Type Here to Get Search Results !

மகா மேன்மையான பாக்கியத்திற்குள் உங்களை வழிநடத்தும் தேவபக்தி | Run eagerly to inherit what God has prepared for you | Stephen Bible Gospel Sermons | Jesus Sam

தேவனுக்கு முன்பாக உத்தமனாயி ருக்கிறவன், சர்வவல்லவருடைய அற்புதத்தைக் காண்பான்

*ஆதியாகமம் 17:1.*
*"நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்குமுன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு".*

*தேவபிள்ளையே! நம்முடைய தேவ ன் சர்வவல்லமையுள்ளவர்.எபிரேய பாஷையிலே "எல்ஷடாய்" என்று அ ழைக்கப்படுகிறது. கர்த்தருடைய வ ல்லமைக்கு ஒப்பான வல்லமை இந் த உலகத்திலே ஒன்றுமேயில்லை. அண்டசராசரங்களையும் தமதுவார் த்தையின்வல்லமையினால்சிருஷ் டித்த தேவன், தனக்குள் எவ்வளவு ஒரு அசாத்தியமான வல்லமையை கொண்டிருப்பார் என்றுசற்று சிந்தி த்துப் பாருங்கள். ஏசாயா 9:6-ல், அவ ருக்கு கொடுக்கப்பட்ட நாமங்களில் ஒன்று வல்லமையுள்ள தேவன். ஆ பிரகாமின் வாழ்க்கையிலே தான் செய்யப்போகிற மகிமையான காரி யங்களை வெளிப்படுத்தவே, ஆபிர காமுக்கு சர்வவல்லமையுள்ள தேவ னாக தன்னை வெளிப்படுத்தினார். தேவனுடைய மகாபெரியவல்லமை யை அறிந்திருந்த யோபு சொல்கி றார்: "ஆராய்ந்துமுடியாத பெரிய கா ரியங்களையும்,எண்ணிமுடியாத அ திசயங்களையும் கர்த்தர்செய்கிறா ர்.அவர் சகலத்தையும்செய்ய வல்ல வர்; அவர் செய்ய நினைத்தது தடை படாது" (யோபு 9:10; 42:2). எல்ஷடாய்*

*(அ) சர்வ வல்லமையுள்ள தேவன் எ ன்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங் கள் உண்டு. 1.நினைப்பதற்கும் வே ண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதி கமாய் ஆசீர்வதிக்கிறவர்; 2.மகா வ ல்லமையும் பயங்கரமுமான காரிய ங்களை செய்யக் கூடியவர்; 3.தா யைப்போன்ற மார்பை உடையவர்.*




*அன்பானவர்களே! ஆபிரகாமின் வாழ்க்கையிலே எல்ஷடாய் தேவன் அசாத்தியமான காரியங்களை செ ய்தார். ஒருசந்ததி உருவாவதற்கு ஏ துவல்லாத நிலையில், தன் மனை வியின் கர்ப்பம், தன்னுடைய சரீரம் செத்துப்போன நிலையில், கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்த த்தம், "நான் உன்னை பெரிய ஜாதி யாக்குவேன்; உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போலவும், கடற்க ரை மணலைப் போலவும் பெருகப்ப ண்ணுவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்". ஆபி ரகாம் சாராளின் சரீர சூழ்நிலைக ளும், ஆண்டவர் சொன்ன வாக்குத் தத்தங்களும் நேர் எதிரானவைகள். ஆனால், விசுவாசிக்கிறதற்கேதுவ ல்லாத சூழ்நிலையில், ஆபிரகாம் அப்படியே அந்த வார்த்தைகளை வி சுவாசித்தான். தேவன் சொன்னால் சொன்னது தான்.அதிலே எந்தவொ ரு மாற்றமும் கிடையாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும். கர்த்தரு டைய வார்த்தை ஒருநாளும் பொய் யாய் போகாது.*




