Type Here to Get Search Results !

2 Chronicles 9-12 Bible Study | Bible Sermon Notes Tamil | 2 நாளாகமம் 9-12 விலிவிய ஆராய்ச்சிக் கட்டுரை | Jesus Sam

2 CHRONICLES : 09 - 12

*PRAY READ STUDY SHARE*

🙏 📖 ✍️ 🙇‍♂️

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: 🌈 *A good leader encourages followers to tell him what he needs to know, not what he wants to hear.*




⛹️‍♂️ *Application* : II Chr. 10:15- *Listening is one of the indispensable qualities of a leader. Leaders must listen for 2 reasons: 1. To connect with others; and 2. To learn from others.* The ear of the leader must ring with the voices of the people. *A good leader encourages followers to tell him what he needs to know, not what he wants to hear. Sometimes 50 percent of our leadership involves simply listening.*




💡II Chr. 9:7-8-Our Lord, one day spoke to a woman at a well and said: “Woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Father” (John 4:21). In Jesus’ day, that “hour” was coming. And that hour did come so that today we are to take the Gospel to the ends of the earth. *However, in Solomon’s day, the world came to Jerusalem to hear the Gospel.*




⚠️II Chr. 9:25- This reveals the defect in this man’s character. *The king had been forbidden by the Mosaic Law to multiply horses and wives. Solomon multiplied both.*




📖II Chr. 9:7-12- Solomon answered the queen of Sheba with such wisdom that she was not only impressed but converted. How do we know this? Turn to Matthew 12:41-42. Just as the entire city of Nineveh turned to the Lord, the implication here is that the queen of Sheba did likewise. And it is no wonder that she did, for Jesus is indeed greater than Solomon… *Solomon had wisdom from God. Jesus is the wisdom of God. Solomon was a great king. Jesus is the King of kings. Solomon spoke practically to his nation. Jesus spoke powerfully to all creation. Solomon gave the queen all her heart desired. Jesus gives exceedingly abundantly above all we can ask or think. Solomon answered the queen’s questions. Jesus is the Answer to every question.*




⚠️II Chr.10:6-8- *Let us be careful of what kind of inner circle we choose!* King Rehoboam had the benefit of his father’s Inner Circle, men who gave him wise counsel. But the foolish young king rejected their advice and instead looked for advice that agreed with his own opinion.




Jaya Pradeep-Kodaikanal.


[23/08, 07:43] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣1️⃣

2 Chron 9-12

*WHAT A GOD WE SERVE* ❗️




*God is moved when His children humble themselves* ‼️




💥 When the Lord saw that they humbled themselves, this word of the Lord came to Shemaiah: “Since they have humbled themselves, I will not destroy them but will soon give them deliverance"(2Chron 12:7)




💥 Because Rehoboam humbled himself, the Lord’s anger turned from him, and he was not totally destroyed. (2Chron 12:12)




💥 “See how Ahab has humbled himself before Me? Because he has humbled himself before Me, I will not bring the calamity in his days"(1 Kings 21:29)




“ *GOD OPPOSES THE PROUD BUT SHOWS FAVOR TO THE HUMBLE. HUMBLE YOURSELVES , THEREFORE , UNDER GOD'S MIGHTY HAND* ,”(1 Peter 5:5,6)




Usha

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: *23.08.2023*




👑 *நியாயமும் நீதியும் செய்கிற ராஜா* 👑




☄️ *உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்* (2 நாளாகமம் 9:8).




💥 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் சிறந்த ஞானத்தை சோதிக்க வந்தாள். சாலொமோனின் ஞானமும் அவனது ஆட்சியின் மகத்துவமும் அவளை முற்றிலுமாக வென்றன. அவள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, *தேவன் இஸ்ரவேலை நேசித்தபடியினால், சாலொமோனை நியாயமும் நீதியும் செய்யும்படி அவர்கள்மேல் ராஜாவாக்கினார்* என்று சொன்னாள்.




💥 இயேசு சேபாவின் ராஜஸ்திரீயை *மேன்மையானவைகளைத் தேடிச்செல்பவர்க்கு நல்லதொரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.* இயேசு சொன்னார், *“தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.”* (மத்தேயு 12:42). சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனையும் அவனுடைய ராஜ்யத்தின் மகிமையையும் கருத்தாய் தேடிவந்தது போல, இன்று ஜனங்கள் *சாலொமோனை விட மிகவும் பெரியவரான இயேசுவையும் அவருடைய ராஜ்யத்தின் மகத்துவத்தையும் மிகுந்த அக்கறையோடு தேட வேண்டும்.*




💥 காலங்கள் செல்ல சாலொமோனின் ராஜ்ஜியத்தின் மகிமை மறைந்தது, ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் *நித்திய ராஜ்யம்; அதன் மகிமை ஒப்பற்றது, என்றும் மறையாதது.* எனவேதான், தாவீது கிறிஸ்துவின் ராஜ்யத்தைப் பற்றிக் கூறினான்: *"உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.”* (சங்கீதம் 145:13).




💥 தேவன் சாலொமோனை *நியாயமும் நீதியும் செய்யும்படி* இஸ்ரவேலின் மீது ராஜாவாக்கினார் என்று சேபாவின் ராஜஸ்திரீ குறிப்பிட்டாள். நீதியும் நியாயமும் கிறிஸ்துவின் சிங்காசனத்தின் ஆதாரமாகவே செயல்படும். சங்கீதக்காரனின் வார்த்தைகள்: *"நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்."* (சங்கீதம் 89:14). கிறிஸ்துவின் ராஜ்யத்தில் மட்டுமே உண்மையாகவே நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும். எனவே, தாவீது இயேசுவைப் பற்றி எழுதுதியுள்ளான்: *"அவர் பூவுலகை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்."* (சங்கீதம் 9:8).




💥 சாலொமோன் ஒரு பெரிய ராஜாதான், ஆனால் *இயேசுவோ ராஜாதி ராஜா* (வெளிப்படுத்தல் 17:14).




💥 நாமும் இயேசுவோடு ஆளுகை செய்வோம் என்பதை பவுல் மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார்: *"அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்."* (2 தீமோத்தேயு 2:12). எல்லா ராஜ்யங்களும் தேவனுடைய பரிசுத்தவான்களால் ஆளப்படும் என்று தேவன் தானியேல் மூலம் வெளிப்படுத்தினார்: *“வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்.”* (தானியேல் 7:27).




