தாமஸ் பர்ஷெல் Thomas Burchell | தாமஸ் மேஹ்யூ சீனியர் Thomas Mayhew Sr | டபிள்யூ.சி.மெக்டூகள் W.C. MacDougall | ஸ்யூ ராபின்சன் Sue Robinson | வில்லியம் நிப் William Knibb |
தாமஸ் பர்ஷெல் Thomas Burchell
மண்ணில் : 25.12.1799
விண்ணில் : 16.05.1846
நாடு : பிரிட்டிஷ் கூட்டரசு
தரிசன பூமி : ஜமைக்கா
தாமஸ் பர்ஷெல் என்பவர் ஒரு பாப்டிஸ்ட் மிஷனரியாகவும், ஜமைக்காவில் அடிமைகளின் சுதந்திரத்திற்காக உறுதியாக பரிந்துபேசுபவராகவும் விளங்கினார். ஒரு இளைஞனாக, பர்ஷெல் கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் சாட்சிகளைப் படிக்க அதிகம் விரும்பினார். அவர் தனது இரட்சிப்பின் அனுபவத்தை 'பாவ கட்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது' என வெளிப்படுத்தினார். பாவ கட்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றவர் ஜமைக்கா மக்களின் ஆத்தும மற்றும் சரீர சுதந்திரத்திற்காக பாடுபட்டார்.
நெயில்ஸ்வொர்த் என்னும் ஊரில் துணி உற்பத்தியாளராக பயிற்சி பெற்றபோது, பர்ஷெல் ஷார்ட்வுட் பாப்டிஸ்ட் திருச்சபையினால் ஈர்க்கப்பட்டார். அப்போதிருந்து, அவரது எண்ணங்கள் ஊழியத்தைக் குறித்ததாகவே இருந்தன. அதே திருச்சபையைச் சேர்ந்த மிஷனரிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தாமஸ் ஜமைக்காவில் ஊழியம் செய்ய தன்னையே அர்ப்பணித்தார். அவர் 1822ஆம் ஆண்டு ஜமைக்காவிலுள்ள மாண்ட்டேகோ பே என்னும் ஊரை சென்றடைந்து, அங்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஊழியம் செய்தார்.
ஜமைக்காவில் புரையோடிக்கிடந்த அடிமைத்தனத்தால் பர்ஷெல் வருத்தமடைந்தார். அத்தகைய சமூகத்தை உண்மையாகவே மாற்றவும் விரும்பினார். அடிமைத்தனம் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுமின்றி, மத சுதந்திரத்தையும் தடுக்கிறது என்று அவர் உணர்ந்தார். அவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள மிஷனரி சமுதாயத்திற்கு அடிமைத்தனத்தின் கடுமையான நிலைமைகளை விளக்கிக் கடிதங்கள் எழுதி அனுப்பினார். 1827ஆம் ஆண்டு புர்ஷெலின் கடிதம் ஒன்று ஒரு பிரபலமான பிரிட்டிஷ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இது ஜமைக்கா அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக அவர் தேசத்துரோகம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அவர் அடிமைகளால் போற்றப்பட்ட போதிலும், அடிமைத்தனத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டால் அடிமை உரிமையாளர்களால் வெறுப்புடனும், அவமதிப்புடனும் நடத்தப்பட்டார். 1831ஆம் ஆண்டு நடந்த பாரிய அடிமை கிளர்ச்சியின் போது, அவருடைய திருச்சபைகள் பல வெள்ளை மேலாதிக்கவாதிகளால் அழிக்கப்பட்டன. தான் கட்டிய திருச்சபைகளில் தாமஸ் அதன் மக்கள் இடையிலும் ஊழியத்திலும் சமத்துவத்தை உறுதி செய்தார். அவரது முதல் திருச்சபையின் முதல் ஆயர் ஒரு முன்னாள் அடிமையாவார்.
