ஸ்டேன்லி டேல் Stanley Dale | ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின் Stella Franklin | ஸ்டீவ் செயிண்ட் Steve Saint | ஜேம்ஸ் டத்தி James Duthie | மேரி லாங்டன் Mary Longdon |
ஸ்டேன்லி டேல் Stanley Dale
விண்ணில்: 1968
நாடு: ஆஸ்திரேலியா
தரிசன பூமி: பப்புவா (Papua), இந்தோனேசியா
மிகவும் அஞ்சத்தக்க பழங்குடியினர்களில் ஒன்றான யாலி (Yali) மக்கள் நியூ கினியின் (New Guinea) மலை பகுதிகளில் வசித்துவந்தனர். இப்பழங்குடியினர் ஆழ்ந்த மூடநம்பிக்கை உடையவர்களாகவும், மனிதர்களை பலி கொடுப்பவர்களாகவும், நரமாமிச பட்சணிகளாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களைச் சந்தித்து உயிருடன் திரும்பியவர்கள் வெகு சிலரே. இதையெல்லாம் அறிந்த ஸ்டேன்லி டேல், இந்த பயங்கரமான பழங்குடியினருக்கு சிலுவையின் சரித்திரத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்தார்.
ஸ்டேன்லி டேல் ஒரு காலத்தில் போர்சேவகனாக இருந்த ஒரு ஆஸ்திரேலிய மிஷனரியாவார். இரண்டாம் உலகப் போரின்போது, அவர் முதலில் நியூ கினியின் உயரமான மலைத்தொடர்களைக் கண்டு, ஒரு நாள் தான் திரும்பி வந்து இயேசுவின் அன்பின் சுவிசேஷத்தை யாலி மக்களுக்குக் கொண்டு வர முடிவு செய்தார். அவர் தனது நண்பர் ப்ரூனோ டி லியூ (Bruno de Leeuw) என்பவருடன் சேர்ந்து, இந்த மக்களை சென்றடைய 1961ஆம் ஆண்டு நீண்ட கடினமான பயணம் மேற்கொண்டார். முதலில் சண்டைக்காரராக இருந்த யாபி (Yabi) மற்றும் கோபக் (Kobak) பழங்குடியினரை சந்தித்தனர். ஒரு நாள், இந்த வீரர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஸ்டேன்லியும் ப்ரூனோவும் சிக்கிக்கொண்டனர். இரு பழங்குடியினரும் இவ்விருவரையும் தங்கள் எதிரியை சேர்ந்தவர்கள் என நினைத்து, அவர்களை கொல்ல தங்கள் ஆயுதங்களுடன் ஓடி வந்தனர். ஆனால், நிலைமையை அமைதிப்படுத்த முயன்ற ஸ்டேன்லியின் தைரியத்தைக் கண்டு பழங்குடியினர் வியந்தனர். ஸ்டேன்லி, தேவன் கொடுத்த ஞானத்துடன், பழங்குடியினரிடையே சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இறுதியாக, ஒருவரை ஒருவர் கொல்ல ஆயத்தமாக இருந்த மக்கள், ஒருவருக்கொருவர் மன்னித்து கட்டித் தழுவிக்கொண்டனர்.
பின்னர், ஒரு கடினமான ஆய்வு பயணத்திற்குப் பிறகு, அவர்கள் இறுதியாக யாலி பழங்குடியினரை சென்றடைந்தனர். அவர்கள் யாலி எல்லைக்குள் கால் வைத்த அத்தருணத்தில் தானே, அவர்கள் மீது அம்புகள் எய்யப்பட்டன. ஆகவே அவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது. ஆயினும்கூட, யாலி மக்களுக்கு இயேசு அவசியம் தேவை என்று ஸ்டேன்லி உறுதியாக நம்பினார். எனவே, அவர் மீண்டும் 1963ஆம் ஆண்டு வேறு சிலருடன் யாலி மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் சென்றார். ஊழியர்களின் குழு யாலி பிரதேசத்தை அடைந்ததும், யாலி பழங்குடியினர் தங்கள் குடிசைகளை விட்டு வெளியேறி, அச்சுறுத்தும் வகையில் தங்கள் அம்புகளை அசைத்து காட்டினர். தனது சக ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஸ்டேன்லி பாதுகாப்புக்குத் திரும்ப முயன்றார். ஆனால், அவர்கள் திரும்பியபோது, நூற்றுக்கணக்கான அம்புகள் அவர்களை நோக்கி பாய்ந்துசென்று, அனைத்து மிஷனரி குழுவினரையும் கொன்றுவிட்டன.
அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்டேன்லியின் இரத்தம் சிந்தப்பட்ட அதே இடத்திலிருந்து, நற்செய்தி பரவ தொடங்கியது. ஸ்டேன்லியின் மகன் வெஸ்லி உட்பட, மற்ற மிஷனரிகள் தைரியமாக யாலி பழங்குடியினரை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த அழைப்பை ஏற்றனர். ஒரு காலத்தில் கடுமையான பழங்குடியினர் இப்போது அமைதியை விரும்பும் கிறிஸ்தவ சமுதாயமாக வாழ்கின்றனர்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின் Stella Franklin
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இந்தியா
இந்தியா எதிர்கொண்ட பயங்கரமான காலங்களில், 1896-1897 ஆம் ஆண்டின் பஞ்சம் ஒன்றாகும். பட்டினியினாலும் அதனுடன் வரும் தொற்றுநோய்களினாலும் ஏற்பட்ட இறப்புகள் மிக அதிகமாக இருந்தது: ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் துன்பங்களில் மூழ்கிக்கிடந்த போது, கர்த்தர் அவர்களின் ஆத்தும மற்றும் சரீர பிரகாரமான தேவைகளை சந்திக்க அநேக தேவபக்தியுள்ள ஆண்களையும் பெண்மணிகளையும் எழுப்பினார். அவர்களில் ஒருவர் தான் ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின்.
ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின் தனது சகோதரி ஜோசஃபாவைப் போலவே ஆசிரியையாக ஆயத்தமாய் 1895ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார். ஆனால், பஞ்சத்தின் தீவிரம் அவருடைய ஊழியப் போக்கை மாற்றியது. அங்கு அவருடைய சகோதரி ஏற்கனவே பணியாற்றிய நிவாரணப் பணியில் இணையும்படி கேட்டுக்கொல்லப்பட்டார். அவர் அரசு நடத்திய அனாதை இல்லத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நூற்றுக்கணக்கான சிறுவர்களைப் பராமரித்தார். அந்தக் சிறுவர்களில் அநேகருக்குப் பஞ்சம் முடிந்த பிறகு திரும்ப வீடு இல்லை. ஸ்டெல்லா அவர்களைத் தன் செட்டைகளின் கீழே எடுத்து, அவர்களுக்கு உணவளித்து, கற்பித்து, ஆத்தும ரீதியாகவும் போஷித்தார்.
ஸ்டெல்லா தாமோ (Damoh) என்னும் ஊரில் பெண்கள் நற்செய்திப் ஊழியத்தைத் தொடங்கினார். துவக்கத்தில், அவர் தனது அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களின் தாய்மார்களை அணுகினார். அவள்ர் சுவிசேஷ பயணங்களுக்கு சென்றபோது, தன் பாதுகாப்பையும் வசதிகளையும் பொருட்படுத்தாமல், அவர் கூடாரங்கள் அமைத்து அதில் வசித்தார். ஸ்டெல்லா ஒரேப்த் தொடர்பயணத்தில் கிட்டத்தட்ட எழுபது கிராமங்களுக்குச் சென்றார். அவற்றில் பெரும்பாலானவை எந்த சுவிசேஷகரும் சென்றிராத இடங்களாகும். சகல ஜனங்களுக்கும் அவருடைய வேதாகமப் போதனை நடைமுறைக்குரியதாகவும், தெளிவாகவும் விளங்கியது.
