உள்ளத்தில் உறுதிகொள் | நல்ல எண்ணங்கள் | மகிழ்ச்சியான இருதயம் | நம்பிக்கை |
*👩🎓குட்டிக் கதை 😍*
*🔥உள்ளத்தில் உறுதிகொள்*
*_______________________________*
ஒரு ராஜாவுக்கு தன் பட்டத்து யானை கஜேந்திரன் மேல ரொம்ப பிரியம் !!
ஒவ்வொரு போரின் போதும் பட்டத்துயானை கஜேந்திரன் தான் முன்களத்தில் நிற்க்கும்.
எப்பவும் ராஜாவுக்கு வெற்றிதான் !!
கஜேந்திரன் துணையிருக்கும் போது,
ராஜாவுக்கு ராஜா தான்.
போர் முரசு ,கேட்ட அடுத்த நிமிடமே போருக்கு தயார் ஆகிடும் !!
எதிர் நாட்டு ராஜாவுக்கு இந்த யானையை பார்த்தாலே , கை கால் எல்லாம் நடுங்கிடும் !!
ஒரு படைத் தளபதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கஜேந்திரனுக்கும் ராஜா கொடுத்தார் .
பட்டத்து யானைமீதேறி ராஜா நகர் வலம் வரும்போது தெய்வமே நேரில் காட்சி தந்தது போல் மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்று உள்ளம் மகிழ்வார்கள் !!
அரண்மனை போன்ற பெரிய வளாகம் கட்டி ,வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து பட்டத்து யானையை ராஜாவும் போற்றி பாதுகாத்து வந்தார் .
எல்லோருக்கும் முதுமை வருவது போல் இப்ப பட்டத்து யானைக்கும் வயதாகிவிட்டது .
எதிர் நாட்டு படை தொந்தரவு இல்லாததால் போர் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது .
கஜேந்திரன் யானைக்கு முன்னாடி மாதிரி சுறுசுறுப்பா இயங்க முடியல !
சோர்வா இருந்துச்சு !!
அவருடைய அழகும் கம்பீரமும் ,முன்புபோல இருக்கணும்னு ராஜா ஆசைப்பட்டார் !
ஆனா வயசு ஆயிடுச்சே !
புத்தி நல்லா இருந்தாலும் சக்தி குறையுதே !!
பட்டத்து யானைக்கு ,வேண்டிய சத்தான உணவுகள் மருத்துவஉதவிகள்,பயிற்சிகள் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளனும்
ராஜா உத்தரவு போட்டார் .
தினசரி அதிகாலையில் குளத்தில் குளிக்க வேண்டியது ,
அங்குள்ள தாமரை மலரை பறித்து இறைவனை வணங்கிவிட்டு ,ராஜாவுக்கு தரிசனம் தந்து , சாப்பிட வேண்டியது பின் தூங்க வேண்டியது .
இதுதான் பட்டத்து யானையின் வேலை !!
அன்றைக்கு காலையில குளிக்கப்போன பட்டத்து யானைக்கு போதாத நேரம் !!
குளித்துவிட்டு , படித்துறைக்கு சற்று தள்ளி பூத்திருந்த தாமரையை பறிக்கப் போனது யானை .
குளத்துக்குள் இருந்த சேற்றில் கால் வைத்துவிட்டது .
சேற்றிலிருந்து காலை எடுக்க முடியவில்லை .
எவ்வளவு முயன்றும் முடியவில்லை .
ராஜாவுக்கு தகவல் போனது !
பட்டத்து யானையைசேற்றிலிருந்து மீட்க ஆணையிட்டார் !
நூற்றுக்கணக்கான படைவீரர்கள் ,பழக்கிய யானைகளின் துணையுடன் முயன்று பார்த்தார்கள் முடியவில்லை .
மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது .
ராஜாவிடம் எப்படி சொல்வது !
ராஜா கவலையடைவாரே !
பட்டத்து யானையை இழப்பது நாட்டுக்கே பெரிய அபசகுணம் அல்லவா !!
