Type Here to Get Search Results !

Job 22-26 He knows the way I go | பாடுகள் நமக்கு அவசியமே | யோபு 22-26 | Bible Study in Tamil | Jesus Sam



[17/09, 04:44] +91 99431 72360: *17.09.2023*




❇️ *அவருடைய வாயின் வார்த்தைகளைக் காத்துக்கொண்டேன்* ❇️




☄️ *“அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.”* (யோபு 23:12).




⚡ யோபு முன்பு தேவனுடன் நல்லுறவையும் தயவையும் அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் இப்போது முற்றிலும் கைவிடப்பட்டதாக உணர்ந்தான். இதுவே அவனது வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமாயிருந்தது. தன் நண்பர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளின் காரணமாக, *யோபு ஆவிக்குரிய ஆறுதலுக்காக மட்டுமல்ல, தேவனுடைய பார்வையில் தன்னை நியாயப்படுத்துவதற்காகவும் தேவனுடைய பிரசன்னத்திற்காக வஞ்சித்துக் கொண்டிருந்தான்.*




⚡ அவனுடைய நண்பன் *எலிப்பாஸ்* அவனுக்கு அறிவுரையாகக் கூறியது: *"அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்."* (யோபு 22:22). யோபு அவனுக்குப் பிரதியுத்தரமாக, *தேவனுடைய கற்பனைகளிலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை* என்றும், தான் *தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை* என்றும் கூறினான்.




⚡ தேவனுடையக் கட்டளைகளைப் பின்பற்றும்போது *நாம் பல சவால்களைச் சந்திக்க நேரிடலாம்.* நாம் ஒருபோதும் *வழிவிலகுவதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது;* ஒரு வனாந்திரத்தின் வழியாக நாம் செல்ல வேண்டியிருந்தாலும், இலக்கை நோக்கி நாம் *முன்னோக்கியே செல்ல வேண்டும்.*




⚡ தனக்கு வேண்டிய *ஆகாரத்தைப் பார்க்கிலும், தேவனுடைய வாயின் வார்த்தைகளை* அதிகப் பொக்கிஷமாகக் கருதுவதாக யோபு மேலும் கூறினான். ஆகாரம், தேவனுடைய வார்த்தை இரண்டுமே முக்கியமாக இருந்தாலும், ஆகாரத்தைக் காட்டிலும் *தேவனுடைய வார்த்தையே மிகவும் இன்றியமையாதது.* யோபு தனது வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான். ஆகாரத்தைவிட, அவருடைய வார்த்தைக்கே அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தான்.




⚡ நமது சரீரத்திற்கு ஆகாரம் எவ்வளவு அத்தியாவசியவோ, அப்படியே *நமது ஆத்துமாவிற்கு தேவனுடைய வார்த்தை அத்தியாவசியமானது.* தேவனுடைய வார்த்தை நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது, மற்றும் அன்றாட பணிகளுக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அது மிகவும் இன்றியமையாதது, *அது இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.* நாம் *அதைக் கனப்படுத்த வேண்டும், அதை வாஞ்சிக்க வேண்டும், அதை உட்கொள்ள வேண்டும், நம் ஆத்துமாவை தேவனுடைய வார்த்தையால் நிரப்ப வேண்டும்.* தீங்கு நாளில், நாம் மகிழ்ச்சியோடிருப்பதற்கு இதுவே மிகவும் அத்தியாவசமானது.




⚡ பவுல் விளக்குகிறான்: *"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது."* (2 தீமோத்தேயு 3:16-17). நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்காகத் தேவனுடைய வார்த்தை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.




⚡ இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: *"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது."* (யோவான் 6:63). தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த இதைவிடச் சிறந்த வார்த்தை எதுவும் இல்லை. *தேவனுடைய வார்த்தை இல்லாமல் நாம் ஜீவனற்றவர்களே.*




⚡ பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *தேவாலயத்திற்குச் செல்லும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே* வேதத்தை வாசிக்கிறார்கள். சிலர் தவறாமல் வாசித்தாலும், அவர்களில் பெரும்பாலோர் *எந்த வசனங்களையும் ஆழமாகப் படிப்பதுமில்லை, மனப்பாடம் செய்வதுமில்லை.* அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையின் மீது தாகம் இல்லை. இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிகச்சிறந்த புத்தகமாகிய வேதபுத்தகத்தை அவர்களால் பொக்கிஷமாகக் கருதமுடிவதில்லை.




