தள்ளாடுதலுக்கும், சறுக்குதலுக்கு ம் உங்கள் கால்களை (ஜீவியத்தை) பாதுகாக்கிற தேவன்
*சங்கீதம் 73:2*
*"ஆனாலும் என் கால்கள் தள்ளாடுத லுக்கும், என் அடிகள் சறுக்குதலுக் கும் சற்றே தப்பிற்று".*
*தேவபிள்ளையே! நம்முடைய சரீரத் திலே கர்த்தர் தந்திருக்கிற மிக முக் கியமான உறுப்புகளிலே ஒன்று கா ல்கள். இந்த ஆரோக்கியமான கால் களுக்காக தேவனுக்கு நன்றிசெலு த்துங்கள்.கால்கள் இல்லாதவர்கள் மற்றும் கால்களில் பெலவீனமான வர்கள் எத்தனையாய் வேதனைப்ப டுகிறார்கள். நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு அவயவங்கள் மூலமாக வும் தேவனை மகிமைப்படுத்த வே ண்டுமென்பதே அவருடையசித்தமு ம் விருப்பமுமாயிருக்கிறது. உங்க ள் கால்களை மனமும்,மாம்சமும் வி ரும்பின இடத்திற்கு நடக்கவிடாமல் பயபக்தியோடும், ஜாக்கிரதையோ டும் காத்துக்கொள்ளவேண்டும். தே வாலயத்திற்கும், ஊழியத்திற்கும், தேவசித்தத்தை நிறைவேற்றவுமே உங்கள்கால்களை பயன்படுத்த வே ண்டுமே தவிர,தேவசித்தத்தை விட் டுஉங்களை வழிவிலகப்பண்ணுகி ற எந்தவொரு லௌகீக வழிகளுக் கும், உலகக் காரியங்களுக்கும் பய ன்படுத்திவிடக்கூடாது. சரீரத்திலே பெலனில்லையென்றால் கால்கள் தள்ளாடும்; வழுக்கலான இடங்களி லே நடக்கும்போது கால்கள் சறுக்கு ம். பாவம் நிறைந்த இவ்வுலகத்தில் உங்களுடைய கால்கள் தள்ளாடாம ல், சறுக்காமல் கவனமாய் நடப்பத ற்கு உன்னதத்தின் பெலன் தேவை. கர்த்தர் நம்முடையகால்களை மான் களின் கால்களைபோலாக்கி, உயர மான ஸ்தலங்களில் நிற்கவும் நடக் கவும்பண்ணுகிறார் (சங்.18:33; ஆப. 3:19). கன்மலையின் மேல் நிறுத்தி, நமது அடிகளை உறுதிப்படுத்துகி றார்(சங்.40:2).உன்னத ஸ்தலங்களி லே, கன்மலையிலே நிற்க வேண்டி ய உங்கள் கால்களை, சாத்தான் வ ஞ்சகமாய் கண்ணிகளை வைத்து, வழிவிலகப்பண்ணி, தனது வலை யிலே சிக்கவைத்து, பாதாளத்திற் குள் நடத்திவிடுகிறான். ஆகவே, உ ங்கள் கால்களைக் குறித்து ஜாக்கி ரதையாயிருங்கள்.*
*அன்பானவர்களே! பிசாசு தந்திரமா ய் உங்கள்கால்களை முதலாவது து ன்மார்க்கத்திற்கு நேராய் வழிநடத் துவான்; பிறகு துன்மார்க்க வழியி லேநிற்கவைப்பான்; கடைசியாக அ ங்கேயே உங்களை உட்காரவைத்து, தேவனுக்கும் உங்களுக்குமுள்ள உ றவையும் ஐக்கியத்தையும் வேரோ டு பிடுங்கிப் போடுவான் (சங்.1:1-2). காரணம், உங்களைக் குறித்த தேவ னுடைய திட்டம் மகாபெரியது. நீடித் தநாட்களால் அவர் உங்களை திருப் தியாக்கி, நன்மையும் கிருபையும் நிறைந்தஒருசுகவாழ்வை உங்களு க்குத் தந்து, இரட்டிப்பான ஆசீர்வாத ங்களையும் நித்திய ஜீவனையும் கொடுத்து, கீர்த்தியோடும் புகழ்ச்சி யோடும் வாழப்பண்ண தேவன் சித் தமுள்ளவராயிருக்கிறார். நீங்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, பசுமையும் செழிப்பும் இனிமையும் நிறைந்த வற்றாத ஒரு நீரூற்றின் வாழ்க்கையை அனுபவிக்க வேண் டுமென்பது தேவனுடையவிருப்பம். அவருக்காக வைராக்கியமாய் எழு ம்பி, அவருடைய இரட்சிப்பை சுவி சேஷமாய் அறிவித்து, அநேகரை நீ திக்குட்படுத்தி, சுடர்களைப் போல இந்தபூமியிலே நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்பதே உங்களைக் கு றித்த தேவனின் உன்னதமான நோ க்கமாயிருக்கிறது.ஆகவே,இப்படிப் பட்டதான மகா மேன்மையும் விலை யேறப்பெற்றதுமானவாழ்க்கையை சீர்குலைத்து, உங்கள் எதிர்காலத்தி ன் நம்பிக்கையை தகர்த்து, தேவனு க்கு அந்நியராய் புறம்பாக்கிப் போட் டு, உங்களை சறுக்கி விழப்பண்ண சாத்தான் பல வழிகளிலே உங்களு க்கு சோதனைகளையும் இழப்புக ளையும் கொடுத்து உங்கள் கால்க ளை தள்ளாடப்பண்ணுவான்.*
