பரம அழைப்பின் பந்தயப் பொரு ளை நோக்கி ஓடும் வாழ்க்கையை யே தேவன் விரும்புகிறார்
*பிலிப்பியர் 3:13,14
"ஒன்றுசெய்கிறேன்,பின்னானவை களை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ ன் அழைத்த பரம அழைப்பின் பந்த யப்பொருளுக்காக இலக்கை நோக் கித் தொடருகிறேன்".*
*தேவபிள்ளையே! இந்த உலகத்தி லே தெய்வீகஇரட்சிப்பை பெற்ற நா ம், ஒரே நோக்கத்தோடு, குறிக்கோ ளோடு, கொள்கையோடு, தீர்மானத் தோடு வாழ வேண்டும். நோக்கமில் லாத வாழ்க்கை முகவரிஇல்லாத க டிதம் போன்றது. தாவீதுபக்தன் தா ன் வாழ்ந்த வாழ்க்கையின் நோக்க த்தை இப்படியாக சொன்னார்: "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையு ம் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய்நிலைத்திருப்பேன்"(சங். 23:6). ஆவிக்குரிய ஓட்டத்தை நாம் வீணாக ஓடவில்லை. நமக்கு முன் பாக ஒரு பந்தயப்பொருள்(நீதியின் ஜீவக்கிரீடம்) வைக்கப்பட்டிருக்கிற து. இதை பெற்றுக் கொள்ளும்படி, தேவன் ஒரு பரம அழைப்பை நமக் குத் தந்திருக்கிறார். இந்த விலை யேறப் பெற்ற பரம அழைப்பை நி றைவேற்ற அப்.பவுல் ஒரு இரகசிய த்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறா ர். அது என்ன? நம்முடைய பழைய பாவமான/ தோல்வியான/ இருளா ன/ அநீதியான/தேவனை துக்கப்ப டுத்தின வாழ்க்கைகளைமறந்துவி ட்டு, தேவன் கிருபையாய் இலவச மாய் நமக்குத் தந்த விலையேறப் பெற்ற இரட்சிப்பின்/பரிசுத்தத்தின்*
*/ சமாதானத்தின்/ விசுவாசத்தின்/ அபிஷேகத்தின் பூரணத்தை நோக் கி,வாஞ்சையோடு முன்னேறிச் செ ன்றுக் கொண்டேயிருக்க வேண்டு ம்.நம்முடைய சிந்தை, நோக்கம், வி ருப்பம், வாஞ்சை, பேச்சு, மூச்செல் லாம் எப்பொழுதும் இவைகளை மு ன்வைத்தே செயல்பட வேண்டும். அப்பொழுது நிச்சயமாய் நம்முடை ய வாழ்க்கையின் வெற்றி இலக் கை அடைந்துவிடமுடியும் என்பதில் சந்தேகமேயில்லை.*
*அன்பானவர்களே! முதலாவது, அந் த வெற்றி இலக்கு(அ)பந்தயப் பொ ருள் என்றால் என்ன? என்பதைக் குறித்த தெளிவான ஒரு அறிவு நம க்கு கட்டாயம் தேவை. இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவத்தை அ நேகர் அறிந்துக் கொள்ளாமல் இரு க்கிறபடியால், வாழ்க்கையிலே ஒரு ஜெயமில்லாமல், சமாதானமின்றி, கர்த்தருக்காக எடுத்ததீர்மானத்தில் உறுதியாக நிற்கமுடியாமல், பரிசுத் தத்தில் முன்னேற இயலாமல், சாட் சியின் ஜீவியத்தை காத்துக் கொள் ளமுடியாமல் தடுமாறுகின்றனர். ஒ ரு மனிதன் தனது உலக வாழ்க்கை யை முடித்தப் பிறகு, போய் சேர வே ண்டிய இடம் இரண்டு தான். ஒன்று நித்தியஜீவன்; மற்றொன்று நித்தி ய பாதாளம்.இரண்டுமே நித்தியமா னது. முடிவு என்பதே கிடையாது. இ ந்த உலகத்திலே மனிதன் வாழ்கிற வாழ்க்கையின் தரம் தான் இந்த இ டங்களை நிர்ணயிக்கிறது.நித்திய ஜீவன் (அ) பரலோகமே ஒரு மனித னின் வெற்றி இலக்கு (அ) பந்தயப் பொருளாக இருக்க வேண்டும். அப். பவுல் சொல்கிறார்: இதுமுதல் நீதி யின் கிரீடம் எனக்காக வைக்கப்பட் டிருக்கிறது.கர்த்தர் தம்முடைய வரு கையின் நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார் (2 தீமோ.4:8).*
