Type Here to Get Search Results !

Psalm 105-106 | தேவனுடைய இரக்கமும் மீட்பும் | WHAT A GOD WE SERVE | சங்கீதம் 105-106 வேத ஆராய்ச்சி | ஆழமாக பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

==================
Psalms 105 TO 106
==================

_Bless the Lord O my soul, and all that is within me bless Your holy name, for you have pardoned and healed us, forgiven and redeemed us, and crowned us with loving-kindness and great compassion. For all that we have, and are, and ever hope to be, rests only on the merit of the Lord Jesus Who gave His life for us that we might live our life in Him. In His name we pray, AMEN_




📍📍Let us relentlessly continue to plead and pray for peace and reconciliation in Manipur (India) that the crisis will come to an end and the Lord will restore peace and comfort and strength to His people

📍📍 Pray for the injured, families mourning and the rescue efforts in Afghanistan

🗝️ *Pray for the Chief Coordinator Rev.C.V. Abraham and all who are wholeheartedly working to make this Program a success.*

🗝️ *Pray for God's Name to be exalted through this Program.*

🗝️ *Pray for all the participants, Admins and Coordinators of this Programme to be guided in God's power and wisdom*



*சங்கீதம்:105-106*

There is something wrong with us if we cannot look back through our life and find something to thank God for.*

❓Ps.105:43- God brought His people into the land. The psalmist recites Israel’s history as something to sing praise about. *There is something wrong with us if we cannot look back through our life and find something to thank God for.* As the final verse of this psalm says, “Praise ye the LORD.”




💡Ps.105:5- We are to remember His marvelous work. *The best place to remember the Lord’s most marvelous work—that of saving our souls—is at His Table, either personally, with our families, or as a church corporately.*




⛹️‍♂️ *Application* : Ps.105:1-6- Many of the Psalms open on a low-key, then build up to a crescendo of worship. But this one begins with a veritable explosion of praise that catches up the reader in its eloquent appeal. *Notice the variety of imperative verbs that are employed to encourage adoration:*

1️⃣Oh give thanks to the Lord,

2️⃣Call upon His name;

3️⃣Make known His deeds among the peoples!

4️⃣Sing to Him, Sing psalms to Him;

5️⃣Talk of all His wondrous works!

7️⃣Glory in His holy name:

8️⃣Let the heart of those rejoice who seek the Lord.

9️⃣Seek the Lord and His strength;

🔟Seek His face evermore!

1️⃣1️⃣Remember His marvelous works which He has done,

1️⃣2️⃣His wonders, and the judgments of His mouth,

1️⃣3️⃣O seed of Abraham His servant,

1️⃣4️⃣You children of Jacob, His chosen ones!




💪🏼Ps.105:39-42- *God’s provision for His people in the wilderness was fantastic.* A cloud not only kept them on course (Ex. 13:21) but served as a sort of smoke screen to hide them from the enemy (Ex. 14:19, 20). It became a pillar of fire at night to provide illumination for travel. When they wanted food, He gave them the best—quails in great abundance and manna, that wonder bread from heaven. They needed water, so He split the rock, and water gushed out. After they had used all they wanted, there was still enough to make a river in the desert. *Why all this painstaking provision by Jehovah? Because He could not forget the holy promise which He had made to Abraham His servant.*

Jaya Pradeep-Kodaikanal.


(சங்கீதம் : 105-106)

💐💐💐💐💐💐💐

*கர்த்தரைத் துதித்து அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்*.

*அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்*.

*அவரைப்பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்*.

*அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்*.

*அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மை பாராட்டுக்கள்*.

( சங்கீதம் : 105: 1-3)

★ கர்த்தர் செய்த அற்புதங்கள் ஏராளம். மற்றவர்களுக்கும் நமக்கும் அவர் செய்த அற்புதங்களை விவரித்துச் சொல்லி அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை.

*நம்முடைய நாவுகள் எப்போதும் கர்த்தரை துதிப்பவைகளாக காணப்படட்டும்*.

★ ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும். வீண் பேச்சு வெட்டிக் கதைகளை பொழுது போக்காக பேசிக்கொண்டு நேரங்களையும் நாட்களையும் கழிக்கிறவர்களாக இராமல், கர்த்தர் நம் எல்லோருக்கும் செய்த நன்மைகளுக்காக துதி ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறவர்களாகவும் கர்த்தரின் மகத்துவங்களை மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாகவும் நாம் காணப்படுவோமாக.

*ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; ஜசுவரியவான் தன் ஜசுவரியத்தைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்*.

*மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்*.

(எரேமியா: 9:23-24)

*ஆமென்*.

💐💐💐💐💐💐

✍️ பவானி ஜீஜா தேவராஜ்,

சென்னை.

(Admin: Group No. 2068)

[13/10, 7:43 am] +91 80030 45999: *13.10.2023*




❇️ *அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்* ❇️




☄️ *“கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.”* (சங்கீதம் 105:1-2).




⚡ சங்கீதம் 105 இன் முதல் 15 வசனங்கள் 1 நாளாகமம் 16:8 - 22 இல் காணப்படுகின்றன, அவை தாவீதின் பாடலின் பகுதியாக அடையாளம் காணப்படுகின்றன, இது உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் எடுத்துவரப்பட்ட போது பாடப்பட்டது. சங்கீதக்காரன் இஸ்ரவேலர்களை *கர்த்தரைத் துதிக்கவும், அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்கவும், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தவும், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசவும்* வேண்டுமென்று அறிவுறுத்தினான்.




⚡ மோசே தனது ஊழியத்தின் முடிவில் இஸ்ரவேலர்களுக்கு நினைவூட்டிச் சொன்னது: *"கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”* (உபாகமம் 32:3-4). கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குவது என்பது *அவருடைய குணாதிசயங்களைப் புகழ்வதன் மூலம் அவருக்கு மகத்துவத்தைச் செலுத்துவதாகும்.* தேவனுடைய கிரியை உத்தமமானது, அவர் நியாயமுள்ளவர், சத்தியமுள்ளவர், நீதியுள்ளவர், செம்மையானவர்.




⚡ வேறு சில சங்கீதங்களில், தாவீது *மகா சபையிலே தேவனுடைய நீதியைப் பிரசங்கிப்பது* (சங்கீதம் 40:9) மற்றும் *ஆண்டவருடைய வசனத்தைப் பிரசித்தப்படுத்துவது* (சங்கீதம் 68:11) பற்றி எழுதியுள்ளான்.




⚡ தேவனுடைய குணாதிசயங்களை அறிந்திருக்கிற அவருடைய பிள்ளைகள், *மற்றவர்களும் கர்த்தரை அறிந்து அவரை ஆராதிக்க வேண்டும்* என்பதற்காக அவருடைய மகத்துவத்தைப் பற்றி எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவனோடு பேசுவதற்கான பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது. நாம் *ஆண்டவரிடம் பேசுவது மட்டுமின்றி, அவரைப் பற்றி மற்றவர்களிடமும் பேச வேண்டும்; அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்வதோடு, பிரஸ்தாபப்படுத்தவும் வேண்டும்.* இது மற்றவர்கள், தேவனைப் பற்றியும், அவர் தம்மை வெளிப்படுத்தியுள்ள வழிகளைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள உதவும். *தேவனுடைய செயல்கள், ஆலோசனைகள் மற்றும் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மூலம் அருளும் மீட்பின் சத்தியங்கள்* போன்றவற்றை நாம் பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.