1905 ஆம் ஆண்டு, கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளி நிர்வாகத்தை நிர்வகிக்க ஹர்தா (Harda) என்னும் ஊருக்கு சென்றார். பிறகு அவர் ஜபல்பூருக்கு (Jabalpur) வேதாகமக் கல்லூரியில் கற்பிக்க ஆசிரியையாகச் சென்றார். 1912 ஆம் ஆண்டு, பெண்கள் விடுதி வசதியுள்ள பள்ளியில் பணியாற்ற அவர் முங்கேலி (Mungeli) சென்றார். இந்த பணியில், அவர் தனது ஊழியத்தின் எஞ்சியுள்ள ஆண்டுகளை செலவிட்டார். அவருடைய சிறந்த ஞானமும் அனுதாப புரிதலும் எப்போதும் விளங்கினதால், அவர் எங்கு சென்றாலும், திருச்சபையின் ஆலோசனைக் குழுக்களிலும் மற்றும் வீட்டு விவகாரங்களிலும் அவருடைய ஆலோசனை விரும்பப்பட்டது.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
ஸ்டீவ் செயிண்ட் Steve Saint
மண்ணில்: 30-01-1951
ஊர்: கீட்டோ (Quito)
நாடு: ஈக்வடார்
தரிசன பூமி: ஈக்வடார்
ஸ்டீவ் செயிண்ட் என்பவர் எக்குவடோரில் பிறந்து வளர்ந்தார். அங்கு அவரது பெற்றோர் மிஷனரிகளாக ஊழியம் செய்தனர். அவரது தந்தை நேட் செயிண்ட் (Nate Saint), 1956ஆம் ஆண்டு வாவ்டானி (Waodani) பழங்குடியினரால் (ஔகா பழங்குடியினரால்-Auca tribe) கொல்லப்பட்ட ஐந்து இளம் மிஷனரிகளில் ஒருவர். அவரது தந்தை இறந்த பிறகு, ஸ்டீவ் கீட்டோ-வில் (Quito) உள்ள பள்ளியில் படித்தார். இந்த நேரத்தில், அவரது அத்தை ரேச்சல் செயிண்ட் (Rachel Saint) மற்றும் எலிசபெத் எலியட் (Elisabeth Elliot) இறுதியாக ஔகா (Aucas) பழங்குடியினருடன் அமைதிவாய்ந்த தொடர்பை ஏற்படுத்தினர். இவ்விரண்டு துணிச்சலான பெண்மணிகள் வெற்றிகரமாக நற்செய்தியை அப்பழங்குடியினரிடம் எடுத்துச் சென்று அவர்களில் அநேகரை கிறிஸ்துவிடம் கூட்டிசேர்த்தனர்.
கோடைகாலத்தில் ஸ்டீவ் தனது அத்தையுடன் வாவ்டானி பழங்குடி மக்களிடையே வாழச் சென்றுவார. ஒரு சிறுவனாக, அவர் காட்டில் வாழ்வதைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் பழங்குடியினரால் அன்பாக 'பாபே' (Babae) என்று அழைக்கப்பட்டார். பின்னர், ஜூன் 1965இல், ஸ்டீவ் தனது தந்தை கொல்லப்பட்ட அதே நதியில் கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெற்றார். தன் தந்தையை கொன்றவர்களில் இருவரால் அவர் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை உங்களால் நம்ப முடியுமா? தேவனுடைய வழிகள் எவ்வளவு அற்புதமானவைகள் மற்றும் ஆராயப்படாதவைகள்!
உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஸ்டீவ், வீட்டன் கல்லூரியில் (Wheaton College) பட்டம் பெற்றார். ஜினியுடனான திருமணத்திற்குப் பிறகு, ஸ்டீவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால், 1994 இல் ஈக்வடாரில் உள்ள அவரது அத்தை ரேச்சல் மரணமடைந்தார். எனவே, அவர் உடனடியாக தன் அத்தையை அடக்கம் செய்ய ஈக்வடார் திரும்பினார். அந்த சமயத்தில் சிறு வயதிலிருந்தே ஸ்டீவை அறிந்த வாவ்டானி பழங்குடியினர் தங்களுடனே தங்கி வாழ அவரை கேட்டுக்கொண்டனர். அதிக ஜெபங்களுக்குப் பிறகு, ஸ்டீவ் 1995ஆம் ஆண்டு ஈக்வடார் காடுகளுக்குள் வாழச் சென்றார். அங்கு அவர் உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த கடினமாக உழைத்தார்.