பின்னர் பிரிட்டன் நாட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர், 1833ஆம் ஆண்டு ஜமைக்காவுக்குத் திரும்பி, ‘சுதந்திர கிராமங்கள்' (ஃபிரீ விலேஜெஸ்) நிறுவும் பணியைத் துவங்கினார். பர்ஷெல் பெரிய நிலப்பகுதிகளை விலைக்கு வாங்கி அவற்றை சிறிய இடங்களாகப் பிரித்தார். அவ்விடங்கள் முன்னாள் அடிமைகளுக்கு வழங்கப்பட்டன. அவர்களையே அவ்விடங்களுக்கு உரிமையாளர்களாகவும் வைத்தார். சாண்டி பே, பெத்தேல் டவுன் மற்றும் மவுண்ட் கேரி ஆகிய சுதந்திர கிராமங்கள் அவரது முயற்சிகளின் விளைவாகும்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
தாமஸ் மேஹ்யூ சீனியர் Thomas Mayhew Sr
மண்ணில் : 31.03.1593
விண்ணில் : 25.03.1682
ஊர் : டிஸ்பரி
நாடு : பிரிட்டிஷ் ஐக்கிய ராஜ்யம்
தரிசன பூமி : மார்த்தாஸ் வின்யார்ட், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தாமஸ் மேஹ்யூ சீனியர் என்பவர் நிச்சயமாய் மிஷனரி ஹீரோக்களின் பட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு ஒரு துணிச்சலான ஆத்மாவாய் திகழ்ந்தார். சிலர் தங்கள் எழுபதுகளில் தங்கள் வேலை அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைப்பதுண்டு. ஆனால் தாமஸ் மேஹ்யூ அவ்வாறு நினைக்கவில்லை. அவரது மிஷனரி பணியின் ஆரம்பம் ஒரு சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டுள்ளது.
1631ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற தாமஸ் சீனியர், மாசசூசெட்ஸ் என்னும் ஊரில் ஒரு வணிகராகவும், நில உரிமையாளராகவும் விளங்கினார். அவர் விரைவில் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த மார்த்தாஸ் வின்யார்டின் ஆளுநரானார். அவரது அதிகாரத்தின் கீழ், தீவுகளின் மக்கள் உடல் ரீதியாகவும் ஆத்தும ரீதியாகவும் செழித்தோங்கினர். தாமஸ் சீனியர் வணிக காரியங்களில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மகன் தாமஸ் ஜூனியர் அத்தீவுகளில் வாழும் பழங்குடியினரின் இரட்சிப்பில் அதிக அக்கறையுடையவராய் இருந்தார். அவர் உள்ளூர் பழங்குடியினர் மத்தியில் ஒரு நற்செய்தி ஊழியத்தைத் தொடங்கி, ஒரு சிறிய ஆங்கிலிகன் தேவாலயத்தை நிறுவினார். ஊழியம் செழித்தோங்கியது. விரைவில், அந்த திருச்சபையில் இருநூற்று எண்பத்திரண்டு விசுவாசிகள் இருந்தனர். சுமார் ஐந்து வருட ஊழியத்திற்குப் பிறகு, தாமஸ் ஜூனியர் மிஷனரி பணிக்காக நிதி திரட்ட இங்கிலாந்து சென்றார். ஆனால், கப்பல் கடலில் தொலைந்து போனது, தாமஸ் ஜூனியரும் அதனுடன் தொலைந்துபோனார்.
அவரது மகனின் மரணத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தாமஸ் சீனியர், தனது மகன் விட்டுச் சென்ற ஊழியத்தைத் தொடரக்கூடிய நபர்களைக் கண்டறிய பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எந்த ஊழியரும் தீவு மக்களின் மொழி தெரியாமலும், துணிச்சலாய் இராமல் இருந்தனர். எனவே, ஏறக்குறைய எழுபது வயதில், தாமஸ் சீனியர் தனது மகனின் இடத்தை நிரப்ப முடிவுசெய்து , உள்ளூர் மொழியைக் கற்கத் துவங்கினார். அவர் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தோட்டப் பகுதிகளில் பிரசங்கிக்கத் துவங்கினார். சில சமயங்களில், பழங்குடியின சபைகளைச் சந்திக்க இருபது மைல்கள் காடுகளின் வழியாய் நடந்து சென்றார். தாமஸ் சீனியர் ஆயிரக்கணக்கான உள்ளங்களைத் தொட்டு, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அநேக பழங்குடியினரை கிறிஸ்துவிடம் கூட்டிசேர்த்தார். அவருடைய ஊழியத்தின் போது, திருச்சபை சுமார் 3000 ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்தது.
