அதிசயங்களை செய்வதில் நிகரற் ற தேவன்
*ஏசாயா 9:6*
*"கர்த்தத்துவம் அவர் தோளின் மே லிருக்கும்; அவர் நாமம்... அதிசய மானவர்".*
*தேவபிள்ளையே! நம்முடைய தேவ னுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நிக ரற்றபெயர்களில் ஒன்று அதிசயமா னவர். ஆங்கிலத்தில் WONDERFUL எ ன்று சொல்லப்படுகிறது.இந்த வார் த்தைக்கு 3அர்த்தங்கள் உண்டு. 1.அ திசயமானவர், 2.அற்புதமானவர், 3. ஆச்சரியமானவர்.கர்த்தரைப்போல ஒரு அதிசயமான தேவனை இந்த உலகத்திலே காணமுடியாது. இந்த பூமியையும், அதிலுள்ள சகல சிரு ஷ்டிப்புக்களையும், ஆதாமையும் ஏ வாளையும் உருவாக்கினவிதமே அ ற்புதமும் ஆச்சரியமுமானவைகள். இந்த உலகத்திலே அவர் நடப்பித்த, நடப்பித்துவருகிற, நடப்பிக்கப் போ கிற அநேகக் காரியங்கள் நம்மை பிரமிக்கவைக்கிறது. இயேசுவைக் குறித்து முன் அறிவித்திருந்த ஒவ் வொரு தீர்க்கதரிசனங்களும் ஆச்ச ரியமானவைகள். ஏன் அவர் அதிச யமானவர் என்றால், பிறப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் பாகவே அவர் ஸ்திரீயின் வித்தாய் இருப்பார்,சர்ப்பத்தின் தலையை ந சுக்குவார் என்றும், 500 ஆண்டுகளு க்கு முன்பே மீகா தீர்க்கதரிசியின் மூலம், அவர் எப்பிராத்தா என்னப்ப ட்ட பெத்லகேமில் பிறப்பார் என்றும் முன்னறிவிக்கப்பட்டு இருந்தது. அ தன்படியே அவர் கன்னி மரியாளிட த்தில் ஸ்திரீயின் வித்தாக, பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாகி, பெத்தல கேமிலே பிறந்தது அதிசயமல்லவா*
*?இயேசுவின் பிறப்பிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு எ டுத்துக் கொள்ளப்படும் வரையிலா ன அவரது முழு வாழ்க்கையும் அதி சயம்தான். அவர் பிறந்தபோது அதி சயமான நட்சத்திரம் வானத்தில் தோன்றி, கிழக்கிலிருந்து சாஸ்திரி களை வழிநடத்தி வந்தது, அதைக் கண்ட ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமும் கலங்கி நின்றது ஆச்சரிய மான காரியம்.*
*எனக்கன்பானவர்களே! வேதத்தில், மனோவா என்ற ஒரு மனிதன் கர்த் தரைக் கண்டு பிரமித்தவனாக, உம் நாமம் என்ன? என்று கேட்டபோது, எ ன் நாமம் அதிசயம் என்று சொல்லி, தமது அதிசயத்தை அவன் கண்க ளுக்கு முன்பாக விளங்கப்பண்ணி, பலிபீடத்திலிருந்து அக்கினி ஜுவா லையிலே வானத்திற்கு ஏறிப் போ னார். இஸ்ரவேலர்களின் கண்கள் ஆச்சரியப்படும்படியாக, மோசேயி ன் மூலமாக கர்த்தர் அற்புதங்களை யும் அதிசயங்களையும் வனாந்தர த்திலே செய்தார். யோசுவாவைக் கொண்டுசூரியனையும்சந்திரனை யும் அசையாமல் தரித்து நிற்கவை த்தார். தாவீதைக் கொண்டு ராட்சத னாகிய கோலியாத்தை வீழ்த்தினா ர்.எலியாவைக் கொண்டு வானத்தி லிருந்து அக்கினியை இறக்கினா ர்; பாகால் தீர்க்கதரிசிகளை கொன் றுபோட்டார். சுழல் காற்றிலே எலி யாவை பரலோகத்திற்கு ஏறிப் போ கப்பண்ணினார். இப்படியாக கண க்கற்ற அதிசயங்களையும் அற்புத ங்களையும் செய்த தேவன்,தனக்கு ள்ளே எவ்வளவாய் அதிசய வல்ல மையை கொண்டிருப்பாரென்பதை நினைத்தால் ஆச்சரியமாயிருக்கி றது. ஆம், நம் தேவன் சொல்லிலும் செயலிலும் ஆச்சரியமானவர்; ஆச் சரியப்படத்தக்க மகிமையான காரி யங்களைச் செய்கிறவர் (யோவா. 11:47).ஏழு உலக அதிசயங்களையும் உருவாக்கினவர்களெல்லாம் மண் ணோடு மறைந்துபோனார்கள்; ஆனால் அவைகளைப் பார்க்கிலும் மேலான அதிசயங்களுக்கெல்லாம் சொந்தக்காரராகிய நம் அருமை ஆ ண்டவர் இன்றைக்கும் உயிரோடிரு க்கிறார்.*