💥 இயேசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்: *"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல."* (யோவான் 18:36). விசுவாசிகளுக்கு பவுலின் அறிவுரை: *"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்."* (பிலிப்பியர் 3:20).




🔹 *நம்முடைய ராஜாதிராஜா திரும்பி வரும்போது அவரைச் சந்திக்க நாம் ஆயத்தமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நாம் சாலொமோனை விட மிகவும் பெரியவரான இயேசுவையும் அவருடைய ராஜ்யத்தின் மகத்துவத்தையும் மிகுந்த அக்கறையோடு தேட வேண்டும்.*

2️⃣ *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அதன் மகிமை ஒப்பற்றது, என்றும் மறையாதது.*

3️⃣ *கிறிஸ்துவின் ராஜ்யத்தில் மட்டுமே உண்மையாகவே நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும்.*

4️⃣ *நாமும் இயேசுவோடு அவருடைய நித்திய ராஜ்யத்தில் ஆளுகை செய்வோம்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: *தன்னை பலப்படுத்திக் கொண்ட பின் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டு விட்டான்.*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




2 நாளாகமம் 12: 1. *ரெகொபெயாம் ராஜ்யத்தை திடப்படுத்தி, தன்னை பலப்படுத்தி கொண்ட பின், அவனும், அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டு விட்டார்கள்.*




1. கர்த்தருக்கு ஆலயத்தை கட்டிய சாலொமோனின் மகன் ரெகோபெயாம் ராஜ்யத்தை திடப்படுத்தினான். தன்னை பலப்படுத்தினான். ஆனால் அவனும் இஸ்ரவேலர் அனைவரும், இம்மட்டும் உதவின, அதிசயங்களை செய்த, கர்த்தரை மறந்து, நன்றி கெட்டவர்களாய் நியாயப்பிரமாணங்களை விட்டு விட்டார்கள்.




அப்படியானால் கர்த்தருடைய இருதயம் எவ்வளவு வேதனையடைந்திருக்கும். *இஸ்ரவேல் ஜனங்களை இம்மட்டும் போஷித்து, அற்புதங்களை செய்து, அவர்களுக்காக யுத்தம் பண்ணி, ஓரு தகப்பனை போல தூக்கி சுமந்து நடத்தின கர்த்தரை மறந்து, அன்னிய தெய்வங்களை சேவிக்கும் போது நம் பரம தகப்பனின் இருதயம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்பதை உணர முடியும் அல்லவா?*




2. *இந்த விதமாகவே தான் நாமும் நம் தாயின் கருவிலிருந்தே நம்மை தெரிந்தெடுத்து, நம் வாழ்க்கையின் ஒவ்வோரு பகுதியிலும் நம்மை அதிசயமாய் நடத்தி, ஆசீர்வதித்த கர்த்தரை, நம்முடைய படிப்பில், வேலையில், குடும்ப வாழ்க்கையில், பிள்ளைகளுடைய வாழ்க்கையில், உலக, ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் பலப்படும் போது, ஆசீர்வதிக்கப்படும் போது, நாம் கர்த்தரை மறந்து, அவர் அன்பை மறந்து, அவர் வார்த்தைகளை மறந்து நன்றி கெட்டவர்களாய், பின்மாறி போகிறவர்களாய் காணப்படுகிறோம் அல்லவா?* ஆவிக்குரிய வாழ்க்கையில் நாளுக்கு நாள் வளராதவர்களாய், கனி கோடுக்க முடியாதவர்களாய், சாட்சியின் வாழ்க்கையில் நிலைத்திருக்க முடியாதவர்களாய் காணப்படுகிறோம் அல்லவா?




*உலக ஆசீர்வாதங்களிலே, உல்லாசங்களிலே மூழ்கி, கர்த்தருக்காக வேறுபட்ட வாழ்க்கை வாழ வேண்டிய நாம் புறஜாதிகளின் மார்க்கங்களை கற்றுக் கொண்டு, கர்த்தருடைய வார்த்தைகளை, கட்டளைகளை விட்டு விட்டோமா ?* நம்மை நாமே ஆராய்வோம்.




3. ஆனால், *நாம் பலப்படும் போது, ஆசீர்வதிக்கப் படும் போது இன்னும் அதிகமாய் நாம் கர்த்தரிலும், அவர் வார்த்தைகளிலும் அன்பு கூர வேண்டும். கீழ்ப்படிய வேண்டும். நன்றியுடன் துதிக்க வேண்டும். ஆராதிக்க வேண்டும். இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.*




ஆம், *நாம் பலப்படும் போது இன்னும் அதிகமாய் கர்த்தருக்கும், அவர் வார்த்தை களுக்கும் கீழ்ப்படிய கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆமென், அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: 2.நாளாகமம்12

🌹🌹🌹🌹🌹🌹

ரெகொபெயாம் தனக்குத் தேவை என்று உணர்ந்தவரை கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தான்.

ஆனால், கடவுளைச் சார்ந்திருக்காமல் அவன் தன்னைச் சார்ந்து வாழ்ந்தான்.

.ரெகொபெயாமின் பாவத்தில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அது முழு ராஜ்யத்தையும் அவனுடன் பாவத்திற்கு அழைத்துச் சென்றது.

ஷெமாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஊக்கப்படுத்தவில்லை அவர்கள் இவனது தலைமையை நிராகரித்து இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை உருவாக்கினர். யூதா கடவுளை கைவிட்டால் அவர்கள் தங்கள் தேவையின் நாளில் கர்த்தர் அவர்களைக் கைவிடுவார். அவருடைய மக்களின் மனந்திரும்புதலின் பிரதிபலிப்பாக ,கடவுள் யூதாவுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்தார். சாலொமோன் தன் மகன் ரெகொபெயாமுக்கு ஆலயத்திலும், அரண்மனையிலும் பெரும் செல்வத்தை விட்டுச் சென்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரெகொபெயாமும் ,யூதாவும் கர்த்தருடைய சட்டத்தை கைவிட்டதால் அந்த செல்வம் பெருமளவில் இல்லாமல் போனது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர் சென்னை இந்தியா குழு எண்.2196.

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: ✝️ *LEARN THE DIFFERENCE* ✝️ 2 Chron 9-12

They will, however, become subject to him, so that they may *learn the difference* between serving me and serving the kings of other lands.”12:8.