*பிரியமானவர்களே! சாத்தான் யோ புவை சோதிக்கத் தொடங்கின போ து, முதலாவது அவனது உள்ளங்கா லில் பருக்களைக் கொடுத்து வாதி க்க ஆரம்பித்தான். காரணம்,அவன் துன்மார்க்கத்திற்கும் பொல்லாப்பி ற்கும் தனது கால்களை விலக்கி, ஒ ருசன்மார்க்கனாய் வாழ்ந்தவன். அ வனுடைய ஆரம்பகால ஆசீர்வாதத் தின் ரகசியமே அவனது உத்தமமும் சன்மார்க்கமும் நிறைந்தவாழ்க்கை தான். இந்த வாழ்க்கை தேவனுக்கு முன்பாக பிரியமாய் காணப்பட்டபடி யினால், சத்துரு அவன் மேல் பொ றாமை கொண்டு, உயர்ந்த இடத்தி லேவாழ்ந்துவந்தயோபுவின்காலை நிற்கவிடாமல் தள்ளாடப்பண்ணி, பூமியின்தரையிலே அவனைஉட்கா ரவைத்துவிட்டான்(யோபு 2:13). தாவீ தின் கால்கள்சறுக்கவும்,தள்ளாடவு ம் காரணம், அவனுடைய சுத்த இரு தயம் தான். அவனுடைய தூய்மை யான உள்ளத்தைப் பார்த்த தேவன், அவனது வாழ்க்கையின் சகல சூழ் நிலைகளிலும் அவனுக்கு நல்லவ ராகவே இருந்தார். நீங்களும் ஆண் டவருக்காக உத்தமமாய் சன்மார்க்க மாய் வாழும்போது, சாத்தான் உங்க ள் கால்களை தள்ளாடவும், சறுக்க வும் முயற்சிப்பான். ஆனாலும் முடி விலே தேவன் உங்கள் கால்களை த ள்ளாடாதபடி, காலடிகள் வழுவாதப டி காத்துக்கொள்வார்.யோபுவை பா துகாத்தவர்,தாவீதை பாதுகாத்தவர் நிச்சயம் உங்கள்கால்களையும் சறு க்காதபடி காத்துக் கொள்வார். எந்த சூழ்நிலையிலும் தேவனோடுள்ள ஐக்கியத்தையும், சுத்த இருதயத் தையும், சன்மார்க்க வாழ்க்கையை யும் கிறிஸ்துஇயேசுவுக்குள் காத்து க்கொள்ளுங்கள். நிச்சயமாக மான் கால்களைப் போல உங்களை மாற் றி, உயர்ந்த ஸ்தலங்களில் உங்க ளை ஏறப்பண்ணி, தலைநிமிர்ந்து உங்களை வாழச்செய்வார். மனம் கலங்காதிருங்கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
இருளின் வல்லமைகளை அகற்றும் நீதியின் சூரியனாகிய வெளிச்சம்
*மல்கியா 4:2*
*"என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உ திக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்".*
*தேவபிள்ளையே! கர்த்தரால் தெரிந் துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங் கள் ஒரு இருண்டகாலத்திற்குள் கட ந்துபோய்க் கொண்டிருந்த நேரத்தி ல்,ரோமர்களுக்குஅடிமைகளாக வா ழ்ந்த நாட்களில் தேவன் தமது தீர்க் கதரிசியாகிய மல்கியாவின் மூலம் உரைத்த ஒரு வார்த்தையைத் தான் மேலே வாசிக்கிறோம். அவர்கள் த ங்கள் வாழ்க்கையிலே அடுத்து என் ன நடக்குமோ என்றபயத்தோடு ஒவ் வொருநாளையும் கடத்திக் கொண் டிருந்தார்கள்.அவர்களது சொந்த/த னிப்பட்ட வாழ்க்கையிலே இருள் சூ ழ்ந்திருந்தது. பாவ இருள் அவர்கள் ஆத்துமாவை சூழ்ந்திருந்தது. பிசா சின் இருளினால் மிகவும் பாதிக்கப் பட்டு,கலங்கிப்போய் இருந்தார்கள். மரணத்தைக் குறித்த நம்பிக்கைய ற்று தடுமாறினார்கள்.ஆனாலும் அ வர்களுக்குள் ஒருநம்பிக்கை இருந் தது. “தேவனாகிய கர்த்தர் நீதியின் சூரியனாக எங்கள்வாழ்க்கையிலே உதிப்பார்;எங்கள் இருளை எல்லாம் நீக்கிவிடுவார்;அவருடைய செட்டை யின் மறைவு எங்கள் மேல் இருக்கு ம்; அதன் கீழுள்ள தெய்வீக ஆரோக் கியத்தைநாங்கள்அனுபவிப்போம்” என்கிற ஒரு பெரிய நம்பிக்கையோ டு அவர்கள் காத்திருந்தார்கள். அவ ர்களுடைய காத்திருப்பு விருதாவா ய் போகவில்லை. அந்தநாளும் வந் தது; நீதியின் சூரியனாக இயேசுகி றிஸ்து இந்தபூமியிலே வந்து அவத ரித்தார்;ஜனங்களின் இருளை மாற் றி,ஒளியைப் பிரகாசிக்கவைத்தார். இஸ்ரவேல்ஜனங்களின்வாழ்க்கை யிலிருந்த இருளை மாத்திரம் அவர் நீக்கவில்லை; இந்த உலகத்திலே வாழ்கிற எல்லா ஜனங்களுக்கும் பெரிய சந்தோஷத்தையும், சமாதா னத்தையும், வெளிச்சத்தையும், இர ட்சிப்பையும் கொண்டு வருகிற நீதி யின் சூரியனாக இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே உதித்தார்.*