⚡ *அப்போஸ்தலர்கள்* எருசலேமில் தொடங்கி எல்லா தேசங்களுக்கும் *சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது,* அவருடைய செயல்கள் மக்களிடையே அறிவிக்கப்பட வேண்டும், அவர் செய்த அதிசயங்கள் பூமியெங்கும் அறியப்பட வேண்டும் என்ற *தேவத்திட்டம் நிறைவேறியது.* இயேசுவின் நாமத்தையும், அவருடைய அதிசயமான செயல்களையும் *தொடர்ந்து அறிவிப்பது விசுவாசிகளாகிய நம்முடைய கடமையாகும்.*




⚡ தேவனுடைய அதிசயங்களையெல்லாம் தியானிக்கவும், அவைகளைப் பற்றிச் சொல்லவும், வேதம் சில நிபந்தனைகளை நம் முன்வைக்கிறது: *குற்றமில்லாமை விளங்கும்படி கைகளைக் கழுவி, தேவனுடைய பீடத்தைச் சுற்றிவர வேண்டும்* (சங்கீதம் 26:6-7), அதாவது, இயேசுவின் இரத்தத்தால் பாவநிவிர்த்தி செய்வதன் மூலம் குற்றமற்ற மனசாட்சியைப் பெற்றிருக்க வேண்டும்; தேவனுடைய வார்த்தையை தியானிப்பதன் மூலம், *அவரது கட்டளைகளின் வழியை உணர்த்திருக்க வேண்டும்* (சங்கீதம் 119:27).




🔹 *இயேசுவின் நாமத்தையும், அவர் நமக்காகச் செய்த எல்லா அதிசயங்களையும் நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குவது என்பது அவருடைய குணாதிசயங்களைப் புகழ்வதன் மூலம் அவருக்கு மகத்துவத்தைச் செலுத்துவதாகும்.*

2️⃣ *இயேசுவின் நாமத்தையும், அவருடைய அதிசயமான செயல்களையும் தொடர்ந்து அறிவிப்பது விசுவாசிகளாகிய நம்முடைய கடமையாகும்.*

3️⃣ *தேவனுடைய செயல்கள், ஆலோசனைகள் மற்றும் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மூலம் அருளும் மீட்பின் சத்தியங்கள்* போன்றவற்றை நாம் பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.*

4️⃣ *கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் பாவநிவிர்த்தி செய்து, அவருடைய கட்டளைகளின் வழியை உணர்த்திருந்தால் மட்டுமே நாம் தேவனுடைய அதிசயமான செயல்களை பிரசித்தப்படுத்த வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை


Psalms 105,106

WHAT A GOD WE SERVE



*Inspite of repeated failures, The Lord saved His people* ⁉️ same true in our lives ‼️




💥 He saved them for His name’s sake,

That He might make His mighty power known (106:8)




💥 Moses His chosen one stood before Him in the breach, to turn away His wrath, lest He destroy them (106:23)




💥 Phinehas stood up and intervened,

And the plague was stopped (106:30)




💥 He regarded their affliction, when He heard their cry (106:44)




💥 For their sake He remembered His covenant, and relented according to the multitude of His mercies (106:45)




🙏🙏 *Oh, give thanks to the Lord, for He is good❗️For His mercy endures forever* ‼️(106:1)




Usha

[13/10, 7:43 am] +91 80030 45999: *நாள் 182 / 365*

*சங்கீதம் 105 - 106*




*வாக்குமாறாத கர்த்தர்*..




சங்கீதம் 105.. தேவனை நோக்கிப் பாடும் ஒரு துதி பாடல்.

இதன் முதல் பகுதியை.. நாம் 1நாளா .16: 7 -22 வசனங்களில் பார்க்கிறோம்.

தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி ..எருசலேமிலே, ஆசரிப்புக் கூடாரத்திலே ஸ்தாபிக்கப்பட்டபோது.. இந்த சங்கீதத்தைப் பாடியிருக்கக்கூடும்.

அதனால், இது தாவீதால் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது இஸ்ரவேலரின் வரலாற்றைச்

சொல்லும்..ஒரு சங்கீதம்.




கர்த்தர் இஸ்ரவேலருக்கு மகத்துவமான காரியங்களை.. அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்.

வேறு எந்த ஜனங்கள் மத்தியிலும் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யப்படவில்லை.

