Type Here to Get Search Results !

ஜோசப் வான் சோமரன் டெய்லர் | Samuel Fairbank | Ten Missionary's Life History in Tamil | 10 மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

ஜோசப் வான் சோமரன் டெய்லர் - Joseph van Someran Taylor | ராபர்ட் காட்டன் மாதர் - Robert Cotton Mather | ஹான்ஸ் பலுடன் ஸ்மித் ஷ்ரூடர் - Hans Paludan Smith Schreuder | சாமுவேல் பேக்கன் ஃபேர்பேங்க் - Samuel Fairbank | ஃபிரான்சிஸ் டன்லாப் கேம்வெல் - Francis Dunlap | மோசஸ் கிளார்க் ஒயிட் - Moses Clark White | மிரான் வின்ஸ்லோ - Miron Winslow | தாமஸ் ஜோன்ஸ் - Thomas Jones | எர்னஸ்ட் ஆலிவர் - Ernest Oliver | காளி சரண் சாட்டர்ஜி - Kali Charan Chatterjee
====================
ஜோசப் வான் சோமரன் டெய்லர் - Joseph van Someran Taylor
===================
மண்ணில் : 03.07.1820
விண்ணில் : 02.06.1881
ஊர் : பெல்லாரி
நாடு : இந்தியா
தரிசன பூமி : குஜராத், இந்தியா

'குஜராத்தி மொழி இலக்கணத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் ஒரு குஜராத்தியோ, இந்தியரோ அல்ல, ஒரு ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அவர் பெயர் ஜோசப் வான் சோமரன் டெய்லர். குஜராத்தி மக்களிடையே கிறிஸ்தவ மிஷனரி பணிகளுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அவர் அறியப்படுகிறார். கர்நாடகாவின் பெல்லாரியில் ஊழியம்புரிந்த ஒரு முன்னோடி மிஷனரி தம்பதியருக்கு அவர் பிறந்தார். கல்கத்தாவில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, டெய்லர் தனது படிப்பைத் தொடர இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் தன் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய டேவிட் லிவிங்ஸ்டோனுடன் நட்பு கொண்டார். அவர் 1843ஆம் ஆண்டு கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதே ஆண்டில், லண்டன் மிஷனரி சொசைட்டி அவரை மிஷனரி சேவைக்காக ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் குஜராத்தில் பணியாற்ற அனுப்பியது.

1846ஆம் ஆண்டு, டெய்லர் பரோடாவை வந்தடைந்தார். அங்கு அவர் மற்றொரு லிவிஷி மிஷனரி வில்லியம் கிளார்க்சன் என்பவரை சந்தித்தார். இருவரும் இணைந்து குஜராத்தின் மஹி காந்தா பகுதிக்கு சென்று ஊழியப் பணியை துவக்கினர். இயல்பிலேயே டெய்லர் ஒரு அன்பான உள்ளம் கொண்டவராகவும், நற்செய்தியின் சிறந்த வல்லாயராகவும் திகழ்ந்தார். அவர் இந்து, முஸ்லீம் மற்றும் பார்சி சமூகத்தினரிடையே நண்பர்களை சம்பாதித்து, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிமுகப்படுத்தினார். அவர் விரைவில் குஜராத்தி மொழியைக் கற்று அதில் அதில் சுவிசேஷக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். மனித மனப்பான்மையைக் கூர்மையாகப் புரிந்து கொண்டு, மத விவாதங்களைக் காட்டிலும் கற்றறிந்த சமூகங்களுக்கு எழுத்து மூலம் நற்செய்தியை அறிமுகப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்தார். அவர் குஜராத்தி இலக்கணத்திலும் பூரணமடைந்து, 'குஜராத்தி பாஷானு வியாகரன்' (குஜராத்தி மொழியின் இலக்கணம்) என்ற பதிப்பை வெளியிட்டார்.

குஜராத்தியில் சரளமாக இருந்ததால், இப்போது வில்லியம் கேரி செய்த குஜராத்தி வேதாகம மொழிபெயர்ப்பைத் திருத்துவதை நோக்கமாய்க் கொண்டார். இந்த நேரத்தில், அவர் எல்எம்எஸ் நிதியுதவியின் ஆதரவை இழந்தாலும், குஜராத்தி மக்கள் மீதான அவரது அன்பு அவரை ஊழியராகத் தொடரத் தூண்டியது. 1861ஆம் ஆண்டு, டெய்லர் குஜராத்தி வேதாகமத்தின் மொழிபெயர்ப்பைத் திருத்தி முடித்தார். அவருடைய மொழிபெயர்ப்பு இன்றும் நிலையான பதிப்பாக உள்ளது. அவரது குஜராத்தி கீர்த்தனைகள் மொழியில் மிகவும் வளம்வாய்ந்தபடியால், அவர் "குஜராத்தி செய்யுளின் தந்தை" என்ற பெயரையும் பெற்றார். அவர் செய்த பல கிறிஸ்தவ புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் குஜராத்தில் இன்றும் அநேகரின் வாழ்வில் ஒளியேற்றுகின்றன.

    பிரியமானவர்களே, உங்கள் ஊழியத்தில் நீங்கள் அதிகமாக தேவனை சார்ந்திருக்கிறீர்களா அல்லது மனித நிதியை சார்ந்திருக்கிறீர்களா? 

    “கர்த்தாவே, மற்றவர்களிடமிருந்து நான் பெறும் ஆதரவைப் பொருட்படுத்தாமல், உம் மீது சாய்ந்து, பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்ற நீரே எனக்கு உதவிபுரியும். ஆமென்!'

