உங்கள் காரியங்களை தடையில் லாமல் நிறைவேற்றிக்கொடுக்கிற தேவன்
*நீதிமொழிகள் 10:24*
*"நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்".*
*தேவபிள்ளையே! ஆண்டவர் நம்மு டைய மனவிருப்பங்களைநிறைவே ற்றுகிறவர். கர்த்தர் எனக்கு இந்த காரியத்தை செய்யமாட்டாரா? என் னுடையவிருப்பத்தை நிறைவேற்ற மாட்டாரா? என்று நீங்கள் ஆவலோ டு பலமாதங்களாக/ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கலாம். ஒரு வேளை எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் போயிருக்கலாம். அவைகள் துளிர்ப்பதற்கான எந்த வொரு அறிகுறியும் காணப்படாதப டியினால், அதைக் குறித்து நீங்கள் மறந்தும் போயிருக்கலாம்.ஆனால், உங்கள் மனவிருப்பத்தை அறிந்த தேவன் சொல்கிறார்: “மகனே(ளே)! நீ விரும்பின காரியம்/எதிர்பார்த்து க்கொண்டிருக்கிற காரியம் நிச்சய மாக உனக்குக்கொடுக்கப்படும்/வா ய்க்கும். இவைகள் திராணிக்கு மி ஞ்சினது, அறிவுக்கெட்டாதது (அ) எ ந்தவொரு சிபாரிசும் பணமும் இல் லாமல் இந்த காரியம் நடக்க வாய்ப் பில்லை என்பதினால் உன் கைவிட் டுப்போன இந்த காரியங்களை, வ ருகிற நாட்களிலே உன் மாம்சக் க ண்கள் ஆச்சரியப்படும்படியாக,என் கரத்தினால் அவைகளை வாய்க்கப் பண்ணும்போது, உன் வாய் நகைப் பினாலும், இருதயம் மனமகிழ்ச்சி யினாலும் பூரிக்கும்”. கர்த்தரால் கூ டாத காரியம் ஒன்றுமில்லை; அவர் இல்லாதவைகளை இருக்கிறவை கள் போல அழைக்கிற தேவன்; அவ ர் உங்கள் மனவிருப்பத்தின்படியே தந்தருளி,உமதுஆலோசனைகளை யெல்லாம் நிறைவேற்றுகிற தேவ ன். ஆகவே, தேவசித்தத்தின்படியே நீங்கள்விரும்புகிற எந்தவொரு கா ரியத்தையும் தேவசமூகத்திலே இ ன்றைக்கு சொல்லுங்கள். கர்த்தரி டத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்க ளை உனக்கு அருள்செய்வார்(சங். 37:4).*
*அன்பானவர்களே! “நீ விரும்புகிற தை என்னிடத்திலே கேள்” (1 இரா ஜா.3:5) என்று கர்த்தர் சாலமோனிட த்தில் கேட்டபோது, அவன் தன் தேச த்தை ஆளுவதற்கு வேண்டிய தேவ ஞானத்தையும்விவேகத்தையும் கே ட்டான். சாலமோனின் விருப்பம் தே வசித்தத்திற்கு ஏற்றதாயிருந்தபடி யால், அவன் விரும்பிக் கேட்டதையு ம் கொடுத்தார்; அதுமட்டுமல்ல, கே ளாத ஐசுவரியத்தையும் சம்பத்தை யும்கனத்தையும் சேர்த்துக் கொடுத் தார். ஆம், அதுதான் நம் ஆண்டவரு டையஇருதயம்.நாம் வேண்டிக்கொ ள்வதற்கும் நினைக்கிறதற்கும் மிக வும்அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்க வல்லமையுடையவர் நம் தேவன். உ ம்முடைய மகிமையை எனக்குக் கா ண்பித்தருளும் (யாத். 33:18) என்று மோசே தனதுவிருப்பத்தை கர்த்தரி டத்தில் கேட்டார். தேவ மகிமையை எப்படியாவது காணவேண்டும், அந் த மகிமையினால் அளவில்லாமல் நிரப்பப்பட வேண்டுமென்பது மோ சேயின் வாஞ்சையாயிருந்தது. அந் த விருப்பம் தேவனுடைய பார்வை யிலே பிரீதியாயிருந்தபடியினால், அதை அவருக்கு நிறைவேற்றிக் கொடுத்தார். தாவீது பக்தன், கர்த்த ரே என் விருப்பம், பூலோகத்திலே உம்மைத் தவிர எனக்குவேறே விரு ப்பமில்லை (சங்.73:25) என்று சொல் கிறார். இவர் ஒரு தேசத்தை ஆளு கிற ராஜாவாயிருந்தாலும், தனக்கு இருக்கிற எத்தனையோ பொறுப்பு கள், வாஞ்சைகள் மத்தியிலே, கர்த் தரையே தன் கண் முன்பாக நிறுத் தி,அவரோடுகூட ஐக்கியம் கொண் டிருப்பதையே மிகவும் வாஞ்சித்தா ர்.இவருடைய ஆசையெல்லாம் உல கத்தின் செல்வங்கள், மேன்மைக ள் மற்றும் அதன் ஆசை இச்சைகள் மேலே வைக்காமல், கர்த்தர் மேல் வைத்தபடியினால்,தாவீதை தன் இ ருதயத்திற்கு ஏற்றவனாக கர்த்தர் கண்டார்.*
