Type Here to Get Search Results !

Willam Thomas Morris Clewes Life History | அமண்டா ரீட் மெக்ஃபார்லாண்ட் வாழ்க்கை வரலாறு | Jesus Sam



[01/08, 07:06] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 01* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *லுலு இ. கார்டன் Lulu E. Garton* 🛐




மண்ணில் : -

விண்ணில் : -

நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி : இந்தியா




லுலு இ. கார்டன் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ‘பிராட்வே கிறிஸ்டியன் சர்ச்’ (‘டிஸைபுள்ஸ் ஆஃப் க்ரைஸ்ட்’) மூலம் இந்தியாவுக்கு வந்து 1915-21ஆம் ஆண்டு வரை மிஷனெரி ஊழியம் செய்தார். அலெக்ஸாண்டர் ஹாமில்டன் மற்றும் மேரி ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறந்த லுலு, கிறிஸ்தவ வழியில் தேவனின் பயத்தில் வளர்க்கப்பட்டார். சிறு வயதில் மலையேறுவதை விரும்பிய அவர், கர்த்தருடனான தனது அனுபவத்தை இவ்விதமாய் விவரித்தார், "கொலராடோவில் உள்ள சில்வர் ப்ளூம் என்ற சிறிய சுரங்க மையத்தில, டென்வர் ஊருக்கு ஒரு மைல் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் மலைப்பகுதியின் அரிய வளிமண்டலத்தில் நான் முதன்முதயாக கர்த்தரின் காற்றை சுவாசித்தேன்."




அவருடைய இயல்பாகவே வீட்டில் பெற்ற ஆவிக்குரிய பயிற்சியினால் ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய பெண்மணியாக வளர்ந்தார். எனவே தனது பதின்மூன்றாவது வயதிலேயே தான் ஒரு மிஷனெரியாக வேண்டும் என்று முடிவு செய்த அவர், மிகவும் தேவை இருந்த இடமென்று இந்தியாவை தேர்ந்தெடுத்தார். கல்லூரி படிப்பைத் தொடங்க வேண்டிய நேரத்தில் அவருக்கு எந்த விதமான நிதி சம்பந்தமான உதவி கிடைக்கவில்லை. அதற்காக அவர் அவர்களுடைய போதகரிடம் பேசி, அதற்காக ஜெபித்தார். விளைவாக, அவர் ஒரு உதவித்தொகை (scholarship) பெற்றுக்கொண்டு 1907 ஆம் ஆண்டில் தனது கல்லூரி கல்வியை முடித்தார். பின்னர் அவர் கூடுதல் நேரத்தை ஒதுக்கி மிசோரி பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புப் படிப்பைத் தொடர்ந்தார். மேலும் அவர் கென்டக்கியின் ஹேசல் கிரீனில் உள்ள ஹோம் மிஷன்ஸ் மவுண்டன் பள்ளியில் கற்பித்தார், செவிலியராகப் பயிற்சி பெற்றார் மற்றும் மூன்று வருடங்கள் தனியார் துறையில் செவிலியராக பணியாற்றினார். மிஷனெரியாக இந்தியா செல்வதற்கான அவரது ஏற்பாடுகள், 'காலேஜ் ஆஃப் மிஷன்ஸ்' கல்லூரியில் பயிற்சியுடன் முடிவடைந்தன. இறுதியாக ஆகஸ்ட் மாதம் 1915 ஆம் ஆண்டு லுலு கார்டன் இந்தியாவுக்கு தனது பயணத்தை மேற்கொண்டார்.




இந்தியாவை அடைந்த அவர், அங்கு ஆறு வருடங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினார். அவர் பணியாற்றிய இடங்களில் ஹர்தா, ரத், பினா, ஜான்சி மற்றும் குல்பஹார் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கு சேவை செய்ய அவர் தன் உடலளவில் கடினமாக உழைத்தார். அதினால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து ஊழியத்தில் முன்னேறி செல்ல அவருக்கு உதவவில்லை. எனவே, 1921 ஆம் ஆண்டில் சிறிது காலம் அவர் தாயகம் திரும்பியபோது, அவர் திரும்பி வருவது சாத்தியமாகவில்லை. ஆனால் சோர்வடையாத கர்த்தரின் ஊழியர்களை அவருக்கு சேவை செய்வதில் எதுவும் தடுக்க முடியாது. அவர் தெற்கு கலிபோர்னியாவில் பெண்கள் மிஷனெரி அமைப்புகளின் செயலாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வயதான தனது தாயைப் பராமரிப்பதில் நேரத்தை செலவிட்டார். தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் கலிபோர்னியாவில் கழித்த லுலு கார்டன், எப்போதும் போலவே திருச்சபையின் மிஷனெரி நடவடிக்கைகளில் ஆர்வத்தை காட்டி கடைசி வரை அவற்றில் தீவிரமாக பங்கேற்றார்.




🚸*பிரியமானவர்களே, சோர்வடையாத இதயத்துடன் இறைவனுக்கு சேவை செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?* 🚸




🛐*"கர்த்தாவே, ஒதுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்ற அயராது சேவை செய்யும் மனதை எனக்கு தாரும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்



[02/08, 06:29] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 02* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *மார்கரெட் கார்கில் Margaret Cargill* 🛐




மண்ணில் : 28-09-1809

விண்ணில் : 28-06-1840

நாடு : ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் (United Kingdom)

தரிசன பூமி : தோங்கா மற்றும் பிஜி தீவுகள்




பசிபிக் தீவுகளில் மிஷனரி சேவை செய்வது மிஷனரிகளுக்கு ஆபத்தானதும் மிகுந்த கடினமாகவும் இருந்த நாட்களில் பிஜி மிஷனின் முன்னோடி மிஷனரிகளில் ஒருவராக திகழ்ந்தார் மார்கரெட் கார்கில். டேவிட் கார்கில் அவர்களுடனான அவரது திருமணத்தைத் தொடர்ந்து, இந்த மிஷனரி தம்பதியினர் 1832 ஆம் ஆண்டில் தோங்கா தீவுக்கூட்டத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.




