Type Here to Get Search Results !

Biography of Missionaries | Evelyn Brand LIfe History in Tamil & English | மிஷனெரி ஈவ்லின் பிராண்ட் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

======================
திருச்சபையின் செல்ல மகள்கள்
ஈவ்லின் பிராண்ட் (1869-1974)
========================
    இளமை பருவம்: இங்கிலாந்து தேசத்திலுள்ள மெல்போர்ன் நகரில் 1879-ம் ஆண்டு செல்வச் செழிப்பான குடும்பத்தில் ஹாரிஸ் தம்பதியினருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர் ஈவ்லின் கான்ஸ்டன்ஸ். சிறுவயதிலேயே இருந்து ஈவ்லின் ஓவியம் வரைவதிலும், வர்ணம் தீட்டுவதிலும் திறமையானவர். அப்படியே மேன்மையான காரியங்களை வாஞ்சிப்பதும், விரும்புவதும் போன்ற அரிதான தன்மைகளை சிறுவயது முதலே வெளிப்படுத்தினார். தன்னுடைய கல்லூரி பருவத்தில் ஹோமியோபதி மருத்துவத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தார்.

    ஜெசிமான் பிராண்ட் தமிழகம் வருகை: இங்கிலாந்து தேசத்தில் 14 வயதிலேயே கிறிஸ்த்துவுக்கென்று அர்பணித்த ஜெசிமென் 20-ம் வயதில், அவரது ஊரில் நடைபெற்ற மிஷனரி தரிசன கூடுகையில் ஒருமுறை கூட இயேசுவை குறித்து கேட்டிராத இந்திய மக்கள் மக்கள் மத்தியில் கடவுளின் வார்த்தைகளைச் சுமந்து செல்ல, நீங்கள் முன் வருவீர்களா? பிரசங்கிக்கிறவன் இல்லையென்றால் எப்படி ஜீவ வழியை அவர்கள் அறிந்துகொள்வார்கள்?. பாடுகளையும் துன்பங்களையும் சகித்து தேவனுக்காய் அர்பணிக்க வாருங்கள் என்று அரைகூவல் விடுக்கப்பட்டது.

    இதைக்கேட்ட ஜெசிமென் இருதயத்தில் பாரம் கொண்டவராய் தன்னை அர்ப்பணித்தார். ஆகவே பாப்டிஸ்ட் மிஷனெரி ஸ்தாபனத்தில் தன்னை இணைத்து கொண்டு ஒரு வருடம் மருத்துவ கல்வி பயின்று 22-ம் வயதில் செல்வ செழிப்பான வாழ்கையை உதறி விட்டு, 1907-ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில், சென்னைக்கு வந்து சேர்ந்தார். இவர் கட்டிடவேலை, தச்சுவேலை, பட்டு வேலை மற்றும் பொறியியல் துறைகளையும் நன்கு கற்றறிந்தவராய் இருந்தார். சென்னையில் இரண்டு வருட தமிழ் பயிற்சிக்கு பின், 1909-ல் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்திற்கு அனுப்பப்பட்டார்.

    சேந்தமங்கலத்தில் மருத்துவ சேவை: ஜெசிமன் சேந்தமங்கலத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்து, அங்கு வந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவி மூலம் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார். அந்த நாட்களில் பரவிய கொள்ளை நோய்களான ப்ளேக் மற்றும் காலரா போன்ற நோய்களில் இருந்து ஆயிரக்கனக்கான மக்களின் உயிரை காப்பாற்றினார். இந்நிலையில் 1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்து ஜெசிமென் எழுதிய கட்டுரையானது இங்கிலாந்து திருச்சபைகளில் அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது. அந்த கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஒருவர் தான் ஈவ்லின் கான்ஸ்டன்ஸ்.

    ஈவ்லின் தமிழகம் வருகை: மிகவும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ஈவ்லின் கான்ஸ்டன்ஸ், ஜெசிமெனைப் போல எல்லா சொத்து, சுகங்களையும் உதறி விட்டு இந்தியாவில் நற்செய்திபணி செய்ய ஒப்புக்கொடுத்து, தனது 32 ம் வயதில் கடற்பயணம் மூலமாக 1911-ம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு ஸ்டிரிக்ட் பாப்திஸ்டு மிஷனெரி சங்கத்தின் (SBM) சார்பில், நீலகிரி மலையில் உள்ள குன்னூரில் தமிழ் மொழி கற்க அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    கொல்லி மலை செய்திகள்: 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கொல்லி மலையானது தமிழ் நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது. இதில் சேலம் மாவட்டம், நாமக்கல், ராசிபுரம் தாலுகாக்களை சேர்ந்தாற்போல் அமைந்துள்ள மலைத்தொடரில் 200 க்கும் அதிகமான கிராமங்களில் காராளர் என்ற ஆதிவாசி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வந்தது. கொல்லிமலையானது சுமர் 40 கி.மீ நீளமும் 16 கி.மீ அகலமும் கொண்ட காடுகள் அடர்ந்த பிரதேசம் ஆகும்.

    இது கடல் மட்டத்திலிருது 3000 முதல் 4000 அடி உயரமுள்ளது. இந்த பகுதிக்கு எந்த ஒரு மிஷனரியும் கால் வைத்திராத பல கிராமங்கள் இருந்தது. இங்குள்ள மக்களுக்கு பள்ளிகூடங்கள் இல்லாதிருந்ததினால் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். இங்குள்ள கிராமங்களுக்கு சரியான சாலை வசதி இல்லாதிருந்ததினால் வெளிஉலகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாதிருந்தது.

