப்பிப்பார்".*
*தேவபிள்ளையே!இன்றைக்கு அநே கருடைய வாழ்க்கையிலே ஒரு தெ ய்வீகப் பிரகாசத்தை பார்க்கமுடியா தபடிக்கு பிசாசானவன் ஒரு இருளி ன் பள்ளத்தாக்கிலே நடத்துகிறான். ஒரு உண்மையான பிரகாசத்தை ந ம்முடையவாழ்க்கையிலே காண/அ னுபவிக்கவேண்டுமேயானால்,அப். பவுல் சில ஆலோசனைகளை தன துநிருபங்களிலே எழுதுகிறார். முத லாவது நம்முடைய வாழ்க்கை ஒரு தூங்குகிற வாழ்க்கையாக இருக்க க்கூடாது. தூக்கம் நமக்கு நிச்சயம் தேவை. ஆனால், அளவுக்கு மிஞ்சி ன தூக்கம் ஒருமனிதனை சோம்பே றியாக்கிவிடும். தூங்கினாலும் வி ழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தி லே விழித்துக்கொள்ள வேண்டும். தூக்கம் கந்தைகளை உடுத்துவிக் கும்(நீதி.23:21). இந்த வசனத்திலே ஆவிக்குரிய தூக்கத்தை, ஆத்தும ம ரணத்தை பற்றி அப்.பவுல் எழுதுகி றார்.லூக்.8:52-ல்ஜெபஆலயத்தலை வனின் மகள் மரித்துப்போனாள். இ யேசுவோ அந்த மகளை தூங்குகிற வளாகக் கண்டார். ஆனால், இங்கே யோ கர்த்தர் தூங்குகிறவர்களை ம ரித்தவர்களாக காண்கிறார். சர்தை சபையைப் பார்த்து கர்த்தர் சொன் னார்: நீ உயிருள்ளவனென்று பெய ர்கொண்டிருந்தும் செத்தவனாயிரு க்கிறார் (வெளி.3:2). என்றைக்கு நா ம் ஞானஸ்நானத்திலே கர்த்தரோடு கூட உடன்படிக்கை செய்தோமோ, அன்றைக்கே நாம் பாவத்திற்கு மரி த்திருக்கிறோம். ஆவிக்குரிய வாழ் க்கையிலே மரித்து காணப்பட வே ண்டிய காரியங்களுமுண்டு; பிழை த்திருக்க வேண்டிய காரியங்களும் உண்டு. இன்றைக்கு, பிழைத்திருக் கவேண்டிய காரியங்களில் மரித்த நிலைமையிலும், மரிக்க வேண்டிய காரியங்களில் பிழைத்தும் நாம் கா ணப்படுவது மிகவும் வேதனைக்கு ரிய காரியம்.*
*அன்பானவர்களே! தேவன் நம்மை பிரகாசிப்பிக்க வேண்டுமேயானா ல், மரித்த/தூங்குகிற நிலைமையி லிருந்து நாம் எழும்பவேண்டும். இர ட்சிக்கப்பட்டேன், ஆண்டவரை நேசி க்கிறேன், நானும் ஒரு விசுவாசி எ ன்று சொல்லிக் கொண்டு, செத்த/ மந்த நிலைமையிலே,நித்திரை மய க்கத்திலே விழுந்துக் கிடப்போமே யானால் நாம் பரிதபிக்கப்பட்டவர்க ளாய் மாறிப்போவோம். சிம்சோன் மேலே கர்த்தர் மிகப்பெரியஅபிஷே கத்தை வைத்திருந்தார். அவனைக் கொண்டு தேவன் பெரியகாரியங்க ளைச் செய்தார். ஆனால் அவனோ ஒரு நித்திரைப் பிரியனாயிருந்தா ன். பெலிஸ்தன் வருகிறான் என்று தெலீலாள் சொன்னபோதும்,அவன் அதை ஒரு பொருட்டாக எண்ணவே யில்லை. கன நித்திரையாயிருந்த போது