Type Here to Get Search Results !

கர்த்தருக்கு காத்திருக்கிற அனுபவ ம் இருதயத்தை ஸ்திரப்படுத்தும் | Stephen Sermon Notes | Christian Message | ஆசீர்வாத தின தியான குறிப்புகள் | Jesus Sam

இழந்துபோன நன்மைகளை திரும்ப மீட்டுத் தருகிற தேவன்

*லூக்கா 19:10*
*"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன்(இயேசு கிறிஸ்து) வந்திருக்கிறார்".*

*தேவபிள்ளையே! நம் அருமை இரட்சகர் இயேசு தமது பரலோக மகிமையையும் மேன்மையையும் உதறிவிட்டு, தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபம் எடுத்து, இந்த உலகத்திற்கு மனுஷசாயாலாய் வந்ததற்கு ஒரு மகா பெரிய நோக்கமுண்டு.  பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்; பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வந்தார்;  இந்த உலகத்தை மீட்கும்படியாக தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தார். மட்டுமல்ல, இழந்துபோனதைத் தேடும்படியாகவும் வந்தார். ஒரு ஆத்துமாவும் கெட்டுப் போவது அவருடைய சித்தமல்ல; ஒவ்வொரு ஆத்துமாவின் விலை மதிப்பையும் நீங்கள் உணருகிறீர்களோ, இல்லையோ, தேவன் அதை அறிந்திருக்கிறார்; பிசாசும் அதை அறிந்திருக்கிறான்.  ஆகவே தான் கர்த்தர்: “எப்பிராயீமே, நான் உன்னை எப்படி கை விடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? என்று நம்மைக் குறித்து அங்கலாய்க்கிறார். இந்த உலகம் மெய்யான சமாதானத்தையும், மனநிம்மதியையும், ஆறுதலையும் தேடுகிறது;  பிசாசின் சாப வல்லமைகளிலிருந்து விடுதலையைத் தேடுகிறது.  கர்த்தரோ நம்மையும் நம் ஆத்துமாவின் இரட் சிப்பையுமே தேடுகிறார். தமது பிள்ளைகளோடுள்ள ஐக்கியத்தைத் தேடுகிறார்.  தாய் தன்பிள்ளையை தேடுவதுபோல, தன் மந்தையிலிருந்து காணாமற்போன ஆட்டை ஒரு மேய்ப்பன் தேடுவதுபோல, அவரை விட்டு தூரமாய்போன நம்மை, கர்த்தர் இயேசு தேடி அலைகிறார்.  நம் ஆண்டவர் மிகுந்த அன்புள்ளவர்; நம்முடைய அன்புக்காக ஏங்குகிறவர்; பாவ சாபத்தின் அடிமைத்தனத்திலும், சத்துருவின் பிடியிலும் நாம் சிக்கி பாதாளத்துக்குள் போவதை அவர் எப்படி தாங்கிக்கொள்வார்?ஆகவே தான், அவர் நம்மைத் தேடுகிறார்.*

*அன்பானவர்களே! லூக்கா 15-ம் அதிகாரத்திலே, மேய்ப்பன் ஒரு ஆட்டையும், ஒரு ஸ்திரீ தனது வெள்ளிக்காசையும், ஒரு அன்புள்ள தகப்பன் தன் இளைய மகனையும் இழந்து போகிறார்கள். அப்போது நடந்த ஒரு பொதுவான காரியம் என்னவென்றால், 3 பேரும் தாங்கள் இழந்ததை திரும்பவும் பெற்றுக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மிகுந்த சந்தோஷமடைகிறார்கள்; மட்டுமல்ல, தங்கள் சிநேகிதர்களோடும், அயலகத்தாரோடும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறார்கள். தொலைந்து போகாதவைகள் மேல் திருப்தியுற்று மகிழ்ந்திருப்பதை விட்டுவிட்டு தொலைந்துபோன ஒன்றை நினைத்து அவர்கள் மிகவும் துக்கமடைகிறார்கள். தங்கள் நிம்மதியை இழக் கிறார்கள்; அதை தேடிக் கண்டுபிடி க்க மிகவும் அலைந்துத்திரிந்து பிர யாசப்படுகிறார்கள்; தங்கள் நேரத் தை செலவிடுகிறார்கள்; அதை நி னைத்து அங்கலாய்க்கிறார்கள்; அ தை எப்போதும் தங்கள் சிந்தையி லே நிலைநிறுத்தி தேடுகிறார்கள். இதுபோலத் தான், இயேசுவின் வி லையேறப்பெற்ற இரத்தத்தால் மீட் டெடுக்கப்பட்ட நாம், அவரை விட்டு பின்வாங்கிப் போகும் போதும், அவ ரை மறந்து ஜீவிக்கும் போதும் அவ ருடைய இருதயம் துக்கமடைகிறது. மனந்திரும்புகிற ஒரு பாவியினிமி த்தம் பரலோகத்தில்மிகுந்த சந்தோ ஷம் உண்டாயிருக்கும் என்று இயே சு சொன்னார். அப்படியானால், தே வனை மறுதலித்து பின்வாங்கிப் போகிற ஒரு ஆத்துமாவின் நிமித்த ம் பரலோகம் துக்கமடைகிறது. மாத் திரமல்ல, தேவனும் அந்த ஆத்துமா வின் மேல் பிரியமாயிருக்க முடியா து (எபி.10:38). நாம் பிழைத்திருந்து அவருடைய நித்தியஜீவனை சுதந் தரித்துக் கொள்ளும்படியாகவே அ வருடைய விலையேறப்பெற்ற விசு வாசத்தைநமக்குள்தந்திருக்கிறார்.*