    கொல்லிமலை தரிசனம்: ஒருநாள் வயதான ஒரு மலைவாழ் மனிதன், தட்டுத்தடுமாறி சேந்தமங்கலம் மிஷனெரி மருத்துவமனை வந்து சேர்ந்தார். அந்த மனிதர், தன்னுடைய வயிற்று போக்கு குணமடைய கொல்லிமலையில் இருந்து நடந்து வருவதாக ஜெசிமெனிடம் தெரிவித்தார். ஜெசிமென் அவருக்கு சிகிச்சை அளித்து, குணமாக்கியவுடன், கொல்லிமலை மக்களை பற்றி அநேக காரியங்களை கேட்டு அறிந்துகொண்டார். அப்போது அவர் ஐயா, எங்கள் மக்கள் நாகரீகம் அற்றவர்களாக, கல்வி அறிவு இல்லாதவர்களாக, மருத்துவவசதி இல்லாதவர்களாக வறுமையோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். எங்கள் பகுதிக்கு வந்து உதவி செய்ய மாட்டிர்களா? என்று ஜெசிமனிடம் ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டார். அந்த மனிதனின் அழைப்பு கடவுளின் அழைப்பாகவே ஜெசிமெனுக்கு தெரிந்தது.

    கொல்லிமலை பயணம்: ஊழியத்தின் பாதையில் ஜெசிமன், சென்னைக்கு அடிக்கடி வந்து பாப்டிஸ்ட் மிஷனெரி சங்கத்தின் மற்ற பொறுப்புகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் குன்னூரில் இருந்து சென்னைக்கு வந்திருந்த ஈவ்லின், 1912 ல் சென்னையில் ஜெசிமனை சந்தித்தார். இவ்விருவருடைய சிந்தனைகளும் கொல்லிமலை பழங்குடி மக்களை குறித்தே இருந்தது. ஆகவே ஜெசிமன் பிராண்ட் அவர்களுக்கும் ஈவ்லின் கான்ஸ்டன்ஸ் அவர்களுக்கும் 1913-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொல்லிமலையின் அடிவாரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் பாப்டிஸ்ட் திருச்சபையில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்தவுடனேயே, அவர்கள் கொல்லி மலைக்கு பயணம் மேற்கொண்டு, கொட்டும் அடை மழையின் மத்தியிலும் நடந்து வந்து, மலையேறி, கொல்லிமலையில் கொடுக்கப்பட்டிருந்த மர வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் பேண்ட், சட்டை அணிந்திருக்கும் ஐரோப்பிய மக்களை கண்டால் கொல்லிமலை பழங்குடி மக்கள் பயந்து ஓடிவிடுவார்கள். அப்போது அவரிடத்தில் சிகிச்சை பெற்ற மனிதன் ஒருவர் ஜெசிமானை அடையாளம் கண்டு, அவர் மருத்துவர் என்றும், ஆகவே எவரும் அவருக்கு அஞ்ச வேண்டாம் என்றும் தன்னுடைய கிராம மக்களுக்கு கூறியதின் நிமித்தம் அந்த மக்கள் ஜெசிமென் தம்பதியினரின் அருகில் வந்தார்கள். அப்போது தான் எடுத்து சென்றிருந்த மருத்துவ பெட்டியின் துணையோடு ஜெசிமான் தம்பதியினர் அநேகருக்கு மருத்துவ உதவி செய்து இயேசுவின் அன்பை எடுத்துக் கூறினார்கள்.

    பாடுகளின் மத்தியில் ஊழியம்: கொல்லிமலையின் ஒவ்வொரு பழங்குடி கிராமமும் அங்கிருந்த பூசாரிகளின் கட்டுப்பாடிற்குள் இருந்தது. இவர்கள் அங்கிருந்த மக்களுக்கு பூசைகள் செய்து, வியாதிக்காக மந்திரங்களை ஓதி, பிசாசுகளை ஓட்டுவதற்கு அதிக பணம் பெற்று வந்தார்கள். இந்நிலையில் கொல்லிமலை பழங்குடி மக்கள் இயேசுவை பின்பற்றினால் தங்கள் வருமானம் நின்றுவிடும் என்பதற்காக இந்த பூசாரிகள், ஜெசிமான் தம்பதியினரின் ஊழியத்திற்கு எதிராய் செயல்பட்டார்கள். கிறிஸ்துவை ஏற்றுகொள்ளுபவர்கள் ஊரை விட்டும், குடும்பத்தை விட்டும் ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்றும் பயமுறுத்தி அம்மக்களை கிறிஸ்துவின் பக்கமே வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

    காலங்கள் செல்ல செல்ல, ஜெசிமென் தம்பதியினர் கொடுத்த அணைத்து மருத்துவ உதவிகளையும் மக்கள் பெற்றுக்கொண்டு, சுகமடைந்தாலும் ஒருவர் கூட இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் கொல்லிமலை மக்கள் இயேசுவுக்கு சொந்தமாவார்கள் என்ற விசுவாசத்தோடு அங்கிருக்கும் கிராமங்களில் இருக்கும் ஆடு அல்லது மாட்டு கொட்டகைகளில் தங்கியிருந்து ஜெசிமான் தம்பதியினர் நற்செய்தி பணியும், மருத்துவ பணியும் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

    கொல்லி மலை மக்களின் பழக்க வழக்கங்கள்: கொல்லி மலைத்தொடரில் இருந்த பழங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணம், மனைவியைத் தள்ளிவைப்பது, கோடங்கி கேட்பது, ஜோதிடம் பார்ப்பது, சாமி ஆடி குறிகேட்பது, போன்ற பழக்கவழக்கங்கள் காணப்பட்டது.