🔹There is an ‘in between’ stage when we are not totally abandoned by God. 12:5-8. It is being subject to man and serving man instead of submitting to God and serving Him out of love. Rehoboam listened to his friends and did what they told him. 10:10-14.




🔹After Rehoboam's position as king was established and he had become strong, he and all Israel with him abandoned the law of the Lord. His father Solomon, though very wise, did not *know the God of mercy* as his father knew. He was called to reign in peace, but his yoke was heavy on his slaves and he scourged them with whips. 10:11. It is natural for the rich and the strong to depend on their arm of flesh and turn away from God. But we have been called to *know our Lord that He is a God Who exercises kindness, justice and righteousness on earth, for in these He delights*. Jer 9:23-24. Rehoboam did not show any mercy to Jeroboam and the Israelites who came to him begging for mercy. 10:2-7. As we arrange our lives according to other people’s opinions/ practices and become people pleasers, we cannot serve God with all our heart and strength. That is why sometimes a man’s family members become his enemies.




🔹The Levites and priests abandoned their pasturelands and property and came to Judah and Jerusalem, because Jeroboam and his sons had rejected them as priests of the Lord. Are we ready to leave our comfort zone to follow the Lord? Those from every tribe of Israel who set their hearts on seeking the Lord, the God of Israel, followed the Levites to Jerusalem to offer sacrifices to the Lord, the God of their ancestors. 11:13-14,16.




🔹No one can serve man and God at the same time. If we boast in our wisdom, riches and strength, it is very difficult to spend time to know the Lord. The choice varies from person to person. We can compare the time we set apart each day for ourselves, our family, our job and *the time we are willing to spend with God*, for God and decide for ourselves our priority. I am not talking about the time we spend praying for our personal needs. Some people boast about the time they spend in serving the Lord while they don’t spend anytime with Him *to know Him intimately*. That is also very dangerous. How much time are we willing to spend time to *read the word of God to know Him more*?

🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

*God bless!*😊

Dr. Sangeeta Thomas.

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *நுகம்* 🍂




ஆழ்மனதில் இருந்த பிரச்சனை மேலெழுந்தது. மகிழ்ச்சியின்மை திடீரென்று வரவில்லை. *சிறிது காலமாகவே சுமையின்பாரம் ஆழ் மனதில் எரிந்து கொண்டிருந்தது.* ஜனங்கள் தங்கள் ராஜாவின் செல்வம் மற்றும் ஆடம்பரத்தால் திணறினர். *அதிகமான வரிகளின் சுமையை அவர்கள் சுமக்க வேண்டியிருந்தது.* சாலொமோனின் மரணத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சனை உடனடியாக வெளியே வந்தது.




📖 *உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள் (2 நாளா 10:4).*




செல்வங்களுக்கு மறைவில் *பெருமை மற்றும் சுயநலம் இருந்தது.* இது ஞானமுள்ள அரசன் கூட *தன் ஜனங்களின் சுமையைப் பகுத்தறியத் தவறிவிடுவான் என்பதை சுட்டி காட்டுகிறது.* கரிசனை இல்லாமல் மற்றவர்கள் மேல் அதிகமான பாரத்தை நாம் சுமத்தும் போது அது கண்டிப்பாக வெளிப்படும். நாம் *இரக்கமுள்ளவர்களாகவும் மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதற்கு கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக.*




_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 23, 2023_

[23/08, 07:43] (W) Arun Selva Kumar: *👍THE RISE AND FALL OF SOLOMON👎*




[DAY - 130] 2 Chronicles Ch. 9-12




☄️2 Chronicles chapters 9-12 focuses on the greatness and the failures of King Solomon.




1️⃣ *DIVINE WISDOM AND KNOWLEDGE* (2 Chronicles 9:1-12)




🔹Solomon's greatness began with the manifestation of God's extraordinary wisdom bestowed upon him.

🔹People from far and wide sought to witness and learn from the wisdom of Solomon, Queen of Sheba being one of them.

🔹Solomon's wisdom was not merely intellectual; it encompassed discernment, understanding, and insight into matters of justice and governance.

🔹This divine wisdom enabled him to make sound decisions that brought prosperity and stability to the kingdom.




2️⃣ *THE MAGNIFICENCE OF SOLOMON’S TEMPLE* (2 Chronicles 9:13-31)




🔸Solomon spared no expense in adorning the Temple with gold, precious stones, and fine craftsmanship.

🔸The grandeur of this structure symbolized the glory of God and served as a focal point for worship.

🔸The Temple stood as a tangible representation of Solomon's devotion to God and his commitment to honor Him through opulent worship.




3️⃣ *SOLOMON’S WEALTH AND PROSPERITY* (2 Chronicles 9:13-31)




🔺Solomon's annual income in gold alone was staggering, with merchants and traders from all corners of the world bringing tribute to his court.

🔺The abundance of resources under his rule allowed for vast building projects, the establishment of a strong military, and the expansion of trade networks.

🔺Solomon's wealth was not only a symbol of his greatness but also a reflection of God's favor upon him and the fulfillment of His promises.




4️⃣ *SOLOMON’S ADMINISTRATIVE ABILITIES* (2 Chronicles 10-12)




▪️Solomon's greatness extended beyond wisdom and wealth to his administrative prowess.

▪️He organized Judah into twelve districts, assigning governors to oversee each region.

▪️These governors ensured the fair and just administration of laws and taxes, fostering peace and stability throughout the kingdom.

▪️Additionally, Solomon built an efficient bureaucracy that provided for the welfare of his people and promoted the growth of commerce and agriculture.




5️⃣ *SOLOMON’S DOWNFALL AND GOD’S DISCIPLINE* (2 Chronicles 12)




▫️Unfortunately, despite his remarkable achievements, Solomon's greatness began to wane as he turned away from God.

▫️His accumulation of wealth led to the corruption of his heart, and he began to engage in idolatrous practices.

▫️As a consequence, God raised up enemies against Solomon, and the kingdom faced division and turmoil.




♥️ *LIFE LESSONS*




💥Solomon's greatness, was multi-faceted and awe-inspiring.

💥Solomon's reign became a golden age in the history of Israel.

💥Solomon's legacy teaches us the importance of seeking divine wisdom, using our resources for God's glory, and remaining steadfast in our devotion to Him.




*‼️LET US BE GUIDED BY GODS WISDOM AND GRACE AND NOT BY OUR OWN UNDERSTANDING‼️*




Princess Hudson


[23/08, 07:43] (W) Arun Selva Kumar: Day 131.