அதனால் சங்கீதக்காரன்.. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலரே, உங்கள் கடந்த கால சரித்திரத்தைத் திரும்பிப் பாருங்கள். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்குச் செய்த அற்புதமான காரியங்களை நினைவுகூர்ந்து..கர்த்தரைத் துதித்து.. அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள் என்ற கட்டளையாக.. இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறான்..

( சங்.105 : 1-5 )




சங்கீதக்காரன், முற்பிதாக்களின் வரலாறை இதிலே முதலாவது சொல்கிறான்.

கர்த்தர் ஆபிரகாம்..

ஈசாக்கு.,யாக்கோபோடு் செய்த உடன்படிக்கையையும்..

அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தையும் கர்த்தர் நினைத்தருளினார்.

அவர்களைப் பலுகிப் பெருகச்செய்தார்..

கானானைச் சுதந்தரிக்கவும் செய்தார்..




“*அக்காலத்திலே ,அவர்கள்* *கொஞ்சத் தொகைக்குட்பட்ட* *சொற்ப ஜனங்களும்..* *பரதேசிகளுமாயிருந்தார்கள்*... *அவர்களை ஒடுக்கும்படி,* *ஒருவருக்கும் இடங்கொடாமல்*, *அவர்கள் நிமித்தம்* *ராஜாக்களைக் கடிந்து* *கொண்டு*…”என்று பார்க்கிறோம்..

(சங்.105 :12 ,14).




ஆபிரகாமின் சந்ததியினர்.. கொஞ்சம்பேராக இருந்தாலும்.. பரதேசிகளாக தேசம் விட்டு மறு தேசத்திற்கு அலைந்து திரிந்தாலும் .. கர்த்தர் தமது தெய்வீக செட்டைகளின் கீழ்.. அவர்களை அற்புதமாகப் பாதுகாத்துப் பராமரித்தார்..




பஞ்சத்தினால் ஆபிரகாம் எகிப்திற்குச் சென்றபோது..

பார்வோன் ஆபிரகாமிற்குத் தீங்கு செய்ய நினைத்தான்..

கர்த்தர், பார்வோனை வாதைகளால் வாதித்தார்..( ஆதி. 12 : 17 )

கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும்.. ஆபிரகாமிற்கு

விரோதமாகச் செயல்பட்டான்..

கர்த்தர் அவனையும் எச்சரித்தார்..

( ஆதி .20 : 6,7 )




கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு..25 வருட காலமாக ஆபிரகாம் மட்டுமே பங்காளியாக இருந்தான். ஈசாக்குக்கு 60 வயதாகும் போதுதான்..யாக்கோபு பிறந்தான்.. யாக்கோபிற்கு 80 வயதாகும்போதுதான்.. அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்..யாக்கோபின் குடும்பத்தார் எகிப்திற்குச் சென்றபோது..அவர்கள் 70 பேராக இருந்தார்கள்..

அங்கே 400 வருஷங்களுக்கு அதிகமாக.. அடிமைகளாக இருந்தார்கள் ..தேவனுடைய கிருபையினாலும்.. வல்லமையினாலும் அங்கே அவர்கள் பலுகிப் பெருகினார்கள்.. அவர்கள் சத்துருக்களைப் பார்க்கிலும் பலவான்களானார்கள்..

( சங்.105 : 24 )




கர்த்தர் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குத்தத்தம் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்..எகிப்திலே நிறைவேறியது..

பின்னர் அவர்கள் கானானைச்

சுதந்தரித்தார்கள்..




நம் தேவன் உடன்படிக்கையில் உண்மையுள்ளவர்.. எத்தனை காலங்கள் கடந்துசென்றாலும்..

எத்தனை தடைகள் வந்தாலும்..அவர் தாம் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்..




பிரியமானவர்களே..இன்று கர்த்தர் நமக்கும் ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்திருப்பார் என்றால்..

அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை நாம் நம்பவேண்டும்..