⚡ *தேவனுடைய வார்த்தையைக் கற்று அதை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்* என்ற வாஞ்சையால் அவர் நம்மை நிரப்பும்படி நாம் தேவனிடம் ஜெபிக்க வேண்டும். வேதத்தை மேலும் மேலும் படிக்கும்போது, அதை நேசிக்கவும் வஞ்சிக்கவும் கற்றுக்கொள்வோம். அவருடைய வார்த்தையைப் படிப்பதை ஒரு நாளும் தவறவிட மாட்டோம்.




🔹 *தேவனுடைய வார்த்தையே நம் ஆத்துமாவிற்கு ஆகாரம் என்ற சத்தியத்தை நாம் உண்மையில் பொக்கிஷமாக கருதுகிறோமா?*

🔹 *தேவனுடைய வார்த்தையை தினமும் படிப்பதிலும் அதை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலும் நாம் கவனமாக இருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவனுடையக் கட்டளைகளைப் பின்பற்றும்போது நாம் பல சவால்களைச் சந்திக்க நேரிடலாம்; ஆனால், நாம் ஒருபோதும் அதிலிருந்து விலகக்கூடாது.*

2️⃣ *நமது சரீரத்திற்கு ஆகாரம் எவ்வளவு அத்தியாவசியவோ, அப்படியே நமது ஆத்துமாவிற்கு தேவனுடைய வார்த்தை அத்தியாவசியமானது. ஆகாரத்தைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையே மிகவும் இன்றியமையாதது.*

3️⃣ *தேவனுடைய வார்த்தை இல்லாமல் நாம் ஜீவனற்றவர்கள்.*

4️⃣ *தேவனுடைய வார்த்தையைக் கற்று, அதை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வாஞ்சையால் அவர் நம்மை நிரப்பும்படி நாம் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை


*யோபு 22 - 26*

*பாடுகள் நமக்கு அவசியமே*..

யோபு, தன்னுடைய நியாயங்களைத் தேவனிடத்தில் சொல்லவேண்டுமென்று விரும்பினான்..

ஆனால், அவனால் தேவனைப் பார்க்கமுடியவில்லை..




தன்னால் தேவனைக் காண முடியாமல் போனாலும்..

“ *நான் போகும் வழியை அவர்* *அறிவார்*..*அவர் என்னைச்* *சோதித்த பின் பொன்னாக* *விளங்குவேன் என்று*

*நம்பிக்கையோடு கூறினான்*..

( யோபு 23 : 10 )




யோபுவுக்குத் தன்னுடைய பாடுகளுக்கான முழுமையான தெளிவு உண்டாகவில்லையென்றாலும்..

சிறிய ஒளியை.. அவன் கண்டுகொண்டான்..

அதை நம்பினான்..




எலிப்பாஸ், யோபுவிடம்..நீர் சர்வ வல்லவர் இடத்தில் மனம் திரும்பினால்.. திரும்பக் கட்டப்படுவீர்.. அப்பொழுது சர்வ வல்லவர் உமக்குப் பசும்பொன்னும்.. சொக்க வெள்ளியுமாயிருப்பார் என்று சொன்னான்..

( யோபு 22 : 23-25 )

யோபுவும் தான் பொன்னாக விளங்கவேண்டும் என்று விரும்பினான்..அதற்காகத் தேவன் தன்னைச் சோதிப்பதைச் சகித்துக்கொண்டான்....




நாமும், பலவிதமான பாடுகளின் வழியாகக் கடந்து வரும்போது..

அதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிப்பதைவிட ... தேவன் அதை ஒரு மேலான நோக்கத்தோடு அனுமதித்திருக்கிறார் என்ற நம்பிகையின் ஒளியைப் பெற வேண்டும்.




