Quotes
செடி, கொடி, மரங்களை பார்க்கும் பொழுது நான் பார்த்து வியந்தது ஒன்று. அதுவும் மலை பிரதேசங்களில் உயர நின்று பார்க்கும்போது பச்சை பசேல் என்கிற அந்த நிறம் என்னை வியக்கச் செய்திருக்கிறது.
பொதுவாக எல்லா இலைகளும் பச்சையாக நிறமாக தான் இருக்கின்றது. ஆனால் அந்த பச்சை நிறத்திலும் எத்தனை வித்தியாசங்கள்! எத்தனை அழகு!
எல்லா மனிதர்களும், மனிதர்கள் தான். ஆனால், அவர்களின் எண்ணங்களில், குணங்களில், வார்த்தைகளில், செயல்களில் தான் எத்தனை மாறுபட்ட வித்தியாசங்கள்!?
படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண், பெண்,உயர் பதவியில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் சரி சூழ்நிலைக்கு தகுந்தாற் போல், மனிதர்களுக்கு, பதவிகளுக்கு ஏற்றார் போல் வார்த்தைகளில், செயல்களில் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இது நல்ல மனிதனுக்கு அழகல்ல.
'நம்முடைய தேவனாகிய கர்த்தர் எப்போதும் மாறாதவராய் இருக்கின்றார் ( மல்கியா 3:6)'
கண்டித்து திருத்துவதிலும் ( யோவான் 16:8), மன்னிப்பதிலும் மாறாதவர். அன்பில் அவர் மாறாதவர்'. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்( ரோமர் 4:21) ஆம், அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2 தெச 5:24).
- சகோ.எமல்டா
To Get Daily Quotes Contact +917904957814
Quotes
வேதத்தில் மகதலேனாமரியாள் என்னும் ஒரு பெண்ணின் பயணம் அருமையானது. ஓடிப்போய் அவருடைய பாதங்களை பிடித்துக் கொள்வதும், தஞ்சம் புகுவதும் அவளுக்கு விருப்பமாய் இருந்தது.
இயேசு, சீமோன் என்பவனின் வீட்டிற்கு சென்றிருந்த போது, மரியாள் விலையேறப் பெற்ற சுத்தமான நளதம் என்னும் தைலத்தைக் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்து ( யோவான் 12:3) பாதங்களை முத்தம் செய்கின்றாள் (லூக்கா 7:45).
அவளுடைய வீட்டிற்கு இயேசு சென்றிருந்த போது, மார்த்தாள் வீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருக்க மரியாளோ அவருடைய பாதத்தருகே உட்கார்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்( லூக்கா 10:39)
தன் சகோதரன் லாசர் இறந்த பின்பு, இயேசு வந்திருக்கிறார் என்று சொல்லக்கேட்டதும், ஓடிவந்து அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான் ( யோவான் 11:32) என்கிறாள்.
சிலுவையில் அறையுண்டு மரித்த யேசுவின் பாதங்களை தொடுவதற்கு ஏங்கியிருப்பாள் போலும்! அவளும் அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்
( மத் 27:56)
அதிகாலையில் இருட்டோடே எழுந்து கல்லறைக்கு ஓடுகிறாள்( மாற்கு16:9) இயேசு, அவளை நோக்கி,"ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? என்று கேட்கிறார். அவர் மீண்டுமாய் ' மரியாளே' என்றதும் அங்கும் அவரின் கால்களை கட்டிக்கொள்ள விரும்பியிருப்பாள் போலும்! ஆகவே தான் 'என்னைத் தொடாதே' என்றார்( யோவான் 20:17)
பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்த அந்த அழகிய பிஞ்சு பாதங்களை நீங்கள் பிடித்ததுண்டா? மன்னிப்பு வேண்டி பாதத்தை பிடித்து கண்ணீரால் கழுவியதுண்டா?
வேதத்தின் மறையுண்மைகளை தெரிந்துக்கொள்ள, காத்திருக்கும் நல்ல பங்கை பெற்றுக் கொள்கிறீர்களா? அவரின் சத்தத்தை கேட்க பிரியப்படுகிறீர்களா?
அந்த சிலுவை மரணம் இரட்சிப்பின் உண்மையை விளங்க செய்கிறதா? சுவிசேஷம் அறிவிக்க பயணப்படுகிறீர்களா?
