Type Here to Get Search Results !

Narayan Waman Tilak | நாராயணன் வாமன் திலக் | Missionary Life History in Tamil & English | முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை | Jesus Sam

=======================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
நாராயணன் வாமன் திலக் (1861-1919)
======================
    இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொங்கன் பகுதியான ரத்கிரி மாவட்டத்தில் உள்ள கராஜ்கான் கிராமத்தில் 1861 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ம் நாள் இந்துமத பிராமண பெற்றோருக்கு பிறந்தவர் திலக். இவர் லோக்மான்ய பாலகங்காதர் திலகரின் நெருங்கிய உறவினர். நாராயணக் கடவுள் மேல் பக்தி கொண்ட இவருடைய தாத்தா, இவருக்கு நாராயணன் என்று பெயரிட்டார். சிறுவயது முதல் அத்தெய்வ நம்பிக்கையில், இந்துமத பக்தியில் வளர்க்கப்பட்டார்.

    நாராயணன் வாமன் திலக் பம்பாய் க்கு அருகேயுள்ள கல்யாணில் தொடக்க கல்வி கற்றார். சிறுவயதிலேயே மராத்தி, சமஸ்கிருதம், கொங்கனி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை நன்கு கற்றுக்கொண்டார். மராத்தியில் தங்க பதக்கமும் பெற்றார்.

    நாராயணன் திலக்கிற்கு இறைவனைப் பற்றி, அதிகம் கவர்ந்ததால் மராத்திய இலக்கியத்திலும், பக்தி பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். திடீரென ஒருநாள் 15 ம் வயதில் இவருடைய தாயார் மரித்துப்போனார். இதனால் தனிமையை அதிகம் உணர்ந்தார். சமாதானத்திற்காக ஏங்கினார்.

    நாராயணன் வாமன் திலக் அவர்கள் நாசிக்கில் ஒரு மிஷனெரி பள்ளியில் உயர் கல்வி பயிலும்போது, அங்கு கிறிஸ்துவின் போதனைகள் போதிப்பது வளக்கம். இது இவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    கிறிஸ்தவம் ஒரு வெளிநாட்டு மதம் என்றும் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியாராய் இருந்ததினால், கிறிஸ்தவம் ஒரு தாழ்ந்த ஜாதியினரின் மதம் என்ற கருத்துடையவராய் திலக் இருந்தார். இவருக்கு கிறிஸ்தவ மதம் என்றால் இவருக்கு பிடிக்காது. மேலும் கிறிஸ்தவ நற்செய்திப் புத்தகங்களை கிழிந்து எரிந்தார். தனது இந்து பாரம்பரியத்தை குறித்து மிகவும் பெருமிதம் கொண்டார்.

    இந்நிலையில் தன்னுடைய 19 ம் வயதில் நாராயன் வாமன் திலக், 11 வயதான லட்சுமிபாய் என்ற பெண்ணை 1880 ம் ஆண்டு திருமணம் செய்தார். இவருடைய 10 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் ஒரு மகனும் பிறந்தது. ஆயினும் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கவில்லை. இதனால் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து மன அமைதிக்காக ஏங்கினார்.

    இவர் வாலிபனாக இருந்தபோது, இவருடைய கல்வி அறிவு, துடிப்பு, தேச பக்தி, கிறிஸ்தவ ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற தேசிய உணர்வு அதிகம் கொண்டு, சுதந்தர இந்தியா உருவாக புதிய கொள்கைகளை உறுவாக்கி அவைகளை மங்கள் பின்பற்றும்பபடி அழைத்தார். இது ஆயிரமாயிரமான இளைஞர்களை ஈர்த்தது.

    இந்நிலையில் நாராயன் வாமன் திலக் அவர்களின் சமஸ்கிருத புலமையினால் 1891ம் ஆண்டு நாக்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பிந்தார்.

