லெனோ எல். ரஸ்ஸல் Leno L. Russell
ஊர் : ஒஹாயோ (Ohio)
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இந்தியா
பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய நிருபங்கள் எழுத்துக்கள் ஒரு முக்கிய பகுதியாகும். பரிசுத்த வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்களை இன்றைக்கும் அவை தொடர்ந்து ஊக்குவித்தன. அதுபோலவே மிஷனரிகளின் சாட்சியங்களும் அவர்களின் எழுத்துக்களும், குறிப்பாக அவர்கள் எழுதிய கடிதங்களும் மிஷனரி பாரத்தை கொண்டிருக்க மற்ற விசுவாசிகளை பெரிதும் ஊக்குவித்தன. உலகெங்கிலும் உள்ள மிஷனரி பாரங்களை குறித்து கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்கும் 'மிஷனரி டைடிங்ஸ்' ('Missionary Tidings') என்ற இதழ் கூட மிஷனரி பாதையைத் தேர்வு செய்ய பல விசுவாசிகளுக்கு ஊக்கமளித்துள்ளது. அந்த மிஷனரிகளில் லெனோ ரஸ்ஸல் அவர்களும் ஒருவர்.
ஓஹியோவின் கார்பன் ஹில் என்ற ஊருக்கு அருகே ஒரு பண்ணையில் பிறந்த லெனோ ரஸ்ஸலின் ஆரம்பகால வாழ்கை தாழ்மையானதாக இருந்தது. ஒரு மிகச் சிறிய பள்ளியில் படித்த அவர், படிப்பு முடிந்த பிறகு அதே பள்ளியில் கற்பிக்க வந்தார். ஹிராம் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர தேவையான பணத்தை அவரே சம்பாதித்து 1914 இல் அக்கல்லூரியில் பட்டம் பெற்றார். லெனோ தனது குழந்தை பருவத்தில் கிறிஸ்துவின் செய்தியை எடுத்துக்கொண்டு இந்தியா செல்ல முடிவு செய்தார். அவர் அந்த சிறிய வயதில் மிஷனரி சேவையில் ஆர்வம் காட்டுவதற்கு 'மிஷனரி டைடிங்ஸ்' பத்திரிகையைப் படிப்பதே காரணம். எனவே, அந்த முடிவை உண்மையாக்க மிஷனரி சேவைக்கான பயிற்சிக்காக அவர் 'காலேஜ் ஆஃப் மிஷன்ஸ்' என்ற கல்லூரியில் சேர்ந்தார்.
1915 ஆம் ஆண்டில் இந்தியாவை அடைந்த லெனோ ரஸ்ஸல், கொஞ்ச காலம் உள்ளூர் மொழியைக் கற்பதற்காக நேரத்தை செலவிட்டார். 1916 ஆம் ஆண்டில், அவர் குல்பஹார் (Kulpahar) என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பெண்கள் மத்தியில் தீவிரமாக ஊழியம் செய்தார். அவரும் இன்னும் சில பெண்களும் ஒவ்வொரு நாளும் உள்ளூர் பெண்களை அவர்களின் வீடுகளில் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தியைப் அறிவித்தனர். பின்னர் அநேக ஆண்டுகள் பினாவில் (Bina) பணியாற்றிய லெனோ, அங்கேயும் பெண்களிடையே சுவிசேஷ ஊழியம் செய்வதில் ஈடுபட்டார். மேலும் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான பள்ளிகளை நிர்வாகம் பண்ணினார். தனது கடைசி நான்கு ஆண்டுகள் தாமோ (Damoh) என்ற ஊரில் ஊழியம் செய்த லெனோ, அங்கு விரிவான சுவிசேஷ ஊழியம் மற்றும் கல்வி சம்பந்தமான சேவைகளை மக்களுக்கு வழங்கினார்.
அவர் 1928 இல் அமெரிக்காவிற்குத் திரும்பினார். அங்கு அவர் இறையியலில் பல்வேறு பட்டபடிப்புகளைத் தொடர்ந்தார். மீண்டும் மிஷனரி சேவையை தொடர அவள் இதயம் மிகவும் வாஞ்சித்தாலும் அவருடைய உடல்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே அவர் அமெரிக்காவிலேயே இருந்து, அங்கு மாணவர்களுக்கும் பெண்களுக்கும் கற்பித்தல் மற்றும் பிரசங்கிப்பதில் அயராது உழைத்தார். குற்றவாளிகளான சிறுமை பெண்களை பற்றி மிகுந்த பாரத்தை கொண்டிருந்த அவர், அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்து வேதாகமத்தை கற்பிப்பதன் மூலம் அவர்களை நீதியான பாதையில் நிற்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டார். நித்திய ஜீவனைக் கண்டுபிடிக்க அங்குள்ள சிறுமிகளுக்கு உதவுவதில் மகிழ்ச்சியைக் கண்டார் லெனோ ரஸ்ஸல்.
பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை எங்கே பெற்றுக்கொள்ளுகிறீர்கள்?
"கர்த்தாவே, நான் மிஷனரிகளின் வாழ்க்கையைப் பாடங்களை படித்து, அவர்களைப் போலவே செயல்பட எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
லெட்டா மே பிரவுன் Leta Mae Brown
ஊர்: கன்சாஸ், அமெரிக்கா
நாடு: இந்தியா
தரிசன பூமி : இந்தியா
லெட்டா மே பிரவுன் கன்சாஸின் லின்ன் கவுண்டியில் உள்ள பார்க்கரில் பிறந்தார், அவர் தனது பள்ளி நாட்களில் பெரும்பாலான நேரங்களை கன்சாஸ் நகரில் செலவழித்தார். மிசோரி, கன்சாஸ் நகரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய மருத்துவமனை பயிற்சி பள்ளியில் தனது செவிலியர் பயிற்சியைப் பெற்றார், பின்னர் இரண்டு வருடங்கள் மிஷன்ஸ் கல்லூரியில் சிறப்புப் பயிற்சியில் இருந்தார். அவர் 1912 இல் இந்தியாவுக்கு வந்தார், அங்கு ஒரு வருட மொழி சிறப்பு ஆய்வில் செலவழித்த பிறகு பிலாஸ்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவப் பணியில் மருத்துவருக்கு உதவினார்.
மிஸ்.பிரவுனி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், இந்தியாவில் செவிலியர்களின் பயிற்சிக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார். இந்திய செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியின் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார், இது ஒரு மிகவும் கடினமான வேலையாக இருந்தது, ஆனால் அவள் தேவனுக்காக வேலை செய்வது போல் அழகாகவும் விடாமுயற்சியுடனும் தனது பணிகளைச் சிறப்பாக செய்தாள். அவர் தனது மருத்துவப் பணிகளில் மருத்துவர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் அதிக நேரம் செலவிட்டார். மிஷனரி நர்ஸாக இருந்த அவர், நோய்களை சரியாக கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் சிகிச்சையளிக்கும் திறமையையும் தாலந்தையும் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டார், இது ஒரு மருத்துவர் அங்கு இல்லாத சமயங்களில் தனது வேலையைச் சிறப்பாக செய்ய அவளுக்கு பெரிதும் உதவியது.
அவர் “டாமோ தேவாலயத்தில்” சபையின் பொறுப்பாளராக இருந்தார், அங்கு அவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றிய நாடகத்தை இயக்குவதில் தனது நேரத்தையும் சக்தியையும் செலுத்தினார். அவர் டாமோவில் உள்ள பல்வேறு தேவாலய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மற்றும் அவரது பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ள ஜனங்களின் ஆன்மீக நலனுக்காக உழைத்தார். குல்பஹாரில் தங்கியுள்ள கிறிஸ்தவ பெண்களுக்கான வீட்டின் பொறுப்பிலும் அவர் வைக்கப்பட்டார். லாஸ்டர், தனது சேவையின் மூன்றாவது பதவிக் காலத்தில், பெந்திரா சாலையில் உள்ள சிறுமிகளுக்கான ஒரு தொழிற்கல்விப் பள்ளியின் பொறுப்பில் வைக்கப்பட்டார், அங்கு செவிலியர்களின் பயிற்சியைப் பெறுவதற்கு சிறுமிகளின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். பள்ளி செயல்பாடுகளைத் தவிர, குழந்தைகளின் ஆவிக்குரியத் தேவைகள் மற்றும் சுவிசேஷ வேலைகளிலும் அவர் கவனம் செலுத்தினார். தனது நண்பருடன் சேர்ந்து, கிராமங்களுக்குச் சென்று பாடுவதற்கும், கதைகளைச் சொல்வதற்கும், வேதங்களின் பிரதிகள் மற்றும் பிற கிறிஸ்தவ இலக்கியங்களை விற்பனை செய்வதற்கும் தவறாமல் கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்ய ‘சுமன்கேட்டன் சாட்சிக் குழு‘(Sumankhetan Witness Band)’’ ஒன்றை ஏற்பாடு செய்தார்.
தனது மருத்துவ மிஷெனரி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் இந்தியாவை பற்றியும் மற்றும் இந்தியாவில் நடைபெறும் மிஷெனரி பணிகளைப் பற்றியும் அமெரிக்க மக்களுக்கு தனது எழுத்துகளின் மூலமாகத் தெரியப்படுத்தினார். மேலும் ஓய்வெடுக்காத தேவனுடைய வேலைக்காரியாக தன் நேரம், ஆற்றல் மற்றும் திறமைகளை எல்லாம் கிறிஸ்துவின் வேலைக்காகப் பயன்படுத்தினான்.
பிரியமானவர்களே, நமது நேரத்தையும் ஆற்றலையும் திறமைகளையும் நாம் எவ்வாறு செலவிடுகிறோம்?
