யோபு 8-10
*இயேசு கிறிஸ்து.. நாம் எப்பொழுதும்* *வந்தடையத்தக்க* *கன்மலை*..
யோபுவின் நண்பனான பில்தாத், யோபுவிடம், யோபுவே.. தேவன் நீதியுள்ளவர். உமது வழக்கை தேவனிடம் கொண்டுசெல்லும். நீர் குற்றமற்றவராக இருந்தால்.. அவர் உமது வழக்கை ஏற்றுக் கொள்வார் என்று ஆலோசனை கூறினான்..
( யோபு 8 : 1-6)
யோபு, தேவனிடம்..ஒரு மனிதன்.. எப்படி தன் வழக்கை வாதிட முடியும்.. ? கர்த்தர் மகா பெரியவர் ..அவர் எல்லையில்லா ஞானம் உடையவர்..அவர் ஒரு கேள்வி கேட்பாரானால்.. என்னால் பதில் சொல்ல முடியாதே என்று அங்கலாய்த்தான்..
( யோபு 9 : 2-4 )
அந்த அங்கலாய்ப்பின்
மத்தியிலே..அவன் காணக்கூடாத.. நித்திய தேவனின் மகத்துவத்தைக் குறித்துக் கூறின காரியங்களெல்லாம்..
எதிர்காலத்தில் வரவிருந்த.. இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியது..
இது இயேசு கிறிஸ்துதான் மேசியா என்பதை நமக்கு நிச்சயப்படுத்துகிறது.
( யோபு 9 : 8-13 )
யோபு,கர்த்தர் சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர் என்றான்..
இயேசு கடலின் மீது நடந்தார்..
( மாற்கு 6 : 49 )
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும்.. தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர் என்றான்.. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க.. வானிலே ஒரு நட்சத்திரம் தோன்றியது..
( மத்தேயு 2 : 2 )
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் என்றான்..
இயேசு கிறிஸ்துவும், எண்ணற்ற அற்புதங்களை அங்கே செய்தார்..
( யோவான் 21 : 25 )
அவர் கடந்து போகிறார்.. நான் அவரை அறியேன் என்றான்..
இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து தேவாலயத்தை விட்டுப்போனார்..
( யோவான் 8 : 59)
என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார் என்றான்..
ஒருவரும் இயேசு கிறிஸ்துவினிடத்தில்..யாதொரு கேள்வியும் கேட்கத் துணியவில்லை..
(மாற்கு 12 :34 )
தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்ப மாட்டார் என்று கூறினான்..
சில நேரங்களில் இயேசுவும் தன்னுடைய கோபத்தை அங்கே வெளிப்படுத்தினார்..
தேவாலயத்திலே விற்கிறவர்களையும்..
கொள்ளுகிறவர்களையும்
புறம்பே துரத்தினார்..
(லூக். 19 : 45 )
ஒருவருக்கொருவர் துணை நிற்கிற.. அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும் என்றான்..
அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது அவருக்கு முன்பாக விழுந்தன ..
(மாற்கு 3 :11)
எல்லாவற்றிற்கும் மேலாக.. எனக்கும்..தேவனுக்கும் இடையில் ..யாராவது ஒருவர் மத்தியஸ்தராக இருந்து.. என்னுடைய கரத்தையும், அவருடைய கரத்தையும் இணைக்கமாட்டார்களா என்று யோபு ஏங்கினான்..
(யோபு 9:33)
*யோபுவின்,இந்த ஏக்கத்திற்கான* *பதில்*..*இயேசு கிறிஸ்துவிலே* *நிறைவேறியது*.
*ஆதியிலே தேவனோடிருந்தவர்*, *நம்மைப்போல மனிதனானார்*..
*நம்மைப்போல* *சோதிக்கப்பட்டார்.. நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்தார்..என்றென்றும் நம்மோடிருக்கும்படியாக *..
*தேற்றரவாளனாகிய பரிசுத்த*
*ஆவியை நமக்குத்* *தந்தருளியிருக்கிறார்*..
*எனவே ,இன்று நாம்* *யோபுவைப்போல புலம்ப* *வேண்டியதில்லை..*.
*ஏங்க வேண்டியதில்லை*.
*நாம் எப்பொழுதும் ..எல்லாச் சூழ்நிலைகளிலும் * *வந்தடையத்தக்க* *கன்மலையாய்*..*நமது* *இரட்சகராய்* ..*நமது தகப்பனாய்..* *இயேசு நமக்கு இருக்கிறார்..*..