*பிரியமானவர்களே! இப்பேர்பட்ட அ திசயத்தின் தேவனைத் தான் நீங் கள் ஆராதிக்கிறீர்கள்; தெய்வமாக கொண்டிருக்கிறீர்கள். உங்களுடை ய வாழ்க்கையிலும் தேவன் கணக் கற்ற அதிசயங்களையும், கண்கள் ஆச்சரியப்படத்தக்க காரியங்களை யும்,நம்பமுடியாத அற்புதங்களையு ம் செய்திருக்கிறாரல்லவா? அந்த அதிசயத்தின் தேவன் இன்றைக்கு உங்களைப் பார்த்து சொல்கிறார்:*
*“பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்தி லும் செய்யப்படாத அதிசயங்களை உன்ஜனங்கள் எல்லாருக்கு முன்பா கவும் செய்வேன்; உன்னோடே இரு க்கிற ஜனங்களெல்லாரும் கர்த்தரு டைய செய்கையை காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செ ய்யும் காரியம் பயங்கரமாயிருக்கு ம்”(யாத்.34:10). ஆகவே, மனம் கலங் காதிருங்கள்! ஒருவராய் பெரிய அ திசயங்களை செய்கிறவரை மாத் திரம் உங்கள் வாழ்க்கையிலே உறு தியாய் பற்றிக் கொள்ளுங்கள். வே தத்திலே அவர் செய்திருக்கிற அதி சயங்களையெல்லாம் ஒவ்வொன் றாய் தியானித்துப் பாருங்கள். அவ ருடைய பலத்த செய்கையை உங்க ள் வாழ்க்கையிலே அப்படியே விசு வாசியுங்கள்! இன்றைக்கும் அவரு டைய அற்புத அதிசயங்களைச் செ ய்கிற வல்லமை குன்றிப் போகவே யில்லை. அவரின் அற்புத கரத்திற் குள் நீங்கள் அடங்கியிருந்தால்,கர் த்தர் உங்களைக் கொண்டும் பிரமி க்கத்தக்க அற்புதங்களை செய்து, தமது அதிசயத்தை விளங்கப்பண் ணுவார்; அவருடைய அதிசயத்தை கண்டு உங்கள் கண்கள் பூரிக்கும்*
*(மீகா7:15). அதிசய தேவனின் அற்பு தங்களை அனுபவிக்கவும் செயல் படுத்தவும் உங்களை ஆயத்தப்படு த்துங்கள்! உங்களுக்காக ஜெபிக்கி றேன்.*
வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை உங்கள் வாழ்க்கை யில் நடப்பிக்க இடங்கொடுங்கள்.
*ஏசாயா 9:6*
*"கர்த்தத்துவம் அவர் தோளின் மே லிருக்கும்; அவர் நாமம்... வல்லமை யுள்ள தேவன்".*
*தேவபிள்ளையே! கடந்த நாட்களில் நம்முடையதேவன்அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர் என்று தியா னித்தோம். இந்த நாளிலே நாம் சிந் திக்கப்போகிற அவருடைய நாமத் தின்பெயர் வல்லமையுள்ளதேவன். நம்தேவன் வல்லமையுள்ளவர். இந் த உலகத்திலுள்ள எல்லா நாமங்க ளின் வல்லமைகளைப்பார்க்கிலும் நம்முடைய ஆண்டவர் சர்வ வல்ல மையுடையவர். அவருடைய வல்ல மையின்பராக்கிரமத்திற்கு எல்லை யே கிடையாது; அளவுமில்லை. இ ந்த பூமியிலே தங்களுடைய வல்ல மையையும் பராக்கிரமத்தையும் நி லைநாட்ட எத்தனையோ ராஜாக்க ள்,ராட்சதர்கள்,மன்னர்களெல்லாம் தோன்றினார்கள்; கர்த்தருடைய வ ல்லமையை அழிக்கும்படிக்கு எழும் பினவர்களும் உண்டு; ஆனால்,அவ ர்களுடைய பேர் பிரஸ்தாபங்கள், வ ல்லமைகளெல்லாம் ஒருநாளிலே அவர்களோடுகூடஅழிந்துபோனது. இந்த முழு உலகத்தையும் தனது ஆ ளுகைக்குள் கொண்டு வரும்படி எ ழும்பின மகா அலெக்ஸாண்டர், த னது இரண்டு கரங்களையும் சவப் பெட்டிக்கு வெளியே நீட்டியிருக்கும் படி தன்னை படுக்கவைக்க வேண் டிக்கொண்டாராம். காரணம், இந்த உலகத்திலே வெறும் கையோடு வ ந்தேன், வெறுங்கையோடு போகி றேன் என்பதையும், என்னுடைய அ திகாரம், ஆளுகை, வல்லமைகளெ ல்லாம் ஒன்றுமேயில்லைஎன்பதை யும் இந்தஉலகம் அறிந்துகொள்ளட் டும் என்றுசொன்னாராம். ஆம், அது எத்தனை உண்மை பாருங்கள்! வே தத்திலே, ஆபிரகாமுக்கு தேவன் த ம்மை "சர்வ வல்லமையுள்ள தேவ னாக” வெளிப்படுத்தினதுமன்றி, த மது வல்லமையை அவரது வாழ்க் கையிலே நிரூபித்தும் காண்பித்தா ர்.ஆபிரகாமின் சரீரபெலனும், சாரா ளின் கர்ப்பமும் செத்துப்போன நி லைமையில்,தாம் வாக்குக்கொடுத் தபடியே 100 வயதில் ஆபிரகாமுக்கு பிள்ளையைத் தந்து, தமது வல்ல மையை வெளிப்படுத்தினார்.*