காத்திருக்கவேண்டும்..

நமது தேவை இன்னதென்று

நமது பரம பிதா அறிந்திருக்கிறார்..

அதை அவர் நமக்கு நிறைவேற்றாமல்

இருப்பாரா..?




நாம் இருக்கும் இடங்களிலே.. மற்றவர்கள் முன் நாம் அற்பமானவர்களாக..

சிறுமைப்பட்டவர்களாகக் காணப்படலாம்..

ஆனால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்..

நம்மைப் பாதுகாப்பார்..

நம்மை மேற்கொள்ள.. அவர் யாரையும் அனுமதிக்கமாட்டார்..




“*உங்களைத் தொடுகிறவன்*.. *அவரின் கண்மணியைத்* *தொடுகிறான்*” என்பது கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நமக்குக் கொடுத்த பாதுகாப்பின்

வாக்குத்தத்தமாகும்..

(சகரியா 2 : 8 b )




*தாமதங்கள்..ஏமாற்றங்கள்*..

*தனிமை..இவைகளுக்கு* *மத்தியில் சஞ்சலப்படாதீர்கள்*.

*நமக்காக இரத்தம் சிந்தின இயேசுவையே நோக்கிப்* *பாருங்கள்..அவர் நிச்சயம்*

*கைவிடமாட்டார்*..




“*அவர்கள் அவரை நோக்கிப்* *பார்த்துப்* *பிரகாசமடைந்தார்கள்*..

*அவர்கள் முகங்கள்* *வெட்கப்படவில்லை*..”

( சங். 34 : 5 )

ஆமென்.🙏




மாலா டேவிட்

[13/10, 7:43 am] +91 80030 45999: சங்கீதம்.106.

☘️☘️☘️☘️

"அவரது உடன்படிக்கை மக்களுக்கு ஆண்டவரின் இரக்கம்."

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

அடிக்கடி கலகம் செய்யும் மற்றும் துரோகமான இஸ்ரவேலருக்கு கடவுளின் பெரும் இரக்கமே காரணமாக இருக்கிறது என்று இந்த சங்கீதம் புகழ்கிறது.

துதிகள் போதாது.

கடவுளின் வல்லமையான செயல்கள் பல உள்ளன.

அவை விவரிக்க முடியாதவை.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் கடவுளின் துதியை அறிவிப்பதில் தங்கள் பங்கைச் செய்கிறார்கள்.

கர்த்தரைத் தவிர வேறு இரட்சிப்பு இல்லை.

கடவுளின் மக்கள் அவரை நோக்கி அவருடைய வல்லமையான செயல்களால் ஆசீர்வதிக்கப்படுவதைக் காண விரும்புகிறார்கள்.

அவர்கள் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட மக்களுடன் மகிழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புகிறார்கள்.

அவர்கள் அவருடைய மக்களின் வெற்றியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள்.

செங்கடலைப் பிரித்தது முதல் எகிப்திய இராணுவத்தின் அழிவு வரை கடவுளின் மாபெரும் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன.

முணுமுணுப்பது ஒரு பெரிய பாவம் மற்றும் ஒரு பலவீனம் அல்ல.

கடவுளுடைய மக்கள் நன்றியுடன் கீழ்ப்படிவார்கள் என்று சங்கீதக்காரர் கணித்துள்ளார்.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[13/10, 7:43 am] +91 80030 45999: *வசனம் அவனை புடமிட்டது*

~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கீதம் 105: 15. *கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனை புடமிட்டது.*

1. ஆம், கர்த்தர் வருங்காலத்தை குறித்து, யோசேப்பிற்கு சொப்பனம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த சொப்பனம் குறித்த காலத்தில் தான் நிறைவேறும். இந்த இடைக்காலத்தில் யோசேப்பை சகோதரர் பொறாமையினால் குழியில் போட்டார்கள். போத்திபார் வீட்டிற்கு அடிமையாக விற்கப்பட்டார். போத்திப்பார் மனைவியால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலே அடைக்கப் பட்டார்.