    கல்வி வாசனையே இல்லாத அந்தக் காலகட்டத்தில் கோடங்கி வந்து பிள்ளை பிறந்தவேளை சரியில்லை என்று கூறிவிட்டால் அந்த குழந்தையை உயிருடன் கொன்றுவிடுவார்கள், அல்லது அக்குழந்தையை ஒரு முறத்தில் கிடத்தி வேலி ஓரங்களில் எறிந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட மக்களின் மூட நம்பிக்கைகளை அறிய ஜெசிமான் பிராண்ட் தம்பதியினர் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்து, இம் மலைவாசி மக்களிடம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை செய்துவந்தார்கள்.

    மரண மலைகளின் தாய்: 1919-ம் ஆண்டில் மலையில் ஜெசிமான் தம்பதியினர் ஊழியம் ஆரம்பித்து, ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விடுமுறைக்காக இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை உதறிவிட்டு கொல்லிமலையில் ஊழியத்தை தொடர்ந்தனர். அந்த வருடத்தில் கொடிய மலேரியா விஷ காய்ச்சல் அங்கிருந்த எல்லா கிராமங்களுக்கும் பரவ தொடங்கியது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்த பழங்குடி மக்கள் மலைப்பாங்கான பாறையில் போட்டுவிட்டு வந்து விடுவார்கள். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதித்தார்கள். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை (SICK MOUNT) என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.

    கொள்ளைநோயின் காலங்களில் ஜெசிமெனும், ஈவ்லினும் அரிசி கஞ்சியை இந்த நோயாளிகளுக்கு கொடுத்து அநேகரை காப்பாற்றினர். ஆயினும் நோயின் தாக்கம் கொடிதாய் இருந்ததால் அநேகர் மரித்து போனார்கள். இதில் அவர்களின் மரவீட்டின் அருகில் இருந்து, ஊழியத்தை கடுமையாக எதிர்த்து வந்த பூசாரியும் அவருடைய மனைவியும் பலியானார்கள். ஆகவே அவர்களுடைய மகனையும் மகளையும் ஜெசிமென் தம்பதியினரே தத்தெடுத்து அந்த பூசாரியின் பிள்ளைகளுக்கு தாயாக மாறினார். இன்றும் ஈவ்லின் அம்மையாரை மரண மலைகளின் தாய் என்றே அழைக்கின்றார்கள்.

    இங்கிலாந்து பயணம்: 1923-ம் ஆண்டு ஜெசிமென் தம்பதியினர் கொல்லிமலை ஊழியத்தை தொடங்கி 10 வருடங்கள் நிறைவேறின. இவர்களுக்கு பால் என்ற மகனும், கோனி என்ற மகளும் பிறந்தார்கள். பால் பிராண்டுக்கு 9 வயதும், கோணிக்கு 6 வயதும் ஆனதால் அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி தம்பதியினர் இங்கிலாந்து சென்றார்கள். ஜெசிமானும், ஈவ்லினும் கொல்லி மலை அனுபவங்களை இங்கிலாந்து தேசத்து திருச்சபைகளிலும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொண்டார்கள்.

    அப்பொழுது ஈவ்லினுடைய அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ், தான் ஒரு மிஷனரியாக கொல்லிமலை பகுதிக்கு வருவதற்கு அர்ப்பணித்தார். ஜெசிமான் தம்பதியினர், தங்கள் இரண்டு குழந்தைகளையும் ஈவ்லினின் இரண்டு சகோதரிகளிடம் விட்டு விட்டு, விடுமுறை முடிந்து, பிள்ளைகளை விட்டு பிரிவது அவர்களுக்கு கடினமாகவே இருந்தது. ஆனால் இதுவே தன் பிள்ளைகளான பால் பிராண்டையும், கோணியையும் பார்க்கும் கடைசி முறை என்று ஜெசிமெனுக்கு தெரியாது.

    ஈவ்லின் அம்மையார் குழந்தைகளை விட்டு பிரிந்து வருகையில், தனக்குள் இருந்த பாச உணர்வுகள் மரித்து போவதாக என்று உணர்ச்சி வசப்பட்டு அழுதார். ஆயினும் தன்னுடைய உள்ளத்தில் கொல்லிமலை மக்களின் மீது கொண்ட ஆத்துமபாரத்தினால் விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் கொல்லிமலைக்கு திரும்பிவந்தார்கள்.

    சமுதாய பணிகள்: இந்தியா திரும்பி வந்த ஜெசிமான் தம்பதியினர் முதலில் கொல்லிமலை கிராமத்து குழந்தைகள் கல்வியை கற்பதற்கு முதலில் பெண்களுக்கான விடுதியையும், பின்னர் ஆண்களுக்கான விடுதியையும் கட்டினார்கள். இந்த விடுதியில் இருந்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போலவே ஜெசிமெனும், ஈவ்லினும் வளர்த்தார்கள். மரிக்கும் தருவாயில் வியாதிப்படும் குழந்தைகளையும் சிகிச்சை அளித்து விடுதியில் வைத்து பராமரித்து வந்தனர். இவர்களின் தியாகமான ஊழியத்தினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆகவே அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஒரு ஆலயத்தையும் கட்டினார்கள்.

