====================
PSALM : 119:73 - 119:176
===================
*தேவனுடைய* *வார்த்தைகளின்படி* *செய்வோம்*..
*எபிரேய எழுத்துக்கள் 22ல்* *14வது எழுத்து*“*நுன்”( Nun)* *என்பதாகும்*.
இந்த எழுத்திற்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு.. அதில் குறிப்பிடத்தக்கது.. பணிவு அல்லது தாழ்மையாகும்..
இந்த எழுத்து மேலும்
கீழும் வளைந்திருக்கும்.
அரமேய மொழியில், நுன் என்றால்.. மீன் என்றும் பொருளாகும். *மீனானது* *தண்ணீருக்குள்ளிருந்து* *தண்ணீரினால்* *வாழ்வடைகிறதோ..அப்படியே* *தேவனுடைய பிள்ளைகளும்*.. *தேவனுடைய*
*வார்த்தைகளுக்குள்ளிருந்து*..
*அதனால் வாழ்வு பெறவேண்டும்*.
இந்த நுன் என்ற எழுத்தில் ஆரம்பமாகும்..
8 வசனங்களுக்குள்ளும் அருமையான சத்தியம் உண்டு
(சங்.119 :105-112 )
சங்கீதக்காரனுக்கு, அவன் வாழ்வில் ஒரு தீர்மானம் இருந்தது..
”தேவனே உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட் டேன்,அதை நிறைவேற்றுவேன்” என்கிறான்..
(சங்.119 :106).
இது சங்கீதக்காரனுக்கு, தேவன் மேலும்.. அவருடைய வார்த்தைகளின் மேலுமிருந்த பக்தி வைராக்கியத்தைக்
காட்டுகிறது. தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும்.. இப்படிப்பட்ட பக்தி வைராக்கியம் காணப்பட வேண்டும்.
நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக..
நாம் கர்த்தரிடம் எத்தனையோ பொருத்தனைகளைச் செய்கிறோம்,
அதை நிறைவேற்றுகிறோம்.
தேவனே ..என் உயிர் உள்ளவரை உமது வசனங்களைக் காத்து நடப்பேன் என்று பொருத்தனை செய்து.. அதை நாம் நிறைவேற்றி வருவோமானால்.. நம் வாழ்வே ஒரு ஒளியாக மாறும்..பாவம் மற்றும் பல்வேறு இருளான சூழ்நிலைகளில் வாழும் மக்களுக்கு..நம் வாழ்வு பெரிய வெளிச்சமாக மாறும். அவர்கள்.. உங்கள் இயேசு எங்களுக்கும்
வேண்டுமென்று சொல்வார்கள்..
மேலும் சங்கீதக்காரன்.. "உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்திரமாக்கிக் கொண்டிருக்கிறேன்...
முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய.. என் இருதயத்தைச் சாய்த்தேன்"என்றும் கூறுகிறான்.
( சங்.119: 11-12).
சங்கீதக்காரன்..தேவனுடைய வார்த்தைகள், தனக்குக் கொஞ்சக் காலத்திற்கு மட்டுமல்ல அவை தனக்கு நித்திய சுதந்திரம் என்கிறான். அதாவது ,இந்தப் பூமியிலும் கர்த்தருடைய வசனம்தான் என் சுதந்திரம்..பரலோகத்திலும் வார்த்தையாகிய கிறிஸ்துதான் என் சுதந்திரம் என்கிறான்.. மட்டுமல்ல முடிவு பரியந்தம் உமது வசனத்தைக்
கைக்கொள்ள.. என் இதயத்தைச் சாய்த்தேன் என்கிறான்.இது ஒரு ஆச்சரியமான காரியமே..!
இன்று விசுவாசிகளுடைய இதயங்கள்..
எவற்றிலெல்லாமோ சாய்ந்திருக்கிறது. குறிப்பாக
எங்கு பார்த்தாலும்..
அதிகாரத்திற்கும்..பதவிக்கும்
முக்கியத்துவம் கொடுத்து..அதனால்
சண்டைகள்தான் பெருகி வருகின்றன..
இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை நேசித்து..அதை வாசித்து .. அதை தியானித்து..அதற்குக் கீழ்ப்படியும்பொழுது.. வாழ்விலே எது முக்கியம்..
எது நித்தியத்திற்கு வழிநடத்துமென்பதை, அவர்கள் அறிந்துகொள்வார்கள்..
*பிரியமானவர்களே*..