*பிரியமானவர்களே! இயேசு சொன் னார்: நானே நல்லமேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவ னைக் கொடுக்கிறான் (யோவா.10: 11). ஆவிக்குரிய வாழ்க்கையில் மட் டுமல்ல;உலகவாழ்க்கையிலும் நீங் கள்ஒன்றையும் இழந்துபோகாதபடி எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம் பூரணமுடையவர்களாய் வாழவே ண்டும் என்பதே தேவனுடைய விரு ப்பமாயிருக்கிறது; அதற்கு வேண்டி ய சகல கிருபையையும் உங்கள் வா ழ்க்கையிலே அவர் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார்(2கொரி.9:8). இந்தஉலகத்தின் சகல ஆசீர்வாதங் களும் உங்கள் வாழ்க்கையிலே நிர ம்பியிருந்தாலும்,இயேசு உங்களோ டு இல்லாமற் போனால், உங்கள் ஆ சீர்வாதம் பூரணப்பட்டதல்ல; அதே நேரத்திலே இயேசுஉங்களோடுகூட இருந்து, உலக ஆசீர்வாதங்கள் இல் லாமற்போனாலும் நீங்கள் பாக்கிய ம் பெற்றவர்கள் தான். சங்கீ.23:1-ல், கர்த்தர் என்மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் என்று வா சிக்கிறோமே. “நான் தாழ்ச்சியடை யேன்” என்பதின் பொருள், “தற்கா லத்திலும் வருங்காலத்திலும் நான் எதிலும் எந்தநேரத்திலும் குறைவுப டுவதேயில்லை; ஆகவே எதையாகி லும் நான் இழந்துவிடுவேனோ என் ற பயம் என்னில் இருக்கலாகாது” எ ன்பதாகும். நீங்கள் உங்கள் வாழ்க் கையிலே எந்தவொரு காரியத்தை யும் இழந்துபோகாமலிருக்க, முத லாவது நீங்கள் தேவனை உங்கள் வாழ்க்கையில் இழந்துபோகாமல் காத்துக் கொள்ளுங்கள். “நான் எவ் விதத்திலும் தேவனை இழந்துவிட க்கூடாது” என்பதே உங்களுக்குள் இருக்கவேண்டிய பிரதானகாரியம். ஆகவே, மனம் கலங்காதிருங்கள்! கொள்ளைநோயினால் நீங்கள் இழ ந்ததையெல்லாம் தேவன் இரட்டத்த னையாய் உங்களுக்கு திரும்பத் த ருவார்.இழந்த குடும்பஐக்கியத்தை பொருளாதாரத்தை,சமாதானத்தை, உடைமைகளை, ஆத்துமாக்களை மறுபடியுமாகநீங்கள் சுதந்தரித்துக் கொள்வீர்கள். பயப்படாதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India
*GP/PP/Mob: +917667709977.*


கர்த்தருக்கு காத்திருக்கிற அனுபவ ம் இருதயத்தை ஸ்திரப்படுத்தும்

*சங்கீதம் 31:24*

*"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்க ளே, நீங்களெல்லாரும் திடமனதா யிருங்கள். அவர் உங்களை ஸ்திரப் படுத்துவார்".*




*தேவபிள்ளையே! கர்த்தருக்காக கா த்திருக்கிறவர்களுக்கு தேவன் சில விசேஷித்தகாரியங்களை/நன்மை யானவைகளை வைத்திருக்கிறார். ஜெபிக்கிறஅனுபவம் வேறு; காத்தி ருக்கிற அனுபவம் வேறு. சிலர் நன் றாய் ஜெபிப்பார்கள், ஆனால், தேவ னுடைய வேளைக்காக காத்திருக்க மாட்டார்கள். ஜெபம் அநேக நேரங்க ளிலே நம்மை காத்திருக்கப்பண் ணுகிறது. காரணம், நம்முடைய வா ழ்க்கையிலே தேவன் செய்யவேண் டிய ஒவ்வொரு காரியங்களுக்கும் கர்த்தர் ஒரு நேரத்தை குறித்திருக் கிறார்.கானாவூர் கலியாணத்திலே திராட்சை ரசம் குறைவுபட்ட போது, திருமண வீட்டாரெல்லாம் கலங்கி நின்றார்கள்; இயேசுவினிடத்திலே அதை சொன்னபோது,அவர் உடனே குறைவை நிறைவாக்கிவிடவில் லை; மாறாக, அவர் சொன்ன பதில்:*