    சிறிது காலத்திற்குள்ளாகவே கொல்லிமலை பகுதிகளில் 12 பாடசாலைகளை திறந்து, கல்வி அறிவை கொடுத்தார்கள். கொல்லிமலை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தோட்டக்கலை, பாய் நெய்வது, நெசவு தொழில், பட்டுபூச்சி வளர்ப்பு, பட்டு நூல் தயாரிப்பு, கட்டிட வேலை, மற்றும் தச்சு வேலைகளையும் கற்றுக்கொடுத்தார்கள். ஒரு வருடத்தில் ஏறக்குறைய 25000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் அறுநூறுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்தும் அவர்களுக்கு கிறிஸ்த்துவின் அன்பை வெளிபடுத்தினார்கள்.

    கூட்டுறவு வங்கி துவக்கம்: கொல்லிமலை பழங்குடி மக்கள், அங்கிருத்த முதலாளிமார்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி, கொத்தடிமைகள் போல அவர்களுக்கு உழைத்துவந்தார்கள். இதை மாற்றியமைக்க வேண்டும் என்று உறுதிகொண்ட ஜெசிமான் தம்பதியினர், காடு மேடு என்று பாராமலும், கொல்லிமலையில் இருந்த எல்லா கிராமங்களுக்கும் சென்று கந்துவட்டி பற்றிய புள்ளிவிவரங்களை சேகரித்து அதை ஆங்கிலேய அரசாங்கத்திற்க்கு அனுப்பி, அரசாங்கமே கூட்டுறவு வங்கிகளை ஆரம்பித்து மக்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். இதை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது.

    மேலும் 20 வருடத்திற்கும் அதிகமாய் கொல்லிமலை பகுதியில் குடியிருந்த 400-க்கும் அதிகமான பழங்குடி மக்களை வருவாய் துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கி துரத்தப்படத்தை அறிந்து, அம்மக்களோடு நாமக்கல் வரை நடந்து சென்று, சேலம் ஆளுநரை சந்தித்து நடந்ததை எடுத்துக்கூறி அம்மக்களின் நிலங்களை மீட்டுக்கொடுத்தார்கள். சிறந்த கட்டிட கலைஞரும், தச்சருமான ஜெசிமென் வந்த பின்னர் தான் கொல்லிமலை பகுதியில் மரம்வெட்டி பலகையை அறுத்து, வீடுகளை கட்டும் முறைகள் அறிமுகமாயின. அதுவரை ஒலைக்குடிசைகளில் வாழ்து வந்தனர்.

    விஞ்ஞான முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி, விளைச்சலை எவ்வாறு பன்மடங்காக பெருக்குவது போன்றவற்றையும் கற்றுக்கொடுத்தார்கள். அப்படியே கொல்லிமலை மக்கள் பிற இடங்களுக்கு செல்லவதற்கு ஏதுவாக பல கிலோ மீட்டர்களில் சாலைகளை அமைத்து தொடர்புகளை ஏற்படுத்தினார்கள்.

    ஜெசிமன் பிராண்டின் மறைவு: கொல்லிமலையில் பரவி வந்த மலேரியா காய்ச்சலும், கறுப்பு நீர் காய்ச்சலும் (Black Water Fever) ஜெசிமெனையும் விட்டுவைக்கவிலை. மருத்துவர்களும், ஈவ்லினும் எவ்வளவோ முயன்றும் ஜெசிமனுக்கு காய்ச்சல் விட்டபாடில்லை. இந்நிலையில் 1929-ம் வருடம் ஜூன் மாதம் 15-ம் தேதி மாலை வேளையில், கிறிஸ்துவுக்காக நல்ல போர்சேவகனாய் செயல்பட்டு, தன் ஆத்துமாவை நேசரின் கையில் ஒப்படடைத்து, கிறிஸ்துவுக்காய் நல்லதொரு போராட்டத்தை போராடி முடித்தார்.

    44 வயதே ஆன ஜெசிமென் பிராண்ட்(1885-1929), தமது வாழ்நாளில் 17 வருடங்களை கொல்லிமலை மக்களுக்காகவே தியாகம் செய்தார். தனித்துவிடப்பட்ட ஈவ்லின் அம்மையார் தன் கணவரை பிரிந்த நிலையிலும் இங்கிலாந்துக்கு திரும்பாமல் சிலகாலம் கொல்லிமலையிலேயே நற்செய்திபணியையும் மருத்துவ பணியையும் செய்துவந்தார்கள்.

    ஈவ்லின் அம்மையாரின் சென்னை ஊழியம்: தகப்பனை இழந்த தமது பிள்ளைகலான பால் பிராண்ட் மற்றும் கோணியை பார்க்க ஈவ்லின் அம்மையாரர் இங்கிலாந்து சென்றார். சில மாதங்கள் பிள்ளைகளோடு செலவழித்த பின் மீண்டும் கொல்லிமலைக்கு வந்து ஊழியத்தை தொடர விண்ணப்பித்தார். ஆனால் ஈவ்லின் அம்மையார் 60 வயது கடந்த நிலையில் தனியாக, கொல்லிமலைக்கு செல்லுவதை விரும்பாத ஸ்ட்ரிக்ட் பாப்டிஸ்ட் மிஷனெரி சங்கம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது.