*நாம் தைரியமாய் அவருடைய* *கிருபாசனத்தண்டையில்* *சேருவோம்*.
*என்ன பாக்கியம்*..
*எவருக்குண்டு இந்த* *சிலாக்கியமென்று*..
*அவரையே* *அண்டிக்கொள்ளுவோம்*..
*அவரையே ஆராதிப்போம்*…
*அவரிலே ஆறுதல் காண்போம்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
⚡ *தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?* ⚡
☄️ *"ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?"* (யோபு 9:2).
🔸 9 மற்றும் 10 ஆம் அதிகாரங்களில், யோபு தனது சிநேகிதன் பில்தாத்தின் வாதத்திற்குப் பதிலளிப்பதைக் காண்கிறோம். *யோபு தேவனைப் போற்றினான், தன்னைத் தாழ்த்தினான்.* உணர்ச்சிவசப்பட்ட விதத்தில் தன் பிரச்சினைகளை எடுத்துரைத்தான். பில்தாத்தின் கருத்துகளுக்கு அவன் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
🔸 *தேவன் ஒருபோதும் நீதியைப் புரட்டுவதில்லை* (யோபு 8:3) என்ற பில்தாத்தின் வாதத்தை யோபு ஏற்றுக்கொண்டான். இருப்பினும், *சுத்தமும் செம்மையுமாய் இல்லாததால் தான் அவனுக்குத் துக்கம் ஏற்பட்டது* (யோபு 8:6) என்ற பில்தாத்தின் கருத்தை யோபு ஏற்கவில்லை.
🔸 இதன் விளைவாக, ஒப்பற்ற நீதியுள்ள சிருஷ்டிகரரான தேவனுக்கு முன்பாக யாரும் நீதிமானாயிருக்க முடியாது என்று யோபு வலியுறுத்தினான். *"தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?"* என்று யோபு கேட்டான். ஒரு மனிதன் எவ்வாறு நீதிமானாகவும் *தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாகவும்* கருதப்பட முடியும் என்பதே அவனுடைய கேள்வி. இது உலகில் உள்ள அனைத்து மனிதர்களாலும் சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. தேவன் வேதத்தின் மூலம் இதற்கான பதிலைத் தருகிறார்.
🔸 *"இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்"* (ரோமர் 3:24) என்று வேதம் கூறுகிறது. இது எல்லா மனிதர்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டிய நற்செய்தியாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ள விசுவாசத்தின் மூலம் பாவத்தினால் வரும் குற்றங்கள் அகற்றப்படும். *"அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."* (ரோமர் 4:25) என்று இயேசுவைக் குறித்து வேதம் வெளிப்படுத்துகிறது.
🔸 *வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது* (ரோமர் 4:3). தேவன் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் ஆபிரகாம் நீதிமான் ஆனான் என்று பவுல் விளக்குகிறான். ஒருவனும் தன் கிரியைகளால் நீதிமான் ஆக முடியாது; கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே அனைவரும் நீதிமான்களாக்கப்பட முடியும்.
🔸 *"அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்."* (1 கொரிந்தியர் 1:30-31) என்று வேதம் போதிக்கிறது. கிறிஸ்துவே மனித வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய ஞானம். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்; அவரே நீதியாக இருக்கிறார். ஆகவே தேவன் நம்மை நீதிமான்களாக அங்கீகரிப்பதை சாத்தியமாக்கியவர் அவரே. *கிறிஸ்துவின் காரணமாக நாம் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளோம்.*
🔸 ஒருவர் கிறிஸ்துவில் இருந்தால் மட்டுமே தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்க முடியும் என்று நாம் முடிவு செய்யலாம். *கிறிஸ்துவில் இருப்பது என்பது அவரை அறிவதும், அவருக்கு கீழ்ப்படிவதும், அவருடன் நடப்பதும் ஆகும்.*
🔹 *தேவன் நம்மை நீதிமான்களாகக் கருதும்படி நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்துவோடு நடக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *ஒப்பற்ற நீதியுள்ள சிருஷ்டிகரரான தேவனுக்கு முன்பாக யாரும் நீதிமானாயிருக்க முடியாது.*
2️⃣ *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ள விசுவாசத்தின் மூலம் பாவத்தினால் வரும் குற்றங்கள் அகற்றப்படும்.*
3️⃣ *கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே அனைவரும் நீதிமான்களாக்கப்பட முடியும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
உம்முடைய பராமரிப்பு*
~~~~~~~~~~~~~~~~~~
யோபு 10: 12. இங்கு யோபு, *எனக்கு ஜீவனை தந்ததுமல்லாமல், தயவையும் எனக்கு பாராட்டினீர். உம்முடைய பராமரிப்பு என் ஆவியை காப்பாற்றினது*^ என்றார்.