*“என்வேளை இன்னும் வரவில்லை” என்பதே. தன் சிநேகிதனாகிய லாச ரு மரித்துவிட்டார் என்று இயேசு கே ள்விபட்டு,உடனே அவர் ஓடிவந்துவி டவில்லை; மாறாக, அவர் மேலும் இ ரண்டு நாள் தங்கிவிட்டார். சிலநேர ங்களிலே நம்முடைய வாழ்க்கையி ல் அற்புதங்கள் நடைபெற கால தா மதமாகும் போது, தேவனுடைய வே ளை இன்னும்வரவில்லை என்பதே சரியான பதிலாகும். அப்படியானா ல்,தேவனுடைய நேரத்திற்காக நாம் பொறுமையோடு காத்திருக்க வே ண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையி லே பொறுமை என்பது மிகமிக தே வையான ஒன்று.இன்றைக்கு அநே கஆசீர்வாதங்களை வாழ்க்கையில் இழந்து போவதற்கு காரணம் தேவ னுடைய வேளைக்காக பொறுமை யோடு காத்திருப்பதில்லை. வேதம் சொல்கிறது: அவர் சகலவற்றையு ம் அதினதின் காலத்திலே நேர்த்தி யாக செய்திருக்கிறார் (பிர.3:11).*




*எனக்கன்பானவர்களே! தேவன், தா ன் முன்குறித்தநேரத்திலே காரியங் களை நமக்கு செய்யும் போது, அது மிகவும் நேர்த்தியாக, ஆசீர்வாதமா க,பூரண சமாதானமுள்ளவைகளாக காணப்படும்.தேவன் எதைக் கொடு த்தாலும் நம்முடைய சந்தோஷம் நி றைவாயிருக்கும்படி தருவார். மாத் திரமல்ல, நாம் விரும்புகிறதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமா ய் தருவார். நாம் விரும்பின காரிய ங்கள், விரும்பின நேரத்திலே வாய் க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால், அதிலே பூரணத்தை அ னுபவிக்க முடியாது. வேதம் சொல் கிறது:“நீங்கள்ஒன்றுக்கும் கவலை ப்படாமல், எல்லாவற்றையுங்குறித் து உங்கள் விண்ணப்பங்களை ஸ் தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தி னாலும் வேண்டுதலினாலும் தேவ னுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பி லி.4:6).நம்முடைய தேவைகளை தே வனுக்கு தெரியப்படுத்துவது மாத் திரம்தான் நமது வேலை; ஆனால் ஏ ற்றநேரத்திலே நம் விண்ணப்பத்தி ற்கு பதிலைத் தருவது கர்த்தருடை ய வேலை. நாம் கேட்கிற காரியங்க ள் நம்மைக்குறித்த தேவனுடைய சி த்தத்திற்கு ஏற்றவைகளாக இருக்க வேண்டும் (1 யோவா.5:14). அவைக ளை இயேசுவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்க வேண்டும்*

*(யோவா.16:23). இந்த பூமியிலே தே வசித்தத்தின்படி வாழ்கிற எவனும், தேவனுடைய வேளைக்காக நிச்ச யம் காத்திருந்து, பூரண சமாதானத் தோடு தேவனுடைய ஆசீர்வாதங்க ளை தங்கள் வாழ்க்கையிலே அனு பவிப்பார்கள்.அநேக நேரங்களிலே சாத்தான் நம்முடைய பொறுமை யை சோதிப்பான்.தேவனுடைய வே ளைக்காக காத்திருக்க விடமாட்டா ன். நம்முடைய சிந்தையை மயக்கி, உலக சிற்றின்பங்களையும், ஆடம் பரங்களையும் காண்பித்து,அதிலே விழவைத்துவிடுவான். ஆகவே தா ன் வேதம்சொல்கிறது: “ஏற்றகாலத் திலே தேவன் உங்களை உயர்த்தும் படிக்கு, அவருடைய பலத்த கைக்கு ள் அடங்கியிருங்கள்” (1 பேது.5:6).*




