Type Here to Get Search Results !

Robert Turlington Noble | Rosa Lee Oxer | Missionaries Life History Tamil | மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

ராபர்ட் டர்லிங்டன் நோபல் (Robert Turlington Noble) | ரோசா லீ ஆக்ஸெர் (Rosa Lee Oxer) | ருவாட்டோகா (Ruatoka) | சாமுவேல் அஜாயி க்ரௌதர் Samuel Ajayi Crowther | சாமுவேல் கோபாட் Samuel Gobat | 

ராபர்ட் டர்லிங்டன் நோபல் (Robert Turlington Noble)

விண்ணில்: 1865

நாடு: இங்கிலாந்து (England)

தரிசன பூமி: இந்தியா

ராபர்ட் டர்லிங்டன் நோபல் என்பவர் ரெவரென்ட். ஜான் நோபல் மற்றும் சாரா ஆகிய தம்பதியரின் இளைய மகன் ஆவார்.தேவனுடைய ஊழியம் செய்வதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர் அதை செய்ய தகுதியற்றவர் என்று நினைத்தார். ஊழியம் செய்ய வாய்ப்புகள் வரும்போதெல்லாம், அவர் செய்யக்கூடாததைச் செய்வதன் மூலம் தேவனுடைய கோபாக்கினையை தூண்டக்கூடும் என்று அவர் நினைத்தார். இருப்பினும், "பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?" என்ற ஏசாயா 6: 8-இன் வசனத்தின் மூலம் தேவன் அவரை வல்லமையாய் சந்தித்தார். இறுதியாய், அவர் தனது வாழ்க்கையை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து, 1840ஆம் ஆண்டு இங்கிலாந்து தேவாலயத்தால் ஆயராக நியமிக்கப்பட்டார்.




லெய்செஸ்டர்ஷையர் (Leicestershire) என்னும் ஊரில் சிறிது காலம் ஊழியம் புரிந்தபின், இந்தியாவில் உள்ள தெலுங்கு மக்களிடையே ஊழியம் செய்ய கிறிஸ்தவ மிஷனரி சொசைட்டி (Christian Missionary Society-கிறிஸ்தவ மிஷனரி சமூகம்) அவரை அனுப்பியது. 1841ஆம் ஆண்டு இந்தியாவின் மசூலிப்பட்டினம் (மசிலிப்பட்டினம்) வந்தடைந்த அவர், மக்களின் அறியாமையைக் கண்டு திகைத்துப்போனார். சதி, குழந்தை திருமணங்கள், கல்வியறிவின்மை, தீண்டாமை மற்றும் தேவதாசி பாரம்பரியம் போன்ற சமூகக் கொடுமைகள் அவரை அடியோடு உலுக்கியது. அவர் பிராமணர்களுடன் உரையாடினார். அப்போது அவர்கள் நயவஞ்சகர்களாய் தங்கள் சொந்த வசதிகளுக்கேற்ப சமூக விதிகளை விதித்து சர்வாதிகாரம் செய்வதை கண்டார். ஆம், ராபர்ட் மக்களின் பரிதாபமான சூழ்நிலையை கண்டு, அதை ஏற்க இயலாமல், இரவும் பகலும் ஜெபத்தில் கண்ணீர் சிந்தினார். கிறிஸ்தவர்களாக இருந்த தனது சொந்த நாட்டின் மக்களாலே ஏமாற்றமடைந்தார். ஏனென்றால், அவர்கள் உள்ளூர் நிலைமைகளால் சிறிதும் தாக்கமடையாமல், அவர்களின் சுயநலத்திற்காக மட்டுமே ஆட்சி செய்தனர்.




