வேதபகுதி: யோவான் 21:1-25
" உங்களுக்கு அகப்படும் "*
*" அப்பொழுது அவர்; நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார் " - யோவான் 21:6*
*வாழ்க்கை முழுவதுமே தேடல்கள் நிறைந்ததாய் இருக்கிறது. பணம், பதவி, அந்தஸ்து, ஆஸ்திகள், சமாதானம், சந்தோஷம், உறவுகள் இப்படி எதையாவது ஒன்றை மனிதர்கள் தங்கள் இறுதி மூச்சுவரைக்கும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தேடுதலின் பெரும்பாலான மனிதர் ஏமாற்றத்தையும், ஒருசிலரே தாங்கள் தேடினதை பெற்றுக்கொண்டதையும் காணலாம். இயேசுவால் அழைக்கப்பட்டு, அவரோடுகூட இருந்த சீஷர்களும் மிகப்பெரிய தேடலில் இறங்கினார்கள். மீன்களைத் தேடி கடலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. இயேசுவும் இல்லாமல் அவருடைய வார்த்தையும் இல்லாமல், இவர்கள் சுயமாய்ச் சென்றால், எப்படி அகப்படும்?*
*பல நேரங்களில் நாமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எதுவும் கிடைப்பதில்லை. கடைசியில் சோர்ந்து போகிறோம். நம்முடைய தேடுதலில் நாம் வெற்றியடையாததற்கு என்ன காரணம் என்று எப்போதாவது நாம் யோசித்திருக்கிறோமா? தேவனுடைய வார்த்தைகளின்படியே நம்முடைய தேடுதல் இருக்குமானால், நிச்சயமாகவே நமக்கு ஏமாற்றங்கள் வந்திருக்காது. இயேசுவினுடைய சீஷர்களின் தேடுதல், இயேசுவின் வார்த்தைகளுக்கும், அவருடைய ஆலோசனைகளுக்கும் பின்பு முடிவுக்கு வந்தது. அவர்கள் தேடின திரளான மீன்கள் அவர்களுக்குக் கிடைத்தது.*
*நம்முடைய தேடுதலில் நாம் தேவனுடைய ஆலோசனையை நாட வேண்டும். நமக்குத் தேவையானவைகள் எங்கு இருக்கிறது என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். எனவே, அவருடைய ஆலோசனைகள் நமக்கு வரும் போது, அதன்படி நாம் செயல்பட்டால் நிச்சயம் நமக்கு ஏமாற்றங்கள் இருக்காது. நாமும் சுகமாயிருப்போம். ஆனால், இன்றைய வேதனை என்னவென்றால், தேவனுடைய ஆலோசனைகளை பலர் எதிர்பார்ப்பதுமில்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. நாமோ அப்படியிராமல், தேவனுடையவைகளை ஏற்றக்கொண்டு, அதன்படி செயல்படுவோம். ஆசீர்வாதமாயிருப்போம்.*
*" நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும் " - நீதி 24 : 6*
----------------------------------------------------------
சிந்தனைக்கு
*! தேவனுடைய ஆலோசனையே தேடுதலுக்கான முற்றுப்புள்ளி !
---------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
Mobil No: 9940018988
Email id: jesusthefoundation@gmail.com
Bible Reading: John 21:1-25*
YOU WILL FIND
*“He said, “Throw your net on the right side of the boat and you will find some.”
