Type Here to Get Search Results !

தொடர்ந்து ஓடு! நின்று விடாதே! | உயர்ந்த ஜாதி 😲அது யாருப்பா? | Dennis Daily Gospel Short Message | Jesus Sam

உயர்ந்த ஜாதி 😲அது யாருப்பா?
இந்த உலகத்தில் நம்மை விட படிப்பில் உயர்ந்தவர்கள் இருக்கலாம், 🤔அறிவில் உயர்ந்தவர்கள் இருக்கலாம், 🤔ஞானத்தில் சிறந்தவர்கள் இருக்கலாம், 🤔ஆற்றலில் நம்மை விட உயர்ந்தவர்கள் இருக்கலாம்,🤔 பொருளாதாரத்தில், பணம் வசதியில் நம்மை விட உயர்ந்தவர்கள் இருக்கலாம், 🤔பதவியில், செய்யும் வேலையில், தொழிலில் நம்மை விட உயர்ந்தவர்கள் இருக்கலாம், 🤔ஆனால் ஒரு நாளும் ஒரு காலமும் நம்மை விட *பிறப்பால் உயர்ந்தவர்கள் எவரும் இருக்க முடியாது,* இருக்கப் போவதும் கிடையாது,👏👏👍 மனிதனாக பிறந்தவர்கள் எல்லோருமே அந்தக் கடவுளுக்கு முன்பாக பிறப்பால் *சமமே* , 😍ஒரு கடவுள் பிறப்பால் உயர்வு தாழ்வை வைத்து மனிதனை உண்டாக்கி இருந்தால் அந்த கடவுள் *கடவுளே அல்ல* 🙏 அதாவது இந்து என்றும் முஸ்லீம் என்றும், கிறிஸ்தவன் என்றும்,. உயர்ந்த ஜாதி என்றும், கீழ் ஜாதி என்றும், அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை.🤔 நாம் எல்லோரும் நம்மை படைத்து உண்டாக்கின கடவுளுக்கு முன்பாக *ஒன்றாய் இருக்கிறோம் .* 🙏👍❤️

Hindu, Muslim, Christian. There is neither slave nor free, nor male nor female. All of you are one before God who made us.🙏There is no one in this world who is superior by birth🙏👍

Dennis.
9884122369


நிச்சயம் நல்லது நடக்கும்!!

நம் வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனைகள் ஒரு நிலவு போன்றது, அது ஒரு நாள் கூடும் ஒரு நாள் குறையும், ஒரு நாள் காணாமலே போய்விடும்,🤔 ஆனா ஒன்னு.... நம்முடைய பிரச்சனைகளும் வலிகளும் மற்றவர்களுக்கு சிரிப்பாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் , ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்கு வேதனைகளையும் வலிகளையும் கொடுக்காமல் வாழ பார்த்துக் கொள்ளுங்கள்,🙏 நிச்சயம் உங்களுக்கு ஏற்ற பலன் உங்களை வந்து சேரும், அதாவது எளிமையானவர்கள் என்றைக்கும் நம்மை படைத்த கடவுளால் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.👍👏👏 அவர் மேல் நம்பிக்கை வைத்து, கவலையை மறந்து சந்தோசமா இந்த நாளை தொடங்குவோம் !!! ❤️🙏

For the poor will not always be forgotten, Nor the hope of the burdened perish forever.❤️🙏

Dennis. HJM
9884122369


நம்முடைய கண்ணீர் துளிகளுக்குமதிப்பு அதிகம், அதை மனிதர்களிடம் காட்டுவதை விட, நம்மை படைத்த கடவுள் இடத்தில் காட்டுவது மிகவும் நல்லது, ஆமாங்க நம்முடைய கஷ்டங்களை, நம்முடைய பிரச்சினைகளை எந்த மனுஷனிடமும் சொல்லாதீங்க, யார்கிட்டயும் அன்பையும் அனுதாபங்களையும் எதிர்பார்த்து மட்டும் நிக்காதீங்க , நம்ம பிரச்சனைகளை மற்றவர்களிடம் சொல்வதினால் யாரும் நம்மை காப்பாற்ற போவதும் கிடையாது, நமக்கு உதவப் போவதும் கிடையாது,

அதனால நம்மைப் படைத்த கடவுள் மேல உங்க பாரத்தை வைத்துவிடுங்க, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.👍❤️

Cast your burden on the God [release it] and He will sustain and uphold you; He will never allow the righteous to be shaken (slip, fall, fail).

