உனக்குள்இருக்கிற தேவனின் வல் லமைக்கு நிகரான வல்லமை இந்த உலகத்திலே ஒன்றுமேயில்லை
*செப்பனியா 3:17.*
*"உன்தேவனாகிய கர்த்தர் உன் நடு வில் இருக்கிறார்; அவர் வல்லமை யுள்ளவர், அவர் இரட்சிப்பார்".
*தேவபிள்ளையே! ஒன்றை உன் வா ழ்க்கையில் மறந்துபோகவே கூடா து.என்றைக்கு இரட்சகராகிய இயே சுகிறிஸ்துவை உன்சொந்த தெய்வ மாக,உன்வாழ்க்கையை நடத்துகிற வராக ஏற்றுக்கொண்டாயோ, அன் று முதல் அவர் உன் நடுவில்/ உன் வாழ்க்கை காரியங்களின் மையத் தில்இருந்து,தம்முடைய ஒப்பற்ற வ ல்லமையைக் கொண்டு இயக்கிக் கொண்டேஇருக்கிறார்.அவருடைய கிரியைகளெல்லாமே உருவாக்குவ தும் இரட்சிப்பதுமே ஒழிய, ஒருநா ளும் அழிப்பதோ அல்லது தோல்வி யில்நடத்துவதோ கிடையவே கிடை யாது. அநேக நேரங்களிலே, வாழ்க் கையின் மையத்திலே, தேவனுக்கு பதிலாக உன் பிராண சிநேகிதர்க ளோ(அ) உறவினர்களோ(அ) குடும் பத்தினர்களோ இருந்து,உன்னை ந டத்தும்போது,காரியங்கள் தோல்வி யில் முடியலாம்; பிரயாசங்களின் ப லனை அனுபவிக்க முடியாமற் போ கலாம். கர்த்தரை உன் வாழ்க்கையி ன் மையத்தில் வைத்து வாழும் போ து, உன் காரியங்கள் அனைத்தும் ஜெயமாய் முடியும். காரணம், அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவ ருக்குள் இருக்கிற மகா பெரிய வல் லமையை, இந்த உலகத்தின் எந்த வொரு மனித சக்திகளுடனோ (அ) அணு ஆயுத வல்லமைகளுடனோ ஒப்பிடவே முடியாது. கர்த்தர் உன் ந டுவில் வாசம்பண்ணும்போது,நீ எப் பேர்பட்ட முட்களின்(நெருக்கத்தின்) பாதையைகடந்துபோனாலும்,தேள் களின்/ சர்ப்பங்களின்(விஷக்கண் ணிகள்)நடுவே நடந்தாலும்,கர்த்தர் உன்னைப் பார்த்து சொல்கிறார்: நீ அவைகளுக்கு பயப்படவும் கலங்க வும் வேண்டாம்; நான் உன்னோடு, உன் நடுவில் இருக்கிறபடியால் அ வைகள் ஒன்றும் உன்னை சேதப்ப டுத்தாது (எசே.2:6).*
*அன்பானவர்களே! தேவனாகிய கர் த்தர் உன் நடுவில் வாசம்பண்ணும் போது, இரண்டு காரியங்கள் உன் வாழ்க்கையில் நடக்கிறது. முதலா வது, அவர் உனக்காகக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற் றும்படியாக, 2-வது உன்னை கைவி டாமல் காப்பாற்றும்படியாக (1 இரா ஜா.6:12,13).ஆண்டவர் கொடுத்த வா க்குத்தத்தங்கள் நிறைவேறாமல் ஆண்டுகள் உருண்டோடியிருக்க லாம். எல்லா சூழ்நிலைகளும் உன க்கெதிர்மாறாக உருவாகிக்கொண் டிருக்கலாம். மனிதர்களால் கைவிட ப்பட்ட நிலைமைக்கு நீ தள்ளப்பட்டி ருக்கலாம். பயப்படாதிருங்கள்! உன் னைஅழைத்தவர் உண்மையுள்ளவ ர்.அவர் உன் நடுவில் தான் இருக்கி றார். தேவனுக்காக வைராக்கியமா ய் வாழ்ந்த சாத்ராக், மேஷாக், ஆபே த்நெகோ அக்கினிச் சூளைக்கு ஒப் புக்கொடுக்கப்பட்ட போது, மனுஷர் களால் கைவிடப்பட்டவர்கள் போல தான் காணப்பட்டார்கள். ஆனால், ஏ ழு மடங்கு அக்கினி ஜுவாலையில், கர்த்தர் தம்முடைய ராஜரீக வல்ல மையோடு அவர்களைஇரட்சிக்க அ ந்த அக்கினி சூளையின் நடுவே இ றங்கி வந்தார். உலக அக்கினியின் வல்லமை, தேவவல்லமைக்கு முன் பாக மண்டியிட்டது. அக்கினியின் மனம்கூட அவர்களைத் தொடமுடிய வில்லை. அதே தேவன், உனக்கும் ஒரு அற்புதத்தை செய்வார். மனம் கலங்காதிருங்கள்!*
