Type Here to Get Search Results !

1 Chronicles 1-2 Bible Study in Tamil | 1 நாளாகமம் வேத ஆராய்ச்சி | Bible Sermons in Tamil | Jesus Sam

[11/08, 07:43] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 119, 11/08/2023 FRIDAY*

*1 CHRONICLES : 01 - 02*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣1️⃣9️⃣
1 Chronicles 1,2
*WHAT A GOD WE SERVE* ❗️

*God has made mention of My name* ‼️(Is 49:1)

💥 *He knows our ancestors and generations by name* (1 Chron 1,2)

💥 *He named us* : I have named you, though you have not known Me (Is 45:5)

💥 *He named us before we were born* : He named me while I was in my mother’s womb (Is 49:1)

💥 *He calls us by our name* : “Fear not, for I have redeemed you; I have called you by your name; You are Mine (Is 43:1)

💥 *He writes our names* : The Lord will write in the register of the peoples: “This one was born in Zion.”(Ps 87:6)

💥 *He will confess our name* : He who overcomes, I will confess his name before My Father and before His angels.(Rev 3:5)

💥 *He exalts our name* :I will bless you and make your name great; And you shall be a blessing (Gen 12:2)

💥 *He will not blot out our name* : He who overcomes, I will not blot out his name from the Book of Life (Rev 3:5)

Usha
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: 🌈 *Wouldn’t be good for us to say, “If my life had to be summed up in one sentence, what would that one sentence be?”*

❓I Chr.2:4-7- The lives of both Er and Acher, or Achan, are summed up by the sins that characterized them. No doubt Er and Achan did good things in their lives. But those things are not recorded. Rather, the sin they committed characterized them. *Therefore, we wonder if it wouldn’t be good for us to say, “If my life had to be summed up in one sentence, what would that one sentence be?” It’s a good thing to occasionally say, “What is the sum total of my life thus far? If my name were in this record, what would be written?”*

📖I and II Chronicles: Ezra is probably the writer of the Chronicles. There is a striking similarity in style and language to the Books of Ezra and Nehemiah. Evidently Chronicles was written during the Babylonian captivity. The two Books of Chronicles not only constituted one book in the original, but apparently also included Ezra and Nehemiah. *This lends support to the Jewish tradition of the authorship of Ezra. The NT does not directly quote either I or 2 Chronicles.*

💡I Chr.1:29-32- After Sarah died, Abraham married a woman named Keturah, who gave birth to Midian. *The Midianites were a continual problem to the Israelites, but they, like the Ishmaelites, had a common father in Abraham.*

Jaya Pradeep-Kodaikanal.
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: நாள்: 119
11.08.2023
வெள்ளிக்கிழமை.
*1நாளாகமம்: 1-2*
💐💐💐💐💐💐
இஸ்ரவேலரின் வம்ச வரலாறுகள் நாளாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
*ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது* என ( 1நாளாகமம்: 1:19) ல் வாசிக்கிறோம்.
▪️பேலேகின் நாட்கள் வரை பூமி ஒரே ஒரு தரைப்பகுதியாகவும் மீதி யாவும் பெருங்கடலாகவும் இருந்தது.
▪️உலக வரைபடத்தை எடுத்து எல்லாக் கண்டங்களையும், தீவுக்கூட்டங்களையும் ஒன்றாகப் பொருத்தினால் அவை ஒரே பகுதியாக அமைவதைக் காணலாம்.
*பூமி பகுக்கப்பட்டது* என்பதை மறுத்து வந்த விஞ்ஞானிகள் இப்பொழுது ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
▪️ இதை, *கண்டங்களின் விலகுதல்* *Continental drift* என்று கூறுகின்றனர்.
4000 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயினால் ஆதியாகமம் 10:25 ல் எழுதப்பட்ட இக்கருத்தை மறுத்துவந்த அறிவியல் இப்பொழுது உண்மையென்று ஒத்துக் கொள்கிறது.
▪️ஒரு காலத்தில் பூமி கண்டங்களாகப் பிரிக்கப்படாமல் ஒன்று சேர்ந்து இருந்தது. பேலேகுவின் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது. ஜனங்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள். கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைக் தாறுமாறாக்கினார். இதனால் அவர்கள் பூமி எங்கிலும் சிதறி ஓடினார்கள். இதன் பின்பு பூமி பகுக்கப்பட்டது. (ஆதி:10:25) (ஆதி: 11:7-9)
*பரிசுத்த வேதாகமம் சிறந்த அறிவியல் நூல். அறிவியல் உண்மைகள் பல வேதத்தின் அடிப்படையில் இறுதியில் உண்மை என்று முடிவாகிறது*.
▪️தினமும் பரிசுத்த வேதத்தை வாசித்து தியானித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
*உமது வேதம் என் மனமகிழ்ச்சி*.
*ஆமென்*
✍️பவானி ஜீஜா தேவராஜ், நாகர்கோவில்
(குழு எண்: 2068)
.
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: *11.08.2023*

❇️ *தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்* ❇️

🔺 *ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்* (1 நாளாகமம் 2:15).

🔸 "நாளாகமம்" புத்தகத்தின் ஆரம்பம் எந்த பயனும் இல்லாமல் பெயர்களின் நீண்ட பட்டியல்களைக் கொண்டது என்று நாம் நினைக்கலாம். அவை எழுதப்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஞானமுள்ள தேவன் இவற்றை நமக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்திருப்பதால், நாம் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. எல்லா வேதவாக்கியங்களும் ஒரே மாதிரியான பயனைத் தராவிட்டாலும், *எல்லா வேதவாக்கியமும் பயனுள்ளதே.*

🔸 நாளாகமத்தின் தொடக்க வசனத்தில் காயீன் அல்லது ஆபேலைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை; சேத் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளான். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறை எழுத நாளாகமத்தின் ஆசிரியரை தேவன் ஏவியுள்ளார் என்பதை இது அறிவுறுத்துகிறது. *சேத்தின் வம்சத்தின் மூலம் நமது கர்த்தராகிய இயேசு வந்தார்* என்பதை நாம் அறிகிறோம்.

🔸 ஆதாம் முதல் தாவீது வரையிலான பெயர்களின் பட்டியலைப் படிக்கும்போது, தாவீதின் வம்சத்தில் இயேசு வந்தார் என்பதால் தேவனுடைய திட்டத்தையும் வாக்குறுதியையும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆவிக்குரிய பிரகாரமாக "கருப்பு ஆடுகளாகிய" இஸ்மவேலும் ஏசாவும் கூட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். *தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருப்பதால்,* அவர்கள் பெயர்களும்கூட இங்கே சேர்க்கப்பட்டுள்ளன.

🔸 இது நம்மைப் பற்றியும், ஒட்டுமொத்த மனுக்குலத்தைப் பற்றியும், நம் தேவனைப் பற்றியுமான ஒரு புத்தகம். நாளாகமத்தின் தொடக்க அதிகாரங்கள் மூலம் நாம் *மீட்பின் திட்டத்தைப்* புரிந்துகொள்கிறோம்.

🔸 1 நாளாகமம் 2 சாமுவேலின் அதே காலகட்டத்தை உள்ளடக்கியது, இரண்டுமே தாவீதின் ஆட்சியை விவரிக்கின்றன; 2 நாளாகமம் 1 ராஜாக்கள் மற்றும் 2 ராஜாக்களின் காலகட்டத்தை உள்ளடக்கியது, இரண்டும் சாலொமோன் முதல் பாபிலோனிய சிறையிருப்பின் காலம்வரை விவரிக்கின்றன. *1 மற்றும் 2 நாளாகமங்களின் புத்தகங்கள் தாவீது ராஜா மற்றும் அவனது வம்சத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.* யூதாவின் ராஜாக்களுடன் தொடர்புடைய இஸ்ரவேலின் ராஜாக்கள் மாத்திரம் நாளாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

🔸 "ராஜாக்கள்" மற்றும் "நாளாகமங்கள்" ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் மிகவும் ஒத்ததாக இருந்தாலும், அவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. *"ராஜாக்கள்" மனித கண்ணோட்டத்திலும் ""நாளாகமங்கள்" தெய்வீக கண்ணோட்டத்திலும்* எழுதப்பட்டுள்ளன.

