Type Here to Get Search Results !

God who increases the days of life | Daily Bible Study in Tamil | Stephen Y Sermon Points | Jesus Sam

பாவ சாபங்களை மாற்றி,தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கப் பண்ணுகிற தேவன் | ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிற தேவன் | நம்பிக்கைக்குரியவர் மேல் வைக்கிற நம்பிக்கையின் முடிவு சந்தோஷமும் சமாதானமுமே 
========================
பாவ சாபங்களை மாற்றி,தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கப் பண்ணுகிற தேவன்.
===========================
*யாத்திராகமம் 20:5*
*"பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில், மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்".*

    *தேவபிள்ளையே! நம்முடைய தேவ ன் பாவங்களையும் அக்கிரமங்க ளையும் அநீதிகளையும் வெறுக்கி றவர்; அதே நேரத்திலே பாவியை யோ அவர் உள்ளன்போடு நேசிக்கி றவர். அக்கிரமங்களை மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசா ரிக்கிற தேவனாயிருந்தாலும், அவ ரிடத்திலே அன்புகூர்ந்து, அவரது க ற்பனைகளை கைக்கொள்ளுகிறவ ர்களுக்கோ ஆயிரம் தலைமுறை ம ட்டும் இரக்கஞ்செய்கிற தேவனாயி ருக்கிறார்.இந்தஉலகத்திலே நம்மு டைய கண்களுக்குமறைவான, சிந் தையிலே புலப்படாத அநேக வல்ல மைகள் உண்டு. சாபங்களையோ, ஆசீர்வாதங்களையோ நம்மால்பார் க்க முடிவதில்லை;பிசாசுகளையோ தூதர்களையோ காண முடிவதில் லை;நரகத்தையும் பாதாளத்தையும் தரிசிக்கமுடிவதில்லை. ஆனால், அ வைகள் அத்தனையும் உண்மையா னவைகள். சாபம் என்பது ஒரு கொ டிய தீயவல்லமை. மேலேயுள்ள வச னத்தை நாம்வாசிக்கும்போது, பாவ சாபங்களெல்லாம் தொடர்ந்து வரு கிறதை அறிந்துகொள்ள முடிகிற து.ஒருமனிதனுடைய கொடிய பாவ மும், அக்கிரமமும், இரத்தப்பழிகளு ம் சாபங்களாக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் கடந்துவருகின் றன. ஆனால், ஒரு நீதிமானுடைய ஆசீர்வாதமோ,ஆயிரம் தலைமுறை களுக்கு கடந்து வருகிறதாயிருக்கி றது (யாத்.20:6).ஒருசில நோய்கள் த லைமுறையாய் தொற்றிக் கொண் டே வரும். மருத்துவரிடம் போனால், இந்த வியாதி உங்கள் பெற்றோர்க ள் யாருக்காகிலும் உண்டா? என்று விசாரிப்பார். ஆம்,வியாதிகளும் சா பங்களும்பெற்றோர்கள்மூலம் சந்த திகளுக்குள் தொடர்ந்துவிடுகிறது.*

    *எனக்கன்பானவர்களே! உன் சரீரத் தைத் தாக்குகிற நோய்களின் அள வை அளந்து மதிப்பிட்டு விடலாம். ஆனால், ஒரு மனுஷன் மேல் எவ்வ ளவு சாபங்கள் இருக்கிறது என்ப தை அளவிடவே முடியாது. சாபத்தி ன்வல்லமைகள் எதிர்பாராமல் ஒரு மனுஷனைத் தாக்கி, வியாதிகளு ம்,விபத்துகளும், பண நஷ்டங்களு ம், அகால மரணங்களும் வரும்போ து, “ஐயோ,நான் என்ன பாவம் செய் தேன்? இது என்ன சாபமோ?” என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தகப்ப ன் பிறனுடைய சொத்தையோ (அ) நிலத்தையோ அபகரிக்கும் நோக்க த்தோடு, அவனை கொலை செய்து*
*(அ)சூனியம் செய்து, தனது அதிகா ரத்தை பயன்படுத்தி அநியாயமாய் மிரட்டி, அநீதியோடு அதை கொள் ளையடித்திருப்பான். இது அவனுக் கு சாபமாய் மாறி, அவனுக்குப் பிற கு அந்த நிலமானது அவன் சந்ததி களுக்கு வரும்போது, கூடவே அந்த சாபமும் இணைந்து வரும். தாய் அ நியாயமாய் மற்றவர்களை ஏமாற் றி,கொள்ளையடித்துநிறைய நகை களை சேர்த்து வைத்திருப்பாள்; அ வளுக்குப் பிறகு அந்த நகைகளை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக் கும்போது, அந்தப் பங்கின் வழியா க,பிள்ளைகளுக்கு சாபம்வந்துவிட க்கூடும். சிலர் மற்றவர்களை வாயி னால் சபிக்கும்போதோ (அ) பொறா மையின் கண்களோடு பார்க்கும் போதோ அந்த வார்த்தையின் /பார் வையின் வல்லமை சாபமாக மற்ற வர்களை சென்று தாக்கும்.*