இறுதியில், இம்மக்களுக்கு கல்வி கற்பிப்பதுதான் சமுதாயத்தை மாற்றுவதற்கான ஒரே வழி என்பதை ராபர்ட் புரிந்து கொண்டார். ஜெபத்துடனே, அவர் மசூலிப்பட்டினத்தில் ஒரு பள்ளியைத் நிறுவினார். வேதாகம பாடங்கள் பள்ளியில் கற்பிக்கப்பட்டது. இது அநேக மாணவர்களின் இரட்சிப்புக்கு வழிவகுத்தது. ராபர்ட் தனிப்பட்ட முறையில் உயர் சாதி மக்களுடன் உரையாடி, இயேசு கிறிஸ்துவில் உண்மையை மேலோங்கிய வகையில் நிரூபித்தார். அநேகர் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். மனம் திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ​​ஒரு திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் ஊக்குவிக்கும் சுவிசேஷப் பணிகள் சுற்றுப்புற கிராமங்களில் துவங்கியது.




இந்தியாவின் கடும் வாநிலை மத்தியிலும், இந்த ஆர்வமிக்க மிஷனரி இருபத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து, 1865ஆம் ஆண்டு இயேசுபாதம் சென்றடைந்தார். அவர் எழுதியக் கடிதங்களும் புத்தகங்களும் அநேகரை, தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு இந்தியாவில் வந்து ஊழியம் செய்ய ஊக்குவித்துள்ளன.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


ரோசா லீ ஆக்ஸெர் (Rosa Lee Oxer)

விண்ணில்: 1918

ஊர்: ஒஹையோ (Ohio)

நாடு: அமெரிக்கா

தரிசன பூமி: இந்தியா




"....தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் (கர்த்தரை) கனம்பண்ணுகிறான்." நீதிமொழிகள் 14:31. தனது பாதையில் தடையாய் வந்த எந்த இடையூறையும் பொருட்படுத்தாமல், ரோசா லீ ஆக்ஸெர் என்பவர், தனது கல்லூரி நாட்களிலிருந்தே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கர்த்தரை கனம்பண்ணின ஒரு பெண்மணியாவார். மாணவ தன்னார்வப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால், அவர் கிளீவ்லேண்ட் (Cleveland) என்னும் ஊரில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தன்னார்வலர்களிடையே "ஸ்டூடெண்ட் வாலண்ட்டீயெர் அலையன்ஸ்"-ஐ (Student Volunteer Alliance-மாணவர் தன்னார்வக் கூட்டணி) உருவாக்க முற்பட்டார். தான் ஒரு ஞானமுள்ளத் தலைவி என்பதையும், திறமைவாய்ந்த கிறிஸ்தவப் பெண்மணி என்பதையும் அவர் நிரூபித்தார். ஹிராம் கல்லூரியில் (Hiram College) இருந்தபோது, இந்தியாவில் நடைபெற்ற ஊழியப் பணிகளில் அவர் ஆர்வம் காட்டினார்.




மஹோபா (Mahoba) என்னும் ஊரில் உள்ள எண்பது திக்கற்ற பிள்ளைகளுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான அழைப்பை அவர் பெற்றார். அதிகமான வேலை பழு காரணமாக மஹோபாவில் உள்ள மிஷனரிகளுக்கு கூடுதலாக உதவி கரம் தேவைப்பட்டது. ஆக்ஸெர், தனது கல்லூரி நண்பர் மிஸ் ஃப்ராஸ்ட் (Miss Frost) என்பவருடன் சேர்ந்து உடனடியாக இந்த ஊழியத்திற்காக தங்களையே அர்பணித்தனர். அவர்கள் 1896ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். அவர் இந்தியா வந்தடைந்ததும், இங்குள்ள மிஷனரிகள், மஹோபா-வில் நடக்கும் ஊழியத்திற்கு இவர் ஒரு பக்கபலமாய் இருப்பதை உணர்ந்தனர்.