*பிரியமானவர்களே! நீங்கள் விரும் பின எத்தனையோ காரியங்கள் நி றைவேறாமல் தடைபட்டிருக்கலாம். பதவி/சம்பள உயர்வு, மேற்படிப்பு, வெளிநாட்டு/உள்நாட்டு வேலைவா ய்ப்புகள், திருமண காரியங்கள், ம ருத்துவ சிகிச்சை, வரவேண்டிய ப ணங்கள், சரீர ஆரோக்கியம் போன் ற அநேகக்காரியங்களிலே உங்கள் ஆசீர்வாதங்கள் தடைபட்டுவிடுமோ என்று கலங்கிக் கொண்டிருக்கலா ம்.பயப்படாதிருங்கள்! உங்கள் வாழ் க்கையிலே தேவன் என்னென்ன ந ன்மைகளை/ஆசீர்வாதங்களை எந் தெந்த நேரங்களிலே கொடுக்கவே ண்டும் என்று தீர்மானித்து விட்டா ரோ,அவைகள்ஒன்றும் உங்கள் வா ழ்க்கையிலே தடைபட்டுப் போகவே போகாது (யோபு 42:2). காரணம், அ வைகளெல்லாம்ஏற்கனவே பரலோ கத்திலே உங்களுக்காக ஆயத்தப்ப டுத்தப்பட்டு,உங்கள்பெயரில் முத்த ரிக்கப்பட்டாயிற்று. அவைகள் உங் களுக்கென்று சொந்தமாக்கப்பட்டா யிற்று.ஆனால்,பிசாசானவனோ இ ப்படிப்பட்ட இருளான நாட்களைக் காண்பித்து, ஊரடங்கைப் போட்டு, அவைகளை தடுத்துவிட எவ்வளவு தான் அவன் பிரயாசப்பட்டாலும், அ வனால் அதை தடைசெய்யவே முடி யாது. பரலோகம் உங்களுக்காக அ ங்கீகரித்த ஒருகாரியத்தை, சத்துரு வஞ்சித்துப்போட அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நீங்கள் வி ரும்பின காரியங்களை கர்த்தர் நிச் சயமாய் வரும்நாட்களிலே உங்களு க்கு கைகூடிவரப்பண்ணுவார். தாம தித்தாலும், அதற்காக காத்திருங்க ள்; நிச்சயமாகவே அதுவரும். உங்க ள் விசுவாசத்திலே தளர்ந்து போகா திருங்கள்!ஏற்றகாலத்திலே கர்த்தர் தீவிரமாய் நடப்பிப்பார். சோர்ந்து போகாதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
பெலத்தின் மேல் பெலனடைய நீங் கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
*சங்கீதம் 84:7*
*"அவர்கள் (தேவபிள்ளைகள்) பலத் தின்மேல் பலம் அடைந்து, சீயோனி லே தேவசந்நிதியில் வந்து காணப் படுவார்கள்"
*தேவபிள்ளையே! நம்முடைய ஆவி க்குரிய ஓட்டத்தின் பிரதான நோக்க மே சீயோனிலேவந்து தேவசந்நிதி யில் காணப்படவேண்டும் என்பதே. அநேகர் ஆவிக்குரிய ஓட்டத்தை மி கவும் ஆராவாரத்தோடும் மகிழ்ச்சி யோடும் ஆரம்பிக்கிறார்கள். ஆனா ல், நாட்கள் போகப் போக உலகத்தி ன் சோதனைகளும் பாடுகளும், அ வர்களுடைய ஆராவாரத்தையும்,கி றிஸ்துவின் மேல் வைத்திருக்கும் அன்பையும்தணித்துப்போடுகிறது. விசுவாசத்தில் தளர்ந்து போகிறார் கள்.ஆவிக்குரியவாழ்க்கையிலே நீ ங்கள் வீழ்ச்சியடைவது தேவனுடை ய சித்தமல்ல. நீங்கள் பலத்தின் மே ல் பலமடைந்து,பிரதான இலக்காகி ய பரலோக பாக்கியத்தை பெற்றுக் கொள்வதே தேவனுடையநோக்கமு ம் விருப்பமுமாயிருக்கிறது. சத்தா ன ஆகாரத்தை உட்கொள்வதினால் இந்த பெலத்தை பெற்றுக் கொள் ள முடியாது. கர்த்தருக்குள் பெலன் கொள்ளுகிறவர்கள், தங்கள் இருத யங்களிலே செவ்வையான வழிக ளைக் கொண்டிருக்கிறவர்கள் மா த்திரமே பெலத்தின்மேல் பெலனை அனுபவிக்கமுடியும்(சங்.84:5). இயே சு சொன்னார்: “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடா து”(யோவா.15:5). அவர் சீஷர்களுக் கு கட்டளையிட்டு, உன்னதத்திலிரு ந்து வருகிறபெலனால் தரிப்பிக்கப் படும் வரைக்கும், எருசலேமில் காத் திருங்கள்(லூக்.24:49) என்று சொன் னார். இந்த பெலனை ஏதோ ஒரிரு நாட்கள்(அ) பெலவீனமான நேரங்க ளில் மாத்திரம் பெற்றுக் கொள்வத ல்ல; அனுதினமும் நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுக் கொண் டேயிருக்க வேண்டும். யாரெல்லாம் புதிய அபிஷேகத்தினால் ஒவ்வொ ரு நாளும் நிரப்பப்படுகிறார்களோ, அவர்களுடைய கொம்பு காண்டாமி ருகத்தின் கொம்பைப் போல பலமு ள்ளதாய் உயர்த்தப்படும்(சங்.92:10). கிறிஸ்துவிலிருந்து நமக்குகிடைக் கிற பெலன்தான், இந்த பூமிக்குரிய மற்றும் ஆவிக்குரியகாரியங்களை மிகவும் துடிப்போடு வாழ்க்கையில் நிறைவேற்ற நமக்குள் பெலனைக் கொண்டு வருகிறது (பிலி.4:13).*
*எனக்கன்பானவர்களே!தேவன் உங் கள் வாழ்க்கையிலே அனுமதிக்கிற சோதனைகளுக்கும்,பாடுகளுக்கும் ஒரு நோக்கத்தை வைத்திருந்தார். தேவன் யோபுவின் வாழ்க்கையில் சோதனைகளை அனுமதித்ததின் நோக்கம், 1.அவனைஇரட்டிப்பான ந ன்மைகளையும் ஆசீர்வாதங்களை யும் சுதந்தரித்துக்கொள்ளும்படியா க, 2.எந்த யோபுவை சாத்தான் அழி க்க நினைத்தானோ, அதே சாத்தா னை, யோபுவைக் கொண்டு அழிக் கும்படியாக, 3.தம்முடையவல்லமை யை ஜனங்கள் யாவரும் அறிந்துக் கொள்ளும்படியாக,மாத்திரமேயொ ழிய, அவனுடைய ஜீவனை அழிக்கு ம்படியாகஅல்ல.அவன் மரணத்தின் விளிம்பிலே வாழ்ந்தாலும், மரணம் அவனைத் தொடமுடியவில்லை. கா ரணம், அவனுடைய ஜீவன் கர்த்தரு டைய கரத்திலே இருந்தது. சரீரத்தி ல் அவன் பலவீனமுள்ளவனாய் மா றினாலும், ஆத்துமாவிலே தேவனி டத்திலிருந்து பலத்தின்மேல் பலன டைந்துக்கொண்டேயிருந்தான்.உல கப் பார்வையிலே அவன் மரணத்தி ற்கேதுவானவன்; ஆனால் தேவனு டைய பார்வையிலே அவன் விசுவா சத்திலே பலமுள்ளவனாயிருந்தா ன். அவன் செல்வ செழிப்போடு வா ழ்ந்திருந்தபோது மாத்திரமல்ல,தன் வாழ்க்கையிலே எல்லாவற்றையும் இழந்த நேரத்திலேயும் அவன் தன் உத்தமத்திலே,விசுவாசத்திலே, தே வபயத்திலே உறுதியாயிருந்தான்.*
*பிரியமானவர்களே! உன்னதத்தை நோக்கி ஓடுகிற ஆவிக்குரிய ஓட்ட ம் மிகஎளிதான ஒன்றல்ல; அது முட் களும் நெரிஞ்சில்களும், பள்ளங்க ளும் மேடுகளும், கரடு முரடுகளும் நிறைந்த பாதை; அழுகையின் பள் ளத்தாக்கை உருவ நடக்க வேண்டு ம்; மரணப் பள்ளத்தாக்கை தாண்ட வேண்டும்; தீயையும் தண்ணீரையு ம் கடக்கவேண்டும்; அக்கினியினா ல் புடமிடப்பட வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட அனுபவங்களெல்லா ம் உங்களை அழிப்பதற்கல்ல; உங் களை ஒரு சுத்தப்பொன்னாக மாற் றி,சீயோனின் பாக்கியத்திற்கு உங் களை தகுதியுள்ளவர்களாய் மாற் றுவதற்காகவே. யோபுவின் வாழ்க் கைசூழ்நிலைகளினால் அவன் பெ லன் குன்றிப் போகவேயில்லை. ஆ கவே தான், “என் மீட்பர் உயிரோடிரு க்கிறார்; என் சொந்தக்கண்களே அ வரைக் காணும்” என்று அவன் தை ரியமாய் சொன்னான். வாழ்க்கைப் பாதையிலே நீங்கள் கடந்துபோகிற அக்கினியின் சோதனை, கொந்த ளிக்கிற பேரலைகள், அழுகையின் பள்ளத்தாக்கு, வியாதிப் படுக்கை, கடன் பாரங்கள் உங்களை அழித்து விடுமோ என்று கலங்குகிறீர்களா? மனம் கலங்காதிருங்கள்!