🔸 *எழுபது வருட பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிய பிறகு எருசலேமை மீண்டும் கட்டியெழுப்பின மீதியானவர்களுக்கு நாளாகமம் எழுதப்பட்டுள்ளது.* ஆசிரியர் மற்றும் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொதுவாக எஸ்றா ஆசிரியராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

🔹 *வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் நம்புகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *எல்லா வேதவாக்கியங்களும் ஒரே மாதிரியான பயனைத் தராவிட்டாலும், எல்லா வேதவாக்கியமும் பயனுள்ளதே.*
2️⃣ *ஆதாம் முதல் தாவீது வரையிலான பெயர்களின் பட்டியலைப் படிக்கும்போது, தாவீதின் வம்சத்தில் இயேசு வந்தார் என்பதால் தேவனுடைய திட்டத்தையும் வாக்குறுதியையும் நாம் புரிந்துகொள்ளலாம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை

[11/08, 07:43] (W) Arun Selva Kumar: 1. நாளாகமம்.2.
☘️☘️☘️☘️☘️☘️
"ஆபிரகாம் மற்றும் யூதாவின் சந்ததியினர்."
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️இஸ்ரவேலின் பன்னிரண்டு குமாரர்கள், மற்றும் யோசேப்பிடமிருந்து இரண்டு கோத்திரங்கள் வந்ததால் உண்மையில் இஸ்ரவேலின் 13 கோத்திரங்கள் ஆனார்கள்.
யூதாவின் கோத்திரத்தார் வரலாற்றாசிரியரிடமிருந்து முதல் கவனத்தைப் பெற்றனர்.
யூதா கோத்திரத்தின் வம்சாவளிக்கு தலைமை தாங்குகிறார் மற்றும் மற்ற கோத்திரத்தாரை விட விரிவான மதிப்பை பெறுகிறார்.
இந்த சிறப்பு முக்கியத்துவத்திற்கான காரணம் தாவீதின் வரிசையின் மைய நிலையில் காணப்படுகிறது.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: *பூமியிலே பராக்கிரமசாலியாகிய நிம்ரோத்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 1: 10

1. *நோவாவின் மகன் காம். இவன் மகன் கூஷ் . இவன் மகன் நிம்ரோத். இவன் பூமியிலே பராக்கிரம சாலி.* இவன் கர்த்தருக்கு முன்பாக *பலத்த வேட்டைக்காரன்*. இவன் 4 பட்டணங்களை கட்டி, *பாபிலோன் இராஜ்யத்தை* ஸ்தாபித்தான். *அசீரியர் இராஜ்யத்தையும்* இவன் கட்டினான். ஆதியாகமம் 10: 8 - 12.

2. ஆனால் அசீரியா தேசத்திலிருந்தும், நிம்ரோதின் தேசத்திலிருந்தும், *நம் தேசமாகிய நம் வாழ்க்கையில் நம்மை தப்புவிக்கும் படியாய் மீகா தீர்க்கதரிசி கூறிய படி எப்பிராத்தா என்ற பெத்லகேமில் பிறந்த இயேசு கிறிஸ்து இந்த பூமியின் பராக்கிரமசாலியிடமிருந்து நம்மை தப்புவிப்பார்*

*நாம் அப்பத்தின் வீடாகிய பெத்லகேமில், வசனத்தின் படி வாழும் போது, இந்த இயேசு ராஜா நிம்ரோதின் ஆட்சியை நம்மை விட்டு சங்கரித்து, அவைகளை நிர்மூலமாக்கி, அவன் செய்த சூனிய வித்தைகளையும், சுரூபங்களையும், சிலைகளையும் நம்மை விட்டு அகற்றுவார். நம்மை பரிசுத்தப்படுத்துவார். நம் கையின் கிரியைகளை பணிந்து கொள்ளாத படி, நாள் பார்க்காத படி நம்மை சுத்திகரிப்பார்*

*ஆனால் இந்த இயேசுவுக்கு செவி கொடாதவர்களுக்கோ நீதியை சரிக்கட்டுவார்.* மீகா 5: 2 - 15. ஆம், பூமியின் பராக்கிரமசாலியாகிய பிசாசை ஜெயிக்க, நம் இயேசு பராக்கிரமசாலியாய் நமக்குள்ளே ஜீவ அப்பமாகிய வசனத்தை தந்திருக்கிறார்.

3. *இன்று கர்த்தரின் பிள்ளைகளாகிய நம்மையும் பராக்கிரமசாலியாக மாற்றியிருக்கிறார். பயந்து கொண்டு தானியத்தை போரடித்து கொண்டிருந்த கிதியோனை பார்த்து பராக்கிரமசாலியே! என அழைத்தார். இன்று நாமும் தானியமாகிய அவருடைய வசனத்தை, போரடித்து, அதாவது தியானித்து, ஜீவ அப்பமாகிய இயேசுவை அவருடைய வார்த்தையை புசிக்கும் போது, நம்மையும் பராக்கிரமசாலியே என அழைப்பது மட்டுமல்ல, பூமியின் பராக்கிரமசாலியாகிய நிம்ரோதை, பிசாசின் கிரியைகளை ஜெயிக்க நமக்கு உதவி செய்வார்*.

*தேவ வசனம் நம்மில் நிலைத்திருப்பதாலும், பொல்லாங்கனாகிய பிசாசை ஜெயிப்பதனாலும் பலவான்களே என நம்மை அழைக்கிறார்*. 1 யோவான் 2:14.

*பலவான்களின் புத்திரரே* என அழைத்து நமக்கு ஆலோசனை தருகிறார். சங்கீதம் 29: 1. அப்படியானால் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

4. *நிம்ரோத் பராக்கிரமசாலி மட்டுமல்ல, பலத்த வேட்டைக்காரன். ஆம், இவனை போலவே பிசாசு அருமையான உயிர்களை, ஆத்துமாக்களை நரகத்திற்கு வேட்டையாடுகிறவன் . நம்முடைய பராக்கிரமசாலியாகிய இயேசுவோ தன் ஜீவனையே நமக்காக கொடுத்து, நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார். பரலோக இராஜ்யத்திற்கு நம்மை தகுதி படுத்துகிறார்*. அவருக்கே மகிமை, புகழ்ச்சி, கனம் உ ண்டாவதாக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Selvyn*
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கேத்தூராள்* 🍂

சாராள் மற்றும் ஆகார் நமக்குத் தெரிந்த பெயர்கள். இஸ்மவேலும் ஈசாக்கும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள். ஆபிரகாம் இறந்தவுடன், அவனுடைய மகன்கள் இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு அவனை அடக்கம் செய்தனர். மேலும் அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கலாம். ஆனால் *கேத்தூராள் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்*.

அவளுடைய பிள்ளைகளின் பெயர்களும் நமக்குத் தெரியாது. *ஆபிரகாம்* தன் மனைவி சாராள் இறந்த பிறகு, *கேத்தூராளை மணந்தான்.* அவள் மூலம் அவனுக்கு *ஆறு மகன்கள்* பிறந்தனர். ஆபிரகாம் உயிருடன் இருந்தபோது கேத்தூராளின் மகன்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களைத் தன் மகன் ஈசாக்கை விட்டு வெகுதூரம் அனுப்பினான் (ஆதி 25:1-6).