*பிரியமானவர்களே! யோபு பக்தனு ம்கூட தன் வாழ்க்கையிலே தனக்கு எப்போது மாறுதல் வரும் என்று ஏக் கத்தோடு காத்திருந்தார் (யோபு 14: 14).யோபு பக்தனுக்கு ஒரு தரிசனம் இருந்தது. தனது வாழ்க்கையின் போராட்டத்திற்கு ஒரு முடிவின் நா ளை தேவன் வைத்திருக்கிறார் என் று உறுதியாய் நம்பினான். ஆகவே தான், “எனக்குக் குறிக்கப்பட்ட போ ராட்டத்தின்நாளெல்லாம் நான் காத் திருக்கிறேன்” என்று சொல்கிறார். உங்கள் குடும்பத்திலே, கணவர் / ம னைவி/ பிள்ளைகள் வாழ்க்கையி லே, வேலைஸ்தலத்திலே ஒரு மாற் றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறீ ர்களா? என் தரித்திரம் /வியாதி பெ லவீனம் மாறாதா? என்பிள்ளைகளு க்கு ஒரு நல்ல காரியம் நடக்காதா? அநியாயமாய் அபகரிக்கப்பட்ட என் காரியங்களுக்கு ஒரு நியாயம் கி டைக்காதா? என்றெல்லாம் நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இருதயம் கலங்காதிருப்ப தாக! கர்த்தர் மேல் உங்கள் நம்பிக் கையை வையுங்கள். எப்பொழுதும் திடமனதாயிருங்கள். கர்த்தருக்கு மாத்திரமே காத்திருங்கள். நீங்கள் ஆராதிக்கிறதேவன் காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணுவார். க ர்த்தர் உங்களுக்கென்று தந்திருக் கிறவாக்குத்தத்தங்களைஉறுதியா ய் பற்றிக் கொள்ளுங்கள். விதைக் காமலும், அறுக்காமலும், நூற்காம லும் 40 வருஷக் காலம் நடந்துவந்த இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நடத்தவில்லையா? போஷிக்கவில் லையா? அதே தேவன் உங்களையு ம் நடத்துவார். வறட்சி நேரங்களிலு ம் உங்களை திருப்தியாய் நடத்துகி ற தேவன் ஒருவர் உண்டு. ஆகவே, சோர்ந்து போகாதிருங்கள்! உங்க ளுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*




தேவன் உங்களை உயர்த்துகிற/ ஆசீர்வதிக்கிறவிதம் மனுஷீக புத்திக் கெட்டாதது
*யோபு 42:12*

*"கர்த்தர் யோபின் முன்னிலைமை யைப் பார்க்கிலும் அவன் பின்னி லைமையை ஆசீர்வதித்தார்".*




*தேவபிள்ளையே! நம்முடைய தேவ ன் நம்மைஆசீர்வதிக்கிறவர் மாத்தி ரமல்ல, அவருடைய ஆசீர்வாதத்தி லே நம்மை பெருகப்பண்ணுகிறவ ர். யோபு பக்தனுடைய வாழ்க்கையி லே தேவன் ஆச்சரியமான,நம்பமுடி யாத உயர்வையும் ஆசீர்வாதத்தை யும், அதே நேரத்திலே எதிர்பார்த்தி ராததும் சகிக்க முடியாததுமான பா டுஉபத்திரவங்களையும் அனுமதித் தார். யோபு உத்தமன் தான்; சன்மார் க்கன் தான்; தேவனுக்கு பயந்தவர் தான்; பொல்லாப்புக்கு விலகினவர் தான்; அப்படியொரு நீதிமானுடைய வாழ்க்கையிலே ஏன் இந்தப் பாடுக ளும்உபத்திரவங்களும் இழப்புகளு ம் வந்தன? என்கிற கேள்வி நியாய மானதே. ஆனால், இதற்கெல்லாம் காரணம் யோபுபக்தன் செய்த பாவ மும் அக்கிரமும் அவபக்தியும், அவ னுடைய ஜெபக்குறைவுமே என்று அவனுடைய நண்பன் எலிப்பாஸ் த னது நிதானத்தை இழந்து, அவரை குற்றப்படுத்துகிறார். யோபுவின் நண்பர்கள் தங்களது மனுஷீகக் க ண்ணோட்டத்திலேயே யோபுவைப் பார்த்து, மனுஷீகமான வார்த்தைக ளையே சொல்லி யோபுவின் உள் ளத்தை ஈட்டியினால் குத்துவதைப் போல,தங்களது நியாயமற்ற வார்த் தைகளினால் அவரைக் குத்தி, அவ ருடைய இருதயத்தை காயப்படுத்தி இரணமாக்கி விட்டார்கள். யோபுவி ன் துயரம்நிறைந்த வாழ்க்கையின் பின்னணியில் தேவன் தம்முடைய மகாபெரிய திட்டத்தையும் நோக்கத் தையும் வைத்திருந்ததை அவர்க ளால் விளங்கிக்கொள்ளமுடியவில் லை.கர்த்தர் யோபுவை சோதிக்கவி ல்லை,சிறுமைப்படுத்தவில்லை, இ ழப்பைக் கொடுக்கவில்லை; ஆனா ல், சாத்தானுடைய சவாலுக்கு தேவ ன் யோபுவை ஒப்புக்கொடுத்தார்; சோதனையை அவர் வாழ்க்கையி லே அனுமதித்தார்; அதேநேரத்தில், அவர் ஜீவனை தமது கரத்தின் ஆ ளுகைக்குள்தான் வைத்திருந்தார். யோபுவிற்கு இருந்த மனத்தெளிவு கூட அவரதுநண்பர்களுக்குஇல்லா மற்போயிற்று.யோபுவின்நிதானமு ம்,பொறுமையும்,சன்மார்க்க வாழ்க் கையும், கர்த்தர் மேல் வைத்திருந்த உறுதியான விசுவாசமும், வைராக் கியமும் தான், தேவன் அனுமதித்த அவரது துயரத்தின்பாடுகளை கடந் துசெல்ல உதவியாயிருந்தது.*