உங்களை அழைத்த தேவனுக்கு உங்களைக் குறித்து ஒரு நோக்கமுண்டு; தேவ னுக்குள் ஆரம்பித்த உங்கள் ஓட்டம் நித்திய ராஜ்யத்திலே தான் முடியு மே தவிர, பாதிவழியிலே ஒருநாளு ம் முடிந்துபோக தேவன் விடவேமாட் டார்.உங்கள்பாடுகளுக்கு அதிசீக்கி ரத்திலே முடிவு உண்டு. கொந்தளிப் புகள் அடங்கும்.உலகத்தின் முடிவுப ரியந்தம் உங்களோடு கூட இருக்கி றேன் என்று சொன்ன அருள்நாதர் இயேசு, நிச்சயமாய் உங்களை தம் முடைய ராஜ்யத்திலே மாசற்றவர்க ளாய், ஜெயம்பெற்றவர்களாய் நிறு த்த வல்லவராயிருக்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
இயேசுவின் இரத்தம் நம்மை கிறி ஸ்துவுக்கு சமீபமாய் மாற்றியிருக்கிறது
*அப்போஸ்தலர் 17:27.*
*"கர்த்தராகிய தம்மை அவர்கள் தட வியாகிலும் கண்டுபிடிக்கத்தக்க தாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்ப டிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவ ருக்கும் தூரமானவரல்லவே".*
*தேவபிள்ளையே! கிருபையாய் நம் மை தாயின் கருவினில் முன்குறித் து,தெரிந்துக்கொண்டு, தம்முடைய விலையேறப்பெற்ற இரட்சிப்பைக் கொடுத்து, பரிசுத்தாவியின் நிறை வைத் தந்து, பரிசுத்தமாய் வாழும்ப டியான ஒரு தருணத்தை நமக்குத் தந்த தேவனை அதிக கருத்தோடு தேடவேண்டிய ஒரு நாட்களில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அ ப்.பவுல் சொல்கிறார்: ஆண்டவராகி ய இயேசுவை தடவியாகிலும் கண் டுபிடிக்கவேண்டுமென்றும், நாம் அ வருக்கு ஒருநாளும் தூரமாய் போய் விடக் கூடாதென்றும் ஆலோசனை கூறுகிறார்.தேவன் எப்பொழுதும் ந மக்கு சமீபமாய் இருக்கவேண்டுமெ ன்று தான் விரும்புகிறார். ஆனால், நம்முடைய பாவக்கிரியைகள் தான் தேவனை நெருங்கி சேரக் கூடாதப டி, அவருடைய பிரசன்னத்திலிருந் து நம்மை விலக்குகிறது. இன்றை க்கு அநேகர் தேவனை வெகுதூரத் தில் இருக்கிறவராகப் பார்க்கிறார் கள்.அவர்களுடைய ஜெபம் கேட்கக் கூடாதஉயரத்தில் இருப்பவராகக் க ருதுகிறார்கள். ஆகவே,ஆசீர்வாதங் களை பெற்றுக்கொள்ள முடிவதில் லை. வேதம் சொல்கிறது: முன்னே தூரமாயிருந்த நீங்கள்இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்து வின் இரத்தத்தினாலே சமீபமானீர் கள்(எபே.2:13). நம்மை அவருக்கு மி க சமீபமாய் இழுத்துக் கொள்ளும்ப டியாகத் தான், தம்முடைய இரத்தத் தை சிந்தக் கொடுத்தார். தூதர்களி ன் ஆர்ப்பரிப்பினாலும்,ஆடல்பாடல் களினாலும் களிகூர்ந்துக்கொண்டி ருக்கிற பரலோகத்திலே, தேவன் ம கிழ்ச்சியின் ஆராவார தொனியோ டு கூடிய இனிமையிலே, பரவசத் தோடு சிங்காசனத்தில் வீற்றிருந் தாலும், அதையெல்லாம் விட்டுவிட் டு, தாம் உண்டாக்கின மனிதர்கள் ஆவியில் நிறைந்து, பக்திப் பரவச த்தோடு துதித்து ஆராதிக்கும் போ து, உடனே அவர்கள் மத்தியில் இற ங்கி வந்துவிடுகிறார்.*
*அன்பானவர்களே! உங்கள் வாழ்க் கையின் ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக, தேவனையும் அவ ருடையசமூகத்தையும் தேடுவதற்கு தவறிவிடாதீர்கள். காரணம், தேவ பிரசன்னத்திலேயே வாழ்ந்துக்கொ ண்டிருந்த ஆதாம்ஏவாளையே வஞ் சித்துப் போட்ட பிசாசானவன், தேவ சமூகத்தை இழந்து ஜீவிக்கிறவர்க ளை மிக எளிதாக வஞ்சித்துப் போ டுவான்.