    தனது கணவரோடு, கொல்லிமலையில் செய்துவந்த ஊழியத்தை எப்படியாவது தொடர வேண்டும் என்று ஈவ்லின் அம்மையார் பலமுறை முயற்சி செய்தாலும் பாப்டிஸ்ட் மிஷன் அதற்க்கு ஒத்துழைக்காததினால் 8 வருடம் இங்கிலாந்தில் இருக்க நேரிட்டது. இந்நிலையில் தனது 68-ம் வயதில் தன்னை ஒரே ஒரு முறை இந்தியாவிற்கு அனுப்பும் படியாகவும், பாப்டிஸ்ட் மிஷனெரி சங்கம் கொடுக்கும் இடத்தில தங்கி ஒரு வருடம் மாத்திரம் தங்கி ஊழியம் செய்து, ஓய்வுபெற்ற பின் மீண்டும் இங்கிலாந்து வந்து விடுவதாகவும், மிஷனெரி சங்கத்திற்க்கு கடிதம் எழுதினார். இதற்க்கு அனுமதி கிடைத்ததினால் ஈவ்லின் அம்மையார் 1947 ல் ஜனவரி மாதம் சென்னை வந்து சேர்ந்தார்.

    ஈவ்லின் அம்மையார் சென்னையில் ஊழியம் செய்தாலும், கொல்லிமலை மக்களின் நினைவுகள் அவருக்குள் அதிகமாக உந்தித்தள்ளியது. ஆகவே விடுமுறை காலங்களில் கொல்லிமலைக்குச் சென்று அங்கிருக்கும் மக்களைப் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்துவிடுவார். இவ்வாறு ஒரு வருட ஊழியத்தை சென்னை நிறைவு செய்த ஈவ்லின் அம்மையார், தனது 70-ம் வயதில் பாப்டிஸ்ட் மிஷனெரி சங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

    சுதேச ஊழியம்: சுமார் 36 ஆண்டுகள் பாப்திஸ்து மிஷனெரி சங்கத்தில் நற்செய்திபணி செய்திருந்த ஈவ்லின் அம்மையார் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து நற்செய்திபணியும் மருத்துவபணியும் செய்ய விரும்பினார். இதற்காக இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை புறக்கணித்து, தனது கணவர் ஜெசிமென் விட்டு சென்ற கொல்லிமலை ஊழியத்தை தொடர அங்கு சென்றார்.

    இதற்காக தமிழ்நாட்டில் சேலம், மற்றும் ஆத்தூர் பக்கமுள்ள பெரிய கல்வராயன் மலையில் தங்கியிருந்து நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். குதிரை சவரி செய்தும், டோலியில் சென்றும், அனுதினமும் 20 கிலோமீட்டருக்கும் அதிகமாக சென்று, நற்செய்திபணியையும் சமுதாய பணிகளையும் செய்துவந்தார். ஈவ்லின் அம்மையார் தன்னுடைய உதவிக்காக பெண் ஊழியர்களையும் உடன் கூட்டிச் செல்வார். அப்படியே மருந்துப் பொருட்களை எடுத்துச் சென்று, சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நற்செய்தி அறிவித்து மருந்து கொடுப்பார்.

    இந்நிலையில் ஒரு மருத்துவ முகாம் நடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் ஈவ்லின் அம்மையார் கீழே விழுந்ததினால் தலையில் பலத்த காயம் உண்டாயிற்று. ஆயினும் அதற்குச் சிகிச்சைப் பெற்றும், இரண்டு மூங்கில் குச்சிகளை உபயோகித்தே நடந்து சென்று நற்செய்திபணியும் மருத்துவபணியும் செய்தார். ஈவ்லின் பிராண்ட் அம்மையாரின் தளராத முயற்சியினால் கொல்லிமலையின் ஐந்து மலைப் பிரதேசங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. அநேகர் கிறித்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

    இவர்களது பதினைத்து வருட இடைவிடாத உழைப்பின் காரணமாக கொடிய நோய்களை ஏற்படுத்தும் கினியா என்ற விஷபுழு கல்வராயன் மலைப் பகுதியிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில் 1948-ல் பச்சைமலையில் போய் தங்கி ஈவ்லின் அம்மையார் சேவை செய்தார். இந்த மலை பகுதிகளில் 85 கிராமங்களுக்கு மேல் இருந்தன. ஆகவே 1962-ல் பச்சைமலையிலும் ஒரு இடம் வாங்கி அங்கே தங்கியிருந்து நற்செய்தி பணியையும், மருத்துவபணியை தொடர்ந்து செய்துவந்தார்கள்.

    அப்படியே சித்தேரி மலை, போதமலை, பயித்தூர் மலை, அர்னூத்து மலை போன்ற மலைகளிலும் நற்செய்திபணியையும் மருத்துவபணியையும் தொடர்ந்து செய்துவந்தார். அப்போது ஜாகிரி மலைகளில் பழங்குடி மக்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் மறுவாழ்வுக்கு என்று மாற்று வழிகளை ஏற்படுத்தியும் கொடுத்தார்.

    பெண்கள் மறுவாழ்வு: ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளிடம் ஈவ்லின் அம்மையார் கலந்து பேசி சுமார் 34 ஏக்கர் கொண்ட நிலத்திற்கு பட்டா வாங்கி அதில் சில கட்டிடம் கட்டி, ஆலயம், மருத்துவமனை, கருணை இல்லம் (அனாதை இல்லம்) முதலியவற்றை ஆரம்பித்தார்கள். இந்த கருணை இல்லத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கோடங்கி கூறியதால் தூக்கியெறியப்பட்ட குழந்தைகளையும் சேர்த்து பராமரித்தார்கள்.

