[12/08, 07:34] (W) Arun Selva Kumar: நாள்:120
12.08.2023
சனிக்கிழமை
1நாளாகமம்: 3-5
💐💐💐💐💐💐
▪️யாபேஸ் என்றால் துக்கம் உண்டாக்குகிறவன் என்று பொருள். ஆனால் யாபேசின் ஜெபத்தை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கர்த்தர் வேதத்தில் எழுதச் செய்தார்.
அவரது விண்ணப்பங்களாவன:
1. என்னை ஆசீர்வதியும்
2. என் எல்லையைக் பெரிதாக்கும்.
3. உமது கரம் என்னோடு இருக்க வேண்டும்.
4. தீங்குக்கு விலக்கிக் காத்தருளும்.
5. துக்கத்துக்கு விலக்கிக் காத்தருளும்.
(நாளாகமம்: 4:9-10)
▪️யாபோசைப் போல விண்ணப்பம் செய்வோம். யாபேஸ் வேண்டிக் கொண்டதை யாபேசுக்கு அருளிய தேவன் நாம் வேண்டிக்கொள்வதை நமக்கு நிச்சயம் அருளிச் செய்வார்.
▪️கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து சீடர்களுக்குக் கற்றுத்தந்த ஜெபத்தில் *தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும்* என்றிருப்பதைக் கவனியுங்கள்.
▪️தீமையாகிய சாத்தானும் அவன் தூதர்களும் பலவிதங்களில் நம்மை துன்புறுத்த முயற்சி செய்வார்கள். எனவே இது ஒரு முக்கியமான விண்ணப்பம் ஆகும்.
▪️ஆனால் நாம் இச்சை, பொருளாசை, பெருமை, பொறாமை போன்ற தீங்கானவற்றிற்கு இடமளிக்காமல் நன்மையானவற்றால் நம் உள்ளத்தை நிரப்புவதற்குக் கவனமாக இருக்க வேண்டும்.
*ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj,
Nagercoil.
(Admin: Group No 2068)
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 120, 12/08/2023 SATURDAY*
*1 CHRONICLES : 03 - 05*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: 🌈 *Amnon forfeited any claim to leadership because he could not control himself-specifically his fleshly lusts. No leader can afford to do without self-discipline.*
⚠️I Chr. 3:1- One might suppose the firstborn son of the greatest king of Israel to be almost foreordained to do great things for God and His people. *Yet, David’s first born, Amnon, wound up as little more than a quick and sad footnote to the early chapters of I Chronicles. Amnon forfeited any claim to leadership because he could not control himself-specifically his fleshly lusts.* ( II Sam.13:1-9). This lack of self-control led to the disgrace of his family, and eventually to his death at the hands of a vengeful brother (13:22-29.) *Amnon’s demise began the day he fixed his eyes upon his lovely half-sister, Tamar, and lusted after her beauty. No leader can afford to do without self-discipline.*
⛹️♂️ *Application* : I Chr. 4:10- *Jabez’s prayer was not long. But he did what you and I need to do. He called upon the God of Israel.* In brokenness and openness, he poured out his heart and said, “Lord, bless me.” And the Lord granted him his request. *Let us spend time with our Father in the posture of prayer, and we will be on the pathway to prosperity. It is guaranteed because the Word declares it.*
💡I Chr. 4:9-10-God singled out one man from more than 600 others for special recognition in the genealogical lists of I Chronicles. *Why did the Lord say Jabez lived above average? Because he modeled three qualities that make leaders rise to the top.*
*1️⃣Great ambition.*
*2️⃣Great faith.*
*3️⃣Great prayer.*
Jaya Pradeep-Kodaikanal.
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: *12.08.2023*
✅ *தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்* ✅
⚡ *எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், நோகா, நேபேக், யப்பியா, எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே* (1 நாளாகமம் 3:5-8).
💥 வேதத்தில் ஏன் விரிவான வம்சவரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஆதாம், தாவீது மற்றும் ஆபிரகாம் மூலம் *கிறிஸ்து பிறப்பார் என்ற தேவனுடைய திட்டத்தை* நிரூபிக்கவே. வம்சவரலாறுகளில் உள்ள பெயர்கள் தேவனுடைய நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தங்களுக்கான வரலாற்று சான்றுகள் ஆகும்.
💥 தாவீதுக்கு பல மனைவிகள் இருந்தனர். இது நிச்சயமாக வேதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை; இது தாவீதின் மீறலே. அவனுக்குப் பல குமாரர்கள் இருந்தனர். அம்னோன், அப்சலோம், அதோனியா என அவர்களில் சிலர் அவனுக்கு வேதனையை ஏற்படுத்தினார்கள். தாவீதின் எல்லா குமாரர்களிலும் *சாலொமோன்* அவனுக்குப் பின்பு ராஜாவாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். அது அவனுடைய தகுதியின் அடிப்படையிலல்ல.
💥 பத்சேபாளிடத்தில் பிறந்த தாவீதின் குமாரர்களில் ஒருவனுக்கு *நாத்தான்* என்று பெயர். தாவீதுடைய பாவத்திற்காக அவனைக் கடிந்துகொண்ட நாத்தான் தீர்க்கதரிசியின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டிருக்கலாம். *இந்த நாத்தானிலிருந்து நம் ஆண்டவர் இயேசு வந்தார்* (லூக்கா 3:31). வம்சவரலாறுகளில், தாவீதுக்குப்பின் வரும் பெயர்களில் *லூக்காவும்* (லூக்கா 3:31) *மத்தேயுவும்* (மத்தேயு 1:6) வேறுபடுகிறார்கள்; ஆனால் இரண்டு வம்சவரலாறுகளுமே யோசேப்புடன் முடிவடைகின்றன. *லூக்கா மரியாளின் வம்சாவளியைப் பின்பற்றியுள்ளான் (நாத்தான் மூலமாக), மத்தேயு யோசேப்பின் வம்சாவளியைப் பின்பற்றியுள்ளான்* (சாலொமோன் மூலமாக).