வவாவு தீவுக்கூட்டத்திற்கு வந்தவுடன், மார்கரெட் மிகுந்த ஆர்வத்துடனும் வைராக்கியத்துடனும் மிஷனரி ஊழியத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு உள்ளூர் மொழியைப் பேச முடிந்தவுடன் அவர் மூத்த பெண்களை அவர்களின் குடிசைகளில் சந்தித்து எளிமையான சொற்களில் தேவனின் பெரிதான அன்பை அவர்களுக்கு அறிவித்தார். பின்னர் பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கிய அவர், இளம் பெண்கள் மற்றும் சிறு பெண்களுக்கு பெண்கள் தொடர்பான கலைகளை கற்பிக்க வகுப்புகளை ஏற்படுத்தினார். அவர் எல்லா வகுப்புகளுக்கும் மதச்சார்பற்ற அறிவுரைகளை போதிப்பது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய போதனைகளையும் வழங்கினார். இரக்கமுள்ள நல்ல இதயத்துடனும், பொறுமையுடனும் போதிக்கும் அவர், தான் சந்தித்த அனைவரின் இதயங்களையும் வென்றார்.




கார்கில் தம்பதியினர் முதன்முதலில் பிஜி தீவுகளில் உள்ள லேகம்பாவில் நரமாமிசம் உண்ணும் மக்களிடையே ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டனர். அங்கு தனது ஊழியத்தின் ஆரம்ப கட்டங்களில் மார்கரெட் தனது கணவருக்கு எல்லா வகையிலும் உதவி செய்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பெண்களின் நிலையை மேம்படுத்த கடினமாக உழைத்து ஊழியத்தில் முக்கிய பங்கு வகித்தார். பெண்களுக்கு கற்பிக்க வகுப்புகளை ஏற்படுத்திய அவர், இந்த உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, வரவிருக்கும் நித்திய ராஜ்யத்தைப் பற்றியும் அவர்களுக்கு போதித்தார். முன்னோடியர்களாக இருந்த அந்த மிஷனரி தம்பதிகள் தங்கள் விசுவாசம் மற்றும் பொறுமைக்கும் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவற்றில் பெரும்பாலானவை பரலோகத்திலுள்ள அவர்களின் எஜமானனுக்கு மட்டுமே தெரியும். பிஜி மக்கள் நரமாமிசம் உண்ணும் மக்களானதால் தெற்கு பசிபிக் தீவுகளில் உள்ள மிஷன் நிலையங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல் தோங்கா தீவுகளை விட அருகில் செல்ல மறுத்தது. அதினால் பல மாதங்களாக அவர்கள் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகள் கூட சந்திக்கப்படாத சூழ்நிலைகளை எதிர்கொண்ட நாட்களும் உண்டு.




என்றபோதிலும், தொடர்ந்து ஊழியத்தை செய்த அந்த மிஷனரி தம்பதியினரின் முயற்சிகளால் ஆசீர்வதிக்கப்பட்டது லேகம்பா தீவு மட்டுமல்ல. இந்தத் தம்பதியினர் தீவிலிருந்து தீவுக்குப் பயணம் செய்து, செல்லும் இடங்களெல்லாவற்றிலும் தேவனின் வார்த்தையின் நல்ல விதையை உண்மையுடன் விதைப்பதன் மூலம் பலர் கர்த்தரின் சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தனர். பற்றாக்குறை மற்றும் கஷ்டத்தின் முழு அனுபவத்தின் மத்தியில், பிஜி தீவுகளின் பல்வேறு பகுதிகளில் கடினமாக பணியாற்றிய பிறகு மார்கரெட்டின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இறுதியாக உண்மையுடன் சேவை செய்த இந்த மிஷனரி 1840 ஆம் ஆண்டில் தனது மீட்பரை அடைந்தார்.




🚸*பிரியமானவர்களே, உங்களை முழுமையாக கர்த்தரிடம் ஒப்படைத்து, சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள கர்த்தர் காட்டும் எந்த இடத்திற்கு ஆனாலும் செல்ல நீங்கள் ஆயத்தமா?* 🚸




🛐*"கர்த்தாவே, புறஜாதி இடங்களில் தேவ வார்த்தையின் நல்ல விதையை உண்மையாக விதைக்க எனக்கு உதவி தாரும். ஆமென்!"* 🛐*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்




[03/08, 06:20] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 03* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *மேரி கோபாட் Mary Gobat* 🛐




மண்ணில் : 09-11-1813

விண்ணில் : 01-08-1879

நாடு : சுவிட்சர்லாந்து

தரிசன பூமி : அபிசீனியா, மால்டா மற்றும் ஜெருசலேம்




சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிஷனரியான மேரி கோபாட் ஜெருசலேமின் ஆங்கிலிகன் மிஷனரி பிஷப்பாக பல ஆண்டுகள் ஊழியம் செய்த ரெவ். சாமுவேல் கோபாட் அவர்களின் மனைவி. அவர்கள் இருவருக்கு 1834ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அந்நாளிலிருந்து அபிசீனியா, மால்டா மற்றும் ஜெருசலேமில் தனது கணவர் செய்த ஊழியத்தில் உதவிட எல்லா முயற்சிகளை மேற்கொண்டார் மேரி. அன்பான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மேரி, சாமுவேலின் மேற்பார்வையிலுள்ள பள்ளியின் 1,400 மாணவர்களில் பலருக்கு தனது பாசத்தைக் காட்டினார்.




மேரி கோபாட் தனது கணவரின் ஊழியத்தில் முழு மனதுடன் ஈடுபட்டார். ஒருபுறம் வீட்டில் பல கடமைகளையும், சிறு குழந்தைகளோடு இருந்த தனது குடும்பப் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தபோதிலும், அபிசீனியா மற்றும் ஜெருசலேமில் தனது ஊழியத்தின் ஆரம்ப காலங்களில் அவர் தொடர்ந்து தனது அன்பு காட்டும் ஊழியத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். தனது கணவரால் தொடங்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும், பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி, அந்த சேவைகளுக்கு ஆதரவளித்து, எல்லாவற்றிலும் தனது கணவருக்கு நல்ல உதவியாளராக இருந்தார். சாதாரணமானதாக காணும் அவரது விசுவாசம், குழந்தைகளைப் போல் இருக்கும் கர்த்தரின் மேல் அவரது நம்பிக்கை மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதான இதயப்பூர்வமான அன்பு ஆகியவை அவரது ஆரம்பகால வாழ்க்கையின் அடையாளங்களாக இருந்தன. அவைகள் என்றும் அவரை விட்டுப்போகவில்லை. அபிசீனியாவில் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலேயும், ஜெருசலேமில் வெற்றிகரமான ஊழியத்தின் மத்தியிலேயும் ஒரே விதமாகவே நிலைத்திருந்த மேரி, இறுதி வரை அதே ஆர்வம், இரக்கம் மற்றும் தாழ்மையை காட்டினார்.