*தேவனுடைய வார்த்தைகள்*.. *நம் பாதைக்கு* *வெளிச்சமாயிருந்து*..
*நாம் வழி விலகிப்போகாமல்*.. *வழியில் தடுமாறிவிழாமல்*..
*நம்மைப் பரிசுத்தப் பாதையில்* *வழிநடத்துகிறது*..
*நம் சிறுமையில்* *ஆறுதலாயிருக்கிறது*..
*நம் உபத்திரவங்களில் நமக்கு* *விசுவாசத்தைக் கொடுக்கிறது*..
*அத்தகைய தேவனுடைய* *வார்த்தைகளின்படி செய்ய*.. *சங்கீதக்காரனைப்* *போல, நாமும் நம் இருதயத்தைச்*
*சாய்ப்போமா*..?
ஆமென்.🙏
மாலா டேவிட்
*YOUR WORD IS A LAMP TO MY FEET AND A LIGHT FOR MY PATH.*(Psalm 119:105)
*Psalm 119* is arranged in an acrostic pattern. There are 22 letters in the Hebrew alphabet and this Psalm contains 22 units of 8 verses each. Each of the 22 sections is given a letter of the Hebrew alphabet and each line in that section in Hebrew begins with that letter. The author is not mentioned.
Since this is a Psalm glorifying God and His word, it refers to Scripture over and over again. Scripture is mentioned in atleast 171 of the 176 verses. Psalm 119 is the longest Psalm and longest chapter in the Bible.
In this Psalm, there are 8 basic words used to describe the scriptures, God's written word to us.
1. *Law* -used 25 times in Psalm 119.
2. *Word*(dabar)- 24 times.
3.*Judgements* - 23 times.
4.*Testimonies*-23 times.
5.*Commandments*- 23 times.
6.*Statutes*- 21 times.
7.*Precepts*- 21 times.
8. *Word*(imrah)- 19 times.
Let us try to understand something from the 14th section.(119:105-112)
*Your word is a lamp to my feet.* (119:105 a) In pitch darkness, a lamp is very essential to walk. God's word helps us to take the right steps and away from dangers.
1 *Your word is a light for my path* (119:105 b) It showed him the next few steps. We need the Bible to teach us right from wrong. 119:105 is about the illuminating power of God's word. Word of God is light and brings light in a person's life.
2. *I have taken an oath and confirmed it, that I will follow your righteous laws.*(119:106) Sincere determination to obey the word of God.
3. *Preserve my life..according to your word.*(119:107)
Going through afflictions gave him a desire to live according to God's word.
4.*..Teach me your laws.*(119:108) A sincere desire to know, understand and apply God's word. His sincere desire and prayer to God.
5. *..I will not forget your law.*(119:109) Psalmist is making a pledge to God that he will obey God's word.
6. *..I have not strayed from your precepts.*(119:110) Wicked people tried their best to trap me to lead a wicked life but I have decided not to fall into their trap. Sincerely and carefully following or obeying God's word. If we are not careful, it is easy to fall into the snare of the wicked people.
7. *Your statutes are my heritage forever..*(119:111)(heritage= property that is inherited, which we leave for our children) We treat this as precious. God's word is precious for us, we will obey it carefully and pass on to our children.*They are the joy of my heart*(119:111b) Leading a life according to God's word should be our joy. Joyous things of this world can perish.
8. *My heart is set on keeping your decrees to the very end.*(119:112) The psalmist would never forsake God's word- never stop reading, learning, meditating and especially obeying it. This should be a lifelong process in the life of a true Christian.
*Are we serious about meditating, understanding and obeying God's word? Is it giving us joy? How much time do we spend in a day to study God's word?*
*Let us take an oath to study God's word seriously, systematically and to obey it sincerely.*
Rev.C.V.Abraham
.
If we stick to the precepts we will be rescued by the promises.*
💪🏼Ps.119:87- *Spurgeon said, “If we stick to the precepts we will be rescued by the promises.” Even if we reach the place where we despair of life, we should never falter in our obedience.* Help will come. Only believe!
💡Ps.119:73- *God made us. He knows exactly what we need. One of our basic needs is His Word, and that is what the psalmist is talking about here.* Some of the manufacturers of automobiles say, “When your car needs repair, take it to us. We made it, and we know how to fix it.” *We know for sure that we need to take ourself to the Lord and to His Word. He made us, and He knows what is good for us.*
📖Ps.119:89- “For ever, O LORD, thy word is settled in heaven”—His Word is in heaven; that is where the original copy is. *We believe in the plenary, verbal inspiration of that copy, and we hold a good copy of it right in our hands.* Actually, it is settled in the heavens. Heaven and earth may pass away, but where He is, it will never pass away.