*பிரியமானவர்களே! மனிதன் மாறு வான்; அவன் வார்த்தைகள்/ உறவு கள்/அன்பு ஒருநாள் மாறிப்போகும். ஆனால்,உன்னைக் குறித்த சர்வ வ ல்லவருடைய நோக்கமும்,உன்மேல் அவர் வைத்திருக்கிற அன்பும், உன க்காக அவர் சொல்லியிருக்கிற தீர் க்கதரிசன வார்த்தைகளும் ஒருநா ளும் மாறவே மாறாது. உன் வாழ்க் கையில் சர்வவல்லவருடைய அற்பு தத்திற்காக ஏங்கி நிற்கிறாயோ? ம னுஷனுடைய சக்தியினாலும், அவ னது வார்த்தைகளினாலும் நீ கை விடப்பட்டு ஏமாந்து நிற்கிறாயோ? மருத்துவர்களால், மருத்துவத்தால் கைவிடப்பட்டு, வியாதியின் உச்சக் கட்ட தாக்குதலினால் மரணத்தின் விளிம்பிற்கே வந்துவிட்டாயோ?தெ ய்வம் இறங்கினாலொழிய, தயவு காண்பித்தாலொழிய இந்த காரிய த்தை நான் நிச்சயமாய் இழந்துவி டுவேன் என்று கலங்கி நிற்கிறா யோ?ஒரு குழந்தை பாக்கியமில்லா மல் அவமானப்பட்டு நிர்கதியாய் நி ற்கிறாயோ? கவலைப்படாதிருங்க ள்! சர்வவல்லவராகிய உன் தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரு டைய கரத்திலிருந்து பெற்ற எந்த வொரு ஆசீர்வாதத்தையும் உன் வா ழ்க்கையிலே நீ இழந்துபோவதேயி ல்லை.அவர் இல்லாதவைகளை இ ருக்கிறவைகளாய் அழைக்கிற தே வன். அவரால் செய்யக்கூடாத அதி சயமான காரியம் ஒன்றுமே இல் லை. இன்றைக்கு அவருடைய முக த்தை நோக்கிப்பார். நீ ஒருபோதும் வெட்கப்பட்டு போகமாட்டாய். கர்த்த ருடையவழிகளும்,அவருடைய அற் புதங்களும் இனி உன் வாழ்க்கை யில் மறைந்திருக்கப் போவதேயில் லை.அவருடைய மகிமை உன் வாழ் க்கையிலே வெளியரங்கமாகிற நே ரம்வந்துவிட்டது.ஒருபோதும் அதை ரியத்திற்கோ,அவிசுவாசத்திற்கோ இடம் கொடாதிருங்கள்! முடியப்போ கிற நிலையிலிருக்கிற உன்காரிய ங்கள் துளிர்க்க ஆரம்பிக்கிற நேரம் இது. உன்துக்கம் சந்தோஷமாக மா றும். உன் இருதயம் கலங்காதிருப்ப தாகஉங்களுக்காக ஜெபிக்கிறேன்.*


தேவன் உங்களுக்காக ஆயத்தம் பண்ணினவைகளை சுதந்தரித்துக் கொள்ள ஆசையாய் ஓடுங்கள்

*பிலிப்பியர் 3:12.*

*"கிறிஸ்து இயேசுவினால் நான் எத ற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான்பிடித்துக்கொள்ளும்படி ஆசை யாய் தொடர்கிறேன்".*

*தேவபிள்ளையே! அப்.பவுல் தன்னு டைய வாழ்க்கையின் நோக்கத்தை யும், தான் எதற்காக கர்த்தரால் பிடி க்கப்பட்டேன் என்பதை அறியும்படி யாகவும் தன் மனதைத் திருப்பினா ர். ஒரு காலத்திலே தேவ ஜனங்க ளை பயமுறுத்தி கொலைசெய்யவு ம்,திருச்சபைகளை துன்பப்படுத்தி, பாழாக்கவும் அலைந்துக் கொண்டி ருந்த சவுல், தமஸ்குவீதியிலே நடந் து திரிந்தபோது,எதிர்பாராதவிதமா க கர்த்தர் அவரை சந்தித்தார். ஒரு பேரொளி அவர்மேல் வீசினது. செத் தவனைப் போல தரையிலே விழுந் தார். உடனே, தன் வாழ்க்கையை இ யேசுவுக்கு அர்ப்பணித்தபோது,தன து தரிசனத்தையும், தன்னைக் குறி த்த தேவனுடைய நோக்கத்தையும் உணர்ந்துக் கொள்ள தன் இருதயத் தை திறந்துக் கொடுத்தார். கர்த்தர் சிலரதுவாழ்க்கையிலே இடைபட்டு, அவர்களை சந்தித்து,தமது இரட்சிப் பை வெளிப்படுத்த நினைக்கிற நே ரங்களில், கிருபையாய் கிடைக்கிற பொன்னான தருணத்தை வீணாக் கி,சாக்குப்போக்கு சொல்லி, விலை யேறப்பெற்றஇரட்சிப்பை உதாசீண ப்படுத்தி விடுகிறார்கள்.ஆனால், ச வுலோ தனதுவாழ்க்கையிலேகிடை த்த இந்த தருணத்தைஉடனே பயன் படுத்திக் கொண்டு, தேவனுடைய பாதத்திலே தன் வாழ்க்கையை அர் ப்பணித்தார்.அவர் ஆண்டவரிடத்தி ல் கேட்ட முதலாவது கேள்வி, “ஆண் டவரே, நீர் யார்?” என்பதாயிருந்தது. முதலாவது,ஒருவன் கர்த்தரை அறி கிறஅறிவை அடைந்தப்பிறகுதான், தன்னுடைய வாழ்க்கையின் நோக் கத்தையும் தரிசனத்தையும் தெளி வாக அறிந்துக்கொள்ள முடியும்.*




