Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study | தேற்றரவாளனாகிய சத்திய ஆவியானவர்! | Jesus Sam

====================
சாட்சிகளாய் இருக்க பலப்படுத்தும் ஆவியானவர்!
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாய் இருக்க!
====================
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு உள்ளூரிலும், உள்நாட்டிலும், உலகெங்கிலும் சாட்சிகளாய் இருக்க நம்மை பலப்படுத்துகிறார் பரிசுத்த ஆவியானவர்! (அப்.1:8; 5:32; ரோமர் 1:5)

நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்து, வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக தீங்கநுபவிக்க: நமக்குள் பயமுள்ள ஆவியாய் இராமல், பலமும் அன்பும் தெளிந்தபுத்தியுள்ள ஆவியாய் இருக்கிறார். (2தீமோத்.1:7,8)

இயேசுவைக்குறித்து ஊழியக்காரரை சாட்சியிடவைக்கும் தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறார். (வெளிப்.19:10)

கிறிஸ்தவ ஜீவியத்தில் சாட்சியாய் இருக்க!

நாம் உலகத்துக்குச் சிநேகிதராகி, தேவனுக்குப் பகைஞராகிவிடக்கூடாது என்பதில் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)

பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறார். (யோவான் 16:7-11)

அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற ஆவியின் கனிகொடுக்கசெய்கிறார். (கலாத்.5:22,23)

சகல நற்குணமுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் நம்மை உருவாக்குகிறார். (எபேசி.5:9)

ஐக்கியத்தையும் உருக்கமுமான பட்சத்தையும் இரக்கங்களையும் நம்மில் உண்டாக்கி, ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாய் நம்மை இருக்கசெய்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து செயல்படவைக்கிறார். (பிலிப்.2:1,2)

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
             8946050920


===============
தேற்றரவாளனாகிய சத்திய ஆவியானவர்!
==============
நமக்குள்ளே வாசம்பண்ணி, என்றென்றைக்கும் நம்முடனேகூட இருந்து,
தம்மைப்போலவே நம்மை தேற்றுகிறதற்கு நமக்கு பிதாவானவர் தந்தருளும்படி இயேசுகிறிஸ்துவால் வேண்டிக்கொள்ளப்பட்டவர்! (யோவான் 14:16,17)

உபத்திரவக் காலத்தில் சபைகளுக்கு சமாதானத்தை அளித்து, தமது ஆறுதலோடு நடந்து பெருகப்பண்ணுகிறவர். (அப்.9:31; 8:1-3; 9:1,2,28-30)

உலகம் துன்பப்படுத்தி, புறம்பாக்கும்போது சந்தோஷத்தினால் நிரப்புகிறவர். (அப்.13:50-52)

புசிப்பும் குடிப்புமாகிய உலகம் தராத சந்தோஷத்தை நம் உள்ளத்தில் உண்டாக்குகிறவர். (ரோமர் 14:17)

கர்த்தருக்குள் மரிக்கிறவர்களுக்கு இளைப்பாறுதலை நிச்சயப்படுத்துகிறவர். (வெளி.14:13)

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
            8946050920


================
ஊழியத்தில் நடத்தும் ஆவியானவர்!
=================
ஊழியத்திற்கு அழைக்கிறார். (அப்.13:2)

ஊழியத்திற்கு அனுப்புகிறார்! (அப்.11:12; 13:4)

ஊழியத்தில் நடத்துகிறார்! (அப்.8:29,39,40; 16:6,7)

ஊழியத்திற்கு செல்லவேண்டிய, சுவிசேஷத்தை சொல்லவேண்டிய இடத்தை தேர்வுசெய்கிறார். (அப்.16:6,7)

இயேசுகிறிஸ்துவைகுறித்து பிரசங்கிக்கவைக்கிறார். (அப்.4:8-12)

சுவிசேஷத்தைக் கேட்போரை அதற்கு கீழ்ப்படியப்பண்ணுகிறதில் பெரும்பங்காற்றுகிறார். (ரோமர் 15:18; 1தெச.1:5)

இயேசுகிறிஸ்துவினிமித்தம் மனுஷர் நம்மை அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது: நாம் பேசவேண்டுவதை அந்நேரத்தில் நமக்கு அருளி, நம்மிலிருந்து பேசுகிறார். (மத்.10:18-20)

மிகுந்த உபத்திரவத்திலும் திருவசனத்தை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். (1தெச.1:6)

