================
பரிசுத்தஆவியானவர்!
================
தேவனாக இருக்கிறார்!
தேவன் ஆவியாயிருக்கிறார். (யோவான் 4:24)
கர்த்தரே ஆவியானவர். (2 கொரி 3:17)
தேவனுடைய ஆள்தத்துவத்தில் மூன்றாவது நபர் பரிசுத்தஆவியானவர்.
தேவன் பிதா குமாரன் பரிசுத்தஆவியானவர் என்கிற மூன்று ஆள்தத்துவமுள்ளவராக இருக்கிறார். (மத்.28:19; 2கொரி.13:14)
பரிசுத்தஆவியானவர் தேவஆவி (மத்.3:16), பிதாவின் ஆவியானவர் (மத்.10:20; 1 கொரி 12:3), தேவகுமாரனுடைய ஆவி (கலாத்.4:6), இயேசுகிறிஸ்துவினுடைய ஆவி (பிலிப் 1:19), கிறிஸ்துவின் ஆவியானவர். (1பேதுரு 1:11) என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
சிருஷ்டிகராக இருக்கிறார்!
உலகத்தின் சிருஷ்டிப்பில் பிதாவாகிய தேவனோடும், வார்த்தையாகிய தேவனோடும் பங்கெடுத்தவர். (ஆதியா.1:1-3; யோபு 26:13; யோவான் 1:1-3)
ஆதியிலே *தேவன்* வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதி.1:1)
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. *தேவ ஆவியானவர்* ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதி.1:2)
தேவன் *வெளிச்சம் உண்டாகக்கடவது* என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. (ஆதி.1:3)
சிருஷ்டிப்பில் பிதா, வார்த்தை பரிசுத்தஆவியானவர் மூவரும் பங்கெடுத்ததை மேலே காண்கிறோம்.
தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடி (அடைகாத்து) உலக உருவாக்கத்திற்கு உதவியாக இருந்தார்.
தேவன் தமது ஆவியினாலேயே வானத்தை அழகுபடுத்தினார். (யோபு 26:13)
மாம்சத்தின் கிரியைகளை அழித்து, ஆவியின் கனிகளை நம்மில் சிருஷ்டிக்கிறார் ஆவியான தேவன். (ரோமர் 8:13; எபேசி.4:22-24; 5:22,23; தீத்து 3:5)
அழிவுள்ள, கனவீனமுள்ள, பலவீனமுள்ள நமது ஜென்மசரீரத்தை:
அழிவில்லாத, மகிமையுளள்ள, பலமுள்ள ஆவிக்குரிய சரீரமாக மறுரூபப்படுத்தப்போகிறவர் ஆவியான தேவனே. (1கொரிந்.15:42-44; 51-54; ரோமர் 8:11)
எங்கும் நிறைந்தவர்!
தேவனுடைய ஆவிக்கு மறைவாக எங்கும் போகமுடியாது. வானத்திலும், பாதாளத்திலும்
சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலும் அவர் இருக்கிறார். (சங்.139:7-10)
எல்லாம் அறிந்தவர்!
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் ஒருவனுமில்லை. (ஏசாயா 40:13)
தேவஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1கொரிந்.2:10-12)
எல்லாம் வல்லவர்!
வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். (ஏசாயா 59:19)
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலேயே ஆகும்! (சகரியா 4:6)
தேவனுடைய மூன்று ஆள்தத்துவத்தில் ஒருவராய் இருக்கிற பரிசுத்தஆவியானவர்: சிருஷ்டிகரும், எங்கும் நிறைந்தவரும், எல்லாம் அறிந்தவரும், எல்லாம் வல்லவருமான தேவனாக இருக்கிறார்!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
===============
பரிசுத்தஆவியானவர்!
==============
பரிசுத்தஆவியானவர் சிலர் நினைக்கிறதுபோல இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அல்ல, அவர் உணர்ச்சிமிக்க ஒரு ஆள்தத்துவமுள்ளவராவார்!
அவர் உணர்வை அருளுகிறவர்!
அவர் ஞானத்தையும் *உணர்வையும் அருளும் ஆவியாகவும்,* ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியாகவும், அறிவையும் *கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியாகவும்* இயேசுகிறிஸ்துவின்மேல் தங்கியிருந்தார். (ஏசாயா 11:2)
நமது கல்லான (உணர்வற்ற) இருதயத்தை, சதையான (உணர்வுள்ள) இருதயமாக தமது ஆவியினாலேயே தேவன் மாற்றுகிறார். (எசேக்.36:26; எபேசி.4:22-24)
உணர்வைத்தருகிறவர் உணர்வுள்ளவராகவே இருக்கவேண்டும்!
அவர் விசனப்படுகிறவர்!
தேவன் தங்களுடைய எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டும், தம்முடைய சமுகத்தின் தூதனானவரால் தங்களை இரட்சித்தும், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் தங்களை மீட்டும், தங்களைத் தூக்கிச்சுமந்துவந்தும், தேவஜனங்கள் அவருக்கு விரோதமாகக் விகலகம்பண்ணும்போது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் விசனப்படுகிறார். (ஏசாயா 63:9,10)
அவர் துக்கப்படுகிறவர்!
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் தேவஜனங்களாகிய நம்மை விட்டு நீங்காதபோதும்; நாம் ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இராமலும், கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்கு மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னியாமலும் இருக்கும்போதும்: மீட்கப்படும் நாளுக்கென்று நாம் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார். (எபேசி.4:30-32)
அவர் வைராக்கிய வாஞ்சையுள்ளவர்!
நாம் உலகத்துக்குச் சிநேகிதராகி, தேவனுக்குப் பகைஞராகிவிடக்கூடாது என்பதில் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)
அவர் மகிமைப்படுவதில் மகிழ்கிறார்!
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டு, தூஷிக்கப்படுகிற அவருடைய பாடுகளுக்கு பங்காளிகள்மேல் தங்கியிருக்கிற தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர், உலகத்தால் தூஷிக்கப்படுகிற அவர்களாலே மகிமைப்படுகிறார். (1பேதுரு 4:13,14)
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டு, தூஷிக்கப்படுகிறவர்களால் மகிமைப்படுகிற ஆவியானவர் மகிழ்ச்சியை உணருவார்!
பரிசுத்தஆவியானவர் உணர்ச்சிமிக்க ஒருவர் என்பதை நாம் உணரவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
====================
பரிசுத்தஆவியானவர்!
=====================
பரிசுத்தஆவியானவர் சிலர் நினைக்கிறதுபோல இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அல்ல, அவர் உணர்ச்சிமிக்க ஆள்தத்துவமுள்ள ஒருவராவார்!
அவர் உணர்வை அருளுகிறவர்!
அவர் ஞானத்தையும் *உணர்வையும் அருளும் ஆவியாகவும்,* ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியாகவும், அறிவையும் *கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியாகவும்* இயேசுகிறிஸ்துவின்மேல் தங்கியிருந்தார். (ஏசாயா 11:2)
நமது கல்லான (உணர்வற்ற) இருதயத்தை, சதையான (உணர்வுள்ள) இருதயமாக தமது ஆவியினாலேயே தேவன் மாற்றுகிறார். (எசேக்.36:26; எபேசி.4:22-24)
உணர்வைத்தருகிறவர் உணர்வுள்ளவராகவே இருக்கவேண்டும்!
அவர் விசனப்படுகிறவர்!
தேவன் தங்களுடைய எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டும், தம்முடைய சமுகத்தின் தூதனானவரால் தங்களை இரட்சித்தும், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் தங்களை மீட்டும், தங்களைத் தூக்கிச்சுமந்துவந்தும், தேவஜனங்கள் அவருக்கு விரோதமாகக் விகலகம்பண்ணும்போது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் விசனப்படுகிறார். (ஏசாயா 63:9,10)
அவர் துக்கப்படுகிறவர்!
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் தேவஜனங்களாகிய நம்மை விட்டு நீங்காதபோதும்; நாம் ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இராமலும், கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்கு மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னியாமலும் இருக்கும்போதும்: மீட்கப்படும் நாளுக்கென்று நாம் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார். (எபேசி.4:30-32)
அவர் வைராக்கிய வாஞ்சையுள்ளவர்!
நாம் உலகத்துக்குச் சிநேகிதராகி, தேவனுக்குப் பகைஞராகிவிடக்கூடாது என்பதில் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)
அவர் மகிமைப்படுவதில் மகிழ்கிறவர்!
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டு, தூஷிக்கப்படுகிற அவருடைய பாடுகளுக்கு பங்காளிகள்மேல் தங்கியிருக்கிற தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர், உலகத்தால் தூஷிக்கப்படுகிற அவர்களாலே மகிமைப்படுகிறார். (1பேதுரு 4:13,14)
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டு, தூஷிக்கப்படுகிறவர்களால் மகிமைப்படுகிற ஆவியானவர் மகிழ்ச்சியை உணருவார்!
பரிசுத்தஆவியானவர் உணர்ச்சிமிக்க ஒருவர் என்பதை நாம் உணரவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
=========================
பழைய ஏற்பாட்டில் பரிசுத்தஆவியானவர்!
===========================
இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு கீழானவராக வந்தபடியால் (கலாத்.4:5), அவருடைய மரணம்வரைக்குமான பரிசுத்தஆவியானவரின் கிரியைகளை பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளாகக் கணக்கிடலாம்.