*பிரியமானவர்களே! ஓட்டப் பந்தயத் திலேஓடுகிறவர்கள் தங்களுக்குள் ள பரிசுப் பொருளை பெற்றுக் கொ ள்ளும்படியாக இச்சையடக்கத்தோ டு ஓடுகிறார்கள். அவர்களுடைய ம னதிலே அந்த வெற்றி இலக்கு மாத் திரமே குறிக்கோளாயிருக்கும்.அது போல, ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடி க்கொண்டிருக்கிற உங்கள் வாழ்க் கையில், அந்த நித்தியஜீவன்(அ) ப ரலோக பாக்கியம் (நீதியின் கிரீடம்) இவைகள் மாத்திரமே வெற்றி இல க்காக கொண்டு ஓடுங்கள். வாழ்க் கையிலே வருகிற போராட்டங்கள், சோதனைகள், நிந்தை அவமானங் கள்,தோல்விகள்,வியாதி பெலவீன ங்களுக்கு முக்கியத்துவம் கொடுக் காமல், இவைகளையெல்லாம் மே ற்கொள்வதற்கு வேண்டிய தேவபெ லத்தையும் கிருபையையும் அனுதி னமும் கர்த்தரிடத்திலிருந்து பெற் று அவருக்காக பொறுமையோடு ச கித்து,பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பரம அ ழைப்பையே சிந்தித்துக் கொண்டு, வீறுநடைபோட்டு முன்னேறிச் செல் லுங்கள். பரிசுத்தம், உண்மை, தாழ் மைஒன்றே உங்கள்ஜீவியத்தின் கு றிக்கோளாய் இருக்கட்டும். எப்பொ ழுதும் கர்த்தரைத் துதிக்கிற துதி உ ங்கள் இருதயத்திலிருந்து எழும்பி வரட்டும்.தேவனுக்காகஅக்கினியா ய் பிரகாசியுங்கள்!அப்பொழுது ஜெ யமெடுப்பதுசாத்தானல்ல;நீங்களே சாதனை வெற்றியாளர்கள்! உங்க ள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
உபாகமம் 28:1
"அவர் (கர்த்தருடைய) சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயா னால்,உன்தேவனாகிய கர்த்தர் பூமி யிலுள்ள சகல ஜாதிகளிலும் உன் னை மேன்மையாக வைப்பார்
*தேவபிள்ளையே! தேவன் தம்முடை ய பிள்ளைகளை இந்த பூமியிலே எ ப்பொழுதும் மேன்மையாகவே வை க்கவிரும்புகிறார்.சிலரை இந்தஉல கம்மேன்மைப்படுத்துகிறது;மனுஷ ர்கள் மேன்மைப்படுத்துகிறார்கள்; சாத்தான்மேன்மைப்படுத்துகிறான் ஆனால்,கர்த்தரோ நம் பட்சத்திலிரு ந்து நம்மை மேன்மைப்படுத்துகிறா ர். அநேகர் இன்றைக்கு கர்த்தர் தரு கிற நிலையான மேன்மையை உத றிவிட்டு, லௌகீக/சாத்தானின் மே ன்மையைவிரும்பி மோசம்போய்வி டுகிறார்கள். காரணம், அவைகள் த ற்காலிகமேன்மை;கர்த்தரால் கிடை க்கிற மேன்மை மாத்திரமே நிலை யானது.வேதம்சொல்கிறது: எவரை யும் மேன்மைப்படுத்தவும்பலப்படுத் தவும் கர்த்தருடைய கரத்தினால் ஆ கும்(1நாளா.29:12).அவருடைய பலத் த கரத்திற்குள் நாம் தாழ்மையோடு அடங்கியிருக்கும்போதுநிச்சயமாக வே எதிர்காலத்திலும் அவர் நம்மை உயர்த்தி மேன்மைப்படுத்துவார். ஒ ருமனிதனை மேன்மைப்படுத்துவத ற்கு அவனிடத்திலிருந்து எந்தவொ ரு உலகத்தகுதிகளையும் தேவன் எ திர்பார்க்கிறதில்லை;தேவனுடைய பார்வையிலே உலக மேன்மைகளெ ல்லாம் அற்பமும் குப்பையுமாயிருக் கிறது. ஆகவே தான், அப்.பவுல் தன க்குண்டான சகல உலக மேன்மைக ளையெல்லாம் நஷ்டமும் குப்பையு மாய் எண்ணினார். கர்த்தர் உங்க ளை மேன்மைப்படுத்தி உயர்த்தும் போது உங்களை தாழ்த்தி எப்போது ம் அவருக்கு மகிமையையும் கனத் தையும் செலுத்துங்கள். அநேகர் தா ங்கள் உயர்த்தப்படும்போது மனமே ட்டிமை அடைந்துவிடுகிறார்கள்;பெ ருமையுள்ளவர்களாகிவிடுகிறார்கள். ஆகவே வீழ்ச்சியடைகிறார்கள். இது தேவனுடைய பார்வையிலே மிகவும் துக்கமான ஒரு காரியம்.*
