1 KINGS : 16 - 17
*WHAT A GOD WE SERVE* ❗️
*God who provides supernaturally for His children* ‼️
💥 "I have commanded the ravens to feed you". The ravens brought him bread and meat in the morning, and bread and meat in the evening (1 Kings 17:4,6)
💥 "I have commanded a widow there to provide for you" . 'The bin of flour shall not be used up, nor shall the jar of oil run dry, until the day the Lord sends rain on the earth.' (1 Kings 17:9,14)
💥 An angel touched him, and said to him, “Arise and eat.” he looked, and there by his head was a cake baked on coals, and a jar of water (1 Kings 19:5,6)
💥 You gave them bread from heaven for their hunger, And brought them water out of the rock for their thirst (Neh 9:15)
💥 Five loaves and the two fish, those who had eaten were about five thousand men.(Mark 6:41,44)
💥He took the seven loaves and gave thanks, broke them and gave them. Those who had eaten were about four thousand (Mark 8:6,9)
‼️ *You sustained them* in the wilderness; *They lacked nothing* (Neh 9:21) Thank You Lord 🙏 🙏
Usha
[29/07, 07:50] (W) Arun Selva Kumar: 🌈 *There must be a Cherith before there can be a Carmel. Before the crown, there must be the Cross.*
💪🏼I Ki.17:2-3- There’s something that should be noted here about Elijah—God had to train this man. *God has always had a method of training the men He uses by taking them to the desert.* We will recall that that is where He trained Moses. God took Abraham out of Ur of the Chaldees and placed him in a land with rugged terrain. God did the same for John the Baptist, and the apostle Paul spent at least two full years out in the Arabian desert. This is God’s method of training His men. Now, He is going to take out this man Elijah and teach him several things he needs to learn. *There must be a Cherith before there can be a Carmel. Before the crown, there must be the Cross. Therefore, if we’re in Cherith today, a place where we’re not in the limelight, perhaps it’s because, like Elijah, we’re being prepared for something greater ahead.*
⛹️♂️ *Application* : I Ki.17:8- *It is said of Hudson Taylor that when he prepared young missionaries for service in his mission, he insisted, “Remember that when you come out here you are nothing. It is only what God can and will do through you that will be worth anything.”* You and I are just dried-up brooks unless the Word of God is flowing through us. There was a wedding in Cana of Galilee: what was the most important thing at that wedding? Was it the bride’s dress? No! It was that there were some empty water crocks there. The Lord filled them with water, and He was able to serve the guests a delicious refreshment. That was the important thing at the wedding. *We are nothing but empty flour barrels and empty water crocks. We are nothing until the water of life and the bread of life have been put into us.* Martin Luther once said that God creates out of nothing. Until a man recognizes that he is nothing, God can do nothing with him. That is the problem with many of us today: we are too strong, we have too much ability, and God cannot use us.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x--x-x-x
1 இராஜாக்கள்: 16-17
💐💐💐💐💐💐💐
*சாறிபாத் ஊர் விதவை*
எலியாவைப் பராமரிக்கும்படி கர்த்தர் இந்த விதவையைத் தெரிந்தெடுக்கிறார். இவள் சமுதாயத்திலே பிரபல்யமானவள் அல்ல. ஏழை விதவை. மகனோடு தனிமையில் கஷ்ட ஜீவனம் செய்பவள். இவளிடத்தில் திரளான பொக்கிஷமோ, களஞ்சியம் நிறைய தானியமோ இல்லை.
◾அவளிடத்தில் பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் மாத்திரமே இருக்கிறது. அப்பம் சுடுவதற்கு வீட்டில் விறகுகள் கூட இல்லை. அவள் தெருவில் வந்து இரண்டு விறகுகளைப் பொறுக்குகிறாள். ஆனாலும் எலியா தீர்க்கத்தரிசியை பராமரிக்க கர்த்தர் இந்த விதவையைத் தெரிந்தெடுக்கிறார்.
◾ இந்த உலகில் பலவீனமா யிருக்கிறவர்களையும் எளிமையானவர்களையும் கர்த்தர் பயன்படுத்தி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார்.
◾ எலியா தீர்க்கதரிசி குடிக்க அவளிடம் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் கொண்டு வரப்போகும் போது கொஞ்சம் அப்பமும் கொண்டு வா என்று கேட்கிறார். அந்த ஸ்திரீ எலியா விடம் எவ்வளவு மாவும் எண்ணெயும் இருக்கிறது என்பதை சொன்னபோது, *நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து* என்று ஆசீர்வாதமான வார்த்தை களை அவளிடம் சொன்ன போது அவளுடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது.