1. சிருஷ்டிப்பின் பங்காளராய்!
வானம் பூமி சிருஷ்டிப்பில் பிதாவாகிய தேவனோடும், வார்த்தையாகிய தேவனோடும் பரிசுத்தஆவியானவராகிய தேவன் பங்காற்றினார். (ஆதி.1:1-3,4-23 யோவான் 1:1-3)
தேவன் சுவாசத்தை வாங்கிக்கொள்ளும்போது மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும் சமுத்திரத்தின் சகல ஜீவன்களும்
அவர் தம்முடைய ஆவியை அனுப்பும்போது சிருஷ்டிக்கப்படுகின்றன. (சங்.104:25-30)
தேவன் தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்.
(யோபு 26:13)
மனுஷனுடைய சிருட்டிப்பிலும் ஆவியானவர் பங்கெடுத்தார். தேவனுடைய ஆவியானவர் மனுஷனை உண்டாக்கினார். (யோபு 33:4)
2. ஆசரிப்புக் கூடாரம் மற்றும் தேவாலய கட்டுமானப்பணியின் ஆதாரமாய்!
ஆசரிப்புக் கூடாரத்தின்
சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு வேண்டிய ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் பெசலெயேலுக்கு அருளினார். (யாத்.31:5; 35:30-35)
எருசலேம் தேவாலயத்தின் முழுமையான மாதிரி வரைபடத்தை தாவீதின் இருதயத்தில் வரைந்தார். (1நாளா.28:11-13)
3. வழிநடத்தும் வல்லவராய்!
இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு நடத்தின மோசே மற்றும் எழுபது மூப்பர்களுக்குள் இருந்து, ஜனங்களின் பாரத்தை சுமக்கும் பெலனை கொடுத்தார். (எண்.11:17,25,25)
இஸ்ரவேலர் கானானுக்கு நடத்தப்படுகையில் அவர்களுக்கு அறிவை உணர்த்த, தேவனுடைய நல் ஆவியாக அவர்களுக்குள் இருந்தார். (நெகே.9:19,20)
இஸ்ரவேலர் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே தேவன் நடத்தினார். (ஏசாயா 63:12)
கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார். (ஏசாயா 63:14)
தமக்குப் பிரியமானதைச் செய்ய தேவன் தமது ஆவியினாலேயே நமக்குப் போதிக்கிறார். தேவனுடைய நல்ல ஆவியானவரே நம்மை செம்மையான வழியிலே நடத்துகிறார். (சங்.143:10)
4. தீர்க்கதரிசனத்தின் ஆவியாய்!
தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். (2 பேதுரு 1:21)
இஸ்ரவேலரின் தலைவர்களையும் (எண்.11:25,26), எளிய மக்களையும் (எண்.24:2; 1சாமு.10:6,10; 19:20,21; 2நாளா.15:1-7), இராஜாக்களையும் (1சாமு.19:22,23; 2சாமு.23:2), அதிபதிகளுக்கு தலைவனையும் (1நாளா.12:18), ஆசாரியரையும் (2நாளா.20:14-17; 24:20) ஆவியானவர் தீர்க்கதரிசனம் சொல்லவைத்தார்.
தமது கடிந்துகொள்ளுதலுக்கு நாம் திரும்பும்படி, தேவன் தமது ஆவியை நமக்கு அருளி, அவருடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிக்கிறார். (நீதி.1:23)
யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் மீகா நிரப்பப்பட்டிருந்தான். (மீகா 3:8)
தேவன் தீர்க்கதரிசிகளைக்கொண்டு தமது ஆவியின்மூலமே ஜனங்களோடு பேசினார். (சகரியா 7:12)
எலியா தீர்க்கதரிசியை போன்றே பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புகிற எலியாவின் ஆவியும் பலமும் உடைய யோவான்ஸ்நானனை தேவன் எழுப்பினார். (மல்கியா 4:5,6; லூக்கா 1:17)
யோவான்ஸ்நானன் தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். (லூக்கா 1:15)
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குள்ளிருந்து ஆவியானவரே இயேசுகிறிஸ்துவைக்குறித்து முன்னறிவித்தார்.
(1பேதுரு 1:11,12; வெளிப்.19;10)
இயேசுவே ஆண்டவர் என்கிற தரிசனத்தை ஆவியானவரே தாவீதுக்குக் கொடுத்தார். (மத்.22:43; மாற்கு 12:36)
இயேசுவையும் மரியாளையும் குறித்து ஆவியானவரே எலிசபெத்தை தீர்க்கதரிசம் உரைக்கவைத்தார். (லூக்கா 1:41-45)
இயேசுவைகுறித்தும் யோவான்ஸ்நானனைகுறித்தும், யோவான்ஸ்நானனின் தகப்பனாகிய சகரியாவை தீர்க்கதரிசனம் சொல்லவைத்தார். (லூக்கா 1:67-79)
நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்த சிமியோனுக்குள் இருந்து,
"கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய்" என்று அவனுக்கு அறிவித்து, அவரைக் காணும்படிசெய்து, அவரைக்குறித்து அவனை தீர்க்கதரிசனம் சொல்லவைத்தவர்
பரிசுத்தஆவியானவரே. (லூக்கா 1:25-33)
5. தலைவர்களில் ஞானத்தின் ஆவியாய்!
இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படி அன்மேல் ஞானத்தின் ஆவியினாய் இருந்தார். (எண்.27:18-20; உபா.34:9)
இஸ்ரவேலின் தலைவர்கள் ஆவியானவரின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார். (ஏசாயா 30:1)
6. நியாயாதிபதிகளில் நியாயத்தின் ஆவியாய்!
ஒத்னியேல் (நியா.3:9,10), கிதியோன் (6:12,34), யெப்தா (11:29; 12:7), சிம்சோன் (13:25; 14:6,19; 15:14,20) போன்ற நியாயாதிபதிகளில் இருந்து இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கச்செய்தார்.
நியாயம் விசாரிக்க உட்காருகிற தமது ஜனத்திற்கு கர்த்தர் நியாயத்தின் ஆவியாக இருக்கிறார். (ஏசாயா 28:6)
7. சாதாரணமானவர்களை அசாதாரணமானவர்களாக்குகிறவராய்!
மனாசேயில் தன் குடும்பம் மிகவும் எளியது என்றும், தன் தகப்பன் வீட்டில் தான் எல்லாரிலும் சிறியவன் என்றும் நினைத்துக்கொண்டிருந்த கிதியோனை, இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும் பராக்கிரமசாலியாக்கினார். (நியா.6:12-15,34,35)
தனக்கு எதிராக வந்த கெர்ச்சிக்கிற பாலசிங்கத்தை, சிம்சோன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழத்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போடவும் (நியா.14:5,6), அஸ்கலோன் ஊராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு கொடுக்கவும் (14:19), இரண்டு புதுக்கயிறுகளாலே கட்டப்பட்டு, பெலிஸ்தரிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட அவன், அந்தக் கயிறுகளை அறுத்துப்போடவும்
(15:13,14) பலப்படுத்தினார்.
சாதாரணமான மனுஷனான சவுலை வேறுமனுஷனாக்கி (1சாமு.10:6,9),
தான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் என்றும், பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் தன் குடும்பம் அற்பமானது என்றும், இஸ்ரவேலுக்கு ராஜாவாயிருக்க தான் தகுதியுள்ளவன் அல்ல என்றும் எண்ணி (9:20,21), தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக் கொண்டவனை (10:22), இஸ்ரவேலை எதிரிகளிடமிருந்து இரட்சிக்கும் தலைவனாக்கினார். (11:1-11)
நம்மைப்போல பாடுகளுள்ள மனுஷனாகிய எலியாவை, தேசத்தின் பெரியமனுஷரெல்லாம் பயப்படும் மனுஷனாக்கினார். (1இராஜா.18:11,12)
தீர்க்கதரிசிகளின் புத்திரரால் அற்பமாய் எண்ணப்பட்ட எலியாவின் வேலைக்காரன் எலிசாவை, அவர்கள் பணிந்து பயப்படத்தக்கதாக, இரட்டிப்பான தமது வரமுள்ளவனாக்கினார். (2இராஜா.2:3,5,9-16)
8. மனுஷர் ஆவியை அனல்மூட்டுகிறவராய்!
தேவனுடைய பரிசுத்தஆவியானவர், தேவசித்தம் செய்வதற்கு ஏதுவாக மனுஷனுடைய ஆவியை புதுப்பித்து, தேவனுடைய வழிகளில் உற்சாகமடையப்பண்ணினார். (சங்.51:10-12)
9. தேவனுடைய ஆக்கினையை செயல்படுத்துகிறவராய்!
கர்த்தருடைய தண்டனையினால் பாழாகும் ஏதோமில் வந்து சஞ்சரிக்கும் என்று தேவனால் அறிவிக்கப்பட்ட நாரைகள், முள்ளம்பன்றிகள், ஆந்தைகள், காக்கைகள், வலுசர்ப்பங்கள், கோட்டான்கள், காட்டுமிருகங்கள், ஓரிகள், சாக்குருவிகள், வல்லூறுகள், கூளிகள் ஆகியவைகளை, நோவா காலத்தில் பேழையில் சேர்த்ததுபோல ஒன்றும் குறையாமல், தம்முடைய ஆவியானவரே ஏதோமில் கொண்டுவந்து சேர்ப்பார் என்று கர்த்தர் முன்னறிவித்தார். (ஏசாயா 34:5-16)
கோரேஸை கொண்டு பாபிலோனை தண்டிப்பதில் பிதாவாகிய தேவனுடன் ஆவியான தேவன் இணைந்திருப்பதை வார்த்தையாகிய தேவன் சாட்சியிடுகிறார். (ஏசாயா 48:14-16)
10. தீர்க்கதரிசியை தரிசனத்துக்குள் நடத்துகிறவராய்!