*அன்பானவர்களே! தமது வார்த்தை யின் வல்லமையைக் கொண்டு இ ந்த முழுஉலகத்தையும் சிருஷ்டித்த தேவன், தமக்குள் எவ்வளவாய் வல் லமையை கொண்டிருப்பார் என்ப தை சற்று சிந்தித்துப் பாருங்கள். க டல் அலையை அதட்டினவர், புயல் காற்றை நிறுத்தினவர்,கடலின் மே ல் நடந்தவர் வல்லமையுள்ள தேவ ன் அல்லவா? அவர்சொல்ல ஆகும்; கட்டளையிட நிற்கும். தேவனுடைய வல்லமையின் கிரியைகளை விசு வாசித்தவராகயோசுவா சூரியனை யும் சந்திரனையும் அப்படியே தரித் து நிற்க கட்டளையிட்ட போது, அது அப்படியே நின்றது,தேவனுடைய வ ல்லமையை நிரூபிக்கிறதல்லவா? இயேசுகிறிஸ்து தமது வல்லமையி னால் பிசாசுகளை துரத்தினார்; மரி த்தவர்களை உயிரோடெழுப்பினார்; வியாதியஸ்தர்களை சொஸ்தமாக் கினார்;குருடர்களுக்குபார்வைகொ டுத்தார்; சப்பாணிகளை நடக்கவை த்தார். இதெல்லாம் தேவனுடைய வல்லமையின் கிரியைகளல்லவா?*
*“வானத்திலும்பூமியிலும் உம்முடை ய கிரியைகளுக்கும் உம்முடைய வ ல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்ய த்தக்க தேவன் யார்?”(உபா.3:24) என் று வேதம் சொல்கிறது. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்த னத்திலிருந்து, தமது ஓங்கிய புயத் தினாலும், வல்லமையுள்ள கரத்தி னாலும் மகா பயங்கரமான செயல் களையெல்லாம் அந்த ஜனங்களு டைய கண்கள் காணச் செய்ததை யெல்லாம் அவர்கள்மறந்துபோனா ர்கள்; முறுமுறுத்தார்கள்; மறுதலித் தார்கள்; ஆகவே, அவர்கள் வனாந் தரத்திலே அழிக்கப்பட்டு போனார்க ள்.எந்த கண்கள் தேவனுடைய மகா பயங்கரமானகாரியங்களைக் கண் டதோ, அதே கண்கள் அவர்களுடை ய அழிவையும் பார்த்தது.*
*பிரியமானவர்களே!அதே வல்லமை யுள்ள தேவன் தான் இன்றைக்கும் உங்களைப் பார்த்து சொல்கிறார்:*
*“அவர்களைப் (சத்துருக்களை, பிரச் சனைகளை, கொள்ளை நோயை) பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகியகர்த்தர் உங்களுக்குள் ளே இருக்கிறார், அவர் வல்லமையு ம் பயங்கரமுமான தேவன்” (உபா.7: 21).ஆகவே,தேவனுடைய வல்லமை க்கு சவால்கொடுக்கிற எந்தவொரு உலக/மாம்ச/ பிசாசின் வல்லமைக ளுக்கும் உங்கள் வாழ்க்கையில் இ டங்கொடுக்காமலும், அடிமைப்படா மலும், அவைகளைக் கண்டு கலங் காமலுமிருங்கள். உங்களுக்குள் இ ருக்கிற தெய்வீக ஜீவனும், தேவபக் தியும்தேவனுடையதிவ்யவல்லமை யினால் உங்களுக்குஅருளப்பட்டிரு க்கிறது (2பேது.1:3). அதே வல்லமை தான் இந்த பூமியிலே உங்களை வ ழுவாமல் காத்து, அவருடைய மகி மையுள்ள சந்நிதானத்திலே மிகுந் த மகிழ்ச்சியோடே உங்களை மாசற் றவர்களாய் நிறுத்தவும் வல்லமை யுள்ளது. இந்த உலக வல்லமைக ளோ, தொற்றுநோயின் வல்லமைக ளோ,சாபத்தின் வல்லமைகளோ, உ ங்களைக்குறித்த தேவனுடைய சித் தத்தையோ, நோக்கத்தையோ மாற் றவேமுடியாது. குடும்பத்திலே, தனி ப்பட்ட வாழ்க்கையிலே, ஊழியத்தி லே, சமுதாயத்திலே, வேலைஸ்தல த்திலே உங்களைக் கொண்டு செய் யவேண்டிய காரியங்களை தேவன் கட்டாயம்செய்துமுடிப்பார்.அவர் செ ய்ய நினைத்த காரியம் ஒருநாளும் தடைபடாது. அவருடைய வல்லமை க்கு நீங்கள் தான் சாட்சிகள். உங்க ளைக் கொண்டுதான் கர்த்தர் தம்மு டைய வல்லமையை இந்த பூமியி லே விளங்கப்பண்ணப் போகிறார். ஆகவே,உங்கள் இருதயம் கலங்கா திருப்பதாக! உங்களுக்காக ஜெபிக் கிறேன்.*
