Type Here to Get Search Results !

Biography of Missionaries | Teresa of Avila | ஆவிலா வின் தெரேசா வாழ்க்கை சரித்திரம் | திருச்சபையின் செல்ல மகள் | Jesus Sam

=====================
The Daughters of the Church
திருச்சபையின் செல்ல மகள்கள்
======================
Teresa of Avila
ஆவிலா வின் தெரேசா (1515-82)
====================
ஆரம்பகால வாழ்க்கை:
    தெரசா டி செபெடா (Teresa de Cepeda) மார்ச் 28, 1515 இல், ஸ்பெயின் நாட்டில் அவிலா நகரில் பக்திமிக்க, செல்வ செழிப்பான ரோமன் கத்தோலிக்க பெற்றோருக்கு மகளாக பிறந்தாள். இவர்களுடைய பெற்றோர் சிறுவயதில் இருந்தே ஜெப வாழ்க்கையில் உற்சாகப்படுத்தினார்கள். தெரசா சிறு வயதிலிருந்தே எல்லா புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இரத்த சாட்சியாக மரித்தவர்களையும் குறித்து வாசித்து, மிஷனெரி தரிசனம் கொண்டவராக இருந்தாள். 

பள்ளி வாழ்க்கை:
    பள்ளி பருவத்தில் தெரேசா, கடவுளின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு, தன்னுடைய நேரத்தை ஜெபதில் செலவிட்டும், ஏழைகளுக்கு உணவு கொடுத்ததும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மகிழ்ச்சி அடைந்தாள். இந்நிலையில் தெரேசாவுக்கு பதின்மூன்று வயதாக இருந்தபோது, 1529 இல் அவரது தாய் மரித்துப்போகவே, தாங்க முடியாத துக்கத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் மூலம் மரி அன்னையை தன்னுடைய ஆன்மீகத் தாயாக ஏற்றுக்கொண்டு ஜெபத்தில் உறுதியாய் இருக்கச் செய்தது.

இளம் பருவ போராட்டம்:
    தேரேசா 16 வயதாக இருந்தபோது அவளது தந்தை அவிலா நகரத்தில் இருந்த புனித அகஸ்டினிய கன்னியாஸ்திரி மடத்திற்கு மேற்படிப்பு கல்வியை கற்றுக்கொள்ள அனுப்பினார். இங்கு உலக காரியங்களில் மிகவும் ஆர்வம் காட்டி, தேவை இல்லாத நண்பர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தாள். இதனால் இவளுடைய ஜெப வாழ்கை குறைய ஆரம்பித்தது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியடைந்து, நிம்மதி இல்லாமல், அடிக்கடி குற்ற உணர்ச்சிக்கு அடைந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றம் அடைய ஆரம்பித்தாள்.

ஆவிக்குரிய போராட்டம்:
    ஆவிலா வின் துறவியர் மடத்தில் தெரசாவுடன் 180 பெண் பிள்ளைகளும் கல்வி பயின்றுகொண்டு இருந்தார்கள். இங்கு இடநெருக்கடி அதிகமாக இருந்ததால் தெரசாவால் சுதந்தரமாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் ஒரு பக்கத்தில் கடவுளின் அழைப்பு தெரசாவை இழுத்தது; மறுபுறத்தில் இந்த உலகத்தின் ஆசாபாசம் கவர்ந்து இழுத்தது. இதனால் மன அமைதி இல்லாமல், போராடிக்கொண்டு, குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி, மற்றவர்களிடம் இருந்து, தனிமை படுத்திகொண்டு, தனக்குதானே தண்டனையையும் கொடுத்துக் கொண்டாள். இதனால் தெரசாவின் சரீரத்தில் இரத்த கசிவுகள் பல இடங்களில் உண்டாயிற்று.