Dennis. HJM
9884122369


கவலைப்பட வேண்டாம்!!

சில பேருக்கு அவங்க எதிர்பார்த்த பிராண்ட் செருப்பு கிடைக்கவில்லையே என்று கவலை, 😰சில பேருக்கு அவர்கள் விரும்பிய டிசைனில் செருப்பு இல்லையே என்று கவலை, 😰சில பேருக்கு செருப்பு சரியா இல்லை என்று கவலை, 😰சில பேருக்கு செருப்பு இல்லை என்ற கவலை, 😰சில பேருக்கு காலே இல்லை என்ற கவலை,😰🤔இப்ப நம்முடைய கவலை இதில் எந்த வகைப்படும் என்று யோசித்துப் பார்த்தாலே நம்முடைய கவலை சின்னதா பெருசா, இல்லை அது முக்கியமானதா? இப்ப இந்த கவலை தேவையா தேவையில்லாத?, இது அவசியமான கவலையா இல்லை அவசியமற்றதா? என்று தெரிந்துவிடும். 🤔அதாவது நோயில் மரணப் பிடியில் தவிக்கும் மனிதனுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை, 😲ஆனால் சுகமாய் இருக்கறவனுக்கோ ஆயிரம் தேவைகள் இருக்கின்றன 😲🤔

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், 🙏ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும்,❤️ உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ❤️🙏

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் நம்மை படைத்த கடவுள் பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 🤔😲

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

🤔😲 கவலைப்படாதீங்க ❤️🙏

🙏Therefore I say unto you, Be not anxious for your life, what ye shall eat, or what ye shall drink; nor yet for your body, what ye shall put on. Is not the life more than the food, and the body than the raiment? Behold the birds of the heaven, that they sow not, neither do they reap, nor gather into barns; and your heavenly Father feedeth them. Are not ye of much more value than they? And which of you by being anxious can add one cubit unto the measure of his life? 🙏❤️

Dennis. HJM
9884122369


தொடர்ந்து ஓடு! நின்று விடாதே!

சாகலாம் என்று கடலில் விழுந்தவன் கை நிறைய முத்துக்களோடு திரும்பி வந்த கதையும் உண்டு, 🤔முத்து எடுக்கப் போனவன் செத்துப்போன கதையும் இங்கு உண்டு, 😲அதனால நம்ம வாழ்க்கையில எது நடக்கணுமோ அது தானா நடக்கும் எதை நினைத்தும் யாரை நினைத்தும் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு,

இந்த உலகம் உனக்கானது, ❤️ ஓடிக்கொண்டே இரு, 👍உன்னை தடுத்து நிறுத்தும் தகுதி இங்கு எவனுக்கும் இல்லை, 😎உன்னை வெறுக்கும் தகுதியும் எவருக்கும் இல்லை,😍

பொல்லாதவர்களாகிய நாமே, நம்ம பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, நம்மைப் படைத்த கடவுள் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா,👏👍

இந்த உலகத்துல வாழ்கிற வாழ்க்கையில் நோக்கம் நம்முடையது, ஆனால் ஆக்கம் நம்மை படைத்த கடவுளுடையது, நம்மை படைத்த கடவுள் நிச்சயம் நமக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையோடு *தொடர்ந்து ஓடு!!!* 👍👏🙏

If you then, evil (sinful by nature) as you are, know how to give good and advantageous gifts to your children, how much more will your Father who is in heaven [perfect as He is] give what is good and advantageous to those who keep on asking Him.👍👏❤️🙏

Dennis. HJM
9884122369

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.