வேறு வழியில்லை !
அமைதியாகச் சொல்லிவிட வேண்டியதுதான் !
ராஜாவிடம் சொன்னார்கள் !
ராஜா பதட்டப்படாமல் கேட்டார் !!
பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
அதனுடைய ஆற்றலும் அறிவும் விவரிக்க முடியாதது !!
நீங்கள் அதை புரிந்து செயல்படுத்துவீர்கள் என்று நினைத்து உங்களிடம் அதை மீட்கும் பொறுப்பை கொடுத்தேன் .
நீங்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை !!
அதன் பலம் உங்களுக்கு தெரியவில்லை !!
நெருப்பின் வெளிப்பாடு , உரசும் கல்லைப் பொறுத்தே அமைகிறது .
இன்னும் சற்று நேரத்திலேயே பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும்.
அதற்கான உத்தியை சொல்கிறேன்!
உடன் செய்க !!
போர்முரசு ஒலிக்கட்டும் !,
படைவீரர்களின் உற்சாக துந்துபிகள் முழங்கட்டும் !
வாள்களும் வேல்களும் கூர்செய்யும் சப்தங்கள் இடைவிடாது கேட்கட்டும் .
ஆணையிட்டார் ராஜா !!
போர் முரசு ஒலித்தது !
படைவீரர்கள் உற்சாக சப்தம் எழுப்பினர் !
மங்கல வாழ்த்துக்கள் ,மத்தள ஓசை, வாள் வேல் ,வீர மகளிர் வெற்றித் திலகமிடும் பாடல்கள் ,பறையோசை !!
எங்கும் கேட்டது .
எல்லோருக்கும் ஆச்சரியம் !வியப்பு !!,மகிழ்ச்சி ,உற்சாகம் !!! ஆனந்தம் !!!
பட்டத்து யானை கஜேந்திரன் சேற்றிலிருந்து காலை தானாக எடுத்து வெளியே வந்தது !!
நடையில் தளர்வு இல்லை !
முகத்தில் சோர்வில்லை !!
வயோதிக பாவமில்லை !!
படைத் தளபதியின் மிடுக்கோடு,
முறுக்கேறிய உற்சாகத்தோடு,
புது வெள்ளம் கரை திரண்டு அணை உடைக்க துடிப்பது போல்,
புது களம் காண போர்களம் செல்ல எழுத்து வந்தது,
சந்தோசத்தில் யானையின் கால்களை பிடித்துக்கொண்டார் ராஜா !!
அதன் பிடரியின் மீது ஏறிஊர்வலம் போனார் !!!
எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் !!
ராஜா எவ்வளவு பெரிய அறிவாளி !!
எது செய்தால் ,எது நடக்கும் எப்படி தெரியும் ?
நமக்கு ஏன் புரியவில்லை !!
அது புரிந்ததால் தான் ,
*அவர் ராஜா !!*
⚖️ ஒரு கதை 🔔⌛*
🎅 பெரிய குரு இருந்தார்.
🚫 முற்றும் துறந்தவர்
✅ எல்லாம் கற்றவர்.
📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.
🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.
🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.
☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.
🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.
🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.
👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.
🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇
❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.
🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.
🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗
👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.
👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.
🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
🔣 தத்துவம்,
🔠 மந்திரம்,
🚫 பாவம்,
✅ புண்ணியம்,
🌁 சொர்க்கம்,
🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.
🎤 பிரசங்கம் முடிஞ்சுது.
✴ ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன்.
😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…
🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨
😱 அவ்ளோதான்❗
😰 குரு தெறிச்சிட்டார்!
© நீதி:
✊ மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅
👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் 😂😂😂
நீதி:❓🙏
*ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.*
( நீதிமொழிகள் 25 : 11 )
ஓர் குட்டிக் கதை
அன்பு வாசகர் அனைவருக்கும்,
அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
நல்ல எண்ணங்கள்
***********************
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்
“மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார்.
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!
அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்
“ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!
சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின்
அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்!
“இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!
அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும்
நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!
அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!
அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!
அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!
அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்!
என் அன்பு வாசகரே,
நமது எண்ணங்களே நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது.
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!*
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்...
நல்ல எண்ணங்களை பைபிள் வாசிக்கிறதிலும், ஆவியில் நிறைந்து ஜெபிப்பதிலும் தான் பெற்றுக்கொள்ள முடியும்
தீய எண்ணங்கள் அரண்கள் போல் உங்கள் மனதில் இருக்குமேயானால் அந்த அரண்கள் நல்ல பிரசங்கங்களை கேட்கும் போதும்,நல்லநல்ல விஷயங்களை நீங்கள் படிக்கும்போதும் அவைகளை மனதுக்குள் போகாமல் தடுத்து விடும்.
முதலாவது ஆவியில் நிறைந்து ஜெபித்து தேவபெலம் என்ற ஆயுதத்தால் அவைகளை நிா்மூலமாக்கி தகா்த்தெறியுங்கள். .இவைகள் வோ் முதலாய் இல்லாதபடி தோண்டி எடுத்து நகரத்தில் எறியுங்கள். .( 2கொாி.10:4-6)
அப்போது தான்
ஆவியானவா் புதுபுது எண்ணங்களை தோான்ற செய்வாா். நீங்கள் உங்கள் எண்ணங்களை போல் வாழ்வீா்கள்..
எண்ணற்ற ஆசீா்வாதங்களும், பலருக்கு உதவி செய்யும் மனபான்மையும் உங்களை தேடி வரும்.
To Get Daily Story In What's App Contact +917904957814
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ,
ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது,
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
கடைசியாக, , உண்மை, ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி,புண்ணியம் புகழ் ஆகியவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். (பிலிப்பியர் 4:4-8)
இந்த வசனங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வில் செயல்பட்டு உங்களை சமுதாயத்தில் உயா்ந்தவா்களாக மாற்றிவிடும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
-ஓர் குட்டிக் கதை
அன்பு வாசகர் அனைவருக்கும்,
அன்புடன் இனிய மதிய வணக்கம் !! இந்த நாளின்ஆசீா்வாதம் உங்களுக்கு திரளாய் வருவதாக !!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
மகிழ்ச்சியான இருதயம்
***********/////************
பெரிய ஹாலில் செமினார நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.
இப்பொழுது
அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய
பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த
அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் .ஒருவருக்கொருவர் நோக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள்
பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
ஐந்து நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குாிய பலூனை தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
ஒவ்வொருவரும்
ஒரு பலூன் மட்டும எடுங்கள்அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள் என்றார்.
அடுத்த
ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது
அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான்
வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம்,ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை.
நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் மலரட்டும் என்றாா்.
To Get Daily Story In What's App Contact +917904957814
என் அன்பு வாசகரே,
பைபிள் சொல்கிறது..
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
(கலாத்தியர் 6:2-10)
எனவே மற்றவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் உதவி செய்யுங்கள். நீங்கள் எதிா்பாா்க்காத நிலையில் மகிழ்ச்சியை உண்டாக்கும் பல ஆசீா்வாதங்களை பெற்றுக் கொள்வீா்கள்.
#நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
சப்பாத்தி சப்பாத்தி
அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார். தமிழரசனின் மனைவி இரண்டு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். இருவரும் சிறிது தூரம் நடந்தனர். வழியில் மற்றொரு பயணியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பேசிக் கொண்டே செல்லலாயினர்.
அப்போது அவர்கள் சிறிது ஓய்வு எடுக்க எண்ணினர். வழியில் ஒரு கிணறு இருந்தது. பசியும் தாகமும் எடுத்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என எண்ணியவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தனர்.