கோபாட் தம்பதியினர் நோய், குழந்தைகளின் மரணம் மற்றும் கடினமான பயண சூழ்நிலைகளை சகித்துக்கொண்டு, கர்த்தரின் அழைப்பிற்கு உண்மையாக வாழ்ந்தனர். எல்லா விஷயங்களிலும் மேரியை வழிநடத்தியது அன்பின் ஆட்சி; கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவாமல் அவர் யாரையும் விட்டுவிடவில்லை; அழுகிறவர்களுடனே அழுங்காமல் ஒருபோதும் இருந்ததில்லை; யாராவது பாவம் செய்தார்கள், அல்லது பின்வாங்கிபோனார்கள் என்று அவருக்குத் தெரியவந்தால் அவர்களிடம் சென்று அவர்களுக்காக ஜெபிக்காமல் அவர் பின்வாங்கிபோனதில்லை. தான் யாருக்காவது தவறு செய்ததாக அல்லது தெரியாமல் யாராவது மனதை கஷ்டப்படுத்தியதாக அவர் உணர்ந்தால், அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு மன நிம்மதி இருக்காது.




தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளில் பலவீனம் மற்றும் வயது காரணமாக அவர் கொஞ்சம் வேலையை மட்டுமே செய்ய முடிந்தாலும், துயரப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதிலும், தவறான வழிக்கு தப்பிப்போகிறவர்களை சரியான பாதைக்கு வழிநடத்துவதிலும் மேரி கோபாட் தனது முயற்சிகளை என்றும் கைவிடவில்லை.




🚸*பிரியமானவர்களே, நீங்களும் நானும் கிறிஸ்தவனின் உண்மையான நல்லொழுக்கங்களை எப்படி வெளிப்படுத்த முடியும்?* 🚸




🛐*"கர்த்தாவே, உம்மையும் உம்மிலுள்ள நித்திய ஜீவனையும் முழுமையாகக் கண்டுபிடிக்கும் வரை சோர்ந்துபோகாமல் ஜெபத்தையும் என் போராட்டத்தையும் தொடர எனக்கு உதவி செய்யும். ஆமென்!” (–மேரி கோபாட்)* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்


[04/08, 06:36] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 04* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *வில்லம் தாமஸ் மோரிஸ் க்ளூஸ் Willam Thomas Morris Clewes* 🛐




மண்ணில்: 17-10-1891

விண்ணில்: 30-05-1984

ஊர்: லை

நாடு: இங்கிலாந்து

தரிசன பூமி: இந்தியா




கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைத்து உறுதிப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இது புதிய விசுவாசிகள் முதிர்ச்சியை நோக்கி முன்னேறி அவர்களின் பழைய பாவ வாழ்க்கைக்குள் மீண்டும் நழுவாமல் இருக்க அவர்களுக்கிடையேயான செய்யப்படும் ஊழியம் ஆழமாக வேரூன்றி உறுதிப்படுத்தும்படி செய்யும் செயல்முறையாகும். சில மிஷனரிகள் மிஷனரி வேலையைத் தொடங்கி முன்னோடியாக நின்றார்கள், இன்னும் சிலர் அந்த வேலைக்கு நீர்ப்பாய்ச்சி, அது பிழைத்திருப்பதை உறுதி செய்தனர். ரெவ். வில்லம் தாமஸ் மோரிஸ் க்ளூஸ் இந்த இரண்டாம் வகையை சேர்ந்த மிஷனரிகளில் ஒருவர்.




‘க்ளூஸ் துரை’ என்று அன்புடன் அழைக்கப்படும் ரெவ். வில்லம் தாமஸ் மோரிஸ் க்ளூஸ் லண்டன் மிஷனரி சொசைட்டி (எல்.எம்.எஸ்.) சார்பாக இந்தியாவில் ஊழியம் செய்த ஒரு மிஷனரி ஆவார். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு என்ற இடத்திற்கு வந்த அவர், அங்கு ரெவ். ஏ. டபிள்யூ. ப்ரோ (Rev. A. W. Brough) மற்றும் ரெவ். எச் ஏ. பாப்லே (Rev. H.A. Popley) என்ற மிஷனரிகள் நிறுவிய பணித்தளத்தில் பணியாற்றினார். அவரது மனைவியான எட்னா ஜேன் பேக்கருடன் (Edna Jane Baker) சேர்ந்து, அந்த மிஷன் வளர்க்கபடவும் ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நற்செய்திப் பரப்பப்படவும் அவர் கடினமாக உழைத்தார்.




1923 ஆம் ஆண்டில் எல்.எம்.எஸ் மூலம் நிறுவப்பட்ட பள்ளிகள் சுமார் 94 பள்ளிகள் இருந்தன. எனவே க்ளூஸ் இன்னும் புதிய பள்ளிகளை நிறுவுவதற்கு பதிலாக, தற்போதுள்ள பள்ளிகளை வலுப்படுத்தி ஒருங்கிணைத்தார். பள்ளிகள் வெறும் பெயரிடப்பட்ட கட்டிடங்களாக இருக்காமல் உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருப்பதை அவர் உறுதி செய்தார். ஈரோடு மறைமாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வியின் முன்னேற்றத்திற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். கல்வியானது உள்ளூர் மக்களின் குருட்டு மூடநம்பிக்கைகளை அகற்றுவது மட்டுமல்லாமல் பலரின் ஆவிக்குரிய குருட்டுத்தன்மையையும் குணப்படுத்தியது.




அவரது மனைவி எட்னாவுடன் சேர்ந்து ஈரோடு சி.எஸ்.ஐ. மருத்துவமனையை நிறுவுவதில் க்ளூஸ் முக்கிய பங்கு வகித்தார். இந்த மருத்துவமனை ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அநேக மக்களுக்கு இன்றைக்கும் மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மக்கள் கூடி ஆராதிக்கும்படி புங்கம்பாடி கிராமத்தில் ‘சி.எஸ்.ஐ. குட் சமரிடன் சர்ச்’ (சி.எஸ்.ஐ. நல்ல சமாரியன் தேவாலயம்) என்ற தேவாலயத்தையும் அவர் நிறுவினார்.