இன்று பாடுகளற்ற செழிப்பின் உபதேசம்தான் எங்கும் பெருகி

வருகிறது..



ஆனால், பாடுகள் நமக்கு அவசியம்..

பாடுகள் நம்மைப் பரிசுத்தப் படுத்தி..

தேவனுக்கேற்றவர்களாக நம்மை மாற்றுகிறது..

பாடுகள் என்ற படிக்கட்டுகள்

வழியாகத்தான்.. நாம் பரலோகத்தைச் சென்றடைய

முடியும்..அதுதான் இயேசு கிறிஸ்துவும் நமக்காக விட்டுச்

சென்ற பாதை..




அதனால்தான்,

“பாடுகள் நமக்கு அருளப்பட்டிருக்கின்றன..” என்று பவுல் அப்போஸ்தலன் பிலிப்பி சபைக்குக் கூறினார்.

(பிலி. 1 : 29 )




“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது “ என்று சங்கீதக்காரன்

சொன்னான்..

( சங்.119 : 71 )




பிரியமானவர்களே..இன்று காரணம் தெரியாமல்..

கஷ்டங்களையும்..கண்ணீரின்

பள்ளத்தாக்கையும் கடந்துவருகிறீர்களா..?

கொஞ்சகாலம்தான் இந்தப் பாடுகள்..

நீங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கும்.. துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாக.. கர்த்தர் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவார்..

இரண்டத்தனையாக உங்களை

ஆசீர்வதிப்பார்..




*பொன்னைப் புடமிட்டால்தான்*.. *அது சொக்கத்தங்கமாக மாறும்*.. *பொன்னின் மதிப்பு* *அதிகரிக்கும்*..

*அழிந்துபோகிற பொன்* *அக்கினியினாலே* *சோதிக்கப்படுகிறது*..

*அதைவிட விலையேறப் பெற்ற*

*நம் விசுவாசம்* *சோதிக்கப்படவேண்டியது* *அவசியம்தானே*..?




“*உபத்திரவம்* *பொறுமையையும்*..

*பொறுமை பரீட்சையையும்*..

*பரீட்சை நம்பிக்கையையும்*

*உண்டாக்குகிறதென்று* *நாங்கள் அறிந்து*..

*உபத்திரவங்களிலேயும்* *மேன்மைபாராட்டுகிறோம்*..”

என்று பவுல் அப்போஸ்தலன்

கூறினார்..

( ரோமர் 5 : 3,4 )

*நம்மால் உபத்திரவங்களிலே*

*மேன்மைபாராட்டமுடியுமா*..?


மாலா டேவிட்


*நான் போகும் வழியை அவர் அறிவார்.*

யோபு 23: 8 - 12.




1. இங்கு யோபு தன் துக்கங்கள், துயரங்களால் வேதனையோடு *நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்* என்கிறார். தன்னுடைய பாடுகளின் ரகசியத்தை அறியாமல் தவித்து, புலம்பி கொண்டிருந்த யோபு, இப்போது இது கர்த்தருடைய சோதனை என அறிந்து கொண்டார். மட்டுமல்ல இந்த சோதனை அவர் அறிந்து தான், அவருடைய உத்தரவோடு தான் வந்தது என உணர்ந்து *நான் போகும் வழியை அவர் அறிவார்* என்கிறார்.




ஆம், *நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் துயரங்கள் எல்லாம் கர்த்தருடைய அறிவோடு தான், அனுமதியோடு தான் நடக்கிறது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்*. மட்டுமல்ல இந்த சோதனையை சகிக்க, கடக்க அவர் உதவி செய்வார். அப்போது *நம்மையும் பொன்னாக விளங்க செய்வார்.* இதை நாம் நம்ப வேண்டும். விசுவாசிக்க வேண்டும். அறிக்கை பண்ண வேண்டும்.