💥 தாவீது எப்ரோனில் ஏழுவருஷமும் ஆறுமாதமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான். பல ராஜாக்களின் பவிதமான கீழ்ப்படியாமைகள் வேதத்தில் பதிவு செய்யப்படிருந்தாலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக *தாவிதின் வம்சம்* யூதாவை ஆண்டது. தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற *தேவன் உண்மையுள்ளவராக* இருந்ததால் இந்த நீண்ட ஆட்சி தொடர்ந்தது. பவுலின் வார்த்தைகள்: *“நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.”* (2 தீமோத்தேயு 2:13). யூத ராஜாக்களின் விஷயத்தில் இது நிச்சயமாக நிறைவேறியது.
💥 *பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின்,* தாவீதின் வம்சாவளியில் வந்த ஒரு முக்கியமானவன் *செருபாபேல்.* அவனைப் பற்றி, பரிசுத்த ஆவியானவர் ஆகாய் மூலம் வெளிப்படுத்துகிறார்: *சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்* (ஆகாய் 2:23). தேவன் எப்பொழுதும் *தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கருவிகளை* தாமே தேர்ந்தெடுக்கிறார்.
💥 சகரியா மூலம் பரிசுத்த ஆவியானவர் தெரிவிக்கிறார்: *"அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."* (சகரியா 4:6). *கர்த்தருடைய ஆவியானவர்* தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவருடைய பிள்ளைகளுக்கு *பலமளிக்கிறார்.*
💥 தாவீதும் அவனது குடும்பத்தாரும் பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் காரணம், *தேவன் அவருடைய வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் உண்மையாக இருப்பதுதான்.* ஜனங்களின் *கீழ்ப்படிதலுக்கேற்ப தேவனுடைய ஆசிர்வாதம்* இருக்கும்; *கீழ்ப்படியாமைக்கேற்ப அவருடைய தண்டனை* இருக்கும். இதை ராஜாக்களின் சரித்திரங்கள் மூலம் அறிகிறோம்.
💥 நாம் தேவனுடைய சித்தத்துடன் நம்மை மிகவும் நெருக்கமாக இணைத்துக் கொள்ளும்போது, தேவன் நமக்கு அதிக ஆசீர்வாதங்களைத் தருகிறார். யோவான் கூறுகிறான்: "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.”* (1 யோவான் 3:22). தேவசித்தம் செய்ய நாம் ஒப்புக்கொடுப்போம்.
🔹 *தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதிலும், அவருடைய பார்வையில் பிரியமானவற்றைச் செய்வதிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்ததால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தாவிதின் வம்சம் யூதாவை ஆண்டது.*
2️⃣ *தேவன் எப்பொழுதும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கருவிகளை தாமே தேர்ந்தெடுக்கிறார்.*
3️⃣ *கர்த்தருடைய ஆவியானவர் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவருடைய பிள்ளைகளுக்கு பலமளிக்கிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣0️⃣
1 Chronicles 3-5
*WHAT A GOD WE SERVE* ❗️
*God hears our desperate prayers* ‼️
💥Jabez called on the God of Israel saying, “Oh, that You would bless me indeed, and enlarge my territory, that Your hand would be with me, and that You would keep me from evil, that I may not cause pain!” So God granted him what he requested (1Chron 4:10)
💥 He said, “I will not let You go unless You bless me!”. He blessed him.(Gen 32:26,29)
💥 Out of the abundance of my grief I have spoken .For this child I prayed, and the Lord has granted me my petition which I asked of Him. (1Sam 1:15,27)
💥He turned his face toward the wall, and prayed to the Lord wept bitterly. "I have heard your prayer, I have seen your tears; surely I will heal you" (2 Kings 20:2,5)
🙏🙏 *In my distress I called upon the Lord , And cried out to my God; He heard my voice from His temple, And my cry came before Him, even to His ears.* (Ps 18:6)
Usha
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *யாபேஸ்* 🍂
யாபேஸ் ஜெபித்தான், தேவனாகிய கர்த்தர் அவனுடைய ஜெபங்களுக்கு பதிலளித்து அவனை ஆசீர்வதித்தார். இது மட்டும்தான் நமக்குத் தெரியும். *ஆனால் யாபேஸைப் பற்றி தெரியாத ஒன்று பின்னணியில் மறைந்துள்ளது.*
அதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. யாபேஸுக்கு வாழ்க்கையில் ஒரு கடினமான தொடக்கம் இருந்தது. *அவன் தனது தாயின் வயிற்றில் இருந்தபோது இது தொடங்கியதா?* அல்லது அவனது தாய்க்கு *கடினமான பிரசவம் இருந்ததா?* இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் எதையும் கூறவில்லை.
📖 *யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள் (1 நாளா 4:9).*
ESV ஆய்வு வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: *யாபேஸ் என்ற பெயர் வலிக்கான எபிரேயர் பதத்தில் உள்ள அதே மூன்று மெய்யெழுத்துக்களைக் கொண்டுள்ளது.* யாபேஸ் இந்த மன வேதனை என்ற தடையை உடைக்க வேண்டியிருந்தது.
*தேவனாகிய கர்த்தரால் மட்டுமே எல்லா தடைகளையும் நீக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.* எனவே அவன் ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளித்தார் (1 நாளா 4:10). மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் *நமது வேதனையான கடந்த கால கஷ்டங்களில் நாம் நீடிக்க வேண்டியதில்லை.*
தேவன் யாபேஸை விடுவித்து ஆசீர்வதிக்க முடிந்தால், *கடந்தகால வலிகள் மற்றும் மன வேதனைகளிலிருந்தும் அவர் நம்மை விடுவிப்பார்*. வியக்கத்தக்க வகையில் *கர்த்தர் யாபேஸை அவனது சகோதரர்களை விட அதிக கனத்திற்குரியவனாக ஆக்கினார்.*
எனவே இது ஒரு அசாதாரணமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம். ஒருவேளை *ஆண்டவர் அவன் பட்ட கஷ்டங்களுக்கு இவ்வாறு ஈடு செய்திருக்கலாம்*. இவ்வாக தான் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். *ஆண்டவர் நஷ்ட ஈடு செய்தால் அது இரட்டிப்பான ஆசீர்வாதமாக இருக்கும்.*
========
திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
1. நாளாகமம் 4:22.
"இவை பண்டைய கால விஷயங்கள்".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மதிப்புமிக்க பொருட்கள் நம் ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
பிதா நம்மை நித்திய வாழ்விற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்.
உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
ஆரம்பத்திலிருந்தே பிதா நம்மை நேசித்து வருகிறார்.
தினசரி சிந்தனைக்கான கருத்து இங்கே உள்ளது.