◾சாறிபாத் ஊர் விதவை எலியாவின் வார்த்தைகளை நம்புகிறாள். அவள் அந்த பஞ்ச நிலைமையிலும் தன்னுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசுவாசத்தோடு கீழ்ப்படிகிறாள்.
◾அவள் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிக்கு நன்மை செய்யும் போது கர்த்தர் அவளுக்கு நன்மை செய்கிறார்.
*விசுவாசமும் கீழப்படிதலும் அற்புதத்தைப் பெறுவதற்கான படிகள்*.
*இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்*.
(வெளி: 3:20)
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடை*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1இராஜாக்கள் 17: 9- 16.
1. இங்கு *எலியாவின் வார்த்தையின் படி தேசத்திலே பஞ்சம். மழையில்லை* . ஆனால் *எலியா கர்த்தருக்கு முன்பாக நிற்கிறார். அப்படியானால் எலியாவை போஷிப்பது கர்த்தருடைய பொறுப்பு. காகத்தை கொண்டு போஷிக்கிறார். கேரீத் ஆற்றினால் தாகம் தீர்க்கிறார்.*
ஆம், *நாமும் கூட கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவர்களாய், ஜெபிக்கிறவர்களாய், துதிக்கிறவர்களாய், வேதத்தை தியானித்து அவரோடு சஞ்சரிப்பவர்களாய் இருப்போமானால் நம்மை போஷிப்பது, நடத்துவது எல்லாம் அவருடைய பொறுப்பு. நம் தேவன் பஞ்ச காலத்தில் நம் ஆத்துமாவையும், சரீரத்தையும் போஷிக்கிறவர், திருப்தியாக்குகிறவர், உயிரோடே காக்கிறவர்* .
2. *ஆற்றின் தண்ணீர் வற்றும் சூழ்நிலையும் ஏற்படும்*. அப்போது கர்த்தர் எலியாவுக்கு கேரீத்திலிருந்து சாரிபாத்திற்கு நடக்க சொல்கிறார். அதுவும் விதவையிடம் போக சொல்கிறார். ஆனால் *எலியாவின் கீழ்ப்படிதல், விசுவாசம், தைரியம் மேலானது. பஞ்சத்தில், அதுவும் விதவை வீட்டில் என்னை போஷிக்க முடியுமா? என எலியா *கர்த்தரிடம் கேள்வி கேட்காமல், நடக்கிறார்*.
ஆம், பிரியமானவர்களே இந்த கீழ்ப்படிதல், விசுவாசம் நம்மில் இருக்கிறதா? *நாம் நம்பிக்கை வைத்திருக்கிற ஆறு வற்றி போகலாம். ஆனால் நம்மோடிருக்கிற கர்த்தர் அடுத்த இடத்தை நமக்கு முன் குறித்து வைத்து இருக்கிறார்.*
3. கர்த்தருடைய திட்டத்தின் படியே *அந்த விதவையை எலியா சந்திக்கிறார். கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் அப்பம் எனக்கு கொண்டு வா என்கிறார்.அவளோ என்னிடம் இருப்பதெல்லாம் கொஞ்சம் மாவும், கொஞ்சம் எண்ணெயுமே என்கிறாள்*. ஆனால் எலியாவோ அவளை பார்த்து *பயப்படாதே*.என கூறி தைரியப்படுத்துகிறார். *நீ முதலிலே எனக்கு ஒரு சிறிய அடை செய்து கொண்டு வா*. அதன் பின் நீயும், உன் குமாரனும் சாப்பிடலாம் என்றார்.
அவருக்கு முதலிலே கொடுத்து விட்டால் நானும், என் மகனும் சாப்பிட என்ன செய்வோம் என அவள் கலங்கவில்லை. காரணம், *மழையை கர்த்தர் வருஷிக்கும் மட்டும் பானையில் மாவும், கலசத்தில் எண்ணெயும் குறைந்து போவதுமில்லை* என்ற வாக்குதத்தத்தை அந்த விதவை விசுவாசித்தாள்.
நமக்கோ ஆவியானவர் வேதத்தில் எவ்வளவோ வாக்குதத்தங்களை எழுதி நம் கரத்திலே தந்திருக்கிறார். இவற்றை நாமும் இந்த விதவையை போல விசுவாசித்து கீழ்ப்படிவோம்.
