Type Here to Get Search Results !

2 Chronicles 13-16 Bible Study | Tamil Christian Message | 2 நாளாகமம் 113-16 ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

2 CHRONICLES : 13 - 16*

2நாளாகமம் : 13-16

💐💐💐💐💐💐

*கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசாக காரியம் ;எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்குத் துணை நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்த கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்*.

(2நாளாகமம் : 14:11)

★ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இந்த ஜெபம் மிகவும் முக்கியமானது. இந்த ஜெபத்தை மனப்பாடம் செய்து நாம் தியானிக்க வேண்டும்.

★அற்புதங்கள் செய்வது நமது பார்வையில் சிரமமானவை. கர்த்தருக்கு எளிதானவை.

★ நம் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள், நெருக்கங்கள் வரும் போது, கர்த்தரை நோக்கி இத்தகைய ஜெபங்களை ஏறெடுக்கும் போது அற்புதங்கள் நடைபெறுவதை நிச்சயமாக உணரலாம்.

*ஆமென்*.

✍️ Bhavani Jeeja Devaraj,

Nagercoil.

Admin: Group No. 2068

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: 🌈 *Let us get in a room by ourself, draw a circle right around us, and say, “Lord, begin a revival, and let it start inside this circle.”*

*⛹️‍♂️Application* : II Chr. 15:17- Asa practiced spiritual separation. Separation is not an attempt to straighten out every individual and try to force men whom God is using to conform to our pattern. That is the narrowest form of bigotry. Some folk ought to get separated from themselves—that would really be separation! *If we want revival, the place to begin is with ourself. As suggested by someone let us get in a room by ourself, draw a circle right around us, and say, “Lord, begin a revival, and let it start inside this circle.”*

⛹️‍♂️ *Application* : II Chr. 16:12-Asa turned to the physicians. There is nothing wrong in that. The point is that he did not turn to God in all of this. *When we get sick, there are two things we ought to do: we should call the doctor and we should call upon God.* Probably the most practical writer in the New Testament said, “Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord” (James 5:14). *He said two things should be done. The first was prayer, turning to God, calling on the name of the Lord. The second was anointing the sick one with oil. He was saying they should call on the Lord and call the doctor. That is practical.*

💡II Chr. 15:1-3-The tragedy of the hour in our day is that there is not enough Bible teaching in the church. *We do not need more preachers. Bible teachers are few and far between; yet they are needed.* And they were needed in Asa’s day.

🏋️‍♀️II Chr. 16:7-9- We need to clearly understand that although there is one act of faith which saves us—that is justification is by faith; the moment we put our trust in Jesus Christ, we are saved—life does not end when we are saved. We are to live by faith. Do we know that we cannot possibly please God unless we believe Him? (Heb. 11:6). *Let us not only be saved by faith, let us live by faith.*

Jaya Pradeep-Kodaikanal.

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣2️⃣

2 Chron 13-16

*WHAT A GOD WE SERVE* ❗️

*God is looking for a heart, loyal to Him* ‼️

💥 For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show Himself strong on behalf of those whose heart is loyal to Him (2Chron 16:9)

💥 Asa’s heart was loyal to the Lord all his days (1 Kings 15:14)

💥 You shall act in the fear of the Lord, faithfully and with a loyal heart (2Chron 19:9)

🙏🙏 *Let your heart be loyal to the Lord our God* , to walk in His statutes and keep His commandments (1 Kings 8:61)

Usha

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: *24.08.2023*

❎ *மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்* ❎

☄️ ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: *கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்* என்றான் (2 நாளாகமம் 14:11).

⚡ *ஆசா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.* அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமைதியாக இருந்தது. கர்த்தர் அருளிய அந்த சமாதான வருஷங்களில் ஆசா யூதாவிலே அரணானப் பட்டணங்களைக் கட்டினான்.

⚡ அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு வந்தான். இது ஆசாவின் சேனையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்காக இருந்தது; ஆசாவிடம் இரதங்கள் இல்லை. *ஆசா உதவிக்காக கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.*

⚡ ஆசாவின் ஜெபத்திலுள்ள *விண்ணப்பங்கள்:*

▪️ *பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்.*

▪️ *நாங்கள் உம்மைச் சார்ந்துள்ளதால், எங்களுக்குத் துணைநில்லும்.*

▪️ *நாங்கள் உம்முடைய நாமத்தில் செல்வதால், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்.*

☄️ *பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்*

⚡ *சேராவின் சேனை எல்லா வகையிலும் ஆசாவின் சேனையை விட வலிமை வாய்ந்தது.* எனவே, சேராவைத் தோற்கடிக்கத் *தேவன் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.* தேவன் நிச்சயமாகவே ஆசாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவார். *பலமுள்ளவர்களுக்கு எதிராக பலனற்றவர்களுக்கு அவரால் மட்டுமே உதவி செய்யமுடியும் என்பதை இஸ்ரவேலின் வரலாற்றில் தேவன் பலமுறை நிரூபித்துள்ளார்.*

⚡ நமது எதிரியான *சாத்தான் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாகத் தாக்குகிறான்.* தேவன் ஆவிக்குரிய பிரகாரமாக நம்மைப் பலப்படுத்தாவிட்டால் பிசாசுக்கு எதிராக நாம் பலனற்றவர்களாயிருக்கிறோம். *தேவனுடைய துணையோடும் அவருடைய சர்வாயுதவர்க்கத்தோடும் மட்டுமே வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை நம்மால் வெல்ல முடியும்.* (எபேசியர் 6:11-17).

☄️ *நாங்கள் உம்மைச் சார்ந்துள்ளதால், எங்களுக்குத் துணைநில்லும்*

⚡ தாவீதின் சாட்சியம்: *“கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”* (சங்கீதம் 9:10). இரட்சிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அறிக்கையிட முடியும்: *“தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.”* (ஏசாயா 12:2). தேவன் தன்னை நம்புபவர்களுக்கு நிச்சயமாக உதவுவார். எனவே, *“நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே."* (எபிரெயர் 13:6).

☄️ *நாங்கள் உம்முடைய நாமத்தில் செல்வதால், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்*

⚡ இந்த *யுத்தம் கர்த்தருடையது* என்பதை ஆசா உணர்ந்து, அவருடைய மகிமைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று வேண்டினான். தாவீது கோலியாத்துக்குச் சொன்ன வார்த்தைகளை நாம் நினைவுகூரலாம், *“நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.”* (1 சாமுவேல் 17:45). பெரிய மற்றும் வலிமைமிக்க கோலியாத்தைக் கொல்ல இளம் தாவீதுக்குத் தேவன் உதவினார்.

⚡ வேதம் கூறுகிறது: *"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."* (1 யோவான் 5:4). *அவரை யாரும் மேற்கொள்ள முடியாது* என்பதால், தேவன் நம்முடைய விசுவாசத்தின் மூலம் உலகம் மற்றும் பிசாசின் மீது நமக்கு *வெற்றியைத் தருகிறார்.*

🔹 *தேவன் நம்முடைய பட்சத்திலிருப்பதால் பிசாசு நம்மை வெல்ல முடியாது என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *பலமுள்ளவர்களுக்கு எதிராக பலனற்றவர்களுக்கு அவரால் மட்டுமே உதவி செய்யமுடியும் என்பதை இஸ்ரவேலின் வரலாற்றில் தேவன் பலமுறை நிரூபித்துள்ளார்.*

2️⃣ *தேவனுடைய துணையோடும் அவருடைய சர்வாயுதவர்க்கத்தோடும் மட்டுமே வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை நம்மால் வெல்ல முடியும்.*

3️⃣ *அவரை யாரும் மேற்கொள்ள முடியாது என்பதால், தேவன் நம்முடைய விசுவாசத்தின் மூலம் உலகம் மற்றும் பிசாசின் மீது நமக்கு வெற்றியைத் தருகிறார்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்.16.