    1893 ம் ஆண்டில் ஒருநாள் நாராயணன் வாமன் திலக், பணியினிமித்தமா நாக்பூரிலிருந்து ராஜ்நத்த்கான் வரை இரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது அமெரிக்க-மராத்தி மிஷனெரி சங்கத்தின் மூலம் இந்தியாவில் நற்செய்திபணி செய்துகொண்டிருந்த எர்னஸ்ட் வார்டு திலக் அவர்களை இரயிலில் சந்தித்தார். முதலில் அவருடன் பேச தயங்கின திலக் எர்னஸ்ட் வார்டும் சமஸ்கிருத மொழியை நன்கு கற்று இருந்ததினால் திலக்கிடம் பேச ஆரம்பித்தார். முதலில் பேச தயங்கிய திலக், இவருடைய மாறுபட்ட குணாதிசயத்தைக் கண்டு, சமஸ்கிருதத்தின் மீது எர்ஸ்ட் வார்டு கொண்ட பற்றின் காரணமாக பேச ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே தொடங்கிய உரையாடல் சமஸ்கிருத கவிதைகளை பற்றி இருந்தது. இருதியில் எர்னஸ்ட் வார்டு நாராயன் வாமன் திலக் உடன் கிறிஸ்துவின் போதனைகளையும், திருமறை சத்தியங்கவளையும் பற்றி விளக்கி அவரிடம் ஒரு புதிய ஏற்பாடு கொடுத்து அதை வாசிக்கும்படி சத்தியம் வாங்கிக்கொண்டார்.

    கட்டாயத்தின் பேரில் வாங்கப்பட்ட இந்த புதிய ஏற்பாடு புத்தகம் நாராயணன் வாமன் திலக் அவர்களுக்கு வாசிக்கும் தூண்டுதலை ஏற்படுத்தியது. ஆகவே மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்தார். இதில் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்க வாசிக்க அது இவருடைய உள்ளத்தை தொட்டது. நான்கு சுவிசேஷங்களையும் வாசித்து இயேசுவின் போதனைகள், இயேசுவின் அன்பு, மனதுருக்கம், தியாகம் யாவற்றையும் வாசிக்கும்போது தன்னுள் ஒரு மாற்றத்தை நாராயன் வாமன் திலக் உணர்ந்தார். ஆகவே முழு புதிய ஏற்பாட்டையும் வாசித்து முடித்தார். இதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்டு நிலையான மன அமைதியை பெற்றுக்கொண்டார்.இதுவரைக்கும் தான் தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு விடைகளை இந்த புதிய ஏற்பாட்டில் கண்டுகொண்டார். 

    சமாதானத்திற்காக, நிம்மதிக்காக ஏங்கிய நாராணயன் வாமன் திலக் இரன்டு வருடங்களாக திரும்ப திரும்ப வேதத்தை வாசித்து இப்போழுது முழு மன நிறைவையும், தெய்வீக சமாதானத்தையும் நிறைவாக பெற்றுக்கொண்டார். இப்போது நாராயணணன் திலக் அவர்கள், இயேசு கிறிஸ்துவினால் முழுமையக ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவின் சீஷராக வாழ எண்ணினார். ஆகவே பம்பாய் வந்து மிஷனெயாக பணியாற்றிக்கொண்டிருந்த ஜஸ்டின் அபோட் (Rev. Justin Abbot) மூலம் கிறிஸ்துவின் உபதேசத்தைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டார். ஒருகட்டத்தில் இவர் தான் நாராயணன் வாமன் திலக் அவர்களின் ஆன்மீக தந்தையாக இருந்தார்.

    பின்னர் பம்பாயில், பைக்குல்லா பகுதியில் இருக்கின்ற கிறிஸ்து நாதர் ஆலயத்தில் (Christ Church, Buculla, Mumbai) இந்திய குருவானவர் துக்காராம் நாத்தோஜி என்பர் மூலமாக இன்னும் கிறிஸ்துவின் போதக்தை கேட்டு விசுவாசத்தில் பலப்பட்டு, தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரியாமல் 1895 ம் ஆண்டு பிப்ரவரி 10 ம் நாள் ஞானஸ்நானம் பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்சேவகனாய் அற்பணித்தார்.

    நாராயன் வாமன் திலக் அவர்களிடம் கானப்பட்ட மன மாறுதல் அவருடைய மனைவி லட்சுமிபாய் மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவரை வெளிநாட்டு மதத்தை பின்பற்றுகிறவர் என்று புறக்கணித்தார்கள்.