*அன்பானவர்களே! “நான் யார்? எத ற்காக இந்த பூமியிலே பிறந்தேன்? என் இலட்சியம் என்ன?” என்று அறி ய முற்படுவதை சற்று ஒதுக்கி வை த்துவிட்டு, “ஆண்டவரே நீர் யார்?” எ ன்று கேட்டுப்பாருங்கள். பழையஏற் பாட்டு,புதியஏற்பாட்டுபரிசுத்தவான் கள், தங்களது வாழ்க்கையின் பல் வேறுபகுதிகளிலே கர்த்தர் யார்? அ வர் எப்படிப்பட்டவர்? என்று அறிந்து க்கொள்ள தங்களது மனதைப் பிர யோகித்தார்கள். கர்த்தர் தன்னைப் பற்றி “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று சுருக்கமாக ஒரே வா ர்த்தையில் சவுலுக்குத் தெரியப்படு த்தினார்.அப்.பவுலின் வாழ்க்கையி ன்நோக்கத்தைக் குறித்து,தமது ஊ ழியக்காரனாகிய அனனியாவிடம், “அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக் களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ம் என்னுடைய நாமத்தை அறிவிக் கிறதற்காக நான்தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்.9:15) என்று விளக்கினார். அப்.பவுல்,தன் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந் துக் கொண்டவராய், “கிறிஸ்து இ யேசுவினால் நான் எதற்காகப் பிடி க்கப்பட்டேனோ,அதை நான் பிடித்து க்கொள்ளும்படி ஆசையாய் தொடர் கிறேன்” (பிலி.3:12) என்றார்.*




*பிரியமானவர்களே! உங்களைக் கு றித்த தேவனுடையஅழைப்பும், உங் களுக்கான கிருபைவரங்களும் எந் நாளும் மாறாதவைகள்(ரோம.11:29) தேவனுடைய ராஜ்யமும், உங்களு க்கென்று தேவன் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிற நீதியின் ஜீவ கிரீட முமே உங்கள்வாழ்க்கையின் தலை யாய இலட்சியமும் இலக்காயுமிரு க்கட்டும்.உங்கள்வாழ்க்கையிலேயு ம் உங்களைக் குறித்து கர்த்தருக்கு உயர்ந்த நோக்கம் இருக்கிறது என் பதை மறந்துபோகாதிருங்கள். உங் கள் வாழ்க்கையின் நோக்கத்தையு ம், தரிசனத்தையும், கர்த்தருடைய நோக்கத்தோடும் தரிசனத்தோடும் இணைத்துக் கொள்ளுங்கள். உல கப் பொருட்களையல்ல; ஆத்துமாக் களைக் குறித்த ஒரு கரிசனையோ டு எப்பொழுதும் செயல்படுங்கள். ஆத்தும வாழ்வுக்கு முன்னுரிமை அளியுங்கள். அவ்வப்போது, உங்க ளை ஆராய்ந்துப் பார்த்து, நீங்கள் கர்த்தருடைய சித்தத்தின்படி தான் வாழ்கிறீர்களா? சரியான இலக்கை நோக்கி தான் பயணிக்கிறீர்களா? தேவனுடைய அழைப்பிலே உறுதி யாய் நிற்கிறீர்களா? கர்த்தருடைய சரியான ஆவியினால் தான் நடத்த ப்படுகிறீர்களா? இல்லாவிட்டால் உ ங்கள் சுயஇச்சையின்படி நடத்தப்ப டுகிறீர்களா? என்பதை சற்று எண் ணிப் பார்த்துக் கொண்டேயிருங்க ள். ஆவியானவர் உங்களை நடத்து ம்போது,நிச்சயம் உங்கள் சிந்தை த டுமாறாது; எப்பேர்பட்ட கொள்ளை நோயை கண்டும் உங்கள் இருதய ம் கலங்காது; தேவைகளைக் குறித் து அங்கலாய்க்கமாட்டீர்கள்; சூழ்நி லைகள் ஒருபோதும் உங்களை அடி மைப்படுத்தி ஆளமுடியாது; மாறாக நீங்களே அவைகளை ஆளுகை செ ய்வீர்கள்; உங்கள் வாழ்க்கை ஜெய மாயிருக்கும்.இயேசுவே உங்கள் ஆ சையாகவும், இந்த உலகம் உங்களு க்கு வெறுப்பாகவும் மாறிவிடும்; கி றிஸ்துவுக்காக முன்வைத்த காலை எந்தவொரு சூழ்நிலையினிமித்த மும் பின்வைக்கமாட்டீர்கள். கர்த்த ருடைய சித்தத்தின் பாதையில் செ வ்வையாய் ஓட இன்றைக்கே ஒரு தீர்மானம் எடுத்துவிடுங்கள். தேவ ஆவியானவர் உங்களுக்கு ஒத்தா சையாயிருப்பார்.உங்கள் இலட்சிய த்தை அடைந்தே தீருவீர்கள். உங்க ளைக்குறித்த பிசாசின் முழு முயற் சியும் தோல்வியில் முடியும். ஒவ் வொருநாளும் நீங்கள் தேவஆவியி னால் நடத்தப்பட உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*


*யோவான் 14:27
*"சமாதானத்தை உங்களுக்கு வைத் துப்போகிறேன், என்னுடைய சமா தானத்தையே உங்களுக்குக் கொடு க்கிறேன்; உலகம் கொடுக்கிற பிர காரம் நான் உங்களுக்குக் கொடுக் கிறதில்லை. உங்கள் இருதயம் கல ங்காமலும் பயப்படாமலும் இருப்ப தாக".*