*God, behind Solomon's great wealth and wisdom*

2 Chronicles 9:1-8




The queen of Sheba had heard about Solomon's wealth and wisdom and she was overwhelmed, when she saw for herself .




The queen put Solomon’s reputation to test by asking tough questions. She saw his God given wisdom. She saw the palace he had built, the meals that were served, impressive court officials, numerous servants, cupbearers and elaborate and extravagant worship with burnt offerings and she was amazed. *The gentile queen recognised Solomon's greatness is from Yahweh*




As people get to know you, do they catch a glimpse of God behind you and in you.*Your life is your most powerful witness*




Cynthia Sathiaraj

Chennai


[23/08, 04:52] +91 99431 72360: *நாள் 131 /365 *

*2 நாளாகமம் 9-12*




*சமாதானத்தின் வாய்க்கால்கள்*..




சாலொமோனுக்கு,

700 மனையாட்டிகளும்..

300 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.

இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்திருக்கக்கூடும்.

ஆனாலும், அவனுடைய குமாரரில்.. ரெகொபெயாம் பெயர் மாத்திரமே.. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலொமோனுடைய பெயரைச் சொல்லும்படி.. அவனுக்கு ஒரே ஒரு குமாரன்தான் இருந்தான் என்பதையே இது காட்டுகிறது… (1 நாளா.3 :10 )




சாலொமோன்,கர்த்தருக்கு ஆலயம் கட்டி,

பலிசெலுத்தினாலும்..

அவன் அந்நிய தெய்வங்களுக்கும் கோயில்களைக் கட்டி..

தூபங்காட்டினான்..

சாலொமோன் குடும்பத்தைப் பாவம் ஆளுகை செய்தது.. *பாவத்தினால் கட்டப்படும்.. எந்த* *ஒரு குடும்பமும், ஆசீர்வாதமாக* *இராது*..




சாலொமோன் மிகப் பெரிய ஞானி.. ஆனால், ரெகொபெயாம் மூடனாக இருந்தான்..

*தேவஞானமும்..கிருபையும்*.. *பரம்பரையாக வருவதில்லை*.. *தேவனோடுள்ள நெருங்கிய* *உறவும்..அவருடைய* *வார்த்தைகளுக்குக்* *கீழ்ப்படிதலுமே*.. *அதற்கு* *முக்கியம்*..



இஸ்ரவேலர், சாமுவேல் மூலம் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது.. கர்த்தர் ஒரு ராஜா.. மக்களை எப்படியெல்லாம் நடத்துவான் என்று கூறி அவர்களை எச்சரித்தார்.

(1 சாமு.8 :10 -19)

ஆனால் ஜனங்கள், தங்களுக்கு ராஜா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள்




இப்பொழுது அங்கே இஸ்ரவேலர்.. ரெகொபெயாமிடம் சென்று, உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள் மேல் வைத்தார்..உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும்..பாரமான நுகத்தையும் இலகுவாக்கும் என்றார்கள்..

( 2 நாளா.10 : 4 )

*அவர்கள்,சாலொமோனுடைய* *விக்கிரக ஆராதனையை* *நீக்கவேண்டும் என்று* *கேட்கவில்லை*..

*இது…தேசம், தேவனைவிட்டுப்* *பின்வாங்கிப்போனதையே*.. *காட்டுகிறது*..




ஒரு ராஜா, தேசத்து ஜனங்களின் பிரச்சினைகளையும்.. கோரிக்கைகளையும் ஏற்று.. அதற்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கவேண்டும்..

ஆனால் ரெகொபெயாம், முதியோர் சொன்ன நல்ல ஆலோசனைகளை விட்டுவிட்டு.. வாலிபரின்..ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டான்..

(2 நாளா .10 : 7 -11 )




*ரெகொபெயாமுடைய*, *மதியீனமும்..துன்மார்க்கமுமான* *நட்பும்..இஸ்ரவேலிலே..10* *கோத்திரத்தார்..பிரிந்துபோகக்* *காரணமாயிற்று.யூதாதேசம்* *பலவீனமாயிற்று*.




ஒரு ராஜா, ஜனங்கள் மீது பிரியமாகயிருந்தால்தான்.. ஜனங்களும், ராஜா மீது பிரியமாக இருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கே பிரிவினைதான் உண்டாகும்.. இந்த சத்தியம் தேசங்களுக்கு மாத்திரம் அல்ல.. குடும்பங்களுக்கும் ஏற்றது.




*மெதுவான பிரதியுத்தரங்களும்*, *கோபம் இல்லாத கரிசனையான* *வார்த்தைகளும்.. எப்பொழுதும்* *நல்லது.கோபத்தினால் சாதிக்க* *முடியாததை..அன்பினால்* *சாதிக்கலாம்*.




கர்த்தருடைய பிள்ளைகள், தாங்கள் பேசுகிற வார்த்தைகளைக் குறித்து.. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் பிரிவினையை உண்டாக்குகிறவர்களாக அல்ல..

சமாதானத்தை நாடுகிறவர்களாக..

சமாதானம்பண்ணுகிறவர்களாக இருக்கவேண்டும்..

அதுவே நம் ஒவ்வொருவரைக்

குறித்த தேவசித்தம் என்பதை

நாம் மறந்துபோகக் கூடாது..




*ஒவ்வொரு நாளும்..தேவனே ,உம்முடைய* *சமாதானத்தின்* *வாய்க்கால்களாக..எங்களை*

*மாற்றுமென்று ஜெபிப்போம்*..




*சமாதானம்பண்ணுகிறவர்கள்*

*பாக்கியவான்கள்..அவர்கள்*

*தேவனுடைய புத்திரர்* *என்னப்படுவார்கள்*..

( மத்.5 : 9 )




மாலா டேவிட்


[23/08, 04:52] +91 99431 72360: *👍THE RISE AND FALL OF SOLOMON👎*

*👍சாலொமோனின் எழுச்சியும் வீழ்ச்சியும்👎*




[நாள் - 131]

2 நாளாகமம் 9-12




☄️2 நாளாகமம் அத்தியாயங்கள் 9-12 சாலொமோன் மன்னரின் மகத்துவங்களையும் தோல்விகளையும் மையப்படுத்துகிறது.




1️⃣ *தெய்வீக ஞானமும் அறிவும்* (2 நாளாகமம் 9:1-12)




🔹சாலொமோனின் மகத்துவம் அவருக்கு அருளப்பட்ட தேவனுடைய அசாதாரண ஞானத்தின் வெளிப்பாட்டுடன் தொடங்கியது.