    இப்போழுது நாராயன் வாமன் திலக் அவர்கள் தான் பெற்ற விடுதலையை, இரட்சிப்பை தன்னுள் மட்டும் அடக்கி வைக்காமல், அதை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்து பிராமணர்கள் மற்றும் உயர் ஜாதி இந்துக்கள் ஆகியோருக்கு கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவித்தார். இது இவருடை குடும்பத்தில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. இதனால் இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு மகனோடு தன் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றுவிட்டார்.

    இதை பொறுமையாக சகித்த திலக் அவர்கள், நான்கு ஆண்டுகள் இவருடைய பொறுமை, சாட்சியுள்ள வாழ்க்கையினால் அவருடைய மனைவி வீடு சென்று, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவித்தார். அவர்களிடமும் கிறிஸ்துவின் நற்செய்தி கிரியை செய்ய ஆரம்பித்தது. இப்போது லட்சுமிபாயும் புதிய ஏற்பாட்டை வாசிக்க ஆரம்பித்தார்கள். இனிமித்தம் லட்சுமிபாயும் மற்றும் அவருடைய மகன் தேவதத் ம் 1900 ம் ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.
    
    இந்நிலையின் நாராயன் வாமன் திலக் அவர்களின் உடன்பிறப்புகளும் குடும்பத்தாரும் இதை கடுமையாக எதிர்த்தார்கள். ஆயினும் திலக் அவர்களை மிகவும் நேசித்து, அவர்களுக்கும் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவித்தார். இந்து மதத்திலுள்ள மூடநம்பிக்கைகளை பட்டியல் போட்டு கான்பித்தார். இதற்கு கிறிஸ்துவின் நற்செய்தி மாத்திரம் விடுதலையை கொடுக்கும் என்று போதித்தார்.

    நாராயன் வாமன் திலக் அவர்களிடம் காணப்பட்ட மராத்திய இலக்கிய ஆர்வம், தேசபக்தி, கிறிஸ்துவின் போதனைகளை பாடல்கள் மூலமாக நற்செய்திபணி செய்தார். இப்படி கிறிஸ்தவ பக்தி பாடல்களை மராத்திய இலக்கியத்தின் அடிப்படையில் பாடியதால் இந்துமத மேல் ஜாதி மக்களோடு தொடர்பு கொள்ளவும் அப்படியே கிறிஸ்துவின் போதனைகளை அறிவிப்பதற்கும் வாய்ப்பபாக இருந்தது.

    இந்நிலையில் நாராயன் வாமன் திலக் அவர்கள் 700 அதிகமான மராத்திய பக்தி பாடல்களை பாடி கிறிஸ்துவின் நற்செய்திபணி செய்ததினால் அநேகர் இவர் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அநேகர் வெளிப்படையாக கிறிஸ்துவை அறிக்கையிட அவர்களுடைய மதம், கலாச்சாரம், நம்பிக்கை, ஜாதி தடையாகவே இருந்தது. இந்த காரியம் வெகுவாக வாமன் திலக்கை பாதித்தது.

    பின்னர் 1902 ம் ஆண்டு அகமது நகரில் உள்ள வேதாக கல்லூரியில் வேதாகமத்தை நன்றாக பயின்றார். பின்னர் 1904 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ம் நாள் அகமதுநகரில், அமெரிக்க- மராத்திய மிஷன் தேவாலயத்தில், திருச்சபை போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார். தொடர்ந்து நற்செய்திபணியை மேல்ஜாதி மக்களுக்கும் அறிவித்தார். நாராயணன் வாமன் திலக் அவர்கள் இந்திய திருச்சபைகளில் காணப்பட்ட ஜாதீய பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து அதை வன்மையாக கண்டித்தார். தன்னுடைய சொத்துகள் பலவற்றை விற்று ஏழைகளின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தினார். 