2. கர்த்தர் யோபு செல்லும் வழியை அறிந்திருந்தார். ஆனால் யோபுவுக்கோ கர்த்தருடைய வழியை அறிய முடியவில்லை. *நான் முன்னாக போனேன். அவர் இல்லை. பின்னாக போனாலும் அவரை காணேன். இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரை காணேன். வலது புறத்திலும் நான் அவரை காணாத படி ஒளித்திருக்கிறார்* என்கிறார். ஆம், நாமும் கூட நம்முடைய வேதனைகளின் மத்தியில் அவரை காணமுடியாதபடி கலங்கி தவிக்கிறோமல்லவா?




அப்படியானால் *மரணபரியந்தம் உன்னோடிருப்பேன், நான் உன்னை விட்டு விலகுவதில்லை* என்றெல்லாம் எத்தனையோ வாக்குதத்தங்களை நமக்கு எழுதி தந்திருக்கிறாரே. அவற்றை அப்படியே நம்புவோம். ஆம், அவர் நம்மோடு, நமக்குள்ளே வாசமாயிருக்கிறார். நம் சோதனைகள் மத்தியில் நமக்காக எண்ணிலடங்கா பெருமூச்சுகளோடு பிதாவினிடத்தில் விண்ணப்பிக்கிறார்.




3. அதுமட்டுமல்ல, *என் கால்கள் அவர் அடிகளை பற்றிப்பிடித்தது என்கிறார் அவர் நெறியை விட்டு நான் சாயாமல் அதை கைக்கொண்டேன்* என்கிறார். *அடி களை, நெறிகளை என்றால் அவருடைய வழிகளை, வசனங்களை பற்றிப்பிடித்து, அதாவது உறுதியாக கீழ்ப்படிந்தேன்* என கூறுகிறார்.




ஆம், நாமும் நம்முடைய சோதனை, வேதனை வேளைகளில் *கர்த்தரையும்,, அவருடைய வசனங்களையும், வாக்குத்தத்தங்களையும், உறுதியாய் பற்றி கொள்வோம். அதை விட்டு சாயாமல்,அவற்றிற்கு கீழ்ப்படிவோம்.*




4. *அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின் வாங்குவதில்லை.*

ஆம், நாமும் கூட அவருடைய வாயின், உதடுகளின் கற்பனைகளுக்கு அப்படியே கீழ்ப்படிவோம். அவருடைய வாயின் வார்த்தைகளில் ஜீவன் உண்டு.




5. மட்டுமல்ல, *அவர் வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்துக்கொண்டேன் என்கிறார்.* நமக்கு வேண்டிய பிரியமான ஆகாரத்தை விட வேத வசனத்தை நேசித்து, காத்துக் கொள்ளுகிறோமா? அதுவும் *இத்தனை இழப்புகளின் மத்தியில், நிந்தைகள், வியாதிகள் மத்தியிலும், நாம் நேசிக்கிற ஆகாரத்தை விட வசனத்தை வாசித்து, தியானித்து, ருசித்து கைக்கொள்ள முடியுமா?* சிந்திப்போம். *ருசியான நமக்கு பிரியமான ஆகாரத்தை தயாரிக்க அதிக நேரத்தை செலவிடுகிற நாமும், தேனிலும், தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமான வசனத்தை வாஞ்சையோடு புசிக்க, ருசிக்க, கைக்கொள்ள கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 * பொன்* 🍂

யோபு தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்தான். ஆயினும் *அவன் ஒரு வேதனையின் பாதையில் கடந்து செல்ல வேண்டியிருந்தது.* பொய்யான, இரக்கமற்ற குற்றச்சாட்டுகளை யோபு சந்தித்தான். அது அவனுக்கு வாழ்க்கையில் ஒரு இருண்ட கட்டமாக இருந்தது. அவனால் *தேவனைப் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.* இருப்பினும் யோபு தனது விசுவாசத்தில் தளரவில்லை. தான் போகும் பாதையை ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்பதில் உறுதியாக இருந்தான்.