    *பிரியமானவர்களே! இப்படிப்பட்ட சாபங்களையெல்லாம் போக்குவத ற்கான பரிகாரத்தை/வழிமுறைக ளையெல்லாம் வேதம்அருமையாய் நமக்கு போதிக்கிறது. அநேகர் தங் கள் அறிவீனத்தினால், “இது என் த லைவிதி; நான் வாங்கி வந்த வரம்” என்றெல்லாம் தங்களுக்குள் தாழ் வு மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டு,சாபத்திலேயேவாழ்கிறா ர்கள். கர்த்தர் அதைக் குறித்து மிக வேதனையோடு, “என் ஜனங்கள் அ றிவில்லாமையினால் சிறைப்பட்டு ப்போகிறார்கள் (ஏசா. 5:13); என் ஜ னங்கள் அறிவில்லாமையினால் ச ங்காரமாகிறார்கள் (ஓசி.4:6)” என்று புலம்புகிறார். நாம் சாபத்திலே/அக் கிரமத்திலே/ வியாதியிலே வாழ்வ து தேவனுடைய சித்தமல்ல; நம் பா வத்தையும் சாபத்தையும் வியாதி யையும் இரண்டாயிரம்ஆண்டுகளு க்கு முன் கோரசிலுவையிலே நம் அருமை இரட்சகர் இயேசு சுமந்து தீ ர்த்துவிட்டார்;நமக்குசமாதானத்தை யும் ஆசீர்வாதத்தையும் உண்டாக்கு ம் ஆக்கினை அவர்மேல் வந்தது (ஏ சா.53:4,5). தேவனுடைய வல்லமை யை அனுபவித்து வாழ்கிற உன் வா ழ்க்கையிலே இப்படிப்பட்ட கொடிய பாவ சாபங்களுக்கெல்லாம் இடமே யில்லை. அருள்நாதர் இயேசு சுமந் த சாபத்தையும், வியாதியையும் நீ அனுபவிக்கவேண்டியஅவசியமில் லை. அவருடைய அன்பின் செட்டை கள் இன்றும்உனக்காக விரிக்கப்பட் டிருக்கிறது;நம்பிக்கையோடு ஓடிவ ந்து அடைக்கலம் புகுந்துக் கொள்; நிச்சயமாய் உன் பரம்பரை சாபங்க ளையெல்லாம் முறித்து,தமது அரவ ணைப்பையும் பாதுகாப்பையும் உ னக்குக் கொடுத்து, தெய்வீக ஆசீர் வாதத்தோடு வாழ உதவிசெய்வார். மனம் கலங்காதிருங்கள்! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977


======================
ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிற தேவன்
========================
நீதிமொழிகள் 9:11
    "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத் தியாகும்".

