Type Here to Get Search Results !

Quotes of Success | Life Motivation Verses | வெற்றிக்கான சிந்தனைத் துளிகள் | Jesus Sam

Quotes

எது எழுப்புதல்?

தூங்கிக்கொண்டிருக்கும்

முழங்கால்களும்

உறங்கிக்கொண்டிருக்கும்

உதடுகளும்

உயிர் பெற்று எழுவதே எழுப்புதல்.

பூட்டிக் கிடக்கும் தேவாலய கதவுகளும்

அடைத்துக் கிடக்கும் ஊழியர்களின் செவிகளும்

அகலமாய் திறப்பதே எழுப்புதல்.

விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரங்களும்

சாய்ந்துகிடக்கும் மோசேயின் கோல்களும்

திரும்பவும் நிலைநிறுத்தப்படுதலே எழுப்புதல்.

ஒளிந்துகிடக்கும் சுவிசேஷப் புலிகளும்

பதுங்கிக் கிடக்கும் பிரசங்க சிங்கங்களும்

எழுந்து கர்ஜித்தலே

எழுப்புதல்.

கவர்ச்சிப்புயல் வீசும் களியாட்டு மன்றங்களும்

உல்லாச வெறியூட்டும் சினிமா அரங்கங்களும்

கர்த்தரின் வேதம் ஏந்தி

ஜெபதூபம் காட்டும் கூடங்களாய் மாறுதலே

எழுப்புதல்.

By Bro Durai Dainel

To Get Daily Quotes Contact +917904957814

Quotes
தேவனுடன் நாம் வைத்திருக்கும் உறவின் வலிமைக்கு அடிப்படை அம்சங்கள் இரண்டு. ஒன்று ஜெபம். இன்னொன்று வேத வாசிப்பு மற்றும் தியானம். அவை இரண்டும் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இரண்டு கண்கள்.

தேவனுடைய வார்த்தையை அதாவது வேதத்தை எவ்வளவு அதிகமாய் அறிகிறோமோ அவ்வளவு அதிகமாய் நாம் தேவ உறவிலும் வளர்வோம்.

உணவானது எப்படி சரீரத்துக்குள் சென்று செரித்து, உடல் முழுவதும் பரவி சக்தியாக மாறி நமக்கு பெலன் தருகிறதோ அதைப் போல நம் ஆவிக்குரிய உணவாகிய களங்கமில்லாத ஞானப்பால் ஆன தேவ வசனமும் நம் ஆவி முழுவதும் பரவி பரம உறவில் வளர தேவையான சக்தியை அளிக்கிறது.

ஜெபமும், வசனமும் இணையும்போது அளப்பரிய சக்தி நம் ஆத்துமாவுக்கு கிடைக்கிறது. அதன் ஒளி பிழம்பில் இருளின் சக்திகள் ஓடி ஒளிந்துகொள்கின்றன.

இரவில் தூங்குவதற்கு முன்

உனது பெயரை

உச்சரித்து மகிழ்கிறேன்

ஏன் தெரியுமா?

மூடிய கண்கள்

மூடியே விட்டால்

கடைசியாக உச்சரித்ததும்

உன் பெயராகத்தான்

இருக்கவேண்டுமென்பதற்காக..

இப்படி ஒரு கவிதையை என் பள்ளி பருவத்தில் படித்தேன். அர்த்தம் தெரியாமலே மனதில் பதிந்தும் போனது.காலங்கள் ஓடினாலும் வார்தைகள் இன்று வரை மனதில் இருந்து அகலவில்லை.

இரவில் தூங்குவதற்கு முன் 'உமது திருப்பெயரை' உச்சரித்து மகிழ்கிறேன் என்று மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கண்விழித்தாலும், கண்ணை மூடினாலும் என் ஆண்டவராகிய இயேசுவின் பெயரை மாத்திரமே உச்சரித்து மகிழ்கிறேன். இது என் இறுதி மூச்சிலும் உச்சரிக்க விரும்புகிறேன்.

தேவபக்தியுள்ள மனிதராக, எந்நேரமும் வேதம் வாசித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மனிதரான என் அப்பா, மரணிக்கும்முன் கடைசியாக 'இயேசுவே' என்று சொல்லி உயிர்விட்டார்.

காலையில் நடந்து சென்றவர், சிறிது நேரம் கழித்து தாம் இறந்துவிடுவதாக எண்ணியவர், ஆலயத்திலிருந்து குருவானவரை வரவழைத்து, திருவிருந்து ( நன்மை)வாங்கி, மற்றவர்களை தனக்காக ஜெபிக்க செய்தார்.மாலையில் 'இயேசுவே' என்று சொல்லி அழகாக மரித்தார்.

இன்று கத்தோலிக்கர் பலர் இப்படி இருப்பதில்லை. அவரின் வார்த்தையை ஒதுக்குவதும், அவரின் பெயரை சொல்ல மறுப்பதையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அப்பெயரின் வலிமையை உணராதிருக்கிறார்கள் என்பதே முற்றிலுமான உண்மை.

ஒவ்வொரு முறையும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவருடைய பரிசுத்த, விலைமதிப்பில்லா, அவரின் திருப்பெயரை உச்சரித்துப் பாருங்கள்..உடலும் மனதும் நம்மை என்னவோ செய்யும்.. அவ்வளவு அழகான பெயர் ' இயேசு' என்கிற என் ஆண்டவரின் பெயர்.
- சகோ.எமல்டா

To Get Daily Quotes Contact. +917904957814

Quotes
நோயாளிகளுக்காக ஜெபித்தும் குணமாகாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம்.

அவர்களது அவிசுவாசம் காரணமாக இருக்கலாம்.

மருத்துவ சிகிச்சையினால் குணமாகட்டும் என்று தேவன் விரும்பலாம்.

நோயாளிக்கோ அல்லது அவர்களுக்காக ஜெபிப்பவனுக்கோ ஏதாவது ஒரு பாடத்தை கற்றுத்தர தேவன் சித்தம் கொண்டிருக்கலாம்.

நோயாளியை ஏதோ ஒரு காரணத்துக்காக தன்னிடம் அழைத்துக்கொள்ள தேவன் விரும்பலாம்.

ஜெபிக்கும் ஊழியனுக்கு அவனுக்கு அருளப்பட்ட வரங்களால் உண்டான பெருமையை உடைத்து நொறுக்க கர்த்தர் எண்ணம் கொண்டிருக்கலாம்.

எனவே சோர்ந்து போகாமல் ஜெபிப்பதும், அவிசுவாசம் கொள்ளாமல் இருப்பதும், ஆணவம் கொள்ளாமல் வாழ்வதும் நம் கடமையும், பொறுப்புமாகும்.

நூறு சதவீதம் உழைப்பை கொடுப்போம்

மற்றதெல்லாம் தேவ சித்தம்.

அமைதிகொள்வோம்

ஆனந்தமடைவோம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.