ராபர்ட் டி’ நோபிலி Robert De’ Nobili
மண்ணில் : செப்டம்பர் 1577
விண்ணில் : 16-01-1656
ஊர் : டஸ்கனி
நாடு : இத்தாலி
தரிசன பூமி : இந்தியா
ராபர்ட் டி' நோபிலி இத்தாலியைச் சேர்ந்த ஜேசுட் மிஷனரி ஆவார். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக அவர் மேற்கொண்ட அவரது புதுமையான முறைகளுக்காக அவர் நன்கு அறியப்பட்டார். ஒரு உன்னத குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்த ராபர்ட்டின் மேல் அவரது குடும்பத்தினர் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக அவர் வேதாகம இறையியலைப் படிக்க மாறுவேடத்தில் நேபிள்ஸுக்குச் சென்றார். பின்னர் 'சொசைட்டி ஆஃப் ஜீசஸ்'-யில் சேர்ந்த அவர், அங்கு ஆப்பிரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் சென்ற மிஷனரிகளின் வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டார். மிஷனரி ஊழியத்திற்காக தன்னை ஆயத்தபடுத்திய அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
பல மாதங்கள் கடுமையான கப்பல் பயணம் செய்து, 1605ஆம் ஆண்டில் ராபர்ட் இந்தியாவின் கோவாவை அடைந்தார். அப்பகுதியில் குடியேறிய ஐரோப்பியர்கள் மத்தியில் ஊழியம் செய்த பின்னர் அவர் இந்தியாவிற்கு உள்ளே சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல தனது மேலதிகாரியால் சவால் விடப்பட்டார். எனவே, கொச்சினுக்கு சென்ற அவர் இறுதியாக மதுரைக்கு வந்தார். இந்தியாவில் உயர் ஜாதி மக்கள் ஐரோப்பிய மிஷனரிகளை அசுத்தமானவர்கள் என்றும், அவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் அவர்களுடனான எந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டவதை அவர் விரைவிலே புரிந்து கொண்டார். எனவே நோபிலி அனைத்து வகையான மக்களையும் சந்திக்கும் படி ஒரு துறவியாக மாற முடிவு செய்தார். அவர் அசைவத்தை வெறுத்து சைவ உணவு உண்பவராக மாறினார், மேலும் இந்து துறவிகள் பயன்படுத்தும் தண்ணீர் கலசம் மற்றும் நடை குச்சியையும் எடுத்துச் சென்றார். வேத வசனத்தின் உண்மைகளை மக்களுக்கு விளக்க சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமை அடைந்தார்.
சுவிசேஷத்தை அறிவிக்க அவர் பயன்படுத்திய வழிமுறைகளை அவரது சக ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றபோதிலும், பிராமணர்கள் உட்பட பல உயர் ஜாதியினரை கிறிஸ்துவிடம் வழிநடத்துவதில் ராபர்ட் திறமைப்பெற்றிருந்தார். 1610 ஆம் ஆண்டின்போது 60 பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் மற்றும் 1656 ஆம் ஆண்டின்போது ராபர்ட் 4,000 ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தினார். இருப்பினும், அவரது முன்னேற்றத்தை பார்த்த சிலர் அவரை 1640 இல் சிறைச்சாலையில் அடைத்தனர். அந்த துன்பங்கள் அனைத்தையும் பொறுமையுடன் அவர் சகித்துக்கொண்டார். ராபர்ட் கிறிஸ்தவ கோட்பாடு குறித்த பல புத்தகங்களை சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். மேலும், வழிபாட்டுத் ஸ்தலத்திற்கு "கோவில்" என்றும், பைபிளுக்கு "வேதம்” என்றும், ஆராதனைக்கு “பூஜை" என்றும் பல கிறிஸ்தவ சொற்களுக்கு பொருத்தமான தமிழ் சொற்களை மொழிபெயர்த்தற்காக எல்லாராலும் அவர் நன்கு அறியப்பட்டார்.
பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்காக உங்களை எப்படி மாற்றிக்கொண்டீர்கள்? *
“கர்த்தாவே, உங்க ஊழியத்திற்கு ஏற்றாற் போல் பொருத்தமாக என்னை வனையும். ஆமென்!