*பிரியமானவர்களே! கர்த்தர் தம்மு டைய ராஜரீக வல்லமையோடு உன் நடுவில் வாசம்பண்ணவேண்டுமே யானால்,உலகத்தின்/சாத்தானின்/ மாம்சத்தின்வல்லமைகள் உன்னை விட்டு வெளியேறியே ஆகவேண்டு ம். இப்பிரபஞ்சத்தின் வல்லமைக ளையும் சார்ந்துக் கொண்டு, தேவ வல்லமையையும் அனுபவிக்க வே ண்டுமென்று நினைப்பது தவறான ஒரு காரியம். வேதம் சொல்கிறது: மாம்சத்திற்கும், ஆவிக்கும் சம்பந்த மில்லை. “உன்னை சுற்றிலும் இரு க்கிற அந்நிய தேவர்களை (உலகத் தின் காரியங்களை)பின்பற்றாதிரு ப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உ ன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள் ள தேவனாயிருக்கிறாரே” (உபா. 6: 15). இப்பிரபஞ்சத்தின் கிரியைகள் கண்ணியிலே முடியும்; ஆனால் தெ ய்வீகக் கிரியைகளோ உனக்கு சுக வாழ்வைக்கொண்டுவரும்.உன்நடு வில் வாசம்பண்ணுகிற உன் தேவ னாகிய கர்த்தருக்குள் குணமாக்கு ம் வரங்கள் இருக்கின்றன; அற்புத ங்களை செய்யும் வல்லமை இருக் கிறது. ஆகவே உங்கள் இருதயம் க லங்காதிருப்பதாக! உங்கள் வாழ்க் கையிலே தேவன் செய்யப் போகிற இரட்சிப்பை தரித்துநின்று பாருங்க ள்.உங்கள் கண்கள் பூரித்து, இருத யம் மகிழ்ச்சியினால் நிரம்பும். உங் களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
உண்மையான மகிழ்ச்சியும் சந்தோ ஷமும் நிறைந்த இடம் தேவசமூகம் இருக்கிற இடம் மாத்திரமே"
ஏசாயா 56:7
"நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து, என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்.*
*தேவபிள்ளையே! நாம் ஞாயிற்றுக் கிழமைதோறும் தேவாலயத்திற்கு ஆண்டவரை வழிபடப் போகிறோம்; தரிசிக்கப் போகிறோம். ஆனால், உண்மையாகவே பரிசுத்த தெய்வத் தை வழிபட்டேன்,தரிசித்தேன் என்ற ஒரு திருப்தியோடு தேவாலயத்தை விட்டு நாம் திரும்புகிறோமா? என் றால் அநேகருடைய வாழ்க்கையில் அது இல்லவே இல்லை. இன்றைக் கு அநேகர் ஒரு பாரம்பரியத்திற்கா க திருச்சபைக்கு செல்லுகிறார்கள். கர்த்தர் சொல்கிறார்: "என் ஜெபவீட் டிலேஅவர்களைமகிழப்பண்ணுவே ன்".தேவாலயம்என்பதுஉண்மையா கவே ஆத்துமாவை களிகூரப்பண் ணுகிற ஒரு இடம். இந்த உலகம் தர க்கூடாத மகிழ்ச்சியையும் ஆனந்த த்தையும் அனுபவிக்கிற ஒரு இடம். அதுமட்டுமல்ல, தேவாதி தேவனை தரிசிக்கிற ஒருஇடம். வேதம் சொல் கிறது: "உம்முடைய சமூகத்தில் பரி பூரண ஆனந்தமும் உம்முடைய வல துபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங்.16:11). இந்த உலகத்தி லே ஒரு மனிதனுக்கு ஆனந்தத்தை யும் களிப்பையும் தரக்கூடிய ஏராள மான காரியங்கள் உண்டு. ஆனால், ஒரு பரிபூரண ஆனந்தமும், உண் மையான மகிழ்ச்சியும் தேவ சமூகத் திலே (தேவாலயத்திலே) மட்டும் தா ன்உண்டு.