*அன்பானவர்களே! நேபுகாத்நேச்சா ருக்கு கர்த்தர் கனத்தையும் மகிமை யையும்மேன்மையையும்கொடுத்தி ருந்தபோது,அவர் அந்த துதியை கர் த்தருக்கு ஏறெடுக்காமல் பாபிலோ ன் ராஜ்யத்தின் அரண்மனையிலே உலாவி, “இது என் வல்லமையின் ப ராக்கிரமத்தினால் என் மகிமைப் பி ரதாபத்திற்கென்று, ராஜ்யத்துக்கு அரண்மனையாக நான்கட்டின மகா பாபிலோன் அல்லவா?” என்று சொ ன்னார் (தானி.4:29-30). அந்தப் பெரு மையினால் உடனே மனுஷரிடமிரு ந்து தள்ளப்பட்டு மிருகம்போலானா ர். ஆகவே, கர்த்தர் இந்த பூமியிலே உங்களை மேன்மைப்படுத்தியிருந் திருப்பாரேயானால்,அவருக்கு முன் பாக எப்போதும் மிகுந்த மனத்தாழ் மையோடு நடந்துக்கொள்ளுங்கள். காரணம், அவர் எரிச்சலுள்ள தேவ னாயிருக்கிறார்.“நான் பிதாவானா ல் என் கனம் எங்கே? நான் எஜமா னானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?(மல்.1:6) என்று கர்த்தர் கேட் கிறார். மாத்திரமல்ல,“நான் கர்த்தர், என்மகிமையை வேறொருவனுக்கு ம்,என் துதியை விக்கிரகங்களுக்கு ம் கொடேன்”(ஏசா.42:8)என்று சொல் கிறார். ஆகவே, அவருக்குக் கொடு க்கவேண்டிய கனத்தையும் மகிமை யையும் கர்த்தருக்கு கட்டாயம்செலு த்திவிடுங்கள். அப்பொழுது அவர் உங்களை மேன்மைப்படுத்தி கனப் படுத்துவார். அவரை கனம்பண்ணு கிறவர்களை அவர்கனம்பண்ணுகி ற தேவன். கர்த்தரை கனம்பண்ணி அவருடைய சத்தத்திற்கு செவிகொ டுக்கும் போது நமக்குக் கிடைக்கிற மேன்மையான ஆசீர்வாதங்களை உபா.28:1-14 வரையுள்ள வசனங்க ளிலே சொல்லப்பட்டிருக்கிறது.*
*பிரியமானவர்களே! கர்த்தருடைய மேன்மையான ஆசீர்வாதங்களெல் லாம் ஒரு நிபந்தனையோடுகூட ந மக்கு வருகிறது. அது என்ன நிபந்த னை? உன்தேவனாகிய கர்த்தருடை ய கட்டளைகளின்படியெல்லாம் செ ய்ய நீ கவனமாயிருக்க வேண்டும்; அவருடைய சத்தத்திற்கு உண்மை யாய் செவிகொடுக்க வேண்டும். யோசேப்பு கர்த்தரை நேசித்து பாவ த்துக்குத் தன்னை விலக்கிப் பாது காத்துக்கொண்ட போது முழு எகிப் திலும் அவரை மேன்மையாக உயர் த்தினார்.தானியேல்ஒருஅடிமையா க பாபிலோனுக்குக்கொண்டுபோக ப்பட்டாலும், எந்த சூழ்நிலையிலும் கடினமான சட்டங்களின் மத்தியிலு ம்ஜெபிக்கிறதை அவர்தவறவிடவே யில்லை. எனவே, கர்த்தர் தானியே லை பாபிலோன்ஞானிகள் எல்லோ ரைப்பார்க்கிலும் மேன்மையாய் தே சத்திலே உயர்த்தி கனம்பண்ணி னார்.இவர்களெல்லாம் தங்களுடை ய நெருக்கத்திலே கர்த்தரைத் தேடி னார்கள்; சூழ்நிலைகள் எல்லாம் இ வர்களுக்கு எதிர்மாறாய் காணப்பட் டாலும், மனிதர்களுடைய உதவி அ ற்றுப்போன நிலைமையில், கர்த்த ரை நேசித்து அவருடைய சித்தத்தி ற்கு தங்களை அர்ப்பணித்து,அவரு டைய வார்த்தைக்கு செவி கொடுத் து, கீழ்ப்படிந்தபடியால் தேவன் அவ ர்களை பூமியிலுள்ள சகல ஜனங்க ளிலும் அவர்களை மேன்மையாக வைத்தார். அதே தேவன் உங்களை யும் தேசத்திலே மேன்மையாய் வை ப்பார். நீங்கள் தேவனுடைய ஆளு கைக்குள் இருக்கிறபடியால், எதிர் மாறான சூழ்நிலைகளின் மத்தியி ல்,பாடு உபத்திரவத்தின் நேரத்தில், மனிதர்களால் கைவிடப்பட்ட நிலை மையில், வியாதிபெலவீனம் தாக்கு ம்போது,கர்த்தருடைய சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து,அவர் ச த்தத்திற்குஉண்மையாய்செவிகொ டுத்து,கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவைகளின்படி நடந்தால், கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையா க்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்(*
*உபா.28:14).உங்களுக்கு சொன்ன ஒ வ்வொரு வாக்குத்தத்தங்களையும் ஏற்றநாளிலே கர்த்தர்நிறைவேற்றி உங்களையும் உங்கள் சந்ததிகளை யும் இந்த பூமியிலே மேன்மையாய் வைப்பார். மனம் கலங்காதிருங்க ள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
நித்தியத்தின் நிறைவிற்குள் வழி நடத்தும் தேவபிரசன்னம்.
