ஓர் வேண்டுகோள்!
"தசமபாகம் கொடுக்காதவங்களும், சபைக்கு தாமதமா வரவங்களும் செத்துவிழவேண்டும் என்று ரொம்பநாளா ஜெபிச்சிகிட்டிருக்கேன்" என்று ஜெபித்ததாக சொன்ன ஓர் ஊழியக்காரர் பற்றிய கேள்விக்கு அடியேன் பதில் அளித்திருந்தேன்.
அவர் ஜனங்களை ஜெபத்தில் நடத்தும் வேளையில் அப்படி பேசியதாகவும், கூட்டத்தின் முடிவில்: ஜனங்களை ஜெபத்தில் நடத்தும் வேளையில் இப்படி தொடர்பில்லாத விஷயங்களை பேசுகிறதை தவிர்க்கவேண்டும் என்று மூத்த ஊழியர்கள் அவருக்கு அறிவுறுத்தியதாகவும், அவரும் தான் இனி கவனமாகப் பேசுவதாக சொன்னதாகவும் நம்பகமான ஓர் தேவஊழியர் மூலம் அடியேன் கேள்விப்பட்படனன்.
இப்படியிருக்க, குறிப்பட்ட சபையின் ஊழியர்களையும், அவ்வாறு பேசிய ஊழியரையும் பற்றி விமர்சிக்கிறதை தவிர்ப்போம்!
குறிப்பிட்ட ஊழியர் சத்திய அடிப்படையில்லாதக் காரியங்களை எ பேசுகிறதை எங்கும் தவிர்ப்பாரானால் தேவனுக்கு மகிமையாக இருக்கும்.
சில நேரம் வைராக்கியத்தில் சில வார்த்தைகளை பேசிவிடுகிறது பல ஊழியர்களுக்கு நேரிடுகிற ஒன்றுதான்.
அடியேன் இப்படிப்பட்டக் காரியங்களை கடந்த காலத்தில் அதிகம் பேசியிருக்கிறேன்.
என்மேல் அன்புள்ள சில மூத்தபோதகர்கள் எனக்கு கொடுத்த ஆலோசனையினிமித்தமும், சத்தியத்தை உள்ளபடியே புரிந்துகொள்ளத் துவங்கியப் பின்னும் சில வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துவருகிறேன்!
ஒவ்வொரு ஊழியரும் ஏற்ற இடத்தில், ஏற்ற வார்த்தைகளைப் பேச தேவன் அநுக்கிரகம்பண்ணுவாராக!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
"கர்த்தருக்குக் கொடுக்கும் இருதயம் இல்லாதவர்களே தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்கான கட்டளை அல்ல என்று கூறுகிறார்கள்" என்று பல ஊழியர்கள் கூறுகிறார்களே?
✍️ "தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்கான கட்டளை அல்ல" என்று போதிக்கிற அல்லது கூறுகிற பலர் தேவனுக்கு தசமபாகத்தைவிட அதிகம் கொடுக்கிறதை அடியேன் பார்த்திருக்கிறேன்.
"தசமபாகம் கொடுக்கவேண்டும் என்கிற கட்டளை புதிய ஏற்பாட்டு சபையாருக்கும் பொருந்தும்" என்று போ(சா)திக்கிற ஊழியரில் பலர்: பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யவோ, அந்நியரை உபசரிக்க நாடவோ (ரோமர் 12:13), தங்கள் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடுக்கவோ, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடுக்கவோ (ரோமர் 12:20), தங்களுக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யவோ (கலா.6:10), இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ள விசுவாசிகள் ஏழைகளுக்கு தாராளமாய்க் கொடுக்கவோ, உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவோ (1தீமோ.6:17-19), நன்மைசெய்யவோ, தானதர்மம்பண்ணவோ (எபி.13:16), திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கவோ (யாக்.1:27), வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு சரீரத்திற்கு வேண்டியவைகளை கொடுக்கவோ
(யாக்.2:16), இவ்வுலக ஆஸ்தியுள்ள, கிறிஸ்தவன் குறைச்சலுள்ள தன் சகோதரனில்
கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரவோ
(1யோவான் 3:18), சபையாருக்கு கண்டிப்பாக போதித்தாக கடந்த 24 வருட ஊழிய அனுபவத்தில் அடியேன் ஒருநாளும் பார்த்ததில்லை!