1. அப்படியானால் *எனக்கு ஜீவன் தந்தது கர்த்தர்* என்பதை யோபு அறிந்திருந்தார். அறிந்திருந்தது மட்டுமல்ல, *எனக்கு ஜீவன் தந்தது* கர்த்தர் என அறிக்கையிட்டார்.
ஆம், இன்று நம் சரீரமும், ஆத்துமாவும் ஜீவனோடு இருக்க வேண்டும். *கர்த்தரே நமக்கு ஜீவனாயிருக்கிறார். அப்படியானால் அவரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்கு செவி கொடுத்து அவரை பற்றிக்கொள்ள வேண்டும்.* உபாகமம் 30:20.
*கர்த்தருடைய வசனம் நமக்கு ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது*. யோவான் 6: 63.
இன்று அநேகருடைய சரீரம் ஜீவனோடிருக்கலாம். ஆனால் ஆவி, ஆத்துமா ஜீவனற்று, பாவத்தில் மரித்திருக்கலாம். ஆம், நம் ஆத்துமா ஜீவனோடிருக்கிறதா? என சிந்தித்து பார்ப்போம். *பாவம் செய்கிற ஆத்துமா சாகவே சாகும். ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதல்* என அப்போஸ்தலர் 11: 18 கூறுகிறது. ஆம், *குமாரனையுடையவன் ஜீவனையுடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்*. 1யோவான் 5:12.
2. மட்டுமல்ல, *எனக்கு தயவையும் பாராட்டினார்* என கூறி கர்த்தரை மகிமைப் படுத்தினார். ஆம், *நன்மை செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை*. நீதிமொழிகள் 19: 22.
ஆம், நம் *தேவன் மன்னிப்பதற்கு தயை பெருத்தவர்*. ஏசாயா 55:7.
*அவருடைய தயவுள்ள கரம் நம்மேல் இருக்கிறது.* எஸ்றா 7:9.
*தேவ தயவு நாம் குணப்படும் படி நம்மை ஏவுகிறது .* ரோமர் 2: 4.
ஆம், அவர் என் மேல் தயவு பாராட்டுகிறார் . இந்த அன்பை எண்ணி , அவரை போற்றுவோம்.
3. *அவருடைய பராமரிப்பு என் ஆவியை காப்பாற்றினது*. ஆம், ஒரு *சமாரியன் குற்றுயிராயிருந்த மனிதனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சரசமும் வார்த்து, காயங்களை கட்டி, தன் சுய வாகனத்தில் ஏற்றி, சத்திரத்தில் கொண்டு போய் பராமரித்தான்*. லூக்கா 10: 34. ஆம், இவ்விதமாய் நம் இயேசு நம்மை பராமரிக்கும் தேவன். கர்த்தருடைய பராமரிப்பு நம் ஆவியை, ஆத்துமாவை காப்பாற்றுகிறது.
ஆம், கர்த்தருடைய ஜீவன், தயவு, பராமரிப்பு நம்மை காப்பாற்றுகிறது. இந்த அன்பை எண்ணி பார்த்து அவரை துதிப்போம், ஸ்தோத்தரிப்போம். ஆமென், அல்லேலூயா.
*Dr. Padmini Selvyn*
🌺🌺🌺🌺
"என்னுடன் எதற்காக வழக்காடுகிறீர் என்பதைக் காட்டும்".
🌺🌺🌺🌺🌺🌺🌺
சோதனைகளின் போது கடவுளின் கிருபையை நாம் காண்கிறோம்.
அன்பு என்பது இருள் சூழ்ந்திருக்கும் இருளில் சிறிய ஒளியைக் காட்டும் ஒரு புழுவைப் போன்றது.
நம்பிக்கை என்பது ஒரு நட்சத்திரம் போன்றது. செழுமையின் சூரிய ஒளியில் காணப்படாது, மாறாக துன்பத்தின் இரவில் தோன்றும்.