4. ஐயோ என் ஒரே மகன் பசியினால் மரித்து விடக்கூடாதே என்ற *சந்தேகம் அவளிடம் வரவேயில்லை*. ஆகவே பஞ்ச காலத்தில் அவளையும் , அவள் மகனையும் , அவள் வீட்டாரையும் , எலியாவையும் கூட கர்த்தர் போஷித்தார்.
5. மட்டுமல்ல, கர்த்தருடைய தீர்க்கதரிசிக்கு *தங்க அவள் வீட்டில் இடம் கொடுத்ததால் மரித்து போன அவள் மகனை எலியா உயிரோடெழுப்பினார்.*
இன்று நம்முடைய வாழ்க்கையிலும் *நம் இரட்சகராகிய இயேசு, தங்க இடம் கொடுப்போமானால், அவரோடு ஐக்கியமாய், இணைந்து வாழ்வோமானால் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அவர் போஷிப்பார். பஞ்சங்கள் வரலாம். நாம் நம்பியிருக்கிற, சுகமாய் படுத்திருக்கிற ஆறுகள் வற்றி போகலாம். ஆனாலும் கர்த்தர் நம்மை போஷிப்பார். வழி நடத்துவார்.* அவர் வாக்கை நம்பி, கீழ்ப்படிந்து, அவர் சொல்லும் பாதையில் நடப்போம். *அவர் நம்மை பஞ்சத்தில் உயிரோடே காப்பார். மரித்த நம் ஆத்துமாவுக்கு ஜீவன் தருவார்.*
*முதல் சிறிய அடை* விதவையையும், அவள் மகனையும், அவள் வீட்டாரையும் காப்பாற்றியது. ஆம், *நம் வாழ்க்கையில் முதலிடத்தை கர்த்தருக்கே கொடுப்போம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்*. ஆமென். அல்லேலூயா.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
1.ராஜாக்கள்.17:16.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"கர்த்தருடைய வார்த்தையின்படி, பாத்திரத்தில் மாவு வீணாகவில்லை, எண்ணெய் குறையவும் இல்லை."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தெய்வீக அன்பின் உண்மைத்தன்மையை நாம் காணலாம்.
அந்த விதவைக்கு அன்றாட தேவைகள் இருந்தன.
பஞ்ச காலத்தில் உணவளிக்கத் தனக்கும் தன் மகனுக்கும் மாத்திரம் கொஞ்சம் மாவு இருந்தது; மேலும், எலியா தீர்க்கதரிசிக்கும் உணவளிக்கப்பட வேண்டும்.
ஆனால் தேவை மும்மடங்காக இருந்தபோதிலும், உணவு விநியோகம் குறையவில்லை, ஏனென்றால் அவளுக்கு தொடர்ந்து மாவும் எண்ணையும் இருந்தது.
ஒவ்வொரு நாளும் அவள் பாத்திரத்தில் மாவும்,எண்ணையும் குறையவில்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் அது அப்படியே இருந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கு துன்பம் வந்தாலும் , நமக்கு உதவியும் வரும்.
கடவுளின் கிருபையும் இரக்கமும் நமது தேவைகள் அனைத்திலும் நிலைத்திருக்கும். உண்மையான குறைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.
அந்தப் பெண் ஒருபோதும் பசியுடன் இருந்ததில்லை, ஆனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
. அது நமக்கும் அப்படியே இருக்கும்.
நமது பாதுகாப்பு இடம் ஒத்தாசை வரும் பர்வதங்களாக இருக்கும் என்பதை நாமே கண்டுபிடிப்போம்.
நமது உணவு நமக்குக் கொடுக்கப்படும்.
நமது தண்ணீர் உறுதியாக கிடைக்கும்.
கடவுள் நம் பாதுகாவலர்.
கடவுளின் எல்லையற்ற செல்வங்கள் ஒருபோதும் தீர்ந்துவிடாது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *எலியா* 🍂
இந்த எலியா என்பவன் யார்? அவனது *பிரவேசம் திடீராக உள்ளது.* பரிசுத்த வேதாகமம் அவனை *திஸ்பியனாகிய எலியா* என்று குறிப்பிடுகிறது. அவனைப் பற்றி நமக்கு வேறு எதுவும் தெரியாது. எலியாவின் தந்தை யார்? அவர் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? இந்த துணிச்சலான தீர்க்கதரிசி பற்றி விரிவான விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
எலியா *இஸ்ரவேல் தேசத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தான்*. யூதாவுக்கு அவர் தீர்க்கதரிசனம் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், மிகவும் பொல்லாத அரசனாகிய ஆகாபின் ஆட்சியில் துணிச்சலான எலியா தோன்றினான்.