தசமபாகம் கொடுப்பதைக் குறித்து சபையாருக்கு கண்டிப்பாக போதிக்கிற, மாதந்தோறும் தவறாமல் தசமபாகம் தருகிறார்களா என்று கண்காணிக்கிற, தசமபாகம் கொடுக்கத் தவறுகிறவர்களை கண்டிக்கிற அல்லது சபிக்கிற இவர்கள்: பிறருக்குக் கொடுப்பதைக்குறித்து பட்டும்படாமல் போதிக்கிறதும், அல்லது ஒருபோதும் போதியாதிருக்கிறதும், சபையார் பிறருக்கு நன்மை செய்யாதிருக்கிறதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாதிருக்கிறதும், இவர்களின் சுயநலத்தையும் கொடூரமுமான இருதயத்தையும் வெளிப்படுத்துகிறது அல்லவா?
இன்றைக்கு காணிக்கை தசமபாகம் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிற கிறிஸ்தவரில் அநேகர், சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஏழைகளுக்கு கொடுக்கும் சிந்தையற்றவர்களாய் இருக்கிறதைக் காணமுடிகிறதல்லவா?
ஊழியருக்கு காணிக்கை தசமபாகம் சரியாகக் கொடுத்துவிட்டால்போதும், வேறு எவருக்கும் கொடாவிட்டாலும் தேவன் தவறாக நினைக்கமாட்டார் என்று இவர்கள் நம்புகிறார்கள்!
தேவன் தங்களுக்குத் தரும் ஆசீர்வாதங்களில் ஊழியருக்கு மட்டுமல்ல, சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஏழைகளுக்கும் அவைகளில் பங்குண்டு, ஊழியருக்கு தவறாமல் கொடுப்பதுபோல ஏழைகளுக்கும் தவறாமல் கொடுக்கவேண்டும் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லை, இப்படிப்பட்ட அறிவற்றவர்களாகவே இவர்கள் தங்கள் ஊழியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்!
தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று சபையாருக்கு ஒருபோதும் போதியாத ஆதிஅப்போஸ்தலர்கள்: விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவிக்கவும்,
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுக்கவும் உபதேசித்தார்கள். (அப்.2:42,44,45; கலா.6:10)
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, தங்கள் பாதத்திலே வைத்த கிரயத்தை, சபையாரில் அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுத்து, அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிராதபடிக்கு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்! (அப்.4:35)
🤔 இன்றைய அப்போஸ்தலரோ, "நீ தசமபாகத்தை சரியாகக் கொடுத்தால்தான், உன் தரித்திரம் உன்னைவிட்டுப் போகும். நீ தசமபாகம் கொடாதவரை உனக்கு சாபம்தான்" என்று சபையாரை அச்சுறுத்துகிறார்களே!
இன்று தசமபாகத்தை குறித்து அதிகம் வலியுறுத்தாத, அல்லது அதிகம் போதியாத ஊழியர்கள்: அருடப்பணி ஊழியங்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், அநாதைகளுக்கும், முதியோர்களுக்கும் தாராளமாய் கொடுக்கும்படி போதிக்கிற தயாளசிந்தையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
பிற ஊழியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் கொடுக்கும்படி போதிக்கிற மற்றும் பிறருக்குக் கொடுக்கிற இவர்களுக்கு, ஒரு குறைவும் இராதபடிக்கு சபையார் பார்த்துக்கொள்ளுகிறதைக் காணமுடிகிறது!