நாம் முன்னறிவிக்கப்பட்ட அழிவிலிருந்து நம்மை மீட்பதும், நம்மைச் பரிசுத்தப்படுத்துவதும், கடைசியாக நம்மை மகிமையில் சேர்ப்பதும் கர்த்தருடைய நித்திய நோக்கம் ஆகும்.
தெய்வீக நோக்கத்தில், பிதாவின் சுதனுக்கும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இது பாதுகாப்பின் அடித்தளமாக இருக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: *செழிப்பான மேய்ச்சலை கண்டு பிடித்தார்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1நாளாகமம் 4 : 39 -41.
1. *சிமியோன் புத்திரர் தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலை தேடினார்கள்.* ஆம், நாமெல்லாரும் ஆடுகளாயிருக்கிறோம். நமக்கு ஒரு நல்ல மேய்ச்சல் தேவை.
புல்லுள்ள இடம், தண்ணீருள்ள இடம், ஓநாய், கரடியினால், துஷ்ட மிருகங்களால் பிடிக்கப்படாத பாதுகாப்பான மேய்ச்சல் இவர்களுக்கு தேவை. ஏனென்றால் இவர்களின் சொத்து இந்த ஆடுகள் தான். இவர்கள் தேதோரின் *பள்ளத்தாக்கு மட்டும் நடந்து, நடந்து மேய்ச்சலை தேடினார்கள்.*
ஆனால் *ஆடுகளின் பெரிய மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்கு நல்ல மேய்ச்சலை வைத்திருக்கிறார். அந்த புல்லுள்ள இடங்களில் அதாவது வசனமாகிய புல்லை நம் கரத்தில் இருக்கும் வேதத்தில், அதை விளம்பி தரும் சபையில், நல்ல மேய்ச்சலை நமக்கு தந்திருக்கிறார். ஆம், இந்த மேய்ச்சலை நாம் கண்டு பிடித்து, நல்ல மேய்ப்பரால் அனுதினமும் மேய்க்கப்படுகிறோமா? போஷிக்கபடுகிறோமா?*
2. *இவர்கள் கண்டுபிடித்த மேய்ச்சல் அமரிக்கையானது, சுகமான இடம், விஸ்தாரமான இடம்*. ஆம், நம் மேய்ப்பனாம் இயேசுவும், நம்மை புல்லுள்ள இடங்களிலே மேய்க்க, அமர்ந்த தண்ணீரண்டையிலே, விஸ்தாரமான, வசதியான இடத்தை தேடி, கண்டு பிடித்து கொண்டு போய் விடுகிறார். ஆம், *அவர் காட்டிய சபையில், அவர் பாதத்தில் அமர்ந்திருந்து நாம் வசனத்தை புசித்து வளருவோம்.*
3. ஆனால் இந்த சிமியோன் புத்திரர் இங்கு குடியேறும் முன், *அங்கு குடியிருந்தவர்களின் கூடாரங்களை, தாபரங்களை அழித்து சங்கரித்து விட்டு, அங்கு நல்ல மேய்ச்சல் இருந்தபடியால் அங்கு குடியிருந்தார்கள்*.
ஆம், *நாமும் கூட நாம் மேய்கிற மேய்ச்சலில், சத்துருக்களாகிய நாய்கள், நரிகள் போன்ற கள்ள மேய்ப்பர்கள் இருப்பார்களானால் அவர்களை முதலில் சங்கரித்து விட்டு தான் அங்கு குடியிருக்க வேண்டும். அது நமக்கு பெலன் தர வேண்டுமானால் அமரிக்கையான மேய்ச்சலை நாம் மேய வேண்டும். நல்ல மேய்ச்சல் இருந்தால் மட்டுமே அங்கு குடியிருக்க வேண்டும்.*
*நம்முடைய நல்ல மேய்ப்பன் ஆடுகளாகிய நமக்காக ஜீவனையே தந்தவர். உள்ளும் , புறம்புமாய் நம்மை போஷிப்பார்*. ஆம், ஆடுகளாகிய நாம் அவர் காட்டுகிற மேய்ச்சலில் புசித்து , வளர கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: Valsa Tharien
1CHRONICLES 4:9 Jabez prayed for enlarging his territory..territory of blessing..territory of influence!
1 Chronicles 2:55 we read that there was a *town named after Jabez* ...a town where the learned scribes settled! Clans of scribes settled in Jabez.
Indeed Jabez became a blessing, an influencer in his days.
*We are also called to be a blessing, an influencer where we are placed*.
[12/08, 07:34] (W) Arun Selva Kumar: *🌈GENEALOGY AND FAITH🌈*
[DAY - 120] 1 Chronicles Ch. 3 & 4
☄️These chapters provide a glimpse into the lineage of the Israelite tribes and highlight the significance of faith, prayer, and the blessings that come from seeking God's favor.
1️⃣ *THE ROYAL LINEAGE OF DAVID* (1 Chronicles 3)
🔹There is a list of the descendants of King David, tracing the lineage from his sons, Solomon, Nathan, and others.
🔹The genealogy of David's descendants serves as a reminder of God's faithfulness in fulfilling His promises to establish an everlasting kingdom through the Messiah.
🔹The chronicling of David's lineage emphasizes the significance of heritage and the preservation of Israel's royal line, as it plays a crucial role in God's redemptive plan.
2️⃣ *THE PRAYER OF JABEZ* (1 Chronicles 4)
🔸Amidst the genealogical records, the prayer of Jabez stands out as a powerful testimony of faith and dependence on God.
🔸Jabez, a descendant of Judah, prays to God, asking Him to bless him, enlarge his territory, and keep him from harm.
🔸God grants Jabez's request, demonstrating His willingness to bless and answer the prayers of those who seek Him in faith.
🔸Jabez's prayer teaches us the importance of seeking God's favor, trusting in His provision, and recognizing that God's blessings go beyond material possessions.
4️⃣ *FAITH IN GOD’S PROMISES*
▪️ The genealogical records remind us of God's faithfulness in fulfilling His promises throughout history, encouraging us to have faith in His promises for our own lives.
▪️Jabez's prayer highlights the transformative power of prayer, reminding us that God is willing to bless and expand our boundaries when we approach Him with faith and sincerity.
▪️Jabez's prayer teaches us to trust in God's provision and to seek His blessings, recognizing that our heavenly Father desires to bless His children when they seek Him wholeheartedly.