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


=======================
ராபர்ட் காட்டன் மாதர் - Robert Cotton Mather
========================
மண்ணில் : 08.11.1808
விண்ணில் : 21.04.1877
ஊர் : நியூ விண்ட்சர்
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இந்தியா

ராபர்ட் காட்டன் மாதர் என்பவர், வட இந்தியாவில் தனது ஊழியத்திற்காகவும், உருது வேதாகம மொழிபெயர்ப்பைத் திருத்தியதற்காகவும் அறியப்படும் ஒரு ஐரோப்பிய மிஷனரியாவார். அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து, யார்க் என்னும் ஊரில் உள்ள ஒரு திருச்சபையில் ஊழியம் செய்யத் துவங்கினார். இந்நேரத்தில், லண்டன் மிஷனரி சொசைட்டி மூலம் இந்தியாவில் பனாரஸ் என்னும் ஊரில் ஊழியம்புரியும் வாய்ப்பைப் பெற்றார். எலிசபெத் செவெல் என்ற பெண்மணியை மணமுடித்த ஒரே வாரத்தில், மாதர் ஜூன் 1833 அன்று இந்தியாவிற்கு புறப்பட்டுச்சென்றார்.

மாதர் கல்கத்தாவில் உள்ள யூனியன் சிற்றாலயத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். பின்னர் 1834ஆம் ஆண்டு பனாரஸ் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் ஊழியம் செய்து, ஹிந்துஸ்தானி மற்றும் உருது மொழிகளில் தேர்ச்சி பெற்றார். 1838ஆம் ஆண்டு, அவர் மிர்சாபூரில் ஒரு புதிய ஊழிய நிலையத்தை நிறுவினார். அவரது உடல், இந்தியாவின் வெப்பமான காலநிலைக்கு ஒத்துப் போகாதப்போதிலும், அவர் உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் தீவிர பயண ஊழியம் செய்தார். அவர் தன்னுடன் சேர்ந்து சிறந்த சுவிசேஷ ஊழியம் செய்த, மிர்சா ஜான் மற்றும் ஜான் ஹுசைன் என்ற இரண்டு இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்கென ஆதாயப்படுத்தினார். - ஹிந்துஸ்தானி மற்றும் உருது மொழிகளில் இருவரும் சிறந்து விளங்கியதால், மாதர் தனது மனைவி எலிசபெத்தின் ஆதரவுடன், இலக்கிய ஊழியத்தை ஆரம்பித்தனர். அவர் ஒரு உள்ளூர் மொழியில் செய்தித்தாள் ஒன்றை வெளியிடத் தொடங்கி, அதை நற்செய்தி விவாதங்களின் ஊடகமாய் திறம்பட பயன்படுத்தினார். செய்தித்தாள் ஊழியம் மகத்தான வெற்றியைக் கண்டதால், உருது வேதாகமத்தின் மொழிபெயர்ப்பைத் திருத்துவதற்கு அவருக்கு ஊக்கமளித்தது. இந்த மொழிபெயர்ப்பிற்காக, கிரேக்க மொழியில் இருந்து உருதுவிற்கு நேரடியாக வேதாகமத்தை மொழிபெயர்க்க கிரேக்க மொழியையும் மாதர் கற்றுக்கொண்டார். 1860ஆம் ஆண்டு வாக்கில், அவர் உருது மற்றும் இந்துஸ்தானி வேதாகம மொழிபெயர்ப்புகளை முழுமையாய் மாற்றியமைத்தார். புதிய ஏற்பாட்டைப் பற்றிய, அவரது இந்தி மொழி விளக்கவுரைகள் இன்றும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

மாதர் மிர்சாபூரில் பள்ளிகள், திருச்சபைகள், ஆதரவு இல்லங்கள் மற்றும் அச்சகம் ஒன்றையும் கட்டினார். திருமதி மாதர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் வீடுகளுக்கேச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்பித்தார். 1870களின் முற்பகுதியில், மாதர் மிகவும் பலவீனமடைந்தார், இருப்பினும் இளைய ஊழியர்களுக்கு ஊழியத்தைத் தொடர பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்தார். 1873 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய மாதர், 1877ஆம் ஆண்டு நித்திய சமாதானத்திற்குள் கடந்துச் செல்லும் வரை, இலக்கிய ஊழியத்தைத் தொடர்ந்தார். 1878ஆம் ஆண்டு, திருமதி மாதர் தனது அன்பான மிர்சாபூருக்குத் திரும்பி, 1879ஆம் ஆண்டு தனது பரலோக வீட்டிற்குச் செல்லும் வரை தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.

    பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய நீங்கள் தேவஜனத்தை ஸ்திரப்படுத்துகிறீர்களா? 

    “கர்த்தாவே, என் சரீர பெலவீனங்களைச் மேற்கொள்ளவும், எவ்விதமான சாக்குபோக்குச் சொல்லாமல் உமக்கு சேவை செய்யவும் எனக்கு பெலன் தாரும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


====================================
ஹான்ஸ் பலுடன் ஸ்மித் ஷ்ரூடர் - Hans Paludan Smith Schreuder 
====================================
மண்ணில் : 1817
விண்ணில் : 27.01.1882
ஊர் : சோகன்டால்
நாடு : நார்வே
தரிசன பூமி : ஜூலூலாண்து, ஆப்பிரிக்கா

ஹான்ஸ் பலுடன் ஸ்மித் ஷ்ரூடர் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜூலூலாண்தில் ஊழியம்புரிந்த, ஒரு நோர்வே மிஷனரியாவார். மிஷனரி பணியை ஒரு 'அழைப்பு' என்பதை விட ஒரு கிறிஸ்தவ 'கடமை' என்று எண்ணி, ஷ்ரூடர் தனது இறையியல் பயிற்சியின் போது மிஷனரி பணியில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது கல்விப் பணியின் ஒரு பகுதியாக, உறங்கிக்கிடக்கும் மற்றும் தன்னிறைவுடைய திருச்சபைகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும், புறமதத்தாரின் இரட்சிப்பில் அக்கறை கொள்ளவும் அவர்களை ஊக்குவிக் அவர் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். அவரது ஆய்வுக் கட்டுரை 1842ஆம் ஆண்டு நோர்வே மிஷனரி சொசைட்டி (என்.எம்.எஸ்.) உருவாகுமளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

என்.எம்.எஸ்.இலிருந்து ஆப்பிரிக்கா சென்ற முதல் மிஷனரி ஷ்ரூடர் ஆனார். 1844ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று, ஷ்ரூடர் டர்பன் என்ற ஊரை சென்றடைந்தார். ஜூலுலாந்திற்குள் நுழைவதற்கான அவரது ஆரம்ப முயற்சிகள் பலனளிக்கவில்லாததால், ஊழியத்தை நிறுத்திவிட்டு ஹாங்காங்கிற்குச் செல்ல நினைத்தார். ஆனால் திடீரென்று உள்ளூர் மன்னர் ம்பாண்டே தனது நோயைக் குணப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அந்த சம்பவம் ஜூலுலாந்திற்கான காதவனுகள் திறக்கப்பட்டன. இப்போது, குணமடைந்த மன்னர் ஷ்ரூடருக்கு தேவாலயம் கட்ட நிலத்தை வழங்கினார். படிப்படியாக அவர் அந்த பிராந்தியத்தில் 10 ஊழிய நிலையங்களை நிறுவினார்.