*தேவபிள்ளையே!இயேசுவின்வாயி லிருந்துபுறப்பட்ட ஒரு கிருபைபொ ருந்தின வார்த்தை. இந்த உலகத்தி ல் யாரும்இதுவரை சொல்லியிராத தும், சொல்ல முடியாததுமான ஒரு வார்த்தை. அதிகாரம் நிறைந்த ஒரு வார்த்தை. நம்முடைய வாழ்க்கையி லே நம்பிக்கையூட்டும் ஒரு வார்த் தை.இந்தஉலகத்தின் தற்போதைய சூழ்நிலை மனுக்குலத்தையே நடு ங்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சமாதானத்தை கெ டுத்துக்கொண்டிருக்கிறது. எதிர்கா லத்தின் நம்பிக்கையை சீர்குலைத் துக்கொண்டிருக்கிறது.இந்தநிலை மையில்தான் கர்த்தர் இந்நாளில் உ ங்களுக்கு வாக்குக்கொடுக்கிறார். "மகனே(ளே), கலங்காதே! என்னு டைய சமாதானத்தையே நான் உன க்குக் கொடுக்கிறேன். இந்த உலக ம் தருகிற சமாதானத்தையல்ல; நா ன் தருகிற இந்த சமாதானத்தை இ வ்வுலகம் உனக்கு தரவும் முடியாது; உன்னைவிட்டு எடுத்துப் போடவும் முடியாது”. இந்தஉலகமும் ஒரு மனி தனுக்கு சமாதானத்தைக்கொடுக்க முடியும். அது தற்காலிகமானது தா ன்.மதுபானம்,புகைபிடித்தல், விபச் சாரம், வேசித்தனம், களியாட்டம், சி னிமா போன்றவைகளினால் கிடை க்கிற சமாதானம், அந்த போதை இ ருக்கிறவரை தான்கிடைக்கும். அதி னாலே அவன் திருப்தியடைந்து வி டவே முடியாது. ஆகவேதான்,இவை களை சிற்றின்பங்கள் என்று அ ழைக்கிறோம்.ஆனால் பரலோக தே வன் தருவதோ பேரின்பமானவைக ள். நயவஞ்சகப் பிசாசானவன் ஜன ங்களை மதிமயக்கி,இந்தஉலகத்தி ன் சிற்றின்பங்களையே அவன் க ண்களுக்கு முன்பாக பேரின்பமாக காண்பித்து, தன்னுடைய மாய வ லையில் இந்த மனுக்குலத்தை சிக் க வைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு மனிதனின் வெற்றியுள்ள வா ழ்க்கைக்கு மிகமுக்கியமானது சமா தானம்.*




*அன்பானவர்களே! ஒரு மனிதன் த ன் வாழ்க்கையிலே சமாதானத்தை இழக்கும் போது, அவன் மனம் தற் கொலையை நோக்கிப் போகிறது. அவன் சம்பாதிக்கிறபணத்தையோ ஆஸ்தியையோ, சொத்துக்களை யோ,அந்தஸ்தையோ,புகழைக்கொ ண்டோ, இந்த சமாதானத்தை வி லைகொடுத்து வாங்கி விடமுடியா து. இந்த சமாதானம் ஒரு மனிதனு க்கு தெய்வீக இரட்சிப்பையும், மகி ழ்ச்சியையும்,விடுதலையையும் மா த்திரமல்ல; அவன் மோட்ச லோகத் திற்கு வந்து சேரும்வரைக்கும் அவ னை வழிநடத்த போதுமானதாயிரு க்கிறது.இந்த உலகவாழ்க்கையின் எல்லாசூழ்நிலைகளிலும் அவனை மனதிருப்தியோடு நடத்துகிறது. இ ந்த சமாதானம் நம் வாழ்க்கையிலே நிலைத்திருக்க வேண்டுமானால், வேதம் சொல்கிறது, “உம்மை (கர்த் தரை) உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே(கர் த்தரையே) நம்பியிருக்கிறபடியால், நீர் அவனை பூரண சமாதானத்துட ன் காத்துக்கொள்வீர்”(ஏசாயா 26:3). உங்கள் வாழ்க்கையிலே தேவனை மாத்திரமே உறுதியாய் சார்ந்து வா ழப் பழகிக் கொள்ள வேண்டும்; அ வரை மாத்திரமே நம்பிக்கையாய் கொண்டு வாழவேண்டும். உங்கள் நம்பிக்கையை அழிந்து போகிற உ லகக் காரியங்களின்மேல் வைத்து விடக்கூடாது. இந்த உலகம் ஆசை யை காட்டி, உங்களை மோசம்பண் ணுகிற உலகம். நீங்கள் இந்த சமா தானத்தை தழுவிக்கொள்ளும் போ து, அதோடுகூட தேவகிருபையும் உ ங்களோடு சேர்ந்துக் கொள்ளுகிற து.தேவனுடைய கிருபையையும் ச மாதானத்தையும் பிரிக்கவேமுடியா து. வேதத்தில் அநேக இடங்களில் கிருபை என்ற வார்த்தையோடுகூட சமாதானம் என்ற வார்த்தையும் இ ணைந்திருப்பதை காணமுடியும். ம லைகள் விலகிப்போகும்; பர்வதங் கள் நிலைபெயர்ந்து விடும்; ஆனா ல் தேவனுடையகிருபையும் சமாதா னமும் ஒருபோதும் உங்களைவிட்டு விலகவே விலகாது என்று கர்த்தர் சொல்கிறார் (ஏசாயா 54:10).*