1923-49 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஈரோட்டில் கர்த்தரின் ஊழியம் செய்த க்ளூஸ், மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களுக்கு நன்மை வழங்குவதிலும் ஒருபோதும் சோர்வடையவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் செய்த ஊழியத்திற்கு அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினபடியே க்ளூஸ் அவர்களும் தமிழ்நாட்டில் முந்தைய மிஷனரிகள் செய்த பணிகளுக்கு நீர்ப்பாய்ச்சி பெலப்படுத்தினார்.




🚸*பிரியமானவர்களே, முன்பு தொடங்கப்பட்ட ஊழியத்தைத் தொடர்வதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?* 🚸




🛐*" கர்த்தாவே, முன்னோடி ஊழியர்களின் பணியை அவர்கள் கொண்டிருந்த அதே தரிசனத்தை கொண்டு பெலப்படுத்த எனக்கு உதவி செய்யும் ஆமென்!”* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

[05/08, 08:39] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 05* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *மேரி லூயிஸா கிளார்க் Mary Louisa Clarke* 🛐




மண்ணில் : -

விண்ணில் : -

நாடு : இங்கிலாந்து

தரிசன பூமி : இந்தியா




இங்கிலாந்தில் ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்த மேரி லூயிசா கிளார்க் தனது குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். மற்றவர்கள் தங்கள் இளமை பருவத்தில் உலக இன்பங்களைப் பின்தொடர்ந்து அனுபவித்து மகிழ்ந்தபோது, மேரி மட்டும் இந்தியாவில் மிஷனரி ஊழியத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்தியாவில் பணியாற்றுகிற ஒரு அமெரிக்க மிஷனரியான டா. மேரி மெக் காவ்ரானுக்கு (Dr. Mary McGavran) உதவ, 'டிசைபுல்ஸ் ஆஃப் க்ரைஸ்ட்' (கிறிஸ்துவின் சீடர்கள்) அமைப்பால் 1900 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். மேரி முன்பு எந்த மருத்துவப் பயிற்சியும் பெறவில்லை என்றாலும், அந்த வேலையை அவர் சீக்கிரமாக கற்றுக்கொண்டு, மருத்துவ சேவைகளை வழங்குவதில் திறமை பெற்றார்.




மேரி கிளார்க் தாமோ என்ற இடத்தில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்களிடையே பணிபுரிந்தார். இந்திய பெண்களின் கலாச்சாரத்தை நெருக்கமாக அறிந்துக்கொண்ட அவர், அதற்கேற்படி அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த கற்றுக்கொடுத்தார். பின்னர் அவர் குல்பஹார் சென்று, அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தொண்டு இல்லத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அங்கிருந்த புறக்கணிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளின் துண்டிக்கப்பட்ட வாழ்க்கையை உயர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய சூழ்நிலைக் கேற்றபடிய நடைமுறை மற்றும் நிர்வாகத் திறன்கள் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு நம்பிக்கை கொண்டிருந்த புதிய வாழ்க்கையை கண்டுபிடிக்க உதவின. அவர் குழந்தைகளுக்கு ஒரு தாயாகவும் பெண்களுக்கு அன்பான சகோதரி மற்றும் நெருங்கிய தோழியாகவும் மாறினார்.




1923ஆம் ஆண்டில் ஜான்சி என்ற ஊருக்குச் சென்றார் மேரி. அங்கு அவர் 'பைபிள் உமென்' மன் (பைபிள் பெண்கள்) என்ற குழுவுடன் சேர்ந்து பணிபுரிந்தார். இப்பெண்கள் குழு பொது இடங்களில் வருவதற்கு அனுமதிக்கப்படாத நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை சந்தித்து அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தன. அதன் பிறகு அவர் பள்ளி நடவடிக்கைகளை நநடத்த தாமோவுக்கு திரும்பி செல்ல வேண்டி வந்தது. பள்ளித் தலைமையாசிரியராக பொறுப்பெடுத்த அவர், நிதி பற்றாக்குறையாக இருந்த சமயங்களிலும் பள்ளிகளைத் திறம்பட நிர்வகித்தார். அவரது தலைமையின் கீழ் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு அனுபவபூர்வமாக பயிற்சி அளிக்க வகுப்புகள் தொடங்கப்பட்டன.




அவர்களின் உபசரிப்புக்காக விளங்கிய புகழ் பெற்ற மிஷனரிகளில் ஒருவர் மேரி. கிளார்க்கின் சேவையின் ஒரு சிறப்பான அம்சம் அவரது அமைதியான நம்பகத்தன்மை. தனக்கு எந்த வேலை ஒப்படைக்கப்பட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றுவார் மேரி லூயிஸா கிளார்க்.




🚸*பிரியமானவர்களே, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியில் நீங்கள் உண்மையுள்ளவராக இருக்கிறீர்களா?* 🚸




🛐*"கர்த்தாவே, ஊழியத்தில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்ற எனக்கு ஞானத்தையும் பெலனையும் தாரும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

[06/08, 05:26] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 06* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *மெலிண்டா ராங்கின் Melinda Rankin* 🛐




மண்ணில்: 21-03-1811

விண்ணில்: 1888

ஊர்: நியூ ஹாம்ப்ஷயர்

நாடு: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி: மெக்சிகோ




மெலிண்டா ராங்கின் மெக்சிகோவிற்குச் சென்று சேவை செய்த முதல் புராட்டஸ்டன்ட் மிஷனரி ஆவார். போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவர கர்த்தர் மெலிண்டாவை சிறப்பான முறையில் பயன்படுத்தினார். அவர் தன் இருதயத்தை கிறிஸ்துவுக்கு கொடுத்த பிறகு, உண்மையான தேவனை அறியாத அனைவருக்கு சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவருடைய இதயம் வாஞ்சித்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காமல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவருடைய அந்த ஆழ்ந்த வாஞ்சை ஒரு நாள் நிறைவேறியது. மிசிசிப்பி பள்ளத்தாக்குக்கு செல்வதற்கு மிஷினரி ஆசிரியர்களுக்கான அழைப்பு வந்தபோது அதற்கு பதிலளித்த மெலிண்டா மிஷனரி சேவையில் தனது முதல் முயற்சியை மேற்கொண்டார்.