நித்தியத்தை நோக்கி வழிநடத்தும் நித்திய பிதா
*ஏசாயா 9:6*
*"கர்த்தத்துவம் அவர்தோளின் மேலி ருக்கும்;அவர் நாமம்...நித்தியபிதா".*
*தேவபிள்ளையே!நாம் ஆராதிக்கிற தேவன் நித்திய பிதா (ETERNAL FATH ER). அவருக்கு ஆதியும் இல்லை; அ ந்தமும் இல்லை; அவரே அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறார்.அதுமட்டு மல்ல, அவர் நமக்கு ஒரு நல்ல தகப் பனும்கூட.இந்த உலகத்தகப்பன்மா ர்களெல்லாம் ஒருநாள் நம்மை விட் டுபிரிந்துபோய்விடுவார்கள்;ஆனா ல், நம் பரம தகப்பனாகிய அருமை ஆண்டவர் நித்திய பிதாவாக இந்த உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடுகூட இருந்து நம்மை வழிநடத்துகிறவர்.ரோமர் 8:*
*15 சொல்கிறது, “அப்பா பிதாவே எ ன்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசு விகாரஆவியைப் பெற்றீர்கள்”.இது தேவன் நம்மேல் வைத்திருக்கிற ம கா பெரிய அன்பையும் இரக்கத்தை யும் காண்பிக்கிறதல்லவா?இந்த உ லகத்திலே தகப்பனைப் போல இரு க்கிற எல்லோரையும் “அப்பா” என் று உரிமையோடு அழைத்துவிட மு டியாது. காரணம்,அவர்களெல்லாம் நமக்கு இரத்த சம்பந்தமானவர்கள ல்ல; இந்த உலகத்திலேயும் முப்பத் தி முக்கோடி தேவர்கள் தங்களை கடவுள் என்று சொல்லிக்கொண்டா லும்,தம்முடைய ஒரேபேரான குமார னை நமக்காக இந்தபூமிக்கு அனுப் பி,அளவற்ற தமதுஅன்பை நம்மேல் விளங்கப்பண்ணி, தமது கடைசி சொட்டு இரத்தத்தையும் விலைக்கி ரயம் கொடுத்து,தியாகமாய் நம்மை பாதாளத்தின்அழிவிலிருந்து மீட்டெ டுத்த அருமை தேவன் மாத்திரமே ந மது நித்திய பிதாவாக இருக்க முடி யும். அவர் நித்திய பிதாவாயிருக்கி றபடியினால்,அவரால்நமக்குக்கொ டுக்கப்படுகிற யாவும் நித்தியமான வைகள். நித்தியஜீவன், நித்திய வீ டு/ராஜ்யம் (பரலோகம்), நித்திய (க ன)மகிமை,நித்திய மீட்பு, நித்திய சு தந்தரம்,நித்திய இரட்சிப்பு, நித்திய வல்லமை, நித்திய ஆறுதல், நித்தி ய உடன்படிக்கை, நித்திய கட்டளை*
*/நியமம், இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.*
*அன்பானவர்களே! உலகப் பிரகார மானதகப்பன்மார் எவ்வளவாய் நம் மை நேசித்து அன்புகாட்டி, பாதுகா த்து பராமரித்து, எதிர்காலத்திற்கு வேண்டிய சகலவற்றையும் கரிச னையோடு ஆயத்தப்படுத்தும் போ து,உலகத் தோற்றத்திற்கு முன் நம் மைத் தெரிந்து கொண்ட நம் தேவ ன்,நமக்கு நித்தியத் தகப்பனாயிரு ந்து, நித்தியத்திற்குரிய சகலவற் றையும் நமக்கு சுதந்தரமாகத் தந்து இந்த வனாந்தர யாத்திரையிலே வ ழுவாமல் நம்மை பாதுகாத்து, தமது நித்திய ராஜ்யத்தையே நமக்காக ஆயத்தப்படுத்துவது ஆச்சரியத்தி லும் ஆச்சரியம்!பாக்கியத்திலும் பா க்கியம்! சிலாக்கியத்திலும் சிலாக் கியம்! அவர் நித்திய பிதாவாயிருந் தால்,அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நித்தியத்திற்கு சொந்தப் பி ள்ளைகள். அப்பா, பிதாவே என்ற ழைத்து, பிள்ளை என்கிற உரிமை யோடு, அவருடைய கிருபாசனத்த ண்டை கிட்டிச் சேருவது எத்தனை சிலாக்கியமானது! அவருடைய நா மத்தின் மேல் விசுவாசமுள்ளவர்க ளாய் அவரை ஏற்றுக்கொண்டவர்க ள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைக ளாகும்படி,அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறாரல்லவா? (யோ வா.1:12); நாம் பிள்ளைகளானால் சு தந்தரருமாமே. உலகத் தகப்பன் மரி க்கும் போது, நம் உள்ளம் வேதனை யால் துடிக்கிறது; எதிர்காலமே இரு ண்டு போகிறது; தடுமாறிப் போகி றோம். அதேநேரத்தில்,அவரைப் பா ர்க்கிலும் மேலான நித்தியத் தகப்ப னை நம் வாழ்க்கையில் இழக்கும் போதோ, அவரை மறந்து பின்வாங் கிப் போகும்போதோ நம் ஜீவியத்தி லே அந்த உணர்வு காணப்படுகிற தா? என்பதை சிந்தித்துப் பார்க்கிற வர்கள் மிகவும் சொற்பமே.*