⛹️♂️ *Application* : Ps.119:113- “I hate vain thoughts: but thy law do I love”.
*How much time do we spend reading the newspaper, or reading trash, in comparison to the time that we spend reading the Bible?* God is telling us, through the psalmist, that He hates vain thoughts. *If we spend time in the Word of God, the day will come when we will not be interested in a lot of the trash that is published.*
📖Ps.119:154- The psalmist is saying, “Revive me according to Thy Word.” *The only thing that can revive us is God’s Word.* Dwight L. Moody said that the next great revival will be a revival of the Word of God. *We are seeing more and more interest in the Bible.*
Jaya Pradeep-Kodaikanal.
Psalms 119:73 -176
*My heart stands in awe of Your word‼️WHEN* ❓️❓️
💥 Princes persecute me without a cause, *BUT* my heart stands in awe of Your word❗️ (119:161)
💥 Princes also sit and speak against me, *BUT* Your servant meditates on Your statutes❗️(119:23)
💥 Trouble and anguish have overtaken me, *YET* Your commandments are my delights❗️(119:143)
💥 Many are my persecutors and my enemies, *YET* I do not turn from Your testimonies❗️ (119:157)
💥 The proud have me in great derision, *YET* I do not turn aside from Your law❗️ (119:51)
💥 The proud have forged a lie against me, *BUT* I will keep Your precepts with my whole heart ❗️(119:69)
💥 The cords of the wicked have bound me, *BUT* I have not forgotten Your law❗️ (119:61)
💥 They treated me wrongfully with falsehood; *BUT* I will meditate on Your precepts ❗️(119:78)
💥 They almost made an end of me on earth, *BUT* I did not forsake Your precepts❗️ (119:87)
💥 The wicked wait for me to destroy me, *BUT* will consider Your testimonies❗️ (119:95)
💥 The wicked have laid a snare for me, *YET* I have not strayed from Your precepts❗️ (119:110)
*சங்கீதம் 119 : 73 - 176*
*நியாயமும் நீதியும் செய்கிறேன் ; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். ......... நான் உமது அடியேன் ; உம்முடைய சாட்சிகளை நான் அறியும் படி , என்னை உணர்வுள்ளவனாக்கும். ....... நீதியைச் செய்ய கர்த்தருக்கு வேளை வந்தது ; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ........ எல்லாவற்றைப் பற்றியும் , நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி , சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். சங் 119 : 121 - 128*
மேலே குறிப்பிடப்பட்ட எட்டு வசனங்களுக்கும் கொடுக்கப்படும் தலைப்பு , *நீதி நியாயத்தைச் செய்தல் அல்லது நீதியை நிலைநிறுத்துதல்*
தற்காலத்தில் , நாம் வாழும் தேசத்தில் பலவிதமான அசுத்தப் பாவங்கள் பெருகி வருகின்றன , பிரியமானவர்களே ! அதாவது லஞ்சம் , ஊழல் , போதைப் பொருட்களைப் பயன்படுத்தல் , குடி , வெறி , விபச்சாரம் , வேசித்தனம் , பாலியல் பலாத்காரம் , ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை ஆதரித்தல் , கொலை , தற்கொலை , கொள்ளைப் போன்ற , பல பாவங்கள் அதிகமாகப் பெருகி வருவதைப் பார்க்கிறோம் ; எனவே இது கடைசிக் காலம் என்பதை அறிந்து கொள்கிறோம். எனவே நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்து விட்டது.
மேலும் கர்த்தரின் வருகையை எதிர்நோக்கி வாழும் இந்தத் தருணத்தில் , நாம் நம்முடைய பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்த வேளையில் நாம் , நம்முடைய உடலைக் கெடுக்கும் எந்த வியாதியையும் வெறுப்பது போன்றும் , ஆகாரத்தில் உட்காரும் ஈயை , உடனே விரட்டுவது போன்றும் , கொசு கடித்தால் அதை அடித்து , அழிப்பது போன்றும் , ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும் பாவங்களை வெறுத்து , அவற்றை நம்மை விட்டு அகற்றி விட வேண்டும். அப்படிச் செய்து வாழ்ந்தால் தான் , பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள முடியும் , பிரியமானவர்களே.
*உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. ஆமோ 4 : 12* என்ற தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதோடு , பிறரையும் ஆயத்தப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே கர்த்தருடைய வருகைக்கு நாம் ஆயத்தப்படுபவதுடன் , அநேகரை ஆயத்தப்படுத்த வேண்டும். இது நம் மேல் விழுந்தக் கடமையாகும்.
இது மெளனமாயிருக்கும் வேளையல்ல , பிரியமானவர்களே ; நாம் மெளனமாயிருந்தால் , தேவன் அவருக்குக் கீழ்படியும் யாரையாவது பயன்படுத்தித் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவார் ; ஆனால் நாம் தான் நம்முடைய பலனை (Reward) இழந்து போவோம் !
எனவே , தேவன் தாமே அப்படிப்பட்டக் கிருபைகளை , நம் ஒவ்வொருக்கும் தந்து , ஆத்தும ஆதாய வீரர்களாக , வீராங்கனைகளாக இதை வாசிக்கும் யாவரையும் பயன்படுத்தி , வழிநடத்துவாராக !
*இவைகளை சாட்சியாக அறிவிக்கிறவர் : மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார் ; ஆமென் , காத்தராகிய இயேசுவே , வாரும். வெளி 22 : 20*
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💟 *என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது* 💟
☄️ *“நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.”* (சங்கீதம் 119:80).
⚡ சங்கீதக்காரனின் உண்மையான வேண்டுகோள் என்னவென்றால், அவனுடைய *இருதயம் தேவனுடைய பிரமாணங்களால் ஈர்க்கப்பட்டு* மாய்மாலமாகவும் ஏமாற்றுத்தனமாகவும் இல்லாமல் *உத்தமமாக* அவற்றைக் *கைக்கொள்ள வேண்டும்* என்பதே. இது *அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்* என்பதை உறுதி செய்யும். அவன் தேவனுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதால், அவனுக்கு உள்ளான வெட்க உணர்வு இருக்காது, அதோடுகூட அவனுக்கு வெளியரங்கமான அவமானமும் இருக்காது.
⚡ நாம் வெட்கப்பட்டுப் போகாமல் இருப்பதே பெரிய பாக்கியம். *ஒருவன் எவற்றினிமித்தம் வெட்கப்பட்டுப் போவான்* என்று வேதம் போதிக்கிறது.
▪️ *அவன் அக்கிரமங்கள் அவன் தலைக்கு மேலாகப் பெருகி, அவன் குற்றம் வானபரியந்தம் வளரும்போது,* (எஸ்றா 9:6).
▪️ *அவன் கர்த்தருடைய சொல்லை வெறுக்கும்போது* (எரேமியா 8:9).
▪️ *அவன் கர்த்தரை விட்டு விலகும்போது* (எரேமியா 17:13).
▪️ *அவன் முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணும்போது* (சங்கீதம் 25:3).
நாம் தேவனுடைய பிரமாணங்களை உத்தமமாய் கைக்கொள்ளும்போது, தேவன் *மேற்கூறிய தவறுகளைச் செய்யாமல்* இருப்பதற்கான திறனை நமக்குத் தந்து, நாம் *வெட்கப்பட்டுப் போகாமல் இருக்க* உதவுகிறார்.
⚡ நாம் கர்த்தருடைய பிரமாணங்களை உத்தமமாய் கைக்கொள்ளும்போது, நாம் வெட்கப்பட்டுப் போகாமல் இருப்பதோடு, *மேலும் பல ஆசீர்வாதங்களைப் பெறுவோம்:*
▪️ *நம் இருதயம் பொருளாசையைச் சாராமல் இருக்கும்* (சங்கீதம் 119:36).
▪️ *கர்த்தருடைய பிராமணங்கள் நம் இருதயத்தின் மகிழ்ச்சியாக மாறும்* (சங்கீதம் 119:111).
▪️ *நாம் பிழைத்துப் பெருகுவோம்* (உபாகமம் 30:16).
▪️ *நாமும் நம் பிள்ளைகளும் நன்றாயிருந்து, நாம் நீடித்த நாளாய் வாழ்வோம்* (உபாகமம் 4:40).
▪️ *நாம் என்ன செய்தாலும், எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருப்போம்* (1 இராஜாக்கள் 2:3).