🌺🌺🌺🌺🌺🌺

"ஆசாவின் முடிவு ஏமாற்றம்."

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஆசா தனது உடன்படிக்கை கடவுளுடன் இருந்ததை மறந்து விட்டான். ஒரு புறமத அரசனுடன் உடன்படிக்கை பண்ணினான் .

கடந்த காலத்தின் மாபெரும் வெற்றிகளை ஆசா நினைவுகூர வேண்டும் என்று கடவுள் விரும்பினார்.

ஒரு பெரிய எதிரியின் மீது தனக்கு வெற்றியைக் கொடுத்த அதே கடவுளால் சிறிய எதிரியான சிரியாவின் மீதும் வெற்றியைக் கொடுக்க முடிந்தது என்பதை ஆசா நினைவில் கொள்ளத் தவறிவிட்டார்.

பல ஆண்டுகளாக நன்றாக ஆட்சி செய்து இறைவனைத் தேட மறந்த ஒரு மனிதனின் சோகத்தை ஆசா நமக்குக் காட்டுகிறார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *சார்ந்து கொள்ளும் விஷயங்கள்* 🍂

யூதாவின் சிறந்த அரசர்களில் ஆசாவும் ஒருவன். அவன் ஆரம்பத்தில் *தேவனாகிய கர்த்தருக்கு பயந்தவனாகவும், ஆண்டவரை நேசிக்கிறவனாகவும், அவரைச் சார்ந்து ஜீவிக்கிறவனுமாக இருந்தான்*. ஆனால் கடைசி காலங்களில், அவன் தேவனை சார்ந்து வாழத் தவறிவிட்டான்.

ஆசா *தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை*. அதனால் சிரியாவின் படை அவன் கையிலிருந்து தப்பித்தது என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. முன்பு ஆசா *கர்த்தரைச் சார்ந்திருந்தபோது* தேவனாகிய கர்த்தர் எத்தியோப்பியர்களின் பெரிய படையை அவனது கைகளில் ஒப்புக் கொடுத்தார் (2 நாளா 16:7, 8).

*சார்ந்து* என்ற வார்த்தையின் அர்த்தம் யார் மீதாவது *முழு நம்பிக்கை வைத்திருப்பது ஆகும்*. நாம் யாரும் சுதந்திரமானவர்கள் அல்ல. நாம் யாரையாவது அல்லது எதையாவது சார்ந்திருக்க தான் வேண்டும். *ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் முழுவதுமாக தேவனை சார்ந்து இருக்க வேண்டும்.*

இதில் மாற்றம் ஏற்படும் போது, இறுதியில் தோல்வியை கொண்டு வருகிறது. நாம் எதை நம்புகிறோம்? நமது ஆரோக்கியத்தையா, செல்வத்தையா அல்லது செல்வாக்கையா? *நீண்டகாலம் வெற்றி வேண்டுமாயின் தேவனாகிய கர்த்தரையே மட்டுமே சார்ந்து இருக்கவும்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 24, 2023_

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: *உமக்கு லேசான காரியம்*

~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம். 14: 11. *ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்கு துணை நில்லும்.* என ஜெபித்தார்.

1. ஆசா ராஜாவுக்கு விரோதமாக 10 லட்சம் எத்தியோப்பியர் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறார்கள். ஆனால் ஆசாவோ தன் படைகளையோ, மனித உதவிகளையோ தேடாமல், முதலாவது தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். அதாவது ஜெபித்தார்.

ஆம், இன்று நம்மோடு யுத்தம் பண்ணுவதற்கு நம்மை சுற்றிலும் துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகள் ஆகிய திரள்கூட்டம் சுற்றி வகை தேடுகிறது. ஆம் நாமும் கூட செய்ய வேண்டியது நம் கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும். ஜெபிக்க வேண்டும். மனித உதவியை நாடாமல், தேடாமல் கர்த்தருடைய முகத்தையே தேட வேண்டும். அப்போது அவர் நமக்கு தேவையான மனித உதவியை கட்டளையிடுவார்.

2. ஆசாவின் ஜெபத்தை பாருங்கள்! *கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்.* என்றார். ஒரு பிள்ளை ஒரு தகப்பனிடம் கேட்பது போல, அப்பா உங்களுக்கு இதை எனக்கு வாங்கி தர முடியும், செய்ய முடியும் என்று அன்போடு, நம்பிக்கையோடு, எந்த சந்தேகமும் இல்லாதபடி கேட்கிறது போல தானே இருக்கிறது!

நாமும் கூட தகப்பன், பிள்ளை என்ற அன்பின் உறவோடு , முழு நம்பிக்கையோடு, சந்தேகப்படாமல் கர்த்தருடைய உதவியை கேட்போம். தாவீது *இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும். மனிதனுடைய உதவி விருதா என்கிறார்.* சங்கீதம் 60: 11. ஆம், *உதவியற்ற சிறுமையானவனை அவர் விடுவிப்பார்*. சங்கீதம் 72:12. ஆம், நாமும் கூட நம்முடைய ஒவ்வொரு பிரச்சனைகளிலும் கர்த்தருடைய உதவியை நாடுவோம்.

3. *எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்* என ஜெபிக்கிறார். ஆம், *கர்த்தர் ஆபத்து காலத்தில் அநுகூலமான துணை* என்பதை ஆசா அறிந்திருந்தார். ஆகவே 10 லட்சம் பேர் யுத்தத்திற்கு நிற்கும் போதும், *கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்* என ஜெபிக்கிறார்.

நாமும் கூட நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ உற்றார், உறவினர், நண்பர்கள் நமக்கு துணையாயிருப்பார்கள் என நம்பினோம். அது கிடையாமல் துக்கப்பட்டோம். ஆனால் நாம் கர்த்தரை நம் துணையாக வைக்கும் போதோ, அவர் நினையாத மனித துணைகளை கட்டளையிடுவார்.

4.மட்டுமல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தாவே *உம்மை சார்ந்து, உம்முடைய நாமத்தில் இந்த ஏராளமான கூட்டத்திற்கு எதிராக வந்தோம்.*

ஆம், நமக்கு விரோதமாய் போராடும், யுத்தம் பண்ணும் இந்த ஏராளமான கூட்டத்தை மேற்கொள்ள *கர்த்தரை சார்ந்து, இயேசுவின் நாமத்தில் சத்துருவை எதிர்ப்போம்.*

5. கடைசியாக, *கர்த்தாவே மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்* என்கிறார். என்னை என்று கூறவில்லை. *உம்மை மேற்கொள்ள விடாதேயும்* என்கிறார். அப்படியானால் *யுத்தம் கர்த்தருடையது. ஆம், கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார்.*

*நம்முடைய வாழ்க்கையிலும் கூட கர்த்தர் தான் நமக்காக யுத்தம் பண்ண வேண்டும். அப்போது தான் நாம் நம்முடைய சத்துருக்களை ஜெயிக்க முடியும்.*

ஆம், இந்த ஆசாவை போல ஜெபித்து, நமக்கு விரோதமாயிருக்கும் ஏராளமான கூட்டத்தை மேற்கொள்ள கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆவியானவர் கொடி ஏற்றுவாராக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: 👨‍👩‍👧‍👦 ALL JUDAH DECIDED TO SEEK THE LORD - AND THE LORD GAVE THEM REST 🔥📕🌹

2 Chronicles 15 : 12-15

“They entered into a covenant to SEEK THE LORD, the God of their ancestors, with ALL THEIR HEART AND SOUL.

All who would not seek the Lord, the God of Israel, were to be put to death, whether small or great, man or woman.

🎺🎶🗣️They took an oath to the Lord with loud acclamation, with shouting and with trumpets and horns.

👨‍👩‍👧‍👦 All Judah rejoiced about the oath because they had sworn it wholeheartedly.

They sought God eagerly, and he was found by them.

So THE LORD GAVE THEM REST on every side.”

‭‭🍁🍃☘️🍁☘️🍁🍂☘️

Do we seek the Lord wholeheartedly ?