*கேத்தூராள் அதிர்ஷ்டம் குறைந்த பெண்ணாகத் தெரிகிறது*. உண்மையில் அவள் வேதாகமத்தில் உள்ள *அதிகம் அறியப்படாத பெண்களின்* கீழ் வருகிறாள். கேத்தூராளும் அவளுடைய மகன்களும் எப்போதும் பின்னணியில் இருக்கிறார்கள். ஆனால் *தேவனாகிய கர்த்தர் அவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.*

அவர் அவர்களின் பெயர்களை நாளாகமங்களின் *வம்சவளி பட்டியலில்* பட்டியலிட்டார் (1 நாளா 1:32). சுவாரஸ்யமாக கேத்தூராளின் பெயர் மட்டுமே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாராள் மற்றும் ஆகார் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. எல்லாரும் மறந்தாலும், *தேவனாகிய கர்த்தர் எப்போதும் நம்மை நினைவில் கொள்கிறார். அவருடைய பரலோக புத்தகத்தில் நமது பெயர் இடம் பெறுவது எவ்வளவு நல்லது.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 11, 2023_
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: LINEAGE TRACING

[DAY - 119] 1 Chronicles Chapters 1 & 2

☄️The book of 1 Chronicles sheds light on the ancestral roots of God's chosen people.

1️⃣ *TRACING THE ORIGINS* (1 Chronicles 1:1-27)

🔹The genealogy begins with Adam, the first man created by God, and proceeds through various generations, including Noah and his sons Shem, Ham, and Japheth.
🔹It highlights the diversity of nations that emerged from Noah's descendants, marking the foundation of humanity and the origins of different cultures.

2️⃣ *THE LINEAGE OF ABRAHAM* (1 Chronicles 1:28-54)

🔸It traces Abraham’s lineage through his sons Ishmael and Isaac.
🔸It emphasizes the covenant God made with Abraham and the fulfillment of His promises through Isaac's lineage.

3️⃣ *THE TWELVE TRIBES OF ISRAEL* (1 Chronicles 2:1-2)

🔺The twelve tribes of Israel, beginning with Judah, the most prominent tribe, provide a detailed account of the descendants of Judah, including the line leading to David, the renowned king of Israel.
🔺This lineage foreshadows the birth of Jesus Christ, who would come from the tribe of Judah and establish an Eternal kingdom.

4️⃣ *THE ROLE OF GENEALOGIES*

▪️The extensive genealogies establish a historical connection between past generations and the present Israelite community, reinforcing their shared heritage and identity.
▪️They remind the Israelites of their divine calling and the faithfulness of God throughout history.
▪️They demonstrate God's providence and sovereignty in orchestrating the lineage from which Jesus, the Messiah, would come.
▪️They highlight the significance of Jesus' birth within a specific lineage, fulfilling Old Testament prophecies and exemplifying God's faithfulness to His promises.

♥️ *LIFE LESSONS*

💥 Tracing Lineage provides a crucial foundation for understanding the ancestral roots of the Israelite nation.
💥They establish a historical connection between God's chosen people and their forefathers, and the divine plan unfolding through the generations.
💥These genealogies not only affirm the Israelites' identity but also point towards the ultimate fulfillment of God's promises in the person of Jesus Christ.

*‼️PRAISE GOD FOR HIS FAITHFULNESS THROUGHOUT HISTORY‼️*

Princess Hudson
[11/08, 07:43] (W) Arun Selva Kumar: *SHALOM* 🙏
Blessed to be a Blessing to the Blessed People 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ We are in *1Chronicles 1 & 2*

*GENEALOGY IN ISRAEL'S HISTORY*

📝 The author of 1 and 2 Chronicles , often called *" the Chronicler "* , used Israel's history as a lesson for an audience in need of guidance and encouragement.
*The Chronicler begins with the genealogies of Israel*, and also by including Gentiles in the genealogies, the Chronicler shows that Israel was to be a light to the nations.

📝 The Jews tenaciously valued their pedigrees. They were used for the purposes of :
1️⃣ *TRIBAL LOCATION* : After the conquest of Canaan the land was divided into tribal boundaries. *Numbers 26* explain how one had to know his tribe , his family line and his father's house so that he could be identified in the right location in the land .

2️⃣ *TRANSACTION OF LAND* : According to *Ruth 3 and 4*, transfer of property required accurate knowledge of the family tree, so that they could keep tribal land within the tribe .

3️⃣ *TESTING OF LINEAGE* : After 70 years of Babylonian Captivity, many of the Jews started coming back to Israel. Many of them were claiming to be priests from the tribe of Levi . Their claims had to be proven on the basis of their genealogy ( *Ezra 2:62*). It is because God was very serious about having only Levites serving as priests ( *Num 1:50-53* )

4️⃣ *TAXATION LAWS* :o Later, in the time of Christ, the Romans used the Jewish genealogies for taxation. So the people were to register their names according to their parental ancestry ( *Luke 2:1-4* )

📝 The Jews highly valued their pedigree. *Paul*, identified himself with Israel by claiming himself to be the seed of Abraham from the tribe of Benjamin ( *Rom 11 : 1* )

📝 In NT *the genealogy of Jesus Christ* is recorded in Matthew and Luke but the counting of genealogy is reverse : Matthew's genealogy is coming down ( *from Abraham to Jesus* ) through Joseph where as Luke traces Jesus ( *back to Adam*) through Mary.
📍 *One begins with Jesus, the other ends with Jesus*. Christ is the Beginning and the End.

💕 Beloved Church, the book of 1Chronicles reminds us that we can be confident that God moves in the details of history.

🙋‍♂️🙋‍♀️ His deepest desire is *TO DRAW US OUT OF THE EXILE OF OUR SINS AND INTO A LIFE OF WORSHIP WITH HIM*.
🔖 GENEALOGY is needed to establish one's identity.
📍 *But our IDENTITY is in CHRIST*.
📍 The Bible says, *"Yet to all who RECEIVED HIM, to those who BELIEVED in HIS NAME , he gave the right to become CHILDREN OF GOD "* ( John 1:12 )

Glory to God 🙏
✍🏾 *Mark Boje*
Arunachal Pradesh, India 🇮🇳

[11/08, 06:04] +91 99431 72360: *11.08.2023*

❇️ *தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்* ❇️

🔺 *ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்* (1 நாளாகமம் 2:15).

🔸 "நாளாகமம்" புத்தகத்தின் ஆரம்பம் எந்த பயனும் இல்லாமல் பெயர்களின் நீண்ட பட்டியல்களைக் கொண்டது என்று நாம் நினைக்கலாம். அவை எழுதப்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஞானமுள்ள தேவன் இவற்றை நமக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்திருப்பதால், நாம் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. எல்லா வேதவாக்கியங்களும் ஒரே மாதிரியான பயனைத் தராவிட்டாலும், *எல்லா வேதவாக்கியமும் பயனுள்ளதே.*

🔸 நாளாகமத்தின் தொடக்க வசனத்தில் காயீன் அல்லது ஆபேலைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை; சேத் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளான். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறை எழுத நாளாகமத்தின் ஆசிரியரை தேவன் ஏவியுள்ளார் என்பதை இது அறிவுறுத்துகிறது. *சேத்தின் வம்சத்தின் மூலம் நமது கர்த்தராகிய இயேசு வந்தார்* என்பதை நாம் அறிகிறோம்.

🔸 ஆதாம் முதல் தாவீது வரையிலான பெயர்களின் பட்டியலைப் படிக்கும்போது, தாவீதின் வம்சத்தில் இயேசு வந்தார் என்பதால் தேவனுடைய திட்டத்தையும் வாக்குறுதியையும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆவிக்குரிய பிரகாரமாக "கருப்பு ஆடுகளாகிய" இஸ்மவேலும் ஏசாவும் கூட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். *தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருப்பதால்,* அவர்கள் பெயர்களும்கூட இங்கே சேர்க்கப்பட்டுள்ளன.

🔸 இது நம்மைப் பற்றியும், ஒட்டுமொத்த மனுக்குலத்தைப் பற்றியும், நம் தேவனைப் பற்றியுமான ஒரு புத்தகம். நாளாகமத்தின் தொடக்க அதிகாரங்கள் மூலம் நாம் *மீட்பின் திட்டத்தைப்* புரிந்துகொள்கிறோம்.