தேவனுடைய சபையை மேய்ப்பதற்கு கண்காணிகளை ஏற்படுத்துகிறார். (அப்.20:28; எபேசி.4:11-13)

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
             8946050920


===================
வரங்களை அளிக்கும் ஆவியானவர்!
===================
மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்தஆவியானவரே முதலாவது வரமாகக் கொடுக்கப்படுகிறார். (அப்.2:38)

தேவன் தமது ஆவியினாலேயே நாம் சொப்பனங்களையும், தரிசனங்களையும் காணும்படிசெய்கிறார். (யோவேல் 2:28)

ஆவியானவரே தமது சித்தத்தின்படி ஒருவருக்கு ஞானத்தைப் போதிக்கும் வசனம் (ரோமர் 12:7), வேறொருவருக்கு அறிவை உணர்த்தும் வசனம், வேறொருவருக்கு விசுவாசம், வேறொருவருக்கு குணமாக்குதல், வேறொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தி, வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தல் (யோவேல் 2:28; ரோமர் 12:6), வேறொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறிதல், வேறொருவருக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதல் (அப்.2:4; 10:44,45; 19:6; 1கொரி.14:2), வேறொருவருக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் போன்ற ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்துகொடுக்கிறார். (1கொரிந்.12:8-11; எபிரே.2:4)

சிலருக்கு (பணிவிடை) ஊழியஞ்செய்கிற, சிலருக்கு புத்திசொல்லுகிற, சிலருக்கு வஞ்சனையில்லாமல்
பகிர்ந்துகொடுக்கிற, சிலருக்கு முதலாளியாயிருக்கிற (நிர்வாகஞ்செய்கிற), சிலருக்கு (பாதிக்கப்பட்டவர்களுக்கு) உற்சாகமாய் இரக்கஞ்செய்கிற கிருபை வரங்களை அளிக்கிறார். (ரோமர் 12:6-8)

சிலர் அப்போஸ்தலராகவும், சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் சுவிசேஷகராகவும், சிலர் மேய்ப்பராகவும், போதகராகவும் இருப்பதற்கான ஊழியவரங்களை அளிக்கிறார். (எபேசி.4:7,8,13)

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
            8946050920


======================
மறுவாழ்வுக்கு மறுரூபப்படுத்தும் ஆவியானவர்!
மனதை மறுரூபமாக்குகிறார்!
=====================
நம்மெல்லாரையும் கர்த்தருடைய (உள்ளான) மகிமையின் சாயலுக்கு ஆவியாயிருக்கிற கர்த்தர் மறுரூபப்படுத்துகிறார். (2கொரிந்.3:18)

முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நாம் களைந்துபோட்டு, நமது உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள உதவுகிறார். (எபேசி.4:22-24; தீத்து 3:5; கலாத்.5:17; ரோமர் 8:13)

*மறுவாழ்வுக்கு ஆயத்தப்படுத்துகிறார்!* 

தாம் நமக்கு பரலோகத்திலே கட்டின கைவேலையல்லாத நித்திய வீட்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்ததும் தேவனால், அதற்கு அச்சாரமாக (ஆதாரமாக) தந்தருளப்பட்டிருக்கிறார். (2கொரிந்.5:5; எபேசி.1:14; 4:30)

நியாயத்தீர்ப்புநாளில் நீதிகிடைக்குமென்கிற நம்பிக்கையை ஆவியானவரே நமக்கு கொடுக்கிறார். (கலாத்.5:5)

*உயிர்த்தெழச்செய்யப்போகிறார்!*

நம்மில் வாசமாயிருக்கிற,
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின, தம்முடைய ஆவியினாலேயே சாவுக்கேதுவான நமது சரீரங்களை தேவன் உயிர்ப்பிக்கப்போகிறார். (ரோமர் 8:11)

அழிவுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை அழிவில்லாததாய்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை மகிமையுள்ளதாய்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும் சரீரத்தை பலமுள்ளதாய்;
ஜென்மசரீரத்தை ஆவிக்குரிய சரீரமாய் பரிசுத்தஆவியானவரைக்கொண்டே தேவன் எழுப்பப்போகிறார்.
(1கொரிந்.15:42- 44)

நாமெல்லாரும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, பரிசுத்தஆவியானவராலேயே மறுரூபமாக்கப்படப்போகிறோம். (1கொரிந்.15:51,52)

- தேவனுடைய ஊழியனும் உங்கள் சகோதரனுமான...

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
             8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.