Type Here to Get Search Results !

quotes on leadership | Tamil Motivation Message | சிந்தனை துளிகள் | Jesus Sam

Quotes

அவரை சிலுவையில் அறைந்தது

யூதர்களும்

ரோம அரசாங்கமும்

மட்டுமல்ல




நீயும் நானும்தான்.




உன் பாவங்களும்

என் பாவங்களும் சேர்ந்தல்லவா

அந்த புண்ணியநாதரை

சிலுவை மரத்தில் ஏற்றின.




மகிமையில்

பிதாவின் மடியில்

கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தவரை

கழுமரத்தில் ஏற்றி சிதைத்தது

நம் பாவங்கள் அல்லவா




பரலோக மாணிக்கத்துக்கு

பூலோக சேற்றை பூசிவிட்டவர்கள்

நாம் அல்லவா




பாவமென்றால் என்னவென்றே அறியாத

பரிசுத்த தெய்வத்தை

பாவபாரம் சுமக்க வைத்த பாவிகள்

நாம் அல்லவா




சதாகாலமும்

பொற்கிரீடம் சூடியிருந்த அத்தலையில்

முள்முடியை சூட்டியவர்கள்

நாம் அல்லவா




எப்பொழுதும் பரலோகஜீவிகளின்

துதிகளை வாங்கிக்கொண்டிருந்தவரை

கசையடியும் வசையடியும்

வாங்க வைத்தவர்கள்

நாம் அல்லவா




சர்வலோகத்தையும் சுமந்து திரிந்தவரை

சிலுவைமரம் சுமந்து திரியவைத்தவர்கள்

நாம் அல்லவா




பரலோகில் மகிமையின் வஸ்திரமணிந்து உலாவியவரை

பூலோகில் அந்தரங்க கோலத்தில்

தொங்கவிட்டது

நாம் அல்லவா




சதாகாலமும் இனிப்பான வாக்குத்தத்தங்களை

தந்த மதுரவாய்க்கு

கசப்பான காடியை

புசிக்க கொடுத்தது

நாம் அல்லவா




வானமும் பூமியும் கொள்ளாத

மகிமையின் இறைவனை

கருவறையிலும் கல்லறையிலும்

அடைத்து வதைத்தது

நாம் அல்லவா




இத்தனை கொடுமைகள் செய்தும்

இரட்சிப்பும் அபிஷேகமும்

பரலோக பாக்கியங்களும் தந்து நம்மை

அழகு பார்ப்பவர் அவரல்லவா




இந்த நாளிலே

அவரையல்லாமல்

யாரை நீ சிந்தனை செய்வாய்




இந்த நாளில் மட்டுமல்ல

எந்த நாளிலும்

நம் சிந்தையிலும் மந்தையிலும்

நீக்கமற நிறைந்திருப்பது

எம்பெருமான் இயேசு கிறிஸ்துவே.


By Bro Durai Dainel

To Get Daily Quotes Contact +917904957814



Quotes
பரலோக பாதை

ஒற்றையடி பாதை

அதில் நடப்பது சிரமமானது




நரக பாதை

தேசிய நெடுஞ்சாலை




அதில் நடப்பது

சுலபமானது




சிரமப்பட்டால்

நித்திய ஜீவன் உண்டு




உல்லாசமாய் நடக்க ஆசைப்பட்டால்

நித்திய ஆக்கினை உண்டு




குறுகிய பாதை என்றாலும்

அது தேவ பாதை




இடுக்கமான வழி என்றாலும்

அது இயேசுவின் வழி




ஆபத்துக்கள் எவ்வளவோ

ஆனந்தமும் அவ்வளவு




வாய் நிறைய கீர்த்தனைகளும்

இதயம் நிறைய துதிகளும்

கண்கள் நிறைய தரிசனங்களும் கொண்டு

அடி மேல் அடி வைத்து நடந்தால்




ஆஹா அற்புத அனுபவங்கள் கிட்டும்

ஓஹோ உன்னத உறவுகள் ஒட்டும்

அந்த ஒற்றையடி பாதையில்.

To Get Daily Quotes Contact +917904957814



Quotes

சோதனை பாவமல்ல

சோதனைக்கு இணங்குவதுதான் பாவம்




குறிப்பாக

பாலியல் சோதனைக்கு

தப்பி ஓடுவதே

பிழைக்கும் வழி




எதிர்த்து நின்றால்

வீழ்வது நிச்சயம்




தவறாக தோன்றும்

சோதனை சூழ்நிலையில்

யெஸ் சொல்வதை விட

நோ சொல்வதே உத்தமம்




தொடர்ச்சியான வெற்றிக்கு

தொடர்ச்சியான ஜெபம் தேவை




சோதனையை ஜெயிக்கிற மனிதன்

தேவனுக்கு பிரியமானவன்

ஜீவ கிரீடத்தையும் பெறுவான்.




By Bro Durai Dainel

To Get Daily Quotes Contact +917904957814


Quotes
டி.எல்.மூடி ஒரு முறை அட்லாண்டிக் கடலில் கப்பற் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். திடீரென கப்பலில் தீப்பிடித்துக்கொண்டது. கேப்டன் உட்பட வேலையாட்கள், பயணிகள் என்று பலரும் பெரும் பதட்டத்துடன் தங்கள் கைகளில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீர் மொண்டு தீயை அணைக்க பெருமுயற்சி செய்துகொண்டிருந்தனர்.




ஒரு நண்பர் டி.எல்.மூடியிடம் வந்து "வாரும். நாம் கப்பலின் மறு பக்கம் சென்று இதற்காக ஜெபிப்போம்" என்றார்.




டி.எல்.மூடியோ இவ்வாறு பதில் சொன்னார்




" அப்படியல்ல நண்பரே. எல்லாரும் ஆபத்தில் இருக்கும்போது நாம் ஒதுங்குவது நல்லதல்ல. நாம் ஜெபித்துக்கொண்டே தீயை அணைக்கவும் உதவி செய்வோம் ".




அப்படியே இருவரும் ஜெபத்துடன் உதவி செய்தனர். கப்பலும் காப்பாற்றப்பட்டது.




கிரியையும் ஜெபமும் இணைந்தால்தான் வெற்றி.




//கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கிறது. (யாக்கோபு 2:26)//




By Bro Durai Dainel




To Get Daily Quotes Contact+917904957814

[03/09, 00:15] Daily Story Rubs Rubs: Today's Quotes




பக்தி வேறு

உத்தம விசுவாசம் வேறு.




யார் வேண்டுமானாலும்

தேவனிடத்தில் பக்தி வைக்கலாம்




ஆனால் எல்லோரும்

உத்தம சீடர்களாகிவிட முடியாது.




சீஷனுக்குரிய விலைக்கிரையம் மிக அதிகம்

அவன் தன்னையும் தனக்குரியவைகளையும்

தேவ பலிபீடத்தில் அர்ப்பணித்தவன்.




தன்னை பூஜ்யமாக்கி

தேவனை தனக்குள்

முழுவதுமாய் நிரப்பினவன்.




தேவசித்தம் செய்வது ஒன்றையே

தனது வாழ்நாளின் இலட்சியமாய்

வரித்துக்கொண்டவன்.




தனக்குள் தான் வாழாமல்

கிறிஸ்துவை வாழ அனுமதிப்பவன்.




பக்தியுள்ளவன் சீடனாகும்போது

அந்த பக்தி மெய்பக்தியாய் இருக்கிறது

அந்த பக்தியில்

வேஷமும் இல்லை

வெளிநடப்பும் இல்லை.

By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.