🔹சாலொமோனின் ஞானத்தைக் காணவும் கற்கவும் தொலை தூரத்தில் இருந்தும் மக்கள் முயன்றனர். சேபாவின் ராஜஸ்திரீ அவர்களில் ஒருவராவார்.

🔹சாலமோனின் ஞானம் வெறும் அறிவுசார்ந்ததல்ல; இது நியாயம் மற்றும் நிர்வாக விஷயங்களில் விவேகம், புரிதல் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கியது.

🔹இந்த தெய்வீக ஞானம், ராஜ்யத்திற்கு செழிப்பையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வரும் உறுதியான முடிவுகளை எடுக்க அவருக்கு உதவியது.




2️⃣ *சாலொமோனின் ஆலயத்தின் மகத்துவம்* (2 நாளாகமம் 9:13-31)




🔸சாலொமோன் தங்கம், விலையுயர்ந்த கற்கள் மற்றும் சிறந்த கைவினைத்திறன் ஆகியவற்றால் ஆலயத்தை அலங்கரிப்பதில் எந்தச் செலவையும் பின்வைக்கவில்லை.

🔸இந்தக் கட்டமைப்பின் மகத்துவம், தேவனுடைய மகிமையைக் குறிப்பதோடு, ஆராதனையின் மையப் புள்ளியாகவும் செயல்பட்டது.

🔸தேவன்மீது சாலொமோன் வைத்துள்ள பக்தியையும், வளமான ஆராதனை மூலம் தேவனை கௌரவிக்க அவருடைய அர்ப்பணிப்பிற்கும் உறுதியான பிரதிநிதித்துவமாக இந்த ஆலயம் இருந்தது.




3️⃣ *சாலொமோனின் செல்வமும் செழுமையும்* (2 நாளாகமம் 9:13-31)




🔺சாலொமோனின் ஆண்டு வருமானம் தங்கத்தில் மட்டுமே பிரமிக்க வைக்கிறது, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வணிகர்களும் வர்த்தகர்களும் மதிப்பின் வெளிப்பாடாக அவரது அரசவையில் வெகுமதிகளைக் செலுத்தினர்.

🔺அவரது ஆட்சியின் கீழ் ஏராளமாக குவிந்த வளங்கள், பரந்த கட்டிடத் திட்டங்களுக்கும், வலுவான இராணுவத்தை நிறுவுவதற்கும், வர்த்தக பிணையங்களை விரிவாக்குவதற்கும் ஏதுவாக இருந்தது.

🔺சாலொமோனின் செல்வ வளம் அவருடைய மகத்துவத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் மீது தேவனுடைய தயவையும், அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் பிரதிபலிக்கிறது.




4️⃣ *சாலொமோனின் நிர்வாகத் திறன்கள்* (2 நாளாகமம் 10-12)




▪️சாலமோனின் மகத்துவம் ஞானத்தையும் செல்வத்தையும் தாண்டி அவரது நிர்வாக திறமை வரை விரிவடைந்தது.

▪️அவர் யூதாவை பன்னிரண்டு மாவட்டங்களாக ஒழுங்குபடுத்தி, ஒவ்வொரு பிராந்தியத்தையும் மேற்பார்வையிட ஆளுநர்களை நியமித்தார்.

▪️இந்த ஆளுநர்கள் சட்டங்கள் மற்றும் வரிகள் நீதியாகவும் நியாயமாகவும் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்தனர். இதிநிமித்தம் ராஜ்யம் முழுவதும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் வளர்த்தனர்.

▪️கூடுதலாக, சாலொமோன் தனது மக்களின் நலனுக்காகவும், வணிகம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு திறமையான அதிகாரத்துவத்தை உருவாக்கினார்.




5️⃣ *சாலமோனின் வீழ்ச்சியும் தேவனுடைய சிட்சையும்* (2 நாளாகமம் 12)




▫️துரதிர்ஷ்டவசமாக, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்திருந்தபோதிலும், சாலொமோன் தேவனை விட்டு விலக விலக அவரது மகத்துவமும் குறையத் தொடங்கியது.

▫️அவரது செல்வக் குவிப்பு அவரது இருதயத்தை சீர்கெடுக்க வழிவகுத்தது, மேலும் அவர் விக்கிரக வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.

▫️இதன் விளைவாக, தேவன் சாலொமோனுக்கு எதிராக எதிரிகளை எழுப்பினார், மேலும் ராஜ்யம் பிளவையும் கொந்தளிப்பையும் எதிர்கொண்டது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥சாலொமோனின் மகத்துவம், பன்முகத்தன்மை கொண்டதாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் இருந்தது.

💥சாலொமோனின் ஆட்சி இஸ்ரவேலின் வரலாற்றில் பொற்காலமாக அமைந்தது.

💥சாலொமோனின் மரபு, நமக்கு தெய்வீக ஞானத்தைத் தேடுவதன் முக்கியத்துவத்தையும், நம்முடைய வளங்களை தேவனுடைய மகிமைக்காகப் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தையும், அவர் மீதான பயபக்தியில் உறுதியாக இருக்கவேண்டியதின் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறது.




*‼️நமது சொந்த புரிதலினால் அல்ல, தேவனுடைய ஞானத்தினாலும் கிருபையினாலும் வழிநடத்தப்படுவோமாக ‼️*




பிரின்சஸ் ஹட்சன்




தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


[23/08, 04:52] +91 99431 72360: ஷாலோம் 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦




🙋‍♂️🙋‍♀️ படித்து தியானம் செய்யலாம்

*2 நாளாகமம் 9 : 1-9*




*THE CONCEPT OF "SEEING IS BELIEVING"*




*"காண்பது நம்புவதற்கு சமம்" என்ற கருத்து*




📝 ஆதியாகமம் 10:7b இல் *சேபா* *நோவாவின்* மகன் *காமின்* கொள்ளுப் பேரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வேதாகம அறிஞர்கள் *"சேபா"* என்று அழைக்கப்படும் இடம்/நாடு எத்தியோப்பியா அல்லது ஏமனில் இருப்பதாக நம்பினர்.




📝 இன்றைய வாசகப் பகுதியில் சேபாவின் ராஜஸ்திரீயின் சாட்சியம்/முதல்தர அறிக்கையைப் படிப்பது ஊக்கமளிக்கிறது. நான் *வந்து* அதை *என் கண்களால் காணுமட்டும்*... நான் *கேள்விப்பட்ட* பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது" (வ. 5-6) என்று கூறினாள்.