எசேக்கியேல் தீர்க்கதரிசியை ஆவியான தேவன் ஆவிக்குள்ளான தரிசனத்தில் எருசலேம் ஆலயத்தின் கிழக்குமுகவாசல் (எசேக்.11:1), கல்தேயாவுக்கு சிறைப்பட்டுப்போனவர்களின் இடம் (11:24), எலும்புகள் நிறைந்தப் பள்ளத்தாக்கு (37:1), தேவாலய உட்பிரகாரம் (43:5) போன்ற இடங்களுக்கு கொண்டுபோய் காண்பித்தார்.
11. மறைபொருளை வெளிப்படுத்துகிறவராய்!
யோசேப்புக்குள் இருந்து பார்வோனுக்கு சொப்பனத்தின் மறைபொருளை வெளிப்படுத்தினார். (ஆதி.41:8-38)
தானியேலுக்குள் இருந்து நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கான அர்த்தத்தையும் (தானி.2:14-47; 4:4-27), பெல்ஷாத்சாருக்கு முன்பாக தோன்றி
கையுறுப்பு சுவற்றில் எழுதின எழுத்தின் அர்த்தத்தையும் (5:5-17,22-28) வெளிப்படுத்தினார்.
12. வார்த்தையை மாம்சமாக்குகிறவராய்!
வார்த்தையான தேவன் மரியாளுக்குள் மாம்சமாக உருவாகக் கிரியை செய்தார் ஆவியானவர். (மத்.1:18,20)
பரிசுத்தஆவி மரியாள்மேல் வந்து, உன்னதமானவருடைய பலம் அவள்மேல் நிழலிட்டு பரிசுத்தமுள்ள தேவனுடைய குமாரன் அவளிடத்தில் பிறந்தார். (லூக்கா 1:35)
13. இயேசுவுக்குள் வாசம்பண்ணுகிறவராய்!
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். (மத்.3:16)
பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனார். (மத்.4:1; மாற்கு 1:12)
சோதிக்கப்பட்டப்பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். (லூக்கா 4:14)
புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிக்க இயேசுவை ஆவியானவரே நடத்தினார். (மத்.12:18)
தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் இயேசுவை நடத்தினவர் அவர்மேலிருந்த கர்த்தருடைய ஆவியானவரே. (லூக்கா 4:18,19)
தேவனால் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்து தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்தார். (யோவான் 3:34)
பிசாசுகளைத் துரத்த இயேசுவை ஆவியானவரே பலப்படுத்தினார். (மத்.12:28,31,32; அப்.10:38)
இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலேயே கட்டளையிட்டார். (அப்.1:1)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
================================
புதிய ஏற்பாட்டில் பரிசுத்தஆவியினவர்!
=================================
1. புதிய ஏற்பாட்டு சபைக்கு பிதா மற்றும் குமாரனால் வாக்களிக்கப்பட்டவர்!
யோவேல் 2: 28, 29
லூக்கா 3: 16
லூக்கா11:13
யோவான் 7: 38, 39
யோவான் 14: 16, 17
யோவான்20: 22
அப்போஸ்தலர் 1: 4
அப்போஸ்தலர் 11: 15, 16
2. திருச்சபை கட்டுமானப்பணியில் இயேசுவின் பங்காளர்!
மத்தேயு 16: 18
யோவான் 3: 3, 5, 6, 8
யோவான் 6 :63
ரோமர் 2: 29
ரோமர் 5: 5
ரோமர் 8: 9, 10
ரோமர் 15: 15
1 கொரிந்தியர் 6: 11
1 கொரிந்தியர் 12: 13
2 கொரிந்தியர் 3: 6
எபிரெயர் 10: 29
1 தெசலோனிக்கேயர் 1: 6
2 தெசலோனிக்கேயர் 2: 13
1 பேதுரு 1: 2, 22
கலாத்தியர் 3: 5
எபேசியர் 4: 22-24
3. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கிறவர்!
2 கொரிந்தியர் 3: 15-17
ரோமர் 8: 2-4
கலாத்தியர் 5: 18
4. புதியமார்க்கத்தை புரியவைக்கிறவர்!
எபிரெயர் 9: 8
எபிரெயர் 10: 14-20
1 யோவான் 5: 6-8
வெளிப்படுத்தல் 19: 10
5. மீட்கப்படும் நாளுக்கான முத்திரையாயானவர்!
எபேசியர் 1: 13, 14, 30
2 கொரிந்தியர் 1: 22
2 கொரிந்தியர் 5: 1-5
6. தேவனுடைய பிள்ளைகள் என்கிற நிச்சயத்தைக் கொடுக்கிறவர்!
(ரோமர் 8:14-16; கலாத்.4:6)
7. ஆவிக்குரிய ஜீவியத்தை ஆரம்பித்துவைக்கிறவர்!
(கலாத்.3:3; 5:16,17,19-21,25; ரோமர் 8:13)
8. உண்மையாய் ஆராதிக்க உதவிசெய்கிறவர்!
(பிலிப்.3:3; யோவான் 4:23,24; ரோமர் 12:1; எபிரே.12:28)
9. உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறவர்!
(யோவான் 16:7-11)
10. சாட்சியாய் வாழ பலப்படுத்துகிறவர்!
(அப்.1:8; 5:32; ரோமர் 1:5; 2தீமோத்.1:7; யாக்.4:4,5; வெளிப்.19:10)
11. நம்மைக்குறித்து சாட்சிகொடுக்கிறவர்!
(ரோமர் 8:16; 9:2)
12. நமக்காக ஜெபிக்கிறவர்!
(ரோமர் 8:26,27)
13. நம்மை ஜெபிக்கவைக்கிறவர்!
(எபேசி.6:18; யூதா 1:20)
14. நம்மை தேற்றுகிறவர்!
(யோவான் 14:16; அப்.13:52; ரோமர் 14:17; 15:13; வெளிப்.14:13)
15. நம்மை கனியுள்ளவர்களாக்குகிறவர்!
(கலாத்.5:22,23; ரோமர் 5:5; 15:32; எபேசி.5:9; பிலிப்.2:1,2)
16. சத்தியத்தில் நடத்துகிறவர்!
(யோவான் 14:26; 15:26; 16:13; 1கொரி.2:10-12; ரோமர் 8:5,14; எபேசி.6:17; எபிரே.3:7; வெளிப்.2:7,11,17,29; 3:6,13,22)
17. சத்தியத்தைப் பேசவைக்கிறவர்!
(2தீமோத்.3:16,17; அப்.4:29-31; 15:1-4,28,29; 1கொரிந்.2:10-13; 2தீமோத்.1:14)
18. ஊழியத்திற்கு அழைக்கிறவர்!
(அப்.13:2; 20:28; எபேசி.4:11-13-15)
19. ஊழியத்தில் நடத்துகிறவர்!
(அப். 8:29,39; மத்.10:17-19; அப்.4:8; 11:12; 13:1,2,4; 16:6,7; ரோமர் 15:18; 1தெச.1:5)
20. வரங்களை அளிக்கிறவர்!
(அப்.2:4,17,18; 2:38; 5:3,9; 10:44-46,47; ரோமர் 1:10; 1கொரி.12:1,7-10; 14:2,12,14,16; எபிரே.2:4)
21. வெளிப்பாடுக் கொடுக்கிறவர்!
(அப்.3:5,9; 7:55; 10:19; 11;28; 13:9,10; 20:23; 21:4,11; 1கொரி.2:14,15; 12:3; 14:37; எபேசி.1:17; 3:6; 1தீமோத்.4:1; 1பேதுரு 1:11,12; 2பேதுரு 1:21; 1யோவான் 3:24; 4:2,3,6; வெளிப்.1:10; 4:2; 17:3; 21:10)
22. மனதை மறுரூபமாக்குகிறவர்!
(2கொரி.3:3,18; எபேசி.4:22-24)
23. மறுவாழ்வுக்கு ஆயத்தப்படுத்துகிறவர்!
(2கொரி.5:1-5; கலாத்.5:5)
24. உயிர்த்தெழச்செய்யப்போகிறவர்!
(ரோமர் 8:11; 1கொரி.15:44,45,51-54; எபேசி.1:14; 4:30; பிலிப்.1;19-21; வெளிப்.22:17)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
===============================
பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம்!
==========================
ஆவியினால் பிறப்பது!
"ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்" என்கிறார் இயேசுகிறிஸ்து. (யோவான் 3:5)
ஆவியினால் பிறப்பதுதான் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படுவதாகும். "நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், *அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்"* என்று யோவான்ஸ்நானன், இயேசுகிறிஸ்துவை பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவராக அறிமுகப்படுத்தினார். (மாற்கு 1:8) "யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். *நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.* ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் *என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்"* என்று ஆவியினால் பிறக்கிறதற்கு இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டார்.