⚡ நாம் தேவனுடைய பிரமாணங்களை உத்தமமாய் கைக்கொள்வது, பல ஆசீர்வாதங்களை நமக்குக் கொண்டுவரும். ஆனால், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது நாம் விரும்பினால் செய்வதல்ல, அது நம்மேல் விழுந்த கடமை. வேதம் கூறுகிறது: *"தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே."* (பிரசங்கி 12:13).
⚡ இயேசுவின் வார்த்தைகள்: *"நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்."* (யோவான் 14:15). இயேசுவின் மீதுள்ள உண்மையான அன்பு என்பது, அன்பை வெறும் வாயின் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவது அல்ல. கர்த்தர் நம் இருதயத்தின் ஆழத்தை அறிந்திருப்பதால், *அவருடைய கற்பனைகளை எவ்வளவு உத்தமமாய் நாம் கைக்கொள்கிறோம் என்பதே, நாம் எவ்வளவு உண்மையாக அவரை நேசிக்கிறோம்* என்பதற்கு தெளிவான அறிகுறியாக இருக்கும். *நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்* (1 யோவான் 5:3) என்பதை வேதம் உறுதிப்படுத்துகிறது.
⚡ விபச்சாரமும் பாவமும் நிறைந்த இந்தச் சந்ததியில், நாம் *கர்த்தராகிய இயேசுவைக்குறித்தும் அவருடைய வார்த்தைகளைக்குறித்தும்* வெட்கப்பட்டால், அவரும் *பரிசுத்த தூதர்களுடன் வரும்போது வெட்கப்படுவார்* (மாற்கு 8:38). இது உண்மையில் மிகவும் பரிதாபமாக இருக்கும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை வெளியரங்கமாக அறிவிப்பதற்கு நாம் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது.
⚡ *நாம் கிறிஸ்து இயேசுவில் நிலைத்திருந்தால், நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருப்போம்* (1 யோவான் 2:28). எனவே, *அவருடைய வார்த்தைகளை உத்தமமாய் பின்பற்றுவதன் மூலம் நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும்.*
🔹 *நம்முடைய கர்த்தராகிய இயேசுவை உண்மையாக நேசிக்கிறோம் என்பதை அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கைகொள்வதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் தேவனுடைய பிரமாணங்களை உத்தமமாய் கைக்கொள்ளும்போது, அவர் தவறுகளைச் செய்யாமல் இருப்பதற்கான திறனை நமக்குத் தந்து, நாம் வெட்கப்பட்டுப் போகாமல் இருக்க உதவுகிறார்.*
2️⃣ *நாம் தேவனுடைய கற்பனைகளை உத்தமமாய்க் கைக்கொள்வது நாம் விரும்பினால் செய்வதல்ல, அது நம்மேல் விழுந்த கடமை.*
3️⃣ *கர்த்தருடைய கற்பனைகளை எவ்வளவு உத்தமமாய் நாம் கைக்கொள்கிறோம் என்பதே, நாம் எவ்வளவு உண்மையாக அவரை நேசிக்கிறோம் என்பதற்கு தெளிவான அறிகுறியாக இருக்கும்.*
4️⃣ *நாம் கிறிஸ்து இயேசுவில் நிலைத்திருந்தால், அவருடைய வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகமாட்டோம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
என் ஆத்துமா தவிக்கிறது*
~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 119: 81.
1. ஆம், சங்கீதக்காரன் *உம்முடைய இரட்சிப்பிற்கு என் ஆத்துமா தவிக்கிறது* என்கிறார். நம்முடைய ஆத்துமா விலையேற பெற்றது. *மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் ஒன்றுமில்லை* அல்லவா? இதை அறிந்த சங்கீதக்காரன் *இந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள தன் ஆத்துமா தவிக்கிறது* என்கிறார்.
இன்று அநேக கிறிஸ்தவர்கள் இத்தனை மகத்தான இரட்சிப்பை குறித்து கவலையற்றவர்களாகவே வாழ்கின்றனர். எத்தனையோ வருடங்களுக்கு முன் இரட்சிப்பின் சந்தோஷத்தை ருசி பார்த்தவர்கள் கூட, பின்மாறி, பாவத்திலும், உலக பாரம்பரியத்திலும் சிக்கி வாழ்கிறார்கள். இன்று நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? *முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.* மத்தேயு 24: 13.