அறிவழகனும் தமிழரசனும் தாங்கள் கொண்டு வந்த சப்பாத்திகளை எடுத்தனர். அறிவழகன் அனைத்து சப்பாத்திகளையும் பாதி பாதியாக ஆக்கிவைத்தான். மொத்தம் பன்னிரண்டு துண்டுகள். மூவரும் சப்பாத்தி துண்டுகளைச் சாப்பிட்டனர். தண்ணீர் அருந்தினர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மூன்றாமவன் பன்னிரண்டு ரூபாயை எடுத்து அறிவழகனிடம் கொடுத்துவிட்டு வேறுவழியில் சென்றுவிட்டான்.
இவர்கள் இருவரும் தமது வழியில் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் தமிழரசன் அறிவழகனிடம் “”அறிவு! பன்னிரண்டு ரூபாயில் எனக்கும் கொடு. என் சப்பாத்தி கூடதானே அதில் இருந்தது…” என்றான். இதைக் கேட்ட அறிவழகன் ஒரு ரூபாயை தமிழரசனுக்குக் கொடுத்தான்.
“ஓஹோ! எனக்கு ஒரே ரூபாய். உனக்கு மட்டும் அவ்வளவுமா? எனக்கு இன்னும் கொடு… ‘ என தமிழரசன் கேட்க அறிவழகன் தர மறுத்துவிட்டான்.
இருவரும் சண்டையிட்டவாறே ஒரு நகரில் நுழைந்தனர். அங்குதான் நம் அறிவாளி இளம் பெண் வசிக்கிறாள். அந்த நகரத்தின் நீதிபதியிடம் வழக்கு சென்றது. அந்த நேரத்தில் ஏதோ வேலையாக நீதிபதியும் அறிவாளி இளம் பெண்ணை அழைத்திருந்தார். அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். வழக்கு ஆரம்பமானதும் நீதிபதி அறிவான இளம் பெண்ணிடம், “” மகளே! இந்த வழக்கை நீயே தீர்த்து வை..” என்றார்.
இதைக் கேட்ட இளம் பெண் இருவரின் வாதத்தையும் கேட்டறிந்தாள். பின் தமிழரசனிடம், “”நீ இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டால் உனக்கு லாபம்தான். நியாயமாக, தீர்ப்பு சொல்லிவிட்டால் உனக்கு நஷ்டமாகிவிடும்…” என்றாள்.
தமிழரசன், “”நஷ்டம் எப்படி? 6 சப்பாத்தி 12 துண்டுகள். ஒவ்வொரு துண்டும் ஒருரூபாய். என் 2 ரொட்டிக்கு 4 துண்டுகள். அறிவு எட்டு ரூபாய் வைத்துக் கொண்டு 4 ரூபாய் எனக்குத் தரட்டும்..” என்று சொன்னான்.
அங்கு கூடியிருந்தவர்கள் “”ஆமாம்… தமிழரசன் சரியாதானே சொல்றான்…” என்றனர்.
“”உம்…” என்ற அறிவாளிப் பெண், “”நீங்கள் இருவரும் அந்தப் பணத்தை மேசை மீது வையுங்கள்…”
அறிவழகன் பதினோரு ரூபாயும் தமிழரசன் ஒரு ரூபாயும் வைத்தனர்.
இப்போது அறிவாளி இளம் பெண் தமிழரசனிடம் கூறினாள்:
“”12 சப்பாத்தி துண்டுகளை 3 பேர் சாப்பிட்டீங்க. ஆளுக்கு 4 துண்டுகள். அதாவது 4 துண்டுகளை நீயும் சாப்பிட்டாய். இதனுடைய அர்த்தம், நீ உன்னுடைய 2 ரொட்டியைத்தான் சாப்பிட்டே…. அதாவது அந்த மூன்றாம் நபர் அறிவழகனோட சப்பாத்தியைத்தான் சாப்பிட்டிருக்கார். உன் சப்பாத்தியிலிருந்து அவர் எதுவுமே சாப்பிடலை. அதனால உனக்கு ஒரு ரூபாயும் இல்லை…” எனக் கூறியதுடன், 12 ரூபாயையும் எடுத்து அறிவழகனுக்குக் கொடுத்துவிட்டாள்.
