Type Here to Get Search Results !

ஒற்றுமையாயிரு | பாழான நிலம் பயிர் நிலமாக கிறிஸ்தவ குட்டி கதைகள் | Biblical Stories Tamil | Daily Kutty Story | Jesus Sam

வெறுமையாய்த் திரும்பாத வேதாகமம் | ஒற்றுமையாயிரு | பாழான நிலம் பயிர் நிலமாக

வெறுமையாய்த் திரும்பாத வேதாகமம்

ஸ்பெயின் நாட்டில் ஒரு அம்மையார் நூதன முறையில் ஊழியம் செய்ய நினைத்தார்கள். பணம் கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கி,

அதனை தனக்கு அறிமுகமானவர்களுக்கு இலவசமாக கொடுத்து வந்தார்கள்.

அந்த தாயாரின் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டின் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. தூர இடங்களிலிருந்து வந்திருந்த கொத்தனார்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரகளில் பிரதான கொத்தனாரின் பெயர் பிரதாபன்.

அவர் தெய்வபயமற்ற நாத்திகவாதியாக வாழ்ந்து வந்தார். இதை அறிந்த அந்த தாயார், அவருக்காக நல்லதொரு வேதாகமத்தை வாங்கி அதில் பிரதாபனின் பெயரை எழுதி, கட்டாயம் வாசிக்கும்படியாக அவனிடம் கொடுத்தார்கள்.

நாத்திகவாதியான பிரதாபனோ, நானும் இந்த வேதாகமத்தை படிக்க மாட்டேன். மற்றவர்களையும் படிக்க விடமாட்டேன் என்று சொல்லி,

தாம் கட்டிக்கொண்டிருந்த கட்டிடச் சுவருக்குள் ஒரு செங்கலுக்குப் பதிலாக பைபிளை வைத்து பூசிவிட்டார். வேதாகமத்தின் கதையை முடித்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.

கட்டிட வேலை முடிந்து சில ஆண்டுகள் ஓடினது. அந்தப் பகுதியில் ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்தது. அதைப் பார்வையிட வந்த அரசு அதிகாரி, செங்கற்களின் நடுவே இருந்த பரிசுத்த வேதாகமத்தைக் கண்டு வியந்து போனார்.

அதை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க ஆரம்பித்தார். வேத வசனங்கள் அவருடைய உள்ளத்தில் பாய்ந்தன. அந்த வசனங்கள் அவருக்குள் பலத்த கிரியை செய்ய ஆரம்பித்தன.

கிறிஸ்துவின் ஊழியத்திற்காய் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். பின்னர் வேதாகம சங்கத்தில் சேர்ந்து பரிசுத்த வேதாகமத்தை பிறருக்கு கொடுத்து ஊழியம் செய்யத் தொடங்கினார்.

ஒரு நாள் அவ்வாறு பரிசுத்த வேதாகமத்தைக் கொடுக்க செல்கையில், நாத்திகவாதியான பிரதாபனைக் கண்டார்.

அவர் நிலநடுக்கத்தால் அனைத்து பொருட்களையும் வீட்டையும் இழந்திருந்தார். பிரதாபனிடம் ஆறுதலாக பேசிய பிறகு தன்னிடமிருந்த பரிசுத்த வேதாகமத்தைக் கொடுத்தார் அந்த ஊழியர்.

வேதகமதைக் கண்ட பிரதாபனுக்கு பழைய செயல்கள் நினைவிற்கு வந்தது.

“பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயார் எனக்கொரு வேதாகமத்தைக் கொடுத்தார்கள். அப்போதிருந்த வெறுப்பில் கட்டிட சுவரில் செங்கலுக்கு பதிலாக அதை வைத்துப் பூசிவிட்டேன்” என்ற அந்த ஊழியரிடம் நடந்தவற்றைக் கூறினார் பிரதாபன்.

கட்டிட இடிபாடுகளிலிருந்து தமக்கு கிடைக்கபெற்ற வேதாகமத்தை எப்பொழுதும் தமது பையிலேயே வைத்திருப்பார் அந்த ஊழியர்.

பிரதாபன் வைத்து பூசிய வேதாகமம், ஒருவேளை தமது வேதாகமமாக இருக்கலாம் என்று எண்ணிய ஊழியர், தமது பையிலிருந்த வேதத்தை எடுத்து பிரதாபனிடம் காண்பித்தார்.

அந்த வேதாகமத்தின் முதல் பக்கத்தில் “பிரதாபன்” என்று அந்த தாயார் எழுதிய பெயர் இருந்தது.