டாக்டர் ஆக்ஸெர் ஒரு சிறந்த மருத்துவராகவும், ஞானமுள்ள உழைப்பாளியாக, அனுதாபமுள்ள மற்றும் மனச்சான்றுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒரு ஊழியராகவும் திகழ்ந்தார். அனாதை இல்லத்தின் குழந்தைகளும் மிஷனரிகளும் இவரில் மிகவும் அன்பு கூர்ந்தனர். மஹோபாவில் அவர் சிறிது காலம் தங்கியிருந்தபோது, பல அற்புதமான குணப்படுத்தல்களைச் சாதித்தார். இது மஹோபா மிஷன் மேலுள்ள மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.




தனது முதலாவது விடுமுறையிலிருந்து (ஃபர்லோ, furlough) திரும்பிய டாக்டர் ஆக்ஸெர், நான்கு மாதங்கள் ரத் (Rath) என்னுமிடத்தில் பெண்கள் பணியின் பொறுப்பாளராக இருந்தார். பின்னர் ஜான்சிக்கு (Jhansi) மாற்றப்பட்டார். 1907 இல் குல்பஹாரில் (Kulpahar) உள்ள பெண்கள் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். 1910 இல் மற்றொரு மிஷனரி வந்து பொறுப்பெடுக்கும் வரை அங்கு அவர் சேவை செய்தார்.




தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, (I பேதுரு 4:10) மற்றவர்களுக்கு சேவை செய்யும் தனது தாலந்தை முழுவதுமாக பயன்படுத்தி, டாக்டர். ஆக்ஸெர் 1910 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விலைமதிப்பற்ற சேவை புரிந்தார். அவர் 1916 ஆம் ஆண்டு தனது நாட்டுக்குத் திரும்பி சென்று, தேவாலயங்களில் பணியாற்றி, இந்தியாவைப் பற்றிய சொற்பொழிவுகளை நடத்தினார். 1918 ஆம் ஆண்டு இயேசு பாதம் சென்றடைந்தார் டாக்டர் ரோசா லீ ஆக்ஸெர்.

BenjaminForChrist @ +91 9842513842

நன்றி: V. வீர சுவாமிதாஸ்


ருவாட்டோகா (Ruatoka)

மண்ணில்: 1846

விண்ணில்: 1903

நாடு: மங்காயா தீவுகள் (Mangaia Islands)

தரிசன பூமி: பப்புவா நியூ கினியா (Papua New Guinea)







ருவாட்டோகா என்பவர் தெற்கு குக் தீவுகளில் (South Cook Islands) மங்காயா தீவைச் (Mangaia Island) சேர்ந்தவர். அவரது மூதாதையர்கள் காட்டுமிராண்டித்தனமான நரமாமிசவாதிகள். அவர்கள் சசெக்ஸ் என்னும் ஊரைச் சேர்ந்த வில்பிரட் (Wilfred of Sussex) மூலம் கிறிஸ்துவிடம் வழி நடத்தப்பட்டனர். ருவாட்டோகா, இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு, நரமாமிசவாதிகளாய் வாழ்ந்த நியூ கினியா மக்களிடம் சென்று இயேசுவின் அன்பை பகிர்ந்து கொண்டார்.




மோர்ஸ்பி (Port Moresby) என்னும் ஊரின் துறைமுகத்துக்கு ருவாட்டோகா ஒரு சிலருடன் வந்தபோது, அவர்களைப் பார்த்து பூர்வீக மக்கள் வியப்பிற்குள் ஆளாகினர். அவர்களை தேவர்கள் அல்லது அசுத்த ஆவிகள் என்று நினைத்தனர். அங்கு, ருவாட்டோகாவிற்கு வாழ்க்கையே ஒரு போராட்டமாக மாறியது. ஒன்றன் பின் ஒன்றாக, அவரது சக கூட்டாளிகள் மலேரியா காய்ச்சலினால் இறந்து

கொண்டிருந்தனர். உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக இருந்தன. மொழித் தடை கிறிஸ்துவைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதை

கடினமாக்கியது. இருப்பினும், அவர் பூர்வீக மக்களிடையே தொடர்ந்து ஊழியம்

செய்தார்.