கிறிஸ்துவுக்குள்ளான மனமாற்றம்:
    இந்த சூழ்நிலையில் புனித அகஸ்டின் எழுதிய ஒப்புதல் வாக்குமூலம் (Confessions) என்ற புத்தகம் கண்ணில் தென்படவே அதை வாசிக்க தொடங்கிய போது அங்கே தன்னுடைய நிலையை போலவே வாழ்ந்து கொண்டு இருந்த அகஸ்டின் அவர்களின் வாழ்க்கையும் ஒன்றாகவே இருப்பதை உணர்ந்தாள். இறுதியில் கடவுளோடு நெருங்கி வரும்போது பரிசுத்தமாக வாழ முடியும் என்பதையும் அப்புத்தகத்தில் கண்டு ஆறுதல் அடைந்தாள். இது தெரசாவின் வாழ்க்கையில் பெரிய மனமாற்றத்தை கொண்டு வந்தது. இப்போது தெரசா ஜெபிக்க ஆரம்பித்தாள், அப்போது இயேசு கிறிஸ்துவானவர் தெரசாவை தன் செல்ல மகளாக ஏற்றுக்கொண்டு அவள் மீது அன்பை அருள்மாரி பொழிந்ததினால் தன்னை முழுவதுமாக இயேசுவுக்கு அற்பணித்தாள். இப்போது தனக்குள்ளே புதிய பெலனை பெற்றுக்கொண்டதாக தெரசா உணர்ந்தாள்.

கன்னியாஸ்திரி:
    இயல்பாகவே தெரசா ஒரு அமைதியான பெண் அல்ல; படுசுட்டியாக இருந்தாலும், அவளது அன்பான குணாதிசயமும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வாஞ்சையும் அவளுடைய வாழ்க்கையில் நெருக்கமாக இருந்த அநேகரை ஈர்த்தது. இந்நிலையில் தெரேசாவிற்க்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை விரும்பினார். ஆனால் 21 வயதான தெரசா, தன்னுயுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, கன்னியாஸ்திரியாக வாழ விரும்பினார். ஆகவே அங்கு இருந்த கார்மலைட் கன்னியாஸ்திரி மடத்தில் துறவியாக சபதம் எடுத்து, கன்னியாஸ்திரியாக தன்னை அற்பணித்தாள்.

நோயோடு போராட்டம்:
    கன்னியாஸ்திரி ஆன சில காலத்திற்குள்ளாகவே தெரசா கடுமையான மலேரியா நோயால் பாதிக்கப்பட்டார். இது அவருடைய சரீரத்தில் கடுமையான பலவீனத்தை ஏற்படுத்தியதால் ஒரு வருடம் படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் தெரசாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரிக்கும் தருவாயில் இருந்தபோது அற்புதமாக சுகம் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் சுகம் பெற்று எழுந்த தெரேசா, தன்னுடைய நேரத்தை ஜெபத்தில் இன்னும் அதிகமாக கடவுளோடு செலவிட்டாள். இப்படியாக சுமார் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

தெய்வீக தரிசனங்கள்:
    ஸ்பெயின் நாட்டில் ஆவிலா நகரில் தெரசா அம்மையார் கடவுளுக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும் சேவை செய்து கொண்டு இருக்கும் நேர்த்தில் ஜெபத்தில் தரித்து இருக்கும்போது கடவுளின் தெய்வீக தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும், மெய் உணர்வுகளையும் பெற ஆரம்பித்தார்கள். இந்நிலையில் ஒரு நாள், தெரசா அம்மையார் பாடல்களைபாடி, ஜெபத்தில் நீண்ட நேரம் செலவிட்டு, கடவுளிடம் மன்றாடிக்கொண்டு இருந்தபோது திடீரென்று அங்கு பெரிய வெளிச்சம் தோன்றியதை கண்டு பேரானந்தம் அடைந்தார்கள். அப்பொழுது இனிமேல் நீ மனிதர்களோடு மாத்திரம் அல்ல; தேவதூதர்களோடும் பேசுவாய் என்று கடவுள் கூறும் சத்தத்தையும் கேட்டார்கள். இந்த அனுபவம்அவர்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாததாக இருந்தது. கிபி 16 ஆம் நூற்றாண்டில் தரிசனங்கள் பார்ப்பதும், மெய்யுணர்வு அனுபவங்கள் (Mystical Experiences) அடைவதையும் திருச்சபையில் உள்ள பலரால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. இவர்களை திருச்சபையானது ஆபத்தானவர்களாக கருதியது, ஏனெனில் இவர்கள் கூறும் செய்தி துர்உபதேசம் என்றும், சாத்தான் கொடுக்கும் அனுபவங்களாக கருதப்பட்டு வந்தது. ஆகவே இவர்களிடம் பிசாசுகள் குடியிருப்பதாக கூறி (Witch Hunt), அவர்களை கைது செய்து, உயிருடன் எரித்துக் கொன்று விடுவார்கள்.