ஆனால் *யோசேப்பிற்கு கர்த்தர் காட்டின சொப்பனம் நிறைவேற , கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேற காலம் தாமதித்தது. அதுவரை அவருடைய வசனம் அவரை புடமிட்டது. அதாவது இந்த இடைக்காலத்தில் யோசேப்பு விசுவாசம், பொறுமை, ஆகிய நற்குணங்களில் சிறந்து விளங்கினார்.‌கர்த்தருக்கு பயப்படுதலை காத்துக் கொண்டார். குறித்த வேளையில் எகிப்தின் அதிபதியாக உயர்த்தப்பட்டார்.*




2. ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் கூட பலவிதமான உபத்திரவங்களின் வழியாய் கடந்து செல்கிறோமா? *கர்த்தர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுமளவும் அவருடைய வசனம் நம்மை புடமிடும். நாமும் விசுவாசம், பொறுமை, தைரியம் மட்டுமல்ல, அவருடைய சாயலை பெற்றுக் கொள்ள நம்மை புடமிடுகிறார். புடமிட்ட பின் நாம் சுத்தமானவர்களாய் விளங்குவோம். அவருக்கு புகழ்ச்சியும், கனமும், மகிமையும் உண்டாகும்.*




3 . இதை தான் ஆபகூக் கூறுகிறார். *குறித்த காலத்துக்கு தரிசனம் இன்னும் வைக்கப் பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாக வரும். அது தாமதிப்பது இல்லை.* ஆபகூக் 2: 3.




ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் *கர்த்தர் சொன்னதை செய்யுமளவும் நம்மை கைவிடவே மாட்டார். அவர் வாக்கு மாறாதவர். வாக்கு தத்தங்களி ல் உண்மையுள்ளவர். சீக்கிரத்திலே நம் வாழ்விலே அவர் சொன்னதை நிறைவேற்றுவார். அந்த நாளுக்காக பொறுமையோடு, விசுவாசத்தோடு, ஸ்தோத்திரத்தோடு காத்திருப்போம். ஆமென். அல்லேலூயா.




*Dr. Padmini Selvyn*

[13/10, 7:43 am] +91 80030 45999: Day 182




PSALMS 105:4




*Seek the Lord and His strength Seek His face Evermore*.




God is infinite .We have to seek Him and His ways in our entire lives.




Seek His strength, His grace, Seek His favor for eternity. Continue seeking Him while living in this world and He will reward those that diligently seek Him (Hebrew 11:6)




Jesus promised keep on seeking and you will find (Matt 7:7). We will discover a loving God who is waiting for us to find Him.

*Seek the Lord and be ye strengthened*

Cynthia Sathiaraj

Chennai


🤝GOD’S MERCY & REDEMPTION🤝*

*🤝தேவனுடைய இரக்கமும் மீட்பும்🤝*



சங்கீதம் 105 - 106




☄️சங்கீதம் 105 மற்றும் 106, நினைவுகூறுதல் மற்றும் மீட்பின் கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகிறது.




1️⃣ *சங்கீதம் 105: தேவனுடைய உண்மையை பிரதிபலித்தல்*




🔹சங்கீதம் 105 தேவனுடைய உண்மையையும் அவருடைய மக்களுடன் அவர் செய்த உடன்படிக்கையையும் நினைவுகூருவதற்கான அழைப்பாக செயல்படுகிறது.

🔹இந்த சங்கீதம் இஸ்ரவேலர்களின் வரலாற்று பயணத்தில் நம்மை அழைத்துச் சென்று, தேவனுடைய உண்மையையும் ஏற்பாட்டையும் நமக்கு நினைவூட்டுகிறது.

🔹ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தொடங்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை நினைவுகூரும்படி சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார்.

🔹அவர்களின் கதைகள் மூலம், தேவனுடைய வாக்குறுதிகளையும், அவருடைய மக்களுக்கு அவர் அளித்த அசைக்க முடியாத உறுதியையும் நாம் காண்கிறோம்.