(அப்.1:4,5) *"நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், .....ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்"* என்று பிதா வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். (யோவேல் 2:28,29)
"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, *பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா"* என்று பிதாவின் வாக்குத்தத்தத்தின் அடிப்படையிலேயே இயேசு தமது சீஷரிடம் கூறினார். (லூக்கா 11:13) *"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். ..... அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்"* என்று பிதாவின் வாக்குத்தத்தத்தை மனதில்வைத்தே, இயேசுகிறிஸ்து தமது சீஷருக்கு வாக்குப்பண்ணினார். (யோவான் 14:16,17)
இயேசுகிறிஸ்து தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப்பெற்று, தமது கட்டளையின்படியே எருசலேமில் காத்திருத்த தமது 120 சீஷர்கள்மேல்
பொழிந்தருளினார். (அப்.1.14,15; 2:1-4,33) தேவன் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். (தீத்து 3:7)
தேவஆவி நம்மேல் ஊற்றப்படுவது, தேவன் தமது பரிசுத்தஆவியை நமக்கு கொடுப்பது, தேவஆவி நம்மேல் பொழிந்தருளப்படுவதுதான் பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானஸ்நானம்பண்ணப்படுவது அல்லது ஆவியினால் பிறப்பதாகும்!
தொடரும் ஆவியினால் பிறக்கும் அனுபவம்!
"பெந்தெகொஸ்தேநாள் அன்றே பரிசுத்தஆவியானவர் பூமிக்கு வந்துவிட்டார். எனவே, அவர் மறுபடியும் வரவேண்டிய அவசியமில்லை. ஆகவே பெந்தெகொஸ்தேநாளில் வந்ததுபோலவே இன்று நம்மேல் பரிசுத்தஆவியானவர் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது" என்று போதிக்கிற சிலர் உண்டு.
பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்தஆவியானவர் பூமிக்கு வந்துவிட்டது உண்மைதான். (அப்.2:16-18) அன்று பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்காய் எருசலேமில் காத்திருந்த 120 சீஷர்கள்மேல் மட்டுமே அன்று பரிசுத்தஆவியானவர் ஊற்றப்பட்டாரேயல்லாமல், இனி இரட்சிக்கப்படப்போகிறவர்கள்மேலும் அன்றே சேர்த்து ஊற்றப்படவில்லை.
பெந்தெகொஸ்தேநாளுக்குப் பிறகு இரட்சிக்கப்பட்ட எருசலேம் சபையார் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டதை அப்போஸ்தலர் 4:31ல் காணலாம். சமாரியாவில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றவர்கள்மேல் பேதுருவும் யோவானும் வந்து, பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல் கைகளை வைத்தபோதுதான் அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். (அப்.8:17) இயேசுகிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட பவுலுக்கு அனனியா என்னும் சீஷன் ஞானஸ்நானம் கொடுத்து, பின்பு அவரை பரிசுத்தஆவியின் நிறைவுக்குள் நடத்தினார். (அப்.9:6-18; 22:12-16). கொர்நேலியுவின் வீட்டார், அவரது உறவின்முறையார் மற்றும் விசேஷித்த சிநேதிதர்மேல் பேதுரு பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கும்போது பரிசுத்தஆவியானவர் இறங்கினார். (அப்10:22,44)
"நான் பேசத்தொடங்கினபோது, *பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோல, அவர்கள்மேலும் இறங்கினார்.* யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான், *நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்* என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்" என்று எருசலேம் சபையாரிடம், கொர்நேலியு வீட்டார், நண்பர் மற்றும் உறவினரின்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கிற நிகழ்வை: பெந்தெகொஸ்தேநாளில் தாங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்பண்ணப்பட்டது போன்ற நிகழ்வாக பேதுரு சாட்சியிடுகிறார்.
(அப்.11:15,16)
பெந்தெகொஸ்தேநாளில் தாங்கள் ஆவியினால் நிரப்பப்பட்டதை யோவேல் உறைத்த தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாக பேதுரு அன்று சாட்சியிட்டார். (அப்.2:15-21) அப்படியானால், "நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ..... ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்" என்கிற வாக்குத்தத்தம் (யோவேல் 2:28,29) பெந்தெகொஸ்தேநாளன்றே முற்றிலும் நிறைவேறிவிடவில்லை. அது சமாரியா (அப்.8:16,17), செசரியா (அப்.10:44-46), எபேசு (அப்.19:1-7) என தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது!
ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட ஆரம்பநாட்களைப் போலவே, பலநாடுகளை சேர்ந்த பலர் அறிந்திருந்த வேறுமொழிகளில் தேவனுடைய மகத்துவங்களைப் பேசுகிற (அப்.2:4-11), அடுத்தவர் அறிந்திருந்த பல பாஷைகளில் பேசி, தேவனைப் புகழுகிற (அப்.10:44,45), அந்நியபாஷைகளைப் பேசி, தீர்கதரிசனம் சொல்லுகிற
(அப்.19:6) வெளிப்படையான அடையாளங்களுடன் இன்றும் பரிசுத்தஆவியானவர் தமது ஜனங்களின்மேல் இறங்குகிறார் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
ஆகிலும் ஆவியானவரால் அபிஷேகிக்கப்படுகிற அனைவரும், அனைத்து சூழலிலும் அந்நியபாஷைகளில் பேசுவார்கள் அல்லது அந்நியபாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்று கட்டாயம் எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனில் ஆவியானவர் பல வரங்களை சபைக்கு பகிர்ந்தளிக்கத் துவங்கினப்பின்பு, எல்லாருக்கும் அந்நியபாஷைகளில் பேசும் அல்லது அந்நியபாஷைகளைப் பேசி, தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தை அளிக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்! (1கொரிந்.12:28-30)
ஆவியானவர் பொழிந்தருளப்படும்போது, கூடவே அந்நியபாஷைகளைப் பேசுகிற மற்றும் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரங்கள் கொடுக்கப்படுகிறவர்களிடத்தில் அந்த அடையாளங்களைக் காணலாம். ஆனால், பரிசுத்தஆவியைப் பெறுகிற அனைவரிடத்திலும் அந்த அடையாளத்தைக் காணவியலாது.
ஆகிலும், *எந்தவித வெளிப்படையான அடையாளமும் இல்லாமல் தாங்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டதாக விசுவாசிக்கிறவர்களில்: தீர்க்கதரிசனம் சொல்லுவது, சொப்பனங்களைக் காண்பது, தரிசனங்களைக் காண்பது போன்ற அனுபவங்கள் நிச்சயம் நேரிடவேண்டும்! (யோவேல் 2:28) அல்லது ஆவியின் வரங்களில் ஏதாகிலும் ஒன்று நிச்சயம் அவர்களில் செயல்படவேண்டும்! (1கொரிந்.12:1,7-11) எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஆவியின் கனிகளை உடையவர்களாகக் காணப்படவேண்டும்!* (மத்.7:20; கலாத்.5:22,23; எபேசி.5:9)
வெளிப்படையான அடையாளங்களோடு பரிசுத்தஆவியைப் பெற்றதாக சொல்லுகிறவரோ அல்லது வெளிப்படையாக எந்த அடையாளமும் இல்லாமல் பரிசுத்தஆவியைப் பெற்றதாக சொல்லுகிறவரோ, ஆவியின் கனியற்றவர்களில் பரிசுத்தஆவியானவர் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் காண்பது அரிது!!
(யோவான் 3:3)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==========================
பரிசுத்தஆவியை பெறுவதற்காக படிகள்!
============================
பரிசுத்தஆவியை பெறுவதற்கு தேவன் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார். அவைகளின் வழியாகத்தான் ஒருவர் பரிசுத்தஆவியானவரை பெற்றுக்கொள்ளமுடியும்!
1️⃣ விசுவாசம்!
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் நாம் வைக்கிற விசுவாசமே, நாம் பரிசுத்தஆவியைப் பெறுவதற்கான முதற்படியாகும்.
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் *தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.* வேதவாக்கியம் சொல்லுகிறபடி *என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ,* அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். *தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார்.* (யோவான் 7:38,39)
தம்மை விசுவாசிக்கிறவர்களின் ஆத்தும தாகத்தை பரிசுத்தஆவியானவராகிய ஜீவத்தண்ணீரால் தீர்க்கப்போவதாக இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணினார்.
"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, *விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்"* என்று பவுல் எபேசு சபையாரிடம் பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (எபேசி1:13)
தனது இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, கர்த்தராகிய இயேசுவை தன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று தனது இருதயத்திலே விசுவாசித்து இரட்சிக்கப்படுகிற ஒருவர் (ரோமர் 10:9,10), பரிசுத்தஆவியைப் பெறுகிறதற்கு தகுதியுள்ளவராகிறார். ஏனெனில், இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவராய் அவரை ஏற்றுக்கொண்டவர் தேவனுடைய பிள்ளையாகும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.
(யோவான் 1:12)
விசுவாசத்தினால் தேவனுடையப் பிள்ளைகளாகும் முதற்படியை கடந்தால்தான் ஒருவர் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராகமுடியும். தமது பிள்ளைகளுக்கே தேவன் தமது ஆவியை கொடுக்கிறார். (ரோமர் 8:14,15)
2️⃣ ஞானஸ்நானம்!