*பிரியமானவர்களே! உங்களுக்கு ச மாதானத்தைக் கொடுக்கும்படியாக வே, அருமை இரட்சகர் இயேசு கல் வாரி சிலுவையிலே மரணத்தை ரு சிபார்த்தார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அந்த ஆக்கினையை இயேசு சுமந்தபடியினால்தான், நம் மை சுகமாக்கும் தழும்பு அவர் சரீரத் திலே ஏற்பட்டது;அந்த தழும்பினால் தான் இன்றைக்கு அவருடைய தெ ய்வீகசுகத்தையும்ஆரோக்கியத்தை யும் நாம் அனுபவித்துக் கொண்டிரு க்கிறோம். எத்தனை ஒரு பாக்கியம் பெற்றவர்கள் நாம்! அருள்நாதர் இ யேசுவின் இந்த பெருந் தியாகத்தி ற்கு ஈடாக எதையும் விலைக்கிரயம் செலுத்த முடியாது. தம்முடைய சொ ந்தக்குமாரனென்றும் பாராமல், நம் மெல்லாருக்காகவும்இயேசுவை பா டுகளுக்கு ஒப்புக்கொடுத்தவர்,அவ ரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?(ரோ ம.8:32). இன்றைக்கு எந்தெந்த காரி யத்திலே தேவசமாதானத்தை இழந் து தவிக்கிறீர்கள்?பொல்லாத வியா தி பெலவீனம், பொருளாதார பற்றா க்குறை, குடும்பத்திலே ஒருமனமற் ற சூழல் உலக சிற்றின்பங்களிலே சிக்கித் தடுமாறுகிற நிலை,பாடு உ பத்திரவங்கள், அநீதியினால் வந்த தலைகுனிவு போன்ற காரியங்கள் உங்கள் வாழ்க்கையின் சமாதானத் தை கெடுக்கலாம்;மனம் கலங்காதி ருங்கள்!சமாதானத்தின்தேவன் தா மே இப்படிப்பட்டதான காரியத்தை உங்கள் வாழ்க்கையிலே கொண்டு வந்து, தேவ சமாதானத்தை கெடுக் க நினைக்கிற சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவா ர்; சீக்கிரத்திலே விடுதலையைக் காண்பீர்கள். உங்கள் இருதயம் கல ங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*





*சங்கீதம் 8:1*
*"எங்கள்ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எ வ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கி றது! உம்முடைய மகத்துவத்தை வா னங்களுக்கு மேலாக வைத்தீர்".*

*தேவபிள்ளையே! நம்முடைய ஆண் டவர் மகா மேன்மையானவர்; அவரு டைய கிரியைகள் / சிருஷ்டிப்புகள் மகா ஆச்சரியமானவைகள்; அவரு டைய மேன்மைக்கு இணையான ஒரு மேன்மையோ/ சக்தியோ இந்த பூமியிலே ஒன்றுமே கிடையாது. தா வீது ராஜா உலக வாழ்க்கையிலே ப ல மேன்மைகளை கண்டிருக்கக் கூ டும்; யுத்தத்திலே ஏராளமான வெற் றியை பெற்றிருக்கக் கூடும்; மேன் மையான கிரீடங்களை பார்த்திருக் கக் கூடும்; ஆடம்பர அரண்மனைக ளை, ஆஸ்திகளை, செல்வங்களை அனுபவித்திருக்கக்கூடும்;ஆனால், அவைகள் எல்லாவற்றைப் பார்க்கி லும் கர்த்தருடையநாமத்தையே மே ன்மையுள்ளதாகக்கண்டார். காரண ம்,இந்த உலகமேன்மைக்கும், கர்த்த ருடைய நாமத்தின் மேன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை தன் ராஜ்ய பாரத்திலே நன்கு அறிந்திருந்தார்; அதைத் தன் வாழ்க்கையிலே அனு பவித்திருந்தார். இந்த உலக மேன் மையை நம்பினவர்களெல்லாம் மு றிந்து விழுந்து போனார்கள்; கர்த்த ருடைய மேன்மையை சார்ந்திருந்த வர்களெல்லாம் எழுந்து நிமிர்ந்து காலூன்றி நின்றார்கள்(சங்.20:7). த ன்னை சுற்றிலுமிருந்த சத்துருக்க ளுக்கு மத்தியில் தன்னுடைய கொ ம்பை உயர்த்தி, தன்னை தலைநிமி ர்ந்து வாழப்பண்ணின தெய்வத்தி ன் நாமத்தையும், அற்பமான வாழ்க் கையை ராஜாங்க வாழ்க்கையாக மாற்றின அவருடைய மகத்துவத் தையும் அவரால்பெருமைப்படுத்தா மல் இருக்க முடியவில்லை. இந்த உ லகம் நம்மை வஞ்சிக்கும்; பிசாசு ந ம்மை மேன்மையிலிருந்து விழத் த ள்ளுவான்;மாம்சமோ சிற்றின்ப மே ன்மைக்குள் நம்மை சிறைப்படுத்து ம். ஆனால், நம்மைத் தாயின் கருவி லே தெரிந்துகொண்டவரும், அவரு டைய மகா மேன்மையான வாக்குத் தத்தங்களுக்கு நேராய் நம்மை வழி நடத்துகிறவருமான தேவனுடைய இரக்கத்திற்கும் தயவிற்கும் எப் போதும் நன்றியுள்ளவர்களாக நாம் வாழ்வோம்.*