சுவிசேஷத்தை பரப்புவதற்கு சமூக மற்றும் அரசியல் சூழலை ஒரு முக்கிய காரணியாக ஷ்ரூடர் கருதினார். எனவே, நட்டாலிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் ஜூலுலாந்தின் மன்னர் மபாண்டேவிற்கும் இடையே அமைதியான உறவைப் பேணுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் மிஷனரிகள் தனது நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பிய செட்ஷ்வாயோ மன்னராக ஏறிய பிறகு, உறவில் அழுத்தம் ஏற்பட்டது, இறுதியில், ஒரு போர் வெடித்தது. இந்த நேரத்தில், ஷ்ரூடர் இரு தரப்பினருக்கும் தனது சேவைகளை வழங்கினார் மற்றும் கணிசமான காலத்திற்கு அமைதியைப் பேணுவதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், மிஷனரிகளை தன் நாட்டை விட்டு வெளியேற விரும்பிய, செட்ஷ்வாயோ என்பவர் மன்னனாய் முடிசூட்டப்பட்டதும், உறவுகளில் சேதமடைந்து, நாளடைவில் ஒரு போர் வெடித்தது. இந்நேரத்தில், ஷ்ரூடர் இரு தரப்பினருக்கும் தனது சேவைகளை வழங்கி, கணிசமான கால அளவிற்கு சமாதானத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஷ்ரூடர் ஜூலு மொழியின் முதல் முழுமையான இலக்கண புத்தகத்தை வெற்றிகரமாய் எழுதினார். அவர் புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் சங்கீதங்களையும் ஜூஜூலு மொழிக்கு மொழிபெயர்த்தார். "மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு" (ரோமர் 15:21) என்ற வேதவசன கொள்கையை கண்டிப்பாக கடைபிடித்த தேவனுடைய தாழ்மையான தாசன், தனது கடைசி மூச்சு வரை ஜூலுலாந்தில் தேவனுடைய ராஜ்யத்தை மேம்படுத்த அயராது உழைத்தார்.

    பிரியமானவர்களே, நற்செய்தியைத் ஏந்திச்செல்வது உங்கள் கடமை என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? அல்லது நீங்கள் இன்னும் அழைப்பிற்காக காத்திருக்கிறீர்களா?

    “கர்த்தாவே, உறங்கிக்கிடக்கும் மற்றும் தன்னிறைவுடைய திருச்சபைகளை மீண்டும் உயிர்ப்பிக்க, என்னை ஒரு கருவியாய்ப் பயன்படுத்தும். ஆமென்!" 

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


==========================
சாமுவேல் பேக்கன் ஃபேர்பேங்க் - Samuel Fairbank
============================
மண்ணில் : 14.12.1822
விண்ணில் : 31.05.1898
ஊர் : ஸ்டாம்ஃபோர்ட்
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : வடலா, இந்தியா

சாமுவேல் பேக்கன் ஃபேர்பேங்க் என்பவர், இந்தியாவில் உள்ள அமெரிக்க மராத்தி மிஷனுடன் இணைந்திருந்த ஒரு அமெரிக்க மிஷனரி, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராவார். அன்டோவர் இறையியல் கல்விக்கழகத்தில் தனது படிப்பின் போது, தனக்கு ஒரு மிஷனரி அழைப்பு உன்டு என்று உறுதியாய் நம்பினார். அவர் 1845ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழியத்திற்காக அமெரிக்கன் போர்டு ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்ஸால் (வெளிநாட்டு ஊழியத்திற்கான அமெரிக்க ஆணையர் வாரியம்) நியமணம் செய்யப்பட்டார்.

ஃபேர்பேங்க், தனது மனைவியுடன் 1846ஆம் ஆண்டு பம்பாய் வந்தடைந்த உடனே, அச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அங்கு அவர் மராத்தி வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு, திருத்தம் மற்றும் அச்சிடுதல் ஆகியவற்றை மேற்பார்வையிட்டார். அவர் மராத்தி கிறிஸ்தவ துண்டுப்பிரதிகளை எழுதத் துவங்கி அவற்றை விநியோகித்தார். ஊழியம் முன்னேறிகொண்டிருந்தபோது, அவரது மனைவி ஆபி ஆலன் நோய்வாய்ப்பட்டு 1852ஆம் ஆண்டு மரித்தார். அதே நேரத்தில், அச்சகத்தை நிர்வகிக்க போதுமான ஆட்கள் இல்லாததால் அச்சு இயந்திரமும் பிரித்து கழற்றிவைக்கப்பட்டது. ஃபேர்பேங்க் கேள்விகளாலும், சந்தேகங்களாலும் நெருக்கப்பட்டார். |

அவர் ஒரு சுருக்கமான விடுமுறையெடுத்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். ஆனால் 1857ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் வாக்குத்தத்தத்துடனும் ஊழியத்திற்குத் திரும்பினார். அவர் பம்பாய்க்கு அருகிலுள்ள வடலா என்ற கிராமத்தில் ஒரு ஊழிய பணித்தளத்தை நிறுவி, மஹர் சமூகத்தினரிடையே ஊழியம் செய்யத் துவங்கினார். இந்தச் சமூகத்தினர் அப்போது தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, உயர்சாதி மக்களின் கொடுமைகளுக்குஆளாயினர். ஆனால், ஃபேர்பேங்க் அவர்களை நேசித்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி, நாகரீகமாக வாழக் கற்றுக் கொடுத்து, இவை அனைத்திற்கும் மேலாக அவர்களை நீதியின் பாதையில் நடத்திச் சென்றார். அவர் வடலாவைச் சுற்றியுள்ள 82 கிராமங்களுக்கு மாட்டு வண்டியிலேயே பயணம் செய்தார். இப்பயணத்தின் போது அந்த மாட்டு வண்டியே அவரது படுக்கையறையாகவும், சமையலறையாகவும் மற்றும் சேமிப்பு அறையாகவும் இருந்தது.