ஆகவே,கர்த்தரைத் தேடுவ தில் மிகவும் ஜாக்கிரதையாயிருங் கள். வேதத்திலே, இளையக் குமார ன் தன் தகப்பனை விட்டு தூரமாய் சென்ற போது, தன் வாழ்க்கையிலி ருந்த எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்துபோனான். ஒரு கால கட்டத் தில், அவன் புத்தியிலே ஒரு தெளி வு ஏற்பட்டது. உடனே தன் தகப்பனு டைய அடைக்கலத்திலே சகலபரிபூ ரணத்தோடுவாழ்ந்த வாழ்க்கையை சற்று யோசிக்க ஆரம்பித்தான். தக ப்பனோ,பிரிந்துபோன தன்மகனை நினைத்து துக்கமடைந்தவராய் கா ணப்பட்டார். மகன் திரும்ப வருவ தை தூரத்திலே கண்ட தகப்பன், ஓ டோடி சென்று மகனை தன் மார்போ டே அணைத்துக்கொண்டார். தகப்ப னிடத்தில்வந்தவுடன் அந்தவீட்டிலே இருந்த மகிழ்ச்சிக்கும், உபசரிப்பிற் கும் அளவேயில்லை.*
*பிரியமானவர்களே! உங்கள் வாழ் க்கைப் பிரச்சினையினால், சரீர வி யாதி பெலவீனத்தினால் நெடுநா ளாய் ஏறெடுத்த ஜெபங்களுக்கு ப தில் கிடைக்காததினால், விரக்தியு ற்று மனசோர்வடைந்து, நம்பிக்கை யிழந்தவர்களாய், விசுவாச ஜீவிய த்திலே பின்னடைவை நோக்கி போ ய்க்கொண்டிருக்கிறீர்களா? சமாதா னத்திற்கு காத்திருந்த உங்களுக்கு துக்கமும் துயரமும் வந்திருக்கலா ம்.வெளிச்சத்திற்கு காத்திருந்த நீங் கள் இருளை சந்தித்திருக்கலாம். நன்மைக்கு காத்திருந்து தீமையை அனுபவித்திருக்கலாம். தேவ பிரச ன்னத்தின் மேல் இருந்த வாஞ்சை யும் தாகமும் குறைந்து, தேவன் மே ல் இருந்த வைராக்கியம் வேரோடு பிடுங்கப்பட்டுவிடுமோ என்று கல ங்கிக் கொண்டிருக்கலாம். மனம் ப தறாதிருங்கள்! உங்கள் இருதயம் க லங்காதிருப்பதாக! உங்கள் பெலவீ னத்தையும் மனக்குமுறலையும் தே வன் ஒருவரே அறிவார். எதிர்மாறா ய்போய்க்கொண்டிருக்கிற காரியத் தில் தேவனுடைய அற்புத கரத்தை காண்பீர்கள். நிச்சயம் உங்கள் சூழ் நிலைகள் மாறும். தேவனுக்கும் உ ங்களுக்கும் இருக்கும் இடைவெளி மாறி, மறுபடியுமாக தேவனுக்குள் நெருங்கிஜீவிக்கிற ஒரு அனுபவத் தை இன்றைக்கு கர்த்தர் உங்களுக் கு தரப்போகிறார்.அவருக்குள் ஆழ மாய் நீங்கள் வேர்பற்றி,உங்கள் வா ழ்க்கை பூத்துக்காய்த்து, உங்கள் கு டும்பம் தேவசமாதானத்தினால் நிர ப்பப்படுகிற நாட்களுக்குள் தேவன் உங்களை நடத்தப் போகிறார். பயப் படாதிருங்கள்! நீங்கள் ஒரு நாளும் வாழ்க்கையில் தோற்றுப்போவதில் லை. நீங்கள் எதிர்பார்த்து காத்திரு க்கிற காரியத்தில் வெற்றியை கா ண்பீர்கள்.தேவனைத் தேடுகிறதில் நீங்கள் காண்பிக்கிற ஆர்வத்தைப் பார்த்து மற்றவர்கள் வியந்து போ வார்கள். மனம் கலங்காதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
மனுஷீகப் பார்வையில் கடினமான வைகள் தெய்வீகப் பார்வையில் மி கவும் அற்பமானவைகள்
*2 இராஜாக்கள் 3:18*
*"இது கர்த்தருடைய பார்வைக்கு அற்பகாரியம்".*
*தேவபிள்ளையே! இந்த புதிய அக் டோபர்மாதத்திலே கர்த்தர் ஒரு சிறி ய வார்த்தையைத்தான் பெரிய ஆசீ ர்வாதமாக, வாக்குத்தத்தமாக உங்க ளுக்குக் கொடுக்கவிரும்புகிறார். ந ம்முடைய வாழ்க்கையிலே என்னெ ன்ன பிரச்சனைகளை பெரியமலை போலப் பார்க்கிறோமோ, மிகக் கடி னமாய் உணருகிறோமோ, அவைக ள் தேவனுடைய பார்வையிலே மிக வும் அற்பமானகாரியம்;லேசான கா ரியம்; அவைகளை ஒரு தூசியைப் போல கர்த்தர் பார்க்கிறார். உங்கள் வியாதி/கடன்பிரச்சனை/நீதிமன்ற வழக்குகள்/திருமணத் தடை/ குழந் தைபாக்கியம்/தொழில்நஷ்டம்/வே லையின்மை உங்களுக்கு ஒரு பெ ரும்சவாலாக இருக்கலாம்; ஆனால் இந்த மாதத்திலே கர்த்தர் இவைக ளை மிகஇலகுவாக உங்களுக்கு நி றைவேற்றித் தரப்போகிறார். பெல முள்ளவனுக்காகிலும், பெலனற்ற வனுக்காகிலும்உதவிசெய்கிறது க ர்த்தருக்கு லேசானகாரியம்(2நாளா. 