▪️The lineage of David reminds us of the importance of embracing our spiritual heritage and understanding our place in God's redemptive plan.
♥️ *LIFE LESSONS*
💥These chapters remind us of God's promises, His willingness to bless those who seek Him, and the significance of embracing our spiritual heritage.
💥We’ll learn from the examples of faith displayed in trusting in us all God's provision, seeking His favor through prayer, and embracing our identity as children of the Most High.
*‼️NEVER FORGET THAT YOU ARE A SON AND DAUGHTER OF THE MOST HIGH GOD.‼️*
[12/08, 04:53] +91 99431 72360: *12.08.2023*
✅ *தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்* ✅
⚡ *எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், நோகா, நேபேக், யப்பியா, எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே* (1 நாளாகமம் 3:5-8).
💥 வேதத்தில் ஏன் விரிவான வம்சவரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஆதாம், தாவீது மற்றும் ஆபிரகாம் மூலம் *கிறிஸ்து பிறப்பார் என்ற தேவனுடைய திட்டத்தை* நிரூபிக்கவே. வம்சவரலாறுகளில் உள்ள பெயர்கள் தேவனுடைய நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தங்களுக்கான வரலாற்று சான்றுகள் ஆகும்.
💥 தாவீதுக்கு பல மனைவிகள் இருந்தனர். இது நிச்சயமாக வேதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை; இது தாவீதின் மீறலே. அவனுக்குப் பல குமாரர்கள் இருந்தனர். அம்னோன், அப்சலோம், அதோனியா என அவர்களில் சிலர் அவனுக்கு வேதனையை ஏற்படுத்தினார்கள். தாவீதின் எல்லா குமாரர்களிலும் *சாலொமோன்* அவனுக்குப் பின்பு ராஜாவாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். அது அவனுடைய தகுதியின் அடிப்படையிலல்ல.
💥 பத்சேபாளிடத்தில் பிறந்த தாவீதின் குமாரர்களில் ஒருவனுக்கு *நாத்தான்* என்று பெயர். தாவீதுடைய பாவத்திற்காக அவனைக் கடிந்துகொண்ட நாத்தான் தீர்க்கதரிசியின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டிருக்கலாம். *இந்த நாத்தானிலிருந்து நம் ஆண்டவர் இயேசு வந்தார்* (லூக்கா 3:31). வம்சவரலாறுகளில், தாவீதுக்குப்பின் வரும் பெயர்களில் *லூக்காவும்* (லூக்கா 3:31) *மத்தேயுவும்* (மத்தேயு 1:6) வேறுபடுகிறார்கள்; ஆனால் இரண்டு வம்சவரலாறுகளுமே யோசேப்புடன் முடிவடைகின்றன. *லூக்கா மரியாளின் வம்சாவளியைப் பின்பற்றியுள்ளான் (நாத்தான் மூலமாக), மத்தேயு யோசேப்பின் வம்சாவளியைப் பின்பற்றியுள்ளான்* (சாலொமோன் மூலமாக).
💥 தாவீது எப்ரோனில் ஏழுவருஷமும் ஆறுமாதமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான். பல ராஜாக்களின் பவிதமான கீழ்ப்படியாமைகள் வேதத்தில் பதிவு செய்யப்படிருந்தாலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக *தாவிதின் வம்சம்* யூதாவை ஆண்டது. தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற *தேவன் உண்மையுள்ளவராக* இருந்ததால் இந்த நீண்ட ஆட்சி தொடர்ந்தது. பவுலின் வார்த்தைகள்: *“நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.”* (2 தீமோத்தேயு 2:13). யூத ராஜாக்களின் விஷயத்தில் இது நிச்சயமாக நிறைவேறியது.
💥 *பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின்,* தாவீதின் வம்சாவளியில் வந்த ஒரு முக்கியமானவன் *செருபாபேல்.* அவனைப் பற்றி, பரிசுத்த ஆவியானவர் ஆகாய் மூலம் வெளிப்படுத்துகிறார்: *சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்* (ஆகாய் 2:23). தேவன் எப்பொழுதும் *தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கருவிகளை* தாமே தேர்ந்தெடுக்கிறார்.
💥 சகரியா மூலம் பரிசுத்த ஆவியானவர் தெரிவிக்கிறார்: *"அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."* (சகரியா 4:6). *கர்த்தருடைய ஆவியானவர்* தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவருடைய பிள்ளைகளுக்கு *பலமளிக்கிறார்.*
💥 தாவீதும் அவனது குடும்பத்தாரும் பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் காரணம், *தேவன் அவருடைய வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் உண்மையாக இருப்பதுதான்.* ஜனங்களின் *கீழ்ப்படிதலுக்கேற்ப தேவனுடைய ஆசிர்வாதம்* இருக்கும்; *கீழ்ப்படியாமைக்கேற்ப அவருடைய தண்டனை* இருக்கும். இதை ராஜாக்களின் சரித்திரங்கள் மூலம் அறிகிறோம்.
💥 நாம் தேவனுடைய சித்தத்துடன் நம்மை மிகவும் நெருக்கமாக இணைத்துக் கொள்ளும்போது, தேவன் நமக்கு அதிக ஆசீர்வாதங்களைத் தருகிறார். யோவான் கூறுகிறான்: "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.”* (1 யோவான் 3:22). தேவசித்தம் செய்ய நாம் ஒப்புக்கொடுப்போம்.
🔹 *தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதிலும், அவருடைய பார்வையில் பிரியமானவற்றைச் செய்வதிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்ததால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தாவிதின் வம்சம் யூதாவை ஆண்டது.*
2️⃣ *தேவன் எப்பொழுதும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கருவிகளை தாமே தேர்ந்தெடுக்கிறார்.*
3️⃣ *கர்த்தருடைய ஆவியானவர் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவருடைய பிள்ளைகளுக்கு பலமளிக்கிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
1 நாளாகமம் 3 - 5
யாபேஸ்
வேதத்திலே, குறைவாக எழுதப்பட்ட.. சிறப்பான மனிதர்களில் ஒருவன் யாபேஸ். யூதாவின் வம்ச வரலாறு கூறப்பட்டுள்ள இடத்தில்.. இவனது பெயரும் கூறப்பட்டிருக்கிறது.