சோர்வடையாமல், தனது தொண்ணூற்றி மூன்றாம் வயதில் மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை தனது மிஷனரி பணியைத் தொடர்ந்தார் தாமஸ் மேஹ்யூ சீனியர்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
டபிள்யூ.சி.மெக்டூகள் W.C. MacDougall
விண்ணில் : 1935
ஊர் : ஒன்டாரியோ
நாடு : கனடா
தரிசன பூமி : இந்தியா
டபிள்யூ.சி.மெக்டூகள் என்பவர் கனடாவின் ஒன்டாரியோ என்னும் ஊரில் பிறந்தார். அவர் ஒரு மருந்தாக்க வேதியியலாளர். ஹைரம் கல்லூரியில் அவர் தங்கியிருந்த காலத்தில், அவர் மாணவர்களிடையே ஊழியம்செய்தார். பின்னர் அவர் ஒரு திருச்சபையில் போதகராகவும் செயின்ட் தாமஸில் உள்ள டிசைப்பில்ஸ் காலேஜ்இன் (சீடர்கள் கல்லூரி) தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தியாவிற்கு மிஷனரிகளின் தேவையை அறிந்த பிறகு, அவர் முழு நேர மிஷனரி பணிக்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார்.
மெக்டூகள் முதலில் கல்கத்தாவில் பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் மாணவர்களிடையே ஊழியம் செய்ய மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்று தொடர்ந்து வேதாகம வகுப்புகளை நடத்திவந்தார். 1910 ஆம் ஆண்டில், அவர் பென்ட்ரா சாலைக்குச் சென்று, நீல் மேட்சன் என்பவரிடமிருந்து ஊழியத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பென்ட்ரா சாலையில் நற்செய்தி, கல்வி மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் ஜபல்பூருக்கு குடிபெயர்ந்து, தியோகரில் பெண்கள் மத்தியில் தீவிரமாக ஊழியம் செய்த ஆனி லாக்கி என்பவரை மணமுடித்தார்.
மெக்டூகள் தாக்கத்தை உண்டுபண்ணும் ஒரு பிரசங்கியாகவும் சுவிசேஷகராகவும் திகழ்ந்தார். ஆனால், இந்தியாவிற்கு அவருடைய மிக முக்கிய பங்களிப்பு ஜபல்பூரில் உள்ள வேதாகம கல்லூரியின் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருந்த காலம், அங்கு அவர் பல இந்திய கிறிஸ்தவ தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி பெற்ற தேவ ஊழியர்கள் நற்செய்தியை இந்தியாவின் ஆழ்பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.
பயிற்சி பெற்ற மருத்துவராக இல்லாவிட்டாலும், மெக்டூகலுக்கு நடைமுறை மருத்துவத்தில் கணிசமான அறிவு இருந்தது. அவரது சுவிசேஷ பயணங்களில், அவர் அடிக்கடி பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளித்தார் மற்றும் நோயாளிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார். மிஷனரி வேலையைத் தவிர, மெக்டூகள் வாராந்திர மிஷன் பத்திரிக்கையான 'சஹாயக் பத்ரிகா' ஐத் தொகுத்தமைத்தார். ஆனி வேதாகம கல்லூரியின் மாணவர்களின் மனைவிகளுக்கு கற்பிப்பதில் ஈடுபட்டார். அவர் ஏழைகளுக்கு உடை உடுத்தி, உணவளித்து மற்றும் பராமரித்து மகிழ்ச்சியடைந்தார்.