மெய்யுணர்வு அனுபவங்கள் (Mystical Experiences):
    கடவுளின் அன்பினாலும், தெய்வீக சிந்தனையாலும் மிகவும் அதிகம் அதிகமாய் நிரம்பியிருக்கும் வேளைகளில் தெரேசா அம்மையார் சிலநேரங்களில் மயக்க நிலையை அடைந்தார்கள் இது கன்னியாஸ்திரி மடங்களில் இருந்தவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணியது. ஆகவே தெரசா அம்மையார் தனக்கு மெய்யுணர்வு அனுபவங்கள் தோன்றும்போது, அதை முழு பலத்தோடு எதிர்க்க முயன்று, ரகசியமாக வைக்க முயன்றார், ஆனால் அவரது இந்த முயற்சி வீணானது. எப்படியெனில் 1559 ஆம் ஆண்டு ஜூன் 29 இல் புனித பேதுரு திருநாள் அன்று, இயேசு கிறிஸ்து உடல் தோற்றத்தில் தோன்றி, தரிசனம் கொடுத்ததாக எல்லோருக்கும் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் சில கன்னியாஸ்திரிகள், தெரசாவுக்கு பிசாசுகள் பிடித்திருப்பதாக கருதி, அவளிடம் இருக்கும் பிசாசுகளை துரத்தவேண்டும் என்று கத்தோலிக்க மதகுருமார்களிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தெரசாவை பரிசோதித்த மனநலமருத்துவர்கள், காக்க வலிப்பு நோயால் (lobe epilepsy) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகித்தார்கள்.

சீர்திருத்தவாதி:
    கிபி 16 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், சீர்திருத்த திருச்சபை எழுச்சியின் காரணமாக மத்திய ஐரோப்பாவில் பல ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பிரிவினைகள் எற்பட்டது. ஆகவே தெரேசா அம்மையாரும் ஸ்பெயின் நாட்டில் இருந்த கார்மலைட் கன்னியாஸ்திரிகள் மடங்கள் எல்லாவற்றிலும் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சிகள் எடுத்தார்கள். 1558 ஆம் ஆண்டில், தனது 43 வயதில், தெரசா அம்மையார் எளிமையான வாழ்க்கை, கடவுளுக்கு பயந்த வாழ்க்கை, தனி மனித ஒழுக்கம், ஜெபத்தில் அதிக நேரம் செலவிடவும் எல்லோரையும் ஊக்கப் படுத்தினார்கள். ஆகவே எல்லா கன்னியாஸ்திரிகளும் தெரசா அம்மையாரை மிகவும் மதித்தார்கள், அதற்கு ஏற்றார்போல் அம்மையாரும் நடந்து கொண்டார்கள். இந்நிலையில் 1562 இல் போப்பாண்டவர் பயஸ் IV இன் அனுமதியுடன், செயின்ட் ஜோசப் என்ற பெயரில் முதலாவது மடத்தையும் பள்ளியையும் நிறுவினார்கள். ஆரம்பத்தில் இதை நடத்துவதற்கு நிதி சிக்கல்கள் இருந்தாலும், தெரசா அம்மையார் எல்லோரையும் தொடர்பு கொண்டு உதவி செய்ய கேட்டுக் கொண்டதால் அநேகர் முன்வந்து நிதிஉதவி செய்தார்கள்.

இலக்கியப் படைப்புகள்:
    தெரேசா அம்மையாரின் சிந்தனைமிக்க எழுத்துக்களில் வெளியே வந்த ஆவிக்குரிய புத்தகங்கள், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாசிக்கப்பட்டன. இவர் எழுதிய The Way of Perfection (1583), The Interior Castle (1588), Spiritual Relations, Exclamations of the Soul to God (1588), புத்தகங்கள் தலைசிறந்த படைப்புகளாக இருந்து வருகின்றன. தெரேசா அம்மையார் கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்கி பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.