மெக்சிகர்கள் மிகவும் ஞானமில்லாதவர்கள் மற்றும் பொல்லாதவர்கள் என்று கேட்ட மெலிண்டா மிகவும் கலங்கினார். எனவே கிறிஸ்துவ சபைகளையும் மிஷனரி அமைப்புகளையும் அதற்காக ஊக்குவிக்க முயற்சி செய்தார். ஆனால் உண்மையான ஆவிக்குரிய தேவை இருந்த அந்த இடத்திற்கு செல்ல யாரும் தயாராக இல்லை. இறுதியாக அவர் "கர்த்தரே உதவி செய்வார், நானே செல்வேன்" என்று கூச்சலிட்டார். மெக்சிகோ சட்டமற்ற நிலையில் இருந்ததால், அவர் அங்கு செல்வது ஆபத்தானது. மேலும், கிறிஸ்தவத்தை எந்த வகையிலானாலும் அங்கு கொண்டு செல்வது அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. எனவே மெக்சிகோவிற்குள் நுழைய முடியாததால், மெக்சிகோவின் மாடமோராஸுக்கு அருகிலுள்ள டெக்சாஸில் அவர் குடியேறினார். அங்கு எந்த விதமான தங்குமிடத்தையும் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தாலும், அவர் விட்டுவிட நினைத்ததில்லை. இறுதியாக, வாடகைக்கு இரண்டு அறைகள் அவருக்கு கிடைத்தது, அதில் ஒரு அறை அவர் பள்ளிக்கூடமாக பயன்படுத்தினார். டெக்சாஸ் நகரத்தில் பல மெக்சிகன் மக்கள் இருந்தனர். எனவே பல மெக்சிகன் பெண்கள் அவரது பள்ளியில் சேர்ந்தனர்.




ஒரு நாள் ஒரு மெக்ஸிகோவை சேர்ந்த ஒரு தாய் வேதாகமத்திற்காக அவரிடம் வந்தார். அது மெக்ஸிகோவின் எல்லைக்குள் அவர் அனுப்பிய முதல் வேதாகமமாகும். மெக்சிகோவில் வேதாகமத்தை விநியோகிப்பதற்கு எதிராக ஒரு சட்டம் இருந்தன. ஆனால் மக்கள் 'ஜீவனுள்ள வார்த்தைகளை' பெறுவதைத் தடுக்க எந்த சக்திக்கும் உரிமை இல்லை என்று மெலிண்டா நம்பினார். எனவே, மிகவும் தைரியத்துடன் நூற்றுக்கணக்கான பைபிள்களையும் துண்டுப்பிரசுரங்களையும் மெக்சிகோவிற்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை அவர் கண்டுபிடித்தார். இறுதியாக மெக்ஸிகோவை அடைந்த அவர், அங்கு முதல் புராட்டஸ்டன்ட் மிஷனை நிறுவினார்.




"ஊக்கமின்மை என்ற வார்த்தை பரலோக ராஜ்ஜியத்தின் அகராதியில் இல்லை" என்று கூறிய மெலிண்டா ராங்கின், தனது 76 வது வயதில் பரலோகத்தில் தன் மீட்பரை அடைந்தார்.




🚸*பிரியமானவர்களே, கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள நீங்கள் தயாரா?* 🚸




🛐*" கர்த்தாவே, விசுவாசம், தைரியம், பரிசுத்தம் மற்றும் அர்ப்பணிப்புடன் உமக்காக பணியாற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

[07/08, 06:30] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 07* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *அமண்டா ரீட் மெக்ஃபார்லாண்ட் Amanda Reed McFarland* 🛐




மண்ணில்: 12-08-1833

விண்ணில்: 19-10-1913

ஊர்: வர்ஜீனியா

நாடு: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி: அலாஸ்கா, அமெரிக்கா




அமாண்டா ரீட் மெக்ஃபார்லாண்ட் அலாஸ்காவில் முதல் பெண் மிஷனரி ஆவார். அவர் அசைக்க முடியாத தைரியமும் மற்றும் மன உறுதியுடனும் கர்த்தருக்கு ஊழியம் செய்த ஒரு மிஷனரி. பல மிஷனரிகளை உருவாக்கிய ஒரு வலுவான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அமண்டா நல்ல கிறிஸ்தவ நெறிமுறைகளில் வளர்க்கப்பட்டார். அது அவரது எதிர்கால ஊழியத்திற்கு அடித்தளமாக அமைந்தது. ஸ்டூபென்வில்லே செமினரியில் பட்டம் பெற்ற பிறகு, தனது கணவருடன் இல்லினாய்ஸில் நெஸ் பெர்சே என்ற உள்ளூர் பழங்குடியினரிடையே ஊழியம் செய்யத் தொடங்கினார்.




இல்லினாய்ஸில் ஊழியம் செய்கிற சமயத்தில் அவரது விசுவாசம் மிகவும் சோதிக்கப்பட்டது. காலராவால் அவர் தன் ஒரே குழந்தையை இழந்தார். சில ஆண்டுகளுக்குள்ளே அவரது கணவரும் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆனாலும், தைரியத்துடன் நின்ற அமண்டா கடினமான சோதனைகளின் மத்தியிலும் கர்த்தருக்காக சேவை செய்ய ஒருபோதும் அவர் பின்வாங்கவில்லை. பின்பாக ரெவ். ஷெல்டன் ஜாக்சன் (Rev. Sheldon Jackson) அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, அலாஸ்கா மிஷனில் பணியாற்ற தன்னை அர்பணித்துக்கொண்டார்.




1877 ஆம் ஆண்டில், சூனியம் மற்றும் உள்ளூர் பழங்குடியினரின் அடிமைத்தனம் பரவலாக இருந்த அலாஸ்காவின் ஃபோர்ட் ரேங்கல் (Fort Wrangel) நகரத்தை அடைந்தார் அமண்டா. அவருக்கு முன்னால் வைத்திருக்கப்பட்ட பெரிய பாரமான பணியைத் தவிர வேறு எதையும் யோசிக்க அவருக்கு நேரமில்லை. அங்குள்ள ஒரே கிறிஸ்தவ வெள்ளை பெண் அவர். விரைவில் அவர் ஒரு செவிலியராக, மருத்துவராக, போதகராக மற்றும் ஆசிரியராக மாறினார். அவர் ஒரே அறையில் பள்ளியை நடத்தினார். அந்த அறையில் ஒரே நேரத்தில் 72 மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இருப்பினும், எல்லா மாணவர்களுக்குள்ளே முழுமையான கீழ்ப்படிதலும் மற்றும் நேர்த்தியான ஒழுங்கும் இருந்தது.