"ஆண்டவரே, எனக்கு நம்பிக்கை இல்லை என்று நான் பயப்படுகிறேன்" என்று நாம் கூறுகிறோம்.
நம்முடைய கிருபைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக தேவன் அடிக்கடி நமக்கு சோதனைகளை அனுப்புகிறார்.
கிருபையின் உண்மையான வளர்ச்சி என்பது பரிசுத்தமான சோதனைகளின் விளைவாகும்.
நம்மை சிறந்த கிறிஸ்தவர்களாக ஆக்குவதற்காக கடவுள் அடிக்கடி நம்முடைய ஆறுதலையும், சலுகைகளையும், பறிக்கிறார்.
அவர் தனது வீரர்களைப் பயிற்றுவிக்கிறார், இலகுவான மற்றும் ஆடம்பரமான கூடாரங்களில் அல்ல, மாறாக அவர்களை வெளியேற்றி, கட்டாய அணிவகுப்பு மற்றும் கடினமான சேவைக்கு பயன்படுத்துவதன் மூலம். சோதனைகள் வாக்குறுதியை இனிமையாக்குகின்றன.
சோதனைகள் ஜெபத்திற்கு புதிய வாழ்க்கையைத் தருகின்றன.
சோதனைகள் நம்மை அவருடைய காலடியில் கொண்டுவருகின்றன.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺l🌺
மேபி சுந்தர்.
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👧👦
🙋♂️🙋♀️ நாம் *யோபு 10* ல் இருக்கிறோம்
*விரக்தியை எப்படி எதிர்கொள்வது*⁉️
📝 அறிமுகம்
📍 வலி, சோர்வு அல்லது துக்கத்தால் தூண்டப்படும் *விரக்தி*, துன்பம் மற்றும் ஊக்கமின்மைக்கு ஒரு பொதுவான மனித எதிர்வினையாகும்.
📍 *விரக்தி* ஒரு நல்ல, அன்பான மற்றும் நீதியுள்ள கர்த்தர் மீதான நமது நம்பிக்கையை சவால் செய்கிறது.
📍 *விரக்தி* என்பது நல்ல உக்கிராணகாரருக்கு ஒரு சவாலாக இருக்கிறது, ஏனெனில் அது நம்மை, நமது செல்வம், நமது ஆரோக்கியம் மற்றும் நம் வாழ்க்கை இவைகளுக்கு உண்மையில் *சொந்தமானவர்* யார் என்பதை அடிக்கடி மறக்கடித்துவிடும்.
📍இறுதியாக *விரக்தி* நம்மை தேவனிடம் கோபப்பட வைக்கிறது; அவரை நம்ப முடியாது என்று நாம் அவரை விட்டு விலக முடிவு செய்யலாம்.
📝 விரக்தியில் யோபு
📍அவரது மனைவியின் அறிவுரைப்படி, தன் விலையேறிய அருமையான அனைத்தையும் இழந்த பிறகு, யோபு *விரக்திக்கு* அடிபணிந்திருக்கலாம்; அவர் தேவனை சபித்து இறந்திருக்கலாம் (2:9).
📍 தனது கசப்பை வெளிப்படுத்தி, தனக்கு எதிரான குற்றச்சாட்டையாவது அவருக்குத் தெரியப்படுத்துமாறு தேவனிடம் கேட்பதுதான் அதிகபட்சம் யோபுவால் செய்ய முடியும் ( *வ 1-2*)
📍அவரை *உருவாக்கிய* அவருடன் நெருங்கிய, அன்பான மற்றும் விசுவாசமான உறவில் இருந்தவரிடமிருந்து இப்படிப்பட்ட பயங்கரமான முறையை பெறுவதில் யோபு குழப்பமடைந்தார் ( *வ 8-9*)
📍 யோபு அனுபவிக்கும் விதத்தில் தேவன் அவரை நடத்த நினைத்தால், *"ஏன் அவர் யோபு பிறக்க அனுமதித்தார்"* ? (வ. 18-19)
📝 யோபு என்ன செய்வார் ⁉️
📍 யோபு தேவனை சபித்திருக்கலாம், மாறாக *தேவனை நோக்கி* திரும்பினார்.
📍 அவர் தேவனை கைவிடவில்லை.