To Get Daily Bible Story In What's App Contact +917904957814

அதைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து நின்றார் பிரதாபன். நிச்சயமாகவே தேவன் இருகின்றார் என்று சொல்லி இயேசு கிறிஸ்துவிடம் தமது வாழ்கையை அர்ப்பணித்தார்.

பின்னர் இருவரும் நண்பர்களாகி மிகச்சிறந்த ஊழியர்களாக மாறினார்கள்.

என்அன்பு வாசகரே,
“ தேவன்வாயிலிருந்து புறப்படும் வசனமும்.. வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”

ஏசாயா 55:11.
பரிசுத்த வேதாகமத்தை யாரும் அவமாக்க முடியாது. இதை அழிக்க நினைத்தவர்கள் எல்லாரும் ஊழியர்களாக மாறினர் அவ்வளவு சக்தி வாய்ந்தது .

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது, அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.

வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.

லூக்கா 16:16-17
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4:12

வேத்த்தை.... வாசியுங்கள். ,தியானியுங்கள்,வசனத்துடன் உங்கள் மனது இசைந்திருங்கள். . அப்போது பாவத்தை நீங்கள் மேற்கொள்வீா்கள். (சங. 119:11)

வாக்குத்தத்தங்களோடும் உங்கள் மனது இசைந்திருக்கட்டும். அப்போது வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்வில் சர்வ சாதாரணமாக செயல்படுவதை உங்கள் கண்ணால் நீங்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்வை வேதத்தின்படி தேவன் உங்களை உயர்த்தி மேன்மைப்படுத்துவார்.

#நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!



ஒற்றுமையாயிரு
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

வெற்றிபெற தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் தான் முக்கியம் .என்பதை அறிகிறோம்..

தோல்வியை
நினைத்து மனவேதனை அடைந்த முயல்,

‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புாிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது.
ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

வெற்றி பெற நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது! என்பதை முயல் நிரூபித்து விட்டது. போட்டியை முடிந்து விடலாம் என நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக தியானத்தை கடைபிடித்து வெற்றி பெற்று வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது.

இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.

ஒன்... டூ... த்ரீ..
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது.

பார்த்தால் அங்கே ஒரு பொிய ஆறு! அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சோ்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் வெற்றி பெற்றது.

நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆனாா்கள். இருவரும் ஒருமனதாய் பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம்.

முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

என் அன்பு வாசகரே,
அதனால்தான் நிறுவனங்களில் கூட பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் ,குடும்பங்களிலும் சபைக்கடுத்த காாியங்களிலும் ஒற்றுமையும், ஒருமனதும் இருந்தால்தான், எல்லாமே சிறப்பாக அமையும்.

ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோாின் பங்களிப்பும் குடும்பத்திற்கு தேவை. எனவே ஒற்றுமை வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் வேகம்,புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை முக்கியமாகும்.

To Get Daily Story In What's App Contact +917904957814

இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம்.

அதை கற்றுக் கொடுப்பதும் ஒற்றுமை தான்.

வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும்,

ஆமையும் ஜெயிக்கும். ஆனால்

#முயலாமை மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால் #அனுபவம் .

முயலாமல் தோற்றால் #அவமானம் .

வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

பைபிள் சொல்கிறது...
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
(சங்கீதம் 133:1-3)

இந்த சங்கீதத்தின்படி நாம் ஒருமனமாய் இருப்பதே தேவசித்தமாய் இருக்கிறது. அதினால் நன்மை, இன்பம், ஆசீா்வாதம், ஜீவன் ஆகியவைகளை பெற்றுக்கொள்கிறோம்.

ஆனால் வெற்றியும், தோல்வியும் போராட்டத்திலும் போட்டா போட்டியிலும் நிா்ணயுிக்கப்படுகிறது. இதனால் மனதிற்குள்ளே வெறுப்பு, பொறாமை, அகபாவம்,பெருமை, ஆகியவை மனதை விட்டு போகாமல் காலமெல்லாம் நிலைத்து நிற்கும்.

அதனால் எந்தவொரு ஆசீா்வாதமும் இல்லாமல் கஷ்டமும், வேதனையும், தாித்திரமும் துன்பமும் அடைவார்கள்.

ஆனால் முயலும், ஆமையும் ஆற்றில் தண்ணீரைக் கடக்கும் போது ஆமையின் மேல் முயல் ஏறினதுப்போல எல்லோரோடும் ஒருமனமாயிருத்தல் ஆசீா்வாதம் ஜீவன், இன்பம், நன்மைஆகியவை உங்களைத் தேடி வரும்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!



பாழான நிலம் பயிர் நிலமாக
ரோமப் பேரரசை ஆண்ட மூன்றாம் ஹென்றி என்னும் மன்னன் இயேசு கிறிஸ்துவை அதிகமாக நேசிப்பவர். கிறிஸ்தவரான அவருக்கு அரசாட்சி செய்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தது . ஏதோ கடமைக்கு மன்னராக பணியாற்றி வந்தார்.