*அன்பானவர்களே!ஒருமனிதனுடை யவாழ்க்கையிலே வந்துமூடுகிற ஒ ரு மகாபெரிய இருள் பாவம்.பாவ இ ருளானது ஆத்துமாவை இருளடை யச்செய்வதின்மூலம்,அவன் வாழ்க் கையில் சமாதானத்தையும் சந்தோ ஷத்தையும் இழந்து தவிக்கிறான். பிசாசானவன் பாவம் என்கிற கண் ணியை வாழ்க்கையிலே விரித்து, அந்த வலையிலே மனிதனை சிக்க வைத்து, அவனது ஆத்துமாவை நர கத்திற்கு நேராய் நடத்திவிடுகிறா ன்.இப்படிப்பட்ட மக்களுக்கு புது வா ழ்வை கொடுக்கும்படியாகவே, நீதி யின்சூரியனாகிய இயேசுகிறிஸ்து வெளிச்சமாக இந்த பாவ இருள் நி றைந்தஉலகத்திற்குகடந்துவந்தார். “இருளில் இருக்கும்ஜனங்கள் பெரி ய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மர ண இருளின் திசையிலிருக்கிறவர் களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத். 4:15).இருளின்அதிகாரியாகிய பிசா சானவனால் நீதியின்சூரியனாகிய இயேசுகிறிஸ்துவுக்குமுன்பாக நிற் கவே முடியாது. இயேசு இந்த பூமியி ல் உலாவின நாட்களில், அசுத்த ஆ விகள் அவரைக் கண்டவுடனே வில கிஓடினது.“எங்களைக் கெடுக்கவா வந்தீர்?” என்று சத்தமிட்டு கலங்கி ஓட ஆரம்பித்தது. ஒளிக்கு முன்பாக எந்த இருளின் சக்திகளாலும் நிற்க வே முடியாது. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி அருள்நாதர்இயேசு ஒருவர்தான். ஜ னங்களை பயமுறுத்துகிற மற்றொ ரு இருள் மரணம்.மரணத்திற்குப் பி றகு,ஒருமகிமையான வாழ்க்கை இ ருக்கிறது என்பதை அநேகர் அறிய வில்லை. எனவே மரண பயம் அவர் களை மிகவும்கலங்கப்பண்ணுகிற து.கிறிஸ்துஇயேசுவுக்குள் மரணத் தின்மேல் நமக்கு ஜெயமுண்டு; கா ரணம், தமது சிலுவைப் பாடுகளின் மூலமாக மரணத்தை ஜெயித்தவர் இயேசு. வேதம்சொல்கிறது: “ஆண் டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு” (சங். 68:20).*
*பிரியமானவர்களே! நீதியின் சூரிய னாகிய இயேசுகிறிஸ்து உங்கள் உ ள்ளத்தில் வரும்போது, மரணத்தை க்குறித்த பயம்,பிசாசைக் குறித்த ப யம், பாவ பாரத்தினால் வருகிற பய ம் உங்கள் வாழ்க்கையிலிருந்து வி லகிப் போவதை நீங்கள் உணர முடி யும். மரணம் இயேசுவை ஆண்டுக் கொள்ளமுடியவில்லை; பிசாசு அவ ரைவீழ்த்த முடியவில்லை; பாவம் அ வரை அணுக முடியவில்லை; அதே ஆண்டவர், உங்கள் வாழ்க்கையில் பிசாசு கொண்டுவருகிற சகல இரு ளின்அனுபவங்களையும் மேற்கொ ள்ள நிச்சயமாய் உதவிச் செய்வார். பயப்படாதிருங்கள்! நீதியின் சூரிய னாய் உங்கள் வாழ்க்கையிலே அவ ர் பிரகாசிப்பார். அதற்கு தேவையா னஒரேநிபந்தனை,நீங்கள் கர்த்தரு டைய நாமத்திற்கு பயந்திருக்க வே ண்டும். கர்த்தருக்கு பயப்படுகிற ப யம்,ஒரு பிரகாசமான/சமாதானத்தி ன்/ ஜெயத்தின்/ ஆரோக்கியத்தின் பாதையிலே உங்களை வழிநடத்து ம்.மாத்திரமல்ல,தமது மகிமையான செட்டைகளை உங்கள் மேல் விரித் து,தெய்வீகஆரோக்கியத்தினால் உ ங்களை மூடுவார். அவருடைய செட் டையின்அடைக்கலத்திலேஉங்களு க்கு வேண்டிய பாதுகாப்பு உண்டு; அவர் தருகிற நிறைவான பலனை உங்கள்வாழ்க்கையிலே அனுபவிப் பீர்கள். பாவக் காரியங்களிலே சிக் கி, சமாதானத்தை இழந்து தவிக்கி றீர்களா? அசுத்த ஆவியினால் பிடிக் கப்பட்டு, மந்திர வல்லமையினால் பாதிக்கப்பட் டு, கலங்கிப் போயிரு க்கிறீர்களா? மரண பயம் உங்களை வாட்டுகிறதா?மனம் கலங்காதிருங் கள்! நீதியின் சூரியனாகிய இயேசு வின் வல்லமையை உங்கள் வாழ்க் கையில் பெற்றுக்கொள்ளுங்கள். இருளின்ஆதிக்கத்தை தேவபிரசன் னத்தினால் மேற்கொள்ளுங்கள். ச த்துருவின்சகலபயங்களையும் உங் கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி, தேவபயத்திற்கு இடங்கொடுங்கள். பாதுகாப்பையும், ஆரோக்கியத்தை யும், சமாதானத்தையும் நீங்கள் அ னுபவிப்பீர்கள்.உங்கள் இருதயம் க லங்காதிருப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen
Aroma of Christ Ministry*
Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
சங்கீதம் 33:9
"அவர்(கர்த்தர்) சொல்ல ஆகும், அவ ர்(கர்த்தர்) கட்டளையிட நிற்கும்".