📖 *கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான் (1 இரா 17:1).*
அவனது அறிக்கை தெளிவாக உள்ளது. *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஜீவிக்கிறார்.* ஆண்டவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை எலியா வலியுறுத்தினான். தேவனாகிய கர்த்தர் சதா காலமும் அரசாளுகிறார். இந்த உண்மைதான் எலியாவைத் தைரியமாக அவருடைய வார்த்தையை அறிவிக்க பலப்படுத்தியது. *நம்முடைய தேவன் உயிரோடிருக்கிறார். நம்முடைய மீட்பர் ஜீவிக்கிறார். நாம் அவருடைய பாதுகாப்பில் இருக்கிறோம்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
🌟 *நீர் தேவனுடைய மனுஷன் என்று இப்போது அறிந்திருக்கிறேன்* 🌟
💥 *அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.*
🔹 ஆகாப் ராஜாவின் ஆளுகையின்போது, இஸ்ரவேலரின் விக்கிரக ஆராதனையின் நிமித்தம், தேவன் எலியா தீர்க்கதரிசியின் மூலமாக *இஸ்ரவேல் தேசத்தில் மழை பெய்யாதபடியினால்* பஞ்சம் வரும் என்று அறிவித்தார். கர்த்தர் எலியாவைக் கேரீத் ஆற்றண்டை போகச்சொல்லி காகங்களைக்கொண்டு அவனைப் போஷித்தார். ஆறு வறண்டபோது, சாறிபாத் ஊரிலுள்ள ஒரு விதவையைக்கொண்டு அவனைப், பராமரிக்கும்படி அங்கே செல்லும்படிக் கட்டளையிட்டார்.
🔹 எலியா சாறிபாத்துக்குச் சென்று, அந்த விதவையையிடம் இருந்த மாவிலிருந்து ஒரு சிறிய அடையைப் பண்ணி அவனிடத்தில் கொண்டு வந்தால், கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று அவளிடம் சொன்னான். அவள் கீழ்ப்படிந்தாள்; அவளும் அவளுடைய வீட்டாரும் எலியாவும் அநேகநாள் சாப்பிட்டார்கள். ஒரு நாள் *அந்த விதவையின் குமாரன் நோய்வாய்ப்பட்டு மரித்தான்.* மரித்த பிள்ளையை எலியா தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே கொண்டுபோய், அவன் பிழைக்கும்படி அவனுக்காக கர்த்தரிடம் மன்றாடினான். கர்த்தர் அற்புதமாக அவனுடைய ஜீவனைத் திரும்பக் கொடுத்தார். வேதத்தில் எழுதப்பட்டபடி, மரித்த ஒருவன் திரும்பவும் ஜீவன் பெற்றது இதுதான் முதல்முறை.
🔹 எலியாவின் மூலம் கர்த்தர் எவ்வாறு கிரியைசெய்தார் என்பதை அந்த ஸ்திரீயால் காண முடிந்தது. முதலில் அற்புதமாகப் போஷித்தார், பின்பு மரித்த அவளுடைய குமாரனைப் பிழைக்கச் செய்தார். எனவே, அவன் தேவனுடைய மனுஷன் என்றும், அவனுடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும் உறுதியாகச் சொன்னாள்.
🔹 *"கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்."* (ரோமர் 1:4-5). உயிர்த்தெழுந்ததினாலே, இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார். தேவனுடைய மனுஷனை தேவனுடைய குமாரனுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
🔹 எலியா தேவனுடைய மனுஷனாக *மரித்த பிள்ளையைப் பிழைக்க வைத்தான்;* இருப்பினும், இந்தப் பிள்ளை மீண்டும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். இயேசு தேவனுடைய குமாரனாக *நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்;* நாமோ என்றென்றைக்கும் பிழைத்திருப்போம். இயேசு கூறுகிறார்: *"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”* (யோவான் 11:25). வியாதியினால் மரித்த பிள்ளை எலியாவின் ஜெபத்தினால் ஜீவன் பெற்றான். நம்முடைய பாவங்களில் மரித்த நாம் *இயேசுவினால் புது ஜீவன் பெற்றிருக்கிறோம். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக உயிர்த்தெழுந்தார்* (ரோமர் 4:25).