*அன்பானவர்களே!கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்: “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக் குவார்;நீ கீழாகாமல் மேலாவாய்”(உ பா.28:14)என்பதே. ஒரு மனிதனுடை யவாழ்க்கையிலே ஆசீர்வாதமும் உ யர்வும் கனமும் தேவனால் உண்டா கிறது.ஆனால்,அந்த மனிதனின் வீ ழ்ச்சிக்கும்அழிவிற்கும் அவனேகார ணமாய் மாறுகிறான். ஆனால்,யோ பு தன்வாழ்க்கையிலே வீழ்ச்சியடை ந்தோ, அழிந்தோ போய்விடவில் லை.வீழ்ச்சியின் பாதையிலே தேவ ன் அவரை நடத்தினாலும், அவரை அழிவுக்கு தேவன் ஒப்புக்கொடுக்க வேயில்லை. யோபுவின் திரளான ஆஸ்தி, ஐசுவரியம், செல்வ வாழ்வி ன் மேல் சாத்தான் எப்போதும் கண் வைத்துக் கொண்டேயிருந்தான். அ வன் மேன்மையைக் கண்டு பொறா மைக்கொண்ட சாத்தான், தன்னால் அவனை ஒன்றும் செய்யமுடியாது என்பதை அறிந்து,நேரடியாக கர்த்த ரிடத்திலே போய் புகார் செய்யவும், அவரை சோதிக்கவும் உத்தரவு கே ட்டான். கர்த்தர் யோபுவின் ஜீவனை தவிர மற்ற எல்லாவற்றையும் தொ டுவதற்கு உத்தரவுகொடுத்துவிட்டா ர்.சோதனையும் ஆரம்பித்துவிட்டது. யோபுபக்தன்,தான்ஆராதிக்கிற தே வன் யார்?அவர் எப்படிப்பட்டவர்? தா ன் அனுபவித்த மகாபெரிய ஐசுவரி யத்திற்கு யார் காரணம்? என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆகவே தா ன், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எ டுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று தைரியமாய் அவரால் சொல்லமுடிந்தது. தன்னு டைய ஆஸ்தி, சொத்து, சுதந்தரங்க ள், பிள்ளைகள், மிருக ஜீவன்கள் எ ல்லாவற்றையும் இழந்தாலும் தேவ னை தன் வாழ்க்கையிலிருந்து அ வன் இழக்கவேயில்லை.*




*பிரியமானவர்களே! உங்களுடைய சுக/செல்வ வாழ்வைப்பார்த்து பொ றாமைக் கொண்ட சாத்தான், உங்க ளை நேரடியாகதொடமுடியாதபடியி னால் எப்போதும் தேவ சந்நிதியில் போய் உங்களைக் குற்றப்படுத்திக் கொண்டேயிருக்கிறான்.ஆனாலும் தேவன் உங்களை அவனுடைய அ ழிவின் கரத்திற்குள் ஒருபோதும் ஒ ப்புக்கொடுக்கவேயில்லை. பொல் லாத துஷ்டமனிதர்களின்ஆதிக்கம் உங்களை பயமுறுத்துகிறதா? சத்து ரு பலவழிகளிலே உங்களுக்கு வி ரோதமாக போராடுகிறானா? யோபு வின் வாழ்க்கையிலே சத்துருவின் ஆதிக்கத்திற்கு ஒரு எல்லையை க ர்த்தர் வைத்திருந்தார். அவன் முன் னிலைமையை பார்க்கிலும்பின்னி லைமையை கர்த்தர் இரண்டு மடங் காய் ஆசீர்வதித்தார்.எந்த மனிதர்க ளுக்குமுன்பாக வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றானோ,அதே மனிதர் கள் மத்தியிலே கர்த்தர் அவனையு ம் குடும்பத்தையும் தலைநிமிர்ந்து நிற்க செய்தார்.அவனது சோதனை நாட்களுக்குப் பிறகு,140வருஷம் அ வன் உயிரோடிருந்து 4 தலைமுறை யாக தனதுபிள்ளைகளின் பிள்ளை களைக் கண்டான். அதே தேவன் உ ங்களுக்கும் அற்புதங்களைச் செய் வார்.அவர் பட்சபாதமுள்ளதேவனல் ல. சத்துருவினால் இழந்த சகலவற் றையும் நீங்கள் இரட்டத்தனையாய் சுதந்தரித்துக் கொள்வீர்கள். துன்ப த்தைக் கண்ட நாட்களுக்கும், கண் ணீரைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உங்களை மகிழ்ச்சியாக்கு வார்.வியாதிஉங்களை பயமுறுத்து கிறதா? கடன்பிரச்சனை உங்களை சோர்வடையச் செய்கிறதா? நிந்தை அவமானத்தால் கூனிக்குறுகி நடக் கிறீர்களா? சரியான வருமானமின் றி தவிக்கிறீர்களா? மனம் கலங்கா திருங்கள்! தேவன் உங்களை ஒரு நாளும் சத்துருவுக்கு முன்பாக பரி யாசம்பண்ணவொட்டார். யோபுவி ன்வாழ்க்கையிலேகாணப்பட்ட பொ றுமையும், விசுவாசமும், உத்தம ஜீ வியமும் உங்கள்வாழ்க்கையிலே எ ப்போதும் காணப்படட்டும். ஏற்ற நே ரத்திலே தேவன் உங்கள் தலையை உயர்த்தி,உங்கள் சத்துருவுக்கு வெ ட்கத்தை உடுத்துவார். உங்கள் இரு தயம் கலங்காதிருப்பதாக! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*

