Type Here to Get Search Results !

இது உண்மை தானே? | கீழ்படியுங்கள்! | Dennis Gospel Sermon | Daily Short Message | Jesus Sam

நம்மை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, 😃ஏனென்றால் இந்த வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளுக்கே அந்த வரம் கிடைக்கவில்லை, 😲அவரையும் பிடிக்காத எத்தனையோ மனிதர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள்,😲🤔 நமக்கு பிடிச்சவங்களுக்கு நம்மை பிடித்து இருந்தாலே போதும், 👍முக்கியமா நம்மை நமக்கு பிடித்திருந்தாலே போதும் வாழ்க்கை இன்பமாக இருக்கும்,😎

உங்களையே நீங்க நேசிக்க பழகுங்க,❤️ Yes ஆமாங்க நம்ம வாழ்க்கைக்கு நம்ம தான் ஹீரோ, 🤓 முடிந்தவரை நன்மையை செய்ய பாருங்க, ❤️ யாவரோடும் சமாதானமா இருங்க, ❤️நாலு பேருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்,❤️ முக்கியமா

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்,🙏 எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 👍🙏எல்லோரையும் மன்னிக்க பழகுங்க🙏👍 என்ன சரியா hero's & heroins❤️

Never repay anyone evil for evil. Take thought for what is right and gracious and proper in the sight of everyone.
Dennis. HJM


இது உண்மை தானே?!!

தர்மம் செய்ய 10 ரூபாய் மிகவும் பெரியது, ஆனால் நாம் ஷாப்பிங் போக நமக்கு 1000 ரூபாய் மிகவும் சிறியது 🤔

ஒரு மணி நேரம் நாம் கடவுளுக்காக நேரத்தை செலவழிப்பது மிகவும் கடினம், 😰 ஆனால் அதுவே பல மணி நேரம் TV, சினிமா போன்ற பொழுதுபோக்குக்கு செலவழிக்கும் நேரம் மிகவும் சுலபம், மிகவும் அதிகமும் கூட 🤔😲 கடவுளிடம் வேண்டுதல் செய்யும் பொழுதும், வேதங்களை படிக்கும் போதும் வார்த்தைகளில் ஒரே தடுமாற்றம்தான், 😲அதுவே நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் போதும், கெட்ட வார்த்தைகளை பேசும் போதும் ஒரு வார்த்தை கூட தடுமாறுவது இல்லை 😰🤔 பொழுதுபோக்க எங்கு சென்றாலும் முதல் வரிசை, முதன்மையான இடம் தான் , அதுவே கடவுளை காண கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடைசி வரிசை தான் 🤔😰

செல்போனில் எவ்வளவு நேரம் செலவு செய்தாலும், அவ்வளவு நேரமும் இன்பம் தான், அதுவே கடவுளின் பாதத்தில் அமர்ந்து தியானம் செய்வாது ஒரே கசப்பு தான்🤭🤔

நம் வாழ்க்கையில் கெட்ட காரியங்களை செய்ய ஒரு நொடி பொழுது போதும், அதுவே நல்ல காரியங்களை செய்ய பல நாள் எடுத்துக் கொள்கிறோம் 🤔🤔 friends, தயவு செய்து நம் வாழ்க்கை நல்லா இருக்க, ஒரு அர்த்தமுள்ளதாய் அமைய

*பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.* 🙏❤️

Set your mind and keep focused habitually on the things above [the heavenly things], not on things that are on the earth [which have only temporal value].🙏❤️