*பிரியமானவர்களே!தகப்பன் தன் பி ள்ளைகளுக்கு இரங்குகிறது போல கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தகப்பனும் தாயும் நம்மைக் கைவிட்டாலும் கர்த்தர் நம் மை சேர்த்துக் கொள்ளுவார் (சங் 27:10). இந்த பூமியிலே உன் வாழ்நா ட்கள் நீடித்திருக்கிறதற்கும், நீ நன் றாயிருப்பதற்கும் உன் தகப்பனை கனம்பண்ண வேண்டும் (உபா.5:16) என்று வேதம்சொல்வது, நம் பரமத கப்பனை கனம்பண்ணுவதையே குறிக்கிறது. “என்னை கனம்பண் ணுகிறவர்களை நான் கனம்பண் ணுவேன்”(1சாமு.2:30) என்று கர்த்த ர் சொல்கிறார். தேவனால் கனம்ப ண்ணப்படுகிற யாவரும் நித்தியத் திற்குரிய சுதந்தரவாளிகள். இன் றைக்கு பணமும், சொத்தும், படிப்பு ம், அந்தஸ்தும் தான் நித்தியம் என் றுவாழ்கிற இந்தஉலகத்திலே, உங் கள் வாழ்க்கையின் நித்தியமாக நீ ங்கள் யாரை/எவைகளை வைத்தி ருக்கிறீர்கள்? பூமிக்குரிய கூடாரமா கிய நம்முடைய வீடு அழிந்து போ னாலும், தேவனால் கட்டப்பட்ட கை வேலையல்லாத நித்தியவீடு பர லோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோமே (2 கொரி 5:1). நித்தியபிதாவாகிய இயேசு பரலோ கத்திலே உங்களுக்காக வாசஸ்தல ங்களை ஏற்படுத்தியிருக்கிறார். இ ந்தஉலக சஞ்சலத்தையும்தவிப்பை யும் அதிசீக்கிரத்தில் களைந்துபோ ட்டு, நித்திய மகிழ்ச்சியை தரித்தவ ர்களாய், ஆனந்தக்களிப்புடன் பாடி, நித்திய வீட்டை நோக்கி முன்னேறி க்கொண்டேயிருங்கள். அந்த நித்தி யராஜ்யத்திலே உங்களுக்கு நீங்கா த இடமுண்டு என்பதை நினைவில் கொண்டவர்களாக, இவ்வுலகத்தி ன் அநித்தியமான காரியங்களை ந ஷ்டமும் குப்பையுமென்றெண்ணி, நித்தியத்திற்குரிய அழியாத பொக் கிஷங்களின்மேல் உங்கள் சிந்தை யையும் இருதயத்தையும் பதித்தவ ர்களாக வாழ கற்றுக் கொள்ளுங்க ள். நித்திய பிதாவாகிய தேவன் தா மே நித்தியத்திற்கு நேராக உங்க ளை வழிநடத்துவாராக! உங்களுக் காக ஜெபிக்கிறேன்.*
சமாதானத்தின் பாதையிலே உங்க ளை வழிநடத்தும் தேவன்
*ஏசாயா 9:6*
*"கர்த்தத்துவம் அவர்தோளின் மேலி ருக்கும்; அவர் நாமம்... சமாதானப் பிரபு".*
*தேவபிள்ளையே!நம்அருமை ஆண் டவருடைய இனிமையான நாமங்க ளைக் குறித்து கடந்த ஒருசில தின ங்களாக தியானித்து வருகிறோம். அந்த நாமங்களை நம் வாயினால் உச்சரிக்கும் போதே எவ்வளவு ஒரு மகிழ்ச்சியும்,மனநிறைவும், சமாதா னமும் நம்உள்ளத்தைநிரப்புகிறதல் லவா? ஆம், அவருடைய நாமம் சமா தானப்பிரபு. நம் அருள்நாதர்இயேசு சமாதானத்தை கொடுக்கவே இந்த பூமிக்கு இறங்கி வந்தார். காரணம், இந்த உலகம் சமாதானத்தை இழந் து தவிக்கிறது;சமாதானத்தைத் தே டி அலைகிறது. ஆனால், சமாதான மோ அவர்களைவிட்டு தூரமாய்போ கிறது.