    தேவபிள்ளையே! கர்த்தரோ நம்மு டைய ஆயுசு நாட்களை விருத்தியா க்குகிறவர். நீடித்த நாட்களால் நம் மை திருப்தியாக்குகிற தேவன். நம் முடைய சுவாசத்தை தம்முடைய கர ங்களில் வைத்திருக்கிறவர். ஆதி யிலே தேவன்,தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்து, அவருடை யசுவாசத்தை நாசியிலேஊதி, அவ னை ஜீவாத்துமாவாக உருவாக்கி னார். இந்த பூமியிலே அவனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஜீவனோடு வாழவேண்டும் என்பது மட்டுமல்ல; நித்தியஜீவனை சுதந்தரித்துக்கொ ள்ளவேண்டுமென்பதே நம்மைக் கு றித்த தேவனுடைய விருப்பமாயிரு க்கிறது. நம்மை பிழைக்க வைத்தி ருப்பதே அவருடைய கிருபை. நம்மு டைய ஒவ்வொரு இதயத் துடிப்பும் அவருடைய கிருபையை வெளிப்ப டுத்துகிறது. மனிதனுடைய ஆயுசு நாட்களை கூட்டவோ, குறைக்கவோ நம்தேவனால் கூடும். இந்த உலகத் திலே சகல அதிகாரங்களையும் ம னுஷனுடையகரங்களிலே தந்த தே வன், அவனுடைய ஆயுசுநாட்களை யோ தனது அதிகாரத்தில் வைத்தி ருக்கிறார். தேவனுடைய கட்டளை களை உத்தமமாய் கைக்கொண்டு, தேவபக்தியையும் பரிசுத்தத்தையு ம் காத்துக்கொண்டு, அவரை உண் மையாய் சேவிப்போமானால், நம்மு டைய ஆயுசு நாட்களும், வருஷங்க ளும்விருத்தியடையும். கர்த்தர் சொ ல்கிறார்: "வியாதியை உன்னிலிரு ந்து விலக்குவேன்; உன் ஆயுசு நாட் களை பூரணப்படுத்துவேன் (யாத். 23:26)". உங்கள் ஜீவனை நீட்டித்திரு க்கப்பண்ணுகிறவரும், சௌக்கிய த்தையும் ஆரோக்கியத்தையும் தந் து பராமரிக்கிறவரும் தேவனே.*

    அன்பானவர்களே! நம்முடைய ஜீவ ன் தேவனால் பராமரிக்கப்படுகிற து(யோபு 10:12) என்று யோபு பக்தன் சொல்கிறார். ஆதாம் முதல் நோவா வின்காலம்வரை ஜனங்கள் 800/900 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரோ டுவாழ்ந்திருக்கிறார்கள். நோவாவி ன் காலத்திலே ஜனங்களுடைய பா வம் பூமியிலே பெருகினபோது, கர் த்தர் மனுஷனுடைய ஆயுசு நாளை குறைக்க ஆரம்பித்தார். “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடேபோரா டுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்” (ஆ தி.6:3). மோசே பக்தன் இதைக் குறி த்து எழுதும்போது “எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தி ன்மிகுதியால் எண்பது வருஷமாயி ருந்தாலும்,அதின் மேன்மையானது வருத்தமும், சஞ்சலமுமே (சங்கீ.90: 10)” என்று குறிப்பிடுகிறார். மனுஷ னுடைய ஜீவனை காலையிலே மு ளைக்கிற புல்லுக்கும்,கடந்துபோகி ற நிழலுக்கும், மறைந்து போகிற பு கைக்கும் ஒப்பிட்டு வேதம் கூறுகி றது. இந்தபூமியிலே உங்கள் ஆயுசு நாட்களை பெருகச் செய்ய ஒரே வ ழி, மெய்யான தேவனாகிய கர்த்த ரைத் தேட வேண்டும்; அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, அத ன்படி வாழவேண்டும். கர்த்தர் சொ ல்கிறார்: என் வார்த்தைகளை ஏற் றுக்கொள்;அப்பொழுது உன் ஆயுசி ன் வருஷங்கள் அதிகமாகும் (நீதி.4: 10); என்னைத் தேடுங்கள்; அப்பொ ழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:4).*

    பிரியமானவர்களே! கர்த்தருடைய வலதுகரத்திலே தீர்க்காயுசு இருக் கிறது(நீதி.3:16). அருள்நாதர்இயேசு பரமேறி செல்வதற்கு முன்பு தமது இரண்டு கைகளையும் உயர்த்தி ஆ சீர்வதித்தார். அப்படியானல் நீங்கள் தீர்க்காயுசோடு வாழவேண்டும் என் பது தேவனுடைய விருப்பம். சாகிற வனுடைய சாவை நான் விரும்புகி றதில்லை (எசே.18:32) என்று கர்த்த ர் சொல்கிறார். இந்த நாட்களிலே கொள்ளைநோயினால் நான் மரித் துவிடுவேனோ என்ற பயம் அநேக ருடைய இருதயத்தை கவ்விக் கொ ண்டிருக்கிறது. தேவன் உங்களுக் கு தீர்க்காயுசை கொடுத்திருக்கும் போது, தேவனுடைய பராமரிப்பி லிருக்கிற உங்கள் ஆயுசுநாட்களை தொடுவதற்கு கொரோனா வைரசு க்கு எந்த அதிகாரமும் கிடையாது. இயேசு சொன்னார்: பிதாவின் கரத் திலிருக்கிற உங்களை ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது (யோ வா.10:29).தேவனுடைய தயவினால் பராமரிக்கப்பட்டு வருகிற உங்களு க்கு, அவருடைய தயவினால் உண் டாகும் நீடியவாழ்வை நீங்கள் நிச்ச யம் பெற்றனுபவிப்பீர்கள். யோபு ப க்தன்,தனக்கு நேர்ந்த சோதனையி ன்/இழப்பின்வாழ்க்கைக்குப்பிறகு, நெடுநாள் இந்தபூமியிலே வாழ்ந்து பூரண ஆயுசை அனுபவித்தான்*

