Quotes
கீழ் நீதிமன்றம்
அப்புறம்
உயர்நீதி மன்றம்
அப்புறம்
உச்சநீதி மன்றம்
அப்புறம்
சர்வதேச நீதிமன்றம்
அப்புறம்
?????!!!......
பரலோக நீதிமன்றம்
ஆம்
தேவனது நீதிமன்றமே
உச்சபட்ச அதிகாரம் கொண்டது.
காத்துகிட்டு இருக்கு
நியாயத்தீர்ப்பின் நாள்.
அங்கே
இலஞ்சம் கொடுத்து
தப்பிக்க முடியாது
சிபாரிசு செய்து
மீள முடியாது
செய்த தப்புக்கேற்ற
தண்டனை நிச்சயம்
இதை உணர்ந்து
இன்றே மனந்திரும்பினால்
உண்டு வாழ்வு
இல்லையேல் உண்டு
நிச்சயம் சாவு.
By Bro Durai Dainel
To Get Daily Quotes In What's App Contact +917904957814
Quotes
கர்த்தருக்கென்று நாம் கொடுக்கும் காணிக்கை எத்தகையதாய் இருக்கிறது? பணமும், பொருளும் காணிக்கையாக கொடுத்துவிட்டால் போதுமா?
தேவன் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றார். அது வித்தியாசப்படும். எல்லோரும் பணமும் பொருளும் காணிக்கையாக கொடுத்து விடுவது என்பது எளிது. அவர் எதிர்பார்ப்பதை கொடுப்பது என்பது சற்று அதிகமாக கடினமானதாகக் கூட இருக்கலாம்.
ஆபிரகாமினிடத்தில் பிறந்த மகனை தேவன் பலியாகக் கேட்கும் போது, ஒரு சாதாரண மனிதனாக அவரின் உள்ளம் தாங்கமுடியாத துயரம் அடைந்திருக்கும்.
மோரியா மலைக்கு தன் மகனை பலியிட அழைத்துச் செல்லும் ஆபிரகாமின் பயணம் அவ்வளவு எளிதானதல்ல.
மகனைக் கொன்று அந்த இரத்தத்தை ருசிபார்க்கும் தேவன் நம்முடைய தேவன் அல்லவே. ஆனாலும் காணிக்கையாக பலியை கேட்கிறார் என்றால், ஆபிரகாமின் விசுவாசம் மற்றும் கீழ்படிதலுக்கான பரீட்சை மட்டுமே நடந்தேறியிருக்கிறது.
நாம் நம்முடைய பிள்ளைகளை தேவனுக்கென்று, மிஷனரி பணிக்காக அனுப்ப விருப்பம் கொள்கிறோமா? தகப்பன் ஊழியம் செய்தால் மகனும் அதையே தொடர்வது என்பது வேறு. சாதாரண விசுவாசிகளை விடுங்கள். ஊழியர்களின் குடும்பங்களில் எத்தனை பேருடைய பிள்ளைகள் மிஷனரி பணிகளை செய்கின்றனர்?
ஒன்று,உலகத்தின் பட்டம் பதவி மற்றொன்று தனக்கு பின் தன் ஊழியத்தை ஏற்று நடத்துவது என்று தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம் இல்லையா? இதுவும் ஒரு விதமான சுகமான வாழ்வு தான்.
போராட்டங்கள், இழப்புகள், வறுமையை சுமந்து கொண்டு தேவனுக்கென்று ஆத்தும அறுவடை ஒன்றே மூலதனம் என்றும் சுவிசேஷம் மூச்சாகவும், உயிர் துச்சமாகவும் நினைத்து ஓடுகின்ற கூட்டத்தில் நாமோ நம் பிள்ளைகளோ இல்லை.
உன் மகனை பலியாகக் கொடு என்று ஆபிரகாமினிடத்தில் கேட்ட அதே காணிக்கையை தேவன் உங்களிடத்திலும் கேட்கிறார். உன்னைக் கொடு, உன் பிள்ளையை கொடு என்று.
அவருடைய சுவிசேஷ பணிக்காக, ஆத்தும அறுவடைக்காக, அழிந்து போகும் மக்களை மீட்க அழைக்கிறார். என்றோ ஒருநாள் நாம் சாகத்தான் வேண்டும்.. அது தேவனுக்காக இருந்துவிட்டு போகட்டுமே!
' வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்..
மரித்தாலும் என் இயேசுவுக்காய்..'
வாழ்ந்து தான் பார்ப்போமே!ஆபிரகாமின் பணத்தில் கூட இருந்து தைரியமாய் வழிநடத்தினவர் நம்முடைய பயணத்திலும் கூட இருப்பார்.
- சகோ.எமல்டா
To Get Daily Quotes Contact +917904957814
Quotes
யாக்கோபு கூடாரவாசி
ஏசா வனசஞ்சாரி
யாக்கோபு பலிபீடம் கட்டி தொழுதுகொள்பவன்
ஏசா
வேட்டையாடி
பிழைப்பு நடத்துகிறவன்
யாக்கோபு
வாக்குத்தத்தங்களுக்கே
முக்கியத்துவம் அளிப்பவன்
ஏசா
வயிற்றுப் பசிக்கே
முக்கியத்துவம் கொடுப்பவன்
விளைவு
ஏசா தன்
சேஷ்டபுத்திர பாகத்தை இழந்தான்
உலக தகப்பனின் ஆசீர்வாதத்தை இழந்தான்
உன்னத தகப்பனின்
உறவை இழந்தான்
வாழ்நாளெல்லாம்
வாக்குத்தத்த சந்ததிக்கு
விரோதியாக வாழ்ந்தான்.
யாக்கோபு
இளையவனாயிருந்தும்
மூத்தவனை ஆண்டான்
உலக தகப்பனின் ஆசீர்வாதத்தையும்
உன்னத தகப்பனின்
உறவையும் அனுபவித்தான்
எல்லாவற்றுக்கும் மேலாக
இஸ்ரவேல் என்னும் பெயரை
தேவன் வாயால் பெற்று
யூதர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என
உலகத்தின் முக்கால்வாசி பேர்
சொந்தம் கொண்டாடும்
நித்திய கீர்த்தி பெற்றான்.
ஆவிக்குரியவன்
அழிவதே இல்லை
மாம்சத்துக்குரியவன்
வாழ்வதே இல்லை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
Thanks for using my website. Post your comments on this