எனவேதான் பக்தன் சொ ல்கிறான்: "ஆயிரம் நாளைப் பார்க் கிலும் உமது பிரகாரங்களில் செல் லும் ஒரேநாள் நல்லது;என் தேவனு டைய ஆலயத்தின் வாசற்படியிலே காத்திருப்பதையே தெரிந்துகொள் ளுவேன்" (சங்.84:10).*
*அன்பானவர்களே! தேவாலயம் தே வமகிமையினால் நிரம்பியிருக்கிற ஒரு இடம். அவருடைய இரத்தத்தி னால் கழுவப்பட்ட தேவபிள்ளைகள் ஒன்றுகூடி தேவனை துதித்துப் பா டி,ஆராதிக்கும் போது பரலோக மகி மை அங்கே இறங்கி வருகிறது. பர லோகத்திலே கோடாகோடி தூதர்க ள் ஓயாமல்எப்பொழுதும் தேவனை துதித்து பாடிக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய துதியைப் பார்க்கி லும் தேவபிள்ளைகளாகிய நம்மு டைய துதி ஆராதனையில் அவர் மிகவும் மகிழுகிற தேவனாயிருக்கி றார். அவர் மனுஷர்களுடைய துதி யில் வாசம்பண்ணுகிற தேவன். ஒ ரு மனுஷன் எப்பேர்பட்ட பாவியாயி ருந்தாலும் அவன் தேவாலயத்திற் குள் வரும்போது பாவ மன்னிப்பின் நிச்சயத்தைபெற்று,விடுதலையோ டு கடந்துபோகிறான்.18 வருஷமாய் கூனியாயிருந்தஒருஸ்திரீ தேவால யத்திலே வந்து இயேசுவை சந்திக் கிறாள்.திரும்பிபோகும் போதோ அ வளுடைய கூன் மாறி,தலைநிமிர்ந் து நேராக நடந்து, கெம்பீரமாய் மகி ழ்ச்சியோடு துள்ளி குதித்தவளாய் போனாள். அன்னாள் என்ற ஒரு பெ ண்மணி மனக்கிலேசத்தோடு தே வாலயத்திலே வந்து, குழந்தை பாக் கியத்திற்காக ஜெபித்தபோது, அவ ளுடைய மலட்டுத்தன்மை நீங்கி,கர் ப்பத்திலே ஒரு பிள்ளையை சுமந்து க்கொண்டு திரும்பிப்போனாள்.*
*பிரியமானவர்களே! பலவிதமான தேவைகளோடும்,பிரச்சினைகளோ டும், அவமானத்தோடும், மகிழ்ச்சி யையும் ஆனந்தத்தையும் உங்கள் வாழ்க்கையில் இழந்து தவிக்கிறீர் களா? திருச்சபைக்கு போய் தேவ னைத் தேடி என்ன பயனைக் கண் டேன்? என்று வாழ்க்கையில் விரக் தியோடு தடுமாறிக் கொண்டிருக்கி றீர்களா? பாவத்தின் அடிமைத்தன த்தில் இருந்துக்கொண்டு, பரிசுத்த மான தேவனை எப்படி ஒரு திருச்ச பையில் போய் ஆராதிப்பது? என்ற ஒரு குற்றஉணர்வோடு வாழ்கிறீர்க ளா? உங்கள்இருதயம் கலங்காதிரு ப்பதாக! நம்பிக்கையோடு இன்றை க்கு ஆண்டவருடைய சமூகத்திற்கு கடந்து வாருங்கள். உங்கள் வாழ்க் கையிலிருக்கிற பெலவீனத்தை மா ற்ற அவர் ஒருவருக்கு மாத்திரம் தா ன் அதிகாரம் இருக்கிறது. உங்கள் நம்பிக்கைஒருநாளும் வீண்போகா து.நிச்சயமாகவே உங்கள் நம்பிக் கையை தேவன் கனப்படுத்தி, உங் கள் சூழ்நிலைகளை மாற்றி, உலக ம் தரக்கூடாத மகிழ்ச்சியினாலும் ச மாதானத்தினாலும் உங்கள் இருத யத்தை நிறைத்து,ஒரு புதிய வாழ்க் கையை உங்களுக்குத்தர ஆண்டவ ரால்முடியும்.இன்றைக்கே தேவசமூ கத்திற்கு ஓடிவாருங்கள். மாற்றத் தை அனுபவியுங்கள். உங்களுக்கா க ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