( 1 நாளா. 4 : 1 - 23 )
யாபேஸ் என்றால்.. துக்கம் என்று பொருள்..
இவனது தாய், இவனுக்குத் துக்கம் என்று பெயர் வைத்தாள்.
( ஏன்..? ..தெரியவில்லை )
இவன் வளர்ந்த போது.. மற்றவர்கள் துக்கம்.. துக்கம் என்று இவனைக் கூப்பிட்ட வேளைகளில்..இவனுக்கு
உள்ளத்திலே துக்கம் உண்டாகியிருந்திருக்கும்... அதினால் இவன், *இஸ்ரவேலின்* *தேவனிடம்*.. *தனது துக்கத்தை நீக்கி*.. *தன்னை ஆசீர்வதிக்கும்படி* *ஜெபித்தான்*.
( 1 நாளா. 4 : 9,10 )
தனது முற்பிதாவாகிய யாக்கோபு.. தேவனிடம், நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று ஜெபித்தபோது.. எத்தனாகிய யாக்கோபை ..இஸ்ரவேலாக மாற்றினார் அல்லவா...
அவர் தனக்கு உதவி செய்வார் என்று யாபேஸ் விசுவாசித்தான். தேவனை நோக்கி ஜெபித்தான்.. அதினால் துக்கம் நீங்கி..தன் சகோதரர்களைவிட..
கனம் பெற்றவனானான்.
இவனது ஜெபம், நமக்கு ஒரு முன்மாதிரியாய் இருக்கிறது..
யாபேஸின் ஜெபம், சுயநலமான ஜெபமல்ல..
தேவனால் பதில் கொடுக்கப்பட்ட ஜெபம்..
யாபேஸ், என் எல்லையை விரிவாக்கும் என்று ஜெபித்தான்..
கர்த்தாவே, இந்தப் பொல்லாத.. சபிக்கப்பட்ட கானானியரை துரத்தும்படி.. வேரறுக்கும்படி.. நீர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறீர்..
உமது கட்டளைகளை நிறைவேற்ற.. ஆசீர்வாதத்தைத் தாரும் என்று ஜெபித்தான்.
நாமும், ஒவ்வொரு நாளும்.. தகப்பனே, எங்களைப் பரிசுத்தமாக வாழ அழைத்திருக்கிறீர்..
எங்கள் வாழ்வில் காணப்படும்..
எரிச்சல்..கோபம்..வைராக்கியம்....விரோதம்..மன்னியாத தன்மை எல்லவற்றையும் நீக்கி..எங்கள் உள்ளான வாழ்வின்.. பரிசுத்தத்தின் எல்லையை விரிவாக்கும்..
உம்முடைய ஆவியின் கனிகளால், எங்களை நிரப்பும் என்று ஜெபிப்போம்.
உமது வல்லமையும் ..
உமது வழிநடத்துதலும்.. ஒவ்வொரு நிமிடமும் எங்கள் வாழ்வில் இருக்க வேண்டும்
தீமையான உலகத்தில்.. தீமையான சூழ்நிலைகளில்..( குடி.. விபச்சாரம்.. இன்டர்நெட்.. சூதாட்டம்…) நாம் இருக்கிறோம். அந்தத் தீமைகள் நீங்கும்படி அல்ல, அந்த தீமையிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளுமென்று ஜெபிப்போம்.
இயேசு கிறிஸ்து, கற்றுக்கொடுத்த ஜெபத்திலும்.. (மத்தேயு 6:13 )
அவர் தமது சீஷர்களுக்காக ஜெபித்த ஜெபத்திலும்.. இதை நாம் பார்க்கிறோம்.
(யோவான் 17 :15)
ஆதியாகமம் 5ம்
*அதிகாரத்திலுள்ள வம்சவரலாறு* *அட்டவணையில்*..
*ஏனோக்கின் விசேஷித்த* *வாழ்வினால்.. அவனைக் குறித்து* *அங்கு எழுதப்பட்டிருக்கிறது* *இங்கும்*..1-9 *அதிகாரங்களில்* …*500க்கும் அதிகமான* *மனிதர்களைவிட.. இந்த* *யாபேஸின் வாழ்வு* *வித்தியாசமானதாக* *இருந்ததினால்.. அவனைக்* *குறித்து எழுதப்பட்டிருக்கிறது*.
இந்த உலகத்தில்
கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும்.. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம் வாழ்வு.. வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்காகவும் நாம் தேவனிடத்தில்..அவருடைய
சித்தத்தின்படி ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
*ஜெபம் ஒன்றே, நம் வாழ்வை* *மாற்றும்*.
*நம் துக்கம்..சந்தோஷமாகும்*..
*நம் சாபம்.. ஆசீர்வாதமாகும்*..
*நம் குறைவுகள்.. நிறைவாகும்*.
*நம்* *தோல்வி.. ஜெயமாகும்*..
*ஜெபம் ஒன்றே மகிமையைத்* *தரும்*.
*மகிமையான வாழ்வைப் பெற*
*அனுதினமும் மறவாமல் ஜெபிப்போமா..?*..🙏
மாலா டேவிட்
[12/08, 04:53] +91 99431 72360: நாள்:120
12.08.2023
சனிக்கிழமை
1நாளாகமம்: 3-5
💐💐💐💐💐💐
▪️யாபேஸ் என்றால் துக்கம் உண்டாக்குகிறவன் என்று பொருள். ஆனால் யாபேசின் ஜெபத்தை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கர்த்தர் வேதத்தில் எழுதச் செய்தார்.
அவரது விண்ணப்பங்களாவன:
1. என்னை ஆசீர்வதியும்
2. என் எல்லையைக் பெரிதாக்கும்.
3. உமது கரம் என்னோடு இருக்க வேண்டும்.
4. தீங்குக்கு விலக்கிக் காத்தருளும்.
5. துக்கத்துக்கு விலக்கிக் காத்தருளும்.
(நாளாகமம்: 4:9-10)
▪️யாபோசைப் போல விண்ணப்பம் செய்வோம். யாபேஸ் வேண்டிக் கொண்டதை யாபேசுக்கு அருளிய தேவன் நாம் வேண்டிக்கொள்வதை நமக்கு நிச்சயம் அருளிச் செய்வார்.
▪️கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து சீடர்களுக்குக் கற்றுத்தந்த ஜெபத்தில் *தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும்* என்றிருப்பதைக் கவனியுங்கள்.