🔹எகிப்தின் சோதனைகள் முதல் மோசே மூலம் கிடைத்த அற்புத விடுதலை வரை, தேவனுடைய உண்மைத்தன்மை மிகவும் பிரகாசமாக ஜொலிக்கிறது.

🔹வனாந்தரத்தில் தேவனுடைய பராமரிப்பு மற்றும் அவர் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதையும் இது சிறப்பித்துக் காட்டுகிறது.

🔹ஆபிரகாமுடன் கர்த்தர் செய்த உடன்படிக்கையையும், எதிர்கால சந்ததியினருக்கு அதன் தாக்கங்களையும் இது வலியுறுத்துகிறது.

🔹கூடுதலாக, தேவனுடைய உண்மைத்தன்மைக்கு சான்றாக யோசேப்பு அதிகாரத்திற்கு வந்ததை சங்கீதக்காரன் உயர்த்திக் காட்டுகிறார்.

🔹இறுதியாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை தலைமுறை தலைமுறையாக தேவனுடைய உண்மைத்துவத்தின் உறுதியான நிரூபணமாக நிறுவி இந்த சங்கீதம் முடிவடைகிறது.




2️⃣ *சங்கீதம் 106: இஸ்ரவேலின் கலகங்களிலிருந்து பாடங்கள்*




🔸சங்கீதம் 106 இல், சங்கீதக்காரன் இஸ்ரவேலர்களின் கலகம் மற்றும் மறதியின் வரலாற்றை ஒப்புக்கொள்கிறார்; ஆனாலும் அவர்களிடம் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேவனுடைய இரக்கத்தையும் மீட்பையும் தேடுகிறார்.

🔸இஸ்ரவேலர்கள் தேவனுடைய அற்புதங்களை மறந்து விக்ரக வழிபாட்டிற்குத் திரும்பியதால், அவர்கள் மத்தியில் ஏற்பட்ட கலகத்தின் வடிவத்தை அங்கீகரித்து சங்கீதம் தொடங்குகிறது.

🔸தேவன் நியமித்த தலைவர்களுக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தார்கள் மற்றும் அவருடைய நியாயப்பிரமாணங்களை அலட்சியம் செய்து, மோசமான விளைவுகளுக்கும் நாடுகடத்தலுக்கும் வழிவகுத்தனர்.

🔸அவர்களின் கலகத்துக்கு மத்தியிலும், சங்கீதம் 106 தேவனுடைய இரக்கத்தையும் மீட்பையும் வலியுறுத்துகிறது.

🔸இஸ்ரவேலின் தொடர்ச்சியான மீறுதல்களின் மத்தியிலும் கூட, தேவனின் மாறாத அன்பையும் மன்னிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது.

🔸ஜனங்கள் சார்பாக தேவனுடைய இரக்கத்தை நாடிய மோசே மற்றும் பினெகாஸ் போன்ற பரிந்துரையாளர்களின் பங்கை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.

🔸அவர்களின் பரிந்துரையின் மூலம், தேவன் தனது மறுசீரமைப்பையும் விடுதலையையும் வெளிப்படுத்தி, மக்களை மனந்திரும்புதலுக்கும் போற்றுதலுக்கும் வழிநடத்தினார்.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥வரலாறு முழுவதும் தேவனுடைய உண்மைத்தன்மையைப் பற்றி சிந்திப்பது, அவர் மீதுள்ள நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது.

💥இந்த சங்கீதங்கள் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு என்ற கருத்தை விளக்குகின்றன.

💥கலகத்தின் விளைவுகளையும் தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டியதின் அவசியத்தையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

💥தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையைத் தழுவுவது அவருடனான நமது உறவை மீண்டும் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வழிவகுக்கிறது.

*‼️மீட்பின் பிரதிகாரமாக கீழ்ப்படிதல், நன்றியுணர்வு மற்றும் போற்றுதலோடு வாழ்வோமாக‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.