    1908 ம் ஆண்டு பூனாவில் இருந்து முக்தி மிஷன் மூலம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை செய்துகொண்டிருந்த பண்டித ரமாபாய் அம்மையார், மராத்திய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்க உதவி செய்யும்படி குருவானவர் நாராயணன் வாமன் திலக் அவர்களை அழைத்தார். இவர்களுடைய அயராத உழைப்பினால் இந்தியாவில் முதன் முறையாக மராத்திய மொழியில் வேதாகமம் 1910 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    மராத்திய வேதாகமம், மராத்தி கிறிஸ்தவர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, கிறிஸ்துவின் சத்தியத்தில் நிலைத்திருக்க உதவியாய் இருந்தது. மேலும் குருவானவர் வாமன் திலக் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள் மராத்திய திருச்சபைகளில் எழுப்புதல் உண்டாயிற்று. அநேகர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

    மராத்திய திருச்சபைகளில் குருவானவர் நாராயணன் வாமன் திலக் ஆற்றிய பணி மிகவும் போற்றத்தக்கது. மேல் ஜாதி மக்களுக்கு, அவர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற மராத்திய இலக்கிய நயத்தில் 2100 கவிதைகளையும் 700 க்கும் அதிகமான பக்தி பாடல்களையும், எழுதி கிறிஸ்துவின் நற்செய்திபணியை அறிவித்தார். இதன் மூலம் அநேக உயர்ஜாதி இந்துக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய சீஷர்களாக வாழ அற்பணித்தார்கள்.

    பின்னர் 1912 ம் ஆண்டு நாராயணன் வாமன் திலக் அவர்கள் நற்செய்திபணியோடு ஞானோதயா என்ற கிறிஸ்தவ மிஷனெரி பத்திரிக்கையின் மராத்தி பிரிவின் ஆசிரியராக பணியாற்றி, சமுதாய மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தார். 

    இந்நிலையில் 1917 ம் ஆண்டு தனது 55 ம் வயதில் தான் பணியாற்றிய அமெரிக்க-மராத்தி மிஷன் சங்கத்திலிருந்து விடுபட்டு, ஒரு கிறிஸ்தவ துறவியாக மாறினார்.

    ஆகவே நாராயணன் வாமன் திலக் அவர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை தவிர்த்து, கிறிஸ்துவின் சத்தியத்தை உணர்ந்து, இந்திய கலாச்சார கிறிஸ்தவத்தின் அடிப்படையில், இந்திய சன்னியாசிபோல் காவி உடையை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் போதனைகளை எளிய முறையில் பாமர மக்களும், உயர் ஜாதி மக்களும் புரிந்துகொள்ளும் படி பஜனைகள் மூலமாமாக, பக்தி பாடல்கள் வழியாக கிறிஸ்துவின் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார்.

    இதற்காக நாராயணன் வாமன் திலக் அவர்கள் ஆசிரமம் ஒன்றை உறுவாக்கி, அப்போஸ்தலனாகிய பவுலைப்போல யூதருக்கு யூதராகவும், கிரேக்கருக்கு கிரேக்கராகவும் இருந்து நற்செய்தி பணி செய்து அநேக ஆத்துமா ஆதாயம் செய்ததுபோல் இந்து மத மக்களுக்கு இந்து சன்னியாசியாக காட்சியளித்து, கிறிஸ்துவின் போதகங்கள், இந்திய கிறிஸ்தவ கலாச்சாரத்தில் அறிவித்து அநேகரை ஆத்தும ஆதாயம் செய்தார்.

    இந்தியர்களுக்கு ஞானஸ்நானம் என்பது இந்திய கலாச்சாரத்தை, இனத்தை துறந்து, மேலை நாட்டு கலாச்சாரமாக மாறுவதே என்ற எண்ணம் இருப்பதால் நாராயணன் வாமன் திலக் அவர்கள் ஞானஸ்நானத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் கிறிஸ்துவின் சத்தியத்தை போதித்தார். இந்துக்கள் இந்திய கலாச்சாரத்தை, சமுதாய ஒழுங்குகளை துறக்காமல் ஒரு இந்தியனாக, கிறிஸ்துவை பின்பற்றி, தேசிய சகோதரத்துவ வாழ்வை மேற்கொள்ள போதித்தார். இதனால், இவர் மூலமாக அநேக உயர்ஜாதி இந்து மக்கள், கிறிஸ்துவின் அந்தரங்க சீஷர்களாக மாறினார்கள்.

