Type Here to Get Search Results !

Psalm 107-109 | ஆண்டவர் செய்த நன்மைக்காக அவரைப் போற்றுங்கள் | The Lord is good and gracious | சங்கீதம் 107-109 வேத ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

========
PSALM : 107 - 109
=======
We need more “say so” Christians. Let the redeemed of the Lord say so.*




⛹️‍♂️ *Application* : Ps.107:1-2- *We need more “say so” Christians. Let the redeemed of the Lord say so.* Let us not go around complaining and criticizing. If we are a Christian, let us tell others how good God is. *When we as believers “say so”—letting others know that we have been redeemed—something wonderful happens. Our own faith is strengthened and our identification as believers is established.*




⛹️‍♂️ *Application* : Ps.107:39-40- Those who wouldn’t obey would continue to wander aimlessly. *Therefore, the key is to obey what the Lord writes on our hearts, whispers in our ears, and reveals through the Scriptures.*




⚠️Ps.104:14-16-- *Rejecting the work of Christ is the singular sin that will send a man or a woman to hell—a concept understood even in our own judicial system.…* Convicted of mail fraud in 1830, George Wilson was sentenced to death. But since Wilson’s brother had done Andrew Jackson a great personal service, President Jackson wrote George Wilson a pardon. When the pardon was delivered to his cell, however, Wilson refused to take it. The man sentenced to die refused to receive the pardon. What to do? When the case went before the Supreme Court, Chief Justice John Marshall wrote this decision: A pardon is a slip of paper the value of which is determined by the acceptance of the person to be pardoned. If it is refused, it is no pardon at all, simply a piece of paper. Thus, George Wilson must be hanged. The Lord has a pardon for us. *In the Lord Jesus Christ, we have forgiveness of sins and a pardon for our iniquities, but we have to accept it. Have we accepted our pardon yet? Are we delivered from sin and from the penalty for sin?*




📖Ps.107:43- *A little girl has defined lovingkindness.* She said, “If you ask your mother for a piece of bread and butter, and she gives it to you, that is kindness. But if she puts jam on it without you asking her, that is lovingkindness.” *The lovingkindness of God is lavished upon us who belong to Him.*

Jaya Pradeep-Kodaikanal.


*சங்கீதம் 107 - 109*

*விடுதலை தரும் தேவன்*..

இஸ்ரவேலர், கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற் போனபோது.. கர்த்தர் அவர்களைத் தேசத்தை விட்டுத் துரத்திவிட்டார். இஸ்ரவேலர் அந்நிய

தேசத்திலிருந்து.. கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது.. கர்த்தர் தமது மிகுந்த கிருபையினால் அவர்களை விடுவித்தார்.




அங்குமிங்கும் அலைந்து திரிந்த யூதர்கள்.. வாக்குத்தத்தப் பூமிக்குத் திரும்பி வந்தபோது..

கர்த்தர் கொடுத்த விடுதலைக்காக.. அவரை உயர்த்திப் பாடும் பாடல்..

சங்கீதம் 107.

இந்த சங்கீதம்.. 4 கவிகளை உடையது..

பல்லவி ,மூன்று முறை பாடப்பட்டிருக்கிறது..

(சங் . 107 : 9, 16, 31)




கர்த்தர், தமது ஜனங்களை எப்படிப்பட்ட

சூழ்நிலைகளிலிருந்து விடுவித்தார் என்பதை..

நான்கு சம்பவங்களின் மூலம் கூறுவதோடு.. முடிவிலே அவர்கள் விரும்பிய இடத்திற்குக் கொண்டு சேர்த்தார் என்பதையும்..

இந்த சங்கீதம் கூறுகிறது.




🕊️ பாலைவனத்தில் காத்த தேவன்..( சங்.107: 1-9).

🕊️ சிறையிருப்பிலிருந்து விடுவித்த தேவன்..

(சங்.107 : 10- 16).

🕊️ நோயிலிருந்து குணம் தந்த தேவன்.. ( சங்.107 :17 - 22).

🕊️ கடற்பயணத்தில் காத்த தேவன்.. (சங்.107 :23 - 32).