தீவுவாசிகள் மத்தியில் 'ஜீசஸ் மேன்' (இயேசு மனிதன்) என்று ருவாட்டோகா அறியப்பட்டார். அவர் அவ்வாறாக, சாட்சியாக வாழ்ந்தார். அவர் அவர்கள் மத்தியில் வசித்து வந்தார். அவர்கள் அவரை ஈட்டிகள் மற்றும் தடிகளினால் அடித்துக்கொல்ல அச்சுறுத்தும்போதும் ருவாட்டோகா அவர்களுக்கு பயப்படவில்லை. சில சமயங்களில் உள்ளூர்வாசிகள் அவரை கொல்ல ஈட்டிகளுடன் ஓடி வரும்போது, அவர் வேதாகமத்தை உயர்த்தி பிடித்து, "நான் ஜீவ புஸ்தகத்தை வைத்திருக்கிறேன், என் வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது," என்று கூறுவார். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு வியந்த உள்ளூர்வாசிகள் அவர் பிரசங்கிப்பதை கேட்பார்கள். அவர் அதிகாரப்பூர்வமாக பேசியதால், அவர்களை தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பச் செய்தார்.




ஒரு நாள், ருவாட்டோகா கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழித்தார். பயந்துபோன ஒரு சில பப்புவாவினர் ஒரு பாதையின் ஓரத்தில் காணப்பட்ட காயமடைந்த வெள்ளை நிற மனிதனைப் பற்றி அவரிடம் கூறினர். பிசாசின் ஆவிக்கு பயந்து அவர் அருகில் செல்ல அவர்கள் பயந்தனர். ஆவிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பப்புவாவினருக்கு நிரூபிக்க ருவாட்டோகா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ருவாட்டோகா அந்த வெள்ளை மனிதனைக் கண்டுபிடித்து, அவர் வறண்ட நாவில் கொஞ்சம்

தண்ணீரை ஊற்றி, அவரை தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். அங்கு ருவாட்டோகாவின் மனைவி அவரை பராமரித்து உயிர் பிழைக்க செய்தார். அவரது நடைமுறை விசுவாசத்தின் இத்தகைய செயல்கள் கிறிஸ்துவுக்காக அனேக ஆத்துமாக்களை சம்பாதிக்க உதவியது.




ஒரு நல்ல மேய்ப்பனின் உள்ளத்துடனும், ஒரு நல்ல சமாரியனின் ஆவியுடனும், ருவாட்டோகா பாப்புவா பழங்குடியினர் மத்தியில் முடிவுபரியந்தம் ஊழியம் செய்தார்.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


சாமுவேல் அஜாயி க்ரௌதர் Samuel Ajayi Crowther

மண்ணில்: 1809

விண்ணில்: 31-12-1891

ஊர்: லாகோஸ் (Lagos)

நாடு: நைஜீரியா

தரிசன பூமி: நைஜீரியா




வெகு காலத்திற்கு முன்பு, நைஜீரியா நாட்டின் கரையில், ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று, அவன் ஒரு கப்பலில் இருந்து அந்நியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு போர்த்துகீசிய அடிமைகள் வியாபாரியிடம் விற்கப்பட்டான். இத்தகைய தீய செயல்கள் நீண்ட காலத்திற்கு முன்பு செய்யப்பட்டன. மேலும் உதவியற்ற ஏழை ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக கைப்பற்றி, அவர்களை விற்று பணம் சம்பாதிக்கப்பட்டது. பின்னர், சிறிது நாட்கள் கழித்து, சில மனிதர்களால் அவர் விடுதலையாக்கப்பட்டு, அவர் சியரா லியோனுக்குச் சென்றார். அவர் செய்த முதல் காரியம், அரை பைசா பிச்சை எடுத்தது அதில் ஒரு அகர வரிசை புத்தகத்தை தனக்காக வாங்கினார். அவர் ஒரு புத்திசாலியான ஆர்வமிக்க இளைஞரானப்படியால் அவர் படிக்க கற்றுக்கொண்டு வெறும் ஐந்து ஆண்டுகளில் கல்லூரிக்கு சென்றார். இந்த சிறுவனின் பெயர் சாமுவேல் அஜாயி க்ரௌதர்.