*சங்கீதம் 23:6*
*"நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப் பேன்".*
*தேவபிள்ளையே! தாவீது பக்தன் த ன் சொந்த அனுபவத்திலிருந்து மி குந்த ஒரு நிச்சயத்துடன் இந்த சங் கீதத்தைஎழுதுகிறான்.தாவீது தேவ னோடு வைத்திருந்த ஐக்கியத்தை யும் அனுபவத்தையும் ஆழமாய் சிந் திப்போமானால், மிகுந்த ஆச்சரிய மாயிருக்கும். “நான் கர்த்தருடைய வீட்டிலே என்றென்றும் வாசம்பண் ணுவேன்” என்று ஆங்கிலத்தில் எ ழுதப்பட்டுள்ளது. கர்த்தர் எனக்கு ந ல்லமேய்ப்பராக இருக்கிறார் என்று ஆரம்பித்து,யுகாயுகமாய் அவரோடு கூட வாசம்பண்ணிக் கொண்டே இ ருப்பேன்என்று ஒருநம்பிக்கையின் நிச்சயத்தோடு முடிக்கிறார். அப்படி யானால் நித்தியத்தைக் குறித்த ஒ ரு அறிவும் ஞானமும் எதிர்பார்ப்பும் தாவீதுக்குள் எப்போதும் இருந்தது. நாம் இயேசுகிறிஸ்துவை நல்ல மே ய்ப்பராய் ஏற்றுக்கொண்டு நம்மு டைய வாழ்க்கையை ஆரம்பித்திரு ந்தால், நிச்சயம் நம்முடைய வாழ்க் கையின்முடிவு கர்த்தரோடுகூட நித் திய நித்தியமாய் வாழ்கிற அனுபவ த்தில்தான் முடியும் என்பதில் சந்தே கமேயில்லை.அதற்கு இடைபட்ட கா லங்களில் வாழ்க்கையின் என்ன தான் மேடுபள்ளங்கள்/கஷ்ட நஷ்ட ங்கள்/கண்ணீர் கவலைகள் வந்தா லும்,அவைகளை பொறுப்பெடுத்து க்கொள்வது கர்த்தருடைய கடமை. நம்முடைய ஒரே கடமை, நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொ டுத்திருக்கிற மேய்ப்பருக்கு உண் மையாய்உத்தமமாய்,பரிசுத்தத்தோ டு,அவர் நடத்துகிற பாதையில் பொ றுமையோடும் கீழ்ப்படிதலோடும் அ வரைப் பின்பற்றி சென்றால் போது ம்.நிச்சயம் அவரோடு ஆண்டாண்டு காலம் குதுகலத்தோடு மகிழ்ந்திரு க்கலாம்.*
*அன்பானவர்களே! இந்த பூமியிலே யும் தேவனுடைய வீடு உண்டு; பர லோகத்திலேயும் கர்த்தருடைய வீடு உண்டு.இந்தபூமியிலே கர்த்தருடை யவீடாகியதிருச்சபையை உதாசீண ப்படுத்துகிறவர்கள், பரலோகமாகி யமோட்சவீட்டை சுதந்தரிக்கவேமுடி யாது.பூமியின் வீடாகிய திருச்சபை நம்மைஅங்கீகரிக்கும்போது மாத்தி ரமே, பரலோகம் நம்மை அங்கீகரிக் கும். ஆகவே தான் தாவீது சொல்கி றார்: என்ஆத்துமா கர்த்தருடைய ஆ லயப் பிராகாரங்களின் மேல் வாஞ் சையும் தவனமுமாயிருக்கிறது; ஆ யிரம் நாளைப் பார்க்கிலும் உமது பி ரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; என் தேவனுடைய ஆலயத் தின் வாசற்படியில் காத்திருப்பதை யே தெரிந்துகொள்ளுவேன்(சங்.84: 2,10).தேவனுடைய ஆலயத்தின் மே ல் உங்களுக்கு ஒரு வாஞ்சை இல் லாவிட்டால்,பரலோகமோட்சவீட்டை யும் நீங்கள் நேசிக்கமாட்டீர்கள். எந் தவொரு ஆதாயமுமில்லாமல், எந்த மனுஷனும் ஒருகாரியத்தைசெய்ய மாட்டான். இந்த உலகத்தின் ஆதாய ம், தேவனுடைய பார்வையிலே நஷ் டங்களும் பிரயோஜனமற்றவைக ளுமே. ஆகவே தான் இயேசு சொன் னார்: மனுஷன் உலக முழுவதையு ம் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்ப டுத்தினால் அவனுக்கு லாபம் என் ன?(லூக்.9:25). முன்நாட்களிலே உல க ஆதாயத்திற்கு பின்னாக ஓடிக் கொண்டிருந்த அப்.பவுல், பின் நாட் களிலே கிறிஸ்துவையும், கிறிஸ்து வினால் வருகிற மரணத்தையும் ஆ தாயமாக எண்ணினார். இந்த தேக த்தை விட்டு பிரிந்து, கிறிஸ்துவுட னேகூட இருக்க ஆசைப்பட்டார். தா ன் ஆதாயம்பண்ணின இயேசுவுக் காக இந்த உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் குப்பையும் நஷ்ட முமாக எண்ணி விட்டுவிட்டார்.*