    ஈவ்லின் பிராண்ட் அவர்கள் முயற்ச்சியால் புதிதாக 5 திருச்சபைகள், 9 பாடசாலைகள், 3 மருத்துவமனைகள், அனாதைப் பெண்கள் விடுதிகள், ஆண்கள் விடுதிகள், விவசாய பண்ணைகள் மற்றும் பட்டு புழு வளர்க்கும் பண்ணைகள் போன்றவற்றை அமைத்து கொல்லிமலை என்று அழைக்கப்பட்ட மரண மலையை, ஈவ்லின் அம்மையார் மக்கள் வாழும் இடமாக மாற்றிக்காட்டினார். இவர்செய்த சமுதாய சீர்திருத்த புரட்சி இன்றளவும் கொல்லிமலையில் நினைவு சின்னங்களாக நிற்கின்றது.

    ஈவ்லின் அம்மையாரின் செயல்பாடுகள்: பிறருடைய துன்பங்களை, தன்னுடைய துன்பங்களாக கருதி, உதவி என்று தேடி வருபவர்களுக்கு முகம் கோணாமல் பலஉதவிகளை செய்வார். தனது குடும்ப சொத்து மூலமாக வந்த வருமானத்தை ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவினார். தொழுநோயாளிகளைச் சேலம், திருச்சி, வேலூர் இடங்களில் உள்ள கிறிஸ்தவ மருத்துவனைகளுக்கு அனுப்பிவைத்து எல்லா மக்களையும் ஜாதி, மத பேதமில்லாமல் நேசித்து அவர்களுக்கு உதவி செய்துவந்தார்.

    தமிழிலும் ஆங்கிலத்திலும் வேதத்தைத் படித்து ஆராய்ச்சி செய்து நற்செய்தி ஊழியத்திற்குத் தகுந்த வேதக்கதைகளைத் சித்திரமாக வரைந்து அதன்மூலம் வேதவசனம் கேட்போர் மனதில் பதியும்படி செய்வார். சுதேச ஊழியர்களுக்குப் பயிர்ச்சி கொடுக்கும்படி "பழைய புதிய ஏற்பாடுகளை ஒப்பிட்டுப் படித்தல்" என்ற தலைப்பில் 13 பாடங்களை ஈவ்லின் அம்மையார் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோதுமை மணியான ஈவ்லின் அம்மையார்: கொல்லிமலைக்கு மிஷனரியாக அர்பணித்திருந்த ஈவ்லின் அம்மையாரின் அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ், இந்த காலகட்டத்தில் உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் 1974-ம் வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவரான தனது மகன் பால் பிராண்டுடன் வேலூரில் தங்கி இருக்கும் போது கீழே விழுந்துவிட்டதால், எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார்கள். அதிக சிகிச்சையளித்தும் பலனில்லாமல் தனது 95-வது வயதில் டிசம்பர் 18-ம் தேதி கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.

    ஈவ்லின் அம்மையாரின் வேண்டுகோளின்படி அவரது உடல் 19-ம் தேதி கொல்லிமலையில் அவரது கணவர் ஜெசிமன் கல்லறை அருகினில் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். தன் கணவர் ஜெசிமன் பிராண்ட் விட்டுசென்ற பணியை கொல்லிமலையில் சுமார் 45 ஆண்டுகள் நிறைவேற்றிய ஈவ்லின் அம்மையார் இங்கிலாந்தில் லண்டன் மாநகரின் சொகுசான வாழ்வைத் துறந்து, தமிழ்நாட்டின் கொல்லி மலைப் பழங்குடி இனத்தவருக்கென்று தன் வாழ்வை அர்ப்பணித்துவிட்டார். இன்றும் கொல்லிமலை மக்களால் ஈவ்லின் அம்மையார் கொல்லி மலை மக்களின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார். இவருடைய வாழ்வும் செயல்களும் நமக்கு ஒரு சவால் விடுப்பதாகவே இருக்கின்றது.

    இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.

    பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.

    21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.

    ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.


====================
Daughters of the Church
Evelyn Brand (1869-1974)
=======================
    Childhood: Evelyn Constance was born in 1879 in Melbourne, England, the ninth child of a wealthy Evelyn and her husband. Evelyn has been good at painting and painting since she was a child. As such, she exhibited rare traits, such as craving and wanting superior things, from an early age. She had mastered homeopathic medicine during her college season.

    Jessamine Brand Came to Tamil Nadu: .Jessamine, who dedicated himself to Christ at the age of 14 in England, carried the Word of God among the people of India who have never heard of Jesus even once, during a missionary vision meeting in his hometown at the age of 20. ‘How can they know the way of life if there is no preacher?’

    The call was made to endure suffering and to dedicate oneself to God. Hearing this, Jessamine dedicated himself with a heavy heart. So he joined the Baptist Missionary Society, studied medicine for a year, left a prosperous life at the age of 22 and came to Chennai, Tamil Nadu at the end of 1907. He was well versed in architecture, carpentry, silk work and engineering. After two years of Tamil training in Chennai, he was sent to Salem district in 1909.

    Hospital in Chenda Mangalam: Jessamine set up a small hospital in Chenda Mangalam and expressed the love of Jesus by providing medical assistance to the patients who came there. He saved the lives of thousands of people from the plagues of those days, such as plague and cholera. In this context, Jessamine’s essay on the Kolli Hills in 1911 was a source of spiritual gain to many in the Church of England. One person who was inspired by that article was Evelyn Constance.

    Eveline came to Tamil Nadu: Born into a very influential family, Evelyn Constance, like Jessamine, gave up all possessions and comforts and agreed to do evangelism in India at the age of 32, sailing to India in 1911 on behalf of the Strict Baptist Missionary Society (SBMS) in the Nilgiris. They were sent to Coonoor to learn Tamil.