🔸 1 நாளாகமம் 2 சாமுவேலின் அதே காலகட்டத்தை உள்ளடக்கியது, இரண்டுமே தாவீதின் ஆட்சியை விவரிக்கின்றன; 2 நாளாகமம் 1 ராஜாக்கள் மற்றும் 2 ராஜாக்களின் காலகட்டத்தை உள்ளடக்கியது, இரண்டும் சாலொமோன் முதல் பாபிலோனிய சிறையிருப்பின் காலம்வரை விவரிக்கின்றன. *1 மற்றும் 2 நாளாகமங்களின் புத்தகங்கள் தாவீது ராஜா மற்றும் அவனது வம்சத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.* யூதாவின் ராஜாக்களுடன் தொடர்புடைய இஸ்ரவேலின் ராஜாக்கள் மாத்திரம் நாளாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

🔸 "ராஜாக்கள்" மற்றும் "நாளாகமங்கள்" ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் மிகவும் ஒத்ததாக இருந்தாலும், அவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. *"ராஜாக்கள்" மனித கண்ணோட்டத்திலும் ""நாளாகமங்கள்" தெய்வீக கண்ணோட்டத்திலும்* எழுதப்பட்டுள்ளன.

🔸 *எழுபது வருட பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிய பிறகு எருசலேமை மீண்டும் கட்டியெழுப்பின மீதியானவர்களுக்கு நாளாகமம் எழுதப்பட்டுள்ளது.* ஆசிரியர் மற்றும் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொதுவாக எஸ்றா ஆசிரியராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

🔹 *வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் நம்புகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *எல்லா வேதவாக்கியங்களும் ஒரே மாதிரியான பயனைத் தராவிட்டாலும், எல்லா வேதவாக்கியமும் பயனுள்ளதே.*
2️⃣ *ஆதாம் முதல் தாவீது வரையிலான பெயர்களின் பட்டியலைப் படிக்கும்போது, தாவீதின் வம்சத்தில் இயேசு வந்தார் என்பதால் தேவனுடைய திட்டத்தையும் வாக்குறுதியையும் நாம் புரிந்துகொள்ளலாம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[11/08, 06:04] +91 99431 72360: நாள்: 119
11.08.2023
வெள்ளிக்கிழமை.
*1நாளாகமம்: 1-2*
💐💐💐💐💐💐
இஸ்ரவேலரின் வம்ச வரலாறுகள் நாளாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
*ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது* என ( 1நாளாகமம்: 1:19) ல் வாசிக்கிறோம்.
▪️பேலேகின் நாட்கள் வரை பூமி ஒரே ஒரு தரைப்பகுதியாகவும் மீதி யாவும் பெருங்கடலாகவும் இருந்தது.
▪️உலக வரைபடத்தை எடுத்து எல்லாக் கண்டங்களையும், தீவுக்கூட்டங்களையும் ஒன்றாகப் பொருத்தினால் அவை ஒரே பகுதியாக அமைவதைக் காணலாம்.
*பூமி பகுக்கப்பட்டது* என்பதை மறுத்து வந்த விஞ்ஞானிகள் இப்பொழுது ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
▪️ இதை, *கண்டங்களின் விலகுதல்* *Continental drift* என்று கூறுகின்றனர்.
4000 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயினால் ஆதியாகமம் 10:25 ல் எழுதப்பட்ட இக்கருத்தை மறுத்துவந்த அறிவியல் இப்பொழுது உண்மையென்று ஒத்துக் கொள்கிறது.
▪️ஒரு காலத்தில் பூமி கண்டங்களாகப் பிரிக்கப்படாமல் ஒன்று சேர்ந்து இருந்தது. பேலேகுவின் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது. ஜனங்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள். கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைக் தாறுமாறாக்கினார். இதனால் அவர்கள் பூமி எங்கிலும் சிதறி ஓடினார்கள். இதன் பின்பு பூமி பகுக்கப்பட்டது. (ஆதி:10:25) (ஆதி: 11:7-9)
*பரிசுத்த வேதாகமம் சிறந்த அறிவியல் நூல். அறிவியல் உண்மைகள் பல வேதத்தின் அடிப்படையில் இறுதியில் உண்மை என்று முடிவாகிறது*.
▪️தினமும் பரிசுத்த வேதத்தை வாசித்து தியானித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
*உமது வேதம் என் மனமகிழ்ச்சி*.
*ஆமென்*
✍️பவானி ஜீஜா தேவராஜ், நாகர்கோவில்
(குழு எண்: 2068)
.
[11/08, 06:04] +91 99431 72360: 1. நாளாகமம்.2.
☘️☘️☘️☘️☘️☘️
"ஆபிரகாம் மற்றும் யூதாவின் சந்ததியினர்."
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️இஸ்ரவேலின் பன்னிரண்டு குமாரர்கள், மற்றும் யோசேப்பிடமிருந்து இரண்டு கோத்திரங்கள் வந்ததால் உண்மையில் இஸ்ரவேலின் 13 கோத்திரங்கள் ஆனார்கள்.
யூதாவின் கோத்திரத்தார் வரலாற்றாசிரியரிடமிருந்து முதல் கவனத்தைப் பெற்றனர்.
யூதா கோத்திரத்தின் வம்சாவளிக்கு தலைமை தாங்குகிறார் மற்றும் மற்ற கோத்திரத்தாரை விட விரிவான மதிப்பை பெறுகிறார்.
இந்த சிறப்பு முக்கியத்துவத்திற்கான காரணம் தாவீதின் வரிசையின் மைய நிலையில் காணப்படுகிறது.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
[11/08, 06:04] +91 99431 72360: *நாள் 119 / 365*
*1 நாளாகமம் 1 - 2*

*பரலோகத்தில் உங்கள் நாமங்கள் எழுதப்பட்டிருக்கிறது..*

இஸ்ரவேலரின் 70 ஆண்டு கால சிறையிருப்பின் காலமும்..
இப்பொழுது அவர்கள்
எருசலேமுக்குத் திரும்பி வந்த
சூழ்நிலையும்..
அவர்களுக்குக்
கொடியதாகயிருந்தாலும்..
தேவன்..தமது உடன்படிக்கையில், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதை அவர்களது வம்சவரலாறு
அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கும்..

அவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும்..
அவர்களது இன அடையாளம் அழியாதபடி..
தேவன் அவர்களைத் தங்களது சொந்தத் தேசத்திற்குத்
திருப்பிக் கொண்டுவந்தார்..
அவர்களது..தேவாலயம்..
லேவிய ஆசாரியத்துவம்..
மெய்யான ஆராதனை எதுவும்..
இந்தச் சிறையிருப்பினால் ரத்து
செய்யப்படவில்லை என்பதுடன்..
தங்களின் முன்னோர்களைக் குறித்தும் ..தங்களுக்கென்று ஒரு ஆவிக்குரிய பாரம்பரியம்
இருந்ததென்பதையும் நினைத்து.. அவர்கள்
மகிழ்ந்திருப்பார்கள்..

*இயேசு கிறிஸ்து, பூமியிலே* *பிறப்பதற்கு முன்பாகவே*..
*அவரது வம்ச வரலாறு*.. *தீர்க்கதரிசனமாக* *வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது*.
*இயேசு கிறிஸ்து*,
*தாவீதின் குமாரனாகவும்*,
*யூதாவின் குமாரனாகவும்*, *ஆபிரகாமின் குமாரனாகவும்*, *ஆதாமின் குமாரனாகவும்* *இருக்கிறார்*.

ஆதாமிலிருந்து.. நோவா வரையிலும்.. அநேக குமாரர்கள் இருந்தாலும்..அவர்களில் முக்கியமானவர்களின் பெயரையே இங்கு பார்க்கிறோம்...

ஆதாமின் குமாரர்கள்… காயீன், ஆபேல் பெயர் இல்லை..
ஆதாமைத் தொடர்ந்து, சேத் வருகிறான். ( 1 நாளா1 : 1 )

நோவாவின் குமாரர்களுள்..
சேமின் பெயர் முதன்மையாக வருகிறது..
( 1 நாளா.1 : 4 )
காரணம்..
அந்தச் சந்ததியிலிருந்துதான்
ஆபிரகாம் வந்தார்..

