==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 16)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட அவருடைய சரீரமாகிய சபை!
எபேசியர் 1:20-23
கொலோசெயர் 1:18
கிறிஸ்து சபைக்கு எல்லாவற்றிற்கும் மேலான தலையாக இருக்கிறார்!
எபேசியர் 1:23
இயேசுகிறிஸ்துவைவிட சபைக்கு உலகத்தில் வேறு எதுவும் மேலானதாக இருக்கமுடியாது.
தங்கள் குடும்பத்தாரைவிட கிறிஸ்துவே மேலானவர்.
லூக்கா 14:26
தங்கள் ஜீவனைவிட கிறிஸ்துவே மேலானவர்.
லூக்கா 14:26,27
பிலிப்பியர் 1:21
தங்களுக்குண்டான எல்லாவற்றையும்விட கிறிஸ்துவே மேலானவர்.
லூக்கா 14:33
தங்கள் ஆவிக்குரிய அனுபவம், வம்சம், கோத்திரம், ஜாதி, ஆவிக்குரிய உலகில் பெற்றுள்ள பொருப்பு, பக்திவைராக்கியத்தின் அடிப்படையில் செய்த சாதனைகள், குற்றஞ்சாட்டப்படாத ஜீவியம் இவைகளைக் குறித்த மேன்மையிலும் கிறிஸ்துவே சபைக்கு மேலானவர்.
பிலிப்பியர் 3:5-11
கிறிஸ்து முழு சரீரத்தையும் ஆதரிக்கிற தலையாக இருக்கிறார்.
கொலோசெயர் 2:18
தமக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்களை அவர் யூதனென்றும் கிரேக்கனென்றும், அடிமையென்றும் சுயாதீனனென்றும், ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசம் பாராமல், அனைவரையும் தமக்குள் ஒன்றாகவே பார்க்கிறார்.
கலாத்தியர் 3:27,28
தேவனுக்கு தூரமாயிருந்த புறஜாதியாரை தமது இரத்தத்தினாலே சமீபமாக்கி, தேவனுக்கு சமீபமாயிருந்த யூதருடன் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவர் என்னப்பட்ட விருத்தசேதனத்தைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கி, இருதிறத்தாரையும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேர்த்து, ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாக்கியிருக்கிறார்.
எபேசியர் 2:11-19
தலையாகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும் அவருடைய சரீரமாகிய சபை
எபேசியர் 5:23,24
தங்களுக்கு முன்பாக நடந்துபோகும் தங்கள் மேய்ப்பராகிய இயேசுவின் சத்தத்தை அறிந்து, அவருக்குப் பின்செல்லும் சபையாகிய ஆடுகள். யோவான் 10:4
தாங்கள் முன்னமே தங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, தங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, தாங்களும் தங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருக்கிற சபையாகிய கிறிஸ்துவின் சரீரம்.
1 பேதுரு 1:15
குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு
பூரணரான இயேசுகிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, நித்திய இரட்சிப்பை அடையும் சபையாகிய கிறிஸ்துவின் சரீரம்.
எபிரெயர் 5:8,9
இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று தங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடுகிற மனுஷருக்குக் கீழ்ப்படியாமல், (குமாரனாகிய) தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளையின்படி உலகத்தை தங்கள் போதகத்தினாலே நிரப்புகிற சபையாகிய கிறிஸ்துவின் சரீரம்.
அப்போஸ்தலர் 5:28,29
மத்தேயு 28:18-20
எப்பொழுதும் கீழ்ப்படிந்து, அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுகிற சபையாகிய கிறிஸ்துவின் சரீரம்.
பிலிப்பியர் 2:12
குறிப்பு:
இயேசுகிறிஸ்துவின் சரீரம் என்னப்படுகிற மெய்யான சபையாகிய அவருடைய ஜனங்கள், அவரையே எல்லாவற்றிலும் எல்லாரிலும் மேலானவராகக் கருதி, அவருக்குக் கீழ்ப்படிகிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 17)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
கிறிஸ்துவினால் இசைவாய்க்கூட்டி (வித்தியாசமில்லாமல் ஒன்று சேர்த்து நெருக்கமாக) இணைக்கப்பட்ட சரீரமாகிய சபை!