*தேவபிள்ளையே! இன்றைக்கு ஒரு புதிய மாதத்திற்குள் காலடியெடுத் து வைத்திருக்கிறோம். இந்த ஆண் டின் 8 மாதங்களை தேவ பெலத்தோ டும், அவருடைய கிருபையோடும் க டந்துவந்திருக்கிறோம். இந்த புதிய செப்டம்பர் மாதத்திலேயும் கர்த்தர் ஆச்சரியமான ஒரு வாக்குத்தத்தத் தை உங்களுக்குத் தந்து,தகப்பன் த ன் பிள்ளையை கரம்பிடித்து நடத்து வது போல, உங்களை கரம்பிடித்து, திடப்படுத்தி,நம்பிக்கையும் விசுவா சத்தையும் கொடுத்து நடத்திக்கொ ண்டுவருகிறார். இந்தஉலகத்திலே நமக்குப் பாடுகள் உண்டு; அழுகை யின்பாதைகள்,அக்கினி சோதனை களை சந்திக்க வேண்டும்; ஆறுக ளைக் கடக்கவேண்டும்; சத்துருவி ன் சகலபோராட்டங்களையும் ஜெயி த்துதான் கடந்துபோகவேண்டும். இ வைகளெல்லாவற்றையும்நம்முடை ய மாம்சபெலத்தினாலும்,சாதுர்யத் தினாலும்,சுய யுக்தியினாலும்சாதி ப்பதென்பது மிகவும் அரிது; ஆகவே தான், உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனேகூட இருக்கிறே ன்; சாவுக்கேதுவான யாதொன்றும் உங்களை சேதப்படுத்தாது; சர்ப்பத் தையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவின் சகல வல்லமைகளை மேற்கொள்ளவும் உங்களுக்கு அதி காரம் கொடுக்கிறேன்;ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உங்கள் மேல்புரளுவதில்லை;அக்கினியில் நீங்கள்வேகாதிருப்பீர்கள்என்றெல் லாம் நமக்கு வாக்குக்கொடுத்திருக் கிறார். ஆகவே மேலே சொல்லப்பட் ட வாக்குத்தத்தத்தை தைரியமாய் விசுவாசித்து, இந்த புதிய மாதத்தி லே காலெடுத்து வைப்போம்.*
*எனக்கன்பானவர்களே! இந்த உலக ஞானத்தையோ, அறிவியல் விஞ் ஞான தத்துவங்களையோ(அ)தகவ ல் தொழில்நுட்பங்களைக் கொண் டோ தேவன்இந்தஉலகத்தைப் படை க்கவில்லை. அவர் தமது வார்த்தை யைக் கொண்டுதான் இந்த பூமியி ன்சகலவற்றையும் சிருஷ்டித்திருக் கிறார். அவருடைய வார்த்தைகள் உருவாக்குகிற வல்லமை கொண்ட வைகள்; இல்லாதவைகளை இருக் கிறவைகள்போல மாற்றுகிறவைக ள்; சூழ்நிலைகளை/ காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணக்கூடிய வைகள். அவர் சொல்ல ஆகும், அவ ர் கட்டளையிட நிற்கும். கர்த்தருடை ய கட்டளைகளுக்கு சர்வ சிருஷ்டியு ம் கீழ்ப்படிகிறது; சூரியனும் சந்திர னும் நட்சத்திரங்கள் கிரகங்கள் யா வும் அவருடைய கட்டளையின்படி யே, அதனதன் நேர்க்கோட்டில் சற் றேனும் விலகாதபடி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவர் தமது பண்டகசாலையிலிருந்து காற்றை யும் மழையையும் அனுப்பித் தருகி றார். சகல உயிர்வாழ் ஜந்துக்களை யும் மிருகங்களையும் ஜீவராசிக ளையும் அவர் பாதுகாத்து பராமரிக் கிறார். சகல காட்டுப் புஷ்பங்களை யெல்லாம் அழகாக உடுத்துவிக்கி றார்;இவைகளின் பிழைப்பாதரங்க ளுக்கெல்லாம் தேவன் தமது வார்த் தைகளால் கட்டளையிட்டு பிழைப்பூ ட்டுகிறது நிச்சயமானால், அவைக ளைப் பார்க்கிலும் விசேஷித்தவர்க ளாய் தம்முடைய சாயலாக சிருஷ்டி க்கப்பட்ட உங்களுக்கு அவருடைய வார்த்தைகள் நன்மை செய்யாதா? உங்களைபோஷித்து பராமரிக்கமா ட்டாரா? அவ்வளவு எளிதாக உங்க ளை கைவிட்டுவிடுவாரா? சத்துரு க்களின் வாய்க்கு இரையாக்கிவிடு வாரா?நிச்சயமாய் உங்களுக்கு நன் மை செய்வார்; உங்களை கைவிட மாட்டார்; மனம் கலங்காதிருங்கள்!*