அவருடைய வாழ்க்கையில் சலிப்பு தட்டவே மன்னர் பதவியைத் துறந்து ரிச்சர்ட் (Richard) என்னும் கிறிஸ்தவ துறவியின் மடத்தில் சேர முடிவு செய்தார்.

தன்னுடைய முடிவை துறவியிடம் தெரிவித்தார்.

தேவனோடு உறவாடுகிற துறவிக்கு மன்னரின் இந்த முடிவு மகிழ்ச்சியை தரவில்லை. அதனால் மன்னரிடம் இவ்விதமாக கூறினார்.

இந்த ஆசிரமத்தில் மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கின்றது. ஆசிரமத்தில் கீழ்ப்படிந்து நடப்பது கடினமான காரியமாக இருக்கும் பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள் என்று அனுப்பிவிட்டார்.

அதன்பின் துறவி தேவ சமூகத்தில் மன்னருக்காக ஜெபித்தபோது அரசாட்சி செய்வதற்கே மன்னரை இப்பூமியில் தான் வைத்திருப்பதாக தேவன் வெளிப்படுத்தினார்.

மன்னன் மறுபடியும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் ரிச்சர்ட் துறவி தங்களுக்கு நியமித்திருக்கிற அரசாட்சியை செம்மையாய் செய்ய வேண்டும் என்பதை கர்த்தரின் கட்டளை வெளிப்பட்டது. என்று கூறினார்.

அரசாட்சி செய்வதுதான் தேவனின் கட்டளை என்பதை புரிந்து கொண்டு கடவுளுக்கு பயந்து நீதியை தன் நாட்டில் நிலைநாட்டி வெற்றிகரமாக தன் நாட்டை ஆட்சி செய்து மரித்தார்.

To Get Daily Story In What's App Contact +917904957814

என் அன்பு வாசகரே,
அநேகர் தாங்கள் செய்கிற் வேலை கர்த்தர் கொடுத்த வேலை என்று நினைப்பதில்லை. வேலைக்குப் போகாமல் ஏனோ தானோவென்று இருந்து விடுகிறாா்கள்.

ஆனால் நீங்கள் வேலையில் கவனமாயிருங்கள்.

வேலையில் தவறு ஏற்படும் பட்சத்தில் அதிகாரிகள் அதைக்குறித்து கடிந்து கொள்ளும் போது அதை சகித்துக் கொண்டு அந்த தவறை சரிசெய்து கொள்ளுங்கள்.

அப்படி சரிசெய்ய மனமில்லாமல் கர்த்தர்க் கொடுத்த வேலையை உங்கள் இஷ்டப்படி முதலாளி சரியில்லை கம்பெனி சரியில்லை என்று வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்து விடாதீர்கள்.

அது மட்டுமல்ல இந்த வேலையை விட்டு வேறு வேலைக்குச் சென்று வேலையை மாற்றி விடாதீர்கள். வேலையை விட கர்த்தரை முன்பாக வையுங்கள்.. ஐஸ்வா்யத்தை சம்பாதிக்க பெலன் கொடுக்கிறது நம் தேவன் தான் (உபா 8:17.18)

தனக்குத் தெரியாத ஏதாவது வேறு ஒரு வேலையைத் தேடி கொள்ளாதீா்கள். அந்த வேலையை நீங்கள் செய்ய முடியாமல் போய் விடும். வேலையில் ஜாக்கிரதை யாயிருங்கள்.

படித்து முடித்து விட்டு வேலைக்கு போகாமல் கா்த்தா் என்னை ஊழியத்திற்கு அழைத்து

இருக்கிறாா் என்று வீட்டில் இருந்து விடாதீர்கள்.

வேலைக்கு போய்கொண்டே ஊழியம் செய்யுங்கள்.

இனிமேல் வேலைக்கே போக முடியாதபடி ஊழியம் அதிகமானவுடன் கா்த்தா் அனுமதியின்படி வேலையை விட்டுஙிட்டு முழு நேரமாக வாருங்கள்.

எந்தவொரு வேலையும் தேவனே நமக்கு ஏற்படுத்தி கொடுக்கிறாா். என்று நினையுங்கள்.

வேதம் சொல்கிறது. புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான்.

(நீதிமொழிகள் 17:21 )

தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்(.நீதிமொழிகள் 18 :9)

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

(நீதிமொழிகள் 22 :29)இந்த வசனங்களின்படி

தேவன் உங்களை மேன்மைப்படுத்துவாா்.

#நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.