நம் வாழ்க்கையிலே இளைப்பாறுத லை கொண்டுவரும் கிறிஸ்துவின் மனத்தாழ்மை
*மத்தேயு 11:29*
*"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமா ய் இருக்கிறேன்; என் நுகத்தை உங் கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிட த்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப் பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக் கு இளைப்பாறுதல் கிடைக்கும்".*
*தேவபிள்ளையே!மனத்தாழ்மைக்கு சரியான ஒருமுன்உதாரணம் நம் அ ருமை இரட்சகர் இயேசு ஒருவரே. ம னத்தாழ்மையையோடு வாழ்கிற ஒ வ்வொருவருடைய வாழ்க்கையிலு ம் தேவன் இளைப்பாறுதலை கட்ட ளையிடுகிறார். இளைப்பாறுதலுக் கான சரியானவழி மனத்தாழ்மை எ ன்பதை அநேகர் அறிந்துகொள்ளா தபடியினால், தங்களுடைய பொரு ளையும் பணத்தையும் சுயபெருமை யையும் இறைத்து வக்கீல்களையும் டாக்டர்களையும், போலீஸ் அதிகாரி களையும், மந்திரிகளையும் விலை க்கு வாங்கிவிடுவேன் என்றுசொல் லி, முடிவில் தோல்வியடைந்து, தங் கள் வாழ்க்கையிலே இளைப்பாறு தலற்று அலைந்துதிரிகிறார்கள். ம றுபக்கத்திலே இயேசு நின்று, நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக் கிறேன். என்னிடத்தில் வந்து கற்று க்கொள்ளுங்கள் என்று அழைக்கி றார். நம் அருள்நாதர் இயேசுவின் மனத்தாழ்மை நம்உள்ளத்தையெல் லாம் உருக்குகிறது. அவர் மகிமை யின் இராஜாவாய் இருந்தபோதிலு ம்,சகலவற்றையும் சிருஷ்டித்த போ திலும் நமக்காகதாழ்மையோடு இந் தபூமிக்கு இறங்கிவந்தார். தாழ்மை யான மாட்டுக் கொட்டகை, தாழ்மை யான தச்சன்வீடு, தாழ்மையான ஊ ழியம், தாழ்மையோடு மற்றவர்களு க்கு செய்த அற்புதங்கள், தாழ்மை யான பேச்சு ஆகிய இவைகளெல் லாம் பிதாவின் தாழ்மையின் சிந் தையைப்பற்றி இந்தபூமியின் ஜன ங்களை சிந்திக்க வைக்கிறது. நரி களுக்கு குழிகளும், ஆகாயத்துப் ப றவைகளுக்கு கூடுகளும் இருந்த து.ஆனால் மனுஷக்குமாரனுக்கோ தலைசாய்க்கஇடமில்லை.சிலுவை யில் எத்தனையோ நிந்தைகள் அவ மானங்கள் பரிகாசங்கள் மத்தியில் அவர் தாழ்மையுள்ளவராகவே கா ணப்பட்டார். தேவனுக்கு சமமாயிரு ப்பதைக் கொள்ளையாடின பொரு ளாக எண்ணாமல் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார் (பிலி.2:6).*
*அன்பானவர்களே!ஒருமனிதன் இந் த உலகத்தின் சிற்றின்பங்கள், போ தை வஸ்துக்கள், குடிப்பழக்கம் போ ன்ற பாவப் பழக்க வழக்கங்களுக்கு ள்அடிமைப்பட்டுஉழன்று தனது மன அமைதியையும் நிம்மதியையும் இ ழந்துபோகின்றான்;அவன் ஜீவியம் இளைப்பாறுதலற்று தவிக்கிறது. ஆனால்,கிறிஸ்து இயேசுவுக்குள் த ன் வாழ்க்கையை அர்ப்பணித்துவி டும்போது, மன அமைதியோடும் இ ளைப்பாறுதலோடும் சாந்தமுள்ள ம னிதனாய் அவன் மாறிவிடுகிறான். காரணம்,கிறிஸ்துவிலிருந்த மனத் தாழ்மையும்சாந்தமும் அவனுக்குள் இளைப்பாறுதலையும் அமைதியை யும் சமாதானத்தையும் கொண்டுவ ந்துவிடுகிறது. ஆம், கர்த்தருடைய சமூகத்திற்குள்,அவருடைய பிரசன் னத்திலே நமக்கு இளைப்பாறுதல் உண்டு; வாழ்க்கையிலே சமாதான முண்டு.