📍 தனது இருண்ட நேரத்தில் ( *வ 21-22* ) , யோபின் வேண்டுகோள் அவருடைய விசுவாசத்தில் வேரூன்றியுள்ளது மற்றும் தேவன் ஒரு உதவி செய்கிற தேவன் என்று நம்புகிறார்.
📝 நமது விண்ணப்பம்
🙋♂️🙋♀️ நெருக்கடிகள் மற்றும் சிரமங்களின் போது உறுதியாக நிற்க யோபுவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம். படுகொலையில் உயிர்பிழைத்தவரும் எழுத்தாளருமான *எலி வீசல்*, "மனிதன் தேவனிடம் கேட்கும் கேள்விகளால் தேவனை நோக்கி தன்னை உயர்த்திக் கொள்கிறான். இது தான் உண்மையான உரையாடல்" என்று கூறியுள்ளார்.
🙋♂️🙋♀️ தேவன் யார் என்பதற்கான சிதைந்த படம் மற்றும் தேவன் என்ன செய்ய முடியும் அல்லது நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தவறான எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருப்பதால் நாம் *விரக்தி அடையலாம்*
ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
🙋♂️🙋♀️ *விரக்தி* காலங்களில், நம்முடைய துன்பங்கள் மற்றும் தேவைகள் பற்றிய அந்தரங்கமான தகவல் பரிமாற்றத்தில் நாம் தேவனிடத்தில் நம்மைத் திறந்து வைக்கலாம்.
📍 சங்கீதக்காரன் எழுதுகிறார், *" என் மாம்சமும் என் இருதயமும் மாண்டு போகிறது, தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிக்கிறார் "* 73:26
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
💫GOD’S SOVEREIGNTY💫*
*💫இறைவனின் இறையாண்மை💫*
யோபு - 8-10
☄️யோபு அத்தியாயங்கள் 8-10, விசுவாசத்தின் சிக்கல்கள், மனித புரிதலின் வரம்புகள் மற்றும் தேவன் மீது யோபுவின் அசைக்க முடியாத நம்பிக்கையின் நீடித்த மீள்திறன் ஆகியவற்றை ஆராய்கிறது.
1️⃣ *தண்டித்தல் பற்றிய பில்தாதின் பாரம்பரிய பார்வை* (அத்தியாயம் 8)
🔹யோபுவின் நண்பர்களில் ஒருவரான பில்தாத், யோபுவின் துன்பத்தைப் பற்றிய தனது பார்வையை வழங்குகிறார்.
🔹அவர் தெய்வீக தண்டனை பற்றிய பாரம்பரிய புரிதலை ஆமோதித்து, யோபுவின் துன்பம் அவரது சொந்த தவறுகளின் விளைவாக இருக்க வேண்டும் என்றும் யோபு மனந்திரும்பி கடவுளின் தயவை நாடினால், அவர் மீட்கப்படுவார் என்றும் பரிந்துரைத்தார்.
🔹பில்தாத்தின் பதில், துன்பம் நேரடியாக பாவத்துடன் தொடர்புடையது என்ற அவரது காலத்தின் பொதுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
🔹 அப்பாவிகள் துன்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவரது வார்த்தைகள் கருத்தில் கொள்ளாமல், நீதியும் நேர்மையும் கொண்ட தேவன் என்ற கருத்தை சவால் செய்கிறது.
2️⃣ *நியாயமான சோதனைக்கான யோபுவின் அழுகை* (அத்தியாயங்கள் 9, 10)
🔸பில்தாத்தின் கூற்றுகளுக்கு யோபு நியாயமான விசாரணைக் கோரி பதிலளிக்கிறார்.
🔸தேவனுடைய வல்லமையையும் ஞானத்தையும் யோபு ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர் தனது சொந்த துன்பத்துடன் அதைச் சரிசெய்ய போராடுகிறார்.
🔸கடவுளிடம் நேரடியாக தனது வழக்கை முன்வைக்கும் வாய்ப்பிற்காக அவர் ஏங்குகிறார், மேலும் அவரது துன்பங்களின் விவரிக்க முடியாத தன்மைக்கான பதில்களைத் தேடுகிறார்.
🔸விரக்தி இருந்தபோதிலும், யோபு தேவன் மீது தனது அசைக்க முடியாத நம்பிக்கையைப் பேணுகிறார், அவர் குற்றமற்றவர் என்று வாதாடுவதற்கான வாய்ப்புக்காக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.