▪️தீமையாகிய சாத்தானும் அவன் தூதர்களும் பலவிதங்களில் நம்மை துன்புறுத்த முயற்சி செய்வார்கள். எனவே இது ஒரு முக்கியமான விண்ணப்பம் ஆகும்.
▪️ஆனால் நாம் இச்சை, பொருளாசை, பெருமை, பொறாமை போன்ற தீங்கானவற்றிற்கு இடமளிக்காமல் நன்மை யானவற்றால் நம் உள்ளத்தை நிரப்புவதற்குக் கவனமாக இருக்க வேண்டும்.
*ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj,
Nagercoil.
(Admin: Group No 2068)
[12/08, 04:53] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*1 நாளாகமம் 4:9-10*
*ADOPT THE PRAYER OF JABEZ*
*யாபேஸின் பிரார்த்தனையை பின்பற்றுங்கள்*
📝 "தேவனாகிய கர்த்தர் ஏவாளிடம், *"உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய்".* ஆதி 3 : 16
குழந்தை பிறப்பதற்கு முன்பு பிரசவ வலி பொதுவானது, இந்த தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு பல குழந்தைகள் பிறந்தன, ஆனால் எந்த தாயும் தங்கள் குழந்தைகளுக்கு வலி என்று பெயரிடவில்லை.
📍யாபேஸின் தாயைப் பற்றி சிந்திப்போம் : அவளுக்கு *என்ன* நேர்ந்தது❓
*ஏன்* தன் மகனுக்கு "யாபேஸ்" என்று பெயரிட்டாள் ❓
ஏனெனில், அவள், *"நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் "* என்று சொன்னாள்.
அவள் *யாரிடம்* உரையாற்றினாள்❓
*எப்போது* ❓
🙋♂️ அவமானத்தையும் சிக்கலையும் புரிந்துகொள்ளும் வயது யாபேசுக்கு இருந்திருக்கலாம்.
📝 இவை அனைத்தும் யாபேஸை தேவனிடம் அழ வைத்தன, இது பிரபலமாக *யாபேஸின் ஜெபம்* என்று அழைக்கப்படுகிறது. அவருடைய ஜெபத்தைப் பின்பற்றுவோம்:
*"தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்"*.
யாபேஸின் ஜெபத்திலிருந்து பாடங்கள்:
1️⃣ *தேவன் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்*. யாபேஸ் *இஸ்ரவேலின் தேவனை* நோக்கிக் கூப்பிட்டான்.
📍முதல் நூற்றாண்டு விசுவாசிகள் தேவனை *"கர்த்தாவே, வானத்தையும் பூமியையும்.. அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்."*(அப்போஸ்தலர் 4:24) என்று அழைத்தனர்.
2️⃣ *நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்*. வீட்டிலும் சமூகத்திலும் அவனுடைய பெயரைப்போலவே அவளுடைய குணமும் ( *மிஸ்டர் துக்கம்*) அறியப்படும் என்று யாபேஸுக்கு தெரியும்.
📍 பவுல், *"பாவிகளில் பிரதான பாவி.."* என்று சொன்னார். (1தீமோ 1:16)
3️⃣ *உங்கள் பாவங்களையும் தோல்விகளையும் ஒப்புக்கொள்ளுங்கள்*. யாபேஸ் தன் சொந்த குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளும் சுயமுயற்சியில் தோல்வியடைந்திருக்க வேண்டும், கடைசியில் அவன் தேவனைத் தேடுகிறான் *(...தேவரீர் என்னை ஆசீர்வதியும்*..)
4️⃣ *உங்கள் வாழ்க்கையை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்*. யாபேஸ் தோல்வியுற்றார், அதனால் அவர் தேவனிடம் வந்தார் ( " *உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்*.." )
*5️⃣கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்ய அனுமதியுங்கள்*. யாபேஸ் தேவனிடம் *தன் ( செல்வாக்கின்) எல்லையை* பெரிதாக்கும்படி வலியுறுத்தினார்.
📍 ஏசாயா நமக்கு போதிக்கிறார், *"உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு....உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து"* (54:2)
🙋♂️ யாபேஸ் தனது *பழைய அடையாளம்/வாழ்க்கை முறையில்* இருந்து விடுபட விரும்புகிறார் ( ".. நான் துக்கத்திலிருந்து விடுபடுவேன் )
📍 பவுல் எழுதுகிறார், *"ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின "* (2கொரி 5:17)
🌈 தேவன் யாபேஸின் ஜெபத்தைக் கேட்டு, அவனுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்; அவன் தன் சகோதரர்களைவிட அதிக கனத்துக்குரியவன் ஆனான். இப்போது யாபேஸ் *திரு துக்கம்* மாண்புமிகு யாபேஸ் ( *திரு ஆசீர்வாதம்*) ஆனார், ஏனெனில் அவரது செல்வாக்கு மண்டலம் விரிவடைந்துள்ளது.
💞 அன்பான திருச்சபையே, யாபேஸின் ஜெபத்தை பின்பற்றுவோம், நம்மை ஆசீர்வதித்து, துக்கத்திலிருந்து ("..பெருமை, ஆணவம், பொய், கோபம்.." ) விடுபட தேவனிடம் மன்றாடுவோம்.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
செழிப்பான மேய்ச்சலை கண்டு பிடித்தார்கள்
1 நாளாகமம் 4 : 39 -41.
1. *சிமியோன் புத்திரர் தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலை தேடினார்கள்.* ஆம், நாமெல்லாரும் ஆடுகளாயிருக்கிறோம். நமக்கு ஒரு நல்ல மேய்ச்சல் தேவை.