1926 ஆம் ஆண்டு, மெக்டூகள் குடும்பம் இந்தியாவை விட்டு கனடாவுக்குத் திரும்பியது. அங்கு டாக்டர் மெக்டூகள் ஹில்க்ரெஸ்ட் சர்ச் ஆஃப் க்ரைஸ்டஇன் (கிறிஸ்துவின் ஹில்கிரெஸ்ட் தேவாலயம்) போதகரானார். அங்கு அவர் கனேடியன் ஸ்கூல் அஃப் மிஷன்ஸ்இ ல் (கனேடிய மிஷன் பள்ளி) கற்பித்தார். டாக்டர்.மெக்டூகள் 1935ஆம் ஆண்டு இயேசுபாதம் சென்றடைந்தார். ஆனி, மிஷனரி சேவைக்காக இந்தியா செல்லத் தனது இரண்டு மகள்களையும் ஆயத்தப்படுத்தி, டொராண்டோவில் தொடர்ந்து வசித்துவந்தார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
வில்லியம் அம்புரோஸ் ஷெட் William Ambrose Sheddil
மண்ணில் : 24.01.1865
விண்ணில் : 07.08.1918
ஊர் : உறுமியே
நாடு : ஈரான்
தரிசன பூமி : ஈரான் மற்றும் பெர்சியா
வில்லியம் அம்ப்ரோஸ் ஷெட் என்பவர் ஒரு அமெரிக்க மிஷனரியாவார். அவர் ரஷ்ய மற்றும் ஒட்டோமான் பேரரசுகளுக்கு இடையிலான நடந்த முதல் உலகப் போரின் போது, பெர்சியாவில் ஊழியம் செய்தார். அவர் ஈரானில் பணியாற்றிய ஒரு மிஷனரி தம்பதியினருக்கு பிறந்தார். அமெரிக்காவில் தனது கல்வியை முடித்த பிறகு, அவர் இரண்டு வருடங்கள் பிரின்ஸ்டன் செமினரியில் (பிரின்ஸ்டன் இறையியல் பள்ளி) ஊழியத்திற்காக ஆயத்தமடைந்தார். ஷெட் பின்னர் பிரெஸ்பிடேரியன் மிஷன் போர்டு (பிரெஸ்பிடேரிய ஊழிய வாரியம்) சார்பாக பெர்சியாவில் ஊழியத்துறையில் கால் பதித்தார்.
மிகவும் பாடுநிறைந்த முதல் உலகப் போரின்போது ஷெட் ஊழியம்புரிந்தார். இருப்பினும், அவர் பிரசங்கித்து, பல்வேறு நிலைகளுக்கு கற்பித்து, அச்சகத்தை மேற்பார்வையிட்டு மற்றும் ஊழியத்தின் சட்ட விவகாரங்களைக் கையாண்டு முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிரியன் வேதாகமத்தின் ஒத்தவாக்கியம் வெளியிடுவதற்கான ஆயத்தங்களிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். அச்சகத்திற்கு வேலை ஆயத்தமாய் இருந்தபோதிலும், போர் இந்த அச்சிடும் பணியில் குறுக்கிட்டது. மேலும் மூல கையெழுத்துப் பிரதிகளையும் அழித்தது.
ஜூலை 1918 இல், ஒட்டோமான் இராணுவம் உறுமியேவை நோக்கி படையெடுத்தப்போது, அசீரிய மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் உறுமியேவை விட்டு பிரிட்டிஷ் ஆண்ட ஈராக்கில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த யாத்திரை பல மாதங்கள் நீடித்தது. இந்நிலையில் ஷெட் என்பவரை தான் மக்கள் தலைமைதாங்கி வழிநடத்த எதிர்பார்த்து நோக்கினர். நிலைமை பயங்கரமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் இரத்தம் வெள்ளமாய் ஓடியது. இருப்பினும், மிகுந்த எச்சரிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும், ஷெட் கோஸ்ராவா மற்றும் செயின் காலாவிற்கு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்.
- அந்நேரத்தில் மக்கள் மிகவும் பதறிப்போயினர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் விட்டுவிட்டு தங்கள் பாதுகாப்பிற்காக தப்பி ஓடினர். ஷெட் தம்பதியினர் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றபோது, மரிக்கும்படி விட்டுச்செல்லப்பட்ட ஒரு சிறுமியை கண்டனர். அச்சிறுமியை அவர்கள் தங்களோடு அழைத்துச்சென்று, அந்தப் சிறுமியைப் பராமரிக்க உதவும் ஒரு பெண்ணைக் கண்டனர். ஷெட் அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். அச்சிறுமியை அவள் நன்றாகப் பராமரித்தால் திரும்பி வருகையில் மேலும் பணம் தருவதாக உறுதியளித்தார்.