*இந்த உலகத்திலே ஏராளமான* *ஜாதியான மக்கள் கூட்டம்* *இருந்தாலும்*..
*ஆபிரகாமின் சந்ததியினரே*.. *கர்த்தருக்கு விசேஷித்த ஜனமாக* *இருக்கிறார்கள்*.

முற்காலத்திலே..இஸ்ரவேல் கோத்திரங்களில்.. ஒவ்வொரு கோத்திரத்தின் வம்சவரலாறும்.. எருசலேம் தேவாலயத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிறையிருப்பின் நாட்களிலும் அவர்கள் அதைப் பத்திரமாகப் பாதுகாத்து.. மீண்டும் அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள்.

திரும்பி வந்தவர்கள்.. தேவாலயத்தைக் கட்டின பொழுது..
இந்த வம்சவரலாறு அங்கேயிருந்தது.
இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது ..
அன்றைய யூதர்கள் தேவாலயத்திற்குப் போய்ப் பார்த்து ..அவர் தாவீதோடு தொடர்புடையவர் என்பதை அறிந்திருப்பார்கள்.
யோசேப்பு..(மத் 1 அதி. )
மரியாள்(லூக்.3 : 23-38 ).
தீத்து ராயனால்.. கிபி 70 ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்ட பொழுது..
இந்த வம்சவரலாறும் அழிக்கப்பட்டுவிட்டது.

இயேசு கிறிஸ்து, மனிதரில் மனிதனானார்.
அவர் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடி.. தாவீதின் சந்ததியிலிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்கவே.. இந்த வம்சவரலாறு பட்டியல் அதுவரை பாதுகாக்கப்பட்டிருந்தது..

*ஆண்டவராகிய இயேசு* *கிறிஸ்து.. தம்முடைய* *சீஷர்களிடம்*.. *உங்கள் நாமங்கள்* *பரலோகத்தில் எழுதி* *இருக்கிறதற்காக.. சந்தோஷப்* *படுங்கள் என்றார்*.
(லூக் .10 :20)
*அவரை விசுவாசிப்பவர்களின் பெயர்கள்..*
*ஜீவபுஸ்தகத்தில்* *எழுதப்பட்டிருக்கிறது என்றார்*.
( வெளி. 20 : 12 )

*இஸ்ரவேலரின் வம்ச வரலாறும்*, *பெயர்களும்*.. *அழிக்கப்பட்டாலும்* ..
*ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய*
*நம்முடைய பெயர்கள்*.. *என்றென்றும் பரலோகத்திலே* *நிலைத்திருக்கும்*..
*இது தேவனின் மாபெரும்* *கிருபையே*..
*இதற்காக..சந்தோஷப்பட்டுக்* *களிகூருவோமா*..?
*கர்த்தருக்கு* *நன்றிசெலுத்துவோமா.*.?
*ஆமென்*.🙏
மாலா டேவிட்

[11/08, 06:04] +91 99431 72360: *பூமியிலே பராக்கிரமசாலியாகிய நிம்ரோத்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 1: 10

1. *நோவாவின் மகன் காம். இவன் மகன் கூஷ் . இவன் மகன் நிம்ரோத். இவன் பூமியிலே பராக்கிரம சாலி.* இவன் கர்த்தருக்கு முன்பாக *பலத்த வேட்டைக்காரன்*. இவன் 4 பட்டணங்களை கட்டி, *பாபிலோன் இராஜ்யத்தை* ஸ்தாபித்தான். *அசீரியர் இராஜ்யத்தையும்* இவன் கட்டினான். ஆதியாகமம் 10: 8 - 12.

2. ஆனால் அசீரியா தேசத்திலிருந்தும், நிம்ரோதின் தேசத்திலிருந்தும், *நம் தேசமாகிய நம் வாழ்க்கையில் நம்மை தப்புவிக்கும் படியாய் மீகா தீர்க்கதரிசி கூறிய படி எப்பிராத்தா என்ற பெத்லகேமில் பிறந்த இயேசு கிறிஸ்து இந்த பூமியின் பராக்கிரமசாலியிடமிருந்து நம்மை தப்புவிப்பார்*

*நாம் அப்பத்தின் வீடாகிய பெத்லகேமில், வசனத்தின் படி வாழும் போது, இந்த இயேசு ராஜா நிம்ரோதின் ஆட்சியை நம்மை விட்டு சங்கரித்து, அவைகளை நிர்மூலமாக்கி, அவன் செய்த சூனிய வித்தைகளையும், சுரூபங்களையும், சிலைகளையும் நம்மை விட்டு அகற்றுவார். நம்மை பரிசுத்தப்படுத்துவார். நம் கையின் கிரியைகளை பணிந்து கொள்ளாத படி, நாள் பார்க்காத படி நம்மை சுத்திகரிப்பார்*

*ஆனால் இந்த இயேசுவுக்கு செவி கொடாதவர்களுக்கோ நீதியை சரிக்கட்டுவார்.* மீகா 5: 2 - 15. ஆம், பூமியின் பராக்கிரமசாலியாகிய பிசாசை ஜெயிக்க, நம் இயேசு பராக்கிரமசாலியாய் நமக்குள்ளே ஜீவ அப்பமாகிய வசனத்தை தந்திருக்கிறார்.

3. *இன்று கர்த்தரின் பிள்ளைகளாகிய நம்மையும் பராக்கிரமசாலியாக மாற்றியிருக்கிறார். பயந்து கொண்டு தானியத்தை போரடித்து கொண்டிருந்த கிதியோனை பார்த்து பராக்கிரமசாலியே! என அழைத்தார். இன்று நாமும் தானியமாகிய அவருடைய வசனத்தை, போரடித்து, அதாவது தியானித்து, ஜீவ அப்பமாகிய இயேசுவை அவருடைய வார்த்தையை புசிக்கும் போது, நம்மையும் பராக்கிரமசாலியே என அழைப்பது மட்டுமல்ல, பூமியின் பராக்கிரமசாலியாகிய நிம்ரோதை, பிசாசின் கிரியைகளை ஜெயிக்க நமக்கு உதவி செய்வார்*.

*தேவ வசனம் நம்மில் நிலைத்திருப்பதாலும், பொல்லாங்கனாகிய பிசாசை ஜெயிப்பதனாலும் பலவான்களே என நம்மை அழைக்கிறார்*. 1 யோவான் 2:14.

*பலவான்களின் புத்திரரே* என அழைத்து நமக்கு ஆலோசனை தருகிறார். சங்கீதம் 29: 1. அப்படியானால் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

4. *நிம்ரோத் பராக்கிரமசாலி மட்டுமல்ல, பலத்த வேட்டைக்காரன். ஆம், இவனை போலவே பிசாசு அருமையான உயிர்களை, ஆத்துமாக்களை நரகத்திற்கு வேட்டையாடுகிறவன் . நம்முடைய பராக்கிரமசாலியாகிய இயேசுவோ தன் ஜீவனையே நமக்காக கொடுத்து, நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார். பரலோக இராஜ்யத்திற்கு நம்மை தகுதி படுத்துகிறார்*. அவருக்கே மகிமை, புகழ்ச்சி, கனம் உ ண்டாவதாக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Selvyn*

[11/08, 16:50] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கேத்தூராள்* 🍂

சாராள் மற்றும் ஆகார் நமக்குத் தெரிந்த பெயர்கள். இஸ்மவேலும் ஈசாக்கும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள். ஆபிரகாம் இறந்தவுடன், அவனுடைய மகன்கள் இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு அவனை அடக்கம் செய்தனர். மேலும் அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கலாம். ஆனால் *கேத்தூராள் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்*.

அவளுடைய பிள்ளைகளின் பெயர்களும் நமக்குத் தெரியாது. *ஆபிரகாம்* தன் மனைவி சாராள் இறந்த பிறகு, *கேத்தூராளை மணந்தான்.* அவள் மூலம் அவனுக்கு *ஆறு மகன்கள்* பிறந்தனர். ஆபிரகாம் உயிருடன் இருந்தபோது கேத்தூராளின் மகன்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களைத் தன் மகன் ஈசாக்கை விட்டு வெகுதூரம் அனுப்பினான் (ஆதி 25:1-6).