பாவ சிற்றின்பங்களின் பா ரங்களோ, களைப்பையும் சோர்வை யும் ஜீவியத்திலே கொண்டுவந்து ஆத்துமாவை முடக்கிவிடுகிறது. உ ள்ளம் கலங்கும்பொழுது ஒருபோது ம் குறுக்கு வழியில் சமாதானத்தை த்தேட முயற்சிக்காதிருங்கள். சிலர் மனஅமைதியைப் பெற சினிமா தி யேட்டருக்கும், மதுபானக் கடைகளு க்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் சென்று பணத்தைக் கொட்டி இளை ப்பாற விரும்புகிறார்கள். இது வேத னையை அதிகப்படுத்துமேயொழி ய,ஒருபோதும் தெய்வீக சமாதானத் தையும்,நிரந்தர சந்தோஷத்தையும் தந்துவிட முடியாது.*
*பிரியமானவர்களே! அன்றைக்கு இ ஸ்ரவேல்ஜனங்களுக்கு விரோதமா க சத்துருக்களும், விரோதிகளும் பெருகி சமாதானத்தை இழந்த நேர ங்களிலெல்லாம் தங்கள் முழு இரு தயத்தோடு கர்த்தரைத் தேடுகிறத ற்கு அவர்கள் ஒருமனப்பட்டார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு சுற்றுப்புறத்தாரால் யுத்தம் இல்லா தபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார்(2நாளா.15:12).உங்கள் வாழ்க்கையிலேயும் சாத்தான் பல விதமான வியாதி பெலவீனங்களி னாலும், கடன் பாரத்தினாலும், பில் லிசூனிய மந்திரத்தினால் உங்க ளைக்கட்டி அடிமைப்படுத்த முயற்சி க்கும்போது, உங்களால் முழு இருத யத்தோடு கர்த்தரைத் தேட முடிகிற தா? அவருடைய பிரசன்னத்தை அ னுபவிக்கமுடிகிறதா?தேவனுடைய இளைப்பாறுதலை உங்கள் எல்லை யிலே உணர முடிகிறதா? கிறிஸ்து இயேசுவுக்குள்இருந்த சாந்தமுள்ள ஆவியும், மனத்தாழ்மையின் ஆவி யும் உங்கள் இருதயத்தை நிரப்பட் டும்; அவருடைய இலகுவான நுகத் தை உங்கள்வாழ்க்கையிலே ஏற்று க்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் நு கமானது, மாம்சத்தின்/ பிசாசின்/ லௌகீக நுகங்களை மேற்கொள்ள வும், அவைகளை உங்கள் கால்களி ன்கீழ் அடிமைப்படுத்தி, கிறிஸ்துவு க்குள் ஒரு ஜெயமுள்ள வாழ்க்கை வாழ உங்களை பெலப்படுத்துகிற தாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை யிலிருக்கிறதான சகல தத்தளிப்பு களையும் மாற்றி, ஆவிக்குரிய இ ஸ்ரவேலர்களாகிய உங்களுக்கு இ ளைப்பாறுதலைக் கட்டளையிடப் போகிறேன்(எரே.31:2)என்று கர்த்தர் வாக்குக்கொடுக்கிறார். உங்களை அடிமைப்படுத்தின பிசாசின் சகல தாக்குதலிலிருந்தும் ஒரு நிரந்தர மான விடுதலையைத்தந்து,அமரிக் கையான/இளைப்பாறுதலான ஒரு வாழ்க்கைக்குநேராக உங்களை நட த்தப்போகிறார். மனம் கலங்காதிரு ங்கள்! உங்கள் இருதயம் எப்பொழு தும் கர்த்தரைத் துதித்துக் கொண் டே இருக்கட்டும்.உங்களுக்காக ஜெ பிக்கிறேன்.*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