இன்று நம்மில் பலர் வாழ்விலும்.. இவ்விதமான இக்கட்டுகளை நாம் கடந்து

வந்துகொண்டிருக்கலாம்..

சிலர் வேலையின்றி, தொழிலிலே நஷ்டமடைந்து.. வாழ்வில் குறைவுகளோடு, வனாந்தர அனுபவங்களைக் கடந்துவரலாம்.

பலர் பாவம் மற்றும் சாத்தானின் சிறையிருப்பின் அனுபவத்திற்குள் இருக்கலாம். இன்னும் சிலர், வியாதியின் வேதனைகளோடு இருக்கலாம்.

கடலிலே கொந்தளிக்கும் அலைகள் போல.. சில

குடும்பங்களிலே பிரச்சனைகள் பெருகி..எந்த நேரத்தில் குடும்பம் உடையுமோ என்று அநேகர் பயத்தோடும் இருக்கலாம்.




அன்று இஸ்ரவேல் மக்கள் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டது போல.. நாமும் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும்..

நாம் எங்கிருந்து, என்ன நிலைமையிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாலும்.. அவர் நமக்கும் பதில் கொடுத்து..நம்மை விடுவிப்பதற்கு..கிருபையும்

இரக்கமும் நிறைந்த தேவனாய் இருக்கிறார் என்ற விசுவாசத்தை..இந்த சங்கீதம்

நமக்குக் கற்றுக்கொடுக்கிறது..




நமது இரட்சகராகிய இயேசு

கிறிஸ்து.. வனாந்தரத்தில்,

5 அப்பம், 2 மீனைக் கொண்டு.. 5000 பேரை போஷித்தவர்... இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு..சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேதுருவை,

( அப்.12 : 6 )

பாவத்தினால் கட்டப்பட்டிருந்த திமிர்வாதக்காரனை,

(லூக் .2 : 1-5 )

சாத்தானால் கட்டப்பட்டிருந்த லேகியோனை விடுவித்தவர்..

( லூக்.8 : 28-32)

நோயினால் மரண அவஸ்தையிலிருந்த ராஜாவின் மனுஷனின் மகனை..

தமது வார்த்தையை அனுப்பி சுகமாக்கினவர்..( யோ 4:50) காற்றையும் கடலையும் அதட்டி அமைதலடையச் செய்தவர்..

(மத் .8:26)

அந்த இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார்..

அவர் நம்முடைய வாழ்விலும்.. அற்புதங்களைச் செய்ய வல்லவராகவேயிருக்கிறார்.




*பிரியமானவர்களே*..

*இக்கட்டு நேரங்களிலே*

*மனுஷருடைய உதவி விருதா* *என்றே வேதம் கூறுகிறது*..

*எனவே முதலாவது* *கர்த்தருடைய ஒத்தாசையையே*

*தேடுங்கள்*..

*அவன் என்னை நோக்கிக்*

*கூப்பிடுவான்.. நான் அவனுக்கு*

*மறுஉத்தரவு அருளிச்* *செய்வேன்.. ஆபத்தில் நானே*

*அவனோடிருந்து.,அவனைத்* *தப்புவித்து ..அவனைக்* *கனப்படுத்துவேன் என்று கர்த்தர்* *நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்*..

( சங்.91 : 15 )




*மனுஷரை நம்புவதை* *விட்டுவிட்டு*..

*வாக்குமாறா கர்த்தரிடம்*

*நம் வாழ்வை* *ஒப்புக்கொடுப்போம்*..

*வழுவாதபடி அவர் நம்மைக்* *காப்பார்*..

*தமது மகிமையுள்ள* *சந்திதானத்திலே*..

*மிகுந்த மகிழ்ச்சியோடே*

*மாசற்றவர்களாய் நம்மை*

*நிறுத்துவார்*..