*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*


தமக்காக காத்திருக்கிறவர்களை தீமையினின்று இரட்சித்து பாதுகாக்கிற தேவன்
*நீதிமொழிகள் 20:22*

*"தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்கு காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்"*




*தேவபிள்ளையே! கர்த்தருக்கு காத் திருக்கிற அனுபவத்தைக் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் தியானித்தோம். கர்த்தருக்கு காத்திருக்கும்போது நமக்கு கிடைக் கிறஒருபெரியபாக்கியம்இரட்சிப்பு. இந்த இரட்சிப்பின் அர்த்தம், புதிதா ய் ஒருவர் இயேசுவை ஏற்றுக் கொ ள்ளும்போது கிடைக்கிற இரட்சிப்ப ல்ல(NOT A SALVATION); கர்த்தர் நம் மை தப்புவித்து காப்பாற்றுவார் (HE WILL RESCUE AND SAVE US) என்பதாகு ம். ஆம், தம்மை நோக்கி உண்மை யாய்காத்திருக்கிற தம்முடைய பிள் ளைகளை தேவன்இரட்சிக்கிறவரா யிருக்கிறார். ஆபத்திலிருந்து, தே வையிலிருந்து, வியாதியிலிருந்து, கடன் தொல்லையிருந்து, தோல்வி யிலிருந்து, மன அழுத்தத்திலிருந் து/உளைச்சலிலிருந்து,பயத்திலிரு ந்து, நம்பிக்கையற்ற எந்தவொரு நிலைமையிலிருந்தும் கர்த்தர் நம் மை விடுவிக்கிறவராயிருக்கிறார். மற்றவர்களுக்கு தீமை செய்வதி னாலோ,பழிக்குபழிவாங்குவதினா லோ (அ) அவர்களை அழித்துவிட நி னைப்பதினாலோ நாம் நம்மை தப் புவித்துக்கொள்ளமுடியாது. மனுஷ ன் எதை விதைக்கிறானோ, அதை யே அறுப்பான் (கலா.6:7). தாவீது ப க்தன் சொல்கிறார்: கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அ வர் என்னிடமாய் சாய்ந்து, என் கூப் பிடுதலைக் கேட்டார் (சங்.40:1). கர்த் தர் உங்களுக்காக வழக்காட வேண் டுமேயானால்,யுத்தம்செய்ய வேண் டுமானால், நீங்கள் பொறுமையோ டு காத்திருங்கள். யுத்தம் என்பது ஏ தோ ஒருசிலநாட்களில் முடிந்துபோ வதில்லை; அது முடிய பல மாதங்க ள்/வருஷங்கள் ஆகும். கர்த்தர் உங் கள் காரியங்களிலே நியாயம்செய் ய வேண்டுமானால், நீங்கள் கர்த்த ருக்கே காத்திருங்கள்.*




*அன்பானவர்களே!நீங்கள் தேவசமூ கத்திலேபொறுமையோடு அமர்ந்தி ருப்பீர்களேயானால்,தேவன் நிச்சய ம்உங்களுக்கு வெற்றியைத் தருவா ர்.சத்துரு வெள்ளம்போல வரும்போ து,ஆவியானவர் உங்களுக்கு ஆதர வாகவும்,பிசாசுக்கு எதிராகவும் வெ ற்றிக் கொடியை ஏற்றுவார். இஸ்ர வேல் ஜனங்கள் வனாந்தரத்தில் அ ழிக்கப்பட்டதன் காரணம், அவர்கள் சீக்கிரமாய் தேவனுடைய கிரியை மறந்தார்கள்; அவருடைய ஆலோச னைக்கு காத்திருக்கவில்லை (சங். 106:13). உங்கள் வாழ்க்கையிலே தே வனுக்கும், அவருடைய ஆலோச னைக்கும் நீங்கள் காத்திருக்க வே ண்டுமானால்,தேவன் உங்கள் வாழ் க்கையில் செய்த, செய்துக் கொண் டிருக்கிற, செய்யப்போகிற அதிசய மான கிரியைகளையெல்லாம் எப் போதும் உங்கள் இருதயங்களிலே தியானித்து, சிந்தித்துக் கொண்டே யிருங்கள்; அதைக் குறித்து எப்போ தும் உங்கள் உள்ளம் தேவனை துதி த்துக் கொண்டேயிருக்கட்டும். ஒரு போதும் தேவன் செய்த அற்புதங்க ளை உங்கள் ஜீவியத்திலே மறந்து போகாதிருங்கள்.யாக்கோபுபக்தன் தன் அந்தியக்காலத்திலே தன் சந்த திகளையெல்லாம் ஆசீர்வதிக்கும் போது தேவன் தன்வாழ்நாட்களிலே செய்ததையெல்லாம் நினைத்தவ ராய், “என் பிதாக்களாகிய ஆபிரகா மும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவன், நான் பிறந்தநாள் முதல் இ ந்நாள் வரைக்கும் என்னை ஆதரித் து வந்த தேவன், எல்லாத் தீமைக்கு ம் நீங்கலாக்கி என்னை மீட்ட தேவ ன்” (ஆதி. 48:15,16) என்று நன்றி நி றைந்தஇருதயத்தோடு சொல்கிறா ர்; மாத்திரமல்ல, கர்த்தாவே, உம்மு டைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறே ன்(ஆதி.49:18)என்று நெகிழ்ச்சியோ டு குறிப்பிடுகிறார்.*