புல்லுள்ள இடம், தண்ணீருள்ள இடம், ஓநாய், கரடியினால், துஷ்ட மிருகங்களால் பிடிக்கப்படாத பாதுகாப்பான மேய்ச்சல் இவர்களுக்கு தேவை. ஏனென்றால் இவர்களின் சொத்து இந்த ஆடுகள் தான். இவர்கள் தேதோரின் *பள்ளத்தாக்கு மட்டும் நடந்து, நடந்து மேய்ச்சலை தேடினார்கள்.*
ஆனால் *ஆடுகளின் பெரிய மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்கு நல்ல மேய்ச்சலை வைத்திருக்கிறார். அந்த புல்லுள்ள இடங்களில் அதாவது வசனமாகிய புல்லை நம் கரத்தில் இருக்கும் வேதத்தில், அதை விளம்பி தரும் சபையில், நல்ல மேய்ச்சலை நமக்கு தந்திருக்கிறார். ஆம், இந்த மேய்ச்சலை நாம் கண்டு பிடித்து, நல்ல மேய்ப்பரால் அனுதினமும் மேய்க்கப்படுகிறோமா? போஷிக்கபடுகிறோமா?*
2. *இவர்கள் கண்டுபிடித்த மேய்ச்சல் அமரிக்கையானது, சுகமான இடம், விஸ்தாரமான இடம்*. ஆம், நம் மேய்ப்பனாம் இயேசுவும், நம்மை புல்லுள்ள இடங்களிலே மேய்க்க, அமர்ந்த தண்ணீரண்டையிலே, விஸ்தாரமான, வசதியான இடத்தை தேடி, கண்டு பிடித்து கொண்டு போய் விடுகிறார். ஆம், *அவர் காட்டிய சபையில், அவர் பாதத்தில் அமர்ந்திருந்து நாம் வசனத்தை புசித்து வளருவோம்.*
3. ஆனால் இந்த சிமியோன் புத்திரர் இங்கு குடியேறும் முன், *அங்கு குடியிருந்தவர்களின் கூடாரங்களை, தாபரங்களை அழித்து சங்கரித்து விட்டு, அங்கு நல்ல மேய்ச்சல் இருந்தபடியால் அங்கு குடியிருந்தார்கள்*.
ஆம், *நாமும் கூட நாம் மேய்கிற மேய்ச்சலில், சத்துருக்களாகிய நாய்கள், நரிகள் போன்ற கள்ள மேய்ப்பர்கள் இருப்பார்களானால் அவர்களை முதலில் சங்கரித்து விட்டு தான் அங்கு குடியிருக்க வேண்டும். அது நமக்கு பெலன் தர வேண்டுமானால் அமரிக்கையான மேய்ச்சலை நாம் மேய வேண்டும். நல்ல மேய்ச்சல் இருந்தால் மட்டுமே அங்கு குடியிருக்க வேண்டும்.*
*நம்முடைய நல்ல மேய்ப்பன் ஆடுகளாகிய நமக்காக ஜீவனையே தந்தவர். உள்ளும் , புறம்புமாய் நம்மை போஷிப்பார்*. ஆம், ஆடுகளாகிய நாம் அவர் காட்டுகிற மேய்ச்சலில் புசித்து , வளர கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[12/08, 04:53] +91 99431 72360: *🌈GENEALOGY AND FAITH🌈*
*🌈வம்சவரலாறும் விசுவாசமும்🌈*
[நாள் - 120] 1 நாளாகமம் 3 & 4
☄️இந்த அத்தியாயங்கள் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் வம்சாவளியைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன, மேலும் விசுவாசம், பிரார்த்தனை மற்றும் தேவனுடைய தயவைப் நாடுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
1️⃣ *தாவீதின் ராஜ வம்சம்* (1 நாளாகமம் 3)
🔹தாவீது மன்னரின் சந்ததியினரின் பட்டியல் உள்ளது, அவருடைய மகன்களான சாலொமோன், நாத்தான் மற்றும் பலரின் வம்சாவளியைக் தடமறிந்துள்ளது.
🔹தாவீதின் சந்ததியினரின் வம்சவரலாறு, மேசியா மூலம் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேவன் உண்மையுள்ளவராக இருப்பதை நினைவூட்டுகிறது.
🔹தாவீதின் வம்சத்தின் வரலாறானது பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும், இஸ்ரவேலின் அரச பரம்பரையைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துகிறது, ஏனெனில் இது தேவனுடைய மீட்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2️⃣ *யாபேஸின் ஜெபம்* (1 நாளாகமம் 4)
🔸வம்சவரலாற்று பதிவுகளுக்கு மத்தியில், யாபேஸின் ஜெபம், விசுவாசம் மற்றும் தேவனை சார்ந்திருப்பதற்கான சக்திவாய்ந்த சான்றாக நிற்கிறது.
🔸யூதாவின் வழித்தோன்றலான யாபேஸ், தேவனிடம் பிரார்த்தனை செய்து, தன்னை ஆசீர்வதிக்கவும், தனது எல்லையை விரிவுபடுத்தவும், தனக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கவும் கேட்கிறார்.
🔸தேவன் யாபேஸின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார், விசுவாசத்துடன் தம்மைத் தேடுபவர்களின் ஜெபங்களை ஆசீர்வதிக்கவும் பதிலளிக்கவும் அவர் தயாராக இருப்பதைக் காட்டுகிறார்.
🔸தேவனுடைய தயவை நாடுவது, அவருடைய ஏற்பாட்டில் நம்பிக்கை வைப்பது மற்றும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் பொருள் உடைமைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதை அங்கீகரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை யாபேஸின் பிரார்த்தனை நமக்குக் கற்பிக்கிறது.
4️⃣ *தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை*
▪️ வம்சாவளி பதிவுகள், வரலாறு முழுவதும் தேவனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேவனுடைய உண்மைத்தன்மையை நமக்கு நினைவூட்டுகிறது, நம் சொந்த வாழ்க்கைக்கான அவரது வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க நம்மை ஊக்குவிக்கிறது.
▪️யாபேஸின் ஜெபம் ஜெபத்தின் மாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுகிறது, நாம் விசுவாசத்துடனும் நேர்மையுடனும் அவரை அணுகும்போது தேவன் ஆசீர்வதிக்கவும், நமது எல்லைகளை விரிவுபடுத்தவும் தயாராக இருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது.
▪️யாபேஸின் ஜெபம், தேவனுடைய ஏற்பாட்டில் நம்பிக்கை வைத்து, அவருடைய ஆசீர்வாதங்களைத் தேட நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பிள்ளைகள் முழு மனதுடன் அவரைத் தேடும்போது அவர்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்ளவும்.