"ஆண்டவரே, உங்கள் ராஜ்யத்திற்காக என் நேரம் ஆற்றல் மற்றும் திறமைகளை சிறப்பாகப் பயன்படுத்த எனக்கு உதவி செய்யும், ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
லூயிஸ் ஜம்பெரினி Louis Zamperini
மண்ணில்: 26.01.1917
விண்ணில்: 02.07.2014
ஊர்: நியூயார்க், அமெரிக்கா
நாடு: அமெரிக்கா
தரிசன பூமி : ஜப்பான்
லூயிஸ் ஸாம்பெரினியின் வாழ்க்கை இயேசு கிறிஸ்துவின் வல்லமை ஒரு மனிதனை பரிபூரண மனிதனாக மாற்ற வலிமையுள்ளது என்பதற்கு சான்றாக நிற்கிறது. லூயிஸ் ஒரு அமெரிக்க போர் விமான பைலட். மற்றொரு தொலைந்த அமெரிக்க விமானத்தைத் தேடும் மீட்புப் பணியின் போது, அவரது சொந்த விமானம் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அவர் ஒரு மீன்பிடி படகில் 47 நாட்கள் தப்பிப்பிழைத்தார், மீன் சாப்பிட்டார் மற்றும் மழைநீர் குடித்தார். இறுதியாக, அவர் ஒரு ஜப்பானிய ரோந்துப் படகால் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் அமெரிக்க விமானப்படையை சார்ந்தவர் என்பதை அறிந்த ஜப்பானியர்கள் அவரை சிறையில் அடைத்து இரண்டு வருடங்கள் கொடூரமாக சித்திரவதை செய்தனர்.
கடலில் 47 நாட்களில், ஜம்பெரினி தேவனை நோக்கி “ஆண்டவரே! நான் பிழைத்தால் உமக்காக பணிசெய்வேன் என்று மீண்டும் மீண்டும் தேவனிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் ஜப்பான் சிறையில் இருந்து திரும்பிய பிறகு, அவர் தனது வாக்குறுதியை மறந்துவிட்டார். மீண்டும் அமெரிக்காவில், சில வருடங்களுக்குப் பிறகு, அதே ஜப்பானிய சார்ஜெண்டை அவர் தினமும் கொடுமைப்படுத்தி துன்புறுத்தி அடித்தார். அவர் கோபத்தால் நிரப்பப்பட்டதினால், அவரை மன்னிக்க முடியவில்லை. தேவன் மறக்கப்பட்டார், அவரைத் துன்புறுத்தும் நபரைக் கொல்லும் எண்ணங்கள் அவரது இதயத்தில் உதித்தன. இத்தகைய எண்ணங்கள் படிப்படியாக அவரது ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் அழித்தன.
ஒரு நாள், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பில்லி கிரஹாம் கிறிஸ்தவ கருத்தரங்கில் கலந்து கொள்ள அவரது மனைவி அவரை அழைத்தார். அங்கு, பல வருடங்களுக்குப் பிறகு, ஸம்பேரினி கிறிஸ்துவுக்கு அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தார். அவர் முன்னோக்கிச் சென்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார், அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய அதிசயம் தொடங்கப்பட்டது. அவர் தனது எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் முன்பு வெறுத்த நூற்றுக்கணக்கான ஜப்பானிய வீரர்களுக்கு, கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியையும் அறிவிக்க, அன்பும் அற்பணிப்புமான இதயத்துடன் ஜம்பெரினி ஜப்பானுக்குத் சென்றார். அவர் தனது நம்பிக்கையை உலகம் முழுவதும் பகிர்ந்து கொண்டார், பல பில்லி கிரஹாம் கிறிஸ்தவ கருத்தரங்கில் தேவனால் பயன்படுத்தப்பட்டார். கடைசி வரை, அவர் தனது ஊழியத்தின் மூலம் கிறிஸ்துவின் அன்பை தொடர்ந்து பிரதிபலித்தார்.
ஜாம்பெரினியின் வாழ்க்கை தேவனின் கிருபை இல்லையென்றால், பாவத்தை வெல்ல மனித சக்தியால் முடியாது என்பதை நமக்கு கற்றுகொடுக்கிறது. கடலிலும் சிறையிலும் அவரை உயிரோடு வைத்திருந்த அவரது உயிர் உள்ளுணர்வுகள் அவருடைய பாவ இயல்பை சமாளிக்க அவருக்கு எந்த உதவி செய்யமுடியவில்லை. ஆனால், கிறிஸ்துவின் வல்லமை அவரை முற்றிலும் நல்ல மனிதனாக மாற்றினது!
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் உங்களை மாற்றும் கிறிஸ்துவின் வல்லமையை உணருகிறீர்களா?*
"ஆண்டவரே, என்னை வெறுப்பவர்களை, நான் மனதார நேசித்து அவர்கள்மேல் அன்புசெலுத்தும் நல்ல இருதயத்தை எனக்கு தாரும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
Thanks for using my website. Post your comments on this