மேலும், இவர்களால் போதிக்கப்படுகிற கிறிஸ்தவர்கள் பரந்த மனதுள்ளவர்களாகவும், அனைத்து ஊழியங்களையும் ஊழியர்களையும் ஏழை எளியவர்களை குறித்து அதிக கரிசனையுள்ளவர்களாகவும், தங்கள் செல்வங்களை அவர்களுக்காய் தாராளமாய் செலவிடுகிறவர்களாகவும் இருக்கிறதைக் காணமுடிகிறது!
தங்களுக்கும், தங்கள் ஊழியத்திற்கும் கொடுப்பதைப்பற்றி மட்டுமே போதிக்கிற ஊழியர்களுக்கு கொடுப்பதை விசுவாசிகள் குறைத்துக்கொண்டு, பிற ஊழியங்களையும், ஏழைகளையும் ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறதையும் இந்நாட்களில் காணமுடிகிறது!
தேவஜனங்களின் உள்ளான அன்பையும் ஆதரவையும் மதிப்பையும் மனதாரப் பெறவேண்டுமானால், இன்றைய ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது பிறருக்கோ கொடுப்பதைக்குறித்த ஆதிசபை ஊழியர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகிறதே நல்லது!
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்: எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். (நீதி.11:25)
*- க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
சின்ன பசங்களெல்லாம் பெரிய சபைகளில், பெரியவர்களுக்கு பிரசங்கம்பண்ணுவது சரியா?
✍️ சரிதான்!
ஊழியரும் விசுவாசிகளும்
புத்தியிலே தேறாத குழந்தைகளாயிருக்கிற (1கொரி.14:20),
கேள்வியில் மந்தமுள்ளவர்களாயிருக்கிற (எபிரே.5:11),
நீதியின் வசனத்தில் பழக்கமில்லாத,
பாலுண்கிற குழந்தையாயிருக்கிற (எபிரே.5:12,13),
மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிற குழந்தைகளாயிருக்கிற (எபேசி.4:14),
ஆவிக்குரியவர்களாயிராமல், தங்களுக்குள் பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உடைய மாம்சத்துக்குரியவர்களும், கிறிஸ்துவுக்குள் குழைந்தைகளுமாயிருக்கிற (1கொரி.3:1-4),
இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாகாத (1கொரி.1:5),
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தாத (2கொரி.7:1),
உதாரகுணத்திலே எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாகாத (2கொரி.9:11),
சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிராத (கொலோ.2:10),
தங்களைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளாத (கொலோ.3:9,10),
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளாத (கொலோ.3:14),
தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறாத, பூரண நிச்சயமுள்ளவர்களாய் நிலைநிற்காத,
(கொலோ.4:12),
கிறிஸ்துவுக்குள் தேறாத, எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியில்லாத
(2தீமோ.3:16),
அன்பில் பூரணப்படாத (1யோவான் 4:17,18),
சபைகளில் பிரசங்கிக்க சிறுபிள்ளைகளே போதும்!
சத்தியத்தில், ஆவிக்குரிய ஜீவியத்தில் தேறாத அல்லது வளராத குழந்தைகளான ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் பிரசங்கிக்க: மனந்திரும்பின, முழுகி ஞானஸ்நானம் பெற்ற, பரிசுத்த ஆவியை பெற்ற அநுபவமிராத; ஆவிக்குரிய ஜீவியத்தில் முதிர்ச்சியடையாத, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரமான உபதேசம் என்னவென்றே அறியாத குழந்தைகளே போதும்!
ஆவிக்குரிய ஜீவியத்தில் முதிர்ச்சியுள்ள, அப்போஸ்தல தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் தேறின புருஷர்களின் பிரசங்கம் மேற்காணும் குழந்தைகளான ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் புரியவும் செய்யாது.
குழந்தைகள் குழந்தைகளை அழைத்து, தங்கள் சபைகளில் பேசவைப்பதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this