தாங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்கிற செய்தியை கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; *"சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்"* என்று கேட்ட யூதரைநோக்கி:
*"நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்"* என்றார் பேதுரு. (அப்.2:36-38)
பரிசுத்த ஆவியை வரமாகப் பெறுகிறதற்கு ஒருவர் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டியது அடுத்தப்படியாகும்.
*இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,* இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, *தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.* (மத்.3:16) ஜலத்தினால் ஞானஸ்தானம் பெற்றிருந்த 120 சீஷர்களே பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். (அப்.1:4,5,13-15; 2:1-4) பவுலும் (அப்.9:17,18) எபேசு சீஷர்களும் (அப்.19:5,6) ஞானஸ்நானம் பெற்றப்பின்பே பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.
பரிசுத்தஆவியைப் பெற விரும்புகிறவர்கள் ஞானஸ்நானம் என்கிற இரண்டாவது படியை கடக்கவேண்டியது அவசியம்!
3️⃣ ஜெபம்!
இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய பிள்ளைகளாகி, ஞானஸ்நானம் பெற்றவர்கள், தமது ஆவியை தங்களுக்கு தந்தருளவேண்டுமென்று பரமபிதாவை நோக்கி ஜெபிக்கவேண்டியது அவசியம்!
"நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: *கேளுங்கள்,* அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், *தேடுங்கள்,* அப்பொழுது கண்டடைவீர்கள், *தட்டுங்கள்,* அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
ஏனென்றால், *கேட்கிறவன் எவனும்* பெற்றுக்கொள்ளுகிறான், *தேடுகிறவன்* கண்டடைகிறான், *தட்டுகிறவனுக்குத்* திறக்கப்படும்.
உங்களில் *தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால்,* அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? *மீனைக் கேட்டால்* மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
அல்லது *முட்டையைக் கேட்டால்,* அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, *பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா"* என்று ஆண்டவர் சொல்லுகிறதை கவனிக்கவேண்டும். (லூக்கா 11:9-13)
தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பிதாவின் பரிசுத்தஆவியை அவரிடம் கேட்டுப் பெறவேண்டும் என்கிறதற்காகத்தான்: தன் தகப்பனிடத்தில் அப்பம், மீன் மற்றும் முட்டையை கேட்கிற பிள்ளையை உதாரணமாகக் காண்பிக்கிறார் ஆண்டவர்.
"ஒரு தகப்பன், தன் பிள்ளை தன்னிடம் கேட்டால்தான், அவனுக்கு அப்பத்தையும் மீனையும் முட்டையையும் கொடுப்பானா?" என்று நமக்கு கேள்வி எழலாம். கேட்பது பிள்ளைகளின் உரிமையும், கொடுப்பது தகப்பனின் கடமையும் ஆகும். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துவது, நாம் அவரிடம் உரிமையுடன் கேட்பதுதான்!
"ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, *இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில்,* வானம் திறக்கப்பட்டது, *பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார்"* என்று லூக்கா பதிவுசெய்திருக்கிறது கவனிக்கத்தக்கது. (லூக்கா 3:21,22) பிதாவினிடத்தில் கேட்டு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ள நமக்கு ஆலோசனை கொடுத்த நமது ஆண்டவரும்; ஞானஸ்நானம் பெற்ற பின்பு, ஜெபித்து பரிசுத்தஆவியைப் பெற்று நமக்கு மாதிரியைக் காண்பித்திருக்கிறார்!
பரிசுத்தஆவிக்காய் ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்களே பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்! (அப்.1:4,5,13-15; 2:1-4) ஜெபம்பண்ணுவது என்கிற மூன்றாவது படிக்கு வந்தவர்களே பரிசுத்தஆவியால் நிரப்பப்படமுடியும்!
*கொர்நேலியுவின் வீட்டில் கூடியிருந்தவர்கள் ஞானஸ்நானம் பெறுகிறதற்கு முன்பாகவே, பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டது ஒரு அரிதான நிகழ்வு.* (அப்.10:24,44,45) பேதுரு பரிசுத்தஆவியைக் குறித்தும் அவர்களுக்கு பிரசங்கித்திருக்கலாம். தங்களுக்கும் பரிசுத்தஆவி வேண்டும் என்று அவர்கள் தங்கள் மனதில் தேவனிடத்தில் வேண்டியிருக்கலாம். ஆகிலும், பரிசுத்தஆவியைப் பெற்றவுடனே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க பேதுரு கட்டளையிட்டது கவனிக்கப்படவேண்டியதாகும். (அப்.10:46-48)
பரிசுத்தஆவியை பெறுவதற்கு எவ்வளவுகாலம் ஆகும்?
ஒருவர் சீஷராகி ஞானஸ்நானம் பெற்று ஜெபிக்கிற அந்தநிமிஷத்திலிருந்து எப்போதுவேண்டுமானாலும் பரிசுத்தஆவியானவரைப் பெற்றுக்கொள்ளக்கூடும்!
*இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, கைரையேறி ஜெபித்தவுடனேயே அவர்மேல் பரிசுத்தஆவியானவர் வந்துவிட்டார்.* (லூக்கா 3:21,22)
பெந்தெகொஸ்தேநாளுக்குப் பிறகு பரிசுத்தஆவியானவர் தமது ஜனங்களை நிரப்ப அதிககாலம் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. எபேசு சீஷர்கள் ஞானஸ்நானம் பெற்றுகொண்டவுடன், பவுல் அவர்கள்மேல் கைகளைவைத்து ஜெபித்தபோது பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டார்கள். (அப்.19:1-6)
அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களாகக் குறிப்பிடப்படுகிறவர்கள் (அப்.2:38-41), சிறிதுகாலம் கழித்து பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டதாக அப்போஸ்தலர் நான்காம் அதிகாரத்தில் காணப்படுகிறது. (அப்.4:31) சமாரிய சீஷரும் ஞானஸ்நானம் பெற்ற சிலநாட்கள் கழித்தே பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டார்கள். (அப்.8:12-17)
*ஒருவர் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்று, ஜெபிக்கிற அந்தநிமிஷமே அவர் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு தகுதியுள்ளவராகிவிடுகிறார்.* இந்தநாட்களில் சில சபையார் மக்களை விசுவாசத்திற்குள் நடத்த இரண்டு ஆண்டுகள், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க நான்கு ஆண்டுகள், பரிசுத்தஆவிக்குள் நடத்த பத்து ஆண்டுகள் என்று அதிக காலதாமதம்பண்ணுகிறார்கள்.
சரியாக நடத்தப்பட்டால், ஒருவர் விசுவாசிக்கவும், ஞானஸ்நானம் பெறவும் ஒரேநாள் போதுமானது. (அப்.2:14-31) சிலர் ஜலத்தினால் பிறந்த அன்றே ஆவியினால் பிறக்கக்கூடும்!
(லூக்கா.3:21,22; அப்.19:5,6) சிலருக்கு ஜலத்தினால் பிறக்கிறதற்கும் ஆவியினால் பிறக்கிறதற்கும் சிலநாட்கள் இடைவெளி காணப்படலாம். (அப்.2:31 & 4:31; 8:12-17; 9:6-18) ஆனால், பலவருடம் இடைவெளி என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை.
*சரியாய் விசுவாசித்து, முறையாய் நானஸ்நானம் பெற்று, பரிசுத்தஆவியைக்காய் ஊக்கமாய் ஜெபித்தும், பல ஆண்டுகளாக தங்கள் பரிசுத்தஆவியை பெறவில்லை என்று பலர் ஆதங்கப்படுகின்றனர்.*
"அந்நிபாஷை அடையாளத்தோடு மட்டுமே பரிசுத்தஆவியானவர் வருவார்" என்று இவர்கள் நம்பப்பண்ணப்பட்டிருக்கிறபடியால், அந்நியபாஷை பேசாத தங்களில் ஆவியானவர் இல்லை என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
அந்நியபாஷை அடையாளத்தோடு அனைவரையும் ஆவியானவர் நிரப்பும் காலம் கடந்துவிட்டது என்பதையும், எவர்களை தேவன் அந்நியபாஷையில் பேசும் வரத்துடன் அபிஷேகிக்கிறாரோ, அவர்கள் மட்டுமே பரிசுத்தஆவியைப் பெறுகிறபொழுதும், பெற்றப்பின்பும் அந்நியபாஷையில் பேசமுடியும் என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். (1கொரிந்.12:10,28-30)
*அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்தஆவியைப் பெறாவிட்டாலும்: ஆவியின் கனிகொடுக்கிற (கலாத்.5:22,23), ஆவியின் பிற வரங்களில் ஏதாகிலும் ஒன்றை (1கொரிந்.12:8-10) பெற்றிருக்கிறவர்கள், தங்களில் பரிசுத்தஆவியானவர் வாசம்பண்ணுகிறதை நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்!!*
- இப்படிக்கு
[அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்ட ஊழியன்]
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
=============================
திருச்சபையை கட்டும் பணியில் பரிசுத்தஆவியானவர்!
========================
நம்மை தமது திருச்சபையாகக் கட்டும் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு (மத்.16:18), தேவனுடைய பரிசுத்தஆவியானவர் எப்படி உடன் பங்காளராக இருக்கிறார் என்பதை ஆராய்வோம்!
திருச்சபையை நாட்டும் பணியில் நடத்துகிறார்!
