Type Here to Get Search Results !

உங்கள் கையில் இருப்பது சுரமண்டலமா? ஈட்டியா? | சிக்லாகு என்ற சிக்கல் | Alwin Johnson | Daily Bible Study in Tamil | Jesus Sam



[08/08, 07:59] +91 97900 02006: ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

உங்கள் கையில் இருப்பது சுரமண்டலமா? ஈட்டியா?

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐




மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; ... அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, *தன் கையினால் சுரமண்டலத்தை* வாசித்துக்கொண்டிருந்தான்; *சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.* (1 சாமு. 18:10)




*தேவ ஆவியைப் பெற்றிருந்த தாவீதின் கையிலே சுரமண்டலமிருந்தது.* அவன் சுரமண்டலத்தை வாசித்து தேவனை துதித்துக் கொண்டிருந்தான்.




*பொல்லாத ஆவியை உடையவனாயிருந்த சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.* அவன் ஈட்டியைக் கொண்டு தாவீதை குத்த முயன்றுகொண்டிருந்தான்.




*சுரமண்டலமும் ஈட்டியும் இரு வித்தியாசமான மனப்பான்மைகள் ஆகும்.*




சிலர் தேவனை துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதுமான சுரமண்டலமாகிய ஆயுதத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் காணப்படுவார்கள். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், இவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை என்ன பேசினாலும், இவர்கள் வருத்தமடையவே மாட்டார்கள். இவர்களின் சமாதானமுள்ள செயல்பாடுகள் மற்றவர்களையும் மகிழவைக்கும்.




ஆனால் வேறு சிலர் பொறாமையோடும், பெருமையோடும், கசப்போடும் மற்றவர்களை காயப்படுத்தும் ஈட்டியை தங்கள் நாவிலும், கையிலும் வைத்துக் கொண்டு எரிச்சலோடு வாழ்வார்கள். இவர்கள் புலம்பிக் கொண்டும், முறுமுறுத்துக்கொண்டும், எரிந்து எரிந்து விழுந்து கொண்டுமிருப்பார்கள். தாங்கள் கோபப்படுவதினால் தான் மற்றவர்கள் தங்களுக்கு பயப்படுகின்றார்கள் என்ற தவறான எண்ணத்தோடு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.




*உங்கள் கையில் இருப்பது சுரமண்டலமா? ஈட்டியா?*




*கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தேவனுடைய பிள்ளைகளின் ஆயுதம் துதிக்கும் சுரமண்டலமே ஆகும். மற்றவர்களை காயப்படுத்தும் ஈட்டி நம்முடைய ஆயுதம் அல்ல.*




குடும்பத்திலோ, சபையிலோ அல்லது சமுதாயத்திலோ, என்ன பிரச்சனையானாலும், நாம் ஜெபித்து சமாதானத்துடன் தீர்வுகாணவேண்டுமேயல்லாமல், சண்டையிட்டு கலகம் பண்ணி தீர்வு காண முயற்சிக்கக்கூடாது. சவுலைப் போல பொல்லாத ஆவியுடையவர்கள் தான் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.



*ஈட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு தாவீதை வேட்டையாட துவங்கின சவுல், கடைசியில் பரிதாபமாக அழிந்தான். ஈட்டி மனப்பான்மை உங்களை ஒரு நாள் நிச்சயம் அழிக்கும்.*




*ஆனால் சவுலின் ஈட்டியை தன் சுரமண்டலத்தால் சந்தித்த தாவீது பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றான்.*




👉 கர்த்தர் தாவீதோடே இருந்தார் (1 சாமு. 18:12,14),

👉 தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான் (18:14,15),

👉 எதிரிகள் தாவீதுக்கு பயந்தார்கள் (18:15, 29),

👉 மக்கள் தாவீதை சிநேகித்தார்கள் (18:16),

👉 தாவீது மிகுந்த கனம் பெற்றான் (18:30).