*பிரியமானவர்களே!அழியாத ஜீவகி ரீடமும், நித்திய பேரின்பமும், மண வாளனாகியஇயேசுவோடுகூட பளி ங்கு நதியோரம் அந்த பொற்தள வீ தியிலேஉலாவுவதும் எத்தனைஒரு மகிமையான அனுபவங்கள் என்ப தை எண்ணுவீர்களேயானால், இந் தஉலகத்தின் மேன்மைகளையெல் லாம் அற்பமும், குப்பையுமாக எண் ணி உதறிப்போடுவீர்கள்.இந்த உல கத்தின்பாடுஉபத்திரவங்கள்,வியா தி பெலவீனங்கள் உங்களை சிறை ப்படுத்தலாம்.தேவனுடைய மகிமை யான சமூகமும் பிரசன்னமும் உங்க ளோடு இருக்கும்போது,உங்கள் வா ழ்க்கையின் சிறைச்சாலையின் அ னுபவங்களும் அரண்மனையாக மாறிவிடும்.தேவசமூகம் உங்கள் ஜீ வியத்தைவிட்டு விலகிப்போய்விடு மாயின், உங்கள் அரண்மனை அனு பவங்களும் ஒரு சிறைச்சாலையா க மாறிவிடும்.உங்கள் வாழ்க்கையி ன் அரண்மனையோ(அ) சிறையிரு ப்போ என்பதை தீர்மானிப்பது தேவ பிரசன்னமும்,அவருடைய இனிமை யான சமூகமும் மாத்திரமே.உன் வா ழ்க்கையின் மகிழ்ச்சி என்பது பிரச் சனைகள் பாடுகள் இல்லாமல் ஜீவி ப்பதல்ல; மாறாக, தேவ சமூகத்தோ டும் பிரசன்னத்தோடும் எவ்வளவு நெருக்கமான ஐக்கியத்தையும் உற வையும் நீங்கள் கொண்டிருக்கிறீர் கள் என்பதை பொறுத்து தான். சவு ல் அரண்மனையில் வாசம்பண்ணி க்கொண்டிருந்தபோதிலும், தேவபி ரசன்னம் அவனை விட்டு விலகி, பொல்லாத ஆவி அவன் மேல் வந்த போது, அவன் இருதயம் பயத்தினா லும் கலக்கத்தினாலும்நிறைந்த ஒ ருசிறையிருப்பையே அவன் உணர் ந்தான். அதே நேரத்தில், யோசேப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டி ருந்தாலும், ஒரு அரண்மனையின் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அவன் இருதயத்திலேயும் முகத்திலேயும் காணப்பட்டது. ஆகவே,தேவசமூகத் தையும் பிரசன்னத்தையும் எப்போ தும் உங்கள் ஜீவியத்தில் காத்துக் கொள்ள விரும்புவீர்களேயானால், தேவசித்தத்திற்குப் புறம்பான யா தொரு சிந்தனைக்கும், வார்த்தைக் கும், கிரியைக்கும் உங்களை உட்ப டுத்தமாட்டீர்கள். தேவசமூகத்திலே யே ஜீவிப்பதுடன், கர்த்தரோடு கூட அரண்மனைஅனுபவத்தில் என்றெ ன்றைக்கும் இந்த பூமியிலேயே வா சம்பண்ண முடியும். இந்த உலகத்தி ன் ஓட்டத்தைமுடித்து, ஒளிமயமான அந்த பரலோகதேசத்தை சுதந்தரிக் கும்போதும் இயேசுவோடுகூட அங் கேயும் யுகாயுகமாய் வாழ்ந்து சுகித் திருப்பீர்கள். அந்த நம்பிக்கையின் பூரண நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி செல்லு ங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிச் செய்வாராக! நானும் உங்களுக்கா க ஜெபிக்கிறேன்.*
வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு இருளின் மேல் அதிகாரமுண்டு
*எபேசியர் 5:8*
*"முற்காலத்திலே நீங்கள் அந்தகார மாயிருந்தீர்கள். இப்பொழுதோ, கர் த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர் கள்.வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துக் கொள்ளுங்கள்".*