🌹💕📕☘️🍁🌹

[24/08, 07:49] (W) Arun Selva Kumar: *✨IMPACTFUL LEADERSHIP✨*

[DAY - 131] 2 Chronicles Chapters 14-16

☄️King Asa demonstrated great faith and devotion to God and gave an impactful leadership to Judah.

1️⃣ *ASCENSION TO THE THRONE*

🔹Asa became king of Judah in the 20th year of the reign of Jeroboam, the king of Israel, after the death of Abijah. He was the great grandson of King Solomon.

🔹“Asa did what was good and right in the eyes of the Lord, his God.” (2 Chronicles 14:2).

2️⃣ *MILITARY REFORMS*

🔸Recognizing the importance of a well-equipped army, Asa took measures to ensure the security and protection of his kingdom.

🔸He commanded his people to fortify the cities and build walls around them, providing a formidable defense against potential threats.

🔸Asa assembled a well-trained and organized army of 580,000 warriors, equipped with shields, spears, and helmets.

🔸These military reforms demonstrated Asa's commitment to safeguarding his people and preserving the sovereignty of Judah.

3️⃣ *SPIRITUAL REFORMS*

🔺Asa recognized the need to eradicate idolatry and restore true worship of God.

🔺He removed the foreign altars and high places, demolishing the pagan symbols and idols that had enticed the people from God.

🔺He even removed his own mother, Maakah, from her position as queen mother due to her idol worship.

🔺Asa's decisive actions in purging the land of idolatry reflected his unwavering commitment to the worship of the one true God.

4️⃣ *RENEWAL OF THE COVENANT*

▫️Central to Asa's reforms was the renewal of the covenant between God and the people of Judah.

▫️He gathered the nation together in Jerusalem and led them in a solemn assembly before the Lord.

▫️Asa called upon the people to seek God and observe His commandments wholeheartedly.

▫️The people responded positively to this call, entering into a renewed covenant with God, vowing to follow His ways and worship Him alone.

▫️Asa's emphasized that true change begins with a genuine commitment to God.

5️⃣ *ASA’S FAILURE*

▪️When confronted by an Ethiopian army that vastly outnumbered his forces, Asa turned to God for help and the Lord granted him a remarkable victory.

▪️However, in later years, Asa's faith wavered when faced with a threat from the northern kingdom of Israel.

▪️Rather than relying on God, he sought assistance from a foreign king, compromising the trust he had previously placed in God alone.

♥️ *LIFE LESSONS*

💥King Asa's reign stands as a testament to the potential for transformative leadership when guided by unwavering faith and a sincere desire to align a nation with God's will.

💥 Asa’s failure to trust in God during the fag end of his life is a lesson for us all to hold on to the Lord till our last breath.

*‼️LET US ALWAYS DO WHAT IS GOOD AND RIGHT IN THE EYES OF THE LORD, OUR GOD‼️*

Princess Hudson

[24/08, 04:38] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️

*365 நாட்களில் வேதவாசிப்பு*

*நாள்: 132* *24/08/2023*

*வியாழக்கிழமை*

*2நாளாகமம் 13 - 16*

*ஜெபிக்க,படிக்க,*

*தியானிக்க,பகிர*.

✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.

[24/08, 04:38] +91 99431 72360: *24.08.2023*

❎ *மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்* ❎

☄️ ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: *கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்* என்றான் (2 நாளாகமம் 14:11).

⚡ *ஆசா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.* அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமைதியாக இருந்தது. கர்த்தர் அருளிய அந்த சமாதான வருஷங்களில் ஆசா யூதாவிலே அரணானப் பட்டணங்களைக் கட்டினான்.

⚡ அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு வந்தான். இது ஆசாவின் சேனையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்காக இருந்தது; ஆசாவிடம் இரதங்கள் இல்லை. *ஆசா உதவிக்காக கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.*

⚡ ஆசாவின் ஜெபத்திலுள்ள *விண்ணப்பங்கள்:*

▪️ *பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்.*

▪️ *நாங்கள் உம்மைச் சார்ந்துள்ளதால், எங்களுக்குத் துணைநில்லும்.*

▪️ *நாங்கள் உம்முடைய நாமத்தில் செல்வதால், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்.*

☄️ *பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்*

⚡ *சேராவின் சேனை எல்லா வகையிலும் ஆசாவின் சேனையை விட வலிமை வாய்ந்தது.* எனவே, சேராவைத் தோற்கடிக்கத் *தேவன் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.* தேவன் நிச்சயமாகவே ஆசாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவார். *பலமுள்ளவர்களுக்கு எதிராக பலனற்றவர்களுக்கு அவரால் மட்டுமே உதவி செய்யமுடியும் என்பதை இஸ்ரவேலின் வரலாற்றில் தேவன் பலமுறை நிரூபித்துள்ளார்.*

⚡ நமது எதிரியான *சாத்தான் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாகத் தாக்குகிறான்.* தேவன் ஆவிக்குரிய பிரகாரமாக நம்மைப் பலப்படுத்தாவிட்டால் பிசாசுக்கு எதிராக நாம் பலனற்றவர்களாயிருக்கிறோம். *தேவனுடைய துணையோடும் அவருடைய சர்வாயுதவர்க்கத்தோடும் மட்டுமே வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை நம்மால் வெல்ல முடியும்.* (எபேசியர் 6:11-17).

☄️ *நாங்கள் உம்மைச் சார்ந்துள்ளதால், எங்களுக்குத் துணைநில்லும்*

⚡ தாவீதின் சாட்சியம்: *“கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”* (சங்கீதம் 9:10). இரட்சிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அறிக்கையிட முடியும்: *“தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.”* (ஏசாயா 12:2). தேவன் தன்னை நம்புபவர்களுக்கு நிச்சயமாக உதவுவார். எனவே, *“நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே."* (எபிரெயர் 13:6).

☄️ *நாங்கள் உம்முடைய நாமத்தில் செல்வதால், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்*

⚡ இந்த *யுத்தம் கர்த்தருடையது* என்பதை ஆசா உணர்ந்து, அவருடைய மகிமைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று வேண்டினான். தாவீது கோலியாத்துக்குச் சொன்ன வார்த்தைகளை நாம் நினைவுகூரலாம், *“நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.”* (1 சாமுவேல் 17:45). பெரிய மற்றும் வலிமைமிக்க கோலியாத்தைக் கொல்ல இளம் தாவீதுக்குத் தேவன் உதவினார்.

⚡ வேதம் கூறுகிறது: *"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."* (1 யோவான் 5:4). *அவரை யாரும் மேற்கொள்ள முடியாது* என்பதால், தேவன் நம்முடைய விசுவாசத்தின் மூலம் உலகம் மற்றும் பிசாசின் மீது நமக்கு *வெற்றியைத் தருகிறார்.*

🔹 *தேவன் நம்முடைய பட்சத்திலிருப்பதால் பிசாசு நம்மை வெல்ல முடியாது என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *பலமுள்ளவர்களுக்கு எதிராக பலனற்றவர்களுக்கு அவரால் மட்டுமே உதவி செய்யமுடியும் என்பதை இஸ்ரவேலின் வரலாற்றில் தேவன் பலமுறை நிரூபித்துள்ளார்.*

2️⃣ *தேவனுடைய துணையோடும் அவருடைய சர்வாயுதவர்க்கத்தோடும் மட்டுமே வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை நம்மால் வெல்ல முடியும்.*

3️⃣ *அவரை யாரும் மேற்கொள்ள முடியாது என்பதால், தேவன் நம்முடைய விசுவாசத்தின் மூலம் உலகம் மற்றும் பிசாசின் மீது நமக்கு வெற்றியைத் தருகிறார்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[24/08, 04:38] +91 99431 72360: Mrs.Merin Gnanaraj

Covai.