அமண்டாவின் அளவற்ற உற்சாகத்திற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு அலாஸ்காவில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் பெரிதாக எல்லை மீறி இருந்தன. உள்ளூர் பழங்குடியினரின் பெண்களை பெற்றோரிடமிருந்து வாங்குகிற வெள்ளையர்களுக்கு எதிராக அவர் போராட வேண்டியிருந்தது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் தனது மாணவர்களின் மீது செய்யப்பட்ட பயங்கரமான சூனியத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இருப்பினும், ஜெபத்துடன் அமண்டா தைரியமாக அந்த தீய சக்திகளை வென்றார். அதன் விளைவாக உள்ளூர் மக்கள் தங்கள் மந்திரவாதத்தை விட அமண்டாவின் தேவன் மிகப் பெரியவர் என்பதை உணர இத்தகைய நிகழ்வுகள் உதவின.




சிறந்த வசதிகள் மற்றும் இன்னும் பெரிய சம்பளம் வழங்கப்படும் என்ற வாய்ப்புகள் வந்தாலும், அலாஸ்கா மக்களை தன் சொந்த மக்களாக நேசித்த அமண்டா அவர்களை விட்டு செல்ல மறுத்துவிட்டார். உள்ளூர் மக்களின் மத்தியில் "அலாஸ்காவின் தைரியமான மிஷனரி" என்று புகழ்பெற்ற அமண்டா ரீட் மெக்ஃபார்லாண்ட், தனது எண்பது வயதில் பரலோகத்தில் தன் மீட்பரை அடையும் வரை கர்த்தருக்காக தொடர்ந்து சேவை செய்து வந்தார்.




🚸*பிரியமானவர்களே, கர்த்தருக்கு சேவை செய்வதற்கு நீங்கள் பயமில்லாதவர்களாக இருக்கிறீர்களா?* 🚸




🛐*"கர்த்தாவே, புறஜாதி இடங்களுக்கு சுவிசேஷத்தை கொண்டு செல்ல எனக்கு தைரியத்தை தாரும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

[08/08, 05:34] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 08* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 *நபீல் ஆசிப் குரேஷி Nabeel Asif Qureshi* 🛐




மண்ணில்: 13-04-1983

விண்ணில்: 16-09-2017

ஊர்: கலிபோர்னியா

நாடு: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி: அமெரிக்க ஐக்கிய நாடுகள்




என் பெற்றோருக்கு எதிராக இயேசு என்னைத் திருப்புவது அல்ல. என் குடும்பம் கர்த்தருக்கு எதிராக நின்றால், அவர்களில் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும். நிச்சயமாக கர்த்தர் அவர்களில் சிறந்தவர். அந்த முடிவு என் குடும்பத்தை எனக்கு எதிராக மாற்றினாலும் அதே உண்மை. ஆனால் எப்படி? இந்த வலியை நான் எப்படி தாங்க முடியும்? என்ற வார்த்தைகள் ஒரு காலத்தில் தீவிர இஸ்லாமிய அறிஞராக இருந்து பிற்காலத்தில் கிறிஸ்தவத்தின் வலுவான ஆதரவாளராகவும் மாறிய நபீல் ஆசிப் குரேஷியின் வார்த்தைகள்.




குர்ஆனின் மொழிபெயர்ப்பாளரான பாகிஸ்தானின் அகமதி குடும்பத்தில் பிறந்தவர் நபீல். அவரது தாத்தா பாட்டிகளும் இந்தோனேஷியாவிற்கு முஸ்லீம் மிஷனரிகளாக சென்றனர். வலுவான இஸ்லாமிய பின்னணி கொண்ட நபீல் ஒருபுறம் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து கொண்டு இஸ்லாமிய மதத்தையும் படித்தார். அவர் கிறிஸ்தவர்களுடன் மத சம்பந்தமான விவாதங்களில நபீல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது நண்பர் டேவிட் வுட்டுடன் (David Wood) ஒரு வருடம் நீடித்த ஒரு உரையாடலில், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான ஆதாரத்தையும், அவர் கர்த்தர் என்று அழைக்கப்பட்டதற்கான காரணங்களையும் கண்டறிந்தார் நபீல். ஒருபுறம் ஒரேபேறான உண்மையான தேவன், மறுபுறம் அவருடைய குடும்பம். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமடைந்த நபீல், இறுதியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவர் சொன்னதென்னவென்றால், “இயேசுவைப் பின்பற்றுவதற்கு எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்வது தகுதியானது. ஏனென்றால் அவர் அவ்வளவு அற்புதமானவர்.




மருத்துவராக பட்டம் பெற்ற நபீல் இறையியல் மற்றும் தத்துவத்தையும் பயின்றார். ரவி சக்கரியாவுடன் பணிபுரிந்த அவர், கிறிஸ்தவ நம்பிக்கை தொடர்பான கடினமான மற்றும் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மென்மையாகவும் மரியாதையுடனும் பதிலளித்தார். அவர் அரபு பண்டிகைகளுக்கு சென்று முஸ்லிம்களுடன் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை பற்றிய உண்மையைப் பற்றி அற்புதமாக உரையாடுவார். அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளர் மற்றும் அற்புதமாக வாதிட முடிந்தவர். அவரது வார்த்தைகள் பலரின் இதயங்களைத் தொட்டன. இந்த காரணத்திற்காக அவர் பல முறை கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்க நேரடியாக முஸ்லிம்களிடம் செல்வார். ஏனென்றால், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று அவர் நன்கு அறிந்திருந்தார். அநேக முஸ்லிம்கள் கிறிஸ்துவை நோக்கி திரும்ப உதவிய பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.