*தேவபிள்ளையே! இந்த வார்த்தைக ளை அப்.பவுல் எபேசு சபை மக்களு க்கு சொல்லியிருந்தாலும்,இக்கால த்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கிற நமக்கும் மிகஅதிகமாகவே எச்சரிப் பைக்கொடுக்கிற ஒருவார்த்தையா க இருக்கிறது.ஆவிக்குரியவர்களா கிய நாம் வெளிச்சத்தின்பிள்ளைக ளாய் நடந்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கடந்த கால வாழ்க்கை அந்தகாரமானஇருளிலிருந்தது. ஆ னால் இப்பொழுதோ கர்த்தருடைய அநாதி சிநேகத்தினாலும், கிருபை யினாலும் வெளிச்சம் நிறைந்த வா ழ்க்கைக்குள்(கர்த்தருக்குள்) வாழ்ந் துக்கொண்டிருக்கிறோம்.எதிர்கால த்திலோ, இந்த வெளிச்சத்திலே நி லைத்திருந்து,வெளிச்சத்தின் பிள் ளைகளாகவே நடந்துக்கொள்ளவே ண்டும் என்று பவுல் ஆலோசனை யாக எழுதுகிறார். எந்தவொரு மனி தனும் இருளான வாழ்க்கைக்குள் வாழ்வது தேவனுடைய சித்தமல்ல; பிரியமுமல்ல. ஆகவே தான், 1 பேது ரு 2:9 சொல்கிறது: "உங்களை அந்த காரத்தினின்று தம்முடைய ஆச்சரி யமானஒளியினிடத்திற்குவரவழை த்து,அவருக்கு சொந்த ஜனமாய் மா ற்றிவிட்டார்". உண்மையாகவே,யார் வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று சொன்னால், கர்த்தருடைய வசனம் யாருக்கு தேனைப் போல இனிமை யாய் இருக்கிறதோ, அவர்கள்தான் உண்மையான மகிமைக்குரிய பிர காசத்தின் பிள்ளைகள்.
*அன்பானவர்களே! ஏதோ வெளிச்ச த்திற்குள் வந்துவிட்டதாலே, வெளி ச்சத்திற்கு சொந்தக்காரர்களாகிவி ட்டோம் என்று சொல்லி விடமுடியா து.தேவன் கிருபையாய் வெளிச்சத் திற்குள் நம்மை கொண்டுவந்து, அ தற்கான வழியை காண்பித்துவிட் டார். இனி இந்த வெளிச்சத்தில் நி லைத்திருப்பதும், வாழ்க்கையின் க டைசி மட்டும் வெளிச்சத்திலே நடந் துக் கொள்வதும் நம்முடைய கரத்தி லிருக்கிறது. வெளிச்சம் இருக்கிற இடத்திலே இருளுக்கு இடமில்லை. ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமே கிடையாது(2கொரி.6:14). ஒளியாயி ருக்கிற தேவனுக்குள் எவ்வளவே னும் இருளில்லை. அந்த ஜோதிமய மான மகிமையின்அறிவாகிய ஒளி யை நம்இருதயங்களிலே அவர் பிரகாசிக்க செய்திருக்கிறார். எத்த னை ஒரு ஆச்சரியம் பாருங்கள்!*
*பிரியமானவர்களே! உங்கள் வாழ்க் கையில், வெளிச்சத்தின் பிரகாசத் தை காணமுடியாதபடி இருளின் அ திகாரத்தினால் கட்டப்பட்டிருக்கிறீர் களா? வெளிச்சத்திலே நிலைத்திரு க்கமுடியாதபடி தடுமாறிக் கொண்டி ருக்கிறீர்களா? வெளிச்சத்தின் தே வனை தரிசிக்கமுடியாதபடி, இருளி ன் காரியங்கள் எப்பொழுதும் சிந் தையை வந்து தாக்குகிறதா? உங்க ள்இருதயம் கலங்காதிருப்பதாக! இ ருள் பூமியையும், காரிருள் ஜனங்க ளையும் மூடும்; ஆனாலும் உங்கள் மேலும்,உங்கள்குடும்பத்தின் மேலு ம்,உங்கள்சந்ததிகள்மேலும் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமையை உங்கள் கண்கள் காணும்(ஏசா.60:2). எந்த ஜனங்களால் நீங்கள் உதாசீ ணப்படுத்தப்பட்டீர்களோ, அதே ஜ னங்கள் உங்கள் வெளிச்சத்தைத் தேடிவருவார்கள்.யாருக்குமுன்பாக நீங்கள் ஒரு கசந்த மாராவாக எண் ணப்பட்டீர்களோ, அவர்களுக்கு மு ன்பாக உங்கள்வாழ்க்கையை இனி மையாய்,பிரகாசமாய், சமாதானமா ய் மாற்றுவார்.