🙋‍♂️🙋‍♀️ ஆம், "காண்பது நம்புவதற்கு சமம்" : *அவள் வந்தாள் 👣 ; அவள் பார்த்தாள் 👀 அவள் நம்பினாள்* 🙇‍♂️




📝 இன்றைய பத்தியானது கேட்கும்திறனின் பிரிவு நன்மையுடன் தொடங்குகிறது 👂 : "சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் புகழைப்பற்றி *கேட்டபோது* கடினமான கேள்விகளுடன் அவரை *சோதனை செய்ய* எருசலேமுக்கு *வந்தாள்*. அவரைச் சந்திக்க வருமாறு சாலொமோனிடமிருந்து அவளுக்கு அழைப்பு இல்லை அல்லது வரவேற்கப்படுவதற்கான உத்தரவாதமும் இல்லை.




*நமது கேட்கும் பிரிவு செயலில் உள்ளதா*❓

யாக்கோபு எழுதுகிறார், *".. ஆகையால் யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள். "* (1:19)




🙋‍♀️ சேபாவின் ராஜஸ்திரீ இதைப் பற்றி கேள்விப்பட்டாள்

1️⃣ சாலொமோனின் பெயரும் புகழும்

2️⃣ தேவனோடுள்ள சாலொமோனின் உறவு

3️⃣ சாலொமோனின் செல்வமும் ஐசுவரியமும்

4️⃣ சாலொமோன் கட்டிய அற்புதமான ஆலயமும் அரண்மனையும்.




📍 அவள் இரண்டு காரணங்களுக்காக எருசலேமுக்கு வந்தாள்:

1) *அவள் சாலமோனை சோதிக்க வந்தாள்*

🔖 கடினமான கேள்விகளுடன் வந்தாள்

🔖 அவன் வாழ்வில் தேவனுடைய தயவை காண்பதற்கு வந்தாள்

2) *வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றம்* செய்வதற்கு( வ1b, 9,12 )




🙋‍♂️ சாலொமோன் அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார், ஏனெனில் *அவர் தேவனுடைய ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்* (வ. 2; *2 நாளா 1:12*)

🙋‍♀️சேபாவின் ராஜஸ்திரீ

1️⃣ சாலமோனின் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டாள்.

2️⃣ இஸ்ரவேலின் தேவனைத் துதித்தாள்.

3️⃣ சாலொமோனின் வாழ்கையில் தேவனின் தயவை ஒப்புக்கொண்டாள்.

4️⃣அவருக்கு தங்கம் மற்றும் மிகுதியான கந்தவர்க்கங்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள்.




💞 பிரியமான திருச்சபையே, சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனால் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது, ஆனால் சாலொமோனை விட பெரியவர் ஒருவர் ( *இயேசு கிறிஸ்து*) நம்மிடம் இருக்கிறார், அவரிடம் வந்து கற்றுக்கொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். (லூக்கா 11:31; மத் 11:28-29)




🙋‍♂️🙋‍♀️ கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக நிற்போம், அல்லது *நியாயத்தீர்ப்பின் நாளிலே சேபாவின் ராஜஸ்திரீ இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்.* (மத் 12:42)




தேவனுக்கே மகிமை 🙌

✍🏻 *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


[23/08, 04:52] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*

*நாள் 131*

*23.08.2023*

*புதன் கிழமை*

*2 நாளாகமம் 9 - 12*




*முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு , தன்னோடே வளர்ந்தவர்களும் , தன் சமுகத்தில நிற்கிறவர்களுமாகிய, வாலிபரோடே ஆலோசனை பண்ணி , ...... 2 நாளா 10 : 8*

சாலொமோனின் குமாரனாகிய ரொகாபெயாம் , தன் தகப்பனைப் போலல்லாது , ஜனங்களுக்கு கடினமான மறுமொழிக் கொடுத்தான்.

முதியவர்கள் கொடுத்த நல்ல ஆலோசனைகளைத் தள்ளிவிட்டு , வாலிபா்கள் கொடுத்த ஆலோசனையின் படியே , *என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார் , நான் அதை அதிக பாரமாக்குவேன் ; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினால் தண்டித்தார் , நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.* 2 நாளா 10 : 14

இப்படி ஒரு ராஜா தன் ஜனங்களுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்தால் , அதன் விளைவு என்னவாயிருக்கும் ? பிரியமானவர்களே.

இதனால் இஸ்ரவேலர் எல்லோரும் , தாவீதின் வமசத்தை விட்டுப் பிரிந்து போனார்கள். ரெகாபெயாமின் புத்தியில்லாத சொற்களினால் ஜனங்கள் சிதறிப் போனார்கள் ; இஸ்ரவேலில் பத்துக் கோத்திரத்தார் அவனைவிட்டு விலகுவதற்கு , அது ஏதுவாயிற்று

ரெகொபெயாம் தன் சொந்த ஜனங்களுக்குச் செவிகொடாமற் போனபடியினால் , கர்த்தர் அகியாவைக் கொண்டுச் சொன்னத் தீர்க்கதரிசனத்தின் படியே , இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. *மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும் ; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும் (நீதி 15 : 1*) அல்லவா ?

*ஆமென் ! அல்லேலூயா ! !*




Rajam Theogaraj , Palayamkottai.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


[23/08, 18:51] +91 99431 72360: 23.08.2023




*🌹சிப்பிக்குள் முத்து🌹*




இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 நாளா : 9 - 12*




*🍏முத்துச்சிதறல் : 131*




🎈🎈🎈🎈

*உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் இராஜாவாயிருக்கும்படிக்கு,*

உம்மை தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க பண்ண, *உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்க படுவாராக :, உம்முடைய தேவன்* இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலை நிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்க்கு *உம்மை அவர்கள் மேல் இராஜாவாக வைத்தார் என்றாள்.*

(2 நாளா - 9 : 8)

🎈🎈🎈🎈




*🦋"எல்லா புகழும் இறைவனுக்கே"🦋*




🍇🌽🍇🌽🍇🌽

✍️சாலமோனின் ஞானம் குறித்தும், அவன் கீர்த்தி குறித்தும் மட்டுமல்ல.... *"அவனது தேவனாகிய கர்த்தரின் நாமத்தை குறித்தும் தான்"* சேபாவின் அரசி *கேள்விப்பட்டாள்.*

(1 இராஜா - 10 : 1)




📌சாலமோனின் தேவன் எப்படிப்பட்டவர் என்றும்,




📌அவன் இருதயத்தில் அருளப்பட்ட ஞானத்தின் எடையை நிறுத்து பார்த்து... *தனக்கு இருக்கும் ஞானத்திற்கும் சாலமோனுக்கு அருளப்பட்டதாக பிரபல படுத்தப்பட்ட அவனது "கீர்த்திக்குமுறிய ஞானத்திற்குமான வேறுபாட்டினை"* அறிந்துக்கொள்ள வேண்டி...அவனை விடுகதைகளினால் சோதிக்க

*அவள் தென் தேசத்தில் இருந்து...*

அதாவது.....