3️⃣ *மனித புரிதலின் வரம்புகள்*
▫️மனித புரிதலை மிஞ்சும் கடவுளின் ஞானம் மற்றும் வல்லமையின் பரந்த தன்மையை யோபு அங்கீகரிக்கிறார்.
▫️அவரது புலம்பல்கள், எல்லையற்ற கடவுளின் செயல்பாடுகளை வரையறுக்கப்பட்ட உயிரினங்கள் புரிய இயலாததை எடுத்துக்காட்டுகின்றன.
▫️நியாயமான விசாரணைக்கான யோபுவின் வேண்டுகோள், வாழ்க்கையின் மர்மங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்கான அவரது விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
▫️அவரது கேள்விகள், மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட பதில்களைத் தேடும், தெரியாதவற்றுடன் போராடும் உலகளாவிய மனித அனுபவத்துடன் எதிரொலிக்கின்றன.
4️⃣ *யோபுவின் நம்பிக்கையின் நீடித்த மீள்திறன்*
🔺பெரும் துன்பங்கள் மற்றும் விடை தெரியாத கேள்விகள் இருந்தபோதிலும், யோபுவின் விசுவாசம் உறுதியாய் இருக்கிறது.
🔺தன் துன்பத்திற்குப் பின்னால் உள்ள காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், கடவுள் நீதியுள்ளவர் என்ற நம்பிக்கையை அவன் பற்றிக் கொள்கிறான்.
🔺இறைவனின் இறையாண்மையில் யோபுவின் அசைக்க முடியாத நம்பிக்கை வாசகர்களுக்கு நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்காக மாறுகிறது, இது துன்பங்களை எதிர்கொள்ளும் விசுவாசத்தின் மீள்திறனைக் காட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥யோபுவின் அசைக்க முடியாத விசுவாசம், நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக, பதில் தெரியாத கேள்விகளுக்கு மத்தியிலும் இறைவனின் இறையாண்மையில் நம்பிக்கை கொள்ள தூண்டுகிறது.
*‼️சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் இறைவனின் இறையாண்மை பிரகாசிக்கிறது‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
*💠சிப்பிக்குள் முத்து💠*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*யோபு : 8 - 10*
*🎈முத்துச்சிதறல் : 152*
🍧🍧🥏🍧🍧
*அவர்* என்னைப்போல *மனுஷன் அல்லவே.*
(9 : 32)
🥏🥏🍧🥏🥏
*✍️இறைவனையும் அவர் இவ்வுலகில் நடபிக்கும் காரியங்களையும் புரிந்து கொள்வதில் மனுஷருக்குள்ளே பல வேற்றுமைகள் உண்டு.*
இறைவன் என்பவர் எல்லோரையும் ஒன்று போல படைப்பதுமில்லை, நடத்தி செல்வதுமில்லை என்கிற அறிவு எமக்கு தேவை.
*யோபு, அவர் மனைவி, யோபுவின் நண்பர்கள், சாத்தான் போன்ற வெவ்வேறு நபர்கள்*
இறைவனை குறித்த காரியத்தையும், மற்றோரை குறித்த காரியத்தையும் வெவ்வேறு விதமாகவே புரிந்து இருந்தமையால், தங்கள் புரிதலுக்கு ஏற்ற விதத்தில்... பேசிய காரியங்களை குறித்து யோபு புத்தகத்தில் நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம்.
*✍️யோபுவுக்கு ஏற்பட்ட கொடிய நிலை* (பிள்ளைகளை, மற்றும் தனது உடமைகளை, மனைவியை தவிர, அனைத்தையும் ஒரே நாளில் இழந்த நிலை, மற்றும் கொடிய வியாதி நிலை)
*🤣அவரது பாவத்தினால் என்றார் தேமானியனாகிய எலிப்பாஸ்.*
*🤣யோபு ஏற்கனவே தேவனை தேடாததினால் தான் இப்படி இழப்புகளையும், வியாதியையும் பரிசாக பெற்றுள்ளார் என்று கூறினார் சூகியனான பில்தாத்.*
*🤣யோபு ஏதாகிலும் அக்கிரமம், அநியாயம் செய்திருப்பார் ஆகையால் தான் கஷ்டம் வந்துள்ளதாக கூறினார் நாகமாத்தியனான சோப்பார்.*
*🤣யோபுவின் மனைவோ இவ்வற்றுக்கெல்லாம் மேலாக / நேர் மாறாக.....*
அவர் ரொம்ப உத்தமம் மற்றும் தெய்வ பக்தியாய் நடந்து கொண்டதினால் இப்படி வாங்கி கட்டி நிற்பதாகவும், ஒரு மனுஷனின் தேவ பக்தி, உத்தம மற்றும் சன்மார்க்க வாழ்வு கடவுளால் அங்கீகாரம் பெறவில்லையெனில் அந்த கடவுள் என்னத்திற்கு❓🧐🤔
போன்ற மன நிலையில்....