ஆமென்.🙏

மாலா டேவிட்


Psalms 107-109

*WHAT A GOD WE SERVE* ❗️




*The Lord shall stand at the right hand of the poor* ‼️ to save him from those who condemn him (Ps 109:31)




💥 *The Lord stood by him* and said, “Be of good cheer, Paul; for as you have testified for Me in Jerusalem, so you must also bear witness at Rome.” (Acts 23:11)




💥 *The Lord* descended in the cloud and *stood with Moses* there, and proclaimed the name of the Lord (Exo 34:5)




💥 *The Lord came and stood and called* as at other times, “Samuel! Samuel!” and Samuel answered, “Speak, for Your servant hears.” (1Sam 3:10)




At my first defense *no one stood with me⁉️ but all forsook me❓️ But the Lord stood with me* 🙏🙏 and strengthened me (2Timo 4:16,17)




*சங்கீதம் 107 - 109*




*கர்த்தரைத் துதியுங்கள் ; அவர் நல்லவர் , அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு , ....... பசியாகவும் , தாகமாகவும் , ஆத்துமா தொய்ந்ததாகவும் , அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் ; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து , அவர்களை விடுவித்தார். சங் 107 : 1 - 6*

இந்த சங்கீதத்தின் தலைப்பு , *கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் , ஆனந்தத் துதிபாடல்.*

மேற்கூறிய வேதப் பகுதியில் கர்த்தரிடத்தில் கிடைக்கும் , அந்த மெய்ச் சமாதானத்தை , சந்தோசத்தைத் தேடி , ஆத்துமத்தாகத்தோடு , *மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல* வாஞ்சித்துத் தேடி , அதைப் பெற்றுக் கொண்டவர்களின் , ஆனந்தக்களிப்பை விளக்குகிறது.

*அந்தகாரத்திலும் மரண இருளிலுமிருந்து , அவர்களை வெளிப்படப் பண்ணி , அவர்கள் கட்டுகளை அறுத்தார். வச : 14* இங்கே பாவத்தினால் சிறைப்பட்டுப்போனவர்கள் , அந்தகாரத்திலும் அதாவது சாத்தானுடைய பிடியிலும் , மரண இருளிலும் காணப்படுகிறார்கள் ; அப்பொழுது அவர்கள் , தங்கள் பாவங்களை உணர்ந்து , மனந்திரும்பித் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது , கர்த்தர் அவர்களை பாவத்திலிருந்தும் , மரண இருளிலிருந்தும் விடுவித்ததினால் , அவர்கள் அவருடைய (கர்த்தருடைய) கிருபையைப் புகழ்ந்துப்பாடித் துதிக்கிறார்கள்.

*நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் , தங்கள் அக்கிரமங்களினாலும் நோய் கொண்டு , ஒடுங்கிப் போகிறார்கள். ....... தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் ; அவர்கள் இக்கட்டுகளுக்கு , அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். வச : 17 - 19*

துன்மார்க்கர்கள் பாவஞ் செய்து , அதனால் நோய் கொண்டு வேதனைப்படும் வேளையில் , கர்த்தரை நோக்கி, தங்கள் பாவங்களை உணர்ந்து , அறிக்கையிட்டு ஜெபிக்கும்பொழுது , கர்த்தர் அவர்கள் ஜெபங்களைக் கேட்டு , அவர்கள் பாவங்களை மன்னித்து , பரிபூரண சுகமளிக்கிறார். அதனிமித்தம் அவர்கள் கர்த்தரைத் துதித்துப் பாடிப் புகழுகிறார்கள்.

*அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் , ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். வச : 26*

இயேசு சீஷர்களுடனே படகில் பயணித்த போது , பெருங்காற்று உண்டாகி , அலைகளால் படகு மூடப்படும் அபாயம் ஏற்பட்டது ; அப்பொழுது அவர்கள் ஆபத்தில் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள் . எனவே இந்த மேற்கூறிய வசனங்கள் கடலில் பயணம் செய்கிறவர்களுக்குக் கர்த்தர் எவ்வாறு உதவிச் செய்கிறார் என்பதை விளக்குகிறது. யோனா தீர்க்கதரிசியும் கடலில் வீசப்பட்டு , மீன் வயிற்றிலிருந்து ஜெபசித்தார் ; கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு அவரை பத்திரமாக , கரையில் மீன் கக்கிவிட உதவிச் செய்தார்.