*பிரியமானவர்களே! மோசே ஆசரிப் புக்கூடாரத்தைஉண்டுபண்ண கர்த் தரால் கட்டளைபெற்றபோது,“மலை யிலே உனக்கு காண்பிக்கப்பட்ட மா திரியின்படியே நீஎல்லாவற்றையும் செய்ய கவனமாயிரு”என்று அவனு க்கு கட்டளையிட்டார். அவருடைய க ட்டளையை அசட்டைசெய்து சிம்சோ ன் விபச்சாரிகளுக்குப் பின்னால் போனதால்,அவனுடைய வாழ்க்கை பரிதாபமாய் முடிந்தது.யோனா கட்ட ளையை மீறினான், ஆபத்தை சந்தி த்தான். தேவக் கட்டளையின் நோக் கமெல்லாம் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே.தேவன் தமதுஜ னங்களை ஆசீர்வதிக்க விரும்பியி ருக்க,பிலேயாமோ கூலியைப் பெற் றுக்கொண்டு சபிப்பதற்கு முன்வந் தார். கர்த்தருக்கு செவிகொடுக்கிற தைப் பார்க்கிலும் தனக்கு நிறைய வெகுமதிகளையும் பொன்னையும் வெள்ளியையும் கொடுத்த பாலாக் ராஜாவுக்கு செவிகொடுத்தார். கர்த் தரோ தம்முடையதூதனை அனுப்பி பிலேயாம் வழியிலே குறுக்கிட்டார். உருவின பட்டயத்தோடுநின்ற தேவ தூதனைக்கண்டதும்கழுதை ஒதுங் கிப்போய்நின்றது. கர்த்தர் திட்டமும் தெளிவுமாய் பிலேயாமுக்கு உணர் த்திச் சொன்னார், என் ஜனங்களை நீ ஆசீர்வதிக்க வேண்டுமே தவிர சபிக்கக் கூடாது.இன்றைக்கு உங்க ளைசபிப்பதற்காகபொல்லாத துஷ் ட மனிதர்கள் சிலர் பிசாசினால் கூ லி பொருத்தப்பட்டிருக்கலாம். உங்க ளுக்கு சூனியம்செய்துகுடும்பமாய் நீங்கள்அழிந்துபோக திட்டம் தீட்டியி ருக்கலாம்.செய்வினைசெய்கிறவர் கள் எழும்பிவரலாம். ஆனால் கர்த்த ரோ பயங்கரமானபலத்தபராக்கிரம சாலியாய் உங்கள் பக்கம் நின்று உ ங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதி க்கிறார். வியாதி பெலவீனத்தின் தாக்கத்தினால் மரண விளிம்பிலே போராடிக் கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத துஷ்டமனிதர்களின்தந் திரசூழ்ச்சியினால் முடங்கிப்போயி ருக்கிறீர்களா? சரியான வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியி ல் கடந்து போகிறீர்களா? கடன் பிர ச்சனையினால் கலங்கி நிற்கிறீர்க ளா?ஆரம்பித்தகாரியத்தை எதிர்பா ர்த்தபடி முடிக்க முடியாமல் தடுமாறு கிறீர்களா?இன்றைக்கு கர்த்தருடை ய வார்த்தை உங்களுக்கு நேராக வ ருகிறது. சகல எதிர்மாறான சூழ்நி லைகளுக்கு எதிராக கர்த்தர் தமது வார்த்தையை கட்டளையிட்டு, “இம் மட்டும் வா, மிஞ்சி வராதே” என்று சொல்லி சகலபிரச்சனைகளுக்கும் ஒரு எல்லையை வைக்கிறார். அவ ருடைய வார்த்தையின் வல்லமைக் கு அவைகள் அப்படியே மண்டியிடு வதை நீங்கள் பார்ப்பீர்கள். அவைக ள் ஒன்றும் உங்களை சேதப்படுத்து வதில்லை. உங்கள் இருதயம் கலங் காதிருப்பதாக! உங்களுக்காக ஜெ பிக்கிறேன்.*
Pr. Y. Stephen*
Aroma of Christ Ministry*
Chennai - South India*
GP/PP/Mob: +917667709977.*
மற்றவர்களை ஆசீர்வதிக்கிற உங் களை, கர்த்தர் ஆசீர்வதிக்காமல் இருப்பாரா?