*அன்பானவர்களே!நம்முடைய மேன் மை என்ன? கர்த்தருடையநாமம் நம க்குத் தரிப்பிக்கப்பட்டிருக்கிறதே அ ந்த மேன்மை. அது கர்த்தரோடு நாம் செய்திருக்கிற உடன்படிக்கையாகு ம்.“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜன ங்கள்”என்று கர்த்தர் உரிமையோடு சொல்லுகிறார் (2 நாளா.7:14). ஒரு பெண் மிக ஏழ்மையானவளாய், படி ப்பறிவில்லாதவளாய், அழகில் கு றைந்தவளாய் இருக்கலாம். ஆனால், ஒரு மகா பெரிய செல்வந்தன் அ வளைத் திருமணம் செய்துக்கொள் ளும்போது அந்த செல்வந்தனுடை ய பெயர் அவளுக்குத் தரிப்பிக்கப்ப டுகிறது.கையெழுத்திடும்போதெல் லாம் தன்னுடைய பெயரோடு செல் வந்தனின் பெயரையும் இணைத்து கையொப்பமிடுகிறாள்.அதுஅவளு க்கு அந்தஸ்தையும்,பெருமையையு ம்,மேன்மையையும் தருகிறதல்ல வா? அதுபோல, தேவனுடைய பிள் ளைகளாகிய நமக்கும்கூட கர்த்தரு டைய நாமம் எவ்வளவு பெரிய அந்த ஸ்தையும் மேன்மையையும் தருகி றது. கர்த்தருடைய நாமம் பலத்தத் துருகம்; நீதிமான் அதற்குள்ளே ஓடி சுகமாய்தங்கியிருப்பான்(நீதி.18:10) புதிய ஏற்பாட்டிலே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, தம்முடைய நாமத்தை பயன்படுத்திக் கொள்ளு ம்படி சொன்னார். “நீங்கள் என் நாம த்தினாலே எதைக் கேட்பீர்களோ, கு மாரனில் பிதா மகிமைப்படும்படியா க,அதைச்செய்வேன்(யோவா.14:13); நீங்கள் என் நாமத்தினாலே பிதாவி னிடத்தில் கேட்டுக்கொள்வது எது வோ அதை அவர் உங்களுக்குத் தந் தருளுவார் (யோவா.16:23)”. அந்த நாமத்தையே பயன்படுத்தி பேதுரு வும் யோவானும் பிறவிச் சப்பாணி யை குதித்தெழும்பி நடக்கப்பண் ணினார்களே! அந்த நாமத்திலே தான் என்ன ஒரு மேன்மை! அதிசய ம்! அற்புதம்! பார்த்தீர்களா!*




*பிரியமானவர்களே! அருள்நாதர் இ யேசு கிறிஸ்து தமது விலையேறப் பெற்றஇரத்தத்தை நமக்காக சிந்தி, அந்த நாமத்தினாலுண்டான மேன் மையை சுதந்தரமாக நமக்குத்தந்தி ருக்கிறாரே! அந்த நாமத்தின் மேன் மையை சம்பூரணமாய் உங்கள் வா ழ்க்கையில்அனுபவிக்கமுடிகிறதா? வேதம்சொல்கிறது:“அவருடைய நா மத்தின் மேல் விசுவாசமுள்ளவர்க ளாய் அவரை ஏற்றுக்கொண்டவர்க ள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைக ளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (யோவா.1:12); அப்படி யானால் நீங்கள் மிகவும் விலையே றப்பெற்றவர்களல்லவா? விசேஷ மானவர்களல்லவா? கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பெற்றவர்களல்ல வா?பரலோக ராஜ்ஜியத்தின் சொந் தக்காரர்களல்லவா? நான் எங்கேயி ருக்கிறேனோ அங்கே என் ஊழியக் காரனும் இருப்பான் (யோவா.12:26) என்றுஇயேசுசொல்லியிருப்பதால், உங்களுடைய ஜீவியம் கிறிஸ்துவு க்குள் மகா மேன்மையான ஒன்றா ய் இருக்கிறது;இந்த மேன்மைதான் கிறிஸ்துவோடு கூட அவருடைய சி ங்காசனத்திற்குமுன்பாகஉங்களை இணைக்கப் போகிறது. இந்த மகா மேன்மையை காத்துக் கொள்ள நம் முடைய ஆதிமுற்பிதாக்களில் அநே கர் தங்களை இரத்த சாட்சிகளாய் மரிக்க ஒப்புக்கொடுத்தார்கள். கிறி ஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாய லைஅடையும்படிக்கு,அவர்கள் விடு தலைபெறசம்மதியாமல் வாதிக்கப் பட்டார்கள் (எபி.11:35). ஆகவே, இன் றைக்கு ஈவாய், தானமாய், இரக்க மாய் பெற்றிருக்கிற கிறிஸ்துவின் மகா மேன்மையான ஆவிக்குரிய பொக்கிஷங்களையும்,அவருடைய நாமத்தையும் உங்கள் வாழ்க்கையி லே காத்துக்கொள்ள, அற்பமான இ ந்த உலகத்தின் காரியங்களை உத றித் தள்ளிவிட்டு, லாபமாயிருந்த எ ல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமும்குப்பையுமென்றெண்ணி நியமித்திருக்கிற அந்த பரலோக மேன்மைக்கு நேராய் உங்கள் கண் களை பதித்தவர்களாக வாழ்க்கை யில் முன்னேறிச்செல்லுங்கள். பரி சுத்த ஆவியானவர் உங்களுக்கு உ தவிச் செய்வாராக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*