எனவே பிரியமானவர்களே , கடலில் யாத்திரை செய்பவர்கள் தங்கள் ஆபத்தில் , தங்கள் திறமையையோ , தங்கள் ஞானத்தையோ நம்பாமல் , கர்த்தரையே நம்பி , அவரை நோக்கிக் கூப்பிடும் பொழுது , கர்த்தர் அவர்களை அவர்கள் இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கித் தப்புவிக்கிறார் ; *அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் , மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்தார்கள். சங் 107 : 31* இப்படிப்பட்டவர்களை , வேதம் *ஞானவான்கள்* என்று வருணிக்கிறது , பிரியமானவர்களே ! அவர்கள் கர்த்தருடைய கிருபை எவ்வளவு விசேஷமானது என்பதை உணர்ந்து கொள்வார்கள். *ஞானவான்கள் கர்த்தருடைய கிருபையை உணர்ந்து கொள்வார்கள். வச 43*

*ஆமென் ! அல்லேலூயா ! !*




Rajam Theogaraj , Palayamkottai.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

[14/10, 7:46 am] +91 80030 45999: *14.10.2023*




👑 *கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது* 👑




☄️ *"கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.”* (சங்கீதம் 107:1).




🔸 சங்கீதம் 107, *கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது* என்று ஆரம்பிக்கிறது. வேதத்தில் இதே வசனத்தை நாம் பல இடங்களில் காண முடியும். இது *தேவனுடைய குறிப்பிடத்தக்க பண்புகளை* எடுத்துக்காட்டுகிறது.




🔸 இயேசுவின் வார்த்தைகள்: *"தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே."* (மாற்கு 10:18).




🔸 தேவன் நல்லவராயிருப்பதால், அவர் நன்மை செய்கிறவருமாயிருக்கிறார் என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறான். *"தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்."* (சங்கீதம் 119:68).




🔸 கர்த்தர் நல்லவராகையால், ஆபத்துக்காலத்தில் காக்கிறார். *“கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை.”* (நாகூம் 1:7).




🔸 கர்த்தர் நல்லவர், உத்தமர் என்பதால், அவர் பாவிகளைத் தண்டிக்க விரும்பவில்லை, மாறாக எப்படி இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு வழியைக் கற்றுக்கொடுக்கிறார் என்பதை தாவீது அறிந்திருக்கிறான். *“கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.”* (சங்கீதம் 25:8).




🔸 கர்த்தர் நல்லவர் என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்து மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி தாவீது அறிவுறுத்துகிறான். *“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்.”* (சங்கீதம் 34:8).




🔸 தேவன் நம்மை இரட்சித்தது அவருடைய கிருபையால்தான், நம்முடைய நற்கிரியைகளால் அல்ல. *"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, நம்மை இரட்சித்தார்."* (தீத்து 3:5).




🔸 கர்த்தர் கிருபையும் இரக்கமும் உள்ளவராக இருப்பதால், அவர் நம்மை தண்டிக்க விரும்புவதில்லை. எனவே நாம் அவரை விட்டு விலகியிருந்தால், நம் இருதயங்களைக் கிழித்து அவரிடம் திரும்ப வேண்டும். *“நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.”* (யோவேல் 2:13).




🔸 கிறிஸ்து நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் ஜெயங்கொண்டவராகையால், அவர் நம்முடைய பலவீனங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு நமக்கு உதவி செய்யவல்லவர்; எனவே, *நாம் கிறிஸ்துவை அணுகி இரக்கம், கிருபை, உதவி மற்றும் மன்னிப்பைப் பெறலாம்.*




🔹 *கர்த்தர் நல்லவர் என்பதை நாம் உண்மையில் ருசித்துப் பார்த்திருக்கிறோமா?*

🔹 *இந்த பூமியிலும் நித்தியத்திலும் நாம் வாழ்வதற்கு தேவனுடைய கிருபையை முழுமையாகச் சார்ந்திருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *கர்த்தர் நல்லவர், இக்கட்டுக் காலத்தில் காக்கிறார்.*

2️⃣ *கர்த்தர் நல்லவர், உத்தமர் என்பதால், அவர் பாவிகளைத் தண்டிக்க விரும்பாமல், எப்படி இரட்சிக்கப்பட வேண்டும் என்று வழியைக் கற்றுக்கொடுக்கிறார்.*

3️⃣ *கர்த்தர் நல்லவர் என்பதை நாமே ருசித்துப் பார்த்து, மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.*

4️⃣ *கர்த்தர் கிருபையும் இரக்கமும் உள்ளவராக இருப்பதால், நாம் அவரை விட்டு விலகியிருந்தால், நம் இருதயங்களைக் கிழித்து அவரிடம் திரும்ப வேண்டும்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை

[14/10, 7:46 am] +91 80030 45999: சங்கீதம்.107:8.