இதில் ஆச்சரியம் என்னவென்றால் *ஈட்டியைக் கையில் வைத்திருந்த சவுல், சுரமண்டலத்தை கையில் வைத்திருந்த தாவீதுக்கு பயந்து பயந்து வாழ்ந்தான்* என்பது தான். ஈட்டிதான் பயமுறுத்தும் கருவி ஆனால் சுரமண்டலத்தைப் பார்த்து சவுல் பயப்படுகின்றானென்றால், சுரமண்டலத்தின் வலிமையை இப்போதாவது உணருங்கள்.




*ஈட்டியை எடுத்தவர்கள் வாழ்ந்ததையும், சுரமண்டலத்தை எடுத்தவர்கள் வீழ்ந்ததையும் சரித்திரம் ஒரு நாளும் கண்டதில்லை.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!




சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006



[09/08, 07:43] +91 97900 02006: ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

சிக்லாகு என்ற சிக்கல்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐




தாவீது கர்த்தரால் ராஜாவாகும்படி அபிஷேகிக்கபட்டவன். ஆனால் அன்றிலிருந்தே சவுல் தாவீதை மிகவும் விரோதித்து, அவனை கொலை செய்ய துரத்தினான். ஓடி ஓடி களைத்துப்போன தாவீது ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போனான். *நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்;* அதனால் சவுல் என்னை கண்டுபிடிக்காதபடி நான் அண்டை நாடான பெலிஸ்தியரின் தேசத்திற்கு போய் *தப்பித்துக் கொள்வதை விட வேறு வழியில்லை* என்று தாவீது யோசித்தான். (1 சாமு 27:1-2)




அவனும் அவனுடைய 600 மனிதரும், அவர்கள் அத்தனை பேரின் குடும்பங்களும் பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீசினிடத்திற்கு போய் அடைக்கலம் தேடினார்கள். ஆகீஸ் ராஜா அவர்கள் தங்குவதற்காக, அவர்களுக்கு நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள *சிக்லாகு* என்ற ஒரு இடத்தை கொடுத்தான். அங்கே சில காலம் அவர்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் தாவீதும் அவன் 600 மனுஷரும் இல்லாத நேரத்தில் அமலேக்கியர் வந்து அவர்களுடைய மனைவி பிள்ளைகள், மற்றும் உடைமைகள் எல்லாவற்றையும் கொள்ளையடித்து கொண்டு சென்றார்கள்.




இதையறிந்த தாவீது, துக்கத்தால் நிறைந்தவனாய், அழுகிறதற்கு பெலனில்லாமல் போகுமளவு அழுதான் என்று வாசிக்கிறோம். (1 சாமு 30:4). அவனுடைய மனிதரும் அவனை கல்லெறியும்படி முயற்சித்தார்கள். *சிக்லாகு என்ற இடம் தாவீதின் வாழ்வில் பெரிய சிக்கலை கொண்டு வந்து விட்டது.*




ஏன் தேவனால் அழைக்கப்பட்டவனுக்கு இந்த பிரச்சனை? ஏன் அபிஷேகம் பண்ணப்பட்டவன் தன் குடும்பத்தை இழந்து நிற்கின்றான்? *இந்த பிரச்சனையை அல்லது சிக்கலை தாவீது தவிர்த்திருக்க முடியுமா? முடியும்.*




இங்கு தாவீதுக்கு இந்த பிரச்சனை வந்ததற்கான இரண்டு காரணங்கள் உண்டு.




*ஒன்று, அவனுடைய அவிசுவாசம்.*




நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்து போவேன் என்று நினைத்து தான் தாவீது இந்த சிக்லாகு என்ற பெலிஸ்திய பட்டணத்திற்கு வருகின்றான்.