க்ரௌதர் ஒரு கிறிஸ்தவராக மாறி, கிறிஸ்தவ ஊழியத்திற்கென தன்னையே அர்பணித்ததுதான், அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாகும். காலங்கள் உருண்டோட, ஒரு பயிற்றாசிரியராய் இருந்த சாமுவேல் க்ரோதர் ஒரு ஊழியராகவும், பின்னர், 1864ஆம் ஆண்டு ஒரு பேராயர் ஆனார். அவர் ஆப்பிரிக்காவின் நவீன காலத்தின் முதல் கருப்பர் இன பிஷப் ஆவார். அவர் நைஜர் ஆற்றின் (Niger River) கரையோரங்களில் மிஷன் நிலையங்களை நாட்டினார். பல வகையான நபர்களுடன் பழகுவதில் அவர் விசேஷமான ஞானமும் சாதுர்யமும் கொண்டிருந்தார். மேலும் அவர்களின் நல்நம்பிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் வென்றார். அவர் கற்று தேறியவராகவும் கணம் பொருந்தியவராக இருந்தாலும், அவர் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களிடமும் மிகவும் தாழ்மையுடன் நடந்துகொண்டார். வேதாகமத்தின் ஒரு பகுதியை யோருபா மொழியில் மொழிபெயர்க்க அவர் உதவினார்.




சாமுவேலின் இதயத்தின் மிக தீவிரமான ஏக்கங்களில் ஒன்று என்னவென்றால் , அவருடைய தாயைக் கண்டடைந்து, இயேசுவைப் பற்றி அவளிடம் சொல்வது. அவரால் அவளைப் பற்றி எதுவும் கேள்விப்படவோ அல்லது அவளை எந்த விதத்திலும் கண்டுபிடிக்கவோ முடியவில்லை. ஆனால் ஒரு நாள், மிக அழகான ஒரு விஷயம் நடந்தது. ஒரு பெண் ஞானஸ்நானம் பெற வந்தாள், பிஷப் அவள் ஒரு கிறிஸ்தவர் மட்டுமல்ல, அவருடைய சொந்த தாயும் கூட என்பதைக் கண்டறிந்தார். அது எவ்வளவு மகிழ்ச்சியான நாள்! கர்த்தரின் பார்வையில் அவரது வாழ்க்கையும் உழைப்பும் மிகவும் கனம்பொருந்தியதாய் இருந்தபடியால், அவருடைய இதயத்தின் ஆசை இறுதியில் நிறைவேறப்பட்டது.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


சாமுவேல் கோபாட் Samuel Gobat

மண்ணில் : 26.01.1799

விண்ணில் : 11.05.1879

ஊர்: பெர்ன்

நாடு: சுவிட்சர்லாந்து

தரிசன பூமி: அபிசீனியா மற்றும் எருசலேம்




சாமுவேல் கோபாட் என்பவர், அபிசீனியா மற்றும் ஜெருசலேமில் ஒரு சிஎம்எஸ் (சர்ச் மிஷனரி சொசைட்டி) மிஷனரியாக வாழ்ந்தவர். கோபாட், பாரிஸில் உள்ள பாசல் மிஷன் இன்ஸ்டியூட் (பாசல் மிஷன் நிறுவனம்) மற்றும் இங்கிலாந்தின் இஸ்லிங்டன் (லண்டன்) இல் உள்ள சிஎம்எஸ் ட்ரெய்னிங் இன்ஸ்டியூஷன் (சிஎம்எஸ் பயிற்சி நிறுவனம்) ஆகியவற்றில் பயின்றார். பின்னர் அவர் சிவிஷி உடன் சேவை செய்ய முன்வந்தார். அது அவரை அபிசீனியாவுக்கு அனுப்பியது.