    About Kolli Hills: Kolli Hills is a mountain range in the eastern part of Tamil Nadu, India. Of these, more than 200 villages in the mountain range, which were a part of the Salem district, Namakkal and Rasipuram talukas, were inhabited by the Karalar tribe.

    Kolli Hills is a densely forested area about 40 km long and 16 km wide. It is 3000 to 4000 feet above sea level. There were many villages in the area where no missionary had set foot. The people here were uneducated because there were no schools. The villages here were completely unconnected to the outside world due to the lack of proper road facilities.

    Vision about Kolli Hills: One day an old man came to the Chenda Mangalam Missionary Hospital in a hurry. The man told Jessamine that he was walking down the hill to heal his diarrhea. After Jessamine treated and healed him, he learned many things about the people of Kolli Hills. Then he said ‘Sir, our people are living in poverty uncivilized, uneducated and without medical facilities. Won't you come to our area and help?’ He asked Jessamine longingly. Jessamine knew the man's call was God's call.

    Mission to Kolli Hills: During his ministry, Jessamine frequently visited Chennai and took care of other responsibilities of the Baptist Missionary Society. Evelyn came to Chennai from Coonoor in 1912 and met Jessamine in Chennai. Their thoughts were on the Kolli Hills tribe. So Jessamine Brand and Evelyn Constance were married in August 1913 in the Baptist Church in Chenda Mangalam at the foot of the Kolli Hills.

    As soon as the marriage was over, they traveled to the Kolli Hills, walked in the midst of the pouring rain, climbed the hill and came to the wooden house given in the Kolli Hills. Initially, the Kolli Hills tribesmen were frightened when they saw Europeans wearing pants and shirts. Then a man who had been treated at his place recognized Jessamine and told his villagers that he was a doctor and therefore no one should be afraid of him. So the people approached Jessamine and his wife. With the aid of the medical box he had just taken with him, the Evelyn and her husband gave medical help to many and expressed their love for Jesus.

    Ministry in the midst of Tribulations: Every tribal village on the Kolli Hills was under the control of the Hindu priests there. They made worships for the people there, reciting spells for disease, and getting more money to cast out demons. In this situation these priests acted against the ministry of the Evelyn and her husband so that their income would cease if the people of the Kolli Hills tribe followed Jesus. They kept the people from coming to Christ, fearing that those who accepted Christ would be left out of the city and away from their families.

    As time went on, people embraced the medical help given by the Evelyn and her husband and even though they were healed, no one accepted Jesus. The Evelyn and her husband continued their evangelistic and medical work by staying in sheep or cow sheds in the villages, believing that the people of the hill country would belong to Jesus.

    Life style of the Kolli Hills: Among the tribes of the Kolli Hills, customs such as child marriage, polygamy, and divorcing of wives, divination, astrology, worshipping many god and goddesses were found. If a fortune-teller comes to that place when there is no trace of education and says that the child is not right at birth, then the child will be killed alive, or the child will be laid on a stretcher and thrown on the edge of the fence. To find out the superstitious beliefs of such people, the Evelyn and her husband traveled all over the world, preaching the good news of Christ to the hill people.

    Mother of the Mountains of Death: Evelyn and her husband began their ministry in the mountains in 1919, leaving the opportunity to go to England for vacation six years later to continue their ministry in the Kolli Hills. That year the deadly malaria virus began to spread to all the villages there. The affected people will be dumped on the hilly rock by the local tribesmen. If the disease was cured and they were alive they were allowed back into the village. That is why the area is still known as the SICK MOUNT.

    During the plague, Jessamine and Evelyn gave rice porridge to these patients and saved many. However, the effects of the disease were so severe that many died. In this, from near their wooden house, the priest and his wife, who were fiercely opposed to the ministry, were killed. So Evelyn and her husband adopted their son and daughter and became the mother of the priest's children. Evelyn is still called the Mother of the Mountains of Death.

    Back to Home Land: In 1923 Evelyn and her husband completed 10 years of service in the Hill Country. They had a son, Paul, and a daughter, Connie. Evelyn and her husband went to England to enroll them in school as Paul Brand was 9 years old and Connie was 6 years old. Jessamine and Evelyn shared their experiences of Mount Kolli with churches and friends and relatives in England.

    Ruth Harris, then Evelyn's niece, dedicated herself to coming to the Kolli Hills as a missionary. Jessamine and Evelyn left their two children with Evelyn's two sisters, and when the holidays were over, it was hard for them to separate from the children.

    But Jessamine did not know that this was the last time he would see his children Paul Brand and Connie. As Evelyn's left the children, she wept, feeling that her affections were dying. However, he returned to Kolli Hills after completing his vacation due to his heartfelt condolences to the people of Kolli Hills.

    Community work: Jessamine, who had returned to India, first built a hostel for girls and then a hostel for the children of Kolli Hills village to get education. The children in this hostel were raised by Jessamine and Evelyn just like their own children. Children who were dying or on the verge of death were treated and cared for in the hostel.

    Through their sacrificial ministry many began to accept Christ. So they built a church to lead them into Christ. Within a short time they opened 12 schools in the Kolli Hills areas. They also taught horticulture, mat weaving, weaving, silkworm rearing, silk thread making, building work, and carpentry to improve the economy of the Kolli Hills people. They expressed their love for Christ by giving medical treatment to about 25,000 people in a year and by performing more than six hundred surgeries.