ஒருமுறை, மிஷனரிகள் செய்யும் தொழில்நுட்ப விஷயங்களைச் செய்யக் கற்பிக்குமாறு வாவ்டானி மக்கள் அவரிடம் கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்கள் வெளியாட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்பினர், குறிப்பாக ஊழியத்தை மேற்கொள்வதில் மற்றவர்களை சார்ந்திருக்காமல், தாங்களாகவே முன்னோடியாகச் செயல்பட விரும்பினர். எனவே, பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான திறன்களைக் கற்பிப்பதற்கான உலகளாவிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்த ஸ்டீவ், அவர் 'இண்டிஜீன்ஸ் பீபுல்ஸ் டெக்னாலஜி அண்ட் எடுகேஷன் சென்டர்'-ஐ [Indigenous Peoples Technology and Education Center’ (I-TEC ஐ-டெக்) - பழங்குடி மக்கள் தொழில்நுட்பம் மற்றும் கல்வி மையம்] நிறுவினார். இப்போது தனது எழுபதுகளில் உள்ள ஸ்டீவ் செயிண்ட், உள்நாட்டு திருச்சபைகள் மிஷனரி வேலையை முன்னெடுக்கும்படி அவைகளை அவர் நிறுவிய இந்த மையத்தின் மூலம் உருவாக்கவும், பயிற்சியளிக்கவும் மற்றும் சித்தப்படுத்தவும் தொடர்கிறார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
ஜேம்ஸ் டத்தி James Duthie
மண்ணில்: 02-11-1833
விண்ணில்: 03-07-1908
ஊர்: உராஸ்
நாடு: ஸ்காட்லாந்து
தரிசன பூமி: இந்தியா
இந்தியாவில் சாதி அமைப்பு சமூகத்தில் அநேக தீமைகளைப் பிறப்பித்துள்ளது. அவற்றில் ஒன்று தான் தீண்டாமை. உயர் சாதி மக்கள் மற்றவர்களை ஒதுக்கி வைத்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் நடைமுறை தான் அது. இந்தியாவில் பல கிறிஸ்தவ மிஷனரிகள் இத்தகைய சாதி ஏற்றத்தாழ்வுகளை சவாலிட்டு எதிர்கொண்டு மற்றும் நல்ல சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜேம்ஸ் டத்தி.
ஜேம்ஸ் டத்தி பெட்ஃபோர்ட் என்னும் ஊரில் தனது கல்வி படிப்புகளை முடித்தார். பின்பு முதன்மையாக கல்விப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு ஒரு மிஷனரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 1859ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு முழுநேர மிஷனரியாக பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் தலித்துகளின் பரிதாப நிலையைக் கண்டு திகைத்துப்போனார். அத்தகைய சமுதாயத்தை மாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ஜெபத்துடன் முடிவு செய்தார்.
உள்ளூர் மக்களின் தேவைகளை அவர் அறிந்த பிறகு, நல்ல கல்விதான் காலத்தின் அத்தியாவசியம் என்பதை அவர் உணர்ந்தார். "ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்." (நீதிமொழிகள் 24:5) என்ற வசனத்தை அவர் முழு மனதுடன் நம்பினார். எனவே அவர் பள்ளிகளை நிறுவி, சாதி அமைப்பின் விலங்குகளை உடைப்பதற்கான அறிவைப் பெற உள்ளூர் மக்களை ஊக்குவித்தார். ஆரம்பத்தில், பிராமணர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் டத்தி கவனமாக செயல்பட்டு அனைத்து சமூக பிரிவுகளையும் சமாதானப்படுத்தி தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு செல்ல ஊக்குவித்தார். படிப்படியாக, வேதாகம சமத்துவத்தின் கருத்துகளும் கற்பிக்கப்பட்ட சிறுவர்களும் சமூக மாற்றத்திற்கான கருவிகளாக மாறினர்.
அதே சமயத்தில், அவரது மனைவி திருமதி டத்தி பெண்கள் மத்தியில் தீவிரமான தனிப்பட்ட நற்செய்தி ஊழியத்தில் ஈடுபட்டார். அவர், தனது மகளுடன் சேர்ந்து, பணம் சம்பாதிக்க சில மதிப்புமிக்க திறன்களை பெண்களுக்கு கற்றுக்கொடுத்தார். கல்வி, சமூதாயத்தில் காணப்பட்ட பல குருட்டு நம்பிக்கைகளை அகற்றியது, மேலும் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பின்னர், டத்தி ஒரு இறையியல் பள்ளியைத் தொடங்கினார். அங்கு அவர் புதிய விசுவாசிகளுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் திருச்சபைகள் ஸ்தாபிக்கவும் பயிற்சி அளித்தார். இந்தியாவின் இப்பகுதிகளில் உயர்கல்வியின் முன்னோடி நிறுவனமான இப்போது புகழ்பெற்ற ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்-ஐ (Scott Christian College-ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி) அவர் நிறுவினார்.