Day : 131

Date: 23.8.22

✍️இன்றைய வசனம் :

🔸தங்களை தாழ்த்தினார்கள்.

🔸கொஞ்சம் சகாயத்தை கட்டளையிட்டார்.

2 நாளா 12:7.

🎯விளக்கம்:

👉ரெகோபெயாமின் 5 ஆம் வருடம்

🔸ராஜ்யம் திடப்பட்டது

🔸ராஜா திடமானார்.

👉அதன் பின்

🔸ராஜாவும் ஜனங்களும் தேவனைவிட்டு விட்டனர்

12:1

👉எனவே கர்த்தர்,

🔸"நீங்கள் என்னைவிட்டு விட்டீர்கள்

நானும் உங்களை விட்டுவிட்டேன்"

🔸என்று எகிப்தின் ராஜா சீஷாக்கின் கையில் ஒப்புக் கொடுத்தார்

👉அதன் பின்

🔸தங்களை தாழ்த்தினார்கள்

🔸கர்த்தர் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிட்டார்.

👉தேவனை தேடும் போது

🔸எருசலேம் தேவாலயம் பொன், வெள்ளியால் நிறைந்திருந்தது.

👉தேவனை விட்ட போதோ

🔸அனைத்தும் சீஷாக்கால் கொண்டுபோகப் பட்டது.

👉 தாழ்த்திய பின்

🔸ராஜா தன்னை திடப்படுத்தினார்

🔸யூதாவில் சில காரியங்கள் சீரானது.

🔸தேவாலயத்தில் எல்லாம் வெண்கல மயமானது.

🎯சிந்தனைக்கு,

🔸நம் பெலவீனங்களில் நாம் கண்டிப்பாக தேவனை நோக்குவோம்.

👉ஆனால்

🔸ரெகோபெயாமைப் போல்

பெலன் கொண்டு திடமடைந்ததும் தேவனை மறக்க கூடாது

👉ஏனெனில்

🔸பொன், வெள்ளியாய் இருக்கும் ஆசீர்வாதம்

வெண்கலமாகலாம்..

🔸கர்த்தரை தெய்வமாக கொண்ட நாம் பாக்கியமுள்ளவர்கள்.

👉எனவே

🔸 எல்லா சூழ்நிலையிலும்

தேவனோடிருப்போம்.

ஆமென்..🙏

[24/08, 04:38] +91 99431 72360: *நாள் 132 /365 *

*2 நாளாகமம் 13-16 *

*முடிவுபரியந்தம்*

*நிலைத்திருப்போம்*..

இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா.. யூதாவுக்கு விரோதமாக ராமாவைக் கட்டினபோது..

(2நாளா .16 :1 )

யூதாவின் ராஜாவாகிய ஆசா, கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல்.. தன் சுயயுக்தியின்படி

செயல்பட்டான்..

கடந்த காலத்தில்,

எத்தியோப்பியனான சேரா..மிகப்பெரிய சேனையோடு வந்தபோது..

கர்த்தர் அவனது ஜெபத்தைக் கேட்டு ..எத்தியோப்பியரை முறியடித்ததை மறந்துபோனான்.

( 2 நாளா.14 : 17 )

இப்பொழுதும்,அவன் கர்த்தரை சார்ந்திருந்தால்.. கர்த்தர் அவனுக்குத் துணை நின்றிருப்பார்.

ஆசா ,கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களை.. சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்திற்கு லஞ்சமாகக் கொடுத்து.. அவனுடைய உதவியை நாடினான். அதனால்

பெனாதாத், இஸ்ரவேலர் மீது யுத்தம் செய்ததினால்.. பாஷா ராமாவைக் கட்டுவதை

விட்டுவிட்டான்.

(2 நாளா. 16 : 2-5 )

*ஆசா* ,*கர்த்தரைச் சார்ந்து* *கொள்ளாமல்..பெனாதாத்தைச்* *சார்ந்துகொண்டபடியினால்*.. *கர்த்தருடைய கோபம்..ஆசாவின்* *மீது வந்தது*.

*ஞானதிருஷ்டிக்காரனாகிய* *அனானி*.. *ஆசாவிடம் வந்து*, *கர்த்தரின் தெய்வீகப்* *பாதுகாப்பையும்*, *பராமரிப்பையும் உணராமல்*.. *ஆசா செய்த இந்தக் காரியம்* *மதியீனமானது*..

*அது முதல் தேசத்திலே* *யுத்தங்கள் நேரிடும் என்று*

*கூறினான்*..

( 2 நாளா.16 : 9 )

கர்த்தருடைய எச்சரிப்பின் செய்தியைக் கூறின அனானியின் வார்த்தைகளைக் கேட்டு.. ஆசா

மனந்திரும்பியிருக்கவேண்டும். ஆனால் ஆசாவோ..

கடுங்கோபமடைந்து.. அவனைக் காவலறையில் போட்டான்.

ஆசா, அனானியின் கால்களில் தொழுமரத்தைக் கட்டி.. அவனை வாதித்தான்.

கர்த்தரோ,ஆசாவின் கால்களில் வியாதியைக் கொடுத்து.. அவனை வாதித்தார். *அப்பொழுதும்* *ஆசா*, *கர்த்தரை நம்பாமல்* ..

*பரிகாரிகளையே தேடினான்*.

வைத்தியர்கள் சிகிச்சை கொடுத்தாலும்..

சுகம் கொடுப்பவர் கர்த்தரே.

*அருமையாக ஆரம்பமான* *ஆசாவின் விசுவாசவாழ்வு*.. *பின்வாங்குதலில்* *முடிந்துபோனது*..

*காரணம்,ஆசாவின் இருதயம்* *அவனை வஞ்சித்தது*.

நாமும் ஆசாவைப்போல..

அநேக நேரங்களில் செயல்படுகிறோம் அல்லவா..?

நம் வாழ்வில் மிகப்பெரிய போராட்டங்களைச் சந்திக்கும்போது.. கர்த்தரைத் தவிர வேறு யாராலும் உதவி செய்யமுடியாது என்ற நிலை வரும்போது.. நாம் கர்த்தரை நம்புகிறோம்…கண்ணீர்வடிக்கிறோம்.. உபவாசிக்கிறோம் ..

ஜெபிக்கிறோம்..அவரையே விடாப்பிடியாகப் பற்றிக்கொள்கிறோம்.

ஆனால், சிறிய பிரச்சினைகளின் போது..மற்றவர்களின் உதவி கிடைக்கும்போது.. நாம் மனிதரைச் சார்ந்துகொண்டு கர்த்தரைத் தேடுவதைவிட்டு விடுகிறோம்..ஏன்..அநேக நேரங்களில் கர்த்தரையே

மறந்துவிடுகிறோம்..

*நம் தவறுகள்* *சுட்டிக்காட்டப்படும்போது*.. *அதை ஏற்றுக்கொள்ளும்* *மனப்பக்குவம் நமக்கு வேண்டும்*. *உடனடியாக..அதைத்* *திருத்திக்கொள்ளவும்* *வேண்டும்*.

*நாம் ஆரம்பத்தில் கொண்ட* *அன்பையும்,விசுவாசத்தையும்*

*விடாதிருப்போம்*..

*முடிவுபரியந்தம் கர்த்தரில்* *நிலைத்திருப்போம்*..

*நம் வாழ்வின் ஆரம்பம்* *அல்ல..முடிவே முக்கியம்*

*என்பதை..எப்பொழுதும்*

*நினைவில்கொள்வோம்*..

ஆமென்.🙏
மாலா டேவிட்

[24/08, 04:38] +91 99431 72360: 2.நாளாகமம்12

🌹🌹🌹🌹🌹🌹ரெகொபெயாம் தனக்குத் தேவை என்று உணர்ந்தவரை கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தான்.

ஆனால், கடவுளைச் சார்ந்திருக்காமல் அவன் தன்னைச் சார்ந்து வாழ்ந்தான்.