John 21:6
*Life is full of quests. Money, position, status, possessions, peace, happiness, relationships are what human beings are searching for till their last breath. Most people in this quest find disappointment and only a few find what they seek. Called by Jesus, the disciples who were with him embarked on a great quest. They went to the sea in search of fish. But nothing happened to them. Without Jesus and without His word, how will they catch if they go on their own?*
*Many times we are also searching. But nothing is available. Eventually we get tired. Have we ever wondered why we are not successful in our quest? If our search is according to the words of God, surely we will not be disappointed. The search of Jesus disciples came to an end after Jesus words and His advice. They found the abundance of fish they were looking for.*
*We must seek God's counsel in our search. Only He knows where our needs are. So when His advice comes to us, if we act accordingly, we will definitely not be disappointed. We will also be comfortable. But today's pain is that many do not expect or accept God's counsels. Let us not be like that, accept God's things, act accordingly, and be blessed. Hallelujah!*
*“Surely you need guidance to wage war, and victory is won through many advisers.” - Proverbs 24:6*
For Thought
*GOD’S COUNSEL IS THE END OF THE SEARCH.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
வேதபகுதி: யாத் 3:1-22
" விடுதலையாக்க "
*" அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் " - யாத்திராகமம் 3 : 8*
*தேவன் எங்கெல்லாம், எதற்காகவெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை தேடிப்பார்த்தால் நமக்கு ஆச்சரியமாயிருக்கும். அவருடைய முதலாவது செயல்பாடே குறைவுகளை நிறைவாக்குவதும், ஒழுங்கற்றவைகளை ஒழுங்காக்குவதுமாயிருந்ததை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் காணலாம். அவருடைய ஒவ்வொரு அசைவும் ஏதாவது மிகப் பெரிய காரணங்களைக் கொண்டிருக்கும். காரணமில்லாமல் எதையுமே செய்ததுமில்லை, இனிமேல் செய்யப்போவதுமில்லை. அப்படியே, மோசேயைத் தேடி, அவனைச் சந்தித்து, அவனிடம் சில காரியங்களைப் பேசி, அவனை தேவன் அனுப்பினதற்கு மிகப் பெரிய காரணம் உண்டு. எகிப்து தேசத்தில் அடிமையாயிருக்கும் தம்முடைய ஜனங்களை விடுதலையாக்க விரும்பினபடியால், அவர் மோசேயிடம் வந்தார்.*
*ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்திருந்த உடன்படிக்கையை மறக்காமல், அவைகளை நினைத்து, தம்முடைய ஜனங்களை விடுதலையாக்கும்படி தேவன் இறங்கினார் என்பதைப் பார்க்கும்போது நமக்கு சந்தோஷமாயிருக்கிறது. எங்கோ, ஒரு தேசத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேயைத் தேடி அவனுக்குத் தன்னை வெளிப்படுத்தி அவனை சம்மதிக்க வைத்து, அவனுக்குத் தம்முடைய அதிகாரத்தைக் கொடுத்து, அவன் கேட்டுக்கொண்டதின்படியே, அவனுக்குத் துணையாக ஆரோனையும் கொடுத்து, எகிப்து தேசத்திலே மிகப் பெரிய வாதைகளை அனுப்பி, மோசேயினுடைய வார்த்தைகளின்படியே செய்து....அப்பப்பா.... இவ்வளவு காரியங்களும் எதற்காக? தம்முடைய ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து விடுதலையாக்கும்படியாகவே.*
*இஸ்ரவேல் ஜனங்களுடைய விடுதலைக்காக இவ்வளவு காரியங்களைச் செய்தவர் நமக்காக எதுவுமே செய்யமாட்டார் என்று நாம் நினைப்பது எப்படி? நம்முடைய விடுதலைக்காக, ஆசீர்வாதங்களுக்காக, உயர்வுகளுக்காக தேவன் எதை வேண்டுமானாலும் செய்வார். எனவே, நாம் கவலைப்படாதிருப்போம். தேவனை துதித்துக்கொண்டேயிருப்போம். கர்த்தர் நம்மோடிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அல்லேலூயா !*
*" கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ” - சங்கீதம் 138:8*
----------------------------------------------------------
சிந்தனைக்கு
*! தேவனுடைய அசைவுகள் நமக்கு ஆசீர்வாதமானவைகள் !*
--------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
Mobil No: 9940018988
Email id: jesusthefoundation@gmail.com
Bible Reading: Exodus 3:1-22
*TO RESCUE*
*“To rescue them from the hand of the Egyptians” - Exo.3:8*
*If we search where and why God has worked, we will be surprised. In both the Old Testament and the New Testament, we can see that His first act was to fill in the gaps and set the disordered in order. Every desire of his has some great reason. He never did anything without a reason and never will. There is also a great reason why God sent him after looking for Moses, meeting him, talking to him about some things. He came to Moses because he wanted to free his people who were slaves in the land of Egypt.*
*We are happy when we see that God came down to free his people, not forgetting the covenant he made with Abraham, Isaac, and Jacob. Somewhere, he found Moses who was tending sheep in a land, revealed himself to him, convinced him, gave him his authority, according to his request , he gave him Aaron as his companion and sent great plagues on the land of Egypt, and did according to the words of Moses. ...... Why so many things? To free his people from the land of Egypt.*
