Type Here to Get Search Results !

உண்மை | இரு நண்பர்கள் வேதாகம குட்டிக் கதைகள் | Bible Short Stories Tamil | Motivation Story | Jesus Sam

உண்மை | இரு நண்பர்கள்
உண்மை
வெகு காலத்துக்கு முன் பழமுதிர்சோலை என்றநாட்டை மன்னன்பழவர்த்தன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர்; வாய்மை நிரம்பியவர்; உண்மை பேசுபவர். தன்னைப் போலவே தன் குடிமக்களும் இருக்க

வேண்டும்என்று விரும்புபவர்.




அவருக்கு திருமணமாகி நீண்டநாட்களாகியும் குழந்தைகள் இல்லை. தனக்கு பின் தன் நாட்டை

ஆளத் தக்க வாரிசுகள்இல்லாததால்,




தன் நாட்டு மக்களில் நீதியும்,நேர்மையும் தவறாத உண்மையான ஒரு இளைஞனைக் கண்டுபிடித்து, அவனை மன்னனாக்க வேண்டும் என்று விரும்பினார்.




இதற்காக யாருடைய ஆலோசனையையும் நாடவில்லை. அவரே மிகச் சிறந்த அறிவாளியாகஇருந்த படியினால், பல நாட்கள் யோசித்து ஒருமுடிவு செய்தார்.




நாட்டில் உள்ள வீரம் மிக்க இளைஞர்களை அழைத்து வில் போட்டி நடத்தினார்.

அதில்வென்றவர்களை அழைத்து, வாள் போட்டி நடத்திபரிசீலனை செய்தார்.




அதன்பின், வாய் மொழிக்கேள்விகள், சமயோசிதமான கேள்விகள் என்று ராணுவத்துக்கு ஆள் எடுப்பதைப் போல அவர்களைச் சோதித்தார்.




கடைசியாக, பத்து இளைஞர்கள் தேறினர். அவர்களை மன்னர் அழைத்து, அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின் விதையைக் கொடுத்தார்.

"இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து, கவனமுடன் கண்காணித்து,

ஆறுமாதம் சென்ற பிறகு, வளர்த்த செடியுடன் என்முன் வர வேண்டும்.

இதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய இறுதி கட்டச்சோதனை,''என்றார்.




பத்துப் பேரும் அதனை வாங்கிக் கொண்டனர். அதில், சாந்தனு என்ற வாலிபன் ஒருவனும் இருந்தான்.




எல்லாரும் மன்னர் சொன்னபடி அந்த விதையைத் தொட்டியில் போட்டுச் சிறந்த

உரங்களையும், எருவையும் இட்டு

வளர்க்க ஆரம்பித்தனர்.




சாந்தனுவும் அப்படியே செய்தான். ஆனால், என்னகாரணத்தினாலோ அவனது விதை முளைத்துச் செடியாகவில்லை.




மற்றவர்களின் வீட்டுக்குப்போய் அவர்கள் செடி வளர்ந்திருக்கிறதா என்றுஅவன்

கண்காணித்தான் என்ன ஆச்சரியம்! மற்றவர்களின் விதையானது நன்றாக முளைவிட்டு, இலை விட்டுச்

செழித்துவளர ஆரம்பித்திருந்தது. வீட்டுக்கு வந்த சாந்தனு தன்னிடமுள்ள விதை செடியாக எல்லா விதமான முயற்சிகளையும் செய்தான்.




ஆனால், என்ன காரணத்தினாலோ,அந்த விதை முளைக்கவில்லை."முளைக்காத விதையை ஒரு வேளை மன்னர்தனக்குத் தந்திருப் பாரோ?'

என்று எண்ணினான்.




மறுகணமே, "ச்சே... என்ன மோசமான

எண்ணம்...எல்லாருக்கும் கொடுத்தது போல தான் எனக்கும்கொடுத்தார்.




என் விதை முளைக்கவில்லை என்றால், அது என் துரதிருஷ்டம். மற்றவர்கள் விதை

எல்லாமே முளைத்திருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம்."




ஆறு மாதம்வரை பொறுத்திருந்து பார்ப்போம்...அபபோதும் விதை முளைக்கா விட்டால், "அரசே,என் விதை மட்டும் முளைவிக்கவில்லை!' என்றுஉண்மையைக் கூறிவிடுவோம். அதற்காக மன்னர், நான்

சரியாக செடியைப் பராமரிக்கவில்லை என்று கருதி எனக்குத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்!' என்று கருதினான்.




ஆறு மாதம் சென்றன. வெற்றிப் பெருமிதத்துடன் மீதியுள்ள ஒன்பதுபேரும் தங்கள் கையில் தொட்டியை ஏந்திவந்தனர். அதில் இரண்டடி நீளத்துக்குச் செடி வளர்ந்திருந்தது.