என்றபோதிலும் நபீலுக்கு நான்காம் நிலை வயிற்றுப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறுதியாக அவரது வயிறு கூட அகற்றப்பட்ட அளவுக்கு மிகவும் தீவிரமான சிகிச்சை பெற்ற பிறகு, 34 மிக சிறிய வயதிலேயே கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் நபீல் ஆசிப் குரேஷி.




🚸*பிரியமானவர்களே, நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்கள்? உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையா அல்லது கர்த்தரையா?* 🚸




🛐*"கர்த்தாவே, எல்லா சூழ்நிலைகளிலும் அனைவருக்கு மேலாக உம்மையே நான் தேர்ந்தெடுக்க எனக்கு உதவி அருளும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்



[09/08, 05:58] +91 98425 13842: 📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 09* ✅ *தமிழ் Tamil* 👍




🛐 * பாபேய்ஹா Papeiha* 🛐




மண்ணில்:

விண்ணில்: 25-05-1867

ஊர்: போரா போரா தீவுகள்

தரிசன பூமி : குக் தீவுகள்




பபெய்ஹா ஒரு காலத்தில் போரா போரா தீவுகளில் இருந்த மக்களோடு இணைந்து நரமாமிசம் உண்பவராக இருந்தார், பின்னர் அவர் குக் தீவுகளில் நரமாமிசம் உண்ணும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்கும் ஊழியனாக மாறினார். மிஷனரி ஜான் வில்லியம்ஸின் வழிகாட்டுதலின் படி, அவர் ராயடேயாவில் ஊழியம் செய்தார். பின்னர் அவர் குக் தீவுகளின் ஆராய்ச்சி பணியில் வில்லியம்ஸுடன் இணைத்து செயல்பட்டார். கடினமான ஊழியப்பயணத்திற்குப் பிறகு, ஜான் வில்லியம்ஸின் குழு ரரோடோங்கா தீவைக் கண்டுபிடித்தது. ரரோடோங்கா மக்கள் நரமாமிசமாக திண்பவர்கள் என்று அறியப்பட்டதால், எந்த நபரும் அந்த தீவில் காலடி எடுத்து வைக்க விரும்பவில்லை. ஆனால் தைரியமான பபெய்ஹா தானாக அங்கு செல்ல முன்வந்தார். அவர் பைபிளை தனது தலையில் கட்டி ரரோடோங்கா கரையில் நீந்தினார்.




என்னே ஆச்சரியம்! அங்குள்ள பூர்வீக மக்கள் உற்சாகமாக அவரை வரவேற்று நட்புறவு கொண்டனர். மேலும் கப்பலில் இருந்து வேறு சிலரும் பாபேஹாயுடன் இணைந்தனர். அவர்களுக்கும் உணவு மற்றும் வசதியான தங்குமிடமும் வழங்கப்பட்டது. ஆனாலும்…… எதிர்பாரதவிதமாக, இரவில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி அவர்களைக் கொல்ல வாள்கள் மற்றும் கம்பிகளுடன் வலம் வந்தனர் . எப்படியோ பாபேஹா, மற்றவர்களுடன் சேர்ந்து தப்பித்து கப்பலை அடைந்தார். மற்றவர்கள் உடனடியாக வெளியேற விரும்பியதால், பாபேய்ஹா மட்டும் எப்படியாவது அம்மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் மீண்டும் அங்கு தங்க விரும்பினார்.




எனவே அவர் மீண்டும் அந்தத்தீவுக்கு நீந்தி சென்றார், அவர் வருவதைக் கண்டு பழங்குடியினர் ஆச்சரியப்பட்டு அவரை உடனடியாகக் கொல்ல முயன்றனர். ஆனால், பாபேய்ஹா தைரியமாக அம்மக்களிடம் தானும் கடந்த காலத்தில் அவர்களைப் போல இருந்ததாகவும் மேலும் அவ்விதமாக இருந்த அவரை இயேசுவின் அன்பு அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதையும் அந்த பழங்குடியின மக்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய தைரியத்தையும் அவரில் காணப்பட்ட மாற்றத்தையும் கண்ட அத்த்தீவு மக்கள் ஆச்சரியப்பட்டனர், மேலும் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினார். பபெய்ஹா ரரோடோங்காவில் பல மாதங்கள் தங்கி அவர்களில் பலரை கிறிஸ்துவிடம் வழிநடத்தினார். கிறிஸ்துவை அறிந்த பிறகும், பூர்வீக மக்கள் தங்கள் சிலைகளை எரிக்க பயந்தனர். நீண்டநாள் ஜெபத்திற்கும் முயற்சிக்கும் பலனாக, ஒரு பூசாரி கிராமத்தின் விருப்பத்திற்கு மாறாக தாமாக முன்வந்து தனது சிலையை எரிக்க முடிவு செய்தார். அனைத்து கிராம மக்களும் பாபேய்ஹா மற்றும் பூசாரி இறந்துவிடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் பாபேய்ஹா சிலைகளை எரித்தபோது, கிராம மக்கள் தங்கள் கடவுள்கள் வலியால் அழவில்லை எனவும் அதனால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதையும் கண்டார்கள்.

கடவுள்கள் தங்களைச் சாம்பலிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாவிட்டால், தங்களை எப்படி காப்பாற்ற முடியும் என்பதை அந்த பூர்வீக மக்கள் புரிந்து கொண்டனர். அதன் விளைவாக, இன்று, ராரோடோங்கா தீவு ஒரு கிறிஸ்தவாக மாறியது, மேலும் அங்குள்ள மக்கள், கிறிஸ்துவின் அன்பை மற்ற குக் தீவுகளில் உள்ள மக்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய மிஷனரிகளாக மாறினர்.




பபீய்ஹா 1867 இல் தனது இறுதி மூச்சு முடியும் வரை மற்ற நரமாமிச தீவுகளில் சென்று தனது மிஷனரி பணியை செய்து வந்தார்.