மகா மேன்மையான பாக்கியத்திற் குள் உங்களை வழிநடத்தும் தேவ பக்தி
*1 தீமோத்தேயு 3:16*
    *"அன்றியும் தேவபக்திக்குரிய இரக சியமானது யாவரும் ஒப்புக்கொள் ளுகிறபடியே மகா மேன்மையுள்ள து".*

*தேவபிள்ளையே! நேற்றைய தினத் திலும்கூடகர்த்தருடையநாமம் மகா மேன்மையானதுஎன்பதை தியானி த்தோம். இன்றைக்கும் ஆவிக்குரிய மகா மேன்மையான காரியங்களில் ஒன்றான தேவபக்தியைக் குறித்து சிந்திப்போம். வேதத்திலே, கர்த்தரு டைய நாமம், அவரை அறிகிற அறி வு, அவருக்கு செலுத்துகிற பலி, அ வருடைய உயிர்த்தெழுதல், பரம தே சம், அவருடைய சுதந்தரம், வாக்குத் தத்தங்கள் போன்ற மேன்மையான காரியங்களைக்குறித்து நாம் பார்க் கலாம். மாத்திரமல்ல,தேவபக்தியும் கூட மகா மேன்மையானது. இந்த ந வீன காலத்திலே பொய்யர்களும், பு ரட்டர்களும், எத்தர்களும் உலகப் பத விகளில் மேன்மையான இடத்திலி ருக்கிறதுபோல நாம் உணருகிறோ ம்.நீதி நியாயத்தோடு நடக்கிறவர்க ள்,தூய்மையானவர்கள்,பக்தியுள்ள வர்கள் மிகவும் அற்பமாக எண்ணப் படுகிறார்கள். அவர்கள் சிறுமைப்ப டுத்தவும், ஒதுக்கப்படவும், ஏளனமு ம், பரியாசமும் செய்யப்படுகிறார்க ள். பக்தியுள்ளவர்களை இந்த உலக ம் நிராகரிக்கிறது. கிறிஸ்துஇயேசு வுக்குள் தேவபக்தியாய் நடக்க மன தாயிருக்கிற யாவரும் துன்பப்படு வார்கள் (2 தீமோ.3:12) என்று வேதம் சொல்கிறது. ஆனால், தேவனுடை ய பார்வையிலே தேவபக்தியானது மகா மேன்மையுள்ளது; பக்தியோடு நடக்கிறவர்களை தேவன் கனம்ப ண்ணுகிறார். ஏன் தேவபக்தி மேன் மையுள்ளது? தாவீது பக்தன் சொல் கிறார்:“பக்தியுள்ளவனை கர்த்தர் த மக்காகத் தெரிந்துகொண்டாரென் று அறியுங்கள்”(சங்.4:3). வெளிப்பா ர்வைக்கு தேவபக்தியானது உடனடி யாக பலன் தருவதுபோல தோன்றா விட்டாலும், நாளடைவில் தேவபக்தி யுள்ள குடும்பங்களின் சந்ததிகளெ ல்லாம் கர்த்தரால் நேசிக்கப்படுகி றதையும், உயர்த்தப்படுகிறதையும், ஆசீர்வதிக்கப்பட்டு செழித்தோங்கு கிறதையும் நாம் காணமுடியும். அதை என்னுடைய அனுபவத்திலே நான் பார்த்திருக்கிறேன்.*