*😃இப்படி கிடந்து கஷ்டபடுவதை காட்டிலும் பேசாம, அந்த கடவுளையே உதறி விட்டு.... தற்கொலை பண்ணிக்கோ, அல்லது செத்து தொலை,*
உன்மேல் வீசும் வாடை என்னால் பொறுக்கவும் முடியவில்லை, உனக்கு என்னால பணிவிடை செய்துக் கொண்டு இனிமேலும் இருக்கவும் இயலாது என்பது போன்ற மனநிலை அந்தம்மாவுக்கு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
📌📌🪶📌📌
*👍யோபு தன் வாழ்நாளில் இறைவனை குறித்த அறிவில் சற்று மற்றோரை காட்டிலும் வித்தியாசமானவராக / சரியாக ஆண்டவரை குறித்து அறிந்தவராக இருக்கிறார்.*
என் தாசனாகிய யோபு பேசியது போல...
*நீங்கள் என்னை குறித்து நிதானமாக பேச வில்லை* என்று யோபுவின் நண்பர்களை ஆண்டவர் கடிந்து கொண்டார்.
*ஆனால் அவரின் மனைவியை,* அந்தம்மா பேசிய பேச்சுக்களை மன்னித்து விட்டு விட்டார் போல தோணுகிறது.
*காரணம்❓🧐🤔*
அவிசுவாசியான மனைவி தன் புருஷனால் பரிசுத்தமாக்க படுகிறாள், என்கிற தெய்வீக கோட்பாட்டை ஆண்டவர் இங்கு உபயோக படுத்தினார் எனலாம். 👍👍👍
*(1 கொரி - 7 : 14)*
🌳🌳🔥🌳🌳
*அவர்* என்னை போல *(நம்மை போல)* மனுஷன் அல்லவே ! என்கிற தெளிவு யோபுவுக்கு இருந்தது.
🎊🎊🛍️🎊🎊
*ஏன் அவர் (இறைவன்) மனுஷன் அல்ல என்று யோபு கூற வேண்டும்❓*
*1*
*மனுஷன்* என்பவன் தேவ சாயலாகவும், தேவ ரூபத்தின்படியும் சிருஷ்டிக்க பட்டவன்.
*ஆனாலும், அவன் தேவன் அல்ல,* தேவனாக *(இறைவனாக)* மாறவும் அவனால் ஒரு போதும் இயலாது.
ஏன் என்றால்....
🍎இறைவன், மனுஷனை காட்டிலும் பலத்தவர் என்பதை யோபு அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
*(பிர - 6 : 10)*
மனுஷன் இறைவனல்ல, *(தெய்வம் அல்ல)*
இறைவனும் / தேவனும்
*(சர்வ வல்லவரும்)* மனுஷனல்ல, என்பதை யோபு அறிக்கையிட்டார்.
*2*
தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுவது முட்டாள்த்தனம் என யோபு அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
*(ஏசா - 45 : 9)*
ஆகையால், இறைவனுக்கும் தனக்கும் நடுவே உள்ள வழக்கை தீர்க்க...
*ஓர் மத்தியஸ்தன்* (Mediator) *இல்லையே!* 🤷♂️ என யோபு அங்கலாய்த்தார்.
*(9 : 33)*
👍ஆனால், *ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்,* நமக்கோ இயேசு கிறிஸ்து என்பவர் *மத்தியஸ்தராக இருந்து*...
இன்னமும் பரலோகில் செயலாற்றிக் கொண்டு....
*(ஊழியம் செய்து கொண்டு)* இருக்கிறார். *ஹாலேலுயா !🙋♀️*
(1 தீமோ - 2 : 5, 6)
*3*
தெய்வத்தின் அதிகாரத்தை யோபு அறிந்து இருந்தார், ஆகையால்...
*அவர் மனுஷன் அல்லவே !*
என்கிறார்.