பெலிஸ்தன் அவன்மேல் வந் துவிட்டான். ஐயோ! காலம் தாமதமா கிவிட்டது. அவன் எழும்பினாலும் அவனால் பிரகாசிக்கப்பட முடியவி ல்லை. கண்கள், தரிசனம், அபிஷே கம்,ஊழியம் எல்லாம்போய்விட்டது. அவன் ஒரு வேடிக்கைப் பொருளா ய் மாறிவிட்டான். தேவபிள்ளையே, சாத்தா ன் உங்கள் மனக்கண்களை பிடுங்கி குருடாக்குவதற்கு முன், கைகள் வெண்கல விலங்குகளால் கட்டப்படுவதற்கு முன், உங்கள் சத் துருக்களுக்கு முன்பு வேடிக்கைப் பொருளாக மாறுவதற்குமுன்பு உங் கள் தூக்கத்தை/மரித்தோரைவிட்டு எழுந்திருப்பீர்களா? சிம்சோன் எழு ம்பவேண்டிய நேரத்தில் எழும்பாம ற்போனதினால் அவனுடைய முடிவு பரிதாபமாய் போனது.*
*பிரியமானவர்களே! கர்த்தருக்காக பிரகாசிக்கவேண்டிய சிம்சோன், இ ஸ்ரவேலை இரட்சிக்க வேண்டியவ ன்,தூக்கத்திற்கும்அசதிக்கும்லௌ கீக மயக்கத்திற்கும்,மாம்சத்தின் இ ச்சைக்கும் இடங்கொடுத்தபடியால், ஒரு இருளடைந்த நிலைக்குத் தள் ளப்பட்டு, ஒரு அற்பனாய் மரித்துப் போனான். கடைசி வரைக்கும் அவ னால் பிரகாசிக்கவே முடியவில் லை. ஆரம்பம் அற்பமாயிருந்தாலு ம் முடிவு சம்பூரணமாயிருக்கும், உ ண்மை தான். ஆனால் ஆரம்பத்திற் கும் முடிவிற்கும் உள்ள இடைப்பட்ட காலங்களில் நீங்கள் செய்யவேண் டிய அநேக பொறுப்புகள் உண்டு; காத்துக்கொள்ள வேண்டிய கடமை கள் உண்டு; எழும்ப வேண்டிய சூழ் நிலைகள் உண்டு. அவைகளையெ ல்லாம் நிறைவேற்றாமல் முடிவு சம் பூரணமாயிருக்குமென்று பகல் கன வு காண்பீர்களேயானால், உங்கள் நிலைமையும் சிம்சோனின் முடிவா கத் தான் இருக்கும். வானத்திலிரு ந்து அக்கினியை இறக்கி, கர்த்தரே மெய்யான தெய்வம் என்று முழக்க மிட்ட எலியா, சோர்வடைந்து சூரை ச்செடியின் கீழ் நித்திரை செய்தபடி யினால்,யெசபேலின் ஆவியை எதி ர்த்து நிற்க முடியாமல்,ஜீவனை எடு த்துக் கொள்ளும் என்று அங்கலாய் க்க ஆரம்பித்தான். இந்த உலகத்தி ன் சிற்றின்பங்களோ, மாம்சப் போ ராட்டங்களோ, சரீரவியாதிகளோ, உ ங்களை அடிமைப்படுத்திவிட இடங் கொடாதிருங்கள். எப்போதும் ஆவி யில் நிறைந்திருங்கள். எழும்பு! எழு ம்பு! உன் வல்லமையைத் தரித்துக் கொள்; தெய்வீகப் பரிசுத்தத்தை உ ன் அலங்கார வஸ்திரங்களாய் உடு த்திக் கொள்; நிச்சயமாய் தேவன் உ ங்கள் விளக்கை ஏற்றுவார்; உங்க ள் ஜீவியம் பிரகாசமாயிருக்கும். உ ங்கள் இருதயம் கலங்காதிருப்பதா க! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
Thanks for using my website. Post your comments on this