ஊழிய எதிர்ப்பு:
    திருச்சபையில் மாற்றங்களை கொண்டுவர முயன்ற மற்ற கன்னியாஸ்திரிகளைப் போலவே, தெரேசா அம்மையாரும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார். இந்நிலையில் போப்பாண்டவர் அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் தெரசா அம்மையாரை வீணாக அலைந்து திரிபவர் என்றும், திருச்சபைக்கு கீழ்ப்படியாதவரும், பிடிவாத குணம் கொண்ட பெண்மணி என்றும், திருச்சபையில் பெண்கள் போதிக்கப் கூடாது என்று எழுதியுள்ள பவுலின் வார்த்தைக்கு கட்டுப்படாதவள் என்றும் கடுமையாக சாடினார். ஆகவே தனது சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் அனைத்தும் கத்தோலிக்க தலைவர்களால் தடைபடும் என்று தெரேசா பயந்தார். இந்நிலையில்1562 இல் தெரசா அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட சில மடங்கள் பண உதவி கிடைக்காமல் மூடப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு தெரசா அம்மையார் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி, அவரும், அவரது ஆதரவாளர்களும் ஆவிலா துறவியர் மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆயினும் தெரசா அம்மையார் துணிவுடன் இந்த கட்டளைகளுக்கு கீழ்படிந்தார்கள்.

போப்பாண்டவர் ஆதரவு:
    ரோமன் கத்தோலிக்க போப்பாண்டவர் கிரிகோரி XIII மார்ச் 1563 இல், தெரசா அம்மையார் ஏற்படுத்திய மடங்களுக்கும் பள்ளிகளுக்கும் நிதிஉதவி கொடுக்க ஒரு ஆணையைப் பிறப்பித்தார். மேலும் அதிகபடியான கார்மலைட் மிஷனெரி மடங்களை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். தெரேசா அம்மையாரின் சரீரம் பலவீனமான இருந்த சூழ்நிலையிலும், இரண்டுமுறை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினாலுல், பெரும் பாடுகளுக்கு மத்தியில் ஸ்பெயின் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குகான 17 துறவியர் மடங்களையும் பள்ளிகளையும் நிறுவி சீர்திருத்தினார். இதனால் கத்தோலிக்க திருச்சபையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நடைபெற்றன.

தெரேசா அம்மையாரின் மரணம்:
    தெரேசா அம்மையார் தன் பலவீனத்தின் மத்தியில் புதிய துறவியர் மடம் நிறுவுவதற்காக ஸ்பெயின் நாட்டின் பர்கோஸ் (Burgos) நகரில் இருந்து ஆல்பா டி டார்ம்ஸ் (Alba de Tormes) போகும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது “என் ஆண்டவரே, இது, நான் இப்பூமியில் இருந்து உம்மிடம் வரும் நேரம் இது.. ஓ என் ஆண்டவரே, என் துணையாளரே, நான் ஏங்கிக் கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. நான் உம்மை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, உமது சித்தம் மாத்திரம் என் வாழ்க்கையில் நிறைவேறட்டும் என்று கூறியவாரே அக்டோபர் 4, 1582 இல் தனது 67 வயதில் தெரேசா அம்மையார் இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்தார். பின்பு ஸ்பெயின் நாட்டின் ஆவிலா நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

அம்மையாரின் புகழ்:
    தெரேசா அம்மையார் மரித்த பிறகுதான் இவருடைய புகழ், ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பித்தது. தெரேசா அம்மையார் மரணமடைந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1622 ஆம் ஆண்டில், போப்பாண்டவர் கிரிகோரி XV என்பவரால் புனிதராக திருநிலைபடுத்தப்பட்டார். இவர் ஸ்பெயின் நாட்டின் தேசிய புரவலர் துறவிகளில் பட்டியலில் ஒருவரானாள். இதே பட்டதை இதற்க்கு முன்பு அப்போஸ்தலனாகிய யாக்கோபுக்கு வழக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செப்டம்பர் 27, 1970 இல் போப்பாண்டவர் பவுல் VI, தெரசா அம்மையாரின் இறையியல் எழுத்துக்களுக்காக கத்தோலிக்க மதத்தின் முதல் பெண் அறிவர் (Female Doctor of the Church) என்று அறிவித்து, கனப்படுதினார்.

பார் போற்றும் புனித பெண்:
    ஸ்பெயின் நாட்டின் ஆவிலா வின் புனிதரரான தெரசா அம்மையார், கிறிஸ்தவ மெய்யுணர்வு (Mysticism) ஆன்மீகவாதிகளில் மிகச்சிறந்த ஒருவர் ஆவார். இவர் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் ஒரு பெண்ணாக இருந்து, சிறந்த சிந்தனையாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் இறையியலாளராகவும் விளங்கினார். இவர் ஏற்படுத்திய சீர்திருத்த முயற்சிகளில் மற்றவர்களால் பலமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார்கள், தவறாக மதிப்பிடப்பட்டார்கள், கடுமையாக எதிர்க்கப்பட்டார்கள். ஆனாலும் நோய், பலவீனம், போராட்டங்கள் ஆகிய தாக்குதலுக்கு உள்ளானாலும் தைரியமாக இருந்து, கடவுள் மீது கொண்ட விசுவாசத்தில் இறுதிவரை போராடி ஜெயித்துக் காண்பித்தார்கள். தெரேசா அம்மையார் ஒரு ஜெப வீராங்கனையாக இருந்து கடவுளுக்கும், திருச்சபைக்கும், திருச்சபை மக்களுக்கும் ஆற்றிய பணிகளுக்காக இன்றும் கத்தோலிக்க திருச்சபைகளில் பார் போற்றும் புனிதராக நினைவு கூறப்படுகின்றார்கள்.

    இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.

    பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.

    21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.

    ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.

    இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.


====================
The Daughters of the Church
Teresa of Avila (1515-82)
===================
Early Life:
    Teresa de Cepeda born March 28, 1515, in Ávila, Spain for her parents Beatriz de Cuevas and Alonso de Cepeda. Her parents were both pious Catholics and in some ways inspired their daughter to take up a life of prayer. From an early age she dreamed of being a martyr, or a hermit, and loved to repeat the words “forever and ever and ever.”

School Life:
    As a young child, Teresa showed signs of a deeply religious nature; she would often retreat into silence for prayer and would enjoy giving alms to the poor. When Teresa was thirteen years old, her mother died in 1529, leaving her grief-stricken. This prompted her to embrace a deeper devotion to the Virgin Mary as her spiritual mother. Her father sent her to the Augustinian nuns at Ávila for her education when she was 16.

Struggle for Holiness:
    in the convent, Teresa recounted how she became interested in worldly matters and enjoyed the company of a wide circle of friends. She had a natural charm and found it easy to make friends. In return, she enjoyed the compliments and friendships of others. However, she was not at peace, considering herself to be a miserable sinner; later she would look back in guilt at her early life. As a result, for many years Teresa lost the confidence to practice her prayers, and her spiritual life was almost put on hold.

Spiritual Encounter:
    The convent became overcrowded, with 180 women students, it was too large a community and there were too many distractions. Of her first ten years Theresa went through a life the greatest conflict. On the one hand God called her; on the other, she followed the world. She felt so guilty after talking even briefly with others and she withdrew at once to her cell and lashed herself with the utmost cruelty.

Conversion:
    At that time she got the inspiration to read Saint Augustine’s Confessions. When she started reading the confessions it seemed to her that she was seeing her own self right there. The text helped her realize that holiness was indeed possible and she found solace in the idea that such a great saint was once an inveterate sinner. Teresa’s conversion, set her on a new pathway that led her to an intimate experience of God, a God she came to perceive as a beloved Friend. In prayer, God poured out His love on His daughter, who had become a willing and open vessel as she surrendered totally to her Lord and King. At that moment, Teresa felt a growing strength within her.

Carmelite Nun:
    When the time came for her to choose between marriage and religious life, Teresa had a tough time making the decision. At age 21, against her father's wishes, she professed vows as a Carmelite Nun at the Spanish Convent of the Incarnation in Avila, Spain. Shortly after becoming a nun, Teresa experienced a severe illness (malaria), which left her in great pain for a long period. At one point it was feared that her illness was so severe that she would not be able to recover. However, during this period of intense physical pain, she began to increasingly experience divine visions and an inner sense of peace. These inner experiences of joy and peace seemed to transcend the intense physical pain of the body.

Vision of Raptures:
    When Teresa was a little better, she resumed her prayers with renewed vigor. At the age of 39, she began having visions and hearing inner voices. In her writing, having spent a day in prayer and begging the Lord to help me, she began the hymn and while she was reciting it, rapture came on me, so suddenly that it snatched me out of myself. It was the first time the Lord had given her the grace of raptures. She heard these words: “Now I want you to talk no longer with men, but with angels”. The admission of having visions and raptures was not entirely safe during the 16th century. Mystical experiences were looked on with skepticism by many people in the Church. They were also dangerous— visionaries sometimes were burned at the stake. The inquisitors eagerly sought out those they deemed to be heretics or possessed.