14:11). ஆனால் அவரது பராக்கிரமத் தை, வல்லமையை உங்களை நம்ப வைக்கிறதும்,விசுவாசிக்கவைக்கி றதும் தான் கர்த்தருடைய பார்வை யிலே கடினமான காரியம்.உங்களு டைய பார்வையை தெய்வீகப் பார் வையிலே வைத்து நீங்கள் பார்ப்பீர் களேயானால்,கடினமான எந்தவொ ருப்பிரச்சனையும், மலைபோன்ற எ ப்பேர்பட்டசோதனைகளையும் தேவ ன் கையாளுவதுபோல மிக எளிதா க நீங்கள் கையாளமுடியும்; அவைக ளை மேற்கொள்ளவும் முடியும். மாம் சீகக் கண்ணோட்டத்திலே இது ஒரு சாதிக்க முடியாத காரியமாயிருக்க லாம்; ஆனால், உங்களை எப்போது ம் ஆவிக்குள் வைத்துக் கொண்டு, ஆவிக்குரிய சிந்தனையோடு இக் காரியங்களை நீங்கள் அணுகுவீர் களேயானால், அப்படிப்பட்ட காரிய ங்கள் உங்களுக்கும் அற்பக் காரிய மாகவேயிருக்கும்.*
*எனக்கன்பானவர்களே! மோவாபிய ராஜாவுக்குவிரோதமாகயுத்தம்பண் ண இஸ்ரவேல், யூதா, ஏதோம் ஆகி ய 3ராஜாக்கள் போகும்போது, வனா ந்தரத்திலே தண்ணீர்கிடைக்காமல் ஏழுநாள் சுற்றித் திரிகிறார்கள்; ரா ணுவத்திற்கும் மிருக ஜீவன்களுக் கும் குடிக்க தண்ணீர்இல்லை; மரித் துப்போகிற சூழ்நிலைக்கு வந்துவி ட்டர்கள். மோவாபிய ராஜாவின் கை யில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டி ய ஒருநிலை வந்துவிட்டது. இந்த நி லைமையில் தான், கர்த்தர் எலிசா தீர்க்கதரிசியின் மூலம் பேசுகிறார்:*
*“பயப்படாதிருங்கள், காற்று இருக் காது; மழை இருக்காது; ஆனாலும் நீங்களும் உங்கள்மிருகஜீவன்களு ம் குடிக்கும்படிக்கு நாளை இந்தப் ப ள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்ப டும்; இது கர்த்தரின் பார்வைக்கு அற்பக் காரியம்”. ஒருவேளை நீங்க ளும்கூட இப்படிப்பட்டதான ஒரு முடி ந்துபோன சூழ்நிலைக்கு தள்ளப்பட் டிருக்கலாம்; இனி பிழைக்க வழியி ல்லை; இனி இந்த காரியத்திலே வ ழிதிறக்க வாய்ப்பேயில்லை; இந்த நிலைமை துளிர்க்கிறதற்கான எந் தவொரு சாதகமானஅடையாளமும் காணமுடியவில்லை; ஐயோ, வெட் கப்பட்டுப் போகப்போகிறேனே என் ற கடைசி நிலைக்கு வந்திருக்கலா ம்.இன்றைக்கு உங்களைப் பார்த்து தான் கர்த்தர் சொல்கிறார்: “மகனே*
*(ளே)! கலங்காதே! இந்தக் கடினமா ன உன் சூழ்நிலையை மாற்றுவது எனக்கு அற்பமான காரியம்; நீ உன் சத்துருக்களின் கையிலே ஒப்புக் கொடுக்கப்படப் போவதில்லை; மா ண்டுபோவதுமில்லை; சூழ்நிலைக ள் எதிர்மாறாயிருக்கலாம்; நீ மலை போல நம்பியிருந்தமனிதர்கள் உன் னை ஏமாற்றலாம்/கைவிடலாம்; கட ன் என்கிற பாதாளத்திற்குள் நீ மூழ் கிக் கொண்டிருக்கலாம்; வியாதியி ன் கொடூரம் மரணத்தின் விளிம்பி ற்கு உன்னை கொண்டுவந்திருக்க லாம்; பயப்படாதே,நீ வெட்கப்பட்டுப் போவதில்லை; உன் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும்; இந்த மாதம் உன் காரியங்களை நான் மா றுதலாக முடியப்பண்ணுவேன்; உ ன் தலையிலே நான் கிரீடத்தை பூக் கப்பண்ணுவேன்”.*