🚸* பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்கிறீர்களா? * 🚸




🛐 * "ஆண்டவரே, மாற்றமில்லாத எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உமது அன்பை சொல்ல எனக்கு ஞானத்தை தந்து உதவிசெய்யும் . ஆமென்!" * 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்

[10/08, 08:08] +91 98425 13842: 📚*தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚

✅ *ஆகஸ்ட் 10* ✅ *தமிழ் Tamil* 👍

🛐 *பீட்டர் மார்ஷல் (Peter Marshall)* 🛐




மண்ணில்: 27.05.1902

விண்ணில்: 26.01.1949

ஊர்: கோட்பிரிட்ஜ் (Coatbridge)

நாடு: ஸ்காட்லாந்து (Scotland)

தரிசன பூமி: அமெரிக்கா




பீட்டர் மார்ஷல் என்பவர் ஒரு ஸ்காட்டிஷ்-அமெரிக்க பிரசங்கியாகவும் வாஷிங்டன் டி.சி.(Washington D.C) -இல் உள்ள நியூயார்க் அவென்யூ பிரெஸ்பிடேரியன் திருச்சபையின் போதகராகவும் விளங்கினார். ஸ்காட்லாந்தில் பிறந்த மார்ஷல், தனது மாற்றாந்தகப்பனின் துன்புறுத்துதல் நிமித்தம், தனது வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அவர் தன்னை போதியவாறு ஆதரித்துக்கொள்ள, மற்றவர்கள் இழிவாய் கருதிய வேலைகளைச் செய்து, இரவிலே கல்லூரியில் பயின்றார். அவரது சிறுவயதிலிருந்தே, டேவிட் லிவிங்ஸ்டன்-இன் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் போலவே ஆகவேண்டுமென்று வாஞ்சித்தார். சீனா தேசத்திலிருந்து ஒரு மிஷனரி, ஊழியர்களாய் ஊழியத் துறையில் பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தபோது, ​​மார்ஷல் உடனடியாக கீழ்ப்படிந்து, தேவனுடைய ஊழியத்திற்கென தனது வாழ்க்கையை ஒப்படைத்தார்.




லண்டன் மிஷனரி சொசைட்டி (London Missionary Society-லண்டன் மிஷனரி சமூகம்) -இல் சேர போதுமான கல்வியோ அல்லது படிப்பைத் தொடர பணவசதிகளோ மார்ஷலிடம் இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலால், அவர் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் ஆரம்ப சில மாதங்கள், அவர் எதிர்பார்த்ததை விட காரியங்கள் கடினமாய் தோன்றியது. அவர் நீண்ட நேரம் கடினமாக உழைத்து, சாக்கடைக் கால்வாய்களை தோண்டி மற்றும் எடுபிடி வேலைகளையும் செய்தார். அவருக்கென நண்பர்களோ ஒரு திருச்சபையின் ஐக்கியமோ இல்லாமல் காணப்பட்டது. அவர் ஸ்காட்லாந்துக்கே திரும்ப நினைத்துக்கொண்டிருத்த வேளையில், ​​அலபாமா (Alabama) என்னும் ஊருக்கு வரும்படி ஒரு நண்பரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அங்கு அவர் ஃபர்ஸ்ட் பிரஸ்பிடேரியன் சர்ச்-ஐ (First Presbyterian Church- முதல் பிரஸ்பிடேரியன் திருச்சபை) சேர்ந்தார். சேர்ந்த சில வாரங்களுக்குள், அவர் ஆண்கள் வேதாகம வகுப்பின் ஆசிரியரானார். நாளடைவில், அவர் 1931ஆம் ஆண்டு கொலம்பியா தியாலஜிக்கல் செமினரி (Columbia Theological Seminary- கொலம்பியா இறையியல் பள்ளி)-யில் பட்டம் பெற்றார். பின்னர் அட்லாண்டாவின் பிரஸ்பைடிரியன் திருச்சபையில் (Atlanta's Presbyterian Church) பணியாற்றத் துவங்கினார். பின்னர் அவர் 1937ஆம் ஆண்டு வாஷிங்டன்-க்குச் சென்று வல்லமையாய் ஊழியம்செய்து, ஆவியில் உறங்கிக்கொண்டிருந்த அமெரிக்கர்களை விழிப்படையச் செய்தார். அவர் செய்த பிரசங்கங்களில் ஜீவன் இருந்தது. அவர் தனது கேட்போரின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும், அந்த உணர்வுகளை வேதாகம உண்மைகளுடன் இணைப்பதற்கும் கவிதை நயத்தோடே பிரசங்கித்தார்.




ஒரு எழுப்புதல் துவங்கியது. சபைகளில் கூடிய கூட்டங்களை சபை வளாகம் கொள்ள இயலவில்லை. 1946ஆம் ஆண்டு, மார்ஷல் அமெரிக்க ஆட்சிப்பேரவையின் ஆயராக நியமிக்கப்பட்டார் . வழக்கமாக அமெரிக்க சட்ட மாமன்ற உறுப்பினர்கள் அங்கு செய்யப்படும் ஜெபங்களையும் பிரசங்கங்களையும் அதிகம் பொருட்படுத்துவதில்லை. ஆட்சிப்பேரவையின் நடைமுறைகளில் தேவனுடைய வழிநடத்துதலிற்காக மார்ஷல் செய்த உண்மையான விண்ணப்பங்களினால், சட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பேச்சுகளை நிறுத்தி மார்ஷல் செய்யும் ஜெபத்தை கேட்குமாறு நெருக்கி ஏவப்பட்டனர். மார்ஷல் ஜெபம் செய்வதை கேட்க சட்ட மாமன்ற உறுப்பினர்கள் சீக்கிரம் வரத்துவங்கினர்.




ஒரு சிறிய போதகராக ஜார்ஜியாவிலோ அல்லது அமெரிக்க ஆட்சிப்பேரவையிலோ, எங்கு பணியமர்தப்பட்டாலும், தேவனுக்கென்று உண்மையாய், 1949ஆம் ஆண்டு தன் மரணப்பரியந்தம் ஊழியம் செய்தார் பீட்டர் மார்ஷல்.




🚸*பிரியமானவர்களே, உறங்கிக் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களை எழுப்புவதற்காக நீங்கள் ஜெபித்து ஊழியம் செய்கிறீர்களா?* 🚸




🛐*"கர்த்தாவே, பெரிய இடமோ சிறிய இடமோ, எதுவாயிருந்தாலும் உமக்கென்று உண்மையாய் ஊழியம் செய்ய எனக்கு உதவியருளும். ஆமென்!"* 🛐

*******

*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!

*******

"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!

https://chat.whatsapp.com/Fawd43U0lNTJIcadq9jB2u

*******

🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏

*******

BenjaminForChrist @ +91 9842513842

*******

நன்றி: V. வீர சுவாமிதாஸ்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.