ஆலோசனைத் தந்து வழிநடத்துவ தில் மிகவும் ஆச்சரியமான தேவன்
ஏசாயா 9:6
"கர்த்தத்துவம் அவர் தோளின் மே லிருக்கும்; அவர் நாமம்... ஆலோச னைக் கர்த்தர்".*
*தேவபிள்ளையே! நம்முடைய ஆண் டவருக்கு வேதத்திலே பல நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைக ளில் ஒன்று ஆலோசனைக் கர்த்தர். இயேசு பிறப்பதற்கு 900 ஆண்டுக ளுக்குமுன்பே அவருடைய நாமங்க ளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிச னமாக சொல்லியிருந்தார். அவை ஒவ்வொன்றும் அவருடைய குணா திசயங்களையும், சுபாவங்களையு ம் வெளிப்படுத்துகின்றன. அவரு டைய பெயர்களில் வாக்குத்தத்தம் உண்டு; அவர் நமக்காக என்னென் ன செய்வார் என்பதையும் அவை விளக்குகின்றன. நீர் என்னைக் கா ண்கிற தேவன் என்று பெயரிட்டாள் ஆகார்; ஜெபத்தை கேட்கிறவரே எ ன்று அழைத்தார் தாவீது; எலியாவி ன் தேவனாகிய கர்த்தர் என்று எலி சா கூப்பிட்டார்; தடைகளை நீக்கிப் போடுகிறவர் என்றார் மீகா தீர்க்க தரிசி. ஆம், நம் அருமை ஆண்டவரு டைய நாமத்தில் தான் எத்தனை வல்லமை! அவருடைய நாமத்திற்கு முன்பாக வானோர் பூதலத்தோர் பூ மியின் கீழானோருடைய முழங்கா ல் யாவும் முடங்குமே! இயேசு கிறி ஸ்துவே கர்த்தர் என்று நாவுகள் யா வும் அறிக்கைப்பண்ணும்படிக்கு, எ ல்லா நாமத்திற்கும் மேலான நாமத் தை பிதாவாகிய தேவன் அவருக்கு த்தந்தருளினாரே! (பிலி.2:10-11). மா த்திரமல்ல,அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,செயலில் மகத்து வமானவர்(ஏசா.28:29). இந்த உலகத் திலுள்ள ஒவ்வொருவருக்கும் முதி யவர்களின்/ அனுபவமிக்கவர்களி ன் / அறிவில் சிறந்தவர்களின் ஆ லோசனை நிச்சயமாய் தேவை. எல் லாவற்றிற்கும் மேலாக ஆண்டவரு டைய ஆலோசனையும் தேவை. வே தம்சொல்கிறது: தீர்க்கதரிசனம்/ஆ லோசனை இல்லாத இடத்தில் ஜன ங்கள் சீர்கெட்டு போவார்கள்(அ) வி ழுந்துபோவார்கள்(நீதி.11:14).தனது சொந்த ஆலோசனையின்படி நடக் கிறவனுடையவாழ்க்கை ஆபத்தில் தான் முடியும். மனுஷனுக்கு செம் மையாய் தோன்றுகிற வழிகள் அ நேகமுண்டு, அவைகளின் முடிவோ மரணவழிகள்.*
*அன்பானவர்களே! வேதத்திலே அ கித்தோப்பேல் என்ற ஒரு மனுஷன் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் ஆ லோசனைக்காரனாயிருந்தான். அ வனுடையஆலோசனைதேவனுடை ய வாக்குப் போல இருந்ததாம் (2 சா மு.16:23). ஆனால் அவன் தேவசித்த த்தை மீறிய போதோ கர்த்தர் அகித் தோப்பேலின் ஆலோசனையை அப த்தமாக்கிப் போட்டார்.அநேக நேரங் களிலே மனுஷர் சொல்கிற ஆலோ சனைகள் தேவசித்தத்திலிருந்து ந ம்மை பிரிக்கவைக்கும்;தேவஆலோ சனைக்கு நாம் செவிசாய்த்து, அவ ருடைய சித்தத்தை மாத்திரம் நிறை வேற்ற நாம் முயற்சிக்கும்போது, ம னுஷர்களுடைய துர்ஆலோசனைக் கு நாம் தப்பமுடியும். கர்த்தர் சொல் கிறார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டியவழியை உனக்கு க்காட்டுவேன்; உன்மேல் என் கண் ணைவைத்து,உனக்குஆலோசனை சொல்லுவேன்”(சங்.32:8); ஆம், உன் செய்கைகளையும், வழிகளையும் கர்த்தருக்கும், அவருடைய ஆலோச னைக்கும் ஒப்புவி; அவர்மேல் மாத் திரம் நம்பிக்கையாயிரு; அப்பொழு து உன் யோசனைகள் உறுதிப்படும்*