*பிரியமானவர்களே! இன்றைக்கு இ ந்த வாக்குத்தத்தத்தை சொல்லி கி றிஸ்துவுக்குள் உங்களை தைரியப் படுத்த விரும்புகிறேன். பயப்படாதி ருங்கள்! இந்த மாதத்திலே நீங்கள் கடந்துபோகிற எப்பேர்பட்ட கடினமா ன சூழ்நிலைகளாயிருந்தாலும், நீ ங்கள் ஆராதிக்கிற சர்வ வல்லமை யுள்ள தேவனுக்கு முன்பாக அவை கள் மிகவும் அற்பமான காரியம்; அ வர் ஒரே ஒருவார்த்தைசொன்னால் போதும், அவைகள் அப்படியே ஆகு ம்;அவர் கட்டளையிட அப்படியே நிற் கும்; தேவாதிதேவனின் அதிகாரத் திற்குஅவைகள் அப்படியே கீழ்படியு ம்.நம் அருள்நாதர்இயேசு இந்த பூமி யிலிருந்த நாட்களில்அவர்கட்டளை யிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் அ ப்படியே பிசாசுகள்கீழ்படிந்து அலறி யடித்து ஓடின; வியாதிகள் சுகமாயி ன; மரித்தவர்கள் உயிரோடெழுந்தா ர்கள்;கொந்தளித்த கடலும், சீறிவந் த புயலும்,சுனாமிபோல எழும்பிவந் த அலைகளும் அப்படியே அடங்கிப் போயின; தண்ணீர் திராட்சைரசமா ய் மாறினது; அற்புதங்கள் நடந்தன; கல்லான இருதயங்கள் மெழுகைப் போல உருகின. ஆம்,மனுஷரால் இ து கூடாதது தான்; ஆனால் நம் தேவ னாலே எல்லாம் கூடும் (மாற்.10:27). உங்களுடைய வழிகள்/நினைவுக ள் அவருடைய வழிகள்/நினைவுக ள் அல்ல;உங்களைக் குறித்தான அ வருடைய திட்டங்களும்,வழிகளும், நினைவுகளும் மகா மேன்மையான வைகள்; அவைகள் ஒருநாளும் தீ மைக்கல்ல;சமாதானத்திற்கேதுவா னவைகள் என்பதை மறந்துவிடாதி ருங்கள். இந்த அக்டோபர் மாதத்தி லே உங்கள்கண்கள் ஆச்சரியமான வைகளைக் காணும்; அதிசயங்க ளைப் பார்த்து பிரமிப்பீர்கள்; சம்பூ ரணத்தை அனுபவிப்பீர்கள்; மனம் கலங்காதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
தேவசித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்திருப்பவனின் வழிகளை வாய்க்கப்பண்ணுகிற கர்த்தர்
சங்கீதம் 37:5.*
"உன் வழியைக்கர்த்தருக்கு ஒப்புவி த்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண் ணுவார்".*
*தேவபிள்ளையே!உன் கர்த்தர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? உன்னைக் குறித்த அவருடைய சிந்தனை என் ன?என்பதையெல்லாம் உன் வாழ்க் கையிலே தெளிவாக உணர்ந்து, அதை நன்கு அறிந்துக்கொள்ள வே ண்டும். தேவனுடைய சித்தத்தின்ப டி செய்கிற நம்முடைய வாழ்க்கை யின் காரியங்களெல்லாம் வெற்றி யாய் முடியவேண்டும் என்பதே அவ ருடைய விருப்பமும் சித்தமுமாயிரு க்கிறது. காரணம், தம்முடைய பிள் ளைகளின் தோல்வியை அவர் அங் கீகரிக்கிற தேவனல்ல. தோல்வி எ ப்பொழுதும் சாத்தானுடைய காரிய ம். பிசாசு எப்பொழுதும் அவனுடை ய எதிர்மாறான காரியத்தையே தே வபிள்ளைகள் வாழ்க்கையிலே செ யல்படுத்தி, அவர்களை தன்னுடை ய வழிக்கு திசைதிருப்பவே முயற் சிக்கிறான். இந்த உலகத்திலே நல் ல/தீய வழிகள் உண்டு. ஜீவ/ மரண வழிகள் உண்டு. வெளிச்சத்தின்/இ ருளின் பாதைகளுமுண்டு.ஆசீர்வா தத்திற்கு/சாபத்திற்கு நேராய் நடத் துகிற வழிகளும் உண்டு. இவைக ளில் எதைவேண்டுமானாலும் தெரி ந்துக்கொள்ள மனிதனுக்கு அதிகா ரமுண்டு.யார் எந்தவழியில் செல்ல வேண்டும் என்று தேவன் யாருக்கு ம் முன்குறிக்கவில்லை. ஆனால், எ ல்லாமனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை(தேவனை)அறிகிற அ றிவை அடையவும் அவர் சித்தமுள் ளவராயிருக்கிறார்(1தீமோ.2:4) என் று வேதம் சொல்கிறது.*