*அன்பானவர்களே! ஒரு அரசாங்க அதிகாரி கொஞ்சமும் தேவபக்தியி ல்லாமல், சிகரெட் பிடிப்பதும், லஞ் சம் வாங்குவதும், நியாயங்களை புரட்டுவதுமான கேடான காரியங்க ளை செய்து,கர்த்தருடைய நாமத்தி ற்கு மிகுந்த அவபக்தியை கொண் டுவந்தார். ஆனால், முடிவிலே ஒரு நாள் லஞ்சம் வாங்கியபோது பிடிப ட்டு வேலையை இழந்தார். நாளடை விலே, அந்த குடும்பத்தை சாபங்க ளும், பிள்ளைகளை பயங்கரமான அசுத்த ஆவிகளும் ஆக்கிரமித்துக் கொண்டன.அவர்கள்பிள்ளைகளெ ல்லாம் பைத்தியங்களாக அலைந் துக் கொண்டிருந்தார்கள். ஆம், நம் முடைய குடும்பங்கள், எதிர்கால த லைமுறைகள் ஆசீர்வதிக்கப்படவே ண்டுமேயானால், எந்த சூழ்நிலை யிலும் தேவபக்தியை விட்டுவிடாதி ருங்கள். தேவபக்திக்கு உங்கள் வா ழ்க்கையிலே முக்கியத்துவம்கொடு ங்கள்; எந்தவொரு உலக ஆதாயங் களுக்காகவும், லௌகீக சிற்றின்ப ங்களுக்காகவும் விலையேறப்பெற் ற மேன்மையான தேவபக்தியை வி ற்றுப்போட்டு விடாதிருங்கள். வேத வாசிப்பையும்,ஜெபத்தையும், சபை ஐக்கியத்தையும் உதாசீணப்படுத்தி விடாதிருங்கள். ஒருநாளும் மனச் சாட்சிக்கு விரோதமான செயலிலே இறங்கிவிடாதிருங்கள்.பக்தியையு ம்பரிசுத்தத்தையும் நீதிநேர்மையை யும் தேவபயத்தோடே காத்துக் கொ ள்ளுங்கள். ஆவிக்குரிய வாழ்க்கை யிலே பொக்கிஷமாய் கர்த்தர் தந்தி ருக்கிற மகா மேன்மையான இந்த தேவபக்தியை எடுத்துப்போட்டு, உ ங்களுக்குள்லௌகீகஅவபக்தியை விதைக்க சாத்தான் தந்திரமாய் வ கைதேடிக் கொண்டிருக்கிறான். ஆ கவே, நீங்கள் விழிப்புள்ளவர்களா ய் மிகுந்த ஜாக்கிரதையோடும் எச்ச ரிப்போடும் தேவபக்தியை காத்துக் கொள்ள பிரயாசப்படுங்கள்.*




*பிரியமானவர்களே! தேவபக்தியை சீரழிக்கிற உலகத்திலே நாம் வாழ்ந் துக் கொண்டிருக்கிறோம். தேவபக் திக்குவிரோதமானசாத்தானின் நய வஞ்சகக் கிரியைகள் வெளிப்படை யாக நம்முடைய அனுதின வாழ்க் கையில் போராடிக் கொண்டிருக்கி ன்றன.தேவபயத்தையும்,அவருடை ய கற்பனைகளையும் உறுதியாய் ப ற்றிக் கொள்கிற ஒருவரையும் இந் தஉலகமோ,சத்துருவோ, மாம்சமோ சேதப்படுத்த முடியாது; அவர்களு டைய தேவபக்தியை அசைக்க முடி யாது. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்க ளைசோதனையினின்று இரட்சிக்க வும்,அக்கிரமக்காரரை ஆக்கினைக் குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும்அறிந்திருக்கி றார் (2 பேது.2:9). தேவபக்தியானது உங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் ளாக ஜீவனுள்ளவர்களாக நிறுத்தி காத்துக்கொள்ளவல்லமையுள்ளது. தம்முடைய விலையேறப்பெற்ற தே வபக்தியின் மேன்மையான அனுப வத்தை உங்களுக்குள் உருவாக்கி னவர், அதை கிறிஸ்து இயேசுவின் வருகை வரைக்கும் உங்களுக்குள் காத்துக்கொள்ளவும், தேவபக்தியி லே உங்களை பெருகச் செய்யவும் அவர் வல்லவராயிருக்கிறார். ஆக வே, வாழ்க்கையிலே வருகிற பாடு உபத்திரவங்களைக் கண்டு சோர்ந் துபோகாதிருங்கள்;பிசாசின் வல்ல மைகளைக் கண்டு மிரண்டுவிடாதி ருங்கள்; வியாதி பெலவீனங்களை க்கண்டு பயந்துவிடாதிருங்கள்; இழப்புகள் தோல்விகளைக் கண்டு பெருமூச்சுவிடாதிருங்கள்; நிந்தை அவமானங்களைக் கண்டு கலங்கி விடாதிருங்கள்; அவைகள் ஒன்றும் கிறிஸ்து இயேசுவின் அன்பிலிருந் து எந்தநிலைமையிலும் உங்களை பிரித்துவிடவே முடியாது. கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் முற்றிலும் ஜெயம் பெற்றவர்களாயிருக்கிறீர் கள்; பெலத்தின்மேல் பெலனடைய வைத்து,தமது இராஜ்ஜியத்திலே உ ங்களை வெற்றியோடு நிலைநிறு த்த தேவபத்தியோடுகூட தம்முடை ய பெலத்தையும் கர்த்தர் தந்து உங் களை வழிநடத்துவாராக! மனம் கல ங்காதிருங்கள்! உங்களுக்காக ஜெ பிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.