*பிரியமானவர்களே! இன்றைக்கு உங்கள் இருதயம் யாருக்காக, எதற் காக, என்ன அங்கலாய்ப்போடு கா த்திருக்கிறது? யோபு பக்தன், “நன் மைக்குக் காத்திருந்த எனக்குத் தீ மை வந்தது; வெளிச்சத்திற்கு காத் திருந்த எனக்கு இருள்வந்தது"(யோ பு 30:26) என்று சொல்கிறார். கர்த்தர் நிச்சயமாய் என் சூழ்நிலையை மா ற்றுவாரென்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட அனு பவங்கள் வந்திருக்கலாம். மனம் க லங்காதிருங்கள்!யோபுவுக்கு வந்த தீமையும், இழப்பும், இருளும் நிரந் தரமாக அவனை ஆளுகை செய்ய முடியவில்லை.தேவன் ஒருகுறிப்பி ட்ட நேரத்தை வைத்திருந்தார். நம்பி க்கையோடு காத்திருந்த யோபுவை தேவன்வெட்கப்படுத்தவேயில்லை; மாறாக, அவனை சோதிக்க நினை த்த சாத்தான் தான் இறுதியாக வெ ட்கப்பட்டுப் போனான். யோபுவை யோ, கர்த்தர் இரட்டத்தனையாய் ஆ சீர்வதித்து, மேன்மைப்படுத்தினார். அதே தேவன், நிச்சயமாய் உங்களு க்கும் அற்புதம் செய்வார்; தேவனு டையநேரத்திற்காக பொறுமையோ டு காத்திருங்கள். உங்கள் காத்திரு த்தல் வீண்போகவே போகாது; நிச் சயமாகவே உங்கள் எதிர்பார்ப்பு நி றைவேறும்; உங்கள் காரியங்கள் ந ன்மையாகவும், சமாதானமாகவுமே முடியும். நீங்கள் கடந்துபோகிற உப த்திரவத்தின் பாதையிலிருந்து தே வன் உங்களை கட்டாயம் விடுவிப் பார்; உங்கள் பெலவீனத்திலிருந்து ம் வியாதியிலிருந்தும் சுகப்படுத்தி உங்களையும்,உங்கள் குடும்பத்தை யும் அழிவுக்கு விலக்கிப் பாதுகாப் பார். சூழ்நிலைகளைப் பார்த்து கல ங்கிவிடாதிருங்கள்! சூழ்நிலைக ளையெல்லாம் அடக்கி ஆளுகிற தேவனையே நோக்கிப் பாருங்கள்; அவர் உங்களை எல்லா தீமையினி ன்று இரட்சித்து, தம்முடைய பரமரா ஜ்யத்தை அடையும்படி காப்பாற்று வார்.தைரியமாயிருங்கள்! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*

*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*


புதிய சிந்ததைகளை, எண்ணங்க ளை, குறிக்கோள்களை உனக்குள் உருவாக்குகிற தேவன்
*வெளி.21:5.*

*"சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கி றவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்".*

*தேவபிள்ளையே! கிறிஸ்துவுக்குள் வாழ்கிற ஒவ்வொருவரும் புதிய அனுபவங்களை தங்கள் அனுதின வாழ்க்கையிலே காண வேண்டும், அனுபவிக்கவேண்டும். வேதம் சொ ல்கிறது: ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கி றான்; பழையவைகள் ஒழிந்து போ யின, எல்லாம் புதிதாயின (2 கொரி.*