📖 *“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.” ‭‭(யோபு‬ ‭23‬:‭10‬)*




சோதனைக் காலத்திற்குப் பிறகு, அவன் சுத்திகரிக்கப்பட்ட தங்கமாக வெளியே வருவான் என்று உறுதியாக நம்பினான். * ஆண்டவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை பிரச்சனைகள் என்ற அக்கினி சூளையில் சோதிக்கப்படும்.* இந்த சோதனை என்ற நெருப்பு அனைத்து அசுத்தங்களையும் நீக்கி, நம்மை சுத்தமான பொன்னாக வெளியே வர உதவி செய்யும். எனவே அக்கினி போன்றச் சோதனைகளைக் கண்டு திகைக்காதீர்கள். சோதனையின் வழியாக *வெற்றியுடன் வர ஆண்டவர் உங்களுக்கு உதவுவார்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


தலைப்பு:

🔶வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிற கூட்டத்தார்.

யோபு 24:13 - 25




🔶யார்❓




🔸கர்த்தருடைய வழியில் நடக்காதவர்கள்

🔸அவர் பாதையில் தரிக்காதவர்கள்,




யார்❓ யார்❓




🔸கொலைபாதகர்

🔸விபச்சாரக்காரர்

🔸கன்னமிட்டு திருடுவோர்

🔸மலடியின் ஆஸ்தியை பறிப்போர்

🔸விதவைக்கு நன்மை செய்யாதோர்

etc




🔶குணாதியங்கள்:




🔸இராக்காலத்தில் திரிவார்கள்

🔸தன்னை ஒரு கண்ணும் காணாது என திரிவார்கள்

🔸வெளிச்சத்தை அறியார்கள்

🔸விடியற்காலம் அவர்களுக்கு மரண இருள் போயிருக்கும்

🔸மரண இருளின் பயங்கரத்தோடு பழகியவர்கள்

🔸சுக வாழ்வில் நம்பிக்கை வைப்பவர்கள்




🔶எதிர்காலம்❓




🔸கொஞ்சகாலம் உயர்ந்திருந்து

🔸காணாமற் போய்

🔸தாழ்த்தப்பட்டு

🔸அடக்கப்படுகிறார்கள்.

🔸கதிர்களின் நுனியை போல அறுக்கப்படுகிறார்கள்.




🔶சிந்தனைக்கு,




🔸நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்ல

🔸நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாயிருப்போம்.

1 தெச 5:5


*🐧சிப்பிக்குள் முத்து🐧*

யோபு : 22 - 26


ஆனாலும் நான் போகும் வழியை.... *"அவர் அறிவார்."* (23:10)


*👍எல்லாம் அறிந்த இறைவன்👍*




🫛🫛🍉🫛🫛




*✍️பாடுகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், தன் உத்தமத்தில் நிலைத்திருக்கவே யோபு தீர்மானித்திருந்தார்.*

*🌻அவரது நெருங்கி நண்பர்கள் மூலமும் அவருக்கு ஆறுதல் கிட்டவில்லை,*

*🌻கட்டின மனைவியும் ஆறுதலாக இல்லை.*

தேவனை குறித்து நிதானமாக யோசிக்கவும், பேசவும் யோபு அறிந்து இருந்தார். அவ்வப்பொழுது நட்புறவுகள் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக அவர் திகழ்ந்திருந்தாலும், இறைவனை குறித்து அவர் பலவிதங்களில் அறிந்து வைத்திருக்கும் ஒரு பக்திமானாக விளங்குகிறார்.




*🧵 "தேவன் அறிவார்",*

ஆம்.....

*"அவர் எல்லாவற்றையும் அறிவார்."*

கடந்த கால நிகழ்வானாலும்.... இப்பொழுது நடப்பனவானாலும்..... இனி நடைபெற இருப்பனவற்றானாலும்....