சகலஜாதிகளையும் தமது சீஷராக்க (திருச்சபையாக்க) உலகெங்கும் இயேசுகிறிஸ்து அனுப்புகிற அவரது சீஷர்களை (மத்.28:19,20), பரிசுத்தஆவியானவரே வழிநடத்துகிறார். (அப்.8:29,39,40; 10:19,20; 13:2,4; 16:6,7; 20:23)
உள்ளூரிலும், உள்நாட்டிலும், உலகம் முழுவதும்
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாயிருக்க நம்மை பலப்படுத்துகிறார்! (அப்.1:8; 2:32; 4:33; )
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்து பிரசங்கிக்கவைக்கிறார்! (யோவான் 14:26; 15:26; 16:13,14; அப்.4:31; 1கொரி.2:10-13)
கிறிஸ்துவை விசுவாசிக்கத் தூண்டுகிறார்!
சுவிசேஷத்தை கேட்கிறவர்கள் அதை விசுவாசிக்கத்தக்கதாக, சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களை பலப்படுத்தி, அவர்களுக்கு வரங்களை அளித்து, அவர்களைக்கொண்டு அற்புதங்களைச் செய்கிறார் பரிசுத்தஆவியானவர்! (மாற்கு 16:20; ரோமர் 15:18; எபிரே.2:4)
திருவசனத்தை கேட்கிறவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறார் கிருபையின் ஆவியாகிய பரிசுத்தஆவியானவர்! (1தெச.1:6; எபிரே.10:29)
மறுபிறப்பின் அனுபவத்திற்குள் நடத்துகிறார்!
புறம்பாக ஜலத்தினால் பிறந்தவர்களை உள்ளுக்குள் தம்மால் மறுபடியும் பிறக்கசெய்கிறார் பரிசுத்தஆவியானவர்! (யோவான் 3:3,5-8)
முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நாம் களைந்துபோட்டு,
நமது உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளச் செய்கிறார். (எபேசி.4:22-24)
இருதயத்தில் விருத்தசேதனம் செய்து (ரோமர் 2:29), உள்ளத்தை பாவமறக் கழுவி (1 கொரிந்.6:11), பரிசுத்தமாக்கி (ரோமர் 15:15; 2தெச.2:13; 1பேதுரு 1:2,22), நமக்குள் வாசமாயிருந்து, மாம்சத்துக்குட்பட்டவர்களாயிருந்த நம்மை ஆவிக்குட்பட்டவர்களாக்கி, நமது ஆவியை நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாய் இருக்கப்பண்ணுகிறார்.
(ரோமர் 8:9,10)
தேவனுடைய வாசஸ்தலமாகக் கட்டுகிறார்!
யூதர் மற்றும் பிறவினத்தாரின் தாகத்தைத்தீர்த்து,
(1கொரிந்.12:13),
இருதிறத்தாரையும் பிதாவினிடத்தில் சேர்த்து (எபேசி.2:18), திருச்சபைக்கு கண்காணிகளை நியமித்து (அப்.20:28), அவர்களைக்கொண்டு, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவைப்பற்றின உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் தேவஜனங்களை அவருடைய வாசஸ்தலமாக (திருச்சபையாக) கூட்டிக் கட்டுகிறார் பரிசுத்தஆவியானவர்! (எபேசி.2:20-22)
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தவர்களை
ஜீவனுள்ள கற்களைப்போல (இயேசுகிறிஸ்துவைப்போல) தமக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டுகிறார்! (1பேதுரு 2:4,5)
திருச்சபையின் துவக்கம், ஆக்கம் மற்றும் பெருக்கம் (அப்.9:31) எல்லாவற்றிலும் பரிசுத்தஆவியானவர் கிரியைசெய்கிறார்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
============================================
புதியமார்க்கத்தை புரியவைக்கும் பரிசுத்தஆவியானவர்!
===========================================
இருதயத்தின் பழைய முக்காட்டை எடுத்துப்போடுகிறவர்!
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் உண்மையில் கிறிஸ்துவைப் பற்றியே பேசுகின்றன என்பதை (யோவான் 1:45; ரோமர் 3:21-24) அறியமுடியாதபடிக்கு இருதயத்தை மூடியிருக்கும் அறியாமை என்னும் முக்காட்டை நீக்கிப்போடுகிறவர்! (2கொரி.3:14-17)
எழுத்திற்குரிய, கொல்லுகிற பழைய உடன்படிக்கையிலிருந்தும்; எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான, ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கிற, ஒழிந்துபோகிற மகிமையுடைய ஊழியத்திலிருந்தும் விடுவிக்கிறவர்! (2கொரி.3:6-9,17; ரோமர் 7:6; எபிரே.9:8)
தமது புதிய பிரமாணத்தின் மூலம் நியாயப்பிரமாணத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கிறவர்! (ரோமர் 8:1-4; கலாத்.5:18)
புதியமார்க்கத்தை புரியவைக்கிறவர்!
பழைய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று தெரியப்படுத்தியிருக்கிறார்! (எபிரே.9:8; 8:7)
முதலாம் கூடாரத்தில் செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவை என்பதையும், கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார் என்பதையும் புரியவைக்கிறார். (எபிரே.9:9-12; 8;1-6; 10:1-22)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==========================
அச்சாரமான ஆவியானவர்!
=============================
விசுவாசிகளாகிறவர்களுக்கு முத்திரையாக!
தங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளாகிற மாம்சமான யாவரையும் தமது வாக்குத்தத்தத்தின்படியே (யோவேல் 2:28-30) தேவன் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தஆவியால் முத்திரைபோடுகிறார். (எபேசி.1:13)
கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் என்பதற்கு அடையாளமாக!
கிறிஸ்துவுக்கு நாம் சொந்தமானவர்களாக இருக்கிறோம் என்பதற்கு பரிசுத்தஆவியானவரே ஆதாரமாக இருக்கிறார். (எபேசி.1:14)
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற நிச்சயத்தை ஆவியானவரே அளிக்கிறார். (ரோமர் 8:14-16; கலாத்.4:6)
மீட்புக்கு ஆதாரமாக!
நாம் மீட்புக்கு உரியவர்களாக இருக்கிறோம் என்பதற்கு பரிசுத்தஆவியானவரே சான்றாக அல்லது அடையாளமாக அல்லது ஆதாரமாக அல்லது உறுதிமொழி ஆவணமாக இருக்கிறார். (2 கொரிந்.1:22; 5:5; எபேசி.1:14; 4:30)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==================================
ஆவிக்குரிய ஜீவியத்தை ஆரம்பித்துவைக்கும் ஆவியானவர்!
=====================================
கிறிஸ்த ஜீவியத்தை துவக்கிவைக்கிறார்!
தமது செல்வாக்கினாலேயே (influence) நமது கிறிஸ்தவ ஜீவியத்தை ஆரம்பித்துவைக்கிறார் பரிசுத்தஆவியானவர். (கலாத்.3:3)
நாம் மாம்சத்தின்படி பிழைத்து சாகாதபடிக்கு, சரீரத்தின் செய்கைகளை (கலாத்.5:19-21) அழித்து, நாம் பிழைக்கிறதற்கு பரிசுத்தஆவியானவர் உதவுகிறார். (ரோமர் 8:13; கலாத்.5:25) மாம்ச இச்சையை நாம் நிறைவேற்றாதபடிக்கு, நம்மை தமக்கேற்படி நடந்துகொள்ளசெய்கிறார். (கலாத்.5:16) நாம் மாம்சத்தின் கிரியைகளை செய்யாதபடிக்கு அவைகளுக்கு விரோதமாக நமக்குள்ளிருந்து போராடுகிறார். (கலாத்.5:17)
நாம் ஆவியின்படி நடக்கிறதற்கு ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கவைக்கிறார். (ரோமர் 8:5,14)
உண்மையாய் ஆராதிக்க உதவுகிறார்!
தம்மை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள நம்மை நடத்துகிறவர் ஆவியாயிருக்கிற தேவனே! (யோவான் 4:23,24; பிலிப்.3:3)
நாம் நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, புத்தியுள்ள ஆராதனைசெய்ய நடத்துகிறார். (ரோமர் 12:1) அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்வதற்கு
(எபிரே.12:28) ஆதாரமாய் இருக்கிறார்.
ஜெபிக்க உதவுகிறார்!
நாம் எந்தச் சமயத்திலும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஜெபம்பண்ணி, விழித்திருக்கச் செய்கிறார் ஆவியானவர். (எபேசி.6:18: யூதா 1:20)
பாடுபடும் காலத்தில் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக தேவனுடைய சித்தத்தின்படி வேண்டுதல்செய்து, நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். (ரோமர் 8:17,18,26,27)
வேதம் வாசிக்க உதவுகிறார்!
வேதவாக்கியங்களை கொடுத்தவர் தேவனுடைய ஆவியானவரே! (2தீமோத்.3:16,17; எபேசி.6:17)
பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்
எல்லாவற்றையும் நமக்குப் போதித்து, ஆண்டவர் நமக்குச் சொன்ன எல்லாவற்றையும் நமக்கு நினைப்பூட்டுகிறார். (யோவான் 14:26)
சத்தியஆவியாகிய அவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிக்கிறார்.