    Origin of Co-operative Bank: The Kolli Hills tribesmen borrowed money at interest from the local landlords and worked for them as slaves. Determined to change this, Jessamine visited all the villages in the Kolli Hills, collected forest statistics and sent them to the British government, asking the government to start co-operative banks and provide low-interest loans to the people. This was also accepted by the government.

    Revenue officials also found out that more than 400 tribal people who had been living in the Kolli Hills area for more than 20 years were severely beaten up and evicted. It was only after the arrival of the great architect and carpenter Jessamine that the methods of cutting wood and building houses were introduced in the Kolli Hills area. Until then they had been living in huts. They also taught how to multiply yields using scientifically prepared fertilizers. Similarly, the people of Kolli Hills built roads for many kilometers to connect with other places.

    The Death of Jessamine Brand: Jessamine did not escape malaria and Black Water Fever that spread in the Kolli Hills. No matter how hard the doctors and Evelyn tried, Jessamine got the flu. In this situation, on the evening of June 15, 1929, he became a good soldier for Christ, surrendered his soul into the hands of God, and ended up fighting a good fight for Christ.

    Jessamine Brand (1885-1929), 44, spent 17 years of his life for the people of Kolli Hills. Evelyn, who was separated from her husband, did evangelism and medical work in Kolli Hills for some more time before returning to England.

    Ministry in Chennai: Evelyn went to England to see her son Paul Brand and Connie, who lost their father. After spending a few months with the children, she wanted to return to Kolli Hills and continue her ministry. But her application was rejected by the Baptist Missionary Society, which did not want Evelyn to go to Kolli Hills alone, past 60 years of age. Despite several attempts by Evelyn to continue her ministry with her husband in the Hill Country, she was forced to stay in the UK for eight years because the Baptist Mission did not cooperate.

    At the age of 68, she wrote a letter to the Missionary Society requesting that she be sent to India only once and that she stay in the Baptist Missionary Society for only one year and then return to England after retirement. Evelyn came to Chennai in January 1947 after getting permission. Although Evelyn worked in Chennai, the memories of the people of Kolli Hills pushed her deeper. So he would go to Kolli Hills during the holidays and come to Chennai to see the people there. Evelyn, who thus completed one year of service in Chennai, retired from the Baptist Missionary Society at the age of 70.

    Independent Ministry: Evelyn, who had been evangelizing at the Baptist Missionary Society for about 36 years, wanted to continue evangelism and medical work despite her retirement. Ignoring the opportunity to go to England for this, she went there to continue the Kolli Hills ministry left by her husband Jessamine. For this she stayed in Salem in Tamil Nadu, and on the great Kalvarayan hill near Attur and began to do evangelism.

    She rode horses, rode in a dolly, and traveled more than 20 miles daily, doing evangelism and community service. Evelyn would accompany the female staff to help her. She would take the medicine and give the medicine to those who came for treatment. Evelyn fell down while conducting a medical camp and suffered serious head injuries. She was treated for it and using two bamboo sticks to walk, continued the evangelism and medicine. Through the tireless efforts of Evelyn, the gospel was preached in all five hills of the Kolli Hills. Many accepted Christ.

    Fifteen years of unremitting labor have wiped out the guinea worms disease from the Calvaryan Hills. In 1948, Evelyn went to the Pachaimalai to stay and serve. There were over 85 villages in these hilly areas. So in 1962 she bought a place in Pachaimalai and stayed there, continuing her evangelistic and medical work. Similarly, she continued to do evangelism and medical work in the hills like Chidderi Hill, Bodhamalai, Baithur Hill and Arnuthu Hill. She then stopped the cultivation and sale of cannabis by the tribal people in the Jagiri Hills and provided alternative means for their rehabilitation.

    Women Empowerment: Evelyn met with English government officials, bought a lease for about 34 acres of land, and began building some buildings, a church, a hospital, a charity home, and an orphanage. The women, who were abandoned by their husbands at the orphanage, also cared for children who had been abandoned by their parents by Fortune Tellers.

    Through their efforts, Evelyn had set up 5 new churches, 9 schools, 3 hospitals, orphanages, men's hostels, farmshouses, agricultural farms and silkworm farms, transforming the ‘Hill of Death’ known as Kolli Hills into the abode of all. Her social reform revolution is still remembered in the Kolli Hills.

    Ministry of Evelyn: She considers the suffering of others as her own suffering and does many favors without looking at those who seek help. She generously donated the income from his family property to the poor. She sent lepers to Christian hospitals in Salem, Trichy and Vellore to help people of all race and religion.

    She would study and research the scriptures in Tamil and English, illustrate the scriptures suitable for evangelism and thereby impress the minds of those who listen to the scriptures. It is noteworthy that Evelyn wrote 13 lessons entitled "Comparing the Old and New Testaments" to train indigenous Christian priests.

    Evelyn as a morning star of Kolli Hills: Ruth Harris, niece of Evelyn, who was a missionary in the Hills, was a supporter during this period. In this situation, in September 1974, while staying in Vellore with her son Paul Brand, a doctor. Evelyn fell down and went to bed with a fractured bone. She went to the Lord on December 18 at the age of 95. At her request, her body was laid to rest on the 19th December near the tomb of her husband, Jessamine.

    Evelyn, who completed about 45 years of work in the Kolli Hills, leaving her husband Jessamine Brand behind, has renounced the luxurious life of the city of London in the UK and dedicated her life to the Kolli Hills tribe of Tamil Nadu. To this day, Evelyn is affectionately known as the Mother of the Kolli Hills.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.