மரியாளின் பயணம் போல், இயேசுவின் பாதங்களை பிடித்துக் கொள்ளும் பயணமாக இருந்தால், மரியாளை வெறுமையாய் விட்டு விடாதவர், உங்களையும் விடமாட்டார்.
_சகோ.எமல்டா
To Get Daily Quotes Contact+9178148663456
Quotes
ஆலயத்திலும் சந்தோஷம் இருக்கிறது
தியேட்டரிலும் சந்தோஷம் இருக்கிறது
சபையிலும் மகிழ்ச்சி இருக்கிறது
டாஸ்மாக்கிலும் மகிழ்ச்சி இருக்கிறது
தேவனுடைய மந்தையிலும் இன்பம் இருக்கிறது
களியாட்டுக் கூடங்களிலும் இன்பம் இருக்கிறது
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
அது மண்ணிலிருந்து வருவது
இது விண்ணிலிருந்து வருவது
அது தற்காலிக மகிழ்ச்சி
இது நிரந்தர மகிழ்ச்சி
அது பொய் சந்தோஷம்
இது மெய் சந்தோஷம்
அது தேங்கின குட்டை
இது நித்திய நீரூற்று.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
Quotes
சிந்தனைத் துளிகள்....
ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில், பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்’ சொன்னான் அது வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ என்று....
பிரியமானவர்களே!!!
அழுக்கை, வீட்டு ஜன்னலில் வைத்துக் கொண்டு அடுத்தவளை குறை சொல்வது போல் இன்று நாமும் இப்படித்தான் நம்மிடத்தில் குறைகளை வைத்து கொண்டு மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரிகிறோம். முதலில் ஜன்னல் என்கிற நம் இருதயத்தை துடைக்க வேண்டும் அப்பொழுதுதான் மற்றவர்களின் இருதயத்தை புரிந்து கொள்ள முடியும். குறை என்பது வைரஸ் போன்றது, அதை பரவ விட்டால் நம்முடைய மனதையே அரித்து விடும்.
To Get Daily Quotes Contact +917904957814
Quotes
சிந்தனைத் துளிகள்...
இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை.
இந்த இலவங்கப்பட்டை உணவுப் பொருள்களை பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் (Phenol) என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை, உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கின்றது.
பிரியமானவர்களே!! பினால் (Phenol) என்னும் வேதிப்பொருளைக் கொண்டு பாக்டீரியா வளர்வதை தடுக்கும் தன்மையை இயற்கையான மரத்திற்கு கொடுத்த கர்த்தர், அவருடைய சாயலாக படைத்த நமக்கு அந்த வல்லமையை கொடுத்திருக்க மாட்டாரா??
எப்படி ஒரு இலவங்க பட்டையானது உணவு பொருளை மணக்க செய்கிறதோ, அப்படித்தான் கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் இருக்கும்போது அது ஜீவ வாசனையாக வெளிப்படும். அந்த வர்த்தைகள் தான் பாக்டீரியா போன்ற பொல்லாத பிசாசுகளை அழித்துபோட வல்லமையுள்ளதாய் இருக்கிறது.
வேதம் இப்படியாக சொல்கிறது..
II கொரிந்தியர் 2:14 & 16 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
To Get Daily Quotes Contact +917904957814
Quotes
வேலைக்காரர்கள் யாருமில்லை
ஆனால்
எஜமான் என்று அழைக்கப்பட்டார்.
டிகிரி எதுவும் பயிலவில்லை
ஆனால்
போதகர் என்று அழைக்கப்பட்டார்.
மருத்துவம் பயிலவில்லை
ஆனால்
குணமாக்குபவர் என்று அழைக்கப்பட்டார்.
இராணுவம் எதையும் கொண்டிருக்கவில்லை
ஆனால்
ராஜாக்கள் அநேகர்
அவரைக்கண்டு நடுங்கினர்.
யுத்தம் ஏதும் செய்யவில்லை
ஆனால்
உலகத்தை ஜெயித்தார்.
குற்றம் ஏதும் செய்யவில்லை
ஆனால்
சிலுவையில் அறையப்பட்டார்
கல்லறைக்குள் வைக்கப்பட்டார்
ஆனால்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
கல்லறை அவரை
கட்டிவைக்க இயலவில்லை
இன்றும் ஜீவிக்கிறார்.
அவர்தான் இயேசு
அவரையே பேசு.
- ப.பி.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
Thanks for using my website. Post your comments on this