*ஆதியாகமம் 12:3.*
*"உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னை சபிக்கி றவர்களைச் சபிப்பேன்; பூமியிலு ள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்"*
*தேவபிள்ளையே! இந்த உலகத்தில் ஆசீர்வாதத்தை விரும்பாதவர்கள் யாருமே கிடையாது. எந்த மதத்தின ராயிருந்தாலும் அவர்கள்ஆசீர்வாத மாயிருக்கும்படி தங்கள் தெய்வங்க ளை நோக்கி பிரார்த்தனை செய்கி றார்கள். அவர்களெல்லாம் தானும், தன் குடும்பமும் ஆசீர்வாதமாயிருக் க வேண்டும் என்று விரும்புகிறார்க ளே தவிர, என் மூலமாய் மற்றவர்க ள் ஆசீர்வதிக்கப்படவேண்டும்,நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் மா றவேண்டும் என்று நினைப்பவர்க ள் மிக சிலரே. வேதத்திலே, பாலாக் என்ற ராஜா பிலேயாம் என்ற தீர்க்க தரிசிக்கு லஞ்சம் கொடுத்து தேவ னால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ் ரவேல் ஜனங்கள் அழிந்துபோகும்ப டி,அவர்களை சபிக்கும்படியாக கேட் டுக் கொண்டான். ஆனால், பிலேயா ம் இஸ்ரவேலர்களைசபிக்கும்படி வ ந்தபோது, தேவனுடைய கோபம் அ வன்மேல் வந்தது. உருவின பட்டயத் தோடு பிலேயாமை எச்சரித்தார். உ டனே அவன் சொல்கிறான்: “இதோ, ஆசீர்வதிக்க கட்டளைபெற்றேன்; அ வர் ஆசீர்வதிக்கிறார்; அதை நான் திருப்பக்கூடாது”(எண்.23:20). கர்த்த ர் உங்களை இந்த பூமியிலே வைத் திருப்பதே, மற்றவர்களை ஆசீர்வதி ப்பதற்காகத் தான். மற்றவர்களை சபிப்பது நமது வேலையல்ல. அதே நேரத்தில்,மற்றவர்கள் உங்களை ச பிப்பார்களேயானால், அந்த சாபம் ஒருநாளும் தேவபிள்ளைகளை தா க்கவே தாக்காது. காரணம், நீங்கள் ஆசீர்வதிக்கப்படவும், மற்றவர்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்பட வுமே அழைக்கப்பட்டவர்கள். ஆவி க்குரிய இஸ்ரவேலர்களாகிய உங்க ளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்.யாக்கோபுக்கு விரோதமாய் தீங்குசெய்யும்படி,அவனுடையமாம னாகிய லாபான் முயற்சிசெய்தான். ஆனால், கர்த்தர் லாபானுக்கு சொ ப்பனத்திலே தோன்றி, “நீ யாக்கோ போடே நன்மையே அன்றி, தீமை ஒ ன்றும்பேசாதபடிக்குஎச்சரிக்கையா யிரு” என்றார்(ஆதி.31:24). ஆம்,கர்த் தர் ஒருநாளும் உங்களுக்கு தீங்குச் செய்ய, யாரையும் அனுமதிக்கவே மாட்டார்.காரணமில்லாமல் உங்கள் மேல் இட்ட சாபம் தங்காது.*
*அன்பானவர்களே!நீங்கள் ஆண்டவ ருடைய பிள்ளையாக இருப்பீர்களே யானால், அவருக்கு பிரியமானதை யே உங்கள் வாழ்க்கையிலும் செய் வீர்கள்; அவருடைய குணாதிசயங் கள் உங்களிலிருந்து வெளிப்படும்; கிறிஸ்துவின் சிந்தையே உங்களி லிருந்து எப்பொழுதும் வெளிப்படு ம்.கர்த்தர் உங்களைஆசீர்வதித்திரு ப்பது உண்மையானால்,நீங்கள் மற் றவர்களுக்கு ஆசீர்வாதமாய் மாறு ங்கள். அருள்நாதர் இயேசு சொன் னார்: “உங்கள் சத்துருக்களை சிநே கியுங்கள்; உங்களை சபிக்கிறவர்க ளை ஆசீர்வதியுங்கள்; உங்களை ப கைக்கிறவர்களுக்கு நன்மை செய் யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்க ளுக்காகவும், உங்களைத் துன்பப்ப டுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்.5:44). அவர் நன் மைசெய்கிறவராய் இந்தபூமியிலே சுற்றித் திரிந்தார். மற்றவர்களிடத் திலே எந்தவொரு ஆதாயத்தையும் எதிர்பார்த்து அவர் ஊழியம் செய்ய வில்லை. பிதாவின் அன்பையே ஜ னங்களிடத்தில் வெளிப்படுத்தினா ர்; பிதாவின் சித்தத்தை செய்துமுடி க்கிறதையே தனது பிரதான குறிக் கோளாய் கொண்டுவாழ்ந்தார்.கிறி ஸ்து இயேசு விட்டுச்சென்ற அவரு டைய அடிச்சுவடுகளையே பின்பற் றி, மற்றவர்களுக்கு நாம் ஆசீர்வாத மாய் மாறுவோம். தீமைக்கு தீமை யையும்,உதாசனத்துக்கு உதாசனத் தையும் சரிக்கட்டாமல், அதற்கு பதி லாக, நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந் தரித்துக் கொள்ளும்படி அழைக்கப் பட்டவர்களென்று அறிந்து,மற்றவர் களை ஆசீர்வதியுங்கள்(1பேது.3:9).*