2. *இரட்சிப்பு என்றால் என்ன?*
*நம்முடைய பழைய பாவ வாழ்க்கையை விட்டு, மறுபடியும் பிறப்பது. இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவமற கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்படுவது. ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்படுவது. ஆம், கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு நாம் இரட்சிக்கப்படுகிறோம். பரிசுத்தமாய் வாழ்ந்து, முடிவு மட்டும் இந்த இரட்சிப்பிலே நாம் நிலைத்திருக்க வேண்டும்.*
3. இந்த இரட்சிப்பு நாம் அணிய வேண்டிய *வஸ்திரம்.* ஏசாயா 61: 10.
நம்மை பாதுகாக்கும் *மதில்*. ஏசாயா 61:1.
ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்க்கும் *ஊற்று*. ஏசாயா 12:3.
நம் தலையை பாதுகாக்கும் *தலைசீரா.* எபேசியர் 6: 17.
*எரிகிற தீவட்டி.* ஏசாயா 62:1.
4. *இந்த இரட்சிப்பு தேவனுடைய ஈவு*. எபேசியர் 2:8. ஆம், *பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். நாம் இரட்சிக்கப்பட வானத்தின் கீழே, மனுஷருக்குள்ளே இயேசுவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமமில்லை*. கர்த்தராகிய இயேசுவை நாம் விசுவாசிக்கும் போது, நம்மையும்,நம் வீட்டாரையும் இயேசு இரட்சிக்கிறார்.
ஆம், இந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள *நம் ஆத்துமா வாஞ்சையோடு, தாகத்தோடு வசனத்தை தியானித்து தவிக்க வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்து நம் பாவங்களை அவருடைய இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து, நம்மை இரட்சிப்பார். இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நம்மை நிரப்புவார்.* ஆம், ஆவியானவர் தாமே இந்த இரட்சிப்பில் நம் வாழ்வின் முடிவு மட்டும் நிலைத்திருக்க உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
Dr. Padmini Selvyn
[17/10, 7:46 am] +91 80030 45999: BRB (Psalm 119) “ *Those who love Thy law have great peace” (verse 165).*
Psalm 119: This describes the blessedness of the Law of God. It is the longest chapter in Bible and each of its 176 verses refers in some way to God's Word.
It is an alphabetical psalm. The first eight verses of the psalm begin with the first letter of the Hebrew alphabet -' Aleph'. The next eight verses begin with the second letter -'Beth'. And so on, through the twenty-two letters of the alphabet.
Verse 9 says that a young man can keep his way pure by obeying God’s Word.
Verse 11 says that we can avoid sin by keeping God's Word in our heart.
Verse 18 is a prayer: "Open my eyes that I may behold things from Thy law."
Verse 67 says that it was through many afflictions that the psalmist learnt to obey God.
"Thy word is a lamp to my feet and a light to my path” (verse 105). “The unfolding of Thy Word gives light” (verse 130).
Verse 133 anticipates the new covenant promise of Romans 6:14 and says, "Lord, don’t let sin have dominion over me".
“Those who love Thy law have great peace” (verse 165).
And finally, verse 176: “I have gone astray, Lord. Seek Thy servant.”
Posted by Rambabu
[17/10, 7:46 am] +91 80030 45999: SHALOM 🙏
Blessed to be a Blessing to the Blessed People 👨👩👦👦
🙋♂️🙋♀️ Lets Read and Meditate :
*Psalm 119 : 105*
*GOD'S WORD IS LIGHT*
📝 Literally *Light* symbolises ENLIGHTENMENT and *Darkness* symbolises IGNORANCE.
🙋♂️ The Psalmist knows that the Word of God is the only *True Light* that
📍 *Dispels the DARKNESS of ignorance*
📍 *Discover the LOST things*.
📍 *Directs the WAY* .
📍 *Guides us with TRUE WISDOM*.
🙋♂️ So the Psalmist is committed to follow the Lord's Way and trusting His promises ( *v 106-107* )
📍 He praises the Lord and asks for more teaching ( *v 108* )
🙋♂️ Thus, the Psalmist categorically expressed his Hope on God's Word. The phrase *"I have put my HOPE in your Word"* is recorded a number of times ( *v 74, 81,114, 147* )
🙋♂️🙋♀️ Beloved Church, in this world of DARKNESS and CONFUSION, God's Word is a Lamp and a Light. Let us cling unto Jesus - the LIGHT OF THE WORLD because He has the words of eternal life ( *John 8:12 ; 6:68* )
Glory to God 🙌
✍️ *Mark Boje*
Arunachal Pradesh, India 🇮🇳
Thanks for using my website. Post your comments on this