தேவனால் தேர்வு செய்யப்பட்டவர் ஸ்தேவான்'*
=================
பந்தி விசாரணைக்காக அப்போஸ்தலரால் தேர்வு செய்யப்படுகிறார்'
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும்.. தெரிந்துகொண்டு,
ஆனால்..
'தேவனால் பயன்படுத்தப்படுகிறார்'
------------------------------------------------
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
'ஸ்தேவானின் பிரசங்கம்
----------------------------------------------
'ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது. எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள். நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது.
இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைக்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
'இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரித்தார்'
----------------------------------------------
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு;
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
அவனோ, முழங்காற்படியிட்டு; ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
அப்போஸ்தலர் 6:1-8, 7:48-60
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 10:31
எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
கொலோசெயர் 3:24
'தேவனுடைய கிருபை பெரியது'
------------------------------------------------
'இயேசு: என் கிருபை உனக்குப் போதும்.'*
2 கொரிந்தியர் 12:
--------------------------------
*'ஒரு நாளும் மாறாத தேவன்'*
--------------------------------------------
தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 13:34
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
ரோமர் 11:29
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 54:10
'பரிபூரண நன்மை தருகிறார்'
----------------------------------------------------
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9:8
பலவீனங்களில் உதவி செய்கிறார்'
-------------------------------------------------------
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15
*'இயேசு: என் கிருபை உனக்குப் போதும்.'*பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
2 கொரிந்தியர் 12:9
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.
1 பேதுரு 5:10
'நம் இரட்சிப்பு தேவனுடைய ஈவு'
--------------------------------------------
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.
எபேசியர் 2:8
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12:28
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 4:16
'கிருபை என்றும் நம்மை தொடர்வதாக'
------------------------------------------------------
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
எபேசியர் 6:24
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:21
உலகம் நல்மாற்றம் அடைய இயேசுவின் வார்த்தைகளால் மக்களை சந்திப்போம்
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன் ஜான் டேனியல்
Contact: +91 9842046919
Email: ministriesjesusgoodnews@gmail.com
'பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்'
~~~~~~~~~~~~~~~~~
சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16:13
*'ஆவியானவரின் நிறைவு'*
~~~~~~~~~~~~~~~~~~~
*நான்(யோவான் ஸ்நானகன்) ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்,அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்*
மாற்கு 1:8
நானும்(யோவான் ஸ்நானகன்) இவரை அறியாதிருந்தேன்: ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ,அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
யோவான் 1:33
*'பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் அவசியம்'*
~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; (*இயேசு:*)யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். *நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.*
அப்போஸ்தலர் 1:4
யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.
அப்போஸ்தலர் 11:16
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3:5
*'சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் சத்திய ஆவியானவர்'*
~~~~~~~~~~~~~~~~~~
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார்
1 யோவான் 5:6
*நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.*
ஏசாயா 30 :21
உலகம் நல்மாற்றம் அடைய இயேசுவின் வார்த்தைகளால் மக்களை சந்திப்போம்*
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன் ஜான் டேனியல்
Contact: +91 9842046919
Email: ministriesjesusgoodnews@gmail.com
"உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்து"*
யோவான் 1:9
***************************
'யோவான் ஸ்நானன்'
**************************
*"அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்."*
யோவான் 5:35
*'யோவான் ஸ்நானனின் அர்ப்பணிப்பு'*
************************************
"என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (யோவான் 1:7-8) என்று யோவான் தன்னை தாழ்த்தியது அன்பின் சமுதாயம் அமைவதற்கு வழி வகுத்து விடும். யோவான் தன்னுடைய எல்லையை அறிந்திருந்தார். அனைவருமே வியந்துபார்க்கும் உயர்ந்த நிலையில் தேவனாகிய கர்த்தர் அவரை வைத்திருந்தபோதும்; முழுவதுமாக தன்னை தாழ்த்தினார். "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்." (யோவான் 3:30) என்பதே அன்பின் சமுதாயம் அமைவதற்கு யோவான் ஸ்நானனின் அர்ப்பணிப்பு.
*'தேவனை பிரியப்படுத்தும் ஊழியம்'*
************************************
தன்னிடத்தில் வந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?" (லூக்கா 3:7) என்று தான் அழைத்தார். *'தன்னுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் எந்த மனிதனையும் மாய்மாலமாக பிரியப்படுத்த விரும்பாத மனிதர் இந்த யோவான் ஸ்நானன். தேவையான காரியங்களை குறுக்கு வழியில் சாதித்துக் கொள்வதற்காக; தகுதியில்லாத மனிதர்களை புகழ்ந்து பேசி; எப்படியெல்லாம் விழுந்து பணிந்துகொள்வதை அவர் செய்ய வில்லை. ஆனால், இந்த யோவான் ஸ்நானனின் அழைப்போ தேவனை பிரியப்படுத்தும்படியான ஒரு ஊழியம்.'*
'உறுதியும் பாவத்தை கண்டித்ததால் மரணமும்'
**********************************
அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன், இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,
ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள், அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
மத்தேயு 14:1-14
நாம் எரிந்து பிரகாசிப்போம்
*********************************
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
மத்தேயு 5:14
*'உலகின் இருளை வெளிச்சமாக்குவோம்'*
******************************
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:24
*''தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்''*
*உலகம் நல்மாற்றம் அடைய இயேசுவின் வார்த்தைகளால் மக்களை சந்திப்போம்*
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன் ஜான் டேனியல்
Contact: +91 9842046919
Email: ministriesjesusgoodnews@gmail.com
சந்ததியின் ஆசிர்வாதம்'
*****************************
*'கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்,'*
சங்கீதம் 1:1-6
*****************************
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.
*'தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார்.'
சங்கீதம் 14:5
********************************
உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார், இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 59:21
*'நீதிமானின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்'*
******************************
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
சங்கீதம் 112:1,2
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
ஏசாயா 44:3
*'நீதியாய் நடப்பவர் சந்ததி பெயர் நிலைத்திருக்கும்'*
*******************************
பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும், அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும், அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.
ஏசாயா 48:17-19
'நீதிமான் சந்ததி தேசத்தில் கட்டப்டுவார்கள்'*
****************************
நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய், உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
ஏசாயா 54:3
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
ஏசாயா 65:23
*'நாம் தேவனுடைய சந்ததியாயிருக்கிறோம்'
******************************
நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கமென்று நாம் நினைக்கலாகாது.
அப்போஸ்தலர் 17:29
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
கலாத்தியர் 3:16
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:9
*உலகம் நல்மாற்றம் அடைய இயேசுவின் வார்த்தைகளால் மக்களை சந்திப்போம்*
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன் ஜான் டேனியல்
Contact: +91 9842046919
Email: ministriesjesusgoodnews@gmail.com
Thanks for using my website. Post your comments on this