(யோவான் 16:13)
எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிற ஆவியானவர், தேவனால் நமக்கு அருளப்பட்டவைகளை அறிவித்து,
ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்க நமக்கு போதிக்கிறார். (1கொரிந்.2:10-13)
சத்தியஆவியானவரே
சபையோடு பேசி எச்சரிக்கிறார். (எபிரே.3:7; வெளிப்.2:7,11,17,29; 3:6,13,22)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
================================
சாட்சிகளாய் இருக்க பலப்படுத்தும் ஆவியானவர்!
========================
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாய் இருக்க!
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு உள்ளூரிலும், உள்நாட்டிலும், உலகெங்கிலும் சாட்சிகளாய் இருக்க நம்மை பலப்படுத்துகிறார் பரிசுத்த ஆவியானவர்! (அப்.1:8; 5:32; ரோமர் 1:5)
நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்து, வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக தீங்கநுபவிக்க: நமக்குள் பயமுள்ள ஆவியாய் இராமல், பலமும் அன்பும் தெளிந்தபுத்தியுள்ள ஆவியாய் இருக்கிறார். (2தீமோத்.1:7,8)
இயேசுவைக்குறித்து ஊழியக்காரரை சாட்சியிடவைக்கும் தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறார். (வெளிப்.19:10)
கிறிஸ்தவ ஜீவியத்தில் சாட்சியாய் இருக்க!
நாம் உலகத்துக்குச் சிநேகிதராகி, தேவனுக்குப் பகைஞராகிவிடக்கூடாது என்பதில் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறார். (யோவான் 16:7-11)
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற ஆவியின் கனிகொடுக்கசெய்கிறார். (கலாத்.5:22,23)
சகல நற்குணமுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் நம்மை உருவாக்குகிறார். (எபேசி.5:9)
ஐக்கியத்தையும் உருக்கமுமான பட்சத்தையும் இரக்கங்களையும் நம்மில் உண்டாக்கி, ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாய் நம்மை இருக்கசெய்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து செயல்படவைக்கிறார். (பிலிப்.2:1,2)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==============================
தேற்றரவாளனாகிய சத்திய ஆவியானவர்!
===========================
நமக்குள்ளே வாசம்பண்ணி, என்றென்றைக்கும் நம்முடனேகூட இருந்து,
தம்மைப்போலவே நம்மை தேற்றுகிறதற்கு நமக்கு பிதாவானவர் தந்தருளும்படி இயேசுகிறிஸ்துவால் வேண்டிக்கொள்ளப்பட்டவர்! (யோவான் 14:16,17)
உபத்திரவக் காலத்தில் சபைகளுக்கு சமாதானத்தை அளித்து, தமது ஆறுதலோடு நடந்து பெருகப்பண்ணுகிறவர். (அப்.9:31; 8:1-3; 9:1,2,28-30)
உலகம் துன்பப்படுத்தி, புறம்பாக்கும்போது சந்தோஷத்தினால் நிரப்புகிறவர். (அப்.13:50-52)
புசிப்பும் குடிப்புமாகிய உலகம் தராத சந்தோஷத்தை நம் உள்ளத்தில் உண்டாக்குகிறவர். (ரோமர் 14:17)
கர்த்தருக்குள் மரிக்கிறவர்களுக்கு இளைப்பாறுதலை நிச்சயப்படுத்துகிறவர். (வெளி.14:13)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
=========================
ஊழியத்தில் நடத்தும் ஆவியானவர்!
==================================
ஊழியத்திற்கு அழைக்கிறார். (அப்.13:2)
ஊழியத்திற்கு அனுப்புகிறார்! (அப்.11:12; 13:4)
ஊழியத்தில் நடத்துகிறார்! (அப்.8:29,39,40; 16:6,7)
ஊழியத்திற்கு செல்லவேண்டிய, சுவிசேஷத்தை சொல்லவேண்டிய இடத்தை தேர்வுசெய்கிறார். (அப்.16:6,7)
இயேசுகிறிஸ்துவைகுறித்து பிரசங்கிக்கவைக்கிறார். (அப்.4:8-12)
சுவிசேஷத்தைக் கேட்போரை அதற்கு கீழ்ப்படியப்பண்ணுகிறதில் பெரும்பங்காற்றுகிறார். (ரோமர் 15:18; 1தெச.1:5)
இயேசுகிறிஸ்துவினிமித்தம் மனுஷர் நம்மை அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது: நாம் பேசவேண்டுவதை அந்நேரத்தில் நமக்கு அருளி, நம்மிலிருந்து பேசுகிறார். (மத்.10:18-20)
மிகுந்த உபத்திரவத்திலும் திருவசனத்தை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். (1தெச.1:6)
தேவனுடைய சபையை மேய்ப்பதற்கு கண்காணிகளை ஏற்படுத்துகிறார். (அப்.20:28; எபேசி.4:11-13)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
=============================
வரங்களை அளிக்கும் ஆவியானவர்!
=============================
மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்தஆவியானவரே முதலாவது வரமாகக் கொடுக்கப்படுகிறார். (அப்.2:38)
தேவன் தமது ஆவியினாலேயே நாம் சொப்பனங்களையும், தரிசனங்களையும் காணும்படிசெய்கிறார். (யோவேல் 2:28)
ஆவியானவரே தமது சித்தத்தின்படி ஒருவருக்கு ஞானத்தைப் போதிக்கும் வசனம் (ரோமர் 12:7), வேறொருவருக்கு அறிவை உணர்த்தும் வசனம், வேறொருவருக்கு விசுவாசம், வேறொருவருக்கு குணமாக்குதல், வேறொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தி, வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தல் (யோவேல் 2:28; ரோமர் 12:6), வேறொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறிதல், வேறொருவருக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதல் (அப்.2:4; 10:44,45; 19:6; 1கொரி.14:2), வேறொருவருக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் போன்ற ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்துகொடுக்கிறார். (1கொரிந்.12:8-11; எபிரே.2:4)
சிலருக்கு (பணிவிடை) ஊழியஞ்செய்கிற, சிலருக்கு புத்திசொல்லுகிற, சிலருக்கு வஞ்சனையில்லாமல் பகிர்ந்துகொடுக்கிற, சிலருக்கு முதலாளியாயிருக்கிற (நிர்வாகஞ்செய்கிற), சிலருக்கு (பாதிக்கப்பட்டவர்களுக்கு) உற்சாகமாய் இரக்கஞ்செய்கிற கிருபை வரங்களை அளிக்கிறார். (ரோமர் 12:6-8)
சிலர் அப்போஸ்தலராகவும், சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் சுவிசேஷகராகவும், சிலர் மேய்ப்பராகவும், போதகராகவும் இருப்பதற்கான ஊழியவரங்களை அளிக்கிறார். (எபேசி.4:7,8,13)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
===================================
மறுவாழ்வுக்கு மறுரூபப்படுத்தும் ஆவியானவர்!
===============================================
மனதை மறுரூபமாக்குகிறார்!
நம்மெல்லாரையும் கர்த்தருடைய (உள்ளான) மகிமையின் சாயலுக்கு ஆவியாயிருக்கிற கர்த்தர் மறுரூபப்படுத்துகிறார். (2கொரிந்.3:18)
முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நாம் களைந்துபோட்டு, நமது உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள உதவுகிறார். (எபேசி.4:22-24; தீத்து 3:5; கலாத்.5:17; ரோமர் 8:13)
மறுவாழ்வுக்கு ஆயத்தப்படுத்துகிறார்!
தாம் நமக்கு பரலோகத்திலே கட்டின கைவேலையல்லாத நித்திய வீட்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்ததும் தேவனால், அதற்கு அச்சாரமாக (ஆதாரமாக) தந்தருளப்பட்டிருக்கிறார். (2கொரிந்.5:5; எபேசி.1:14; 4:30)
நியாயத்தீர்ப்புநாளில் நீதிகிடைக்குமென்கிற நம்பிக்கையை ஆவியானவரே நமக்கு கொடுக்கிறார். (கலாத்.5:5)
உயிர்த்தெழச்செய்யப்போகிறார்!
நம்மில் வாசமாயிருக்கிற, கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின, தம்முடைய ஆவியினாலேயே சாவுக்கேதுவான நமது சரீரங்களை தேவன் உயிர்ப்பிக்கப்போகிறார். (ரோமர் 8:11)
அழிவுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை அழிவில்லாததாய்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை மகிமையுள்ளதாய்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை பலமுள்ளதாய்;
ஜென்மசரீரத்தை ஆவிக்குரிய சரீரமாய் பரிசுத்தஆவியானவரைக்கொண்டே தேவன் எழுப்பப்போகிறார்.
(1கொரிந்.15:42- 44)
நாமெல்லாரும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, பரிசுத்தஆவியானவராலேயே மறுரூபமாக்கப்படப்போகிறோம். (1கொரிந்.15:51,52)
தேவனுடைய ஊழியனும் உங்கள் சகோதரனுமான
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
========================================
பிரதரன் சபையார், "நாம் இரட்சிக்கப்படும்போதே பரிசுத்தஆவியானவர் நமக்குள் வந்துவிடுகிறார். ஆகையால், பரிசுத்தஆவியானவர் நமக்குள் வரும்படி நாம் வேண்டிக்கொள்ளத்தேவையில்லை" என்கிறார்களே?
============================
"நாம் இரட்சிக்கப்படும்போதே பரிசுத்தஆவியானவர் நமக்குள் வந்துவிடுகிறார்" என்று பிரதரன் சபையில் மட்டுமல்ல; பிரதானப்பிரிவு மற்றும் பாப்திஸ்து சபைகளிலும் அப்படித்தான் போதிக்கப்படுகின்றன.