.ரெகொபெயாமின் பாவத்தில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அது முழு ராஜ்யத்தையும் அவனுடன் பாவத்திற்கு அழைத்துச் சென்றது.

ஷெமாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஊக்கப்படுத்தவில்லை அவர்கள் இவனது தலைமையை நிராகரித்து இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை உருவாக்கினர். யூதா கடவுளை கைவிட்டால் அவர்கள் தங்கள் தேவையின் நாளில் கர்த்தர் அவர்களைக் கைவிடுவார். அவருடைய மக்களின் மனந்திரும்புதலின் பிரதிபலிப்பாக ,கடவுள் யூதாவுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்தார். சாலொமோன் தன் மகன் ரெகொபெயாமுக்கு ஆலயத்திலும், அரண்மனையிலும் பெரும் செல்வத்தை விட்டுச் சென்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரெகொபெயாமும் ,யூதாவும் கர்த்தருடைய சட்டத்தை கைவிட்டதால் அந்த செல்வம் பெருமளவில் இல்லாமல் போனது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர் சென்னை இந்தியா குழு எண்.2196.

[24/08, 04:38] +91 99431 72360: நாள் : 132

24.08.2023

வியாழக்கிழமை.

2நாளாகமம் : 13-16

💐💐💐💐💐💐

*கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசாக காரியம் ;எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்குத் துணை நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்த கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்*.

(2நாளாகமம் : 14:11)

★ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இந்த ஜெபம் மிகவும் முக்கியமானது. இந்த ஜெபத்தை மனப்பாடம் செய்து நாம் தியானிக்க வேண்டும்.

★அற்புதங்கள் செய்வது நமது பார்வையில் சிரமமானவை. கர்த்தருக்கு எளிதானவை.

★ நம் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள், நெருக்கங்கள் வரும் போது, கர்த்தரை நோக்கி இத்தகைய ஜெபங்களை ஏறெடுக்கும் போது அற்புதங்கள் நடைபெறுவதை நிச்சயமாக உணரலாம்.

*ஆமென்*.

✍️ Bhavani Jeeja Devaraj,

Nagercoil.

Admin: Group No. 2068

[24/08, 04:38] +91 99431 72360: 2. நாளாகமம்.16.

🌺🌺🌺🌺🌺🌺

"ஆசாவின் முடிவு ஏமாற்றம்."

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஆசா தனது உடன்படிக்கை கடவுளுடன் இருந்ததை மறந்து விட்டான். ஒரு புறமத அரசனுடன் உடன்படிக்கை பண்ணினான் .

கடந்த காலத்தின் மாபெரும் வெற்றிகளை ஆசா நினைவுகூர வேண்டும் என்று கடவுள் விரும்பினார்.

ஒரு பெரிய எதிரியின் மீது தனக்கு வெற்றியைக் கொடுத்த அதே கடவுளால் சிறிய எதிரியான சிரியாவின் மீதும் வெற்றியைக் கொடுக்க முடிந்தது என்பதை ஆசா நினைவில் கொள்ளத் தவறிவிட்டார்.

பல ஆண்டுகளாக நன்றாக ஆட்சி செய்து இறைவனைத் தேட மறந்த ஒரு மனிதனின் சோகத்தை ஆசா நமக்குக் காட்டுகிறார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196

[24/08, 04:38] +91 99431 72360: *உமக்கு லேசான காரியம்*

~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம். 14: 11. *ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்கு துணை நில்லும்.* என ஜெபித்தார்.

1. ஆசா ராஜாவுக்கு விரோதமாக 10 லட்சம் எத்தியோப்பியர் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறார்கள். ஆனால் ஆசாவோ தன் படைகளையோ, மனித உதவிகளையோ தேடாமல், முதலாவது தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். அதாவது ஜெபித்தார்.

ஆம், இன்று நம்மோடு யுத்தம் பண்ணுவதற்கு நம்மை சுற்றிலும் துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகள் ஆகிய திரள்கூட்டம் சுற்றி வகை தேடுகிறது. ஆம் நாமும் கூட செய்ய வேண்டியது நம் கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும். ஜெபிக்க வேண்டும். மனித உதவியை நாடாமல், தேடாமல் கர்த்தருடைய முகத்தையே தேட வேண்டும். அப்போது அவர் நமக்கு தேவையான மனித உதவியை கட்டளையிடுவார்.

2. ஆசாவின் ஜெபத்தை பாருங்கள்! *கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்.* என்றார். ஒரு பிள்ளை ஒரு தகப்பனிடம் கேட்பது போல, அப்பா உங்களுக்கு இதை எனக்கு வாங்கி தர முடியும், செய்ய முடியும் என்று அன்போடு, நம்பிக்கையோடு, எந்த சந்தேகமும் இல்லாதபடி கேட்கிறது போல தானே இருக்கிறது!

நாமும் கூட தகப்பன், பிள்ளை என்ற அன்பின் உறவோடு , முழு நம்பிக்கையோடு, சந்தேகப்படாமல் கர்த்தருடைய உதவியை கேட்போம். தாவீது *இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும். மனிதனுடைய உதவி விருதா என்கிறார்.* சங்கீதம் 60: 11. ஆம், *உதவியற்ற சிறுமையானவனை அவர் விடுவிப்பார்*. சங்கீதம் 72:12. ஆம், நாமும் கூட நம்முடைய ஒவ்வொரு பிரச்சனைகளிலும் கர்த்தருடைய உதவியை நாடுவோம்.

3. *எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்* என ஜெபிக்கிறார். ஆம், *கர்த்தர் ஆபத்து காலத்தில் அநுகூலமான துணை* என்பதை ஆசா அறிந்திருந்தார். ஆகவே 10 லட்சம் பேர் யுத்தத்திற்கு நிற்கும் போதும், *கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்* என ஜெபிக்கிறார்.

நாமும் கூட நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ உற்றார், உறவினர், நண்பர்கள் நமக்கு துணையாயிருப்பார்கள் என நம்பினோம். அது கிடையாமல் துக்கப்பட்டோம். ஆனால் நாம் கர்த்தரை நம் துணையாக வைக்கும் போதோ, அவர் நினையாத மனித துணைகளை கட்டளையிடுவார்.

4.மட்டுமல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தாவே *உம்மை சார்ந்து, உம்முடைய நாமத்தில் இந்த ஏராளமான கூட்டத்திற்கு எதிராக வந்தோம்.*

ஆம், நமக்கு விரோதமாய் போராடும், யுத்தம் பண்ணும் இந்த ஏராளமான கூட்டத்தை மேற்கொள்ள *கர்த்தரை சார்ந்து, இயேசுவின் நாமத்தில் சத்துருவை எதிர்ப்போம்.*

5. கடைசியாக, *கர்த்தாவே மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்* என்கிறார். என்னை என்று கூறவில்லை. *உம்மை மேற்கொள்ள விடாதேயும்* என்கிறார். அப்படியானால் *யுத்தம் கர்த்தருடையது. ஆம், கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார்.*

*நம்முடைய வாழ்க்கையிலும் கூட கர்த்தர் தான் நமக்காக யுத்தம் பண்ண வேண்டும். அப்போது தான் நாம் நம்முடைய சத்துருக்களை ஜெயிக்க முடியும்.*

ஆம், இந்த ஆசாவை போல ஜெபித்து, நமக்கு விரோதமாயிருக்கும் ஏராளமான கூட்டத்தை மேற்கொள்ள கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆவியானவர் கொடி ஏற்றுவாராக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[24/08, 04:38] +91 99431 72360: ஷாலோம் 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 நாளாகமம் 13* இல் இருக்கிறோம்

*KING ABIJAH'S SERMON ON "PEACE"*

*"சமாதானம்" பற்றிய அபியா ராஜாவின் பிரசங்கம்*

📝 அபியாவின் முதல் பதிவு பாராட்டத்தக்கதாக இல்லை ( *1 ராஜா 15:1-8* )