தேசங்கள் ஒன்றோடொன்று சமாதானமாய் இருக்க முடியவில் லை; அரசியல் தலைவர்கள் ஒருவ ரோடொருவர் சமாதானமாய் இண ங்கிப் போவதில்லை; சமுதாயத்தி லே ஒரு ஜாதியோடு மற்றொரு ஜா தியினர் சமாதானமாய் வாழ முடிய வில்லை; திருச்சபைகளிலே/குடும் பங்களிலே சமாதானமில்லை. சமா தானமில்லாத இடங்களிலே சூழ்நி லைகள் கொந்தளித்துக் கொண்டி ருக்கின்றன;ஜனங்கள் தத்தளித்து க்கொண்டிருக்கிறார்கள்; குழப்பங் கள் ஆளுகை செய்கின்றன; உறவு கள்/ஐக்கியங்கள் முறிந்துபோகின் றன; அநேக உயிர்சேதங்கள் ஏற்படு கின்றன. பிசாசானவன் இன்றைக் கு ஜனங்களை தன்பக்கமாய் இழுப் பதற்கு அவன் பயன்படுத்துகிற மி கப்பெரிய தந்திரம், சமாதானத்தை கெடுத்துப்போடுவது தான். காரண ம்,அவன் திருடன், வஞ்சிக்கிறவன், அழிக்கிறவன்;ஆனால்,நம் அருமை ஆண்டவரோ ஜீவனை (சமாதானத் தை)க்கொடுக்கவும், அது பரிபூரண ப்படவுமே இந்த பூமிக்கு வந்தார். இ யேசுசொன்னார்:“சமாதானத்தை உ ங்களுக்கு வைத்துப்போகிறேன்; எ ன்னுடைய சமாதானத்தையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; உல கம் கொடுக்கிறபிரகாரம் நான் உங் களுக்கு கொடுக்கிறதில்லை. உங் கள் இருதயம் கலங்காமலும் பயப்ப டாமலும்இருப்பதாக”(யோவா.14:27).*
*அன்பானவர்களே!நம்முடைய தேவ ன் கலகத்திற்குத் தேவனாயிராமல்*
*, சமாதானத்திற்குத் தேவனாயிருக் கிறார் என்று வேதம் (1 கொரி.14:33) சொல்கிறது. அப்படியானால், சமா தானத்திற்கு நேர்எதிர்மாறானது க லகம். இது ஒரு சாத்தானின் ஆவி. இஸ்ரவேல் ஜனங்களுக்குள் இப்ப டிப்பட்ட கலகத்தின் ஆவி கிரியை செய்தபடியினால், அவர்கள் தங்க ள் கானான்தேசத்தின் மகிமையை இழந்துபோனார்கள்.ஏதேன் தோட்ட த்திற்குள்நுழைந்த வலுசர்ப்பமான து, தந்திரமாக ஏவாளின் மனதிலே இந்த கலகத்தை விதைத்தது; அத னுடைய முடிவு, தேவனோடுள்ள ஐ க்கியத்தையும், தேவமகிமையின் பிரசன்னத்தையும், ஜீவவிருட்சத்தி ன் கனிகளையும் இழந்தது மாத்திர மல்ல, தேவனுடைய சாபம் இந்த பூ மியின் மனுக்குலத்தின் மேல் வரு வதற்கு ஆதாமும் ஏவாளும் காரண மாய் மாறிவிட்டார்கள். வேதம் சொ ல்கிறது: துஷ்டன் (சாத்தான்) கலக த்தையே தேடுகிறான்(நீதி.17:11); இ ப்படிப்பட்ட கலகக்காரனோடு நீங்க ள் கலந்து, கர்த்தருக்கு விரோதமா ய் கலகம்பண்ணாமல் கர்த்தருக்கு பயந்து, அவர் சத்தத்திற்கு கீழ்படிந் து,உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்க ளாக;அப்படி நீங்கள்செய்யும்போது, உங்களுக்காக கர்த்தர் செய்யும் ம கா பெரிய பயங்கரமான காரியங்க ளை உங்கள் கண்கள் காணும் (1சா மு.12:14,16).*
*பிரியமானவர்களே! ஆவியின் கனி களிலே ஒன்று சமாதானம்; அந்த ச மாதானத்தை உங்களுக்குக் கொடு க்கும்படியாகவே, அருமை இரட்சகர் இயேசு கல்வாரி சிலுவையிலே மர ணத்தை ருசிபார்த்தார்.நமக்கு சமா தானத்தை உண்டுபண்ணும் ஆக்கி னை அவர்மேல் வந்தது; அந்த ஆக் கினையை இயேசு சுமந்தபடியினா ல் தான், நம்மை சுகமாக்கும் தழும்பு அவர்சரீரத்திலே ஏற்பட்டது; அந்த த ழும்புகளால்தான் நாம்இன்றைக்கு அவருடைய தெய்வீக சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அனுபவித்து க்கொண்டிருக்கிறோம். எத்தனை ஒரு பாக்கியம் பெற்றவர்கள் நாம்; அருள்நாதர் இயேசுவின் இந்த பெ ருந்தியாகத்திற்கு ஈடாக எதை நாம் விலைக்கிரயமாய் செலுத்த முடியு ம்? தம்முடைய சொந்தக் குமாரனெ ன்றும் பாராமல், நம்மெல்லாருக்கா கவும் இயேசுவை பாடுகளுக்கு ஒப் புக்கொடுத்தவர், அவரோடேகூட ம ற்ற எல்லாவற்றையும் நமக்கு அரு ளாதிருப்பதெப்படி? (ரோம.8:32). இ ன்றைக்கு எந்தெந்த காரியத்திலே தேவசமாதானத்தை இழந்து தவிக் கிறீர்கள்? பொல்லாத கொள்ளை நோய்,பொருளாதார