🔹 நித்திய ஜீவனைப் பெற, நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த கிறிஸ்து நம்மில் பிழைத்திருக்க ஒப்புக்கொடுக்க வேண்டும். பவுல் கூறுகிறான்: *“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.”* (கலாத்தியர் 2:20).
🔹 இயேசுவினால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வசனத்தின் மூலம் நாம் ஜீவனைப் பெறுகிறோம்: *"நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது."* (யோவான் 6:63). நாம் வேதத்தை விசுவாசித்து, அதிலுள்ள தேவனுடைய வசனங்களை தியானித்து, அவற்றில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின்படி வாழ்கிறோம். அத்தகையவர்களுக்கு, வேதத்தின் மூலம் வாக்குப் பண்ணப்பட்ட நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு.
🔹 மரித்துப் பிழைத்த சாறிபாத் விதவையின் குமரன், *எலியா ஒரு தேவனுடைய மனுஷன் என்பதற்கு ஆதாரம்.* ஒரு காலத்தில் தனது பாவங்களில் மரித்திருந்து, இப்போது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடன் ஒரு ஜீவனுள்ள ஐக்கியத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்டிருக்கிற ஒரு உண்மையான கிறிஸ்தவன், கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதற்கு ஆதாரம். ஒரு பாவியை தேவனுடைய பிள்ளையாக மாற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமைக்கு நாமே சாட்சிகள்.
🔻 *உயிர்த்த கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்தும் உண்மை சாட்சிகளாக நாம் வாழ்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *எலியா தேவனுடைய மனுஷனாக மரித்த பிள்ளையைப் பிழைக்க வைத்தான்;* இருப்பினும், இந்தப் பிள்ளை மீண்டும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். இயேசு தேவனுடைய குமாரனாக நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்; நாமோ என்றென்றைக்கும் பிழைத்திருப்போம்.*
2️⃣ *நித்திய ஜீவனைப் பெற, நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த கிறிஸ்து நம்மில் பிழைத்திருக்க ஒப்புக்கொடுக்க வேண்டும்.*
3️⃣ *மரித்துப் பிழைத்த சாறிபாத் விதவையின் குமரன், எலியா ஒரு தேவனுடைய மனுஷன் என்பதற்கு ஆதாரம். இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடன் ஒரு ஜீவனுள்ள ஐக்கியத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்டிருக்கிற ஒரு உண்மையான கிறிஸ்தவன், கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதற்கு ஆதாரம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
Widow at Zarephath to whom God sent Elijah didn't know him at first. But she obeyed his directions and was provided for, as the peophet had said all through the drought and famine. She and her son who were ready to die could live well.
But now tragedy struck. Her son died. Widow calls Elijah as "Man of God"... " did you come to remind me of my sin? "
Over the period of relating to Elijah, she recognised him as man of God and also that she is a sinner.
Recognition of our sinfulness, acknowledging the sin, repenting and confessing is the way forward to a closer walk with God.
I believe the widow's faith was strengthened through her experiences .
Do we learn from our different experiences and draw closer to our maker and redeemer?
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
💫தெய்வீக விசுவாசம்💫*
1 இராஜாக்கள் 17
☄️இந்த அத்தியாயம் இஸ்ரவேலின் பொல்லாத ராஜாவாகிய ஆகாப், மற்றும் தேவனுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசி, எலியா ஆகியோரை சித்தரிக்கிறது.
1️⃣ *ஆகாபின் கீழ்ப்படியாமை*
🔹ஆகாப், இஸ்ரவேல் மக்களை விக்கிரக ஆராதனைக்கும் துன்மார்க்கத்திற்கும் வழிநடத்திய, தேவனை விட்டு விலகிய ஒரு ராஜா.
🔹அவரது கீழ்ப்படியாமை அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் விளைவுகளை ஏற்படுத்தியது.
🔹தேவனுக்கு எதிரான ஆகாபின் கலகம், தேசத்தின் மீது கடுமையான வறட்சியைக் கொண்டு வந்து, பெரும் துன்பத்தையும் பஞ்சத்தையும் ஏற்படுத்தியது.