*பிரியமானவர்களே! பொல்லாத துர் க்குண மனுஷர்கள் உங்களுக்கு வி ரோதமாய் காரணமில்லாமல் எழும் பி தீங்குசெய்ய எத்தனிக்கிறார்க ளா? சத்துருக்களோ/ பொறாமையி ன் ஆவிகளோ உங்களை அழிக்கும் படிக்கு குழிதோண்டுகிறார்களா? உங்களுக்கு விரோதமாக பில்லிசூ னிய மந்திர ஆவிகளை ஏவி விடுகி றார்களா? கலங்காதிருங்கள்! உல கத்திலிருக்கிறவனிலும் உங்களு க்குள் இருக்கிறவர் மகாபெரியவர். தாங்கள் வெட்டின குழியிலே அவர் களேவிழுவார்களேதவிர,உங்களை ஒருநாளும் அழித்துவிட முடியாது. உங்களுக்கு விரோதமான மந்திர மோ, குறிசொல்லுதலோ, ஏவலோ உங்களைத் தொட அதிகாரமே இல் லை. கர்த்தர் உங்களுக்காக வழக் காடி,யுத்தம்செய்து, ஜெயத்தைத் த ருவார்.பயப்படாதிருங்கள்!உங்களு க்கு எதிராக வருகிற சகல தீமைக ளையும் நன்மையாக மாற்றுவார்.த மது விலையேறப்பெற்ற இரத்தத்தி னாலே மீட்டுக் கொண்ட உங்களை அவ்வளவு எளிதாக பிசாசின் தீங்கி ற்கு விற்றுப்போடுவாரா? பொல்லா ங்கனின் ஆக்கினைகள் உன்னை அழித்துவிட அனுமதிப்பாரா? நிச்ச யமாகவிடமாட்டார். கர்த்தரை நம்பி தைரியமாயிருங்கள்! ஆண்டவர் த ம்முடைய அக்கினிமதிலுக்குள் உங் களையும்,குடும்பத்தையும் வைத்து பாதுகாக்கிறார். தடைபட்ட ஆசீர்வா தங்களை கர்த்தர் துரிதமாய் உங்க ள் கரத்திலே கொண்டுவந்து சேர்ப் பார். உங்களுக்கென்று அவர் முன் குறித்திருக்கிற காரியங்கள் ஆச்ச ரியமானவைகள். விசுவாசத்தோடு கர்த்தரை மாத்திரம் நோக்கிப் பாரு ங்கள்! உங்களுக்கு மட்டுமல்ல; மற் றவர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாத மாய் மாறுவீர்கள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
ஆயிரம் மடங்கு ஆசீர்வதித்து உயர் த்துகிற தேவன்
உபாகமம் 1:11.*
*"நீங்கள் இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமா கும்படி உங்கள் பிதாக்களின் தேவ னாகிய கர்த்தர் உங்களுக்கு சொல் லியபடியே உங்களை ஆசீர்வதிப்பா ராக".*
*தேவபிள்ளையே! நம் தேவனுடைய விருப்பமே நம்மை ஆசீர்வதிப்பது தான். ஆதிமுற்பிதாக்களை ஆசீர்வ திக்கும்போது,“நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதி த்து,பெருகவே பெருகப்பண்ணுவே ன்”(எபி.6:14) என்று சொல்லி, தான் ஆசீர்வதிப்பதிலே ஒருநிச்சயத்தை த்தந்தார். யோபுவை 2 மடங்கு ஆசீர் வதித்தார்; ஈசாக்கை 100மடங்கு பல னைக்கொடுத்துஆசீர்வதித்தார்.தா னியேலுக்கு 10 மடங்கு ஞானத்தை யும் அறிவையும் கொடுத்து ஆசீர்வ தித்தார். இன்றைக்கும் கர்த்தர் 1000 மடங்கு உங்களை ஆசீர்வதிப்பேன் என்று வாக்குக்கொடுக்கிறார். “வா க்குத்தத்தமானது உங்களுக்கும் உ ங்கள் பிள்ளைகளுக்கும்....உண்டா யிருக்கிறதென்றுவேதம்சொல்கிற து(அப்.2:39).ஆகவே,நீங்கள் விசுவா சத்தோடு இந்த வாக்குத்தத்தத்தை சொல்லி ஜெபிக்கவேண்டும். நீங்க ள் ஒருவேளை படித்துக் கொண்டிரு ந்தால், ஆண்டவர் உங்கள் ஞானத் தை 1000மடங்காக பெருகப்பண்ணு வார். வியாபாரம்,தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வருமானத்தை 1000 மடங்காக அவர் பெருகப்பண்ணுவார். வேலை செ ய்துக் கொண்டிருக்கிறீர்களா? வே லைசெய்கிற இடத்திலே நீங்கள் நி னைத்திராத உயர்வைக் கொடுத்து உங்களை கனப்படுத்துவார். நீங்க ள் என்ன செய்துக் கொண்டிருந்தா லும், இருக்கிற இடத்திலே ஆயிரம் மடங்காக உங்களை பெருகப்பண் ணி ஆசீர்வதித்து,மகிழப்பண்ண க ர்த்தர் விரும்புகிறார். இதெல்லாம் நடக்குமா? சாத்தியமாகுமா? என்று நீங்கள் நினைக்கலாம்.*