50 ஆண்டுகால தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியத்திற்குப் பிறகு மக்களின் சமூக மற்றும் ஆத்தும நிலைகளை அபரிமிதமாக மேம்படுத்திய பின்னர், 1908ஆம் ஆண்டு இயேசு பாதம் சென்றடைந்தார் ஜேம்ஸ் டத்தி.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
மேரி லாங்டன் Mary Longdon
ஊர் : பென்சில்வேனியா
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இந்தியா
டாக்டர் மேரி லாங்டன் என்பவர் இந்தியாவில் பணியாற்றிய அர்ப்பணிப்புள்ள மிஷனரி பெண் மருத்துவர் குழுவில் ஒருவராவார். விமன்ஸ் மெடிக்கல் காலேஜ் ஆஃப் பென்சி ல்வேனியாஇல் (பென்சில்வேனியாவின் பெண்கள் மருத்துவக் கல்லூரி) படித்த அவர், பட்டம் பெற்ற பிறகு அங்கு மருத்துவராகப் பணியாற்றினார். அந்த அனுபவம் இந்தியாவில் அவரது சேவைக்கு மிகவும் உதவியது. பின்னர் யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியாவில் (பென்சி ல்வேனியா பல்கலைக்கழகம்) முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். தனது மருத்துவப் பயிற்சியை முடித்தவுடன், மேரி இந்தியாவில் ஊழிய சேவைபுரிய தன்னை அர்ப்பணித்து, டிசம்பர் 1899 இல் இந்தியாவிற்க்கு பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவில் அவர் முதலில் தேவகர் என்னும் ஊரில் பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அவர் அடுத்ததாக பிலாஸ்பூரில் ஐந்து வருடங்களும் பின்னர் பென்ட்ரா சாலையில் பத்து வருடங்கள் ஊழியம் செய்தார். கடைசி சில ஆண்டுகளில், அவர் ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் அனைத்து மருத்துவப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். இப்பணி குல்பஹாரில் உள்ள மிஷன் ஆதரவு இல்லங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் பராமரிப்பையும் உள்ளடக்கியது. சவாலான நிலப்பரப்புகளிலும் மற்றும் சாதகமற்ற வானிலை நிலைகளிலும் அவர் மஹோபா மற்றும் ரத்து என்னும் ஊர்களுக்கு வழக்கமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது களைத்துப்போகச் செய்யும் ஓர் பணியாய் இருந்தது.
மேரியின் குறிப்பிடத்தக்க செயல், பென்ட்ரா சாலையின் காசநோய்க் காப்பகம் நிறுவுவதாகும். இது இந்தியாவின் அப்பகுதியில் உள்ள ஒரே நிறுவனமாய் விளங்கியது. இது மதச்சார்பற்று, அனைத்து மதங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேவை வழங்குகிறது. மேரி தனது பணிவன்பினாலும் மற்றும் கனிவான குணத்தினாலும், உயர் வர்க்க இந்தியர்களிடையே பல நண்பர்களை சம்பாதித்தார். அத்தகைய நட்பின் மூலம், ஒரு இந்து குடும்பத்திடமிருந்து காசநோய்க் காப்பகம் கட்டுவதற்கான முதல் நன்கொடையைப் பெற்றார். மேரி காசநோய்க் காப்பகம் கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காண பெரும் முயற்சி எடுத்து, இறுதியாக பெந்த்ரா சாலையைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் காசநோய்க் காப்பகம் யூனியன் கிறிஸ்துவ நிறுவனமாக மாறியது.
மேரியின் கவனமான திட்டமிடல் மற்றும் உண்மையுள்ள ஊழியம் அநேகரை உடல் ரீதியாகவும் ஆத்தும ரீதியாகவும் குணமடையச்செய்தது. மேரி இந்தியாவில் முப்பத்தெட்டு ஆண்டுகள் உண்மையாய் ஊழியம் செய்தார் பின்னர், 1937ஆம் ஆண்டு தன் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
Thanks for using my website. Post your comments on this