*"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்"*
எபேசி.1:13
என்கிற வசனத்தையே அவர்கள் தங்கள் போதனைக்கு ஆதாரமாகக் காண்பிக்கின்றனர்.
இந்த வசனத்தைக் குறித்த அவர்களது புரிதல் வேத அடிப்படையிலானது அல்ல!
*"நீங்கள் எப்போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் கிறிஸ்துவுக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்?"* என்று எபேசு சபையாரை அன்று யாராகிலும் கேட்டிருப்பாரானால், *"எங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது"* என்பதே அவர்களுடைய பதிலாக இருந்திருக்கும்.
*"நீங்கள் எப்படி பரிசுத்தஆவியால் முத்திரைபோடப்பட்டீர்கள்?"* என்று கேட்டிருப்பாரானால், எபேசு சபையாரின் பதில் என்னவாக இருந்திருக்கும் தெரியுமா?
"ஏறக்குறையப் பன்னிரண்டு சீஷர்களான நாங்கள் விசுவாசிகளாயிருந்தும் பரிசுத்தஆவியைபப் பெறாமல் இருந்தோம். எபேசுவுக்கு வந்த பவுல் ஐயா எங்களைக்கண்டு;
*"நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா?"* என்று கேட்டார். அதற்கு நாங்கள், *"பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை"* என்றோம். அப்பொழுது பவுல் ஐயா: *"அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?"* என்று கேட்டார். அதற்கு நாங்கள், *"யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்"* என்றோம். அப்பொழுது பவுல் ஐயா: *'யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே?"* என்றார். அதைக் கேட்டபோது நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றோம். பிறகு *பவுல் ஐயா எங்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி எங்கள்மேல் வந்தார்.* அப்பொழுது நாங்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்கதரிசனஞ் சொன்னோம்" (அப்.19:6) என்று எபேசு சபையில் முதன்முதலாக பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் பதில் அளித்திருப்பார்கள். (அப்.19:1-7)
*"நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அந்தநிமிஷமே பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள்"* என்று எபேசியர் 1:13ல் பவுல் எபேசு சபையாரிடம் சொல்லியிருப்பாரானால், விசுவாசிகளானபோதே பரிசுத்தஆவியை பெற்றுவிட்ட அவர்களை, *"நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா?"* என்று எப்படி கேட்டிருக்கமுடியும்?
*"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்"* என்று எழுதின பவுலால்
(எபேசி.1:13), *"நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா?"* என்று கேட்கமுடியுமா?
எபேசு சீஷர்கள் விசுவாசிகளாகி பல மாதங்கள் அல்லது சில வருடங்களாகியும் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கவில்லை! பரிசுத்தஆவி உண்டென்பதை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை!
அவர்கள் யோவான்ஸ்நானனிடத்தில் ஞானஸ்நானம் பெற்று, தனக்குப்பின் வருகிறவராக யோவான்ஸ்நானன் அறிவித்த மேசியாவுக்காகக் காத்திருந்தவர்கள்.
பவுல் அவர்களை சந்திக்கும்வரை மேசியா வந்து மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு சென்று பரிசுத்தஆவியை அனுப்பியிருக்கிறதை அறியாதிருந்தார்கள்.
பவுல் அவர்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தை சரியாக போதித்து, கிறிஸ்துதான் அவர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா என்பதை அவர்களுக்கு காண்பித்து, அவர்களை சரியான விசுவாசத்திற்குள் நடத்தி, ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார். (அப்.19:4,5; எபேசி.1:13)
*அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறும்போதே அவர்களுக்குள் பரிசுத்தஆவியானவர் வந்துவிட்டதாக பவுல் நம்புகிறவராக இருந்திருந்தால், பரிசுத்தஆவி அவர்கள்மேல் வரும்படிக்கு நிச்சயம் அவர்கள்மேல் கைகளை வைத்திருக்கமாட்டார்.*
இப்படியிருக்க, *"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்"* என்று பவுல் எழுதுகிறதை
(எபேசி.1:13): *தாங்கள் பவுலின்மூலம் தங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளாகி, ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவர் தங்கள்மேல் கைகளை வைத்தபோது தங்கள்மேல் பரிசுத்தஆவி வந்ததைப்பற்றி சொல்லுகிறதாகவே* எபேசு சபையார் எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருவர் விசுவாசிக்கும்போதே பரிசுத்தஆவியானவர் அவருக்குள் வந்துவிடுகிறதில்லை என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.
ஏனெனில், தான் இயேசுகிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட மூன்றாவதுநாள், ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டப்பின்பே பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டது அவருக்கு தெரியும். (அப்.9:6-18)
"மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: *கேளுங்கள்,* அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், *தேடுங்கள்,* அப்பொழுது கண்டடைவீர்கள், *தட்டுங்கள்,* அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், *கேட்கிறவன்* எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், *தேடுகிறவன்* கண்டடைகிறான், *தட்டுகிறவனுக்குத்* திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் *அப்பங்கேட்டால்,* அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? *மீனைக் கேட்டால்* மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது *முட்டையைக் கேட்டால்,* அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, *பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா* (லூக்கா 11:9-13) என்று ஆண்டவர் சொல்லுகிறதிலிருந்தே, பரமபிதாவினிடத்தில் கேட்டுத்தான் பரிசுத்தஆவியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது விளங்குகிறதல்லவா?
*"நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்"* என்று பேதுரு சொன்னபடி (அப். 2:38), அவருடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு அன்றையத்தினம் ஞானஸ்நானம் பெற்ற ஏறக்குறைய மூவாயிரம்பேரும் (அப் 2:41), அநுதினமும் சபையில் கர்த்தரால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரட்சிக்கப்பட்டவர்களும் (அப்.2:47) ஆண்டவரை ஏற்றுக்கொண்டபோதே பரிசுத்தஆவியைப் பெற்றிருப்பார்களானால், *அவர்கள் மீண்டும் பரிசுத்தஆவியால் நிரப்பப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காதே?* (அப்.4:31)
பிலிப்புவின்மூலம் நற்செய்தியைக்கேட்டு, கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோதே சமாரியர் பரிசுத்தஆவியைப் பெற்றிருந்தார்களானால் (அப்.8:5-13), பேதுருவும் யோவானும் வந்து, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தப்பின்பு அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றிருக்கவேண்டியிருந்திருக்காதே? (அப்.8:16,17)
*பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே வசனத்தைக்கேட்ட கொர்நேலியுவின் வீட்டார், உறவின்முறையார், விசேஷித்த சிநேதிதர் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவிட்டார்!* (அப்10:24-44) *அதற்குப் பிறகுதான் அவர்கள் ஞானஸ்நானமே பெற்றார்கள்.* (அப்.10;47,48)
இவ்விதமான அனுபவங்கள் சிலருக்கு நேரிடலாம். ஆகிலும், "நாங்கள் ஆண்டவருடைய வார்த்தையை கேட்கும்போதே பரிசுத்தஆவியானவர் எங்களுக்குள் வந்துவிட்டார்", "நாங்கள் ஆண்டவரை விசுவாசித்தபோதே ஆவியானவர் எங்களுக்குள் வந்துவிட்டார்", "நாங்கள் ஞானஸ்நானம் பெற்றபோதே ஆவியானவர் எங்களுக்குள் வந்துவிட்டார்" என்கிறவர்கள்: *கொர்நேலியுவின் வீட்டார், நண்பர், உறவினர் வசனத்தை கேட்கும்போதே பரிசுத்தஆவியைப் பெற்றபோது, பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழ்ந்தது* (அப்.10:45) போன்ற அநுபவங்களால் அதை நிரூபித்தார்களா என்று கேட்கவேண்டும்!
இரட்சிக்கப்பட்ட ஒருவர், தன்னை தமது ஆவியினால் நிரப்பும்படி வேண்டிக்ககொண்ட நிமிஷத்திலிருந்து எந்தவேளையிலும் அவரை தமது ஆவியினால் நிரப்ப பரமபிதா உண்மையுள்ளவராக இருக்கிறார்! ஆனால், "அவரிடத்தில் வேண்டிக்கொள்ளாமலேயே நமக்கு பரிசுத்தஆவியை கொடுத்துவிடுவார்" என்பது வேதவிதிமுறைக்கு எதிரானதாகும்!!
எந்த ஒரு உணர்ச்சியோ அல்லது வெளிப்படையான எந்த ஒரு அடையாளமோ இல்லாமல் பரிசுத்தஆவியானவர் தங்களுக்கும் ஏற்கனவே வந்துவிட்டதாக விசுவாசிக்கிறவர்கள், உண்மையில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி வசன அடிப்படையில் அறிந்திருக்கவில்லை!
அப்படியே, *"அந்நியபாஷை அடையாளத்தோடு நாங்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டோம்"* என்று பெருமையுடன் கூறிக்கொள்ளுகிறவர்கள், தங்களுக்குள் வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவரை (யோவான் 14:16,17): *"இப்போ வாரும், இறங்கிவாரும்"* என்று வாராவாரம் அழைப்பது; அவர்களும் பரிசுத்தஆவியானவரைப்பற்றிய சத்தியத்தை முறையாய் அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this