*அன்பானவர்களே! இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தேவனு டைய வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற நாம் வி சுவாசிப்பதும், ஜெபிப்பதும், அதை உரிமைப் பாராட்டுவதும் மாத்திரம ல்ல.தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறதோ, அதை அப்படியே கைக்கொண்டு, அதற்கு கீழ்ப்படிய வேண்டும். ஆண்டவருக்காக மனப் பூர்வமாய் கொடுக்கவேண்டும். அப் பொழுது இடங்கொள்ளமற்போகும் மட்டும் தம்முடைய ஆசீர்வாதத்தை உங்கள் மேல் வருஷிக்கப்பண்ணு வார். உங்கள் கைகளின் பிரயாசத் தின்பலனில் 10-ல் ஒருபங்கையோ*
*(அ) அதற்கு மேலாகவோ கர்த்தருக் கு கொடுத்துப் பாருங்கள். உங்கள் நேரத்தை, தாலந்தை, உழைப்பை தேவனுடைய ராஜ்யம் இந்த பூமியி லே கட்டப்பட கொடுங்கள். உங்கள் அன்பை மற்றவர்களுக்கு கொடுங் கள். சுயநலமாய் வாழாமல், உங்க ளால் இயன்ற உதவிகளை தேவை யுள்ள மக்களுக்கு செய்யுங்கள். நி ச்சயமாய் அதற்கான பலனை உங் கள் வாழ்க்கையிலே அனுபவிப்பீர் கள். நீங்கள் கொடுக்க கொடுக்கத் தான்,தேவனுடைய ஆசீர்வாதத்தை பலமடங்காக உங்கள் வாழ்க்கையி ல் பெருகுவதைப் பார்ப்பீர்கள். உங் கள்சந்ததிகள்ஆசீர்வதிக்கப்படுவா ர்கள். உங்கள் வருமானம் பெருகும். பணக்கஷ்டங்கள் நீங்கும். செழிப்பு உண்டாகும். எலியாவை பஞ்ச கால த்திலே போஷித்த தேவன்,வாழ்வா தாரங்கள் முடங்கிப் போனாலும், பொருளாதார சீரழிவுகள் வந்தாலு ம், தம்முடைய பிள்ளைகளையோ, அவர்களது குடும்பங்களையோ ஒ ருபோதும் தேவைகளோடு தத்தளி க்கவிடவேமாட்டார். உங்கள் பள்ளத் தாக்கை(குடும்பம்)நிச்சயம்தண்ணீ ரால் (பொருளாதார நிறைவினால்) நிரப்புவார்.*
*பிரியமானவர்களே! தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படியவும் அ தை அப்படியே உங்கள்வாழ்க்கையி ல் கைக்கொள்ளவும், மற்றவர்களு க்கு பிரயோஜனமாய் வாழவும், தே வனுடைய ராஜ்யம் கட்டப்பட உங்க ளால் இயன்ற உதவிகளை செய்ய வும் ஒரு தீர்மானம் செய்துவிடுங்க ள்.நிச்சயமாய் வருகிற நாட்களிலே ஒரு மாற்றத்தை நீங்கள் காண்பீர் கள். வருகிற வருமானமெல்லாம் ஏ தோ பொத்தலான பையிலே போடு வதைப்போல உணருகிறீர்களா? வீ ணான மருத்துவ செலவுகளுக்கும், கடன் செலவுகளுக்கும் மற்றும் தே வையில்லாதசெலவுகளுக்கும் உங் கள் வருமானம் போகிறதா? கிடைக் கிற வருமானம் உங்கள் குடும்பத் தை நடத்த போதுமானதாக இல்லா மலிருக்கிறதா? உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! சாரிபாத் ஊர் விதவையின் வீட்டை ஆசீர்வதித்த தேவன், உங்கள் வாழ்க்கையிலும் ஒரு குறையுமில்லாமல், நிறைவா ய் ஆசீர்வதித்து, மீதமெடுக்க உதவி செய்வார்.உங்கள் கடன்களையெல் லாம் ஆச்சரியமாக அடைக்க கர்த்த ர் வழிதிறப்பார். இனி உங்கள் வரு மானம் வீணாய்போவதில்லை.வரு மானமில்லாமல், சரியான வேலை யில்லாமல் இருக்கிற உங்கள் வாழ் க்கையிலே கர்த்தர் அற்புதமாக ஒரு வழியைத் திறப்பார். இனி நீங்கள் அழுதுக்கொண்டிருக்கப் போவதில் லை.காரணம்,தேவன் உங்களை ஆ யிரம் மடங்காக ஆசீர்வதித்து உயர் த்தும் நேரம் வந்துவிட்டது. உங்கள் சுகவாழ்வின்சம்பூரணத்தை அனுப விக்கும் நாட்களுக்குள் கர்த்தர் உங் களை நடத்தப் போகிறார். உங்கள் கண்கள் ஆச்சரியப்பட்டு பூரிக்கும். வானத்தின் பலகனிகள் எப்பொழு தும் உங்களுக்கு திறந்தேயிருக்கு ம். கவலைப்படாதிருங்கள்! உங்க ளுக்காக ஜெபிக்கிறேன்.*
*Pr. Y. Stephen*
*Aroma of Christ Ministry*
*Chennai - South India*
*GP/PP/Mob: +917667709977.*
Thanks for using my website. Post your comments on this