சேபா என்கிற இடத்தில் இருந்து...

*(தற்காலத்தில் ஏமன் என்று அறியப்படும் இடத்தில் இருந்து)* மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும் மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் *எருசலேமுக்கு வந்தாள்.*




*எருசலேமில் வாசம் செய்த தேவனே தேவன்.* அல்லேலூயா 🙋‍♀️!




🫐🤝🫐🤝🫐




சாலமோனின் ஞானம் என்பது அவன் வணங்கி வந்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை சார்ந்த ஞானமாக...

*"பரத்தில் இருந்து அருளப்பட்ட ஞானமாக"* இருந்தது என்பதை இந்த இராஜஸ்திரி கேள்வி படுகிறாள்.




சாலமோனை குறித்த காரியங்கள் அனைத்தும் மிகை படுத்தப்படுவதாக அவள் மனதில் தோன்றிட்டு.




தான் கேள்விப்படுவதின் உண்மை தாற்பரியத்தை...

*தானே நேரடியாக சென்று அறிந்து கொள்ள அவள் மனதில் ஓர் துடிப்பு உண்டாயிற்று.*




தனக்கு சொல்லப்பட்டதை...

*தன் ஆனை காதுகளுக்கு வழங்க பட்ட தீனி* மெய்தானா❓️ என்பதினை தன் கண்களால் காண வாஞ்சித்தாள்.




👍🥒👍🥒👍




*தான் கேள்விப்பட்டதை வைத்து... அல்லது, "தனக்கு அறிவிக்க பட்டதை வைத்து எவரையும் எடை போடா அவள் குணம்" போற்றுதலுக்கு உரியது.*




தேவன் சாலமோனுக்கு கடற்கரை மணலத்தனையாய் *மனோவிருத்தியையும்* அருளியிருந்தார்.




ஆனால் அதன் உண்மை நிலை இப்படி பிறரால் பரிசோதிக்க பட்டு... இறைவனுக்கு புகழ் உண்டாக தக்கதான ஓர் செய்கையும் *வரலாற்றில் நிகழ்ந்தது வேதத்தில் பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது.*




*அதை இயேசு கிறிஸ்துவும் உறுதியாக்கியுள்ளது மிக மிக கவனிக்க படவேண்டிய விஷயமாக்கும்.* (மத் - 12 : 42)




🥦🍓🥦🍓




*இயேசு கூறுவது எல்லாம் அவள் சாலமோனின் ஞானத்தை கேட்க வந்தாள் என்கிறார்.*

(தனது விடுகதைகளை விடுவிக்கும் உத்தி சாலமோனுக்கு உண்டா❓️ என்று பரிசீலிக்க / பரிசோதிக்க வந்தாள்.)

*அந்த ஞானம் பரத்தில் இருந்து இறைவனால் சாலமோனுக்கு வழங்கப்பட்டதாக அவள் கேள்வி பட்டாளாம்.*




அப்படியென்றால்....




*🔰🔰எந்த புஸ்தகங்களின் வாயிலாகவும் அன்றி நேரடியாக உண்டாகிய இறை ஞானம் சாலமோனுக்கு வழங்க பட்டிருந்ததை...*

அவள் தானே நேரடியாக வந்து பரிசோதித்து பார்த்து அதை உறுதியாக்கி கொண்டவள்.




🐟🦩🐟🦩




*இவள் பூமியின் எல்லைகளில் இருந்து வந்தவள் என்று இயேசு குறிப்பிட்டார்.*




தூர தேசத்தில் இருந்து சாலமோனின் முக தரிசனத்தை தேடி இவள் வந்தவள்.




🍒🌲🍒🌲🍒




சேபாவின் அரசி சாலமோனின் சகல மகிமையை கண்ணார கண்டபின்....

*🎊அவள் உன்னதமான தேவனை,*




*🎊இஸ்ரவேலின் தேவனை,*




*🎊பேசும் கடவுளை,*




*🎊சாலமோனின் தேவனை*




போற்றி, உயர்த்தி மகிமை படுத்தினாள்.




*சாலமோனை இஸ்ரவேலின் அரியணையில் ஏற்றிய தேவனாகிய கர்த்தரை துதித்தாள், போற்றினாள், அவருக்குரிய மகிமையை தன் நாவால் வெளிப்படையாய் உச்சரித்து இறைவனுக்குரிய புகழ்ச்சியை புகழ்ந்தாள்.*




அவள் கூறிய பல போற்றுதலில்...




*இறைவனையும் சாலமோனையும் இணைக்கிறாள்.*




எப்படி என்கிறீர்களா ❓️🤔




✅️1. சாலமோன் *கர்த்தருக்கு முன்பாக* அரசனாக இருக்கும்படி...




✅️2. *கர்த்தரின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க...*




✅️3. சாலமோன் மேல் பிரியங் கொண்ட *இறைவன்...*

*ஸ்தோத்தரிக்க படுவாராக :,*




✅️4. *உம்முடைய தேவன்* "இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலை நிறுத்தும்படிக்கு"

*சிநேகிக்கிறதினாலே*




✅️5. *அவர்* நியாயமும் நீதியும் செய்கிறதற்க்கு... *உம்மை* அவர்கள் மேல் இராஜாவாக வைத்தார்...

என்றாள்.




*என்னே ஓர் அற்புதமான ஆராட்டு, பாராட்டு*

தன் மனதார இறைவனுக்கு, ஜீவனுள்ள தேவனுக்கு, அவள் வழங்கினாள்.