🌹🌹🌹🌹🌹

"ஆண்டவர் செய்த நன்மைக்காக அவரைப் போற்றுங்கள்."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

குறை கூறாமல்,கர்த்தரை அதிகமாகப் புகழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

கடவுள் இன்னும் மகிமைப்படுத்தப்படுவார்.

பொதுவான அவரின் இரக்கங்களுக்காக தினமும் கடவுளைத் துதிப்போம்.

சூரியனைக் காணும் கண்களுக்காகவும், நடமாடுவதற்கு ஆரோக்கியம் மற்றும் வலிமைக்காகவும், உண்ணும் உணவிற்காகவும், உடுத்தும் ஆடைக்காகவும் கடவுளைத் துதிப்போம்.

சுதந்திரமாக வாழ்வதற் காகவும், நண்பர்களுக்காகவும், குடும்ப உறவுகளுக்காகவும், வசதிகளுக்காகவும், அவருக்கு நன்றி கூறுவோம்.

அவருடைய வல்ல கரத்திலிருந்து நாம் பெறும் எல்லாவற்றிற்காகவும் அவரைப் புகழ்வோம். ஏனென்றால் நாம் கொஞ்சமும் தகுதியானவர்கள் அல்ல.

நாம் இனிமையாகவும்,சத்தமாகவும் போற்றும் பாடல்களில் சிறந்தது அவர் நம்மை மீட்டுக் கொண்ட அன்பை பற்றியதாக இருக்க வேண்டும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.