*(நீதி.16:3);அவரேஉன்காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்(சங்.37:5). ப ழையஏற்பாட்டு காலத்திலே ராஜாக் கள் யுத்தம்பண்ண செல்வதற்கு முன் கேட்கக் கூடிய மந்திர ஆலோச னைகள் உண்டு; திரியாவரக்காரரி ன் ஆலோசனை உண்டு; துன்மார்க் கரின் ஆலோசனைஉண்டு; துன்மா ர்க்கரின் ஆலோசனை அவனை வி ழப்பண்ணும் (யோபு 18:7); அவைக ள் சூதானவைகள் (நீதி.12:5) என்று வேதம் சொல்கிறது.*
*பிரியமானவர்களே!ஒருநாளும் சுய ஆலோசனைக்கு உங்கள் இருதயத் தையும் செவியையும் சாய விட்டுவி டாதிருங்கள். ஒருகுறிப்பிட்ட காரிய த்தில் உங்களுக்குஆலோசனை தே வையா? உங்கள் படிப்பு, வேலை, தி ருமணம், தொழில், வீடுகட்டுகிற/ வாங்குகிறகாரியங்களில் குழப்பத் தோடு இருக்கிறீர்களா? அந்த காரி யங்களில் தேவசித்தத்தை அறிந்து க்கொள்ள முடியாமல், முன்னெடுத் துச் செல்ல வழிதெரியாமல் கலங் குகிறீர்களா? பயப்படாதிருங்கள்! கர்த்தரைத் தேடுங்கள்; அவருடைய பாதத்தில் காத்திருந்தால், அந்தந்த காரியங்களை செய்து முடிப்பதற்கு வேண்டிய மிகஅருமையான, நேர்த் தியான ஆலோசனையை உங்களு க்குத் தருவார்; தம்முடைய சித்தத் தை வெளிப்படுத்துவார். தாவீது அ திகாலையில் எழும்பி கர்த்தரிடத்தி ல் ஜெபிக்கிறார்: “தேவனே, உம்மு டைய ஆலோசனையின்படி நீர் என் னை நடத்தும்; உம்மையே நம்பியி ருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம க்கு பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்லஆவி என்னை செ ம்மையான வழியிலே நடத்துவாரா க”(சங்.73:24; 143:8,10). தேவனுடைய ஆலோசனை மாத்திரமே உங்கள் வாழ்க்கையிலே நித்தியநித்தியமா ய் நிற்கும்; மனிதர்களின் ஆலோச னை உங்கள் வழிகளை தாறுமாறா க்கிப் போடும். துன்மார்க்கரின் ஆ லோசனைக்கு ஒருபோதும் செவி கொடாதிருங்கள்; வேத வசனங்க ளைவிட நல்லாலோசனைக் கொடு க்கிற ஒன்றும் இந்த உலகத்திலே கிடையாது. வேதஆலோசனையின் படி நடக்கிறவன் நீர்க்கால்களின் ஓ ரமாய் நடப்பட்டு,தன்காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிரு க்கிற மரத்தைப் போலிருப்பான்; அ வன் செய்வதெல்லாம் வாய்க்கும். கர்த்தர் தாமே வாழ்க்கையின் ஒவ் வொரு காரியங்களிலும் தமது தெ ய்வீக ஆலோசனையைத் தந்து உங்களை வழிநடத்துவாராக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
Thanks for using my website. Post your comments on this