    (யோபு 42:17). யோபுவுக்கு பூரண ஆ யுசைக் கொடுத்த தேவன், நிச்சய மாய் உங்களையும் நீடித்த ஆயுசுநா ட்களைக் கொடுத்து திருப்தியாக்கு வார். வியாதிப்பட்டு போனீர்களோ? ஆத்துமாவிலே, சரீரத்திலே பெலவீ னப்பட்டு சோர்ந்துபோனீர்களோ? கவலைப்படாதிருங்கள்! கர்த்தரை நோக்கிப்பாருங்கள். எசேக்கியா ரா ஜாவின் கண்ணீரைக் கண்ட தேவ ன்,இன்றைக்குஉங்கள் கண்ணீரை க்கண்டு,உங்கள் விண்ணப்பத்திற் கு பதிலைத் தந்து, உங்கள் ஆயுசு நாட்களை பரிபூரணப்படுத்தி, நீடித் த நாட்களை கொடுத்து சந்தோஷப் படுத்துவார்.உங்கள்துக்கம் சந்தோ ஷமாய் மாறும். உங்கள் சுகவாழ் வைத் துளிர்க்கப்பண்ணி, உங்கள் சந்ததிகளைக் கண்குளிரக் காண உதவிசெய்வார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்கா க ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977


========================
நம்பிக்கைக்குரியவர் மேல் வைக் கிற நம்பிக்கையின் முடிவு சந்தோ ஷமும் சமாதானமுமே
=======================
*ரோமர் 15:13*
    *"பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்ப டிக்கு, நம்பிக்கையின் தேவன் விசு வாசத்தினால்உண்டாகும் எல்லாவி த சந்தோஷத்தினாலும் சமாதானத் தினாலும் உங்களைநிரப்புவாராக".*

    *தேவபிள்ளையே! இந்த வசனத்தி லே நம்முடைய அருள்நாதர் இயேசு வுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பெ யர் நம்பிக்கையின் தேவன். இந்த ஜூலை மாதத்தின் கடைசி நாளில் தேவன் நம்மை கொண்டுவந்திருக் கிறார். இந்த மாதம் முழுவதும் கர்த் தர் நமக்கு நல்லவராக,நம்பிக்கைக் குரியவராக இருந்து ஆச்சரியமாக நடத்திவந்தார்.நம் அனுதின வாழ்க் கையிலே அநேக நேரங்களில் மனி தர்கள் மேல், சூழ்நிலைகள் மேல் ந ம்பிக்கைவைக்கிறோம். சில நேரங் களில் நம்பிக்கை வைக்கத் தள்ளப் படுகிறோம். தன் காரியங்களை க வனித்துக் கொள்ள கணவர்/ பெற் றோர்/ பிள்ளைகள்/ உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து போவதில்லை. ஆனால், தனக்கு ஒ ரு நம்பிக்கையின் தேவன் இருக்கி றார் என்பதை அநேக நேரங்களில் மறந்துபோகக் கூடிய சூழ்நிலை வ ருகிறது. ஒரு மனுஷனுடைய வாழ் க்கையிலே வருகிறபோராட்டங்கள், உபத்திரவங்களின் தாக்கம் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதையே ம றக்க வைக்கிறது. யோபு பக்தன், எ ன்னை கொன்றுபோட்டாலும் ஆண் டவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்*

    *(யோபு 13:15)என்றும்,தாவீதுபக்தன், ஆண்டவரே!நான்எதற்கு எதிர்பார்த் திருக்கிறேன். நீரே என் நம்பிக்கை*
    *(சங்.39:7) என்றும் சொல்கின்றனர். இவர்கள் தேவன்மேல்வைத்த நம்பி க்கையின்பலனையும்மேன்மையும் தங்கள்வாழ்க்கையிலே அனுபவித் தார்கள்.*