[14/10, 7:46 am] +91 80030 45999: *தாபரிக்கும் ஊர்*

~~~~~~~~~~~~~~

சங்கீதம் 107 : 4 - 7. *அவர்கள் தாபரிக்கும் ஊரை காணாமல், வனாந்தரத்திலே அவாந்திர வழியாய், பசியாகவும், தாகமாகவும் ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்*.




1. ஆம், *தாபரிக்கும் ஊர் என்பது நாம் தங்க வேண்டிய பாதுகாப்பான இடம்*. இங்கு இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தாபரிக்கும் இடத்தை காணவில்லை. கண்டு பிடிக்கவில்லை. ஆகவே அவர்கள் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தார்கள். வனாந்தரத்திலே பாதை தெரியாது. ஆகாரம் இல்லை. தண்ணீர் இல்லை. தாங்க முடியாத உஷ்ணம். ஆகவே அவர்கள் ஆத்துமா தொய்ந்து போயிற்று. சோர்ந்து போயிற்று.




*இன்று நாம் தங்க வேண்டிய தாபர ஸ்தலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து*. அவருடைய வசனத்தின் மறைவிலே நாம் வாழ வேண்டும். அப்போது நாம் அலைந்து திரிய தேவையில்லை. அவர் நம்மை வசனத்தினால் போஷிப்பார். பரிசுத்த ஆவியினால் தாகம் தீர்ப்பார். பரலோக சந்தோஷத்தினால் நிரப்புவார்.




2. *தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்தார்* ஆம், இன்று நாமும் தாபர ஸ்தலத்தை காணாமல் தவிக்கிறோமா? கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம். ஜெபிப்போம். அவர் நம்மை இக்கட்டுகளிலிருந்து விடுவிப்பார்.




3. *ஆகவே, தாபரிக்கும் ஊர் போய் சேர அவர்களை செவ்வையான வழியிலே நடத்தினார்.* ஆம், நம்மை விடுவித்தது மட்டுமல்ல, நாம் சென்று சேர வேண்டிய தாபரிக்கும் ஊராகிய பரலோக இராஜ்யத்திலே நம்மை கொண்டு சேர்ப்பார். இன்று வனாந்தரத்திலே அலைந்து கொண்டிருக்கிறோமா? நம் ஆபத்தை உணர்ந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம். நம் இயேசு நம்மை விடுவிக்க காத்திருக்கிறார். அவர் அன்பை எண்ணி அவரை துதிப்போம்.




4. சங்கீதம் 91: 9 -13 . *எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்கு தாபரமாக கொண்டாய்.* ஆகையால்




1. *பொல்லாப்பு உனக்கு நேரிடாது.*




2. *வாதை உன் கூடாரத்தை அணுகாது.*




3. *உன் வழிகளில் எல்லாம் உன்னை காக்கும் படி, தூதர்களுக்கு கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாத படி, அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்தி கொண்டு போவார்கள்*.




4. *சிங்கத்தின் மேலும், விரியன் பாம்பின் மேலும் நீ நடப்பாய். பால சிங்கத்தையும் , வலு சர்ப்பத்தையும் மிதித்து போடுவாய்.*




ஆம், இந்த உலகிலே கர்த்தரும், அவர் வார்த்தைகளும் நாம் தங்குகிற மறைவிடமாய், தாபரமாயிருக்க கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. பரலோக இராஜ்யத்தின் சந்தோஷம், சமாதானத்தால் நம்மை நிரப்புவாராக. மட்டுமல்ல, நாம் சென்று சேர வேண்டிய பரலோக இராஜ்யமாகிய நம் தாபர ஸ்தலத்திலே நம்மை கொண்டு சேர்ப்பாராக. ஆமென். அல்லேலூயா.


*Dr. Padmini Selvyn*



♥️A FAITHFUL GOD OF LOVE♥️*

Psalms 107-109

☄️Psalms 107-109, beautifully illustrate the relationship between God and His people, highlighting the struggles faced by humanity and the unwavering love of our Heavenly Father.




1️⃣ *PSALM 107: THE FAITHFUL LOVE OF GOD*




🔹In this psalm, the writer poignantly describes the wandering and distress of those who have strayed from God's path.

🔹However, it also emphasizes the redeeming power of God's love and mercy.

🔹The psalmist encourages us to give thanks to God, for He is faithful and delivers us from our troubles when we cry out to Him.

🔹It serves as a reminder of the importance of continually seeking God and relying on His steadfast love.




2️⃣ *PSALM 108: TRUSTING GOD IN EVERY SEASON*




🔸This psalm is a beautiful expression of trust and confidence in God's unfailing presence and guidance.

🔸Even in times of trouble and uncertainty, we can find strength and hope by placing our trust in the Lord.

🔸The psalmist calls us to awaken our hearts and praise God, recognizing His sovereignty over all circumstances.

🔸It serves as a reminder that God is our ultimate source of refuge and strength.




3️⃣ *PSALM 109: PRAYING FOR JUSTICE AND DELIVERANCE*




🔺Psalm 109 is a heartfelt plea for justice and deliverance from the psalmist's enemies.

🔺It expresses the pain and anguish caused by betrayal and unjust treatment.

🔺The psalmist pours out their emotions to God, appealing for His intervention and asking for justice to be served.

🔺This psalm teaches us the importance of bringing our deepest hurts and struggles before God, trusting that He will hear and act in His perfect timing.




♥️ *LIFE LESSONS*




💥These psalms serve as a reminder of the enduring love of our Heavenly Father, His presence in all seasons, and the importance of seeking Him in times of trouble.

💥These psalms provide solace and encouragement, reminding us that God is always with us, ready to listen, heal, and restore.




*‼️LET’S LOOK UP TO OUR EVER PRESENT, FAITHFUL AND JUST GOD‼️*




Princess Hudson

[14/10, 7:46 am] +91 80030 45999: Day183 *PS 109:4 In return for my love they are my accusers but I give myself to prayer*




David was angry at being attacked by evil people who slandered him and lied Yet he remained a friend and a man of prayer




We must hate evil and work to overcome it,we must love everyone including those who do evil because God loves them .only through God' s strength we will be able to follow David's example.




David' s enemies did evil in return for good .So the psalmist turned to the lord in prayer ,for His protection and vengenance.

*It is a comfort to all believers that whoever is against them ,God is for them if we approach Him*
Cynthia Sathiaraj
Chennai

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.