பற்றாக்குறை, குடும்பத்திலே ஒருமனமற்ற சூழல், உலகசிற்றின்பங்களிலே சிக்கித் த டுமாறுகிற நிலை, பாடு உபத்திரவ ங்கள், அநீதியினால் வந்த தலைகு னிவு போன்ற காரியங்கள் உங்கள் வாழ்க்கையின் சமாதானத்தை கெ டுக்கலாம்; மனம் கலங்காதிருங்க ள்! சமாதானத்தின் தேவன் தாமே, இப்படிப்பட்டதான காரியத்தை உங் கள் வாழ்க்கையிலே கொண்டுவந் து, தேவசமாதானத்தை கெடுக்க நி னைக்கிற சாத்தானை உங்கள் கா ல்களின் கீழே நசுக்கிப் போடுவார்; சீக்கிரத்திலே அந்தக் காரியங்களி லே அற்புதத்தையும் விடுதலையை யும் காண்பீர்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்கா க ஜெபிக்கிறேன்.*
*எரேமியா 6:16*
*"வழிகளிலே நின்று, பூர்வ பாதைக ள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அ திலே நடவுங்கள்; அப்பொழுது உங் கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுத ல் கிடைக்கும்".*
*தேவபிள்ளையே! இந்த பூமியிலே நமக்கு சரீரத்திலேயும், ஆத்துமாவி லேயும் இளைப்பாறுதல் அவசியம். ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு வே லை செய்யும் அநேகர் கோடை கால ங்களிலே தங்கள் மனதிலேயும், சரீ ரத்திலேயும் ஒருசில நாட்கள் சற்று இளைப்பாறி ஓய்வெடுக்க கோடை வாசஸ்தலங்களை நோக்கிப் படை யெடுக்கிறார்கள்.ஆத்துமாவுக்கு இ ளைப்பாறுதல் கிடைக்கும் வழி என் ன?இந்த ஆத்துமாவுக்கு இளைப்பா றுதல் எல்லாப்பாதைகளிலும்கிடை ப்பதில்லை.பூர்வப்பாதைகள் எவை யென்று கேட்க வேண்டும்; விசாரிக் கவேண்டும்; இந்தப் பாதை என் ஆ த்துமாவிற்கு இளைப்பாறுதலைக் கொண்டுவருமா?என்பதை உறுதிப் படுத்தினப்பிறகு,அதிலே நடந்தால் நிச்சயமாக உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்கிடைக்கும்.அநேக லௌகீகக் கவலைகள், பாரங்கள், சரீரவியாதிகள், கடன் தொல்லைக ள், மந்திர சூனியங்கள், தோல்விக ள், சமாதானக் குறைவுகள், அன்புத் தாழ்ச்சிகள், பாவ அடிமைத்தனங்க ள்,சிற்றின்பக்கவர்ச்சிகள் ஆகியவ ற்றின்தாக்குதல்களுக்கு ஈடுகொடு க்க பெலனின்றி அநேகருடைய ஆ த்துமா இளைப்பாற முடியாதபடி இ ன்றைக்கு தொய்ந்துபோய் நொறு ங்கி தவித்துக் கொண்டிருக்கிறது. பரிசுத்த வேதத்திலே தேவ ஆவியி னால் எழுதப்பட்ட பூர்வப் பாதைகள் மாத்திரமே சமாதானத்திற்கேதுவா ன பாதைகள்; ஆறுதலையும் தேறு தலையும் கொண்டுவருகிற பாதை கள். இளைப்பாறுதலுக்கான பூர்வ வழிகளைக் கர்த்தரே ஏற்படுத்தி, அ வைகளை மனுக்குலத்திற்கு போதி க்க சித்தமானார். கர்த்தர் ஆறு நாட் களிலே உலகத்தையும் அதிலுள்ள சகலசிருஷ்டிகளையும்சிருஷ்டித்து விட்டு ஏழாம்நாளிலேஓய்ந்திருந்தா ர்.சிருஷ்டிப்பினால் கர்த்தர் களைத் துப் போய்விட்டாரோ? சோர்ந்துபோ ய்விட்டாரோ? அவர் இளைப்படைவ துமில்லை, சோர்ந்து போவதுமில் லை.ஆனால் இளைப்பாறுதலுக்கா ன வழியை நமக்குக் காண்பிக்கும் படி, நமக்கு முன்மாதிரியானார். வி சுவாசித்தவர்களாகிய நாமோ அந் த இளைப்பாறுதலில் பிரவேசிக்கி றோம் (எபி.4:3).*