மனம் கலங்காதிருங் கள்! இருளைக் கடந்துபோன யோபு வின் வாழ்க்கையை பிரகாசமாக்கி ன தேவன், நிச்சயம் உங்கள் வாழ்க் கையையும் அநேகருக்கு ஆசீர்வாத மாய்,வழிகாட்டுகிற குடும்பமாய் மா ற்றி, உங்களை மகிழ்ச்சியாக்குவா ர். கர்த்தருடைய முகத்தையே உங்க ள் கண்கள் நோக்கியிருக்கட்டும். அ வரை நோக்கிப் பார்க்கிறவர்களை அவர் பிரகாசிக்கப்பண்ணுகிற தே வன். பயப்படாதிருங்கள்! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*
உங்களுக்கு விரோதமானவைக ளை சாதகமாக மாற்றுகிற தேவன்
*ஆதியாகமம் 42:36*
*"யாக்கோபு அவர்களைநோக்கி:என் னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர் கள்; யோசேப்பும் இல்லை சிமியோ னும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது என்றான்".*
*தேவபிள்ளையே! கானான் தேசத்தி லே கொடியபஞ்சம்உண்டானபடியா ல்,யாக்கோபு தன் குமாரர்களை எகி ப்து தேசத்திற்கு அனுப்பி பிழைப்பி ற்கான தானியங்களை கொள்ளும் படி கேட்டுக்கொண்டான். பென்யமீ ன், தகப்பனோடு வீட்டிலேயே தங்கி விட, அவரின் மற்ற 10 குமாரர்கள் எ கிப்திற்குகடந்துபோகிறார்கள்.அங் கே எகிப்துதேசத்தின் அதிபதியாயி ருந்தயோசேப்பைசந்திக்கிறார்கள். ஆனால், அவர்களால் யோசேப்பை அடையாளம் கண்டுக்கொள்ள முடி யவில்லை. இறுதியாக தானியங்க ளை அவர்களுக்கு தந்து அனுப்புவ தற்கு முன்பாக யோசேப்பு, சிமியோ னை தன்வசம் வைத்துக் கொண்டு, பென்யமீனை காண ஆசைப்பட்டு, பென்யமீனை கூட்டிக்கொண்டு வர அவர்களிடத்திலே கட்டளையிட்டா ன்.அவர்கள்வந்து தங்கள் தகப்பனி டத்தில் நடந்தவைகளை சொன்ன போது, யாக்கோபு மிகுந்தவேதனை யோடு சொன்ன ஒரு காரியத்தைத் தான் நாம் மேலே வாசிக்கிறோம். த ன் வாழ்க்கையில் எத்தனையோ து ன்பங்களை,வேதனைகளை கடந்து வந்த யாக்கோபு, இப்போது யோசே ப்பை இழந்து,சிமியோனையும் இழ ந்து, பென்யமீனையும் இழக்க வே ண்டிய ஒரு நிலை வந்துவிடுமோ என்ற ஒரு கலக்கம் அவர் இருதயத் தை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இது அவரால் தாங்கக்கூடாத ஒருபாரமா ய் இருந்தது.*
*அன்பானவர்களே! உங்கள் வாழ்க் கையிலேயும் திராணிக்கு மேலாக தாங்கக்கூடாத பாரங்களினால்,வே தனைகளினால் கஷ்டப்பட்டுக் கொ ண்டிருக்கலாம்; இழப்பின் மேல் இ ழப்பு, நஷ்டத்தின்மேல் நஷ்டம், நிந் தையின் மேல் நிந்தை அவமானங் கள்; வெளியிலே எதையும் காட்டிக் கொள்ளாதபடி, சிரிப்போடும் புன்மு றுவலோடும்,நல்லவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு உலாவரும் உங் கள் உள்ளத்திற்குள் எத்தனை காய ங்கள், சோகத்தின் வடுக்கள், அங் கலாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அ லசி ஆராய்ந்துப் பார்த்தால் தான் தெரியும். இப்படிப்பட்ட நெருக்கங்க ள்வரும்போது நீங்கள் வாழ்க்கையி ல் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். விசுவாசத் தகப்பனாகி ய ஆபிரகாம், தன் வாழ்க்கையிலே பல நெருக்கங்கள் வந்து, விசுவாச பரிசோதனையிலே தோற்றுப் போ ய், தானாக ஒரு வழியைத் தேடிக் கொண்டது போல, வாழ்க்கையின் நெருக்கங்களிலே, ஆவிக்குரிய வி சுவாச சோதனையில் விழுந்துபோ ய்,நீங்களாகவே