*கேத்தூராள் அதிர்ஷ்டம் குறைந்த பெண்ணாகத் தெரிகிறது*. உண்மையில் அவள் வேதாகமத்தில் உள்ள *அதிகம் அறியப்படாத பெண்களின்* கீழ் வருகிறாள். கேத்தூராளும் அவளுடைய மகன்களும் எப்போதும் பின்னணியில் இருக்கிறார்கள். ஆனால் *தேவனாகிய கர்த்தர் அவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.*

அவர் அவர்களின் பெயர்களை நாளாகமங்களின் *வம்சவளி பட்டியலில்* பட்டியலிட்டார் (1 நாளா 1:32). சுவாரஸ்யமாக கேத்தூராளின் பெயர் மட்டுமே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாராள் மற்றும் ஆகார் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. எல்லாரும் மறந்தாலும், *தேவனாகிய கர்த்தர் எப்போதும் நம்மை நினைவில் கொள்கிறார். அவருடைய பரலோக புத்தகத்தில் நமது பெயர் இடம் பெறுவது எவ்வளவு நல்லது.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 11, 2023_
[11/08, 16:50] +91 99431 72360: Mrs.Merin Gnanaraj
Covai
Day : 119
Date: 11.8.23

✍️தலைப்பு:
❗ஏசா என்னும் ஏதோம்
எப்படி "சேயீரானார்"❓
1 நாளா 1:38 - 43.

🎯விளக்கம்:
🔸ஏசா வம்சத்தார் - ஏதோமியர்
🔸யாக்கோபு வம்சத்தார் - இஸ்ரவேலர்

👉வம்ச வரலாறில்,
👉1 நாளா 1:45 ல்
🔸இஸ்ரவேலரை ராஜாக்கள் ஆள்வதற்கு முன்னரே ஏதோமியரை ராஜாக்கள் ஆண்டார்கள் என்று பார்க்கிறோம்.

🔸இதனால் தான் இஸ்ரவேலரும் தங்களை ஆள ராஜா வேண்டும் என கேட்டிருப்பார்கள் என தோன்றுகிறது.

🎯ஏதோம் எப்படி சேயீரானார்❓

📍1.ஏசாவிற்கு சேயீர் மலை தேசம் கொடுக்கப்பட்டதால்
இருக்கலாம்.

📍2. ஏசாவின் மகன் எலிப்பாஸ்
🔸இந்த எலிப்பாஸின் மறுமனையாட்டி திம்னா.
🔸இவர்களது மகன் தான் அமலேக்கு
🔸இவனே அமலேக்கியரின் தகப்பன்.
ஆதி 36:11, 12

📍இந்த திம்னாள் யாரென்றால்
🔸சேயீர்மலையில் வாழ்ந்த சேயீரின் மகள்.
1 நாளா 1:38, 39.

👉இப்படியாக,
🔸ஏசா, சேயீர் வம்சத்தோடு கலப்பு திருமணம் செய்ததால் ஒரே மக்கள் ஒரே குழுவாக மாறினர்.

👉இப்படிதான்
📍ஏதோம் சேயீரானார்.

👉அதனால் தான்,
🔸கர்த்தர், இஸ்ரவேலரிடம்
ஏசாவின் வம்சமான
ஏதோமியருக்கு
கருணை காட்டும்படி சொல்வார்.

👉ஆனால்
🔸 இஸ்ரவேலரோடு அமலேக்கிற்கு எப்போதும் பகை இருந்ததால்
🔸ஏதோம் சேயீரானதால்
🔸ஏசாவின் அடுத்த தலைமுறையை (அமலேக்கியரை)அழிக்க கட்டளையிடுவார்.

👉தேவ சுதந்தரம் இழந்த ஏசா சேயீரின் சொந்தமானார்.

👉தன் அடையாளத்தை இழந்தார்.
(அமலேக்கு)கர்த்தரால் வெறுக்கப்பட்டார்

🎯சிந்தனைக்கு,
🔸நம் அடையாளம் ,
தலைமுறைக்கும் ஆசீர்வாதமாகும் படி
கவனமாய் வாழ வேண்டும்..

ஆமென்.🙏

[11/08, 16:50] +91 99431 72360: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *1 நாளாகமம் 1 & 2* இல் இருக்கிறோம்

*GENEALOGY IN ISRAEL'S HISTORY*

*இஸ்ரவேலின் வரலாற்றின் வம்ச வரலாறு*

📝 1 மற்றும் 2 நாளாகமங்களின் ஆசிரியர், அடிக்கடி *"வரலாற்று ஆசிரியர்"* என்று அழைக்கப்படுகிறார், வழிகாட்டுதலும் ஊக்கமும் தேவைப்படும் பார்வையாளர்களுக்கு இஸ்ரேலின் வரலாற்றைப் பாடமாகப் பயன்படுத்தினார்.
*வரலாற்று ஆசிரியர் இஸ்ரவேலின் வம்சவரலாறுகளுடன் தொடங்குகிறார்*, மேலும் வம்சவரலாறுகளில் புறஜாதியாரையும் சேர்ப்பதன் மூலம், இஸ்ரவேல் தேசங்களுக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர் காட்டுகிறார்.

📝 யூதர்கள் தங்கள் வம்சாவளியை விடாப்பிடியாக மதிப்பிட்டனர். அவை பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன:
1️⃣ *கோத்திர இருப்பிடம்* : கானான் வெற்றிக்குப் பிறகு தேசம் கோத்திர எல்லைகளாகப் பிரிக்கப்பட்டது. *எண்ணாகமம் 26* இல் ஒருவன் எப்படி அவனது கோத்திரம், அவனது குடும்பம் மற்றும் அவனது தந்தையின் வீடு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது. அதனால் தேசத்தில் சரியான இடத்தில் அவரை அடையாளம் காண முடியும்.

2️⃣ *நில பரிவர்த்தனை* : *ரூத் 3 மற்றும் 4* படி, சொத்தை மாற்றுவதற்கு குடும்ப மரபு விளக்கத்தைப் பற்றிய துல்லியமான அறிவு தேவை, அதனால் அவர்கள் தங்கள் கோத்திரத்தாரின் தேசத்தை கோத்திரத்தாருக்குள் வைத்திருக்க முடியும்.

3️⃣ *கோத்திரத்தின் சோதனை* : 70 வருட பாபிலோனிய சிறையிருப்புக்குப் பிறகு, யூதர்களில் பலர் இஸ்ரேலுக்குத் திரும்பி வரத் தொடங்கினர். அவர்களில் பலர் தாங்கள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியர்கள் என்று கூறிக்கொண்டனர். அவர்களின் கூற்றுகள் அவர்களின் வம்ச அட்டவணையின் அடிப்படையில் நிரூபிக்கப்பட வேண்டும் ( *எஸ்ரா 2:62*). ஏனென்றால், லேவியர்கள் மட்டுமே ஆசாரியர்களாக சேவை செய்ய வேண்டும் என்பதில் கர்த்தர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ( *எண் 1:50-53* )

4️⃣ *வரி விதிப்புச் சட்டங்கள்* : பிற்காலத்தில், கிறிஸ்துவின் காலத்தில், ரோமர்கள் யூத வம்சாவளியை வரிவிதிப்புக்கு பயன்படுத்தினர். எனவே மக்கள் தங்கள் பெற்றோர் வம்சாவளியின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் ( *லூக்கா 2:1-4*)

📝 யூதர்கள் தங்கள் வம்சாவளியை உயர்வாக மதித்தார்கள். *பவுல்*, பென்யமின் கோத்திரத்தைச் சேர்ந்த ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொண்டு இஸ்ரவேலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ( *ரோமர் 11:1* )
📝புதிய ஏற்பாட்டில் *இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாறு* மத்தேயு மற்றும் லூக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வம்சாவளியின் எண்ணிக்கை தலைகீழாக உள்ளது: மத்தேயுவின் வம்சாவளியானது யோசேப்பு வழியாக ( *ஆபிரகாமிலிருந்து இயேசு வரை*) வருகிறது, அங்கு லூக்கா இயேசுவை ( *ஆதாமிடம்*) மரியாள் மூலம் அடையாளப்படுத்துகிறார்.
📍 *ஒன்று இயேசுவுடன் தொடங்குகிறது, மற்றொன்று இயேசுவுடன் முடிகிறது*. கிறிஸ்துவே ஆரம்பமும் முடிவுமாயிருக்கிறார்.