தன் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை, இந்த நல்ல சமாரியன் எதிரிகளையும் அவர்களின் தோட்டாக்களையும் அனுதினமும் தைரியமாய் எதிர்கொண்டார். அவர்கள் செயின் காலா என்ற இடத்தை அடைந்ததும், கொடிய காலரா நோய் ஷெட்டின் உயிரைப் பறித்தது.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
ஸ்யூ ராபின்சன் Sue Robinson
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : இந்தியா
ஸ்யூ ராபின்சன் என்பவர் 1888ஆம் ஆண்டில் கென்டக்கியின் லூயிஸ்வில் ஊரிலிருந்து இந்தியாவுக்குச் சென்றார். அவர் செயின்ட் லூயிஸில் குடியேறிய சீன மக்களிடையே ஆசிரியராக பணியாற்றினார். மற்றும் திருச்சபையில் அதிக ஈடுபாடுடன் விளங்கினார். இந்தியாவில், ராபின்சன் ஹர்தா என்னும் ஊருக்கு நியமிக்கப்பட்டார், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் மிகவும் அதிகமாக இருந்ததால் அவர் உள்ளூர் மொழி கற்றலை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், அவர் பெண்கள் பள்ளியில் பணியாற்றினார், மற்ற பாடங்களைக் கையாளும் அளவுக்கு ஹிந்தி பேசும் வரை தையல் வகுப்புகளை கற்பித்தார். மேலும் ஞாயிறு பள்ளிகளிலும் கற்பித்தார்.
விரைவில் அவரால் பெண்கள் பள்ளியை மேற்பார்வையிட இயன்றது. இந்திய மக்கள் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதன் பயனைப் பெற வேண்டும் என்பதே அவருடைய பெரும் வாஞ்சையாய் இருந்தது. பள்ளியில், அவர் வேதாகம வகுப்புகளை ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வைத்தார். இதினிமித்தம் கோபமடைந்த சில இந்து பெற்றோர்கள் தங்கள் மகள்களை பள்ளியில் இருந்து விலக்கினார்கள்.
1890களின் முற்பகுதியில் கடுமையான பஞ்சத்தின் போது, ராபின்சன் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக மஹோபாவுக்குச் சென்றார். ஒதுக்கப்பட்ட விடுமுறையை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர் 1892 ஆம் ஆண்டின் வெப்ப பருவத்தில் அவசர மருத்துவ சேவைபுரிந்தார். அவரது உடல் பலவீனத்தினிமித்தம் அவசர மருத்துவ சேவை அவருடைய ஆற்றலை முற்றிலும் உறிஞ்சியது. அவருக்கே சிறிது ஓய்வு தேவைப்பட்டது. எனவே, அவர் ஓய்வு மற்றும் புத்துயிர்ப்பெற மலைகளுக்குச் சென்றார். ஆனால் பின்னர் ஹார்டா பகுதியில் காலரா தொற்று பரவியது. தன் அன்புக்குரிய சிறுமிகளின் நலனில் அக்கறை கொண்ட அவர், முழுமையாக குணமடைவதற்குள் உடனடியாக ஹர்தாவுக்குத் திரும்பினாள்ர். காலரா நோயாளிகளை கவனித்துக்கொண்டிருந்தபோது, அவர் நோயால் பாதிக்கப்பட்டு இறுதியாக இயேசுபாதம் சென்றார். -ஸ்யூ ராபின்சன் 'கிறிஸ்துவின் சீடர்கள்' அமைப்பின் மிஷனரிகளில் இந்தியாவில் மரித்த முதல் மிஷனரியாவார். அவர் விரும்பியபடியே ஊழிய நிலையத்திலே அவர் மரித்தார். சிறு வயதிலிருந்தே, அவர் ஒரு மிஷனரியாக வாஞ்சித்தார். யாரோ அவரை அவருடைய பலவீனமான உடல்நலத்தைப் பற்றி குறிப்பிட்டு சோர்வில் அழுத்தியபோது, அவர் ஒருபோதும் செல்லாததை விட தொலைதூர தேசத்தில் ஊழியம் செய்து தன் உயிரையே கொடுக்கலாம் என்று அவர் கூறுவதுண்டு.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
வில்லியம் நிப் William Knibb
மண்ணில் : 07.09.1803
விண்ணில் : 15.11.1845
நாடு : பிரிட்டிஷ் ஐக்கிய இராச்சியம்
தரிசன பூமி : ஜமைக்கா