Dennis. HJM


சந்திரனுக்கு செயற்கைக்கோளை அனுப்பி அதை தொட்ட முதல் நாடு *இந்தியா* 🇮🇳, மிகவும் பெருமையாக இருக்கிறது,👍👏 அதேசமயம் நிலாவுல பாட்டி வடையும் சுடலை, 😲நிலாவ பாம்பும் முழுங்கல, 🤔சந்திரனுடைய பொண்டாட்டிகளும் அங்கே இல்ல,,🤓 நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கணும், மூடதனமான நம்பிக்கை ஒரு நாளும் இருக்கக் கூடாது, 🤔கட்டுக்கதைகளை நம்பக்கூடாது, அதன் மேல் நம்பிக்கையும் வைக்கக்கூடாது,🙏 என்னதான் மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியினால் உயிர் வாழ வேறு கிரகங்களை தேடினாலும்,, வேறு கோள்களை ஆராய்ந்து பார்த்தாலும் ஒரு நாளும் அங்கு உயிர் வாழ முடியாது,🙏 இதுதான் உண்மை 👍இதுதான் சத்தியம் ,👍 அதாவது இந்தக் கோள்களை கடவுள் எதற்காக படைத்து நமக்கு கொடுத்திருக்கிறார் என்றால், 🤔பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாக்கி,🤔 அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் அவர் நமக்கு உண்டாக்கி கொடுத்தார்😲🙏 yes friends சந்திரனை, நிலாவைப் பற்றிய எத்தனையோ புராண கட்டுக்கதைகள் இப்போது பொய்யாய் மாறிவிட்டது 🤔😲 மனித சிந்தித்துப் பார் 🙏👍

Why did God make the planets and the moon, you know, not to go and live there🤔 God said, Let there be lights in the firmament of heaven to divide the day from the night; and let them be for signs, and for seasons, and for days and years: 👍Stop believing in myths🙏

Dennis. HJM
9884122369


எந்த ஒரு வீட்டில் ஒரு பெண்ணை அடைக்கி ஆண் ஜெயிக்கிறானோ அந்த வீட்டில் ஒரு *மிருகம்* ஜெயிக்கிறது என்று அர்த்தம்😲

எந்த வீட்டில் ஒரு பெண் ஆணை அடக்கி ஒரு பெண் ஜெயிக்கிறாளோ அங்கு ஒரு *அடங்காப்பிடாரி* ஜெயிக்கிறாள் என்று அர்த்தம்😲 எந்த ஒரு வீட்டில் கணவன் மனைவி கிட்டயும், மனைவி கணவன்கிட்டயும் மீண்டும் மீண்டும் தோற்று போகிரார்களோ அங்கு ஒரு *நல்ல குடும்பம்* ஜெயிக்கிறது என்று அர்த்தம் 🤔😲😍 அதாவது புத்தியுள்ள கணவன் மனைவியோ தன் வீட்டைக் கட்டுகிறார்கள்: 😍புத்தியில்லாத கணவன் மனைவியோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 😰yes friends கணவனும் மனைவியும் நீயா நானா என்று வாழ்ந்தால் வாழும் வாழ்க்கையே *நரகம்* ஆகிவிடும் 😈😰😲 அதே சமயத்தில், நீயும் நானும் என்று ஒருமனமாய் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சொர்க்கமாக இருக்கும், ❤️😇கடவுள் கிருபையாய் கொடுத்த நல்ல *வாழ்க்கையை* மற்றவர்களுக்காக, உங்கள் வாழ்க்கையை வாழாமல் கெடுத்துக் கொள்ளாதீர்கள் 🙏🙏

A wise husband and wife build their house: 😍😍A foolish husband and wife tear it down with their own hands.😰😰Don't spoil the good life God has graciously given you by not living it for others🙏

Dennis. HJM
9884122369


கீழ்படியுங்கள்!

நீங்கள் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பெரிய படிப்புகளை படித்து இருந்தாலும்,

கை நிறைய சம்பாதித்தாலும், தயவு செய்து Friends மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். அதாவது உங்கள விட வயது முதிர்ந்தவர்கள், அது யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுவதை மரியாதை கொடுத்து கவனமாய் கேளுங்கள், நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் அவர்களுக்கு கீழ்ப்படிந்து, *மனத்தாழ்மையை* அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் நம்மை படைத்த கடவுள் *எதிர்த்து நிற்கிறார்,* *தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.* Yes friends தாழ்ந்து போவதனால் நீங்கள் ஒரு பொழுதும் எதிலும் குறைந்து போக மாட்டீர்கள், உயர்ந்து தான் நிற்பீர்கள், 👍அவர்களை அசட்டை பண்ணுவது நம்மை படைத்த கடவுளையே அசட்டை பண்ணுவதற்கு *சமம்* 🙏🙏




Likewise, you younger men [of lesser rank and experience], be subject to your elders [seek their counsel]; and all of you, clothe yourselves with humility toward one another [tie on the servant’s apron], for God is opposed to the proud [the disdainful, the presumptuous, and He defeats them], but He gives grace to the humble.🙏🙏

Dennis. HJM
9884122369
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.