2️⃣ *எலியாவின் கீழ்ப்படிதல்*
🔸இந்த நெருக்கடியின் மத்தியில், ஆகாபை எதிர்கொள்வதற்கும் தீர்ப்புச் செய்தியை வழங்குவதற்கும் தேவன் எலியாவைத் தேர்ந்தெடுத்தார்.
🔸தனிப்பட்ட ஆபத்து இருந்தபோதிலும், எலியா கீழ்ப்படிதலுடன் தேவனுடைய கட்டளையைப் பின்பற்றி ராஜாவுக்கு செய்தியை வழங்கினார்.
🔸எலியாவின் கீழ்ப்படிதல் விசுவாசத்தின் செயல் மட்டுமல்ல, சூழ்நிலையின் மீது தேவனுடைய இறையாண்மையில் அவர் வைத்திருந்த நம்பிக்கையின் நிரூபணமாகவும் இருந்தது.
3️⃣ *தேவனுடைய ஏற்பாடு*
▪️செய்தியை வழங்கிய பிறகு, தேவன் எலியாவை கேரீத் ஆற்றின் அருகே சென்று ஒளிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
▪️வறட்சியின் போது காகங்களைக் கொண்டு எலியாவை போஷிப்பதாக தேவன் அவருக்கு வாக்குறுதி அளித்தார்.
▪️இந்த ஏற்பாட்டின் செயலில், தேவனை கீழ்ப்படிதலுடன் பின்பற்றுபவர்களிடம் அவர் உண்மையுள்ளவராய் இருப்பதைக் காண்கிறோம்.
▪️நெருக்கடியின் மத்தியிலும் கூட, நாம் அவரை நம்பி கீழ்ப்படிந்தால், தேவன் நம் தேவைகளை வழங்க முடியும்.
4️⃣ *சாறிபாத்தில் நடந்த சந்திப்பு*
▫️எலியா சாறிபாத்தின் விதவையிடம் வந்தபோது, அவர்கள் பட்டினியால் இறப்பதற்கு முன்பு தனக்கும் அவரது மகனுக்கும் கடைசி உணவைத் ஆயத்தப்படுத்துவதற்காக விரகுகளை பொறுக்கினாள்.
▫️தேவனுடைய வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்த எலியா, விதவையிடம் தனக்கு முதலில் ஆகாரத்தை ஆயத்தப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார், வறட்சி முடியும் வரை அவளுக்கு மாவும் எண்ணெயும் தீர்ந்துவிடாது என்று உறுதியளித்தார்.
▫️விதவை எலியாவின் வார்த்தைகளை நம்பினாள், தேவன் அற்புதமாக அவளையும் அவள் வீட்டாரையும் பராமரித்தார்.
5️⃣ *விதவையின் மகன் மீண்டும் உயிர் பெறுதல்*
1 இராஜாக்கள் 17: 17-24.
🔺எலியா தனது வீட்டுக்காரியின் குழந்தையின் மரணத்தை எதிர்கொள்கிறார்.
🔺அவர் இறைவனை நோக்கிக் கூப்பிட்டு, அந்தச் சிறுவனின் மேல் மூன்றுமுறை குப்புற படுத்தார்.
🔺அவர் பெரிய இதயத்துடனும் நெருக்கத்துடனும் ஜெபித்தார், மேலும் தேவன் விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்தார்.
🔺கடவுளைப் பற்றி அதிகம் அறியாத விதவை, எலியாவின் மூலம் அவரை ஜீவனுள்ள தேவன் என்று அறிந்து கொண்டார்!
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥ஆகாபுக்கும் எலியாவுக்கும் இடையிலான சந்திப்பு நெருக்கடி காலங்களில் கீழ்ப்படிதலுக்கான ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.
💥ஆகாபின் கீழ்ப்படியாமை நியாயத்தீர்ப்பையும் துன்பத்தையும் கொண்டுவந்தது, அதே சமயம் எலியாவின் கீழ்ப்படிதல் தேவனுடைய ஏற்பாட்டிற்கும் ஆசீர்வாதத்திற்கும் வழிவகுத்தது.
💥எலியாவின் கீழ்ப்படிதலின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும், தேவன் நமக்கு வழங்குவதற்கும், நம்மை வழிநடத்துவதற்கும், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியிலும் நம்மை வழிநடத்துவதற்கு உண்மையுள்ளவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
*‼️தேவனுடைய இறையாண்மையை நம்பி, அவருடைய விசுவாசத்தை அனுபவிப்போம்‼️
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
Thanks for using my website. Post your comments on this