வில்லியம் நிப் என்பவர் ஜமைக்காவில் ஆங்கில மிஷனரியாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் பேரரசில் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான செய்த பணிக்காக அறியப்பட்டார். வில்லியமின் சகோதரர் தாமஸ் நிப் என்பவர் மிஷனரி ஆசிரியராக ஜமைக்காவை முதலில் சென்றடைந்தார். அவர் குறிப்பிடத்தக்க ஊழியத்தையும் செய்வதற்கு முன், 1824 ஆம் ஆண்டு வெப்பமண்டல காய்ச்சல் தாமஸை தாக்கியது. பயப்படுவதற்குப் பதிலாக, வில்லியம் உடனடியாக ஜமைக்காவில் தனது சகோதரரின் இடத்தை நிரப்ப விண்ணப்பித்தார். அவர் பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டியை (பாப்டிஸ்ட் மிஷனரி சங்கம்) ஜமைக்கா செல்ல அனுமதிக்கும்படி வற்புறுத்தி 1824ஆம் ஆண்டு கிங்ஸ்டன் என்ற ஊரை சென்றடைந்தார்.
குடிமுறைக்குரிய விவகாரங்களிலும் அல்லது அரசியல் விவகாரங்களிலும் தலையிட வேண்டாம் என்று அவர் உறுதியாக அறிவுறுத்தப்பட்டாலும், அடிமைகளின் அவலநிலையை கண்ட அவரால் தாங்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை, அடிமைத்தனம் என்ற ஒரு காரியம் முற்றிலும் வெறுக்கத்தக்க ஓர் விஷயம். மேலும் அவர் அடிமைத்தனம் என்னும் "அரக்கனைக் கொல்வதற்கு" தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தீர்மானித்தார். அவர் அடிமைத்தனத்திற்கு எதிராக வெளிப்படையாகப் பிரசங்கித்து அடிமைத்தனத்தை ஆதரிக்கும் தன் சொந்த மக்களைக் கண்டித்தார். எனவே, அவர் அடிமை வணிகத்தையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்த தோட்டக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அநேக எதிரிகளை உருவாக்கினார்.
1832ஆம் ஆண்டு நடந்த "கிரேட் ஜமைக்கன் ஸ்லேவ் ரெபெல்லியன்" (ஜமைக்காவின் மாபெரும் அடிமை கிளர்ச்சி) போது அவர் கலகத்தைத் தூண்ட உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சிறைவாசம் அவரது விசுவாசத்தை அசைக்கவில்லை. விடுதலையான பிறகும், கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் அடிமைத்தனத்திற்கு எதிராக அவர் தொடர்ந்து பிரசங்கித்தார். அவர் அடிமைத்தனத்தின் கொடுமைகள் மற்றும் மிஷனரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்வைக்க இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் அங்கு ஊக்கத்துடன் பேசியதால் தேவன் மனுஷருடைய பார்வையில் தயைகிடைக்க செய்தார். இது பிரிட்டிஷ் காலனிகளில் அடிமை சட்டத்தை ஒழிக்க வழிவகுத்தது.
ஜமைக்காவுக்குத் திரும்பிய பின்னரும், நிப் கறுப்பர்களின் சமூக மற்றும் ஆத்தும நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டார். அவர் பல திருச்சபைகளை ஸ்தாபித்தார். மேலும் தீவு முழுவதும் அநேக கிராமங்களையும் பள்ளிகளையும் நிறுவினார். அவர் கிரியோல் என்ற அடிமைகளின் சொந்த மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். அடிமை ஒழிப்புக்கு பின், ஜமைக்கா ஒரு ஆன்மீக மறுமலர்ச்சியையும் கண்டது. முன்னாள் அடிமைகள் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவங்களிலிருந்து விடுவிக்கும் இயேசுவிடம் தங்கள் வாழ்க்கையை அர்பணித்தனர். ஜமைக்கா உண்மையிலேயே ஆவியிலும் மாம்சத்திலும் சுதந்திரத்தைக் கண்டது.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
Thanks for using my website. Post your comments on this