🥕🍇🥕🍇




இந்நாட்களில் நம்மில் பலர் பல ஏடுகளின் வாயிலாக தான் தங்கள்/ எமது அறிவை பெருக்கி கொள்ளுகின்றோமே தவிர.....*பரத்தில் இருந்து உண்டாகும் அந்த தெய்வீக ஞானத்தை அடைய வாஞ்சை, தாகம், ஜெபம், வேண்டுதல் எல்லாம் ஏதோன்றும் இராதது வருந்ததக்க விஷயம்.*




💐🌽💐🌽💐




*ஞான குறைவு உள்ளோர் பரம ஞானியாம் இறைவனிடம் தான் ஓடி தனக்கு வேண்டிய ஞானத்தை கேட்டு பெற்றுக்கொள்ள விவிலியம் எமக்கு வழிக்காட்டுகிறது.* (யாக் - 1 : 5)




அறிவை பெருக்கி கொள்ள பலர் பலவிதமான உலக கல்வி, படிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டாலும்...

*உலக ஞானம் என்பது....உலக அறிவு பெருக்கத்திற்கு வேண்டுமானால் தேவைப்படலாம்.*

ஆனால் தெய்வீக ஞானமுள்ளோர் இல்லாததினால் பல குழப்பங்கள் குடும்பங்களில், திருச்சபைகளில், சமூகத்தில் புரையோடி கிடைக்கிறதை நாம் காண நேர்கிறது.

நாமோ....

*இறைவன் பரத்தில் இருந்து எமக்கு அருளி இருக்கிற ஞானமாகிய இயேசுவை உடையோராக*.... இருக்கிறோம்.

(1 கொரி - 1 : 31)




நாம் இவ்வுலகில் மற்றொரால் "கர்த்தருடைய பிள்ளைகள் / அவரது சொந்த சம்பத்துக்கள் என அறியப்பட்டோராக விளங்குதலே...

*இறை நாமத்துக்கு புகழ்ச்சியும், கனமும், பிற இனத்தவரால் உண்டாகும் என்பதை புரிந்து கொள்ளுவோம்.*




🍏🍓🍏

அன்று இயேசுவுக்கு எதிரிகளாக செயல்பட்ட யூத மார்க்க வைராக்கிய தலைவர்கள் நடுவே பரம ஞானமாக இருந்த இயேசு நின்று கொண்டு... அவர்களுக்கு அறிவுரை மற்றும் கண்டனங்களை தெரிவித்த ஒரே காரணத்தினால்...

*மெய் ஞானத்தை* (இயேசுவை,)

*அறியும் அறிவை வெறுத்து தள்ளி நின்றனர்.*




நாமோ அப்படி இராமல்...

*இயேசுவை குறித்த கூடுதல் அறிவை, பரிசுத்த வேதாகாமத்தை குறித்து கூடுதல் அறிவை அடைய முற்படுவோம்.




🍅💐🍅




ஜனங்கள் என்னை யார் என்கிறார்கள்❓️ என இயேசு தம் சீடரிடம் கேட்டு அறிந்து கொள்ளுகிறார்.

(மத் - 16 : 13)




*அதுபோல நாமும் அவ்வப்பொழுது மற்றோரிடம்....*

(சபையாரிடம், இன ஜன பந்துக்களிடம், நண்பர்களிடம், அக்கம் பக்க மக்களிடம்....)

*பிறர் நம்மை யாராக வர்ணிக்கிறார்கள் என்பதை பேச்சு வாக்கில் கேட்டு அறிந்து கொண்டு, நம்மை சீர்ப்படுத்திக்கொண்டே வர வேண்டும்.*




இங்கு சாலமோனின் கீர்த்தி பூமியின் எல்லை பரியந்தமும் எட்டியதாம்.




ஏன் அப்படி ஆண்டவர் எட்ட வைக்க வேண்டும்❓️

மக்கள் சாலமோனின் கடவுளை குறித்து அறிந்து கொள்ள வேண்டி தானே தவிர, தனி மனிதனின் பேர் பிரஸதாபத்திற்கல்ல.




🦀🍏🦀🍏🦀🍏




*அப். பேதுரு அதை த்தான்.....*

*அதாவது...*

எல்லோரும் இயேசுவை அறிகிற அறிவை பெற வலியுறுத்தி......

*தன்னை போல அருமையான விசுவாசத்தை பெற்றுள்ள அனைவருக்கும்* ஆலோசனை வழங்க பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்த பட்டுள்ளார்.

*(2 பேது - 1:1 & 3:18)*




🍏🌹🍏🌹🍏




சாலமோனுக்கும், அவர் இறைவனோடு சரியாக இருந்த காலகட்டத்தில் அவர் வணங்கி வந்த இஸ்ரவேலின் தேவனுக்கும் இத்தனை புகழ்ச்சி ஓர் அந்நிய நாட்டவளான அதுவும் ஓர் அரசி (பெண்ணின்) வாயிலாக உண்டாகியது என்றால்...

*சாலமோனிலும் பெரியவர்*

என்று தன்னையே அறிமுகப்படுத்தி கொள்ளும் *இயேசுவை குறித்து*

நீங்களும், நானும் என்ன கேள்வி பட்டுள்ளோம்❓️

அதன் உண்மை தார்ப்பறியத்தை *அந்த சேபா நாட்டு அரசி கண்டு உணர விரும்பியது போல...*

இயேசுவை குறித்து கூடுதலாக அறிந்து கொள்ள நாம் என்னென்ன முயற்சிகள் இதுவரை எடுத்துள்ளோம்❓️

என...

*நம்மையே சீர்த்தூக்கி பார்க்க ஆண்டவர் எமக்கு தயவும் அனுக்கிரகமும் புரிவாராக !*




எந்த தேவ பிள்ளையும் தேவ ஞானத்தால் நிரப்ப பட்டு இருப்பதை கேள்வி படுகிறோமா, இல்லை கண்ணார காண்கிறோமோ, அப்பொழுது.....

*எல்லா புகழும் இறைவனுக்கே !* என்று சொல்லி அவருக்கே அந்த கனத்தை செலுத்த கற்றுக்கொள்ளுவோமா❓️

நம்முடைய தேவனை குறித்து பிறர் அறிந்து கொள்ள வேண்டி, நீங்களும் நானும் இறைவனிடம் எந்த அருளை வாஞ்சித்து கேட்க போகிறோம் என்று இன்று சிந்திப்போமா❓️




*✍️Sis. Martha Lazar*

*NJC, Kodairoad*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.