நற்செய்தியைக் கேட்க மக்களை ஈர்ப்பதற்காக, ஃபேர்பேங்க் நவீன யோசனைகளைப் பயன்படுத்தினார். அவர் ஒரு "மாய விளக்கு" (பிம்ப வீழ்த்தி) ஒன்றை எடுத்துச் சென்று மக்களுக்கு, வேதாகமக் கதைகளின் விளக்கப்படங்களைக் காட்டினார். அவர் உள்ளூர் நாட்டுப்புற பாடல்களை (கீர்த்தனைகள்) தத்தெடுத்து, அவற்றை சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்த ஒரு சாதனமாகப் பயன்படுத்தினார். கிறிஸ்தவ இலக்கியம் மட்டுமல்லாமல், ஃபேர்பேங்க் மராத்தி இலக்கணம் பற்றிய புத்தகம் உட்பட பல பள்ளி புத்தகங்களையும் எழுதினார். அவர் உள்ளூர் மக்களுக்கு நவீன விவசாய நடைமுறைகளை கற்றுக்கொடுத்து அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவினார்.

நல்ல நகைச்சுவை மற்றும் நேர்மை, அசைக்கமுடியாத சமாதானம் மற்றும் சிறந்த ஒத்துணர்வைக் கொண்டிருந்த ஃபேர்பேங்க், 52 ஆண்டு காலம் முன்மாதிரியான ஊழியத்திற்குப் பிறகு இயேசுபாதம் சென்றடைந்தார்.

    பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் வாக்குத்தத்தங்களைக் கொண்டு உங்கள் பின்னடைவுகளை வெற்றிகரமான திருப்புமுனைகளாக மாற்றுகிறீர்களா? 

    “கர்த்தாவே, உமது வாக்குத்தத்தங்களின் மீது சாய்ந்துகொண்டு, ஒவ்வொரு
பின்னடைவையும் தாண்டி உயர எனக்கு தயைசெய்யும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


====================
 ஃபிரான்சிஸ் டன்லாப் கேம்வெல் - Francis Dunlap
====================
மண்ணில் : 31.08.1857
விண்ணில் : 14.08.1950
ஊர் : கேம்டன்
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : சீனா

ஃபிரான்சிஸ் டன்லாப் கேம்வெல் என்பவர், தனது அசாதாரண தைரியத்தின் காரணமாக "பாக்சர் கிளர்ச்சியின் வீரவான்" என்று அழைக்கப்படும் ஒரு மெதடிஸ்ட் மிஷனரியாவார். அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடப் பொறியியல் படிக்கத் தொடங்கியபோது, தேவன் அவரை சில அசாதாரணமான காலங்களுக்கு ஆயத்தப்டுத்துகிறார் என்பதை அவர் அறியாதிருந்தார். சிறிது காலம், ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு, சீனாவில் கல்வி கற்பிக்கும் ஒரு வாய்ப்பு உற்சாகமூட்டுவதாய் விளங்கியது. அமெரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் மிஷன்ஆல் பீக்கிங் என்னும் ஊரில் பணியாற்ற அவர் நியமிக்கப்பட்டார்.

கேம்வெல் 1881ஆம் ஆண்டு சீனா தேசத்தை வந்தடைந்தார். விரைவில் மேற்கு சீனா ஊழியத்தின் பொறுப்பாளரானார். இச்சமயத்தில், கிறிஸ்தவத்தை பரப்பியதற்காக, ஒரு சீன கும்பலால் 16 நாட்கள் பணையக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார். எப்படியோ, பணையக்கைதியாக இருந்த கேம்வெல் மற்றும் அவரது மனைவி தப்பி அமெரிக்கா திரும்பினர். ஆனால் கேம்வெல் 1889ஆம் ஆண்டு சீனாவுக்குத் சீனாவுக்குத் திரும்பி திரும்பி யென்சிங் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இந்நேரத்தில் தான் "பாக்சர் கிளர்ச்சி"எழும்ப ஆரம்பித்தது. கிளர்ச்சியாளர்கள் வெளிநாட்டினர் மற்றும் சீன கிறிஸ்தவர்கள் மீது துளியும் இரக்கம் காட்டாத நேரம் அது.

ஜூன் 5, 1900 அன்று, இக்கிளர்ச்சியின் காரணமாக, கேம்வெல் சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டார். ஆனால் அவர் ஏற் இருந்த ரயில் கிளர்ச்சியாளர்களால் அழிக்கப்பட்டது. எனவே, அவர் பணி வளாகத்திற்குத் திரும்புவதைத் தவிர வேறுவழி இல்லாமல் போயிற்று. அவருடன் மேலும் 80 மிஷனரிகள் பெய்ஜிங்கில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் நிச்சய மரணத்தை எதிர்கொண்டிருந்தனர். அந்தக் கணத்தில், தேவன் ஏன் அவரை கட்டடப் பொறியியல் கற்க அனுமதித்தார் என்பதை கேம்வெல் அறிந்தார்.