    குருவானவர் நாராயன் வாமன் திலக் அவர்கள் இந்து மதத்தில் இருக்கும் புராண கதைகள் போல், வேதாகம கதைகளை புராணங்களின் அடிப்படையில் அமைத்து பக்தி பாடல்களையும், கதைகளையும் கூறி நற்செய்திபணி செய்வதற்கு என்று தேவனின் அரன்மனை (God's Royal Court) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதன் மூலம் அகமது நகர், மராத்வாடா, மற்றும் கொங்கன் பகுதிகளில் நற்செய்திபணி செய்ததினால் நூற்றுக்கணக்கான மக்கள் கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

    நாராயன் வாமன் திலக் அவர்கள் மராத்திய திருச்சபைகளில் 24 ஆண்டுகள் போதகராகவும், நற்செய்தி பணியாளராகவும் செயல்பட்டு கிறிஸ்துவின் இராஜியத்தை கட்டியவர், தன்னுடைய 58 ம் வயதில் 1919 ம் ஆண்டு மே மாதம் 9 ம் நாள் பம்பாயில் நித்திய இளைபாறுதலுக்கு கடந்து சென்றார். அவருடைய சரீரம் அகமது நகரில் ஒரு கோதுமையாக விதைக்கப்பட்டார்.

    இவர் பாடிய அநேக பாடல்கள் இன்றும் மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்திய கத்தோலிக்க திருச்சபைகள் மற்றும் சீர்திருத்த திருச்சபைகளிலும் பாடப்பட்டு வருகிறது. இது இன்றும் திருச்சபையின் பக்திவிருத்திக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது. இவர் பாடிய மராத்திய இலக்கிய பாடல்களுக்காக மேற்கு இந்திய தாகூர் என்று கௌரமாக அழைக்கப்படுகின்றார். இவருடைய கவிதைகள் மகாராஷ்ட்ரா பள்ளிகளில் இன்றும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

    குருவானவர் நாராயணன் வாமன் திலக் அவர்கள் எழுதிய பக்திப் பாடல்கள் மற்றும் கவிதைகள் யாவும் Union Biblical Seminary, Pune வில் உள்ள வேதாகம கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருக்கிறது.  

    இந்திய கிறிஸ்த மிஷனெரி ஊழியங்களில் வேதாகம கதைகள் மூலம் சுவிசேஷம் அறிவித்த முறைமை, பிற்காலத்தில் தமிழ்நாட்டு கிறிஸ்தவ திருச்சபைகளில் ஹார்மோனியம், தபேலா, சப்ளா கட்டை மற்றும் சிலம்பல்ஸ் மூலமாக பஜனை நிகழ்ச்சியாக மாறியதற்கு குருவானவர் நாராயன் வாமன் திலக் அவர்களே முன்னோடி.

    இன்றைய இந்தியாவை சுவிசேஷமயமாக்க நாராயன் வாமன் திலக் அவர்களின் வாழ்க்கையும் நற்செய்திபணி அறிவித்த முறையும் நமக்கு நல்ல முன்னுதாரம் ஆகும். இவருடைய வழிமுறையை பின்பற்றி, இந்தியாவில் மேல் ஜாதி மக்களுக்கும் நற்செய்திபணி அறிவிக்க முன்வருவீர்களா? இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகட்டும். ஆமென்.

    இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.

    இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.

    கிறிஸ்துவவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி.


====================
The Gospel Pioneers
Narayan Waman Tilak (1861-1919)
====================
  Narayan Waman Tilak born in a high-caste Hindu Brahmin family in Ratnagiri District of Maharashtra in 1861. His mother was died in his early age so he felt loneliness in his life. In addition to Marathi and Sanskrit, he also mastered writing and speaking in English. Despite his education and high social status in the Hindu faith, he became dissatisfied with Hinduism and began a search for a universal religion. 

    He undertook a variety of modest jobs in different towns in Pune, Bombay and Nasik at different times in his life, including the job of a teacher, a Hindu priest, and a printing press compositor. Later, he married to 11 yrs old Laxmibai Tilak in 1880. During the ten years of wandering after his marriage, Tilak was full of spiritual unrest. He tried several methods of achieving spiritual enrichment. In the mean time he got a job in Nagpur as a translator of Sanskrit literature in 1891

     In 1893, Tilak was travelling in search of a new job by train from Nagpur. During his train journey, he met a Christian missionary Ernest Ward, who first spoke at length with him about Sanskrit poetry, after some conversation, he prayed with him and presented a copy of the New Testament Bible and whispered a “prophesy” in his ears that he “would come under of grace of Savior Jesus in less than two years.” 