கோபாட் ஆறு ஆண்டுகளாக. அறியாமையில் இருந்த, அவமதிக்கப்பட்ட, மற்றும் பரிதாபமான வாழ்க்கையை வாழ்ந்த அபிசீனியர்களிடையே பொறுமையாக ஊழியம் செய்தார். ஆனால், சமாதானமற்ற அரசியல் சூழ்நிலைகளும், அவரது சொந்த உடல்நலக் குறைவும் கோபாட்டை ஐரோப்பாவுக்குத் திரும்பும்படி செய்தது. பின்னர் அவர் மால்டாவுக்கு அனுப்பப்பட்டார். 1839 மற்றும் 1845 ஆண்டுகளுக்கு இடையில், அவர் அரபு மொழியில் பரிசுத்த வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை மேற்பார்வையிட்டார். மேலும் மால்டா புராட்டஸ்டன்ட் காலேஜ்இன் (மால்டா புராட்டஸ்டன்ட் கல்லூரி துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 1846 ஆம் ஆண்டு பிரஷியாவின் மன்னர் ஃப்ரெட்ரிக் வில்ஹெல்ம் IV சமீபத்தில் இறந்த எருசலேமின் பிஷப்பின் வழியுரிமையாளராக கோபாட்டை நியமித்தார்.




அவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேராயராக இன்றியமையாத பணிகளை மேற்கொண்டார். அவர் பல பள்ளிகளை நிறுவினார். அவற்றில் ஒன்று தான் பின்னர் புகழ்பெற்ற ஜெருசலேம் யுனிவர்சிட்டி காலேஜ் (எருசலேம் பல்கலைக்கழக கல்லூரி). மேலும், மக்களின் ஆவிக்குரிய நலனுக்காக சீயோன் மலையில் ஒரு அனாதை இல்லத்தையும் நிறுவினார். மேலும் ஒரு எபிரேய இறையியல் பள்ளியை நிறுவி, ஏழை, ஆதரவற்ற யூதர்களுக்கு கைவினைப்பொருட்கள் உற்பத்தியைக் கற்பிப்பதற்காக ஒரு தொழில்துறை மையத்தையும் அவர் நிறுவினார். இந்த நிறுவனங்களை நடத்துவதற்கு அவர் தனது சொந்தப் பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தாலும், இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். கல்வியறிவு மற்றும் வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த நிறுவனங்கள் செயல்பட்டாலும், அவற்றின் முக்கிய நோக்கம் நற்செய்தியாகவே இருந்தது.




கோபாட் தனது ஊழியத்தில் ஆற்றல் மிக்க நடைமுறைக்கு அறியப்பட்டார். எருசலேமின் கொந்தளிப்பான காலங்களுக்கு மத்தியில், அவரது மனைவி மரி கோபாட் அவருக்கு பெலத்தின் தூணாக விளங்கினார். கிரிமியன் போரின் போது, அவர்கள் கலவரங்கள், மோதல்கள் மற்றும் இரத்தஞ்சிந்துதலுக்கு இடையே கர்த்தருக்கு தொடர்ந்து ஊழியம் செய்தனர். அவர்கள் பஞ்சம் மற்றும் கொள்ளை நோயைச் சகித்தனர். தெய்வீக பாதுகாப்பும் கோபாட்டின் தியாகமும் இல் லையென்றால் அநேகர் பட்டினியினாலும் நோய்களினாலும் இறக்க நேரிட்டிருக்கும். கர்த்தர் உண்மையிலே அவர்களை "அவர்கள் அறியாத வழிகளில்" வழிநடத்தி, "அவர்களுடைய பெலத்திற்கு மிகுதியாய்" அவருக்காக ஊழியம் செய்ய பெலப்படுத்தினார்.


BenjaminForChrist @ +91 9842513842

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.