📍 அவன் தன் தகப்பனாகிய *ரெகொபெயாம்* செய்த எல்லா பாவங்களையும் செய்தான் (வ. 3அ)

📍 அவனது இருதயம் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை (வ. 3 பி)

📍 ரெகொபெயாமுக்கும் யெரோபெயாமுக்கும் இடையே நடந்த யுத்தத்தை அவர் பார்த்தார் (வ. 6)

📍 அவனுக்கும் யெரோபெயாமுக்கும் இடையே யுத்தம் நடந்தது (வ 7பி; *2நாளா 13:2-3*)

📍 அவர் 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (வ. 2)

📝 *2 நாளாகமம் 13:4-12* ) இல் அபியாவின் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கவனித்தோம். யெரொபெயாம் 8,00,000 வீரர்களுடன் வந்தபோது, ​​அபியா செமராயீம் மலையில் நின்று, தாவீதின் வீட்டிற்கு இஸ்ரவேலின் சிங்காசனத்தை என்றென்றும் ஒரு *மாறாத உடன்படிக்கையின்* மூலம் வாக்குறுதி அளித்ததாக மீண்டும் வலியுறுத்தினார் (வ. 5; லேவி. 2:13; எண் 18: 19) *"யெரொபெயாமுக்கும் எல்லா இஸ்ரவேலரருக்கும் இது தெரியும்"* (வ. 4-5)

📍 உங்கள் வழிகளைக் கருத்தில் கொண்டு அவருடைய சந்நிதியில் வாருங்கள். *"மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."* சங் 118:8

🙋‍♂️ இரண்டாவதாக, பொன்கன்றுகுட்டிகளால் அவர்கள் செய்த உண்மையான வழிபாடுகள் மற்றும் தியாகங்களைப் பற்றி அவர் வட ராஜ்ஜிய மக்களுக்கு நினைவூட்டினார் (வ. 8-9)

📍 விக்கிரக வழிபாட்டை கைவிடுங்கள். *".. கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்கள்"* யோவான் 4:24

🙋‍♂️ இறுதியாக அபியா யெரோபெயாமை போரைத் தவிர்க்கும்படி வலியுறுத்தினார், ஏனெனில் அவர், *"இதோ தேவன் நமது சேனாபதியாய் நம்மோடுகூட இருக்கிறார், அவரே நமது தலைவர்"* (வ. 12a). எனவே யூதாவுக்கு எதிராகப் போரிடுவது அவர்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போரிடுவதாகும். அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் ( *வ 12c*)

📍 கர்த்தருக்கு எதிராக போரிடாதே. *"சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது"* எபி 13:1

🙋‍♂️🙋‍♀️ யெரொபெயாம் "மாறாத உடன்படிக்கையின்" *தவறான பக்கத்தில் இருந்தார்.*

கர்த்தர் எப்போதும் தவறுக்கு எதிராக சரியான பக்கத்தையே எடுத்துக்கொள்வார்.

*📍"நம்முடைய தேவன் இம்மானுவேல் என்று கூறும்போது நாம் தேவனின் பக்கம் இருக்கிறோமா"* என்பதே கேள்வி.

📍 *அபியாவின் சமாதானத்திற்கான பிரசங்கம்* இதே காரணத்திற்காக இழந்த சகவாழ்வை சரிசெய்ய நம்மை ஊக்குவிக்கட்டும் - "நமது தேவன் நம்மோடு கூட இருக்கிறார்".

🙋‍♂️🙋‍♀️ அன்புள்ள நண்பர்களே, தேவன் நம்மை மிகவும் நேசித்ததால், நாமும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் ... அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார் *1 யோவான் 4:11, 16*

தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[24/08, 09:16] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *சார்ந்து கொள்ளும் விஷயங்கள்* 🍂

யூதாவின் சிறந்த அரசர்களில் ஆசாவும் ஒருவன். அவன் ஆரம்பத்தில் *தேவனாகிய கர்த்தருக்கு பயந்தவனாகவும், ஆண்டவரை நேசிக்கிறவனாகவும், அவரைச் சார்ந்து ஜீவிக்கிறவனுமாக இருந்தான்*. ஆனால் கடைசி காலங்களில், அவன் தேவனை சார்ந்து வாழத் தவறிவிட்டான்.

ஆசா *தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை*. அதனால் சிரியாவின் படை அவன் கையிலிருந்து தப்பித்தது என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. முன்பு ஆசா *கர்த்தரைச் சார்ந்திருந்தபோது* தேவனாகிய கர்த்தர் எத்தியோப்பியர்களின் பெரிய படையை அவனது கைகளில் ஒப்புக் கொடுத்தார் (2 நாளா 16:7, 8).

*சார்ந்து* என்ற வார்த்தையின் அர்த்தம் யார் மீதாவது *முழு நம்பிக்கை வைத்திருப்பது ஆகும்*. நாம் யாரும் சுதந்திரமானவர்கள் அல்ல. நாம் யாரையாவது அல்லது எதையாவது சார்ந்திருக்க தான் வேண்டும். *ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் முழுவதுமாக தேவனை சார்ந்து இருக்க வேண்டும்.*

இதில் மாற்றம் ஏற்படும் போது, இறுதியில் தோல்வியை கொண்டு வருகிறது. நாம் எதை நம்புகிறோம்? நமது ஆரோக்கியத்தையா, செல்வத்தையா அல்லது செல்வாக்கையா? *நீண்டகாலம் வெற்றி வேண்டுமாயின் தேவனாகிய கர்த்தரையே மட்டுமே சார்ந்து இருக்கவும்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 24, 2023_

[24/08, 09:16] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight*.

*GOD IS WITH US; HE IS OUR LEADER* (2 Chronicles 13:12a)

*தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்.*( 2 நாளாகமம் 13:12 அ)

*யூதாவின் ராஜா அபியா* (ராஜா ரெகோபெயாமின் மகன் மற்றும் சாலமோன் ராஜாவின் பேரன்) ஒரு தெய்வீக ராஜா. தேவபக்தியற்ற ராஜாவாக இருந்த *இஸ்ரவேலின் ராஜாவான யெரொபெயாமுடன்* போர் செய்தார். போருக்கு முன் செமராயிம் மலையில் நின்றுகொண்டு, அபியா அரசன் யெரொபெயாம் அரசனிடமும், இஸ்ரவேலர்களிடமும் பேசினார். அவர்களின் நம்பிக்கை மற்றும் நடைமுறையின் ஒப்பீடு இங்கே உள்ளது.

*2 நாளாகமம் 13*

அபியா ராஜா (யூதா)

ஆனால்

யக் ரோபெயாம் ராஜா (இஸ்ரேல்)

* யூதாவின் சிறிய இராணுவம் (400,000)

ஆனால்

இஸ்ரேலின் பரந்த இராணுவம் (800,000)(13:3)

* தேவன் அவர்களுடன் இருந்தார் ஆனால் .

மனிதர்கள் தங்கக் கன்றுகளை உருவாக்கினார்கள்.(13:8)

*ஆரோனின் மகன்கள் ஆசாரியர்களாக இருந்தனர்.(13:10)

ஆனால்

கர்த்தருடைய ஆசாரியர்களை நீக்கிவிட்டார்.

ஒரு இளம் காளை மற்றும் ஏழு ஆட்டுக்கடாக்களுடன் தன்னைப் பிரதிஷ்டை செய்ய வருபவர் தேவனற்றவர்களுக்கு ஆசாரியராகலாம் (2 நாளா.13:9)

*ஆசாரியர்கள் தவறாமல் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறார்கள்.(13:11)

ஆனால் .

தங்கக் கன்றுகளுக்குப் பலியிடப்படுகிறது.

*கர்த்தர் நம்முடைய தேவன் (13:10)

ஆனால்

நீங்கள் அவரை கைவிட்டீர்கள் (வச. 10)

*கர்த்தரின் கட்டளைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம் (13:11)

ஆனால் .