எபேசியர் 4:16
அநேகராகிய நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
ரோமர் 12:5
நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறபடியால், அந்த ஒரே அப்பத்தில் பங்குபெறுகிற அநேகரான நாமெல்லாரும் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 10:16,17
நம்மில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டு, யூதனென்றும் கிரேக்கனென்றும், அடிமையென்றும் சுயாதீனனென்றும், ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்.
கலாத்தியர் 3:27,28
முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்டு, அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாக தூரமாயிருந்தவர்களை கிறிஸ்து தமது இரத்தத்தினாலே சமீபமாக்கி,
இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கி, இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை கொடுத்து, பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாக்கினார்.
எபேசியர் 2:11-19
நமக்கு உண்டான அழைப்பினாலே நாம் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு,
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்.
எபேசியர் 4:4-6
பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
நம்மைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிற நம்மை: கிரேக்கனென்றும் யூதனென்றும், விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றும், புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றும், அடிமையென்றும் சுயாதீனனென்றும் பிரித்துப்பாராமல், கிறிஸ்து எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர்3:9-11
நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு.
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னிக்கிறதற்கேதுவாய் தேவசமாதானம் நமது இருதயங்களில் ஆள்வதற்கென்றே, நாம் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டிருக்கிறோம். .
கொலோசெயர் 3:12-15
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையாகிய அவருடைய ஜனங்கள் இன, மொழி, வர்க்க பேதமற்றவர்களாய், கிறிஸ்துவுக்குள் எந்த வேறுபாடுகளுமின்றி ஒருமித்து ஜீவிக்கிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 18)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
தன்னை குறித்த தேவனுடைய சித்தத்தில் திருப்தியடையும் சரீரத்தின் அவயவங்கள்!
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
1 கொரிந்தியர் 12:13
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் யூதர், கிரேக்கர், அடிமைகள், சுயாதீனர் அனைவரும் அவயவங்களே.
சரீரம் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 12:14
ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் அல்லது ஒரு தனிப்பட்ட உறுப்பினர் (அவயவம்) மட்டுமே கிறிஸ்துவின் சரீரமாகிவிடமுடியாது. அதாவது சபையாக இருக்கமுடியாது. அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் அல்லது அனைத்து உறுப்பினர்களும் (அவயவங்களும்) சேர்ந்தே கிறிஸ்துவின் சரீரமாக இருக்கமுடியும். அதாவது, சபையாக இருக்கமுடியும்.
சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் தன்னை ஒரு குறிப்பிட்ட அவயவமாக வைத்திருப்பதில் ஒவ்வொரு அவயவமும் (சபை அங்கத்தினரும்) மகிழ்ச்சியடையவேண்டியது அவசியம்!
காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்று அதிருப்தி அடைந்தாலும், அது சரீரத்தின் அவயவம் என்பதில் ஐயமில்லை.
1 கொரிந்தியர் 12:15
காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்று அதிருப்தி அடைந்தாலும்,
அது சரீரத்தின் அவயவம் என்பதில் ஐயமில்லை.
1 கொரிந்தியர் 12:16
கிரேக்க பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்டவர் தான் யூதப் பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்டவராயிராததற்காய் தன்னைத்தானே அற்பமாய் நினைத்தாலும், தேவன் அவரை அற்பமாய் பார்க்கிறதில்லை.
இரட்சிக்கப்பட்ட ஓர் அடிமை தான் ஒரு சுயாதீனனாய் இராததற்காய் தன்னைத்தானே அற்பமாய் நினைத்தாலும், தேவன் அவரை அற்பமாய் பார்க்கிறதில்லை.
சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
1 கொரிந்தியர் 12:17-20
கண் மிகவும் அவசியமான அவயவமானாலும், சரீரம் முழுவதும் கண்ணாக மட்டுமே இருந்தால், அது முழுமையான சரீரமாக இருக்கமுடியாது.
யூதர் மற்றும் சுயாதீனரை மட்டுமே அங்கத்தினராகக் கொண்டிருப்பது ஒரு முழுமையான சபையாகாது. அதில் கிரேக்கருக்கும் அடிமைகளுக்கும் இடமிருக்கவேண்டும்!