கிளர்ச்சியாளர்கள் இன்னும் பெய்ஜிங்கை வந்தடையாத நிலையில், கேம்வெல் மிஷன் வளாகத்தை அரணிப்பானதாக்கத் தொடங்கினார். அவர் எதிரிகளை விலக்கி வைப்பதற்காக தடுப்புகளை உருவாக்கி, அகழிகளை தோண்டவும் தொடங்கினார். அவரது துணைவியார் பெய்ஜிங்கில் மற்ற கிறிஸ்தவர்களை கூட்டிச்சேர்த்தார். வளாகத்தில் 900 வெளிநாட்டவர்களும் 2800 சீன கிறிஸ்தவர்களும் தஞ்சம் புகுந்தனர். ஜூன் 22 அன்று சீனத் தாக்குதல் தொடங்கியது. கேம்வெல் கட்டிய கோட்டைகள் மிகவும் வலுவாக இருந்ததால், 55 நாட்கள் முற்றுகையின் போதிலும் அந்த கோட்டைகளுக்குள் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர்.

தாக்குதல்கள் படிப்படியாக குறைந்தபடியால், கேம்வெலும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 21, 1900 அன்று பெய்ஜிங்கை விட்டு வெளியேறி அமெரிக்காவை சென்றடைந்தனர். அவர் 1909ஆம் ஆண்டு சீனாவிற்கு திரும்பி, மேலும் 12 ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!

    பிரியமானவர்களே, உங்கள் கல்வி அறிவை தேவனுடைய சேவைக்காக பயன்படுத்துகிறீர்களா?

    “கர்த்தாவே, உமது ராஜ்ஜியத்தை மேம்படுத்த என் அறிவையும் ஞானத்தையும் பயன்படுத்த எனக்கு உதவிபுரியும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


=====================
மோசஸ் கிளார்க் ஒயிட் - Moses Clark White
====================
மண்ணில் : 24.07.1819
விண்ணில் : 24.10.1900
ஊர் : ஒநைடா கவுண்டி
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : சீனா

மோசஸ் கிளார்க் ஒயிட் என்பவர், அமெரிக்க மெதடிஸ்ட் திருச்சபையிலிருந்து இருந்து சீனாவிற்கு சென்ற ஒரு முன்னோடி மருத்துவ மிஷனரியாவார். ரெவரெண்ட் ஸ்டீபன் ஒலின் அவர்களின் பிரசங்கத்தால் தாக்கமடைந்த ஒயிட், மிஷனரி பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். 1845ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, ரெவரெண்ட். ஒலினின் வழிகாட்டுதலின் கீழ் மருத்துவம் மற்றும் இறையியல் படிப்பதற்காக யேல் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் செலவிட்டார். இந்நேரத்தில், அவர் அருகிலிருந்த நகரமான மில்ஃபோர்டிலும் பிரசங்கித்தார்.

மார்ச் 13, 1847 அன்று கிளார்க் தன்னை போலவே மிஷனரி அழைப்பு கொண்டிருந்த ஜேன் என்பவரை மணமுடித்தார். 1847ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அவர்கள் இருவரும் சேர்ந்து சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஐந்து மாத கடினமான பிரயாணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 7. 1847 அன்று ஃபுஹ் சாவ் என்ற ஊரை சென்றடைந்தனர். பெண்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் பரவியிருந்த ஓபியம் அடிமைத்தனத்தைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவ்விடம் கொடும் வறுமை, குற்றச்செயல்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய சூழ்நிலைகளில், ஒயிட் நற்செய்தியைப் பரப்பத் தொடங்கினார்.

தனது மருத்துவ அறிவைக் கொண்டு, ஒயிட் ஓபியம் போதைப்பொருளின் நச்சு விளைவுகளுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினார். போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, அவர் சிறிய பள்ளிகளைத் திறந்து மக்களுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில், அவர் உள்ளூர் ஃபுஹ் சாவ் பாஷையைக் கற்றுக்கொண்டார் மற்றும் சில பாடல்களை மொழிபெயர்த்தார். அவர் மத்தேயு நற்செய்தியை உள்ளூர் பாஷையில் மொழிபெயர்த்தார்.

படிப்படியாக சமுதாய மாற்றம் ஏற்பட்டாலும், யாரும் கிறிஸ்தவர்களாகவில்லை. ஆனால் முடிவுகளால் ஒயிட் ஏமாற்றமடையாமல், அவர் எதற்கு அழைக்கப்பட்டாரோ அதையேத் தொடர்ந்து செய்தார். மேலும், அவரது ஊழியம் எந்த எதிர்ப்பும் இல்லாத ஒன்றாக இல்லை. ஒருமுறை அவர் ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். வெளிநாட்டினருக்கு எதிரான மனப்பான்மை விளைவாக, அவர் வாங்கும் நிலங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. சீனாவுக்கு வந்த 3 ஆண்டுகளிலேயே ஆண்டுகளிலேயே மனைவியை இழந்தார். ஆயினும்கூட, அவர் ஏழு ஆண்டுகள் ஃபுஹ் சாவில் தொடர்ந்து ஊழியத்தில் இருந்தார்.

இருப்பினும், ஒயிட் உடல்நலக்குறைவு காரணமாக நியூயார்க்கிற்கு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் அவரது கடின உழைப்பு வீண் போகவில்லை. மற்றவர்கள் அவருடைய அடிச்சுவடுகளை ஃபுஹ் சாவுக்குப் பின்தொடர்ந்து. அவரால் போடப்பட்ட அஸ்திவாரத்தின் மீது தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டினார்கள். நியூயார்க்கில், அவர் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் அதே நேரத்தில் ஒரு மெதடிஸ்ட் தேவாலயத்தில் குருவாகவும் பணியாற்றினார்.