அது ஆரோக்கியமாக இருந்தது. மன்னர் எல்லாருடைய தொட்டிகளையும்பார்த்துக் கொண்டேவந்தார். அவர் இதழ்களுக்கிடையில் புன்முறுவல் ஒன்று நெளிந்தது.




சாந்தனுவிடம் வந்ததும் அவன்காலித் தொட்டியுடன் நிற்பதைக் கண்டவுடன் மன்னர் முகம் மாறியது. நடுநடுங்கிப் போனான் சாந்தனு.




அவனையே உற்றுப் பார்த்த மன்னர் அவனிடம் அதிகாரமாக கேட்டார், "உன்னுடைய பெயர் என்ன?''

"என் பெயர் சாந்தனு அரசே! தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் ஆறு

மாதகாலமாக இந்த விதையைச்

செடியாக்க எவ்வளவோ பாடுபட்டேன்.




ஆனால்,உண்மையிலேயே என்னால் அதைச் செடியாக்க முடியவில்லை. என்னை நம்புங்கள் அரசே!''என்று மண்டியிட்டு கதறினான்.




மன்னர் கீழே குனிந்து அவனைத் தூக்கி

நிறுத்தித் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். "எதிர்கால மன்னனைத் தேர்ந்தெடுக்கவே இப்போட்டிகளை வைத்தேன். அதில் வென்றவனாக இந்த சாந்தனுவை அறிவிக்கிறேன்.




இவன்தான் எதிர்கால மன்னன்!''என்றார். இதைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர் முதல் மந்திரி எழுந்து, "




"அரசே,தாங்கள் சொன்னபடி ஒரு செடி கூட

வளர்க்கத் தெரியாத இந்த வாலிபனா

எதிர்கால மன்னன்? மன்னருடைய

கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செடியைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்காமல் சோம்பேறித் தனமாக இருந்து விட்டு, வெறும்பூந்தொட்டியைக் காட்டிய இவனா இந்த நாட்டுமன்னன்?'' என்று

கேட்டார்."




அமைச்சரே, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். இவன்

அவனால் ஆகக் கூடியமுயற்சிகளை

எல்லாம் செய்து பார்த்தான் என்பதை நான் நம்புகிறேன். ஏன் தெரியுமா?




நான்பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டவிதைகள்."அதில் எந்தச் செடியும்முளைக்காது.




என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேகவைக்கப்பட்ட விதைகளைத்

தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப்பதிலாக அதே போன்ற நல்லவிதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர்."




ஆனால் சாந்தனு அப்படிச் செய்ய வில்லை. அரசகட்டளையை ஏற்று ஆறு மாத காலம் போராடிப் பார்த்திருக்கிறான். விதை முளைக்கவில்லை என்றதும், அதை உள்ளபடியே என்னிடம் அறிவிக்கக் காலித் தொட்டியுடன் வந்தான்."




உண்மையைச் சொல்லும்போது என்னால் அவனுக்குத் தண்டனை ஏற்பட்டால் கூட அதைத் தாங்கச் சித்தமாயிருந்திருக்கிறான் என்பதை அவன் செயல், பார்வை,பேச்சு, வார்த்தை, நடத்தை மூலம் அறிந்து கொண்டேன்."




இப்படி நேர்மையாக நடந்து கொண்டதன் மூலமாக அவனால் நிச்சயம் நாடு செழிக்கும்'என்றுதான் அவனை மன்னனாக அறிவித்தேன்.




மன்னரின் அறிவுக் கூர்மையை எண்ணிஅனைவரும் வியந்து பாராட்டினர்.

அங்கிருந்தசெடி வளர்த்த ஏனைய இளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கோரினர். அரசனும் அவர்களை மன்னித்தார்.




என் அன்புக்குாியவா்களே ,

நாம் எல்லா காாியங்களிலும் உண்மையுள்ளவா் களாக இருக்கவேண்டும். இதையே தேவன் பொிதும் விரும்புகிறாா்.உண்மையில்லாதவா் கையில் பொறுப்பு மிக்க எதை கொடுத்தாலும் அதை செய்ய மாட்டார்கள். அதில் ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், விஷயங்களை மறைத்தல், சுயநலம், ஆகிய குணங்கள் தாராளமாய் வெளிப்படும்.




To get daily story in whats app and groups contact +917904957814







பைபிள் சொல்கிறது...

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாய் இருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?




வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? (லூக்கா 16:10-12)




ஒரு தலைவனாகவோ,ராஜாவாகவோ,தேவனுக்கு ஊழியம் செய்கிறவனாகவோ இருக்கவேண்டு மென்றால் ..அதற்கு அவன்..




ஜனங்கள் எல்லாருக்குள்ளும்..