Mystical Experiences:
    Teresa’s spiritual enlightenment was intensified by many visions and mystical experiences, including the piercing of her heart by a spear of divine love. She was so filled with divine contemplation it is said at times her body would spontaneously levitate. Teresa tried to resist her mystical experiences and attempted to keep them a secret, but her resistance was in vain. On St. Peter's Day in 1559, Teresa became firmly convinced that Jesus Christ had presented Himself to her in bodily form, though invisible. However, after telling others of her visions and spiritual experiences, some of Teresa’s friends believed that she was demon-possessed; they advised that she be exorcised, and her confessor instructed her to snap her fingers whenever she felt a rapture coming on. Examination of this record has led to the speculative conclusion that she may have suffered from temporal lobe epilepsy.

Life as a Reformer:
    By the mid-1500s, the wave of Church reform, even spiritual reform, which had been rising in Central Europe for decades, finally broke on the shores of Catholic Spain. Teresa’s most enduring work was the reform and establishment of Carmelite houses all over Spain. In the year 1558 at the age of 43, Teresa decided that she wanted to found a new order recommitting to the values of poverty and simplicity. Initially, her aims were greeted with widespread opposition from within the town of Avila. In 1560, Teresa led a group of nuns who wanted to follow a more primitive Carmelite tradition. She guided the nuns not just through strict disciplines, but also through the power of love, and common sense. They lived in almost perpetual silence and perpetual abstinence. They wore habits of coarse serge and no shoes. Everyone liked Teresa, and she liked to be liked. However, with the support of Pope Pius IV’s authorization in 1562, Teresa opened the first convent (St. Joseph’s) of the Carmelite Reform. Though initially the monastery was plagued by financial issues and poverty, she worked hard over the next few years to establish new houses of her order.

Literary works of Teresa:
    Teresa’s ascetic doctrine has been accepted as the classical exposition of the contemplative life, and her spiritual writings are among the most widely read. Her recognized written masterpieces on the progress of the Christian soul toward God through prayer and contemplation are The Way of Perfection (1583), The Interior Castle (1588), Spiritual Relations, Exclamations of the Soul to God (1588), and Conceptions on the Love of God. Teresa wrote several volumes of poetry too.

Opposition in Ministry:
    Like other Catholic women who sought to make changes in the church, Teresa met with strong opposition. One papal legate described her as a "restless wanderer, disobedient, and stubborn femina who, under the title of devotion, invented bad doctrines, moving outside the cloister against the rules of the Council of Trent and her prelates; teaching as a master against Saint Paul's orders that women should not teach. Teresa feared that all her efforts for reform would be reversed by the Catholic authorities. She was forced out, when her supporters were excommunicated. The general chapter instructed her to go into "voluntary" retirement at one of her institutions.

Papal Support:
    In March 1563, after Teresa had moved to the new convent house, she received an edict from Pope Gregory XIII allowed the appointment of a special provincial for the newer branch of the Carmelite religious, and a royal decree created a "protective" board of four assessors for the reform. Despite frail health and great difficulties, Teresa reformed the Carmelite Orders of both women and men. So powerful was her appeal that she established seventeen convents houses in less than a twenty years period, during which time she suffered two heart attacks.

Death of Teresa:
    Teresa spent her last twenty years founding new convents as she traveled throughout Spain, all the while living in the most primitive conditions. Her final illness overtook her on one of her journeys from Burgos to Alba de Tormes. Her last words were: "My Lord, it is time to move on. Well then, may your will be done. O my Lord and my Spouse, the hour that I have longed for has come. It is time to meet one another. Teresa died in October, 4, 1582 at the age of 67 and buried in Avila, Spain.

Legacy of Teresa:
    Teresa was a Carmelite nun, since her death, her reputation has grown, leading to multiple portrayals. Forty years after her death, in 1622, Teresa was canonized by Pope Gregory XV. At the time she was considered a candidate for national patron saint of Spain, but this designation was awarded to St. James the Apostle. She has since become one of the patron saints of Spain. On 27 September 1970 Pope Paul VI proclaimed Teresa the first female Doctor of the Church in recognition of her centuries-long spiritual legacy to Catholicism.

Holy Woman for others:
    St Teresa of Avila was one of the great Christian mystics. She was a woman; she was a contemplative; she was an active reformer. As a woman, Teresa stood on her own two feet, even in the man’s world of her time. She was misunderstood, misjudged, and opposed in her efforts at reform. Yet she struggled on, courageous and faithful; she struggled with her own mediocrity, her illness, her opposition. And in the midst of all this she clung to God in life and in prayer. She was a woman of prayer; a woman for God and a woman “for others.” Her definitions have been used in the Catechism of the Catholic Church.

    Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.

    When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.

    We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.

    As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.