    பிரியமானவர்களே, போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களின் இரட்சிப்புக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

    "கர்த்தாவே, முடிவுகளால் ஏமாற்றமடையாமல், நீர் கொடுத்த பொறுப்பில் உண்மையாய் இருக்க எனக்குஉதவியருளும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


====================
மிரான் வின்ஸ்லோ - Miron Winslow
=====================
மண்ணில் : 11.12.1789
விண்ணில் : 22.10.1864
ஊர் : வெர்மான்ட்
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இலங்கை மற்றும் இந்தியா

மிரோன் வின்ஸ்லோ என்பவர், சிலோனில் (இலங்கை) தனது ஊழியத்திற்காகவும், தமிழ் வேதாகமத்தின் திருத்தத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காகவும் அறியப்படும் ஒரு அமெரிக்க மிஷனரியாவார். 1811ஆம் ஆண்டு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, வின்ஸ்லோ சுவிசேஷத்தை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பொறுப்பாகக் கருதினார். அவர் இறையியல் பயிற்சிக்காக ஆண்டோவர் இறையியல் கல்விக்கழகத்திற்கு சென்று 1815ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அவர் தனது விடுமுறையில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுப் பணிகளுக்காக நிதி திரட்டினார். அமெரிக்கன் போர்டு ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்ஸ் (வெளிநாட்டு ஊழியத்திற்கான அமெரிக்க ஆணையர் வாரியம்) இளம் வின்ஸ்லோவின் அனற்பொறியைக் கண்டறிந்து அவரை அமெரிக்க சிலோன் மிஷனுக்காக நியமணம் செய்தனர்.

வின்ஸ்லோ 1819ஆம் ஆண்டு சிலோனை சென்றடைந்தார். அவர் ஊடுவில் என்ற ஊரில் ஒரு மிஷன் பணித்தளத்தை நிறுவி, தனது ஊழியத்தைத் தமிழர்களிடையேத் தொடங்கினார். வின்ஸ்லோ அவரது மனைவி ஹாரியட் உடன் சேர்ந்து, மக்களுக்கு கல்வி கற்பதற்கும் அவர்களை மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியே வழிநடத்துவதற்கும் பள்ளிகளை நிறுவத் தொடங்கினார். வின்ஸ்லோ பிரசங்கிக்கும்போது, ஹாரியட் ஆசிரியையாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அவர் எண்கணிதம் மற்றும் புவியியல் பாடப்புத்தகங்களை எழுதி, தையல் மற்றும் வீட்டு கலைகளை கற்பித்தார். ஹாரியட்டுடைய அன்பும் கருணையும் அநேக இளம் பெண்களை கிறிஸ்துவிடம் ஈர்த்தது. ஹாரியட் ஒரு நாளைக்கு ஒரு பெண்ணை அழைத்து, அவளது இரட்சிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக அவளுடன் ஜெபம் செய்தார். அவரது மாணவர்கள் பலர் கிறிஸ்துவின் உறுதியான போர்வீரர்களாக வளர்ந்தனர்.

1835ஆம் ஆண்டு, வின்ஸ்லோ மெட்ராஸில் ஒரு மிஷன் நிலையத்தை நிறுவும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். குறிப்பாக அச்சிடுதல் மற்றும் அச்சிட்டதை வெளியிடும் நோக்கங்களுக்காக. அவர் மெட்ராஸ் பைபிள் சொசைட்டியுடன் இணைந்து பணியாற்றினார். மற்றும் தமிழ் வேதத்தை திருத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு விரிவான மற்றும் பிரமாண்டமான தமிழ்ஆங்கில அகராதியை வெளியிட்டார். அநேகமாக இதுவரை வெளியிட்டதில் இதுவே மிகப்பெரிய அகராதி.

மற்ற மிஷனரிகளைப் போலவே, வின்ஸ்லோவும் தனது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களின் இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது. முதலில், அவரது மூத்த மகன் இறந்தார், பின்னர் ஹாரியட் மகிமைக்குள் பிரவேசித்தார். "கர்த்தர் நல்லவர், அவருடைய பகிர்மானம் அனைத்தும்செம்மையானவை” என்று அவர் அப்போது கூறியது உங்களுக்குத் தெரியுமா? உடல் பலவீனமான வின்ஸ்லோ, 1864ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா திரும்பினார். செல்லும் வழியிலேயே, 22 அக்டோபர் 1864 அன்று கப்பலிலே இயேசு பாதம் சென்றடைந்தார் மிரான் வின்ஸ்லோ.

    பிரியமானவர்களே, துக்கங்களுக்கு மத்தியிலும் உங்களால் "கர்த்தர் நல்லவர்" என்று சொல்லக் கூடுமா?

    "கர்த்தாவே, என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் உமது நற்குணத்தைக் காண என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


=====================
தாமஸ் ஜோன்ஸ் - Thomas Jones
===================
மண்ணில் : 24.12.1810
விண்ணில் : 16.09.1849
ஊர் : பெர்ரியூ
நாடு : யுனைடெட் கிங்டம்
தரிசன பூமி : வடகிழக்கு இந்தியா

தாமஸ் ஜோன்ஸ் என்பவர், இந்தியாவில் அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள காசி பழங்குடியினரிடையே தனது முன்னோடி ஊழியத்திற்காக நினைவுகூரப்படும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மிஷனரியாவார். சிறுவயதிலிருந்தே, குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஜோன்ஸ் தனது தந்தைக்குத் தச்சு வேலையில் உதவத் தொடங்கினார். பொருளாதார நிலைமைகள் அவரை முறையான கல்வியைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் திருச்சபையில் அதிக ஈடுபாடுக் கொண்டிருந்தார். மேலும் 25 வயதிலேயேப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

மிஷனரி பணிக்காக லண்டன் மிஷனரி சொசைட்டிக்கு அவர் தன்னை அர்ப்பணித்தார். ஆனால், தனது மோசமான உடல்நிலையைக் காரணம் காட்டி அவரை அனுப்ப மறுத்தனர். ஆனால் தேவனின் அழைப்பில் உறுதியாய் இருந்த ஜோன்ஸ் 1840ஆம் ஆண்டு 'கால்வினிஸ்டிக்மெதடிஸ்ட்களின் வெளிநாட்டு மிஷனரி வாரியத்தை" ஸ்தாபித்தார். அவர் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதை ஜெபத்துடன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, தேவன் வடகிழக்கு இந்தியாவில் ஊழியத்திற்கான கதவுகளைத் திறந்தார்.