# தேவனுக்குப் பயந்தவர்களும்

# உண்மையுள்ளவா்களும்

# பொருளாசையை வெறுக்கிறவர்களும்

# திறமையுள்ளவா்களும்,




ஆகிய தகுதியாய் இருக்கிறவா்களைத் தெரிந்துகொண்டு,




அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துபேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்த ..வேண்டுமென்று வேதம் சொல்கிறது யாத்திராகமம் 18:21




உதாரணமாக ஐந்து போ்.




1. ஆபிரகாம்... (நெகேமியா. 9:7,8)

2. மோசே ..(எண்ணாகமம். 12:7)

3. தாவீது...(1 சாமுவேல் 22:14)

4. தானியேல் ...(தானி. 6:4)

5. பவுல்... (1 தீமோத்தேயு 1:12)




இதைப்போல உண்ணையுள்ளவா்களை தேவன் தேடுகிறாா். நீங்கள் தேவனுக்குப் பயந்து, உண்மையுள்ளவா்களாய், பொருளாசையில்லா தவா்களாய், திறமையுள்ளவா்களாய் தேவன் பார்வையில் காணப்பட ஆவியானவாின் நடத்துதலுக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள். உண்மைக்கான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.




உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்...

(நீதிமொழி 28 :20)




நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!


இரு நண்பர்கள்

ஒரு எல்லை போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து விட்டான்...




சிறிது தூரம் சென்றதும் அவனுடைய நண்பன் சொன்னான்.... "நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன், எனக்கு உத்தரவு கொடுங்கள் கமாண்டர்"என்றான்.



அதற்கு அந்த கமாண்டர், மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிருக்கு தான் ஆபத்து ..நீ போவதென்றால் போ,ஆனால் நீ போவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை என்று சொன்னார் கமாண்டர்.



அதனால் தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் நண்பனை காப்பாற்ற ஓடினான். அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது.அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான் சேர்ந்தான்.



கமாண்டர் அவனை பரிசோதித்து பார்த்த போது அவன் நண்பன் இறந்து போயிருந்தான். நான் அப்போதே சொன்னேன் ,நீ அவனை காப்பாற்ற போவதால் எந்த உபயோகமும் இல்லை என்று, இப்போது பார் நீயும் அடிபட்டு கிடக்கிறாய் என்றார். "




அதற்கு அந்த நண்பன், நான் போனதுதான் சரி கமாண்டர்" என்றான் வீரன். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடக்கிறான் நீ இப்படி அடிபட்டு விட்டாய், நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார கமாண்டர்,




அதற்கு அந்த வீரன் சொன்னான், நான் அங்கு போகும் போது என் நண்பன் உயிருடன்தான் இருந்தான்...., "என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு என் மடியில் தான் இறந்தான்.




நான் மட்டும் போகாமல் இருந்திருந்தால், நம் நண்பன் நம்மை காப்பாற்ற வராமலே போய் விட்டானே எந்த எண்ணத்திலேயே அவன் உயிர் போயிருக்குமே, அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் கமென்டர், இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

"உண்மையான நட்பின் ஆழத்தையும் அர்த்தத்தையும் நண்பர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்".




*என் அன்பு வாசகர்களே,*

நல்ல நண்பர்கள் உயிரினும் மேலானவர்கள். ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காது, ஒருவருக்காக ஒருவர் பரிந்துபேசி என எப்போதும் ஒன்றாகவே வாழ்கின்றனர் நண்பர்கள்.




நண்பர்கள் கிடைப்பது எளிது ஆனால் உயிருக்கும் மேலான நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். ஆனால் நம் எல்லா நிலையிலும் நமக்கு உறுதுணையாய் நம் பாவம் சாபம் வியாதி வறுமை என எல்லாவற்றிற்காகவும் தன் ஜீவனையே தந்த நம் இயேசு அன்றும் இன்றும் என்றும் நம்மோடு கூடவே தான் இருக்கிறார்.




To Get Daily Story In What's App Contact +917904957814




இன்றைய கதையில் ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்காக தான் தன் ஜீவனையும் பொருட்படுத்தாது சென்றான். ஆனால் நமது ஆண்டவரோ நாம் யாரென்று தெரியாமல் இருந்த போதே நமக்காக ஜீவனை கொடுத்தார்.




வேதம் சொல்கிறது,




*13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

யோவான் 15:13*




இத்தனை விலையேறப்பட்டது தான் அன்பு. அந்த அன்பை தேவன் நம்மிடத்தில் வெளிப்படுத்தினார். இந்த உலகத்தில் நாம் வாழுகின்ற நாட்கள் வரை நமக்கு சிநேகிதர்கள் தேவை அதை தான் வேதம் இவ்வாறு சொல்கிறது,




*9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

லூக்கா 16:9*




எனவே தேவன் நம்மை நேசித்து நம்மேல் அன்பாயிருந்தது போல நாமும் மற்றவர்களிடம் அன்பாயிருப்போம் அநேக சிநேகிதர்களை சம்பாதிப்போம் சந்தோஷமாய் வாழ்வோம்.




*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.