நீங்கள் அவரைக் கைவிட்டீர்கள்.(13:11)

*கர்த்தர் நம்மோடு இருக்கிறார்; அவர் எங்கள் தலைவர்.(13:12)

ஆனால்

கர்த்தர் உன்னுடன் இல்லை.

*வெற்றிக்கான காரணங்கள்*

*யூதாவின் ராஜாவாகிய அபியாவும் அவனுடைய ஜனங்களும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருந்தார்கள்.(13:18)

ஆனால்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரோபெயாமும் அவனுடைய மக்களும் தங்களுடைய கடவுளாக யெரோபெயாம் செய்த தங்கக் கன்றுகளை நம்பியிருந்தனர்.(13:8)

* யூதா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (13:14)

ஆனால்

இஸ்ரவேலர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தனர்.

* அபியா பலத்தில் வளர்ந்தான் (13:21).

ஆனால்

கர்த்தர் யெரொபெயாமை அடித்தார், அவன் இறந்தான்.(13:20)

*கர்த்தருக்காகப் போரிடுதல்.(13:12)

ஆனால்

கர்த்தருக்கு எதிராகப் போரிடுதல்.(13:12.)

*போரின் முடிவு*:

*கர்த்தர் அபியாவுக்கு உதவி செய்தார்

ஆனால்

கர்த்தர் யெரோபெயாமை வீழ்த்தினார் (13:15).

* யூதா இஸ்ரவேலர்களை தோற்கடித்தது

ஆனால்

இஸ்ரவேல் யூதாவுக்கு முன்பாக ஓடிப்போனான்.(13:16)

* யூதாவில் உயிர் சேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆனால்

500,000 இஸ்ரேலிய வீரர்கள் இறந்தனர்.(13:17.)

*அபியா பலத்தில் வளர்ந்தார் (13:21)

ஆனால்

கர்த்தர் யெரொபெயாமை அடித்தார், அவன் இறந்தான் (13:20)

ராஜாவாகிய அபியாவும் யூதாவும் கர்த்தரை நம்பி, அவரைச் சார்ந்திருந்ததால், இருமடங்கு படைவீரர்களை வைத்திருந்த இஸ்ரவேலர்களின் மீது கர்த்தர் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தார்.

*நாம் கர்த்தருடன் இருக்கிறோமா அல்லது உலகத்துடன் இருக்கிறோமா?*

*நாம் கர்த்தருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோமா?*

*வாழ்க்கையில் நம் சார்பு அல்லது நம்பிக்கை எங்கே?*

Rev.C.V.Abraham.

தமிழாக்கம்

Princess Hudson

*🍏சிப்பிக்குள் முத்து🍏*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 நாளா : 13 - 16*

*💐முத்துச்சிதறல் : 132*

🍏🪶🍧🪶🍏

யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் *தேவனாகிய கர்த்தரை சார்ந்து கொண்டதினால்* மேற்கொண்டார்கள். (13:18)

🍧🪶🍏🪶🍧

*💠அபியாவும், ஆசாவும்💠*

✅️❣️✅️❣️✅️

*கர்த்தரை சார்ந்து கொள்ளுதலோ, இல்லை கர்த்தரை விட்டு விடுதலோ அவரவர் தேர்ந்தெடுப்பாய் இருப்பினும், கர்த்தரை சார்ந்து கொள்ளுபவர்களுக்கு அவரது சகாயமும், அவரை விட்டு விடுபவர்களுக்கோ தோல்வியும் தான் கிட்டும் என்பது நிதரிசனமான உண்மையாகும்.* இங்கு *"சாலொமோன் அரசனின் மகன் வழி பெயரன் அபியா"*

தன் தகப்பனாகிய *ரெகோபேயாம் ஸ்தானத்தில் இராஜாவாகிறார்.*

தன் தகப்பன் ரெகோபேயாம் கர்த்தரை தேடுகிறதற்கு தன் இதயத்தை நேராக்காததை போல இவர் நடந்து கொள்ளாமல் (12:14)

கர்த்தரை விட்டு விலகாமல்,

*அவரை சார்ந்து கொள்ள தீர்மானித்து செயல்படும் ஒரு தன்மையை....* வளர்த்து கொண்டவராக மாத்திரமல்ல,

(13:18) தன்னைப்போலவே தனக்கு கீழ் இருப்போரையும் வலுக்கட்டாயப்படுத்தி,

*கர்த்தரை மாத்திரம் சார்ந்து கொள்ளும்படி நடத்தி இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.*

அதன் விளைவு... *எதிரி, மற்றும் கலகவாதி யெரோபேயாம்*

இந்த அபியாவின் நாட்களில் பலம் கொள்ள மாட்டாதபடி ( *ஜெயிக்க முடியாதபடி*)

வாழ்ந்து, மரணிக்க நேரிட்டது.

(13 : 20)

*🔥யெரோபேயாமை காட்டிலும் தன்னிடமுள்ள படைப்பலம் குறைவாக* (சொல்லப்போனால், பாதியாக மாத்திரம் இருப்பினும் )

அதை குறித்து அபியா கவலை கொள்ளாமல்... *கர்த்தரை சார்ந்து கொண்டார்.*

*🫧கர்த்தர் மேல் உள்ள பற்றுறுதி நம்பிக்கையிலே திடமாக விளங்கினார் எனலாம்.*

❌️யாதோரு சந்தேகமும் தனது உள்ளத்தில் கர்த்தரை குறித்து, அவரது இரட்சிக்கும் தன்மையை குறித்த சந்தேகத்தை வளரவிடாமல், தன்னை தற்காத்து கொண்டார்.

*❌️இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடவாமல்*

(1இராஜா -18:21:,யாக் - 1 : 8)

*ஒரே நினைவாக, ஒரே தேவனை சார்ந்து கொண்டவராக திகழ்கிறார்.*

🍒🌿🍒🌿🍒🌿

🎈இங்கு அபியா.... கர்த்தர் தாவீதுக்கும் அவர் குமாரருக்கும் மாத்திரமே இஸ்ரவேலை *"என்றைக்கும் ஆளும் இராஜ்யபாரத்தை"மாறாத உடன்படிக்கையாக*

கட்டளை இட்டிருப்பதை நினைவு கொள்ளும்படி யெரோபேயாமின் கூட்டத்தாரிடம் எடுத்து கூறி நிற்கிறார்.

🍀மாறாத உடன்படிக்கை என்பதை.....

*உப்பின் உடன்படிக்கை* என்றும் சொல்லுவார்கள்.

இந்த உப்பின் உடன்படிக்கையை குறித்து...

*எண்ணாகமம் - 19:18 - ல்* வாசிக்கலாம். அதற்கான விளக்கமோ.....

*லேவியராகமம் - 2:13 ல் காணலாம்.*

எந்த போஜன பலியும் உப்பினால் உப்பிட பட்டு, சாரமாக்கப்பட்டு, சரி விகிதமாக குறைவில்லாதபடி, *ருசிக்கேற்ப்ப உப்பையும் சேர்த்து படைக்கும்படி ஆண்டவர் கட்டளை கொடுத்து இருந்தார்.*

மாறாத தன்மையுள்ளதாக, *நித்திய தன்மைக்கு குறியீடாக உப்பானது பலிகளோடு கூட இருக்கும்படி நிலை நாட்டப்பட்டது.*

இந்த உப்பின் உடன்படிக்கைக்கு உட்பட்டோர் அதை முறித்து கொள்ளவோ, இல்லை உடைக்கவோ இயலாது.

அதாவது, *உடன்படிக்கைக்கு உண்மையுள்ள மக்களாக*

அவர்கள் வாழ வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் *யெரோபேயாமோ இவ்வற்றையெல்லாம் மீறினவன்* என்பதே அபியா சகல இஸ்ரவேலருக்கும் கூற வந்த செய்தி.