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
கேத்தரின் பூத் Catherine Booth
மண்ணில் : 17-01-1829
விண்ணில் : 04-10-1890
ஊர் : ஆஷ்போர்ன், டெர்பிஷயர்
நாடு : யுனைடெட் கிங்டம்
தரிசன பூமி : யுனைடெட் கிங்டம்
கேத்தரின் மம்ஃபோர்ட் பூத் வாகனங்கள் தயாரிப்பாளரான ஜான் மம்ஃபோர்டின் மகள். அவரது தந்தை சில நேரங்களில் மெதடிஸ்ட் திருச்சபையில் பிரசங்கம் செய்பவராக இருந்தார். கடுமையான ஆவிக்குரிய ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்ட கேத்தரின், பன்னிரெண்டு வயதுக்கு முன்பே பரிசுத்த வேதாகமத்தை எட்டு முறை படித்து முடித்தார். இளமை பருவத்தில் முதுகெலும்பு பகுதியில் வளைவு மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் பல மாதங்கள் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும் சார்லஸ் ஃபின்னி மற்றும் ஜான் வெஸ்லி அவர்களின் புத்தகங்களை படிப்பதில் அவர் அந்த நேரத்தைப் பிரயோஜனபடுத்திக் கொண்டார். சமுதாய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை கொண்டிருந்த கேத்ரின், மது அருந்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து கட்டுரைகள் எழுதுகிறவராக இருந்தார்.
அந்த நேரத்தில் தான் அவர் தனது சொந்த இரட்சிப்பின் நிச்சயத்தையும், ஊழியத்திற்கான அழைப்பின் நிச்சயத்தையும் பெற்றுக்கொண்டார். 1855ஆம் ஆண்டில் வில்லியம் பூத்தை மணந்த கேத்தரின் அவருக்கு அர்ப்பணிப்புள்ள உதவியாளரானார். எளிதாக புதிய மக்களை சந்திப்பதற்கு ஒரு வல்லமையுள்ள கருவியாக பயன்படுத்தக்கூடிய திறனை பெண்களால் செய்யப்படும் ஊழியம் கொண்டிருந்ததாக கேத்தரின் நம்பினார். பெண்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அதிகாரம் இருக்கிறது என்று அவர் உறுதியான நிச்சயத்தை பெற்றுக்கொண்ட பின்னர், 1860ஆம் ஆண்டில் பிரசங்கிக்க தொடங்கினார். அவருடைய மென்மையான, அதே நேரத்தில் சக்திவாய்ந்த ஆளுமையினால் கிறிஸ்துவுக்காக பல ஆத்துமாக்களை அவரால் ஆதாயப்படுத்தினார். அவர் மதுவுக்கு அடிமையானவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார். மேலும், புதிய விசுவாசிகளை விசுவாசத்தில் பலப்படுத்த வீட்டுக் கூட்டங்களையும் நடத்தினார்.
1865 ஆம் ஆண்டில், வில்லியம் பூத் "தி சால்வேஷன் ஆர்மியை" ("இரட்சணிய சேனையை") நிறுவினார். அந்த அமைப்பில் கேத்தரின் ஒரு முக்கிய பங்கைக் வகித்தார். சுவிசேஷத்தின் ஒளியை அனைவருக்கும் பரப்புவதற்கு இந்த தம்பதியினர் அயராது உழைத்தனர். ‘ஹல்லெலூயா லாஸெஸ்’ (அல்லெலூயா இளம் பெண்கள்) என்று அழைக்கப்படும் இரட்சணிய சேனையின் உறுப்பினர்களான இளம் பெண்களுக்கு கேத்தரின் வழிகாட்டியாக இருந்தார். இந்த இளம் பெண்கள் தெருக்களில் பிரசங்கித்து, ஏழைகளை கவனித்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்து வந்தனர். ஒருபுறம் ஊழியத்தில் மறுபுறம் அவருடைய 8 குழந்தைகளை வளர்ப்பதில் தனது நேரத்தை சரியாக பயன்படுத்தி, தனது பொறுப்புகள் எல்லாவற்றிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் கொண்டிருந்த சமூகத்தை பற்றிய சிந்தனைக்கு ஏற்றவாறு 'ஃபுட்-ஃபர்-தி-மில்லியன்' (கோடிக்கானவர்களுக்கு உணவு) என்ற கடைகளையும் அமைத்தார். இதன் மூலம் ஏழைகளுக்கு மிகக்குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்தவ சபையின் விரிவாக்கத்தில் பெண்களின் பங்கை மையமாகக் கொண்ட பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். கர்த்தருக்காக அவர் செய்த சேவைகள், முயற்சிகள் மற்றும் தியாகங்கள் மூலம் கேத்தரின் பூத் "இரட்சணிய சேனையின் தாய்" என்ற பட்டத்தைப் பெற்றார்.
பிரியமானவர்களே, வேதாகமத்தை நீங்கள் எத்தனை முறைப் படித்து முடித்தீர்கள்?
