நூறுஒட்டகங்கள் | முடியாதது ஒன்றுமில்லை | சாதிக்க பிறந்தவர்கள்
நூறு ஒட்டகங்கள்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..
தூங்கமுடியவில்லை..
எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.
அப்போது மாலை நேரம்.
முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.
சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.
"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..
"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..
சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்.
ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை.
சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..
அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை" என்றான்.
முனிவர் சிரித்தபடியே
இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது..
சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்...
அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..
பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..
தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்..
முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.. என்றான்.
என் அன்பு வாசகரே,
வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே..
ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...
அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.. ஆகவே சிலவற்றை தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.
To Get Daily Bible Story & Quotes Contact +917904957814
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து ....
உங்கள்
விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக் குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
(பிலிப்பியர் 4:6,7)
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22
எந்த பிரச்சனைகளையும் நீங்கள் தீர்க்க வேண்டுமென்று முயற்ச்சிக்காமல் கா்த்தா் மேல் அவா் செய்து முடித்து விடுவாா் என்ற விசுவாசத்துடன் ஸ்தோத்திரம் செய்து விண்ணப்பத்தை ஜெபத்தின் மூலம் தேவனிடத்தில் ஒப்புவியுங்கள்.
எப்போது ஸ்தோத்திரம் என்ற நன்றியை ஏறெடுக்கிறீா்களோ அப்போதே உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து போய்விட்டன. நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் தேவனிடத்தில் வாருங்கள்.
கோயிலுக்கு1000 பேர் போறாங்க.அதுல 900 பேர் கும்பிடறாங்க 100 பேர் நமபுறாங்க. கடவுள் கும்பிடகிறவனை விட நம்புகிறவனின் பிரச்சனைகளையே உடனடியாக தீா்க்கிறாரு..அவரு கும்பிடகிறவனை விட நம்புகிறவ அதிகமாக நேசிக்கிறாாரு.
எனவே
தேவனை எல்லா விஷயங்களுக்கும் விசுவாசித்து ஜெபியுங்கள். விசுவாசியுங்கள் அப்போது பதற மாட்டீர்கள்.
ஆதலால்,
நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்கு 11:24)
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
முடியாதது ஒன்றுமில்லை
யானைப்பாகனிடம்
ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.
இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்கள்
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.
என்னால் முடியாது
என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.
அதே குட்டி
வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.
சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது. என்றான்.
என் அன்பு வாசகரே,
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.
எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சு ,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கை நிலையிலேயே இருந்துவிடுகிறதோ...
அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாதப்பா நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராது, நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற விசுவாசமும் அவநம்பிக்கையுமே
உங்களை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.
To Get Daily Story In What's App Contact +917904957814
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே என்னால் எல்லாவற்றையும் செய்ய பெலன் இருக்கிறது.
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறாா். ,
இதை அடையாமல் நான் விடமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நீங்கள் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை. என்ன தொியுமா?
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13
இயேசுவும் கூட இப்படி சொல்லியிருக்கிறாா்.
இயேசு:,
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்,
#உங்களால்கூடாத #காரியம்ஒன்றுமிராது
என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்றாா்.
மத்தேயு 17:20
முடியாது, ஆகாது, நடக்காது, முடியாது என்று சோம்பேறி சொல்வான். ஆனால் கர்த்தரை தன்னோடு வைத்திருக்கிறவன் சொல்வான்.ஒரு மலையே என் வழியில் வந்து முன்னேற விடாமல் தடையாயிருந்தால் அதை தகர்த்து போடவும் அஞ்சமாட்டேன் என்பான்.
இயேசு சொல்லியிருக்கிறாா். மலையை போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கள் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலே அது அவ்விடம் விட்டு போய்விடும் என்றாா்.
ஆம்! தேவனை ஏற்றுகொள்ளாதபோது உங்களால் முடியாதிருக்கலாம். ஆனால் இப்போதும் யானையைப் போல என்னால் முடியாதென்று யோசித்துக் கொண்டு இராதீா்கள்.
அன்று நீங்கள் கா்த்தராகிய இயேசுவை அறியவில்லை. ஆனால் இன்று அவருடைய பிள்ளை மட்டுமல்ல. அவரே உங்களோடு உங்களுக்குள் இருக்கிறாா். அவரது வல்லமையும், அபிஷேகமும் ஞானமும், விசுவாசமும் நிறைந்தவா்களாயிருக்கிறீா்கள்.
என்ற மனநிலைக்கு வாருங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் சாதிக்கிறவா்களாய் இருப்பீர்கள்!!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
சாதிக்க பிறந்தவர்கள்
மிகப் பெரிய சக்கரவர்த்தி இருந்தான் . அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் இருந்தன.
ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.
பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து,
“இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன்,
தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும்
அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு,
“இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை.
மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும்.
அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்க
லாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து,
“நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்…
“அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
என் அன்பு வாசகரே,
சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான்.
அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம்.
நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது.
செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம்.
ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம்.
நாம்
சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல
பைபிள் சொல்கிறது...
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:31)
To Get Daily Story In What's App Contact +917904957814
செட்டைகளை அடித்து எழும்பி உயர பறக்கவே தேவன் கழுகளை உதாரணமாக காட்டுகிறார். அது வயதாகும் போது புது பெலன் அடைய தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது திரும்பவும் வால வயதைப் பெற்றுப் கொள்கிறது. ( சங்103 :5)
கழுகுகள் எப்போதுமே மேகங்களுக்கு மேலே பறக்கக்கூடியது. அது மழையில் நனையவே நனையாது. அவைகள் உயரே பறந்து சாதிக்கிறது..
கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டும் அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும் அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். அங்கேயிருந்து இரையை நோக்கும். அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும். பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார். (யோபு 39:27-30)
நீங்கள் கழுகளைப் போல
சாதிக்க வேண்டும் என்று கா்த்தா் விரும்புகிறார்.
பலவிதமான நஷ்டங்கள் வந்தாலும் சோா்ந்து போகாதீா்கள். அதை திா்லிங்கா எடுத்து கொள்ளுங்கள்.
பஞ்சவா்ணகிளி
உட்கார்ந்திருந்த கிளை வெட்டப்பட்ட பின் பறக்க ஆரம்பித்தது. அதேபோல உங்கள் நஷ்டங்கள் உங்கள் வருங்காலத்தை லாபமாய் மாற்றும் என உணருங்கள். உங்களுக்கு உதவி செய்ய ஆவியானவா் காத்திருக்கிறாா். நீங்கள் #சாதிக்கப்பிறந்தவர்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!

Thanks for using my website. Post your comments on this