💕 அன்பான திருச்சபையே, வரலாற்றின் விவரங்களில் கர்த்தர் நடத்துகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும் என்பதை 1 நாளாகமம் புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது.

🙋‍♂️🙋‍♀️ அவரது ஆழ்ந்த விருப்பம் *நம்முடைய பாவங்களின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி, அவரை ஆராதிக்கும் வாழ்க்கைக்கு நம்மை இழுக்க வேண்டும்*.
🔖 ஒருவரின் அடையாளத்தை நிலைநிறுத்த வம்சவரலாறு தேவை.
📍 *ஆனால் நமது அடையாளம் கிறிஸ்துவில் உள்ளது*.
📍 வேதாகமம் கூறுகிறது, *"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்."* (யோவான் 1:12)

தேவனுக்கே மகிமை 🙏
✍🏾 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[11/08, 16:50] +91 99431 72360: *LINEAGE TRACING*
*வம்சாவளி தடமறிதல்*

[DAY - 119] 1 நாளாகமம் அத்தியாயங்கள் 1 & 2

☄️1 நாளாகமம் புத்தகம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனத்தின் மூதாதையர்களின் வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

1️⃣ *தோற்றங்களைத் தேடுதல்* (1 நாளாகமம் 1:1-27)

🔹தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரான ஆதாமுடன் வம்சவரலாறு தொடங்கி, நோவா மற்றும் அவரது மகன்களான சேம், காம் மற்றும் யாப்பேத் உட்பட பல்வேறு தலைமுறைகளில் தொடர்கிறது.
🔹இது நோவாவின் சந்ததியினரிடமிருந்து தோன்றிய தேசங்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது, மனிதகுலத்தின் அடித்தளத்தையும் வெவ்வேறு கலாச்சாரங்களின் தோற்றத்தையும் குறிக்கிறது.

2️⃣ *ஆபிரகாமின் வம்சம்* (1 நாளாகமம் 1:28-54)

🔸இது ஆபிரகாமின் வம்சாவளியை அவரது மகன்களான இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு மூலம் தடமறிகிறது.
🔸இது தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கின் வழிதோன்றல்கள் மூலம் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் வலியுறுத்துகிறது.

3️⃣ *இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்* (1 நாளாகமம் 2:1-2)

🔺இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், மிக முக்கியமான கோத்திரமாகிய யூதாவில் தொடங்கி, இஸ்ரவேலின் புகழ்பெற்ற ராஜாவான தாவீதுக்கு வழிவகுத்த யூதாவின் வம்சாவளியைப் பற்றிய விரிவான கணக்கை வழங்குகின்றன.
🔺இந்த வம்சாவளி யூதா கோத்திரத்திலிருந்து வந்து, நித்திய ராஜ்யத்தை நிறுவப்போகிற, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவிக்கிறது.

4️⃣ *பரம்பரைகளின் பங்கு*

▪️விரிவான வம்சாவளியினர் கடந்த தலைமுறைகளுக்கும் தற்போதைய இஸ்ரேலிய சமூகத்திற்கும் இடையே ஒரு வரலாற்று தொடர்பை நிறுவி, அவர்களுடைய பகிரப்பட்ட பாரம்பரியரியத்தையும் அடையாளத்தையும் வலுப்படுத்துகிறது.
▪️இஸ்ரவேலர்களின் தெய்வீக அழைப்பையும், வரலாறு முழுவதும் தேவனுடைய உண்மைத்தன்மையையும் அவைகள் நினைவுபடுத்துகின்றன.
▪️மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வரப்போகும் வம்சத்திற்காக திட்டமிடுவதில், தேவனுடைய பராமரிப்பையும் இறையாண்மையையும் இவைகள் நிரூபிக்கிறது.
▪️பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேறத்தக்கதாக, ஒரு குறிப்பிட்ட பரம்பரையில் இயேசு பிறந்ததன் முக்கியத்துவத்தை அவை முன்னிலைப்படுத்துகிறது, மற்றும் தேவன் தன் வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥 இஸ்ரவேல் தேசத்தின் மூதாதையர்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான அடித்தளத்தை, வம்சாவளி தடமறிதல் வழங்குகிறது.
💥தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் இடையே ஒரு வரலாற்று தொடர்பையும், தலைமுறை தலைமுறையாக வெளிப்படும் தெய்வீக திட்டத்தையும் அவைகள் நிறுவுகின்றன.
💥இந்த வம்சாவளி இஸ்ரவேலர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்து என்ற நபரில் தேவனுடைய வாக்குறுதிகளின் இறுதி நிறைவேற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

*‼️தேவனுடைய உண்மை வரலாறு முழுவதும் இருப்பதற்காக அவரை துதியுங்கள்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

[11/08, 21:07] +91 99431 72360: 11.08.2023

*🍏சிப்பிக்குள் முத்து🍏*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 1, 2*

*🍃முத்துச்சிதறல் : 119*

🎀🍒🥦🍒🎀
*ஆபிராமாகிய ஆபிரகாம்.*
(1நாளா - 1 : 27)
🥦🎀🍒🎀🥦

*✍️ 1 மற்றும் 2 நாளாகம புத்தகங்கள் எழுத பட வேண்டிய அவஷியம் என்ன❓️*
அது தான்.....
*1 மற்றும் 2 இராஜாக்காளில் எல்லாமே இருக்கிறதே !*
என நாம் மனித கண்ணோட்டத்தில் யோசிக்கலாம்.
இவைகள் *(இராஜாக்கள் நூல், மற்றும் நாளாகமங்கள் நூல்)* பார்ப்பதற்கு ஒன்று போல, ஒத்த விதமாக தோன்றினாலும்,
*எல்லாவகையிலும் பொருத்தமாகவோ, இல்லை முற்றிலும் ஒரே விதமாக இருக்க வாய்ப்புகள் குறைவு.*
வேதத்தை நாம் ஆராயும் போது, வசனங்களை ஒத்து நோக்குகையில் மாத்திரமே இவை புலப்படும்.

அவைகள் இரண்டு வகையான கண்ணோட்டதோடு எழுத பட்டுள்ள வரலாற்று பதிவுகளை தான் என்பதை நாம் காண இயலும்.
*சில வேத அறிஞர்களின் கருத்து என்னவெனில் :*

*இராஜாக்கள் நூலானது* சிறையிருப்பில் இருந்த மக்களுக்காகவும்.... *நாளாகம நூல்கள்* சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த மக்களுக்காகவும்.....அவர்கள் பாடுகளினூடே சென்றாலும்...... *தங்கள் விசுவாசத்தை காத்து கொள்ளவும், எதிர்கால நம்பிக்கை* [அதாவது நீதியாக ஒருவர் (மேசியா) வந்து அரசாளுவார் என்னும் நம்பிக்கை] *உண்டாக எழுதப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.*

🪶இராஜாக்கள் நூல் மற்றும் நாளாகம நூல்கள் வித்தியாசமான அரசியல் நோக்கோடு எழுதப்பட்டவையாகும்.
இராஜாக்கள் நூல் இஸ்ரவேல் மற்றும் யூதா அரசாங்கங்களை அணைத்து கொள்ளுவது போல நாளாகம நூல்கள் அணைத்து கொள்ளாமல்............
வெறும் யூத அரசாங்கம், மற்றும் அரசாட்சியை முன்னிறுத்தி....
*ஆசாரியத்துவ ரீதியாகவும் எமக்கு பலவற்றை தெரிய படுத்துகிறது.*

📌🔰📌🔰📌🔰

*🫛மூல / புராதனமான / அசல் எபிரேய வேத புத்தகத்தில்....*
1 மற்றும் 2 நாளாகம புத்தகங்கள் ஒரே புத்தகமாகவும், அதன்
தலைப்பு, *"காலத்தின் நிகழ்வுகள்"*
(Events of the Days)
என்றே குறிப்பிட பட்டுள்ளது.