"ஆண்டவரே, உமது வேத வசனத்தை படித்து அதன்படி வாழ வேண்டும் என்ற ஆழ்ந்த வாஞ்சையை என்னுள் தாரும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஏமி கார்மைக்கேல் Amy Carmichael
மண்ணில் : 16-12-1867
விண்ணில் : 18-01-1951
ஊர் : கவுண்டி டவுன்
நாடு : அயர்லாந்து
தரிசன பூமி : இந்தியா
ஏமி பீட்ரைஸ் கார்மைக்கேல் அயர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். 15 வயதில் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக அவர் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தில் மூத்த மகளாக இருப்பதால், தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தின் பொருளாதாரத்திற்காக அவர் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியதாயிருந்தது. சிறு வயதிலிருந்தே உற்சாகமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அவர் ஏழைகளைப் பற்றி அக்கறை கொண்டிருந்தார். கிறிஸ்தவ ஆலயங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத மலிவான சால்வை அணிந்ததற்காக ‘ஷாலீஸ்’ என்று அழைக்கப்படும் ஆலையில் பணிபுரிந்த பெண்களிடையே அவர் பணியாற்றினார். எனவே, அவர் தற்காலிக கூடாரங்கள் வாடகைக்கு எடுத்து, அவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களை நடத்தினார். இவ்வாறு ஊழியத்தில் பங்கெடுக்கும் போது, 1887ஆம் ஆண்டில் நடந்த கெஸ்விக் மாநாட்டில் மிஷனரி வாழ்க்கையைப் பற்றி ஹட்சன் டெய்லர் பேசுவதை அவர் கேட்டார். அங்கு அவர் மிஷனரி ஊழியத்திற்காக கர்த்தர் தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தார். ஆகவே, பின்னர் அவர் 'சீனா உள்நாட்டு மிஷனுக்கு' ('சீனா இன்லாண்ட் மிஷனுக்கு') விண்ணப்பித்தார், என்றபோதிலும், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சீனா செல்ல முடியவில்லை.
1893ஆம் ஆண்டில் மிஷனரியாக பணியாற்ற ஏமி ஜப்பான் சென்றார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து திரும்ப வேண்டியிருந்தது. இருப்பினும், எளிதில் மனம் தளராத ஆளுமை கொண்டிருந்த ஏமி 1894ஆம் ஆண்டில் 'ஜெனானா மிஷனரி சொசைட்டியில்' சேர்ந்தார். அதன் மூலமாக 1895 இல் இந்தியா வந்த அவர், முதலில் திருநெல்வேலியில் தாமஸ் வாக்கருடன் பணிபுரிந்தார். அங்கு அவர் தமிழ் கற்றுக் கொண்டு இந்திய வாழ்க்கை முறையை பழகினார். முக்கியமாக பெண்களிடையே சேவை செய்த அவர் பல இந்தியப் பெண்களை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார். அதுமட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஒரு பெண்கள் குழுவையும் அவர் ஏற்படுத்தினார்.
1900 ஆம் ஆண்டில் ஏமி டோனாவூருக்கு சென்றபோது, அங்கு கோயில்களுக்கு விற்கப்பட்ட அல்லது அர்ப்பணிக்கப்பட்ட 'தேவதாசி' இளம் பெண்களின் அவலநிலையைக் கண்டார். அவர்களின் மூலம் பணம் சம்பாதிக்கும்படி அந்த பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவார்கள். அத்தகையவர்களை கோயில் விபச்சாரத்திலிருந்து விடுவிக்க ஏமி முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை தத்தெடுத்தார். அவர்களுக்காக அனாதை இல்லங்களைத் தொடங்கிய அவர், அவர்கள் மீது நிபந்தனையற்ற அகாபே அன்பைக் காட்டினார். மேலும், அந்த குழந்தைகள் கிறிஸ்துவில் வளர உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் "டோனாவூர் ஃபெல்லோஷிப்பை" நிறுவினார். அவர் 40 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 'அம்மா' என்று அன்பாக அழைக்கப்படும் ஏமி கார்மைக்கேல், இந்த உலகில் கர்த்தர் அவருக்கு கொடுத்த பணியை உண்மையுடன் செய்து முடித்து, 1951ஆம் ஆண்டில் தன் மீட்பருடன் இருக்கச் சென்றார்.
பிரியமானவர்களே, பாவத்தில் அழிந்துபோகிற இளைஞர்களை பற்றிய பாரம் உங்களில் உண்டா?