"
ஜோன்ஸ் தனது மனைவி ஆன் என்பவருடன், 1841ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கல்கத்தாவைச் சென்றடைந்தார். அங்கிருந்து காசி மலையில் உள்ள மக்களைச் சென்றடையப் புறப்பட்டார். உதவிக்கு நண்பர்கள் இல்லாததால், இத்தம்பதியர் பயணத்தின் பெரும்பகுதியை மலையேற்றம் செய்து, 4000 அடி உயரத்தில் உள்ள சீராபுஞ்சியை சென்றடைந்தனர். ஜோன்ஸ் பூர்வீக மக்களுடன் நல் உறவை ஏற்படுத்தச் சிறிது காலமாயிற்று. நற்செய்தியுடன் அவர்களைச் சென்றடைய அவர் தனது தச்சு மற்றும் விவசாயத் திறன்களைப் பயன்படுத்தினார்.

ஜோன்ஸ் உள்ளூர் மொழியைக் கற்று அதற்கு எழுத்து வடிவம் கொடுத்தார். அவர் மத்தேயு நற்செய்தியைக் காசி மொழியில் மொழிபெயர்த்தார் மற்றும் காசி அகராதியையும் வெளியிட்டார். அவர் காசிஜைந்தியா மலைகள் முழுவதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக அயராது பயணம் செய்து, பல மிஷன் நிலையங்களை நிறுவினார். ஜோன்ஸ் அசாம் மற்றும் மேகாலயாவில் சமூக, ஆன்மீக, இலக்கிய மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியை முன்னின்று தலைமைத் தாங்கினார்.

ஜோன்ஸ் அநேக சோதனை நிறைந்த காலங்களைக் கடந்து, இந்த ஊழியத்தைச் செய்தார். இந்தியா வந்த நான்கு வருடங்களிலே தனது பிள்ளையையும் மனைவியையும் இழந்தார். வெப்பமண்டல காலநிலை மற்றும் அவரது அயராத சுவிசேஷ முயற்சிகள் அவரது உடலையும் பாதித்தன. அவர் மலேரியா நோயினால் தாக்கப்பட்டு, 39 வயதிலே இயேசு பாதம் சென்றடைந்தார்.

கடவுள் தம்முடைய தாசனை கனம் பண்ணினார். மேகாலயா மக்கள் அவர் வந்த நாளை (ஜூன் 22) "ரெவ். தாமஸ் ஜோன்ஸ் தினம்” என்று அனுசரித்து, அரசும் அதை அரசு விடுமுறையாக அறிவித்தது. அவருடைய தாக்கம் இவ்வாறிருந்தது!

    பிரியமானவர்களே, மக்கள் அங்கீகரியாததால் உங்கள் ஊழியத்தில் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா? கர்த்தர் உங்களுக்கு வேறு கதவுகளைத் திறப்பார்!

    "கர்த்தாவே, மனிதனின் அங்கீகாரத்தைப் பெறாமல் உமது அங்கீகாரத்தைப் பெற நீரே எனக்கு உதவியருளும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


========================
எர்னஸ்ட் ஆலிவர் - Ernest Oliver
=======================
மண்ணில் : 20.08.1911
விண்ணில் : 20.09.2001
ஊர் : லண்டன்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : நேபாளம்-இந்தியா

எர்னஸ்ட் ஆலிவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மிஷனரி ஆவார், அவர் இந்தியாவிலும் நேபாளத்திலும் தனது ஊழியத்திற்காக அறியப்பட்டவர். பக்திமிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தில் பிறந்த ஆலிவர், பதினைந்து வயதில் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஞாயிறு பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார் மற்றும் பதினெட்டு வயதிற்குள், அவர் உள்ளூர் தேவாலயங்களிலும் மிஷன் அரங்குகளிலும் பிரசங்கித்தார். ஒருமுறை அவர் தனது சர்ச் நண்பர்களுடன் சர்க்கஸுக்குச் சென்றிருந்தபோது. இன்னும் பல ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டிய நிலையில், பொழுதுபோக்கில் தன் நேரத்தை வீணடிப்பதைப் பற்றி தேவன் தன்னிடம் தெளிவாகப் பேசுவதை அங்கே அவன் உணர்ந்தான். அந்த நாளில் அவர் தனது வாழ்க்கைக்கான கடவுளின் திட்டத்தை உணர்ந்தார் மற்றும் மிஷனரி சேவைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

1933 இல், அவர் தனது கட்டிடக்கலை எழுத்தாளர் தொழிலை கைவிட்டு, இறையியல் பயிற்சிக்காக அனைத்து நாடுகளின் பைபிள் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆலிவர், Regions Beyond Missionary Union (RBMU) சார்பாக காங்கோவில் ஊழியம் செய்ய தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில், வட இந்தியாவின் பீகாரில் நேபாளம் மற்றும் கங்கைப் பள்ளத்தாக்கைத் தாக்கிய பேரழிவு தரும் நிலநடுக்கம் பற்றி அவர் கேள்விப்பட்டார். காங்கோவிற்குப் பதிலாக நேபாளத்திற்குச் செல்வது தேவனின் விருப்பம் என்பதை அவர் உணர்ந்தார்.

ஆலிவர் 1935 இல் இந்தியாவுக்குப் பயணம் செய்து வடக்கு பீகாரில் உள்ள மோதிஹாரிக்கு வந்தார். அங்கு ஆலிவர் எப்படியோ நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த பஹதூர் ராணாவுடன் நட்பை ஏற்படுத்தி அவரை இரட்சிப்புக்கு அழைத்துச் சென்றார். கர்னல் சாஹிப் என்றும் அழைக்கப்படும் பகதூர் ராணா நேபாளத்தில் நற்செய்தி பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். 1951 ஆம் ஆண்டில், நேபாள எல்லைகள் இறுதியாக திறக்கப்பட்டன மற்றும் ஆலிவர் காத்மாண்டுவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். - 1954 இல், ஆலிவர் வேறு சில மிஷனரி நிறுவனங்களுடன் இணைந்து நேபாளத்திற்கான ஐக்கிய மிஷனை (UMN) நிறுவினார். அவரது மனைவி மார்கரெட்டுடன் சேர்ந்து, நேபாளிகள் மத்தியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் தேவாலயங்களை நிறுவுவதற்கும் அவர் உழைத்தார். அவர் நேபாள தேவாலயத்தை மேற்கத்தியமயமாக்க விரும்பவில்லை, மாறாக நேபாளத்தின் கலாச்சாரம் மற்றும் சூழலுக்கு பொருத்தமான தேவாலயங்களை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார். அங்கு மருத்துவமனைகள், தொழுநோயாளிகள், அனாதை இல்லங்கள் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார்.