அப்புறமாக அது 2 பகுதிகளாக பிரிக்க பட்டு....
*"கடந்து போன / முடிந்து போன நிகழ்வுகள்"*
(Things Passed Over)
என கிரேக்க பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்தோர் மூலம் பெயரிடப்பட்டது.

இப்பொழுது நாம் காணும்....
*நாளாகமம் என்னும் பெயரை இட்டவர்*
அறிஞர் ஜெரோம் ஆவார்.

*🍒சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வம்சா வழியை அறிந்திருந்தனர். பின்வரும் தலைமுறையில் கிறிஸ்துவானவர் பிறக்க இருந்ததால் இந்த வம்ச அட்டவணை யூதர்கள் மத்தியில் பெரிதும் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது.*

🍧சுவாரஸ்யமான பல தகவல்களை நாம் இந்த
*1 நாளாகமத்தின்*
*2 அதிகாரங்களில்* கண்ணோக்கலாம் வாரீர் !

🍀🍒🍀🍒🍀🍒

முதல் வசனத்தில் *ஆதாம், சேத், ஏனோஸ்,* என்றுள்ளது.
(1:1)

*🍒ஆதாமுக்கு சேத் என்னும் ஒரே ஒரு குமாரன் மட்டும் பிறந்திருந்தார் போல தோற்றம் ஏற்படுகிது.*

ஆனால் உண்மையில் ஆதாமுக்கு எத்தனை குமாரர், குமாரத்திகள் பிறந்திருந்தனர் என்கிற முழு விபரம் எமக்கு தெரியாவிட்டாலும், (ஆதி - 5 : 1 - 4)
*ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயீன், ஆபேல் என்னும் இரு குமாரரும் கூட நிச்சயம் பிறந்து இருந்ததை* ஆதியாகமம் - 4ம் அதிகாரம் உறுதிப்பட எமக்கு தெரிய படுத்துகிறது.

அது மட்டுமா❓️

*💐காயீன் என்ற ஒருவர் இல்லவே இல்லை என எவரும் மறுக்காதபடி, அவரை குறித்து,* எபி - 11 : 4 :, 1 யோ - 3 : 12 :, யூதா - 11
*போன்ற வசனங்கள்*
எமக்கு அறிய தருவது மட்டுமல்லாமல்.....

ஆபேலை குறித்து இயேசுவும், எபிரேய நிருப ஆக்கியோனும் குறிப்பிட்டுள்ளனர்.
*(மத் - 23 : 35 :, எபி - 11 : 4 :, 12 : 24)*

நாம் எப்பொழுதுமே *முழு வேதாகமத்தையும் ஆராய்ந்து பார்த்தே யாதோரு முடிவுக்கும் வரவேண்டும் என்பதை எமக்கு இவை தெளிவு படுத்துகிறது* / *உறுதிப்படுத்துகின்றது.*

ஆகையால்

*💐ஆபேல் போன்ற எவரும் இல்லவே இல்லை என எவரும் மறுக்க இயலாது.

🎈💠🎈💠🎈💠

*🍁ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையாக ஏனோக்கு பெயர் வருகிறது.*

ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு (1:1-3)

அதற்காக......

*🍁நோவா, சேம், காம், யாப்பேத், என்று இருப்பதால்...*
(1 : 4)

*🍁நோவாவின் நான்காம் தலைமுறை யாப்பேத்*
என தவறாக எண்ணி விட கூடாது.

அது....
நோவாவின் முதலாம் குமாரன்.
*(ஆதி - 10 : 1, 2, 21)*

*🍃சிலர் பூமியில் காண்பித்த பராக்கிரம செயல்கள்.*
*(1 : 10)*

*🌿ஆபிரகாமுக்கு பிறந்த இஸ்ரவேலர், மீதியானியர், இஸ்மவேலர் குறித்த குறிப்புகள்.*
*(1 : 28 - 33)*

*🍁சிலரின் மனைவியின் பெயர்.*
*(உ. ம். 1:50)*

*🍁சிலரின் சகோதரிகளின் பெயர்.*
*(உ. ம். 2:16)*

*🍁சிலரின் மறு விவாக காரியம்.*
*(உ. ம். 2:19)*

*🍁சிலர் திருமணம் முடித்த வயது.*
*(உ. ம். 2:21)*

*🍁குமாரர் இல்லாமல் மரித்து போனவர் காரியம்.*
*(உ. ம். 2 : 32)*

*🍁புத்திர சந்தானமே இல்லாமல் மரித்தவர்.*
*(உ. ம். 2 : 30)*

*🍁சிலருக்கு சொந்தமாக இருந்த ஊர்களின் தொகை.*
*(2:22)*

*🍁சிலர், சில பல ஊர்களை பிறர் கையில் இருந்து விலை கிரயமாக வாங்கிய காரியம்.* *(2:23)*

*🍁சிலரின் தாய் பெயர்.*
*(2:26)*

*🍁சிலர் தங்கள் குமாரத்தியை வேலைக்காரனுக்கு திருமணம் முடித்து கொடுத்து இருந்தனர்.*
*(2:35)*

*கணக்கரின் வம்சங்கள்.*
*(2 : 55)*

*🌱ஏதோம் தேசத்தில் அரசாண்ட மன்னர்கள்.*
*(1 : 43 - 50)*

*🛍️சாபத்தீடான விஷயத்திலே துரோகம் செய்தவர்.*
*(2 : 7)*

*🍁உரியாவின் மனைவியாய் இருந்து, பின்பு தாவீதுக்கு மனைவியான பத்சேபாளுக்கு வெறும் சாலமோன் தான் பிறந்திருந்தார் போல தோன்றிடினும், அவருக்கு மொத்தம் 4 புதல்வார்கள் இருந்ததும் கூட எழுதப்பட்டுள்ளது. (3:5)*

🍇🌻🍇🌻🍇🌻

இதன் மத்தியில்......
*ஆபிராமாகிய ஆபிரகாம்.*
என்னும் வசனம் இடம் பெற்றுள்ளது.
ஆண்டவரால்
பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் ஆபிரகாம் என்றே இவர் குறிப்பிட படுகிறார்.
*கர்த்தர் தான் ஆபிராமுக்கு ஆபிரகாம்* என்னும் பெயரை சூட்டினார்.
*(ஆதி - 17 : 5 :, நெகே - 9 : 5)*
இதன் அர்த்தம்
*திரள் ஜனத்தின் தகப்பன்* என்பதாம்.
அது போலவே பாருங்கள்.....
அவர் சந்ததி திரளாக பெறுகினதை வேதத்தில் வரும் பல வசனங்கள் வாயிலாக அறிகிறோம்.
விசுவாசிகளின் தகப்பனாக இவர் முழு உலகுக்கும் திகழ்கிறார்.

அடுத்து...
ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கிற்கு *ஏசா, இஸ்ரவேல்*
(2 : 34)
இங்கு இஸ்ரவேல் என்பவர் வேறே யாரோ....
என்று நாம் குழம்பி விடாதபடி.....
*யாக்கோபின் பெயர் தான் இஸ்ரவேல்*
என்று ஆண்டவர் மாற்றியதை.....
*ஆதி - 32 : 27, 28)*
மூலம் அறிகிறோம்.

ஆகையால்....
🍉பெயர் மாற்றங்கள்
🍉மரித்து போனோர்
🍉பெயர் விடப்பட்டவர்கள்
🍉தலைமுறையினர்
போன்ற பல காரியங்களை கூர்மையாக கவனித்து மட்டுமே நாம் முடிவுக்கு வர வேண்டியுள்ளதால்....
நாளாகம நூலை கவனமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆண்டவர் உதவி புரிவாராக !

*Sis. Martha Lazar🎁*
NJC, KodaiRoad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.