வழக்கு முடிந்தது. தமிழரசன் முகத்தைத் தொங்கவிட்டவனாய் வருத்தத்துடன் சென்றான். அங்கு கூடியிருந்தவர்கள் “சரியான தீர்ப்பு!’ எங்களுக்கு இது தோணலையே!’ என்று கூறி கலைந்து சென்றனர்.
*என் அன்பு வாசகர்களே,*
தன் மீது தவறை வைத்துக்கொண்டு மற்றவர்களை குற்றவாளியாக்க முயற்சித்தால் இறுதியில் நாம் தான் குற்றவாளியாய் நிற்போம் என்பதே இக்கதையின் கருத்து.
To Get Daily Story In What's App Contact +917904957814
இக்கதையில் வந்த சூழ்நிலை அநேகர் சந்தித்திருக்க கூடும் ஒருவேளை அது அறிவழகனாகவோ அல்லது தழிரசனாகவோ. ஒருபோதும் நாம் இக்கதையில் வரும் தமிழரசன் போல் இல்லாமல் அறிவழகனைப்போல சமயோசிதமாக செயல்பட வேண்டும்.
நம் எல்லாருக்கும் மிகவும் பரிசியமான ஒரு வேதாகம கூற்றறில் சிங்காசனத்தில் சாலெமோன் ராஜாவாய் வீற்றிருந்த நேரத்தில் இரு பெண்கள் அவனை பார்க்க ஒரு வழக்கோடு சென்றனர். தன் மீது தவறை வைத்துக்கொண்டு மற்றப் பெண்ணின் குழந்தையை அபகரிக்க நினைத்து இறுதியில் தன் ஜீவனை நஷ்டப்படுத்திக் கொண்டாள்.
"42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
லூக்கா 6:42*
எனவே எந்தவொரு காரியமானாலும் நம்மிடத்தில் ஏதாகிலும் தவறு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் அப்படி ஆராயாதவனை வேதம் மாயக்காரன் என்று சொல்லுகிறது. எனவே நாம் மாயக்காரன் ஆகாதபடி நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயத்தீர்க்க படுவதில்லை.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!*
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் மீண்டும் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.!!!
*நம்பிக்கை*
💪💪💪💪
வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மை சம்பவம்....
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் என் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் தான் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.
ஒரு நாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, "மன்னா, நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் ஒரு கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும் என்றார்.
தலைமை அமைச்சர் அவர்களே! தங்களின் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழே எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அதற்கான பொறுப்பையும் தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றார் அரசர்.
அதன்படி ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அரசர் சந்திர குப்தர்.
சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டிய கம்பளிப் போர்வைகள் அவரது வீட்டில் இருப்பதை அந்த ஊர் கொள்ளையர்கள் அறிந்து அதை திருட முடிவு செய்தனர். ஏனெனில் கடுங்குளிர் காலமாதலால் கம்பளிகளை நல்ல விலையில் விற்க முடியும்.
ஒருநாள் நள்ளிரவு அவர்கள் திட்டப்படி சாணக்கியர் வீட்டிற்குள் மூன்று கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர் வீட்டில் வித விதமாய், வகை வகையாய், அழகழகாய் கம்பளிகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை கண்டு கொள்ளையர்கள் பிரமித்து போய் நின்றனர். எனினும் தாங்கள் வந்த காரியத்தை முடிக்க எண்ணி சாணக்கியர் எங்கு இருக்கிறார் என்று தேடி பார்த்த போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் இத்தனை திரளாய் மலை போல் கம்பளிகள் குவிக்கப்பட்டிருந்தாலும் சாணக்கியர் ஒரு கிழிந்த ஒரு போர்வையை போர்த்தி கொண்டு படுத்திருந்தார். அவர் அருகில் அவரது தாயாரும் அதே போல் ஓர் கிழிந்த கம்பளியை போர்த்தி படுத்திருந்தார். இந்த காட்சியை கண்ட கொள்ளையர்களுக்கே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தாங்கள் வந்ததற்கான நோக்கத்தையும் மறந்தனர்.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்துப் போனார். அப்போது கொள்ளையர்களில் ஒருவன், ஐயா, பயப்பட வேண்டாம். நாங்கள் இங்குள்ள போர்வைகளை திருட வந்தோம். இவ்வளவு கம்பளிகள் மலை போல் உங்கள் வீட்டில் குவிந்திருக்க ஏன் கிழிந்து போன கம்பளியை நீங்களும் உங்கள் தாயாரும் போர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்.