*"ஆண்டவரே, இளைஞர்களை ஆவிக்குரிய பாதையில் வழிநடத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஆண்ட்ரூ முர்ரே Andrew Murray
மண்ணில் : 09-05-1828
விண்ணில் : 18-01-1917
ஊர் : கிராஃப்-ரீனெட்
நாடு : தென்னாப்பிரிக்கா
தரிசன பூமி : தென்னாப்பிரிக்கா
ஆண்ட்ரூ முர்ரே தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய ஒரு ஸ்காட்டிஷ் மிஷனரியின் மகன். முர்ரே ஒரு அசைக்க முடியாத கிறிஸ்தவ முறையில் வளர்க்கப்பட்டார். ஆப்ரிக்காவில் பணியாற்றிய டேவிட் லிவிங்ஸ்டன் மற்றும் பல மற்ற மிஷனரிகள் அவரது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இளம் வயதிலேயே ஊழியக்காரனாகும்படி விருப்பத்தை கொண்டிருந்தார். ஆனால் அது ஆவிக்குரிய விசுவாசத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவை விட வேலைவாய்ப்பு சிறந்ததாக இருந்தது. என்றபோதிலும், நெதர்லாந்தில் உள்ள யுட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் வேதாகம இறையியலில் பயிற்சி பெற்றபோது மனமாற்றமடைந்து, ரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக்கொண்டார். பின்னர், அந்த அனுபவத்தை பெற்றுக் கொண்ட அவர் ‘நான் முற்றிலும் கிறிஸ்துவிடம் என்னை சமர்ப்பித்தேன் என்று கூறினார்.
முர்ரே தனது இறையியல் ஆய்வுகளின் போது, ஜோஹன் ப்ளூம்ஹார்ட் ஜெர்மனியில் செய்துகொண்டிருக்கிற ஊழியத்தை பற்றி கேள்விப்பட்டார். ஆகவே ப்ளூம்ஹார்ட்டைச் சந்திக்கச் சென்றபோது, முர்ரே கர்த்தரின் வல்லமையால் நோயாளிகள் குணப்படுத்துவதையும், அற்புதங்கள் மற்றும் எழுப்புதல் வெளிப்படுவதைக் கண்டார். அந்த அனுபவம் அவருக்கு மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அத்தகைய ஆவிக்குரிய எழுப்புதல் தனது சொந்த நாட்டிலும் வர வேண்டும் என்று அவர் ஜெபிக்கத் தொடங்கினார். போதகராக தகுதி பெற்ற பின்னர் 1848 இல் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி வந்து அவர் பல இடங்களுக்கு சென்று ஊழியம் செய்ய தொடங்கினார். குதிரை மீது கிராமங்களுக்குச் சென்று தென்னாப்பிரிக்காவின் விவசாயிகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பின்னர், ஆரஞ்சு ரிவர் சோவெர்னிட்டி என்ற பகுதியில் போதகராக நியமிக்கப்பட்டார். அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தொலைதூர இடங்களுக்கு அவர் அயராது பயணம் செய்தார். 1860 ஆம் ஆண்டில் அவர் வொர்செஸ்டரின் போதகராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள மக்களை ஆவிக்குரிய எழுப்புதலுக்குள்ளாக வழிநடத்தினார். தங்கள் ஊழியத்தை தொடர முடியாத கிறிஸ்தவ ஆலயங்களை மிஷனரி நிறுவனங்களாக மாற்றினார். அது மட்டுமல்லாமல், அவர் நிறுவிய மூன்று அமைப்புகளான "மினிஸ்டர்ஸ் மிஷனரி யூனியன்", "தி பைபிள் அண்ட் பிரேயர் யூனியன்" மற்றும் "லேமான்ஸ் மிஷன் லீக்" மூலம் தென்னாப்பிரிக்கா முழுவதையும் சுவிசேஷத்திற்கு நேராக வழிநடத்தினார்.
முர்ரேயின் அதிகாரமுள்ள பிரசங்கம் உருவாக்க பல மணிநேர ஜெபம் அடிதளமாக இருந்தது. அவர் பிரசங்கிக்காத நேரங்களில் கர்த்தருடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிட மிகவும் வாஞ்சித்தார். 1877 ஆம் ஆண்டில் முர்ரே அமெரிக்காவுக்கும் சென்று அந்த நாடு முழுவதும் பல கூட்டங்களில் பிரசங்கித்தார். 1879 ஆம் ஆண்டில், அவர் நோய்வாய்ப்பட்டு குரலை இழந்தபோது, ஊழியத்திற்காக தான் கொண்டிருந்த பாரத்தை அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிறைவேற்றினார். அவர் எழுதி வெளியிட்ட 240 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் இன்றைக்கும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவருகின்றன.
பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவிடம் உங்களை முழுமையாக அர்ப்பணித்து, அவரையே சார்ந்துக் கொண்டிருக்கிறீர்களா?
"ஆண்டவரே, நான் உம்மை சார்ந்து கொண்டியிருப்பதினால், நான் எங்கு சென்று ஊழியம் செய்ய உமக்கு சித்தமோ அங்கு என்னை அழைத்துச் செல்லும். ஆமென்!
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஈடித் மேரி பிரவுன் Edith Mary Brown
மண்ணில் : 24-03-1864
விண்ணில் : 06-12-1956
ஊர் : கம்பர்லேண்ட்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : இந்தியா
ஈடித் மேரி பிரவுன் இந்தியாவில் பணியாற்றிய ஒரு ஆங்கில மருத்துவ மிஷனரி. அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அவர்களின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவர்களது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியில் பட்டம் பெற்ற ஈடித், மிஷனரியான அவரது சகோதரியால் ஊக்குவிக்கப்பட்டு, ஒரு மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்ய ஆர்வத்தை கொண்டிருந்தார். அவர் ஈடின்பர்க்கில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பயின்று, 1891ஆம் ஆண்டில் மருத்துவராக பட்டம் பெற்றார்.
கடினமான மிஷனரி ஊழியத்திற்காக கர்த்தரின் அழைப்பை உணர்ந்த ஈடித், பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். அதன் மூலமாக அவர் 1891ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அங்குள்ள பெண்கள் அனைவரும் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும் என்ற சமுதாய அழுத்தம் இருந்தது. அந்த பர்தா முறையால் துன்புறுத்தப்படும் பெண்களுக்கு பெண்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்க வேண்டியதின் அவசியத்தை முக்கியமானதாக அவர் உணர்ந்தார். ஆகவே, இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாக மருத்துவச்சிகளுக்கு சில மருந்துகளைக் குறித்து கற்றுத்தர அவர் முடிவு செய்தார். குறிப்பிட்ட காலம் டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள கிராமங்களில் மற்ற மிஷனரிகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ சேவைகளை வழங்கினார்.
நவீன மருத்துவத்தில் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்க தீர்மானித்த அவர், லூதியானாவில் ஒரு மருத்துவ மிஷனரிகளின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தார். தனது விடாமுயற்சினால், லூதியானாவில் ஒரு வாடகை கட்டிடத்தில் மருத்துவப் பள்ளியைத் தொடங்கினார். பின்னர், 1894 ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களை மருத்துவத்தில் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் அவர் 'நார்த் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஃபர் கிறிஸ்டின் வுமன்' (வட இந்திய கிறிஸ்தவ பெண்கள் மருத்துவப் பள்ளி) ஒன்றை நிறுவினார். இது ஆசியாவில் பெண்களுக்கான முதல் மருத்துவ பயிற்சி மையமாக புகழ்பெற்றது. மேலும், நவீன மேற்கத்திய மருத்துவ முறைகளில் இந்திய பெண் மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவச்சிகளுக்கு பயிற்சி அளித்த முன்னோடியாக ஈடித் திகழ்ந்தார். நான்கு மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியகளுடன் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த மருத்துவ பயிற்சி நிறுவனம் பின்னர் 'உமன்ஸ் கிறிஸ்டின் மெடிக்கல் காலேஜ்' (கிறிஸ்தவ பெண்கள் மருத்துவக் கல்லூரி)-யாகவும், அதற்கு பின் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் மருத்துவக் கல்வியை வழங்கும் 'கிறிஸ்டின் மெடிக்கல் காலேஜ்' (கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி)-யாகவும் வளர்ச்சி அடைந்தது.
ஈடித் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து மதத்தினருக்கும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சேவை செய்தார். ஒவ்வொரு ஆத்துமாவும் ஒரு ராஜாவுக்கு சமமாக பாவித்து சேவை செய்த அவர் "என் சேவை ஒரு ராஜாவுக்கானது" என்று அடிக்கடி கூறுவார். அவரது சேவைகளின் மூலம் பல இந்திய பெண்கள் தங்களது ஆத்தும ரட்சிப்பையும், சரீரத்திற்கு தேவையான ஆரோக்கியத்தையும் பெற்றனர்.
பிரியமானவர்களே, உங்கள் தொழிலை சுவிசேஷத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்களா?
"ஆண்டவரே, எனக்கான உமது சித்தத்தை என்னில் நிறைவேற்றி, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே என்னைப் பயன்படுத்துங்கள். ஆமென்!" -ஈடித் மேரி பிரவுன்
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
Thanks for using my website. Post your comments on this