    As Tilak read the New Testament, he found himself firmly attracted by the Sermon on the Mount and its words of love, compassion and truth. After his study, he felt attracted toward Christianity to the extent that he relinquished Hinduism and wanted to be a follower of Jesus Christ. Tilak took baptism in 1895 without the knowledge of his relatives, including his wife, when Lakshmi bai heard about his decision, she was stunned. This led to a separation between the couple for some time. But she too started studying the Bible on her own and felt the same interest and affection. She too accepted Jesus as her Personal Savior.

    In 1890, Laxmibai defied her family members and along with their son Devdatta joined her husband and took baptism in 1900. Tilak was a renowned Marathi poet and a social reformer. He began teaching in the seminary in Ahmadnagar and was ordained as a minister in the Congregational church in 1904. He was disappointed with the caste system in Christianity. 

    Even after their conversion to Christianity, the high caste people continued to treat the low caste people as untouchables. In the mean time Tilak was once invited by Pandita Ramabai to stay at her village Kedgaon near Pune and help her in her ongoing work of translation of Bible into Marathi. Tilak and his wife had visited Ramabai at Mukti in 1905, just a few months before the revival broke out there. Because of their hard work, the Holy Bible was translated into Marathi language for the first time.

    When Ramabhai published the first collection of Christian bhajans she included a few of her own publications but relied mainly on the work of Tilak. Narayan Waman. Tilak evolved a new spiritual-cultural movement for the newly converted Marathi-speaking Christians in Maharashtra. Tilak has written more than 2100 poems, some of them comprising over hundreds of lines.
  
     Narayan Waman Tilak maintained that conversion to Christianity does not mean emigration to another country and therefore, even after conversion, people should retain their distinct cultural identity. He believed a Hindu-Christian synthesis was impossible unless the native Christian religion had deep roots in Indian culture. 

    He attempted to see the message of Jesus Christ in the context of Indian life and culture. He begins a new movement which he called devacha-darbar(God’s royal court). This was to be a brotherhood of the baptized (Christian) and unbaptized (Hindu) disciples of Jesus, Tilak wanted Indian Christian forms of worships to be deeply rooted in the local culture and traditions, so he trained Marathi Christians to worship and sing bhajans and kirtans. He succeeded in introducing this tradition in churches. 

    The efforts of Tilak to introduce indigenous style of worshipping in Indian churches have yielded rich dividends. As a result, hundreds of families from western Maharashtra, Marathwada and Konkan region embraced Christianity.

  Tilak served the church as a preacher for about 24 years, also served as an editor of a Marathi periodical 'Dnyanodaya' from 1912. Towards the later years of his life, Tilak felt that he was to be an “Indian Apostle” of Christ. He had started using saffron clothes, which symbolised renunciation. He made special efforts to relate Christian teachings to the religious heritage of India. 

    In the last years of his life he was an exemplary Christian bhakta(devotee), giving up money and possessions, though not renouncing home and family. He devoted rest of his life in the service of Jesus Christ. Tilak wanted to present the story of Christ in Hindu Epic(Ramayana) style and believed that it could help more people in India to understand Christ and the Bible. So he started to compose in Marathi an epic titled “Christayana” describing the works of Jesus Christ in a native Indian form but he could finish only the first book before his death. It contained the birth and childhood of Jesus Christ. 

    Tilak passed away in J. J. Hospital in Mumbai on 9 May 1919. He is loved throughout Maharashtra as “the poet of children and flowers”. Twelve years later, Tilak’s wife Laxmi Tilak took up the task after N.W.Tilak death and added sixty-four chapters to the eleven originally visualized. The final chapter was composed by his son, Devdatt Tilak.   

    Tilak was the first Indian Christian missionary who composed an epic in similar style. Narayan Waman Tilak’s work in Christian literature and poetry in Marathi language has been immense, yet, much forgotten over the period of time. But he left a legacy and a dream that remains to be realized by new generations of Hindus who follow Jesus. 

    Even eight decades after his death, several Marathi hymns composed by Tilak, the faithful in Catholic and Protestant churches sing Marathi hymns to the accompaniment of harmonium, tabla and cymbals. However Tilak legacy and Christian influence still lives on in many lives he touched through the Love of Jesus Christ. Are you ready to invest your talents toward building the Kingdom of God in Jesus?

    Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.

    My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation? 

    The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.

    Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.