*"அவர் சகலத்தையும் அறிந்தவர் / அறிவார்".*

*"இருளில் நடப்பவற்றையும் அவர் அறிவார்".* அவரது பார்வைக்கோ, இல்லை எண்ணத்திற்கோ மறைவானது என்று எதுவும் கிடையாது. *இருளும் அவருக்கு வெளிச்சம் போலத்தான் இருக்கும்.*

அவர்

*"காரிருளில் கூட வாசம் பண்ணுகிறவர் / வசிப்பவர்.*

அவரது ஞானம், அறிவு யாவும் எமது புத்திக்கு அப்பாற்பட்டவை. அவரது ஞானம் என்றுமே முழுமைபெற்ற ஒன்றாகும். அவரிடத்தில் குறைபாடு என்ற எதுவும் கிடையாது. எல்லாமே பூரணமானவை தான். அவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை.

*(எபி - 4:13)*

யாவும் அவருக்கு முன் வெட்டவெளிச்சமே, அங்கு எந்தவிதமான திரையும் கிடையாது.




🪶🪶📌🪶🪶




*🌷"அவர் எல்லாம் அறிந்தவர்"* ஆகையால், தாம் விரும்புவதின் படியே சர்வ லோகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தமக்கு சித்தமானவைகளை மாத்திரம் பூமியில் நடப்பிக்க, அல்லது நடைபெற அவர் அனுமதிக்க அறிந்தவர்.

*🎈அவர் அனுமதிப்பவை தான் நம் வாழ்வில் நிகழ்கிறது என்று அவரை குறித்து நாம் ஆரோக்யமான் சிந்தனை அற்றிருந்தோமானால்,*

*🦀சிந்தனையில் நோய் கொண்டோராக"*

தான் உலா வர நேரிடும்.




*🍄மனிதனும் சிலவற்றை "அறிந்திருக்கும்படி"* அவர் அருள் பாலித்துள்ளார்.




உதாரணம்....




*🎈காலங்களை நாம் அறியும் ஞானத்தை பெற்றிருப்பதாக இயேசு அன்று யூதர்களை பார்த்து கூறினார்.* அருப்புக்காலம் வருகிறதற்க்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று.... *நீங்கள் சொல்லுகிறதில்லையா❓ என்று இயேசு கேள்விக் கேட்டது மாத்திரமல்ல, மனிதனின் சிந்தைக்கும், அறிவுக்கும் அவரது நிலைப்பாடு எத்தனை விகர்ப்பம் என்பதை காண்பிக்கும்படி, இதோ வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று சொல்லி,* உலக கணிப்பும், ஆவிக்குரிய ரீதியான அறிதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி காண்பித்தார்.

*(யோ - 4: 35,36)*

இன்னும் நாலு மாதங்கள் செல்லும் என்று மனிதர்கள் எண்ணலாம். ஆனால் ஆண்டவரோ இன்றைக்கே / இப்பொழுதே அறுப்புக்காக வயல் வெளிகள் (ஆத்துமாக்கள்) ஆயத்தமாக இருக்கிறது என்றார்.

அவர்கள் பூமிக்குரிய எண்ணத்தில் மிதக்கையில் அவரோ ஆன்மீக ரீதியான எண்ணத்திற்கு நேரே தம் சீடர்களின் மனதை / சிந்தையை திசை திருப்பினார்.




*அப்படியென்றால் வானிலை ஆய்வுகளின் விபரங்கள் அத்தனை துல்லியமாக இராமல்.... அவ்வப்பொழுது தடுமாறலை காணும் / காண்கிறது* என்பதை..... சொல்லாமல் சொல்லிவிட்டார்.

*மனித கணிப்புகளில் பல வேளைகளில் தோல்விகளை தான் தழுவ வேண்டி வருகிறது.*

ஏதோ கால வார்த்தமானங்களை மனிதன் தனது அறிவுக்கு எட்டிய விதத்தில் யோசித்து பேசலாம், அவ்வளவே !

*ஆனாலும் பூமிக்கென்று மழை கொடுக்க இறைவன் விரும்பினால் மட்டுமே கொடுப்பார்.* மற்றபடி நாம் ஒன்றும் செய்ய இயலாது. மழை வருமா❓ வராதா❓என்பதை, துல்லியமாக அறிகிறவர் இறைவன் ஒருவரே !




🌿 *"அவர் அறிவார்" என்னும் போது,* ஆம், எல்லாவற்றையும் துல்லியமாக...