இவற்றில் ஆளுக்கொன்று எடுத்துக்கொள்ள கூடாதா?? என்றான். அதற்கு சாணக்கியர், அவை எங்களுக்கு சொநதமானவைகள் அல்ல. ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்க பொருள்கள். அவற்றை நான் எப்படி எடுத்து உபயோகப்படுத்த முடியும். அப்படி உபயோகித்தால் மன்னர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?? என்னை நம்பி அல்லவா இந்த பொறுப்பை என்னிடம் தந்திருக்கிறார் என்றார் சாணக்கியர்.
இதை கேட்டுக்கொண்டிருந்த கொள்ளையர்கள் சாணக்கியர் கால்களில் விழுந்து வணங்கினார்கள். இப்பேர்பட்ட மனிதர் எங்களுக்கு அமைச்சராய் அமைந்தது எங்கள் பாக்கியம் என்றனர். மேலும் எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்கு சொந்தமான பொருட்களை திருடவே மாட்டோம் என்று அவரிடம் சத்தியம் செய்துவிட்டு சென்றனர்.
To Get Daily Story In What's App Contact +917904957814
*என் அன்பு வாசகர்களே,*
இந்த உலகத்தில் அனைத்து மனிதர்களும் ஏதாகிலும் ஒரு முறையில் மற்றொரு மனிதனுக்கு நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். உதாரணமாக கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கும், தொழிலாளி முதலாளிக்கும், முதலாளி தொழிலாளிக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர்கள் நம்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக எந்தவொரு எல்லைக்கும் சொல்ல தயக்கம் காட்டுவதில்லை. அவ்வாறு தங்கள் மீதுள்ள நம்பிக்கை நிலைநாட்டி உயர்ந்த நிலைகள், பதவிகள் அடைந்தவர்கள் பலர்.
உலகப்பிரகாரமாக உள்ள மனிதர்களின் நம்பிக்கையை காப்பாற்ற பிரயாசப்படுகின்ற நாம், நம்மை இரட்சித்து, வேறுபிரித்து, கிருபைகள், வரங்கள் தந்த, ஊழியம் தந்த தேவனுடைய நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்கிறோமா???
அது சிறிய ஊழியமோ, பெரிய ஊழியமோ எதுவானாலும் சரி நம்மை நம்பி நம்மிடம் கொடுக்கப்பட்ட ஊழியத்தை முழுமனதாய் செய்கிறோமா??
கொரிந்திய சபையை பார்த்து அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கேட்கிறார்,
*8 ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
2 கொரிந்தியர் 3:8*
மேலும் தீமோத்தேயுவை நோக்கி
*4 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
2 தீமோத்தேயு 4:4*
மகிமையுள்ள ஊழியத்தை நம்மை நம்பி கொடுத்த தேவன் அதை நாம் உண்மையோடும் உத்தமத்தோடும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உலகப்பிரகாரமாக வேலை செய்தாலும் தேவனுக்காகவும் நம்மால் இயன்ற மட்டும் ஊழியம் செய்ய வேண்டும். அப்போது தான் மகிமையான காரியங்களை நம் கண்கூடாக காணமுடியும். எனவே எந்தவொரு ஊழியமாயினும் அவர் நம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்வோம் மகிமையான வாழ்க்கை வாழ்வோம்.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!*

Thanks for using my website. Post your comments on this