(ரோ - 9 : 20, 21)
*4*
இறைவன், மனிதனை போல மாறுபடுகிறவர் / மாயம் பண்ணுகிறவர் / பொய்யாக ஒருவனை வேண்டும் என்றே தண்டிக்க கூடியவர் அல்ல, ஆகையால்...
*அவர் மனுஷன் அல்லவே !* என்றார் யோபு.
(எண் - 23 : 19)
🍀🍀🍒🍀🍀
இறைவன் மனுஷனை தன் சாயலாக உருவாக்கிய படியால், மனுஷர் எவரும் தெய்வத்தின் சாயலை ஆண் உருவாகவோ, இல்லை பெண் உருவாகவோ உருவாக்க ஆண்டவர் தடை செய்துள்ளார்.
(யாத் - 20 : 23)
அந்த கட்டளையை தன் இதயத்தில் பெற்று இருந்த யோபு,
*இறைவனை மனுஷனுக்கு சமமாக்க விரும்பவில்லை.*
ஓர் சாதாரண மனுஷனாக தான் இருக்க, தனது உத்தம நிலையை குறித்து இறைவன் சாட்சி இட *இறைவனை இறை நீதிமன்றத்திற்கு இழுக்க யோபு விரும்பவில்லை.*
தான் பாவமே செய்யாதவன் என்று யோபு வாதாடாமல், தான் என்ன பாவம் செய்ததினால், தனக்கு இந்த நிலை❓என்பதை அறிய வாஞ்சித்த பக்தனாக இருக்கிறார்.
எந்த பாவத்திற்கு தான் இன்னும் பலி செலுத்தாமல், அல்லது எந்த பாவத்தை தான் இன்னும் முறையாக ஆண்டவரிடம் அறிக்கையிடாமலும் மன்னிப்பு கோராமலும் இருக்கிறதை அறிய வாஞ்சித்தார் எனலாம்.
தனது இந்த அகோர நிலைக்கான காரணத்தை
தனக்கு ஆண்டவர் வெளிப்பாடு மூலமாகிலும் காண்பித்து கொடுக்க வேண்டும் என்றும் யோபு வாஞ்சித்துள்ளார்.
(7 : 14)
ஆனால்......யோபு விரும்பியதை எல்லாம் அவருக்கு நிறைவேற்ற *ஆண்டவர் மனுஷன் அல்லவே !*
ஒருபுறம் ஆண்டவர் கேட்கும் கேள்விக்கு கூட பிரதியுத்தரம் கொடுக்க யோபு ஆயத்தமாக இருந்தார், ஆனாலும் மறுபுறம், அவர் மனுஷன் அல்லவே ! என்னும் உணர்வினாலும் நிறைந்து இருந்தார்.
(9 : 32)
இன்றைக்கு நிறைய பேர் இயேசுவை *வெறும் மனுஷனாக* மட்டுமே கண்ணோக்குகின்றனர்.
அவர் மனுஷ ரூபமாய் காணப்பட்டு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி தன்னை தாழ்த்தினார்.
*அப்படியிருக்க பாவிகளாக இருக்கும் நாம் நம்மை உயர்த்தி கொள்ளலாமா❓*
இறைவனுக்கு சமமாய் தான் இருப்பதை / அந்த நிலையை கூட இயேசு தன்னை விட்டு பறிக்கப்பட்ட ஓர் நிலையாக அவர் கருதவில்லை.
*அது தான் அவரது* (இயேசுவின்) *தெய்வீகம்.*
ஆனால் சாதாரண மனுஷர்களாகிய நாம் நம்மையே உயர்த்தி கொள்வதினால், இன்னமும் தாழ்த்தப்பட்டே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மனுஷர்கள் கூடி ஒருவருக்கொருவர் நியாயம் பேசலாம். ஆனால்....
*இறைவனை கூப்பிட்டு, அவர் முன் தான் நிரபராதி என்பதை உறுதி படுத்த அவர் ஒன்றும் நம்மை போன்ற மனுஷன் அல்லவே ! என்கிற தெளிவு யோபு பக்தனுக்கு இருந்தது போலவே,* இறைவன் என்னைப்போல மனுஷன் அல்லவே ! என்கிற தெளிவு நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகி இருக்கட்டும்.
*இறைவனை இறைவனாகவே கண்ணோக்குகிறேன்* என்பதே யோபு எமக்கு கூற வரும் செய்தி.
*✍️Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*
Thanks for using my website. Post your comments on this