*அன்பானவர்களே! உன் வாழ்க்கை யின் ஆரம்பமல்ல; முடிவே அதி முக் கியமாயிருக்கிறது. நீ எந்த சூழ்நி லையில் ஆரம்பித்தாலும், உன் முடி வு சாதனையாகவே இருக்க வேண் டுமேஒழிய,வேதனையாகவோ,சோ தனையாகவோ முடிந்துவிடக் கூடா து. நீ சாதிக்கவே இந்த உலகத்தில் பிறந்தவள்(ன்). உன் இருதயத்தின் நினைவுகளும் சிந்தனைகளும் எப் பொழுதும் உயர்வான/மேன்மையா ன/வெற்றியான காரியங்களின் மீதே இருக்கவேண்டும். ஒரு மனித னின் வெற்றியுள்ள வாழ்க்கையி லே அவனுடைய நினைவுகளும் சி ந்தனைகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உன்வாழ்க்கையின் ச கல காரியங்களிலேயும் நீ ஜெயத் தை காணவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் உனக்குள் காணப்பட வேண்டும். நீ சாதாரணமானவன(ள) ல்ல; நீ வே றே ஆவியை(கிறிஸ்துவின்) உடை யவள்(ன்); இந்த உலகத்தில் இருக் கிற எல்லா சக்திகளைப் பார்க்கிலு ம்,உனக்குள் இருக்கிறவருடைய வ ல்லமை மகா பெரியது. இந்த மகா பெரிய வல்லமையை, இந்த உலகத் திற்கு நிரூபித்துக் காட்டவே நீ இந் த பூமியிலே உருவாக்கப்பட்டிருக்கி றாய்என்பதை மறந்துபோகாதே. சா த்தான் கொண்டுவருகிற அற்பமா ன, நிரந்தரமில்லாத, பிரயோஜனம ற்ற, பொய்யான காரியங்களையே மலைபோல பார்த்து/சிந்தித்து/ செ யல்படுத்திக் கொண்டு, உனக்கெ ன்று கர்த்தர் வைத்திருக்கிற மகா மேன்மையான, விலையேறப்பெற் ற, ஆசீர்வாதமான உன் எதிர்காலத் தை இழந்துப் போகாதே!*
*பிரியமானவர்களே! ஆண்டவர் கிரு பையாய் தந்திருக்கிற உன் வாழ்க் கையின் தரத்தையும், மதிப்பையும், அந்தஸ்தையும் உதாசீனப்படுத்தி, பிசாசின் மாயத்தந்திரங்களுக்கு உ ன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து விடாதே. விலையேறப் பெற்ற உன் வாழ்க்கைப் பாதையை கர்த்தருடை ய கரத்திலே தந்துவிடு; நீயாகவே இந்த வாழ்க்கையை நடத்த வேண் டும் என்று தீர்மானித்துவிடாதே; உ ன் வாழ்க்கையின் சகல தீர்மானங் களும், செயல்பாடுகளும், கிரியை களும் தேவனால்நிர்ணயம்பண்ண இடங்கொடு; அவர் மேல் முழு நம்பி க்கையையும் வைத்து, அவருடைய வேளைக்காக காத்திரு; நீ எதிர்பார் க்கிற ஜெயமான காரியமும், சுகமா ன வாழ்வும், சம்பூரணத்தின் நிறை வும் நீ எதிர்பாராத நேரத்திலே உன் னை தேடிவரும். இவைகளுக்கெல் லாம் நீ சுதந்திரவாளி என்பதை மற ந்து போகாதே! தேவன் ஏற்கனவே உனக்கென்று உருவாக்கி வைத்தி ருக்கிற நிறைவான ஆசீர்வாதங்க ளை, எந்தவொரு சத்துருவோ, மனு ஷீக ஆவிகளோ இந்த பூமியிலே த டைபண்ணவே முடியாது. கர்த்தரே உனக்காக யாவற்றையும் செய்துமு டிப்பார். உன் முழு இருதயத்தையும் நம்பிக்கையையும் கர்த்தர் மேல் வைக்க பிரயாசமெடு; அவர் உனக் காக பிணைபடுவார்; வழக்காடுவா ர்; யுத்தம்செய்து, நீ வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் இரட்டத்த னையாய் மீட்டுத்தருவார். அவர் இ ன்றைக்கும் உயிரோடிருக்கிறார். உ ன்குடும்பத்திலேஉன்னைக்கொண் டு தான் பெரிய விடுதலையை தர அவர் சித்தம் கொண்டிருக்கிறார். ம னம் தளராமல் வாழ்க்கையில் முன் னேறிச் செல்; பயப்படாதே! சேனை களின் கர்த்தர் உன்னோடிருக்கிறா ர்; அவர் உன்னைக் கொண்டு செய் யப்போகும் காரியம் பயங்கரமாயி ருக்கும்.அவருடைய வல்லமை மாத் திரம் உன் வாழ்க்கையில் பெருக இடங்கொடு; தடைபண்ணாதே. உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Thanks for using my website. Post your comments on this