1961 இல், ஆலிவர் லண்டனுக்குத் திரும்பினார் மற்றும் RBMU இன் நிர்வாக செயலாளராக பணியாற்றினார். அவரது முதுமை அவர் உடலில் எடைபோட்ட போதிலும், ஆலிவர் இறுதி வரை பல பணிகளில் செயலூக்கமாகவும், மிஷனரி அமைப்புகளின் நிர்வாகியாகவும் இருந்தார்.

    பிரியமானவர்களே, பல ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றி இன்னும் கேள்விப்படாத நிலையில் நீங்கள் உங்கள் நேரத்தை கேளிக்கைகளில் வீணடிக்கிறீர்களா?

    “கர்த்தாவே, உமக்காக ஆத்துமாக்களை இரட்சிப்பதில் மகிழ்ச்சியைக் காண எனக்கு உதவிசெய்யும். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


========================
காளி சரண் சாட்டர்ஜி - Kali Charan Chatterjee
========================
மண்ணில் : 23.08.1839
விண்ணில் : 31.05.1916
ஊர் : சுக்சார்
நாடு : இந்தியா
தரிசன பூமி : பழைய பஞ்சாப் இந்தியா

காளி சரண் சாட்டர்ஜி ஒரு பெங்காலி மிஷனரி ஆவார், அவர் முந்தைய பஞ்சாபில் முன்னோடி மிஷனரி பணிகளைச் செய்தார். ஒரு இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்த சதர்ஜி, சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார் மற்றும் ஐந்து வயதிற்குள் ஸ்லோகங்களையும் சொல்லுவார். அவரது வீட்டில் பல இந்துக் கடவுள்களுக்கு இடமளிக்கப்பட்டது மற்றும் அவரது தந்தை எப்போதாவது தெய்வங்களை மகிழ்விக்க விலங்குகளை பலியிடுவார்.

ஒரு விதத்தில், சாட்டர்ஜி ஒரு நம்பிக்கையில் வளர்ந்தார், அது இரத்தம் சிந்தாமல் பாவங்களுக்கு மன்னிப்பு இல்லை. எட்டு வயதில், அவர் அகர்பராவில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியில் படிக்கத் தொடங்கினார். அங்கு கிறிஸ்தவ தலைமை ஆசிரியரின் முன்மாதிரியான வாழ்க்கை இளம் சாட்டர்ஜியை மிகவும் வலிமையான முறையில் பாதித்தது. வேதங்களின் சாராம்சம் மிகவும் பெரியது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தொடங்கினார், கிறிஸ்துவைத் தவிர, அவருடைய தெய்வங்கள் எதுவும் அதை நிறைவேற்ற முடியவில்லை. இயேசு உண்மையில் “பரிசுத்தர், தீங்கற்றவர், மாசற்றவர்” என்றும், “அவருடைய இரத்தமே எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்படும்" என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

பின்னர் அவர் அலெக்சாண்டர் டஃப் நடத்தும் கல்லூரியில் படிக்க கல்கத்தா சென்றார் மற்றும் 1854 இல் ஞானஸ்நானம் பெற்றார். குடும்பத்தால் ஒதுக்கப்பட்டதால், சாட்டர்ஜி தனது படிப்பை முடிக்கும் வரை தனது வீட்டை விட்டு வெளியேறி மிஷன் ஹவுஸில் இருந்தார். 1861 ஆம் ஆண்டில், ஜலந்தரில் உள்ள அமெரிக்க பிரஸ்பைடிரியன் மிஷனால் அவர்களுடைய மிஷன் பள்ளியில் கற்பிக்க அழைக்கப்பட்டார், அதன் மூலம் அவரது மிஷனரி பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் 1868 இல் பதவியேற்றார் மற்றும் ஹோஷியார்பூரில் ஒரு மிஷன் நிலையத்தை நிறுவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஹோஷியார்பூரில், சாட்டர்ஜி கல்வி சார்ந்த மிஷனரி நடவடிக்கைகளைத் தொடங்கினார். அவர் நிறுவிய பள்ளிகள் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பஞ்சாபியர்களிடையே நற்செய்தியின் ஊடகமாக மாறியது. அவர் குறிப்பாக ஏழை சமூக விரோதிகள் மத்தியில் ஊழியத்தில் கவனம் செலுத்தினார். அவர் மதங்களைப் பற்றி கவலைப்படவில்லை மற்றும் பூர்வீக தேவாலயங்களை நிறுவ மட்டுமே பணியாற்றினார். தேசிய மிஷனரி சொசைட்டி ஆஃப் இந்தியாவை நிறுவுவதற்கு வழிவகுத்த தேவாலயங்களை ஒன்றிணைப்பதற்காகவும் அவர் பணியாற்றினார்.

அவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக கொண்டதிலிருந்து தனது கடைசி நாள் வரை அவர் உண்மையான மற்றும் முழு மனதுடன் தனது இரட்சகரை நேசித்தார் மற்றும் சேவை செய்தார். நீண்ட மற்றும் வெற்றிகரமான ஊழியத்திற்குப் பிறகு, சாட்டர்ஜி, ஒரு தனித்துவமான ஆளுமை மற்றும் தவறாத கிறிஸ்தவ நோக்கத்துடன் 1916 இல் இறைவனிடம் சென்றார்.

    பிரியமானவர்களே, கிறிஸ்துவின் மீதான உங்கள் அன்பு, நீங்கள் மறுபடியும் பிறந்தபோது இருந்ததைப் போன்று உள்ளதா? 

    “கர்த்தாவே, நான் உம்மிடம் என் முதல் அன்பை இழந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு! உமக்கு சேவை செய்யும் ஆர்வத்தை என்னுள் புத்துயிர் அளியுங்கள். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.