Type Here to Get Search Results !

சனாதனம்! | எது நல்ல மார்க்கம்! | Daily Kutty Message Tamil | Gospel Sermon Points | Jesus Sam

பயனற்ற அன்பு!!*💔😰

ஒருவரை அசிங்கப்படுத்தி விட்டு, அவமானப்படுத்திவிட்டு அவரிடம் நாம் காட்டும் அன்பு பகலில் ஏற்றப்பட்ட விளக்குக்கு சமம், இருந்தும் பயனில்லை, 0எரிந்தும் ஒரு பயனும் இல்லை 😰 அதேபோல் பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்தபின் கிடைக்கும் அன்பும் பாசமும் பயனற்றது😰 எனவே தயவு செய்து தேவையான உணர்வுகளை, தேவையான நேரத்தில் நிச்சயம் வெளிப்படுத்தி விடுங்கள் 🙏 அதாவது உங்கள் பிள்ளைகளிடத்திலோ, கணவன் மனைவி இடத்திலோ , மனைவி கணவனிடத்திலோ, நம் அப்பா அம்மா இடத்திலோ, அன்பாய் பேசி அன்பை வெளிப்படுத்துங்கள், அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பதினால், அதை வெட்கப்பட்டு கொண்டும், ஈகோ என்ற பெயரிலும் வெளிப்படுத்தாவிட்டால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, ஒருவேளை அந்த அன்பை நாளைக்கு வெளிப்படுத்தும் பொழுது அந்த நபர்கள் நம்மோடு இருப்பார்கள் என்ற நிச்சயமும் இல்லை,😰 காலத்தையும் நேரத்தையும் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ❤️

கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள். ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய அன்பான கடவுள் நம்மோடு கூட இருப்பார்.❤️🙏

Finally, dear friends, farewell. Be perfected; be comforted; be of the same mind; live in peace: and the God of love and peace shall be with you❤️🙏

Dennis. HJM
9884122369


அறியாமை!!
எந்த வேதங்களிலும் தீ மிதித்து, அலகு குத்தி, கோயிலுக்கு வெகு தூரம் நடந்து போவதும், சாப்பிடாமல் கடும் விரதம் இருப்பதும், தன் உடம்பை கிழித்து ரத்தத்தை கடவுளுக்கு கொடுப்பதும், தன் உடலை வருத்திக் கொண்டால்தான் நம்முடைய வேண்டுதல்களை கடவுள் கேட்பார் என்று அல்ல , இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எந்த வேதங்களிலும் சொல்லப்படவும் இல்லை, இவைகளை எல்லாம் கடவுள் மனிதர்களிடம் இருந்து விரும்புவது இல்லை, அதில் பிரியப்படுவதும் இல்லை, நம்மை படைத்த கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அதாவது நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் சரீரங்களை அல்ல, உங்கள் *இருதயங்களைக்*❤️ கிழித்து, உங்களைப் படைத்த கடவுளிடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். நிச்சயம் அவர் நம்மை விடுவித்து எல்லா ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றுவார், இக்கட்டான சூழ்நிலைகளை மாற்றி போடுவார் ❤️👍🙏

Rip your heart to pieces [in sorrow and contrition] and not your garments.” Now return [in repentance] to the God, For He is gracious and compassionate, Slow to anger, abounding in lovingkindness [faithful to His covenant with His people]; And He relents [His sentence of] evil [when His people genuinely repent].❤️🙏

Dennis. HJM
9884122369


சனாதனம்!

இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், சனாதனம் இந்து மதத்தில் மட்டுமா இருக்கிறது?, மனசாட்சி தொட்டு சொல்லுங்க, அது கிறிஸ்தவ மதத்திலயும் இருக்கு,😰 இஸ்லாமிய மதத்திலேயும் இருக்கு, 😰இந்தியா முழுவதும் அந்த விஷம் பரவி தான் இருக்கிறது, 😰என்னைக்கு ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை தெய்வமாய் வணங்கத் தொடங்கினானோ அன்றைக்கே சனாதனம் வந்துவிட்டது, 🤔என்றைக்கு மதகுருகளை நடிகர்களைப் போல ரசிகர் பட்டாளம் வந்ததோ அன்றைக்கே சனாதனம் வந்து விட்டது, சமாதானம் ஜாதியில் மட்டும் இல்லங்க, இன்றைக்கு 😰நீ பணக்காரன் நான் ஏழை, நீ படித்தவன் நான் படிக்காதவன், நீ பட்டணத்தான் நான் கிராமத்தான் இது போன்ற வித்தியாசம் கூட சமாதானம் தான், 😰அதாவது கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு., yes friends கடவுளுடைய நாமத்தை தொழிலாக, வெறும் பணத்துக்காக அது யார் பயன்படுத்தினாலும் அவர்களை விட்டு விலகுங்கள், இப்படிப்பட்ட பிரிவினைகள் எந்த மதத்தில் இருந்தாலும் அதை அடியோடு வேர் அறுக்க வேண்டியது நம்முடைய கடமை 🙏❤️

he is puffed up, knowing nothing, but doting about questionings and disputes of words, whereof cometh envy, strife, railings, evil surmisings, wranglings of men corrupted in mind and bereft of the truth, supposing that godliness is a way of gain. 🙏

Dennis. HJM
9884122369


ஒரு மனிதன் ஒரு நாள் இறைவனிடம் இப்படி கேட்டானாம்!!!