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தான் ஒரு குறிப்பிட்ட அவயமாக இருப்பது தேவனுடைய சித்தம் என்பதை ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சபையில் அங்கமானவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்!
பகிரப்பட்டபடியும் அழைக்கப்பட்டபடியும் நடக்கவேண்டும்!
தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7:17
விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டவன், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடவேண்டியதில்லை. விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டவன், விருத்தசேதனம் பெறவேண்டியதில்லை.
1 கொரிந்தியர் 7:18
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை. தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
1 கொரிந்தியர் 7:19
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 7:20
அடிமையாய் அழைக்கப்பட்டவன் கவலைப்படத் தேவையில்லை. அவன் சுயாதீனனாகக்கூடுமனால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்ளலாம்.
1 கொரிந்தியர் 7:21
கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான். அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
1 கொரிந்தியர் 7:22
பொன்னும் வெள்ளியுமான கனத்திற்குரிய பாத்திரங்களாயிருந்தாலும்; மரமும் மண்ணுமான கனவீனத்திற்கான பாத்திரங்களாயிருந்தாலும்; தேவனுடைய வீட்டிலே சுத்திகரிக்கப்பட்ட பாத்திரமே உண்மையில் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 2:20,21
குறிப்பிட்ட வரமுள்ளவராய் இருப்பதில் திருப்தியடையவேண்டும்!
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12:7- 11
வரங்களை பகிர்ந்துகொடுக்கிறதில் ஆவியானவர் யூதர், கிரேக்கர், அடிமைகள், சுயாதீனர் (1கொரி.12:13) என்று எந்த வித்தியாசமும் பாராமல், தமது சித்தத்தின்படியே அவரவருக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
எந்தப் பின்னணியிலிருந்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கமானவரானாலும் தேவன் தனக்கு பகிர்ந்தளித்த வரத்தில் முழுமையாய் திருப்தியடைந்து அதை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தவேண்டும்!
மற்றொருவருக்கு இருக்கிற கிருபை தனக்கு இல்லை என்று வருத்தப்படுகிறதைத் தவிர்த்து, தனக்கு கொடுக்கப்பட்ட கிருபையில் ஒவ்வொருவரும் திருப்தியடையவேண்டும்!
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையின் அங்கத்தினர், தாங்கள் எந்தப் பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்டவராயினும், எந்த வரத்தைப் பெற்றவராயினும் மகிழ்ச்சியுடன் தேவனை சேவிக்கிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 19)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளும் அவயவங்களைக்கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபை!
"அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும், தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது" என்று கொரிந்து சபையாருக்கு பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
1 கொரிந்தியர் 12:20-22
தன்னிலும் பலவீனமாய் இருக்கிற ஒரு அவயவத்தின் உதவி தனக்குத் தேவையில்லை என்று சரீரத்தின் எந்த ஒரு அவயமும் அசட்டைப்பண்ணமுடியாது.
பலவீனமான அவயவங்களின் உதவியில்லாமல் பலமான அவயவங்கள் இயங்கக்கூடாதபடிக்கே தேவன் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
கிரேக்கரிலிருந்து இரட்சிக்கப்பட்டவரின் அன்பு, ஐக்கியம் மற்றும் ஊழியம் தனக்கு தேவையில்லை என்று யூதரிலிருந்து இரட்சிக்கப்பட்டவர் சொல்லமுடியாது.
இரட்சிக்கப்பட்ட ஒரு சுயாதீனன், இரட்சிக்கப்பட்ட ஒரு அடிமையின் அன்பு, ஐக்கியம் மற்றும் ஊழியம் தனக்கு தேவையில்லை என்று சொல்லமுடியாது.
சபையில் முகியமானவர்களாகக் காணப்படுகிறவர்களின் பக்திவிருத்திக்கு, அற்பமாய் காணப்படுகிறவர்களின் உதவி அவசியப்படுகிறது.
1 கொரிந்தியர் 12:7
எபேசியர் 4:16
ஆகவே, எந்தப் பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்ட எவரையும் ஏற்றுக்கொள்ள சபையிலுள்ள அனைவரும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம்.
நாம் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நாமும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ரோமர் 15:5,7
ஒன்றைக்குறித்து ஒன்று கவலைப்படும் அவயவங்களைக்கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபை!
"மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம். நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும். நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களுமாயிருக்கிறீர்கள்" என்றும் பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
1 கொரிந்தியர் 12:23-27
கிறிஸ்துவின் சரீரத்தில் (சபையில்) கனவீனமான அவயவங்களாகக் காணப்படுகிற புறஜாதியார் மற்றும் அடிமைகளே அதிக கனத்திற்குரியவர்கள். தேவனுடைய சபையில் அற்பமாய் காணப்படுகிறவர்களில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். சரீரத்தில் (சபையில்) பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் (சபை அங்கத்தினர்) ஒன்றைக்குறித்து ஒன்று (ஒருவரைக்குறித்து ஒருவர்) கவலைப்படவும், ஒரு அவயவம் (விசுவாசி) பாடுபட்டால் எல்லா அவயவங்களும் (விசுவாசிகளும்) கூடப் பாடுபடவும். ஒரு அவயவம் (விசுவாசி) மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் (விசுவாசிகளும்) கூடச் சந்தோஷப்படவும்.
தேவன் விரும்புகிறார்.
சபையார் சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாகவும், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளவும் வேண்டும்.
ரோமர் 12:10
சபையார் மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணவேண்டும்.
பிலிப்பியர் 2:3
ஒவ்வொருவரும் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கவேண்டும்.
பிலிப்பியர் 2:4
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்.
ரோமர் 12:13
தேவைக்கு மிஞ்சி வைத்திருக்கிறவர்கள் தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கவேண்டியது அவசியம்.
அப்போஸ்தலர் 2:44,45
அப்போஸ்தலர் 4:34,35
வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கிற சகோதர சகோதரிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் உற்சாகப்படுத்துகிறவர்களாக இராமல், அவர்களுக்கு வேண்டியவைகளைக் கொடுக்கவேண்டும்.
யாக்கோபு 2:15,16
இவ்வுலக ஆஸ்தி உடையவராயிருக்கிற ஒரு தேவனுடைய பிள்ளை, தன் சகோதரருக்குக் குறைச்சலுண்டென்று காண்கையில், தன் இருதயத்தை அவருக்கு அடைத்துக்கொள்ளாமல், கிரியையினாலும் உண்மையினாலும் அவரில் அன்புகூரக் கடமைப்பட்டுள்ளார்.
1 யோவான் 3:18
நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யவேண்டியது நமது கடமையாகும்.
கலாத்தியர் 6:10
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையில் எந்தப் பின்னணியிலிருந்து வந்தவராயினும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு அன்பும் ஐக்கியமும் பாராட்டுகிறதையும், இல்லாதவர்களை இருக்கிறவர்கள் உற்சாகமாய் கொடுத்து தாங்குகிறதையும் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 20)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
தலையாகிய கிறிஸ்தவுக்குள் எல்லாவற்றிலயும் வளரும் சரீரம்!
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறது.
எபேசியர் 4:15
சத்தியத்தை அன்புடன் கைக்கொள்ளுகிறது!
சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டியுள்ளது.
எபேசியர் 6:14
சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கீகரிக்கிறது.(
2 தெசலோனிக்கேயர் 2:10,13
திருவசனத்தின்மேல் வாஞ்சையுள்ளது.
1 பேதுரு 2:1-3
சத்தியத்தில் சந்தோஷப்படுகிறது.
1 கொரிந்தியர் 13:6
ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிகிறது.
1 பேதுரு 1:22
சத்தியத்திலே நடக்கிறது.
3 யோவான் 1:3,4
சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்கிறது.
2 கொரிந்தியர் 13:8)
சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 3:15
தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறது!
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருகிறது.
2 பேதுரு 3:18
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தன்னை ஆதரிக்கிற தலையை (இயேசுகிறிஸ்துவைப்) பற்றிக்கொண்டு தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிறது.
கொலோசெயர் 2:18
கொலோசெயர் 3:9-11
எபேசியர் 4:16
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் (கிறிஸ்துவின் எல்லா குணங்களிலும்) வளருகிறது.
எபேசியர் 4:15
தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டு, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகிறது.
எபேசியர் 4:11
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபை அன்புடன் சத்தியத்தை கைக்கொண்டு, இயேசுகிறிஸ்துவின் எல்லா குணங்களிலும் வளருகிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this