ஒரு இஸ்மவேலை உருவாக்கி விடாதிருங்கள். பிறகு அதினால்உண்டாகும்வேதனையை யும் கஷ்டங்களையும் வாழ்நாள் மு ழுவதும்அனுபவிக்கவேண்டிவரும். தன் வாழ்க்கையிலே யோசேப்பை இனி காண்பதற்கு எந்தவொரு வா ய்ப்புமில்லை என்ற ஒரு முடிவில் இ ருந்த யாக்கோபுக்கு, யோசேப்பை திரும்ப காணப்போகிற அந்த நேர த்திலே,அவனுக்கு இன்னொருசோ தனை வருகிறது. சிமியோனையும் இழந்து நிற்கிற நேரத்தில், பென்ய மீனையும் தன்னை விட்டு அனுப்ப வேண்டிய ஒரு கட்டாயத்தில், “எல் லாமே எனக்குவிரோதமாகவே நேரி டுகிறது” என்று புலம்புகிறான்.*
*பிரியமானவர்களே!சில நேரங்களி லே நீங்கள் இழந்த/ எதிர்பார்த்த ஆ சீர்வாதங்கள் உங்கள்கைகள் எட்டிப் பிடிக்கிற தூரத்திலே வரும்போது, விசுவாச வாழ்க்கையில் சோதனை க்குமேல் சோதனைகளும், நெருக்க த்தின் மேலே நெருக்கங்களும் வந் து உங்களைத் தாக்கும்.அந்த நேரத் திலே உங்கள் பொறுமையை கர்த் தருக்குள் காத்துக் கொள்ளுங்கள். தாவீது சொல்கிறார்: “கர்த்தருக்கா க நான் பொறுமையுடன் காத்திருந் தேன்; அவர் என்னிடமாய் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங்.*
*40:1).ஆபிரகாம் தேவனுடைய நேரத் திற்காய் பொறுமையாய் காத்திருந் திருப்பாரென்றால்,இஸ்மவேலினா ல் உண்டான வேதனையை அவன் சந்ததிகள் அனுபவித்திருந்திருக்க மாட்டார்கள். பயப்படாதிருங்கள்! நீ ங்கள் இழந்த எல்லாவற்றையும் தி ரும்பப் பெற்றுக் கொள்ளுகிற ஒரு நேரத்திலே தேவன் உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். தேவ சித்தத்தை அறிந்து, அவர் நடத்துகி ற பாதையிலே பொறுமையோடு க டந்துசெல்லுங்கள்.வாழ்க்கையிலே எல்லாமே உங்களுக்குவிரோதமாக இருந்தாலும், கர்த்தர் உங்கள் மேல் வைத்த கிருபையினாலே, எல்லாவ ற்றையும் உங்களுக்கு சாதகமாக மாற்றி, திருப்பிப் போட வேண்டிய காரியங்களை திருப்பிப்போட்டு, இ துவரை கண்டிராத வெற்றிப்பாதை யில் உயர்த்தி உங்களை சந்தோஷ ப்படுத்துவார். மனம் கலங்காதிருங் கள்!யாக்கோபின் ஒரு பிள்ளையை கூட தேவன் வெறுமையாய் விடவி ல்லை; அவர் சந்ததிகளை பலமடங் காக தேவன் பெருகச்செய்தார்.இன் றைக்கு அநேகர் உங்களை நெருக் கத்தில் ஏளனமாக பார்க்கலாம். ஆ னால் அதே கண்களுக்கு முன்பாக உங்களைக் கொண்டு, உங்கள் சந் ததிகளை/செல்வத்தை/வருமானத் தை/வேலையை/தொழிலை பல ம டங்காய் பெருகச்செய்து, அசாதார ணக் கிருபையிலே உங்களை வை த்து அழகுபார்க்க விரும்புகிற தேவ ன், தமது காருண்யத்தை உங்கள் வாழ்க்கையிலே விளங்கச் செய்து, உங்கள் பேரை பெருமைப்படுத்து வார். இழந்த யோசேப்பை திரும்பக் கண்ட யாக்கோபின் உள்ளம் ஆனந் த பரவசத்தால் நிரம்பினது. இழந்த பென்யமீனை திரும்பக் கண்ட யோ சேப்பின் இருதயம் வார்த்தையால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியினா ல் பொங்கினது. முழுகுடும்பமே சந் தோஷத்தினால் திளைத்தது. அதே அனுபவத்தை கர்த்தர் இன்றைக்கு உங்களுக்குத் தருவார். உங்கள் இ ருதயம் மகிழ்ந்து பூரிக்கட்டும்! உங் களுக்காக ஜெபிக்கிறேன்.*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Thanks for using my website. Post your comments on this