*சவுலின் கையினால் சாகடிப்பதற்காகவா கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்? கர்த்தர் அவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருப்பது உண்மையென்றால், என்றாவது ஒரு நாள் அவன் ராஜாவாகப்போகிறதும் உண்மை.* அதற்கு இடையில் யார், எப்படி அவனை துரத்தினாலும் அவனை அழிக்க முடியவே முடியாது. கோலியாத்தினிடத்திலிருந்து தாவீதை காத்தது யார்? கர்த்தரல்லவா! அன்றிலிருந்து *ஒவ்வொரு நாளும் சவுலின் கைக்கு தப்புவித்து நடத்துகின்றது யார்? கர்த்தரல்லவா!*




*இது வரை யாரும் அவனை அணுக முடியாதபடி காத்து நடத்துகின்றவர், இனிமேலும் காத்து நடத்துவார்.* அது மட்டுமல்ல நிச்சயம் ஒரு நாள், அரசனாவாய் என்ற தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில்லாமல் சோர்ந்து போகின்றான்.




உங்களுடைய வாழ்க்கையிலும் நடக்கிற சூழ்நிலையைக் கண்டு நான் சாகத்தான் போறேன், எல்லாம் நாசமா போகப்போகுது, இது நடக்காது, அது நடக்காது என்று அவிசுவாசமான எண்ணங்களை கொண்டிருப்பீர்களென்றால் கர்த்தர் உங்களோடு பேசுவாராக. *கர்த்தருடைய நோக்கம், தேவ திட்டம், அவர் நமக்கு தந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறாமல், இந்த உலகமே உங்களுக்கு எதிராக வந்தாலும் உங்கள் தலை முடியையும் அசைக்க முடியாது.*




நாம் நடக்கிற பாதைகள் கரடு முரடாயிருப்பதால், நாம் அடையப் போகின்ற இடத்தை குறித்து அவிசுவாசப்படாதிருங்கள்.




*இரண்டாவது, அவனுடைய சுய சித்தம்.*




வாழ்க்கையின் அநேக முக்கிய கட்டங்களில் கர்த்தரிடம் விசாரித்து கேட்டு தேவ சித்தத்தை தவறாமல் செய்த தாவீது, இந்த குறிப்பிட்ட நேரத்தில் *அவிசுவாசத்தினால் தன்னுடைய சுயசித்தத்தை செய்து, பிழைப்பதற்காக பெலிஸ்திய நாட்டின் சிக்லாகிற்கு சென்றான்.* ஆனால் அங்குதான் அமலேக்கியரிடம் தன் குடும்பம் முழுவதையும் பறிகொடுத்தான்.




*அவிசுவாசம் சுயசித்தத்திற்கு வழி வகுக்கும். வேதத்தில் அவிசுவாசத்தினால் பிழைப்பிற்காக சுய சித்தம் செய்தவர்கள் பலர் தங்கள் குடும்பத்தை இழந்திருக்கிறார்கள்.*




👉 *லோத்து* சுயசித்தம் செய்து, சோதோம் கொமாராவிற்கு சென்று பின்னர் தன் குடும்பத்தை இழந்தான்.




👉 *ஆபிரகாம்* பஞ்சம் பிழைக்க எகிப்திற்கு சென்று தன் மனைவியை பார்வோனிடத்தில் இழக்க இருந்தான். ஆனால் கர்த்தர் கிருபையாய் காப்பாற்றினார்.




👉 *எலிமலேக்கு,* நகோமி பஞ்சம் பிழைக்க மோவாப் தேசத்திற்கு சென்றார்கள். அங்கு நகோமி கணவனையும் தன் இரண்டு பிள்ளைகளையும் இழந்தாள்.




👉 இங்கு *தாவீது* உயிர் பிழைக்க சிக்லாகு சென்றான். தன் குடும்பத்தை இழந்தான். ஆனாலும் பின்னர் கர்த்தர் கிருபையாய் அதனை மீட்க உதவி செய்தார்.