*5:17).பழைய துயரங்கள், பழைய வி யாதிகள், பழைய தோல்விகள், ப ழைய சிந்தைகள்,கஷ்டநஷ்டங்கள் யாவற்றையும் மாற்றி, புதிய இருத யத்தைத் தந்து, புதிய ஆவியை ஊ ற்றி, புதிய சந்தோஷத்தால் நம்மை நிரம்பப்பண்ண நம் தேவன் வல்ல வராயிருக்கிறார். ஒவ்வொரு நாளு ம் ஆவிக்குரிய புதியகாரியங்களை நம்முடையவாழ்க்கையிலே வாஞ்சி த்து, விரும்பித் தேடவேண்டும். ஒரு வன் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டா ல், முதலாவது தேவன் அவனுக்குள் தருவது புதியஇருதயம். ஒரு மனித னை இயக்குவது அவனுடைய இரு தயமே. இருதயத்தின் தோற்றம் எப் படியோ, அப்படியே அவன் ஜீவியமு ம் இருக்கும். ஆகவே தான் தாவீது ப க்தன் ஆண்டவரைப் பார்த்து கேட்கி றான்: “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவர மான ஆவியை என் உள்ளத்திலே பு துப்பியும்” (சங்கீ.51:10). காரணம், ப ழைய இருதயமானது சகலவித துர் கிரியைகளும், பாவக் கறைகளும், பொல்லாத எண்ணங்களும் நினை வுகளும் நிறைந்து காணப்படுவதா ல், அதை எடுத்துவிட்டு, பரிசுத்தம் நிறைந்த, நல்மனசாட்சி நிறைந்த, நற்சிந்தைகள் நிறைந்த இருதயத் தை அவனுக்குள் வைத்துவிடுகி றார்.*




*அன்பானவர்களே! உங்கள் இருதய த்தைக்குறித்து மிகவும்ஜாக்கிரதை யாயிருங்கள். ஆண்டவர் உங்கள் வாழ்க்கையிலே புதிய காரியங்க ளை,புதிய அபிஷேகத்தை, புதிய வ ரங்களை, புதிய கிருபைகளை தந் து உங்களை வழிநடத்தவேண்டுமா னால், இருதயத்தை எப்பொழுதும் புதிதாகவே வைத்துக்கொள்ளுங்க ள். எப்படி ஒரு பாத்திரத்தை நாம் ப யன்படுத்திவிட்டு, அதை நன்றாய் கழுவி சுத்தமாக்கி வைத்துக் கொ ள்ளுகிறோமோ, அதுபோல, திருக் குள்ளதும் மகா கேடுள்ளதுமான இ ந்த இருதயத்தை அனுதினமும் தே வசமூகத்திலே கொடுத்து, அவரு டைய இரத்தத்தினால் கழுவி, பரிசு த்தமாய் காத்துக் கொள்ளவேண்டு ம் என்கிற கரிசனை எப்பொழுதும் காணப்பட வேண்டும். அப்பொழுது தேவன் நம் இருதயத்திலே வாசம் பண்ண வருவார். அவர் வாசம்பண் ணுகிற ஸ்தலமாகிய இந்த இருதய த்திலே எப்பொழுதும் புதிதான அ னுபவங்களை,வல்லமைகளை,வர ங்களைத் தந்து, ஒரு மறுரூபமாக்க ப்பட்டஇருதயமாய் மாற்றிவிடுவார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீ ர்கள் என்பதை உங்கள் இருதயமே வெளிப்படுத்திவிடும்.*




*பிரியமானவர்களே! உங்கள் இருத யத்தை தேவனுக்குநேராக ஒருமுக ப்படுத்த முடியாமல், அவரை நோக் கிப் பார்க்க முடியாதபடி, உள்ளத்தி ன் பாரங்கள் உங்களை அழுத்துகி றதா? புதிய மாற்றங்களை, புதிய சிந்தைகளை,புதிய வாழ்க்கையை வாஞ்சித்தும், அவைகளை ஒரு எட் டாதக் கனியாக உணருகிறீர்களா? பாவத்தினால் கறைபட்டு, மனசாட் சியினால்வாதிக்கப்பட்டு,வேதனை யான ஒரு இருதயத்தோடு வாழ்ந்து க்கொண்டிருக்கிறீர்களா? ஆண்டவ ருடைய இரட்சிப்பைப் பெற்றும்கூட, அதில் பூரணமடைய முடியாமல் தடு மாறிக் கொண்டிருக்கிறீர்களா? கவ லைப்படாதிருங்கள்! உங்கள்வாழ்க் கையிலே ஒருநோக்கத்தோடு தான் ஆண்டவர் புதிய இருதயத்தை உங் களுக்குள் வைத்திருக்கிறார். தேவ னுடைய அநாதி தீர்மானமும் நோக் கமும் உங்கள் வாழ்க்கையிலே நி றைவேறாதபடி,தடுக்க நினைக்கிற சத்துருவின் சகல சதித்திட்டங்களு ம், அவனது ஆலோசனைகளும் நிச் சயமாகவே அழிக்கப்படும்.உங்களு க்குள் இருக்கிற சகலவற்றையும் புதிதாக்க தேவன் நினைத்திருக்கி ற திட்டங்கள் கட்டாயம் உங்கள் வா ழ்க்கையிலே ஒருநாள் நிறைவேறி யேதீரும்.உங்கள் சுபாவங்கள் மாறு ம். அநேகருக்கு வேதனையும் கண் ணீருமாய் இருந்த உங்களை, ஆண் டவர் ஆசீர்வாதமாய் மாற்றி, மற்றவ ர்களுக்கு ஒரு ஆறுதலின் பாத்திர மாய், கிருபாப் பாத்திரமாய் கர்த்தர் உங்களை பயன்படுத்துவார். உங்க ள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*

*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.