    *அன்பானவர்களே!இந்த நம்பிக்கை ஒரு மனிதனுக்குள் எப்படி வருகிற து என்றால்,உபத்திரவம் பொறுமை யையும், பொறுமை சோதனையை யும்,சோதனைநம்பிக்கையையும் உ ண்டாக்குகிறது என்று ரோமர் 5:3-ல் வாசிக்கலாம்.என்றைக்கு ஒரு மனி தனுக்குள் தேவனுடைய இரட்சிப்பு கடந்துவருகிறதோ,அன்றைக்கே அ வனுக்குள் தேவனைக் குறித்த ஒரு நம்பிக்கையும் விதைக்கப்படுகிற து.இதுஒவ்வொருநாளும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஊன்றக் கட்டப்படவு ம், அவருக்குள் வளரவும், அவருடை ய கிருபையை சார்ந்துவாழவும், பரி சுத்தத்தில் முன்னேறவும், போராட்ட ங்களை மேற்கொள்ளவும் பேருதவி யாயிருக்கிறது. இந்த நம்பிக்கை யானது ஒரு மனிதன் தன் ஆவிக்கு ரிய, உலகப்பிரகாரமான ஜீவியங்க ளில் முன்னேறவும், பிரகாசிக்கவும் செய்யுமே தவிர, ஒருபோதும் அவ னை வெட்கப்படுத்தாது (ரோம.5:5). எப்பேர்பட்ட நெருக்கடியான சூழ்நி லைகளிலும் கர்த்தர்மேல் நம்முடை ய நம்பிக்கையை உறுதியாய்வைத் திருக்கிறபடியினால்,கடந்த ஏழு மா தங்களும் அவர் நம்மைக் கைவிடா மல், சத்துருவின் இஷ்டத்திற்கு நம் மை ஒப்புக்கொடுக்காமல்,சகல தே வைகளின் மத்தியில் சம்பூரணமா ன பாதையிலே நடத்தி, நோயின் ஆ வேச அலைகள் நம்மேல் சீறாதபடிக் கு நம்மையும், நம் குடும்பத்தையும் அதிசயமாய்தப்புவித்து பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார்.*

    *பிரியமானவர்களே!உன் வாழ்க்கை யிலும் ஆண்டவர் மேல் வைத்திருக் கிறநம்பிக்கையை சீர்குலைக்க சத் துரு பலவழிகளில் போராடலாம்; அ திகமான மனச்சோர்வையும்,மன உ ளைச்சலையும் கொண்டு வந்து, உ ன்னை சோர்வடையப்பண்ணலாம். மனம்கலங்காதிருங்கள்! தேவன் உ னக்குத் தந்திருக்கிற விலையேறப் பெற்ற ஆவிக்குரிய ஈவுகளில் ஒன் று இந்த தெய்வீக நம்பிக்கை. இந்த நம்பிக்கை என்னும் அஸ்திபாரத்தி ன் மேல் உன் ஆவிக்குரிய ஜீவியம் கட்டி எழுப்பப்படுமானால், எப்பேர்ப ட்ட புயல் வந்தாலும்,கொடுங்காற்ற டித்தாலும்,அலைகள்கொந்தளித்து மோதினாலும் நீ ஒருநாளும் அசை க்கப்படுவதில்லை (சங்.18:2). அது மட்டுமல்ல, இனி வரப்போகிற மகி மையான அனுபவங்களுக்கு நேரா க உன்னை வழிநடத்தி, கிறிஸ்துவி ன் நியாயாசனத்துக்கு கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும், கிறிஸ் துஇயேசுவுக்காக வைராக்கியமாய் வாழ இந்த நம்பிக்கை உன்னை தூ ண்டிக்கொண்டேயிருக்கும். இந்த ந ம்பிக்கை உன் வாழ்க்கையிலே பெ ருகுமானால், நம்பிக்கையின் தேவ ன் சகலவிதஆனந்தமகிழ்ச்சியினா லும்,சமாதானத்தினாலும் உன்னை நிறைத்து ஆசீர்வதிப்பார். வருகிற புதியமாதத்திலும் தேவன்மேலே உ றுதியான நம்பிக்கையை வைத்து, உன் வாழ்க்கைக்கு முன்பாக இருக் கிற எல்லா சவால்களையும் தைரி யமாய் சந்திக்கவும்,எந்தவொரு துர் ச்செய்திகளைக் கண்டு கலங்காத படி உன் இருதயம் கர்த்தருக்குள் தி டமனதாயிருக்கவும் ஆவியானவர் உதவிசெய்வாராக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.