*அவர் ஒருவரே அறிவார்.*

ஆண்டவரே சிலவற்றை மனிதர்களுக்கு வெளிப்படுத்தாதவரையில் / தெரியப்படுத்தாதவரையில்......

மனிதர்கள் எவரும் இறைவன் நடப்பித்து கொண்டு இருக்கும், அல்லது நடப்பிக்க போகும் காரியங்களை அறியார்கள்.




🎊🎊💠🎊🎊




இங்கு யோபு, தான் போகும் வழியை ஆண்டவர் அறிவார், அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்கிறார்.

*யோபுவின் மனதை ஆண்டவர் அறிவார் என்று யோபு திட்டமாக நம்பினார்.* ஆண்டவருக்கு விரோதமான எண்ணங்கள் அவர் மனதில் இல்லை என்று அறிக்கை இடுகிறார் யோபு.




இஸ்ரவேலரின் மனதில் எழும்பிய ஒவ்வொன்றையும் *தாம் "அறிந்ததாக" ஆண்டவர்* எசேக்கியேல் மூலம் தெரியப்படுத்தினார்.*

பிறருக்கு தீமை செய்யவேண்டும் என்றே சதா எண்ணங் கொண்டிருப்பதை கூட அவர் அறிவார். ( ஓசியா - 7:2 )

*மீட்கப்படாத மனுஷர்களுடைய நினைவுகள் நித்தமும் பொல்லாதவைகளே !*

அவர்கள் சிந்தை எப்பொழுதும் பிறனுக்கு விரோதமாகவே அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும்.

ஆகையால்....

*தீமை செய்ய விரைந்தோடும் மனம், சிந்தை, கால்கள், கைகள் உடையோராக அன்னார் இருப்பார்கள்.*

ஆனால் தேவ பிள்ளைகளாகிய எமக்கு எமது தேவன் நாம் வேண்டிக் கொள்ளுவதற்கு முன்னமே, நாம் ஜெபிப்பதற்க்கு முன்னமே,

*நமக்குரிய தேவைகளை குறித்து "அவர் அறிவார்"*

(ஏசா - 65:24) *ஆகையால், நாம் கூப்பிடுகிறதற்கு முன்னமே அவர் பதில் கொடுத்து விடுவதாகவும், வாக்கு கொடுத்துள்ளார்.* எத்தனை பாக்கியர்கள் நாம்❓ தேவனது....

*"எல்லாம் அறிந்த" தன்மையினை* யோபு தெளிவாக அறிந்து இருந்தமையால், *"நான் போகும் வழியை அவர் அறிவார்" என்று சொல்லி,*

இந்த பாடுகளின் ஊடே பயணிக்கும் தனது பயணத்தில் / நேரத்தில் இறைவன் தன்னையும், தனது / *(மன எண்ண ஓட்டங்களை)* அறிவார் என்றும்... தாம்...

*"பிற்காலத்தில் சுத்த பொன்னாக விளங்குவார் என்பதையும் ஆண்டவர் அறிவார்" என்று சாட்சி கொடுத்து,* ஆண்டவர் மீதுள்ள தனது முதலும், முக்கியமும், முழுமையானதுமான நம்பிக்கையை அறிக்கை இட்டு, எம் எல்லோருக்கும் ஒரு நல்ல முன் மாதிரியாகி நிற்கிறார்.




⚽தான் இறைவனை குறித்தும், அவரது செயல்பாடுகளை குறித்தும் முழுமையாக அறிய / புரிய முடியாவிட்டாலும், (9:11)

*இறைவன் தன்னை குறித்து, தனது ஆன்மீக பயணத்தை குறித்து நன்றாகவே "அறிவார்,"*

(23:10) என்பதே... இறைவனை குறித்து யோபுவின் புரிதலாக இருந்தது.

🍀இறைவனை குறித்த எமது புரிதல் எவ்வாறுள்ளது❓என்று சற்று நம்மை நாமே நிதானித்து அறிய ஆண்டவர் எமக்கு உதவி புரிவாராக.

*Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.