▪️தாவீதின் பரம்பரை நமது ஆன்மீக பாரம்பரியத்தை தழுவி, தேவனுடைய மீட்பின் திட்டத்தில் நமது இடத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥இந்த அத்தியாயங்கள் தேவனுடைய வாக்குறுதிகளையும், அவரைத் தேடுபவர்களை ஆசீர்வதிக்க அவர் தயாராக இருப்பதையும், நமது ஆன்மீக பாரம்பரியத்தைத் தழுவுவதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
💥தேவனுடைய எல்லா ஏற்பாடுகளிலும் நம்மீது நம்பிக்கை வைப்பதிலும், ஜெபத்தின் மூலம் அவருடைய தயவைப் பெறுவதிலும், உன்னதமானவரின் பிள்ளைகள் என்ற நம் அடையாளத்தைத் தழுவுவதிலும் காட்டப்படும் விசுவாசத்தின் உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
*‼️உன்னதமான தேவனுடைய மகன் மற்றும் மகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[12/08, 10:21] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *யாபேஸ்* 🍂
யாபேஸ் ஜெபித்தான், தேவனாகிய கர்த்தர் அவனுடைய ஜெபங்களுக்கு பதிலளித்து அவனை ஆசீர்வதித்தார். இது மட்டும்தான் நமக்குத் தெரியும். *ஆனால் யாபேஸைப் பற்றி தெரியாத ஒன்று பின்னணியில் மறைந்துள்ளது.*
அதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. யாபேஸுக்கு வாழ்க்கையில் ஒரு கடினமான தொடக்கம் இருந்தது. *அவன் தனது தாயின் வயிற்றில் இருந்தபோது இது தொடங்கியதா?* அல்லது அவனது தாய்க்கு *கடினமான பிரசவம் இருந்ததா?* இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் எதையும் கூறவில்லை.
📖 *யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள் (1 நாளா 4:9).*
ESV ஆய்வு வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: *யாபேஸ் என்ற பெயர் வலிக்கான எபிரேயர் பதத்தில் உள்ள அதே மூன்று மெய்யெழுத்துக்களைக் கொண்டுள்ளது.* யாபேஸ் இந்த மன வேதனை என்ற தடையை உடைக்க வேண்டியிருந்தது.
*தேவனாகிய கர்த்தரால் மட்டுமே எல்லா தடைகளையும் நீக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.* எனவே அவன் ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளித்தார் (1 நாளா 4:10). மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் *நமது வேதனையான கடந்த கால கஷ்டங்களில் நாம் நீடிக்க வேண்டியதில்லை.*
தேவன் யாபேஸை விடுவித்து ஆசீர்வதிக்க முடிந்தால், *கடந்தகால வலிகள் மற்றும் மன வேதனைகளிலிருந்தும் அவர் நம்மை விடுவிப்பார்*. வியக்கத்தக்க வகையில் *கர்த்தர் யாபேஸை அவனது சகோதரர்களை விட அதிக கனத்திற்குரியவனாக ஆக்கினார்.*
எனவே இது ஒரு அசாதாரணமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம். ஒருவேளை *ஆண்டவர் அவன் பட்ட கஷ்டங்களுக்கு இவ்வாறு ஈடு செய்திருக்கலாம்*. இவ்வாக தான் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். *ஆண்டவர் நஷ்ட ஈடு செய்தால் அது இரட்டிப்பான ஆசீர்வாதமாக இருக்கும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 12, 2023_
[12/08, 10:21] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj
Covai
Day : 120
Date: 12.8.23
✍️தலைப்பு.
🎈யுத்தம் தேவனால் நடந்தது.
1 நாளா : 5:22.
🎯யுத்தம் :
📍காத்புத்திரர்
Vs
📍ஆகோரியர்
(சீரியர்)
🎈எப்பொழுது நடந்தது?
📍மோசே இஸ்ரவேலரை கானானுக்கு அழைத்துச் செல்லும்போது
📍ரூபன் +காத் + 1/2 மனாசே கோத்திரத்தார்.
📍யோர்தானுக்கு கிழக்கே இடங் கேட்டனர்
📍தங்கள் ஆடுமாடுகளுக்கு ஏற்ற தேசமென்று
(யாசேர்&கீலேயாத்)
📍யாசேர்- எமோரியர் கோட்டை
எண் 21:32
📍அதிலிருந்த ஆகோரியர் + மற்றவர்களை
விரட்டுவதற்காக
📍இவர்கள் அங்கு குடியேறுவதற்காக யுத்தம்
நடந்தது.
🎈என்ன செய்தார்கள்.
📍தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள்
📍தேவன் மேல் நம்பிக்கை வைத்தார்கள்
📍விண்ணப்பத்தைக் கேட்டார்
📍யுத்தம் தேவனால் நடந்தது
📍அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
📍அதோடு அநேக
மிருகஜீவன்கள்
மனுஷர்களையும்
கொடுத்தார்.
1 நாளா 5:21
📍அங்கே குடியிருந்தார்கள்.
🎈காத்துக்கு விஸ்தாரமான இடத்தை கொடுக்கிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
உபா 33:20.
🎈சிந்தனைக்கு,
📍குடியிருக்க, ஆடு மாடுகள் தங்குவதற்கு இடம் கேட்டு விண்ணப்பம் செய்தார்கள்.
📍கர்த்தர்,
தேசம்
மிருகஜீவன்கள்
மனுஷர்கள்
அனைத்தையும் கொடுத்தார்.
🎈நாமும் தேவனிடம் கேட்கும்போது கேட்டதும் கேட்காததையும் சேர்த்து தருவார்.
ஆமென்🙏
[12/08, 10:21] +91 99431 72360: 1. நாளாகமம் 4:22.
🌹🌹🌹🌹🌹🌹🌹
"இவை பண்டைய கால விஷயங்கள்".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மதிப்புமிக்க பொருட்கள் நம் ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
பிதா நம்மை நித்திய வாழ்விற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்.
உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
ஆரம்பத்திலிருந்தே பிதா நம்மை நேசித்து வருகிறார்.
தினசரி சிந்தனைக்கான கருத்து இங்கே உள்ளது.
நாம் முன்னறிவிக்கப்பட்ட அழிவிலிருந்து நம்மை மீட்பதும், நம்மைச் பரிசுத்தப்படுத்துவதும், கடைசியாக நம்மை மகிமையில் சேர்ப்பதும் கர்த்தருடைய நித்திய நோக்கம் ஆகும்.
தெய்வீக நோக்கத்தில், பிதாவின் சுதனுக்கும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இது பாதுகாப்பின் அடித்தளமாக இருக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
Thanks for using my website. Post your comments on this