*இறைவா!!!*

காசு இல்லாத பக்தனுக்கு தூரத்திலும்,காசு இருக்கும் மனிதனுக்கு அருகிலும் காட்சி கொடுக்கிறாயே, இது நியாயமா? என்று கேட்டானாம். 😲🤔

அதற்கு கலகலவென சிரித்தபடி இறைவன் சொன்னாராம் , உன்னைப் பெற்ற தாயையும் தந்தையையும் கனம் பண்ணு என்று சொன்னேன், நீங்கள் யாரும் கேட்கவில்லை,🤔 நான் உயிருள்ள இறைவன் என்னை தூணிலும், துரும்பிலும், மரத்திலும், கல்லிலும் தேடாதீர்கள், நான் இருக்கும் இடம் உங்கள் *இருதயம்* என்றேன், யாரும் நம்பவில்லை,🤔

ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் உதவி செய்யுங்கள், அதுவே எனக்கு பிரியம் என்றேன், யாருமே அதையும் செய்யவில்லை,🤔

எனக்கான இடத்தையும், எனக்கான நேரத்தையும், எனக்கான விழாக்களையும், என்னை வணங்கும் முறைகளையும், என்னுடைய *உருவத்தையும்* , நீங்களே முடிவு செய்தீர்கள் ,🤔 இப்பொழுதோ என்னை பார்ப்பதற்கும், என்னை வணங்குவதற்கும் கட்டணங்களை காணிக்கைகளையும் வைத்து விட்டு, என்னை *காட்சி பொருளாக்கி விட்டு,* என்னையே இப்படி கேள்வி கேட்பது நியாயமா என்றார்.🤔😰😰 ஓ மனிதனே!!

இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? நம்மை படைத்த கடவுளுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள், பாதகரோவென்றால் அவைகளில் இடறி விழுவார்கள். 🤔😰

Whoever is [spiritually] wise, let him understand these things; Whoever is [spiritually] discerning and understanding, let him know them. For the ways of the Lord are right, And the righteous will walk in them, But transgressors will stumble and fall in them.🤔😰

Dennis. HJM
9884122369


சோதனை சிட்ச்சை
Friends நம்மை படைத்த கடவுளுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 🙂 அன்பான கடவுள் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் மகளையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். 😰 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் அவர் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? 🤔 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் தீய சக்திக்கு பிள்ளைகளாய் இருப்பீர்கள் . அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். ஆனால் நம்மை படைத்த அன்பான கடவுளோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். 🙂🙏❤️

All chastening seemeth for the present to be not joyous but grievous; yet afterward it yieldeth peaceable fruit unto them that have been exercised thereby, even the fruit of righteousness.

Dennis. HJM
9884122369


எது நல்ல மார்க்கம்!

மிருகமாய் இருக்கும் மனிதர்களை, நல்ல மனிதர்களாக மாற்றும் மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️ நிர்வாணமாய் இருந்த மனிதனை நாகரீகத்தோடு தன் நிர்வாணத்தை உடை அணிந்து மாற்றும் மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் சக மனிதர்கள் யாவரையும் சமமாக பார்க்கும் மனிதநேயம் மிக்க மார்க்கமே நல்ல மார்க்கம்❤️ படிப்பறிவு இல்லாத மனிதர்களுக்கு படிப்பை தந்து அறிவை சொல்லிக் கொடுத்து சமுதாயத்தில் உயர்த்தி வைக்கும் மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️ பசியா இருக்கும் ஏழை எளியவர்களை போஷிக்கும் மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️ மனிதர்கள் இடையே ஜாதி பிரிவினையையும், முரண்பாடுகளையும் உண்டாக்காத மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️ எல்லோரையும் நேசிக்க சொல்லுவதே நல்ல மார்க்கம் ❤️ மனிதர்களுடைய உயிரை எடுப்பது அல்ல,, எல்லா மனிதர்களுடைய உயிரை காப்பாற்றும் மார்க்கமே நல்ல மார்க்கம்❤️ நல்வழி காட்டுவதும் ❤️ பாவத்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை விடுவிப்பதும் ❤️ நோயினால் உயிருக்கு போராடும் மனிதர்களை அரவணைப்பதே நல்ல மார்க்கம் ❤️உண்மையை சொல்லும் மார்க்கமே நல்ல மார்க்கம் ❤️ தீய எண்ணத்தோடு தீய மனதோடு, தீய புத்தியோடு எந்த மார்க்கத்தில் இருந்து கடவுளுக்கு எதை செய்தாலும் அது கடவுளுக்கு அருவருப்பானதுதான் 😰😲அதாவது துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது: அதைத் துர்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும். 😰 yes friends ❤️நல்ல காரியங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல போதனைகள் எங்கு இருந்தாலும் அதை பிடித்துக் கொள்ளுங்கள் ❤️ அது நிச்சயம் உங்களை வாழ வைக்கும் 🙏❤️

The sacrifice of the wicked is an abomination; How much more, when he bringeth it with a wicked mind! ❤️🙏

Dennis.
9884122369
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.