*அன்பானவர்களே! கர்த்தருக்கு 7-ம் நாள் ஓய்வு நாளாயிருந்தது; ஆனா ல் 6-ம் நாளிலே சிருஷ்டிக்கப்பட்ட ம னிதனுக்கோ அது அவனுடைய வா ழ்க்கையின் முதல்நாளாய் இருந்த து.ஆகவே கர்த்தர் 7-ம் நாளில் ஓய்ந் திருந்தபோது மனிதன் தன் வாழ்நா ளின் முதல்நாளிலே தேவனோடு ஓ ய்ந்திருந்தான், இளைப்பாறினான். ஓய்ந்திருந்துவிட்டு மற்ற ஆறு நாட் கள் அவன் பிரயாசப்பட / உழைக்க வேண்டும் என்பதுதான் தேவநியதி யாயிருந்தது. நம்முடைய முதல் நா ளை(ஓய்வுநாளை) கர்த்தருக்கென் று மனப்பூர்வமாய்ஒப்புவித்து, அவ ரோடுமகிழ்ந்துகளிகூர்ந்து அவரை ப்பாடி துதித்து ஆராதனைசெய்து ம னமகிழ்ச்சியின் நாளாக கொண்டா டும் போது, மற்ற ஆறு நாட்களும் உ ழைப்பதற்கான பெலனையும் சத்து வத்தையும் கர்த்தர் நமக்குத் தந்தரு ளுகிறார்.வாரத்தின்முதல்நாள் ஞா யிற்றுக்கிழமை;அது ஓய்வுநாள்; கி றிஸ்து உயிர்த்தெழுந்த வெற்றியி ன் நாள்; வாரத்தின் முதல் நாளிலே ஆதிஅப்போஸ்தலர்கள்சபைகூடி வ ந்தார்கள்; கர்த்தரை துதித்துப் பாடி போற்றினார்கள். கர்த்தர் பலத்த கி ரியைகளை அந்தநாட்களிலே செய் தார். கர்த்தருடைய ஓய்வுநாளை அ நேகர் அசட்டைசெய்து அன்றைக்கு ம் வேலை, ஓவர்டைம் என்று போய் சபைஐக்கியத்தையும், தெய்வீக ஆ சீர்வாதத்தையும் இழந்துபோகிறார் கள். அது முடிவில் அவர்களுக்கு க ண்ணியாய்,சாபமாய் மாறிப் போகி றது. பழையஏற்பாட்டில் ஓய்வுநாளு க்கானதீர்மானங்களை கர்த்தர்கொ டுத்தார்(யாத்.16:23; 23:12).சிலர் 60 வ யதில்ஓய்வுபெற்றநேரத்திலும் போ ய் அற்ப ஆதாயத்துக்காக உலகத்தி ற்காக உழைத்துக்கொண்டிருப்பார் கள். அந்த நேரங்களை கர்த்தருடை ய பணிக்கென்றும் ஆத்தும ஆதாய ம் செய்வதற்கென்றும், பரிசுத்தத்தி ன்மேல் பரிசுத்தம் அடைவதற்கென் றும் ஒப்புக்கொடுங்கள்.*
*பிரியமானவர்களே! மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழிகள் அநேகமுண்டு; அதின் முடிவோ மர ணவழிகள்(நீதி.14:12). உங்கள் வழி கள் என் வழிகள் அல்லவென்று கர் த்தர் சொல்கிறார் (ஏசா.55:8). அப்படி யானால்,உங்களைக்குறித்தும் உங் கள் எதிர்காலத்தைக் குறித்தும், பி ள்ளைகளைக் குறித்தும் தேவன் ஒ ருமேன்மையானதிட்டத்தையும் நோ க்கத்தை வைத்திருக்கிறார்; அவை கள் தீமைக்கல்ல, மிகுந்த சமாதான த்திற்கேதுவானவைகள். அற்பமா ன யோசேப்பை தேசத்தின் அதிபதி யாய் மாற்றுவதற்கு,ஆடுமேய்த்துக் கொண்டிருந்த தாவீதை ராஜ சிங் காசனத்திலே அமர்த்துவதற்கு, வி தவைகோலத்திலே எதிர்கால நம்பி க்கையை இழந்து வந்த ரூத்திற்கு ராஜ மேன்மையை கொடுத்ததற்கு, அநாதையிருந்த எஸ்தரை ராஜாத் தியாக்கினதற்கு, எல்லாவற்றையு ம் இழந்து, ஜீவனற்றவனாய் வாழ்ந் த யோபுவை இரட்டத்தனையாய் ஆ சீர்வதித்ததற்கு, தேவன் ஒரு திட்ட மான நோக்கத்தையும் வழியையும் வைத்திருந்தார்; அந்த வழிகளெல் லாம் மனித பார்வைக்கும், அறிவுக் கும்,புத்திக்கும்,சிந்தைக்கும் அப்பா ற்பட்ட, விளங்கிக்கொள்ள முடியாத தாய் இருந்தது. அதே தேவன் உங்க ளுக்கும் ஒரு பாதையை வைத்திரு க்கிறார். அந்தப் பாதையை மனித மூளையினால் கிரகித்துக் கொள்வ து மகா கடினம். ஆனால்,ஏற்றநேரம் வரும்போது நீங்கள் கடந்து போன பாதையையும், தேவன் உங்கள் வா ழ்க்கையில் வைத்திருந்த திட்டத்தி ன் இரகசியத்தையும் நீங்கள் அறிந் துகொள்ள முடியும். உங்களைக் கு றித்த அவருடையவழிகள் திரளான தண்ணீர்கள்மேல் இருக்கிறது. ஆர ம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும்.கர்த்தருக்கா க பொறுமையோடு காத்திருங்கள். தேவன் நிச்சயம் உங்களை உயர்த் துவார்; மகிமைப்படுத்துவார்; துன் பத்தைக் கண்ட நாட்களுக்கு சரியா ய் உங்களை மகிழ்ச்சியாக்குவார். மனம் கலங்காதிருங்கள்! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Thanks for using my website. Post your comments on this