🎊🎈🎊🎈🎊🎈

*தேசா தேசங்களின் ஜனங்களை போல தங்களுக்கென்று ஆசாரியரை தாங்களே ஏற்படுத்தி கொண்டோராக, தெய்வங்கள் அல்லாதவைகளுக்கு பலர் ஆசாரியராகி இருக்கின்றனரே ! கர்த்தருடைய இராஜ்யத்திற்கு விரோதமாக பெலன் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களே ! என்று, இஸ்ரவேலரின் நூதன தெய்வங்களை குறித்து அபியா கிண்டலடிக்கவும் தயங்கவில்லை.*

யெரோபேயாமின் சூழ்ச்சிகள் அபியாவுக்கு மறைவாய் இருந்த பொழுதும்,

*தனது இராணுவ படை மக்கள் யாவரும் எந்தவொரு இக்கட்டான வேளையிலும் கர்த்தரை சார்ந்து கொண்டு, அவரை நோக்கி அபயமிட / கூப்பிட அபியா அவர்களை பயிற்றுவித்து, பழக்கப்படுத்தி இருந்தார்.*

*அதன் விளைவு....* பெரிய இரட்சிப்பினால் யூதா புத்திரர் விடுவிக்கப்பட்டு..... *வெற்றி வாகை சூடி நின்றது மாத்திரமல்ல*....

அந்த கலகவாத கூட்டத்தார் மேற்கொள்ளாதபடி கர்த்தர் காத்து நின்றார் எனலாம்.

🌻🍉🌻🍉🌻🍉

*🍃அபியாவின் தலைமைத்துவ பண்புகள் :*

*🌹1.*

*கர்த்தர் தனது முப்பாட்டனாகிய தாவீதுக்கு அருளிய வாக்குதத்தத்தை நினைவு கூற இஸ்ரவேலுக்கு அழைப்பு விடுத்தார்.*

(13 : 5)

*🌹2. யெரோபேயாம் என்பவன் எங்கள் தாத்தா சாலமோனின் வேலைக்காரன், மற்றும் கலகக்காரன் என்பதை எடுத்து காண்பிக்கிறார்.*

(13 : 6)

*🌹3.*

*யார் யார் அந்த கலக கூட்டத்தில் பங்கு கொண்டனர் என்பதும், எந்த காலகட்டத்தில், ஏன் அது நிகழ்ந்தது எனவும், என்ன விதமாக எதிரிகள் பலபட்டனர் என்றும் கூறுகிறார்.*

(13 : 7)

*🌹4.*

*நூதன தேவர்கள் எதிரிகளோடு இருக்கிறது என்பதை அடையாளங் காட்டி நின்றார்.*

(13 : 8)

*🌹5.*

*எங்களுக்கோ கர்த்தரே தேவன், நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தர் எங்களோட இருக்கிறார். கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் செய்யாதிருங்கள், செய்தால் சித்திக்காது என்றார்.*

(13 : 8 - 12)

🦀🫛🦀🫛🦀🫛

தேவன் மீதுள்ள *"தெளிந்த சார்பு நிலை"*

யூதா புத்திரர் கர்த்தரை நோக்கி பார்க்கவும், அவரை நோக்கி அபயமிடவும் வைத்தது.

*🔥ஆம், நாமும் கூட எமது இக்கட்டு வேளைகளில் "கர்த்தரை சார்ந்து கொண்டு" அவரை நோக்கி கூப்பிட்டோமானால் சத்துருக்களின் சதியில் இருந்து எம்மை விடுவிக்க அவர் வல்லவர் என்பது உறுதி.*

*🔥முழு நிச்சயம் உடைய தன்மைக்கே விசுவாசம் என்று பெயர்.*

விசுவாசிகளாகிய நாமும் கர்த்தரில் நம்பிக்கை வைத்து, தேவனையே சார்ந்து கொண்டோமானால் அவர் அற்புதமாக நம்மை வழிநடத்தி செல்லுவார்.

*🍇இந்த அபியா அரசனுக்கு நேர் மாறாக தனது அந்திய காலத்தில் ஆசா என்னும் அரசன்*

கர்த்தரை சார்ந்து கொள்வதில்

*தோய்வு கண்டார்.*

அதினால்....

கிட்டத்திட்ட 36 ஆண்டுகள் கர்த்தரை சார்ந்து ஜீவித்து ஜெய வாழ்வு வாழ்ந்த ஆசா அரசன், *சீரியாவின் இராஜாவை சார்ந்து கொண்டபடியால்,* அது முதல்... அதாவது அவரது 37ம் ஆண்டு முதல் அவருக்கு யுத்தங்கள் நேரிட்டது.

*ஆசா அரசன் ஆவிக்குரிய ரீதியாக வீழ்ச்சி கண்டதினால்,* தனக்கு ஞான உரையை வழங்கிய ஞானதிருஷ்டிகாரன் மேல்

*சினந்து கடுங்கோபங் கொண்டு அவனை காவலறையிலே வைத்தான்.*

(16 : 10)

அது மட்டுமா❓️

*ஜனங்களுக்குள்ளும் சிலரை கொடூரமாய் நடத்தினானாம்.*

*🛍️ஓர் மனிதனின் வீழ்ச்சியை, அவனது செயல்பாடுகள் கண்டிப்பாக வெளிப்படுத்தும்.*

2 ஆண்டுகள் இவனது அடாவடி வேலையை கவனித்த ஆண்டவர்.... அவன் கால்களில் ஓர் வியாதியை கொடுக்கிறார்.

இப்பொழுதாகிலும் அவன் ஆண்டவரிடம் திரும்புவானா❓️ என்று எதிர் பார்க்க பட்டது.

ஆனால் அவனோ....

*தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல... பரிகாரிகளையே தேடினானாம்.*

(16 : 12)

2 ஆண்டுகள் வியாதியின் கொடுமையில் சிக்கி தவித்து..... கர்த்தரில்லாமல் / கர்த்தரோடில்லாமல் ஆசா உயிரிழந்தான்.

*🥏மகிமையான ஆரம்பம் ஆனால் பரிதாபமான முடிவு.*

*📌கர்த்தரை சார்ந்து கொள்ளுவோர்* தங்கள் வியாதியிலே...

🍀கர்த்தரை நோக்கி ஜெபிப்பார்கள்,

🍀வைத்தியர்களை சந்திப்பார்கள்,

🍀அவர்கள் இவர்களுக்கு வைத்தியமும் ஆலோசனையும் அருளுவார்கள்.

🍀அதை ஜெபத்தோடு காத்து நடப்பதினால்....

*💊கர்த்தரால் சுகத்தை பெற்று கொள்ளுகிறார்கள்.*

அபியா அரசனை குறித்து......

*அவன் யெரோபேயாமுக்கு விரோதமாக பலத்து போனான்* என்பதாக வேதம் சான்றளிக்கிறது.

(13 : 21)

ஏன் ❓️எப்படி ❓️

*கர்த்தரை சார்ந்து கொள்ளும் வாழ்வை வாழ்ந்ததினால் அது நிகழ்ந்தது.*

இக்கட்டிலே எங்களுக்கு உதவி செய்யும் !(கர்த்தாவே) மனுஷரின் உதவி விருதா.

(சங் - 60 : 11)

இக்கட்டு காலத்திலே மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும், எப்பொழுதுமே கர்த்தரை மாத்திரம் சார்ந்து கொள்ளுவோம்.

எமக்கு தேவையான உதவிகளை மனுஷர் வாயிலாகவே அவர் அருளுவார். நம் கண்கள் மனுஷரை அல்ல, கர்த்தரை நோக்கி பார்க்கட்டும். நம் இதயம் அவரை, அவரது வார்த்தைகளை சார்ந்து கொள்ளட்டும். *அவரால் மாத்திரமே மீட்பு, விடுதலை, ஜெய வாழ்வு உண்டாகிறது*

என்ற அடிப்படை உண்மையை அணைத்து கொள்ளுவோமா❓️

*Sis. Martha Lazar✒️*

NJC, KodaiRoad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.