*How can we think that the one who did so much for the liberation of the people of Israel will not do anything for us? God will do anything for our deliverance, blessings and promotion. So let's not worry. Let's keep praising God. God will be with us and take care of everything. Hallelujah!*
*“ The Lord will perfect that which concerneth me" - Psalm 138:8*
For Thought
*GOD’S MOVEMENTS ARE OUR BLESSING.*
Brother J. Danie
Yesuveh Aatharam Ministries
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
வேதபகுதி: நீதி 15:1-33
விசனமாயிருக்கும்
*" வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் " - நீதிமொழிகள் 15:10*
*விசனமாயிருக்கும் என்றால் மனதுக்குக் கஷ்டமாயிருக்கும் என்று அர்த்தம். வழியை விட்டுவிலகுகிறவனுக்குப் புத்திமதி, மனதுக்குக் கஷ்டமாயிருக்கும் என்று வேதம் கூறுகிறது. தாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தங்களுடைய தலைவர்கள் நியமித்திருக்கும் பாதையை விட்டு விலகி, தங்களுடைய விருப்பத்தின்படி செல்லுகிறவர்களுக்கு, அவர்களுடைய தலைவர்களோ, இல்லாவிட்டால் யாராவது ஒருவரோ புத்திமதி கூறினால், அது அவருக்குக் கஷ்டமாயிருக்கும். எதற்காக இவர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை, என் இஷ்டம். இதில் தலையிட இவர்கள் யார்? என்னுடைய விருப்பத்தின்படி வாழ விடமாட்டார்களா? என்றெல்லாம் நினைத்து, தங்களுக்கு புத்திமதி சொல்லுபவர்களை வெறுக்கவும் அவர்களைத் தவிர்க்கவும் செய்வார்கள் இவர்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது, அப்பொழுதே எனக்குச் சொன்னார்கள், நான்தான் கேட்காமல் போய்விட்டேன் என்று புலம்புவார்கள்.*
*நமக்குச் சொல்லப்படும் புத்தி மதியைக் குறித்து நம்முடைய நிலை என்ன? அவைகளை ஏற்றுக்கொள்கிறோமா? தள்ளிவிடுகிறோமா? நமக்கு புத்திமதியைச் சொல்லுகிறவர்களை நாம் தவிர்க்கிறோமா, அவர்களை வெறுக்கிறோமா என்பதெல்லாம் நமக்கு முன்பாக வைக்கப்படும் கேள்விகள். பிரதான ஆசாரியனாகிய ஏலி என்பவன் தன்னுடைய குமாரர்கள் பாவஞ்செய்த போது, அவர்களுக்கு புத்தி சொன்னான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. கடைசியில் அனைவருமே அழிந்து போனார்கள். புத்தி மதியைக் கேட்டு அவைகளின்படி வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் அவைகளைக் கேளாதவர்கள் வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லை.*
*நமக்கு யாராவது புத்திமதி கூறினால் அவைகளை திறந்த மனதோடு ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொண்டு, அவைகளின்படி நடப்போம். அதுதான் நமக்கு நல்லது. அப்பொழுதுதான் நம்முடைய வாழ்க்கை நன்றாயிருக்கும். தேவன்தாமே இந்த விஷயத்தில் நமக்கு ஞானத்தைத் தந்தருளுவாராக.*
*" இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர் " - யோபு 4:3*
----------------------------------------------------------
சிந்தனைக்கு
*! புத்திமதியைத் தள்ளுகிறவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் !*
-----------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
Mobil No: 9940018988
Email id: jesusthefoundation@gmail.com
Bible Reading: Proverbs 15:1-33*
WILL BE GRIEF
*“Stern discipline awaits anyone who leaves the path; the one who hates correction will die.” - Proverbs 15:10*
*If you are Grief, it means that your mind will be troubled. The scripture says that the one who deviates from the path will be troubled with wisdom. It will be difficult for those who deviate from the path that their leaders have appointed them to follow and go according to their own desires, if their leaders or anyone else advises them. “Why do they say this? Its my life, my will, who are they to interfere in this ? Will they not let me live according to my will? Thinking that, they hate and shun those who advise them. When they finally lose everything, they lament, "I was the one who didn't listen when they told me."*
*What is our position regarding the advice we receive? Do we accept it? Are we putting it off? Do we avoid those who counsel us? Do we hate them? These are the questions that are put before us. Eli, the high priest, counseled his sons when they sinned. But they never accepted it. In the end they all perished. It is not history that those who heard the advice and lived according to it perished and those who did not listen to it lived.*
*If someone gives us advice, we examine it with an open mind, accept it and act on it. That is good for us. Only then will our life be good. May God himself give us wisdom in this matter.*
*“Think how you have instructed many, how you have strengthened feeble hands.” - Job 4:3*
For Thought
*THOSE WHO REJECT ADVICE WILL BE CAST INTO HELL.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Thanks for using my website. Post your comments on this