*அழைப்பிற்காக என்று உலகத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம். ஆனால் பிழைப்பதற்காக என்று ஒரு இடத்திற்கு ஒரு நாளும் செல்லாதீர்கள். அந்த இடமே உங்களுக்கு கண்ணியாய் மாறிப் போகலாம்.* தேவ நோக்கத்தின்படி கர்த்தராக உங்களை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றால் செல்லலாம். ஆனால் உயிருக்கு பயந்து, அல்லது பஞ்சம் பிழைப்பதற்காக என்று இடங்களை மாற்றாதீர்கள். *நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை காக்க, போஷிக்க கர்த்தர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.*




*கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள். ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன் தேவ சமூகத்தில் அமர்ந்து அவருடைய நடத்துதலை கேளுங்கள். அவருடைய வழிகாட்டுதலின் படி உங்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுங்கள். உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாயிருக்கும்.*




*உங்கள் மனதலிருக்கும் அவிசுவாசத்தையும், சுயசித்தத்தையும் எடுத்து போட்டீர்களென்றால் சிக்லாகு போன்ற வாழ்க்கையின் சிக்கல்களை நீங்கள் தவிர்க்க முடியும்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!




சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006



[10/08, 09:34] +91 97900 02006: ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

*நீ என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு*

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐




யாத். 24:12; 34:1-2 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: *நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு...* என்றார். கர்த்தர் மோசேயை நோக்கி: ... *விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.*




யாத். 24:18; 34:28 மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். *அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்.*




மோசே தேவனிடத்திலிருந்து பத்து கட்டளைகளை பெறும்படி இரண்டு முறை 40 நாட்கள் உபவாசத்தோடு தேவனை தரிசித்த சம்பவங்கள் தான் இவை.




கர்த்தர் மோசேயை தன்னுடைய பிரசன்னத்திற்கு அழைக்கின்றார். மோசே கீழ்ப்படிந்து தேவ சமூகத்திற்கு சென்று தேவனை தரிசித்தான். அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான் என்று பார்க்கின்றோம். அதன் விளைவு என்ன?




இந்த நாட்களில் கர்த்தர் தன்னைப் பற்றிய விலையேறப்பெற்ற வெளிப்பாட்டை மோசேக்கு கொடுத்தார். தம்முடைய ஜனத்திற்கான பிரமாணங்களை கொடுத்தார். மோசேயோடு முகமுகமாய் பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக தம்முடைய மகிமையினால் மோசேயை கர்த்தர் மூடினார்.. கர்த்தரோடு அவன் இருந்து தேவனை தரிசிக்க தரிசிக்க, தேவ மகிமை அவனை மூடியது, அவன் முகம் பிரகாசிக்க ஆரம்பித்தது.




யாத் 34:29-30 மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, *தன்னோடே அவர் (கர்த்தர்) பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.* ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, *அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.*




அன்று முதல் ஜனங்களுக்கு மோசே மீது பெரிய மரியாதை உண்டாயிற்று. மோசே கர்த்தரை பிரதிபலிக்கிறவனாக மாறினான். அந்த 40 நாட்களின் ஜெபம் அடுத்த 40 வருடங்கள், அவன் இஸ்ரவேல் புத்திரரை தலைமை ஏற்று வழிநடத்த அவனை பெலப்படுத்தினது. அவன் மூலமாக கர்த்தர் பெரிய அற்புத அடையாளங்களை செய்தார்.




*இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற அருமையான தேவ பிள்ளையே, மோசேயை அழைத்த தேவன் இன்று உங்களையும் அழைக்கின்றார். மோசேயை அழைத்தது போல, "நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு..." "விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்" என்கின்றார்.*




*நீங்கள் தேவ அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, தேச சமூகத்திற்கு அனுதினமும் செல்ல நீங்கள் ஆயத்தமா? ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தேவனுடைய பாதத்திற்கு சென்று ஜெபிக்க அர்ப்பணிப்பீர்களா? உபவாசத்தோடு பல நாட்கள் அவர் பிரசன்னத்தில் காத்திருக்க தீர்மானம் எடுப்பீர்களா?*




*அப்படிச் செல்வீர்களென்றால், உங்கள் வாழ்க்கை மாறும். தேவ சமூகத்தில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் தேவனைப் போல மறுரூபமடைந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் சுவாபங்கள் மாறும். மகிமையினால் கர்த்தர் உங்களை மூடுவார். உங்கள் ஜனத்தின் மத்தியில் உயர்த்தப்படுவீர்கள்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!




சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.